கழிமுள்ளி நெஞ்சுக்காரி-33
கழிமுள்ளி-33
அரவிந்த் நதியாவின் கையைப் பிடித்து எழுப்பினயவன் அக்னியை சுற்றி வந்து தனது பெற்றோருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.
அடுத்து திரும்பி யாரையோ தேடியவன் நர்மதாவைப் பக்கத்தில் கூப்பிட்டு அவளது காதில் ஏதோ சொன்னான்.
அவள் ஓடிப்போய் ரமேஷையும் கீதாஞ்சலியையும் இழுத்து கூட்டிட்டு வந்து முன்னாடி நிறுத்தினாள்.
அவர்கள் காலில் விழுந்தவன் “எங்க கல்யாண வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு நல்ல சாமியை வேண்டிக்கிட்டு ஆசிர்வாதம் பண்ணுங்க, உங்க மகளுக்கு தீர்க்கசுமங்கலியா வாழணும்னு வேண்டிக்கோங்க” என்று பூடகமாகவே சொன்னான்.
ரமேஷும் கீதாஞ்சலியும் மகள் கழுத்தில் ஏறிய தாலி நிலைக்கணும்னு உண்மையாகவே வேண்டிக்கொண்டு அவர்களை ஆசிர்வதித்தனர்.
இதுக்குமேல இரண்டுபேரும் நல்லாவாழ்ந்தா போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
அதன்பிறகு அடுத்தடுத்து கல்யாண சடங்குகள் விருந்துகள் என்று எல்லாமே பரபரவென்று போய்கொண்டிருந்தது.
பொண்ணு வீட்டுலயிருந்து எதுவும் வாங்கல அவங்களை எதுவுமே செய்யவும்விடவில்லை. எல்லாம் முடிந்து இங்கு அரவிந்திற்கென்று வாங்கிய வீட்டிற்கு அவளை அழைத்துச்சென்றனர்.
அவர்கள் கூடவே அவள் குடும்பத்தையும் இருக்குமாறு அரவிந்த் பார்த்துக்கொண்டான். அவள் பக்கத்துலயே நர்மதா இருந்தாள்.
அவர்கள் மண்டபத்திலிருந்து கிளம்பும்போதுதான் அவளது பிரண்ட்ஸ் வந்து நின்றனர்.
தினேஷ்தான் “பார்த்தியா எங்களை விட்டுப்போகமாட்டேன்னு சொல்லிட்டு இப்போ பைனல் இயர்வயே கல்யாணம் பண்ணிட்டு போற பார்த்தியா?”என்று கேட்டான்.
“தினேஷு அவா இப்போதான் வாயை திறக்காமல் அமைதியா இருக்கா, அவளை பேச வைச்சிடாத. நான் தாங்கமாட்டேன். எங்கப்போறா என்கூடத்தானே வர்றா. அப்புறம் காலேஜிக்கும் வருவா.இதுக்கு எதுக்கு பீலிங்”என்று அரவிந்த் கேட்டான்.
“அதுல்ல சார் நேத்துவரைக்கும் எங்க பிரண்ட் நதி. இப்போ உங்க நதியாவா மனைவியா மாறிட்டாளே”
“அவளுக்கும் அதுதானே தினேஷ் பிடிச்சிருக்கு”
“அது உண்மைதான்”
“ஆனாலும் நீங்க எங்க நதியை எங்ககிட்டயிருந்து பிரிச்சிட்டீங்க சார்”என்று முகேஷ் பீல் பண்ணிட்டிருந்தான்..
“விட்டா இவனுங்க பேசிட்டே இருப்பானுங்க அரவிந்த். நீங்க கிளம்புங்க”என்று விஜய் சொன்னதும் கார் கிளம்பியது.
அவன் தனது முகத்தைத் துடைத்துகொள்ளுவதை அரவிந்த் கார் கண்ணாடி வழியாகப் பார்த்தான். அவனுக்கு விஜயின் மீதான மரியாதை இப்போது கூடியிருந்தது.
அரவிந்தும் நதியாவும் வீட்டுக்கு போய் இறங்கியதும் ஆரத்தியெடுத்து உள்ளே அழைத்துச்சென்றனர். அந்த வீட்டைப் பார்த்ததுமே நர்மதாவுக்கு மலைப்பாக இருந்தது. “இவனுங்க எதையுமே நார்மலாவே கட்டி வைக்கமாட்டானுங்களா? என்று கீதாஞ்சலியிடம் அலுத்துக்கொண்டாள்.
“ஷ்ஷ்ஷ் சும்மாயிருடி என்னைத்தயாவது பேசி வைக்காத. நதியா வாழவந்த வீடு இது”
“கலெக்ட்ரம்மா இது நீங்கதான் பேசுறீங்களா?நம்பமுடியலையே”
“பெத்தவடி நதியாவை பெத்தவடி. அவா நல்லாயிருக்கணும்னுதான் மனசு துடிக்குது”
“அதுசரி வாங்க உள்ள போவோம். ஆனாலும் நம்ம வீட்டுக்கு எப்போ போவோம்னு இருக்குமா. இந்த ஆடம்பரம் எனக்கு அலுக்குது” என்றவளை பார்த்து ரமேஷ் சிரித்தார்.
நதியாவுமே இப்படியான ஆடம்பரத்தை விரும்புபவளில்லையே!இந்த அரவிந்தை ரொம்ப பிடிச்சுப்போய் கல்யாணம் பண்ணிங்கிட்டாள். என்னத்தை சொல்ல. கடவுளே எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லா வாழணும் என்று இப்போவரைக்கும் ஒரு பெண்ணின் தந்தையாக வேண்டிக்கொண்டிருந்தார்.
நதியாவையும் அரவிந்தையும் அவங்க ரூம்ல விட்டுட்டு ட்ரஸ்லாம் மாத்திட்டு வரச்சொன்னாங்க.
அந்த தனி ரூமுக்குள்ள வரும்போதே நதியாவுக்கு காலெல்லாம் நடுங்கத்தான் செய்தது. ஆனாலும் இதுதானே இனி எங்க வீடு, எங்க ரூம்னு இருக்கப்போகுது. இனி பயந்து என்ன ஆகப்போகுது என்று மனசை தேற்றிக்கொண்டு உள்ளே வந்திருந்தாள்.
அவன் உள்ளே வந்ததும் மாலையை கழற்றி வைத்தவன், அவளது கழுத்தில் இருந்த மாலையையும் கழற்றினான். அவளோ அவனையே பார்த்திருந்தாள்.
“என்னமாஆஆ?அப்படி பார்க்கிற?”என்று கேட்டவன் அவளை இன்னும் நெருங்கி நின்றான்.
அவனது நெருக்கம் இயல்பாக இருந்தது. தன் மனைவி தன் பாதி, தன் காதலி என்று உள் மனதில் உள்ள நெருக்கத்தை அவன் தானாக காண்பிக்கிறான். அதை அவள்ல் புரிந்துக்கொள்ள முடிந்தது.
“காலையில் இருந்து மாலையை போட்டிருக்கோம் வலிக்கும்ல அதுதான் கழட்டினேன். வா வந்து உட்காரு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு குளிச்சிட்டு ப்ரஷ்ஷப் ஆகு. புடவையை கழட்டிடுவியா?இல்லை அதுக்கு என்னோட உதவிதேவையா?”-என்று கேட்டுவிட்டு ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.
அதைக்கேட்டதும் அவனைப் பார்த்து முறைத்தவள் “எனக்கு சேலையெல்லாம் கட்டத் தெரியும்”என்று பீத்திக்கொண்டாள்.
“ரொம்ப நல்லது எனக்கு அவிழ்க்கத்தான் தெரியும்”என்று சொன்னவனின் பார்வையே மாறியிருந்தது.
“ஐய்யய்யோ இன்னைக்கு நைட்டுவேற இருக்கே. இதை மறந்துட்டனே. இன்னைக்கு நைட்டு மட்டுமா இனி எல்லா நைட்டும் இவன்கூடத்தானே வாழணும். இதுக்கு எதுவுமே ப்ளான் பண்ணாமல் இருந்துட்டனே. நடந்த பிரச்சனையில் இது மறந்துப்போச்சே”என்று நினைத்தவளுக்கு அதை நினைத்து இப்பவே மூச்சு முட்ட ஆரம்பித்தது.
அவளது முகத்தை வைத்தே அவள் என்ன உணர்கிறாள் என்பதை உணர்ந்தவன் “தியாம்மாஆஆ ரிலாக்ஸ். எதுக்கு இப்போ பயம், உன்னோட அரவிந்துதானே நான். அப்புறம் எதுக்கு பயம்?”என்றவன் இன்னும் நெருங்கி நின்றவன் அவளது கன்னத்தை எப்போதும் போல தனது கையால் தடவினான்.
ப்ச்ச் என்று பின்னாடி நகர்ந்தவளின் இடுப்பைப் பிடித்து தன்னோடு சேர்த்துக்கட்டிக்கொண்டவன் அவளது கண்களை ஊடுருவிப்பார்த்தான்.
‘இவன் ஒருத்தன் முன்னாடினா கண்ணாடி வழியா ஒரு மார்க்கமா பார்த்து வைத்தான். இப்போ என்னடான்னா வேற மார்க்கமா பார்த்து வைக்கானே. இவன் பார்வையிலயே நான் மொத்தமா விழுந்திருவேன் போல ஸ்டெடி நதியா!ஸ்டெடி!’என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
“நீ என்னதான் ஸ்டெடியா நின்னாலும் நான் உன்னை ஸ்வாகப் பண்ணிடுவேன்டி என் புஜ்ஜிக்குட்டி” என்று கொஞ்சினான்.
“என்னது புஜ்ஜிக்குட்டியா?டேய் அம்மாஞ்சி மாதிரி இருந்தியே உனக்கு ஒன்னுந்தெரியாதுன்னு நினைச்சனே. இப்போ புஜ்ஜின்னுலாம் செல்லப்பெயர் வைச்சுக் கூப்பிடுறியே!இது ஓவரா இல்லை”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அம்மணி. மச்சானுக்கு கொஞ்சம் ரொமான்ஸ் மூடு வந்திடுச்சா அதுதான் அப்படி கொஞ்சினேன்”என்றவன் அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.
ஹப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் கொடுத்த அந்ந முத்தம் பாலைவனத்தில் ஒரு துளி மழைத்துளிபோல அவளை சிலிர்க்கவைத்தது.
அந்த சிலிர்ப்பில் கண்களை மூடி ஏக்கத்தோடு அப்படியே நின்றிருந்தவளின் இடையில் இருந்த கையை அழுத்தியவன், அவளது நெஞ்சோடு நெஞ்சம் மோதுமளவிற்கு தன்னோடு இன்னும் அதிகமாக சேர்த்து, அணைத்துப்பிடித்தவனின் உதடுகள் அப்படியே நதியாவின் கன்னத்தில் பதிந்ததது.
ஹ்ஹோவென்ற காதல் பெருவெள்ளம் அவளை எங்கோ இழுத்துச்செல்லுவதுபோல இருந்தது. அவளது கால்கள் நடுங்கி அவளைத் தள்ளாட வைத்தது.
இருவரும் ஒரு மோனநிலையில் இருக்கவும், கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவளிடமிருந்து விலகி யாரென்று பார்த்தான்.
அங்கே நர்மதா வந்தாள். அதற்குள் நதியாவும் முடியை எல்லாம் ஒதுக்கி நார்மலாகியிருந்தாள்.
“என்ன நர்மதா?”என்று அரவிந்த் கேட்டான்.
“அதுவா நாங்க எங்க வீட்டுக்குக் கிளம்பணும். அப்பா உங்கக்கிட்ட சொல்லிட்டுப்போக காத்திருக்காங்க”
“ஓஓஓ ஒரு இரண்டு நிமிஷம் உட்காரு. நாங்க பிரஷ்ஷப் ஆகிட்டு வர்றோம்”
“இரண்டு நிமிஷமென்ன பத்து நிமிஷமே எடுத்துக்கோங்க. ரொமான்ஸ் மோடுக்கு போகாமல் வெளியே வந்து எங்களைப் பார்த்தால் சரிதான்”என்றவள் நதியாவிடம் கண்ணைக் காண்பித்துவிட்டுப் போனாள்.
அவள் போனதும் “உன்னைவிட உன் தங்கச்சி பயங்கர ஷார்ப். நம்ம முகத்தை வைச்சே நம்ம நிலையை கண்டுபிடிச்சிட்டா. நீ அவக்கிட்ட ட்யூசன் போகணும். உன்னை மாதிரி லவ் பண்ணினால் அப்பாகிட்டபோய் சொல்லிட்டிருக்கமாட்டா. ஸ்ட்ரோயிட்டா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு நம்மக்கிட்ட வந்து நிப்பா பாரேன்”என்றவன் சத்தமாக சிரித்தான்.
“அவளெல்லாம் என்னை மாதிரி காதலிக்கமாட்டாள். அப்பா அம்மா சொல்லுற பையனைக் கட்டிக்கிட்டு சந்தோசமா இருப்பா”
அதைக்கேட்டதும் அவளை கொஞ்சம் கண்களை இடுக்கிப் பார்த்தவன் “அப்போ நீ என்னைக் கதலிச்சி கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இல்லை அப்படின்னு சொல்ல வர்ற அதுதானே”என்று பட்டென்று கேட்டுவிட்டான்.
“அது அது நான் அந்த அர்த்தத்துல சொல்லலே அரவிந்த். என்னை மாதிரி இவ்வளவு கஷ்டபடவேணடாம்னு அர்தத்துல சொன்னேன்”
“இரண்டும் ஒரே அர்த்தம்தான் நதியா மேடம்”என்றவன் உடனே வெளியே போய்விட்டான்.
அவளுக்கோ ‘ஐய்யோ இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இதுவேறயா?’ என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டாள்.
அவளும் உடனே அரவிந்த் பின்னாடியே வெளியே வந்தாள். அங்கே ரமேஷும் கீதாஞ்சலியும் அரவிந்தின் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“சம்மந்தி பயப்படாமல் போங்க. நம்ம பொண்ணு அவா. நாங்க பார்த்துக்கிறோம். எதுக்கு இவ்வளவு
பயப்படுறீங்க. அவங்களை நாங்க இங்கதான் விட்டுட்டுப் போகப்போறோம். இந்தக் கல்யாண சடங்கு சாங்கியமெல்லாம் முடிஞ்சு இங்கதான் வந்து வாழ்வாங்க. நீங்கதான் அவங்களை நல்லா பார்த்துக்கணும்”என்று அவங்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
இப்போ அரவிந்தும் நதியாவும் வந்ததும், இரண்டுபேருக்கிட்டயும் சொல்லிட்டுக் கிளம்பினார்கள்.
நர்மதா நதியாவைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள். அரவிந்திடம் “எங்க அக்காவை நல்லா பார்த்துக்கங்க”என்று சொன்றவள் போகவிருப்பமேயில்லாமல் கிளம்பினாள்.
நதியாதான் தாயை தொலைத்த குழந்தையைப்போல் முழித்துக்கொண்டிருந்தாள். அந்த இடத்தில் அரவிந்தைத் தவிற யாரையுமே அவளுக்குத் தெரியாதே!
அரவிந்த் நதியா!இங்கவா அம்மா ஏதோ கேட்கிறாங்க என்று உள்ளே கூப்பிட்டுட்டு போயிட்டான்.
ரமேஷ் வாசலில் நின்று திரும்பிப் பார்த்தார். நதியா இல்லை. உடனே காரில் ஏறி உட்கார்ந்துவிட்டார். மூவரையும் அரவிந்து வீட்டுக் கார்லயே கொண்டுவிடச்சொல்லியிருந்தான்.
அவங்களுக்கும் சேர்த்தேதான் ட்ரஸ்ல இருந்து எல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கியிருந்தான். என்னதான் அவன் அன்போடு செய்தாலும் இன்னும் அவருக்கு மனசுக்குள்ள ஒரு நெருடல் இருக்கத்தான் செய்தது. அது நதியா அரவிந்தோடு வாழ்ற வாழ்க்கையைப் பார்த்தால்தான் அந்த நெருடல் போகும்!
இரவு உணவு முடிந்து நதியாவுக்கு வேற புடவையை கட்டிவிட்ட அவளது அக்காவும் அம்மாவும் “நதி அரவிந்தெல்லாம் இப்படி காதலிச்சுக் கல்யாணம் பண்ணுவான்னு நாங்க நினைச்சுக்கூட பார்த்ததில்லை. அவ்வளவு முரட்டுபையன். அவனுக்கு எங்கப்போய் பொண்ணு தேடப்போறோம்னு பயந்தோம், இப்போ கல்யாணமே பண்ணிக்கிட்டான். ரொம்ப சந்தோசம். இரண்டுபேரும் ஒத்துமையா சந்தோசமா வாழணும்”என்று கனகவல்லி அவளை ஆசிர்வதித்தார்.
இப்போ நதியாவைக் கூட்டிட்டுபோய் அவங்க ரூம்ல விட்டுட்டு வந்தனர். அரவிந்த் அவங்கப்பாவிடமும் சித்தப்பாவிடமும் கல்யாண செலவுவகைகள் எல்லாத்தையும் ஒப்படைத்துவிட்டு மெதுவாக ரூமுக்குள்ளே வந்தான்.
நதியாவுக்கோ அவனைப் பார்த்ததும் குப்பென்று வேர்த்துவிட்டது. ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாது எழுந்தவள் ஜன்னல் பக்கம்போய் வெளியே தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் அப்படியே நின்றிருந்தவள் “அரவிந்தின் சத்தமேயில்லையே என்ன உள்ள வந்த அரவிந்த் எதுவுமே பேசாமல் தூங்கிட்டானா?அப்படி தூங்குற ஆளு அவனில்லையே?” என்று யோசித்தவாறே திரும்பினாள்.
அரவிந்தின் நெஞ்சில் முட்டிக்கொண்டு நிற்கவும். அப்படியே நிமிர்ந்து அவனைப் பார்க்கவும் லேசாக புன்னகைத்தவன் “அங்க என்ன தெரிஞ்சது அம்மணி. அப்படி உத்து உத்துப் பார்த்தீங்க. இங்க ஒருத்தன் குத்துக்கல்லாட்டாம் தாலிகட்டினவன் நிக்கிறேன்னு நினைப்பேயில்லாம் பார்த்திடடிருக்கீங்க?”என்று கேட்டான்.
அவன் பேசினதைக் கேட்டவளுக்கு தன்னையறியாமாலயே சிரிப்பு வரவும் “ப்ளீஸ் அரவிந்த் நீங்க ஸ்டைலா பேசிறதைக் கேட்டுட்டு இப்படி பேசவும் சிரிப்பா வருது”என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்.
அவள் சிரித்துக்கொண்டிருக்கவும் அவளது கீழுதட்டை தனது இருவிரல்கள் கொண்டு அப்படியே பிடித்திழுத்தான்.
அதில் அப்படியே அதிர்ந்து அவனை தனது கண்களை உருட்டிப் பார்த்தவளுக்கு அடிவயிற்றில் ஏதோ உணர்வு தோன்றவும், அவனிடமிருந்து விலாகமல் நின்றாள்.
“என்ன?சிரிப்பு நின்னுட்டு?இப்போ சிரிடி”என்று புருவம் உயர்த்திப் பார்த்து கேட்டவனை தள்ளிவிட்டு விலகி வந்தாள்.
அரவிந்த தனது நீண்டு திரண்ட கையால் சட்டென்று அவளைப் பிடிக்க, அவள் கை பிடிபடாது அவளது புடவையின் முந்தானை பிடிபட்டது.
அவ்வளவுதான் “அச்சோ என்ன பண்றீங்க அரவிந்த்?”என்று நின்று திரும்பி பார்த்துக் கேட்டாள்.
அவள் நகர்ந்தாளென்றால் புடவை அவிழ்ந்துவிடும், அதனால் அப்படியே நின்றிருக்க, முந்தானையைப் பிடித்து வேகமாக இழுத்தான்.
அவன் இழுத்த இழுப்பில் அவன்மேல் மோதி நின்றவளின் கழுத்தோடு கையைப்போட்டு இழுத்து தன்னோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு “தியாஆஆஆ”என்று கூப்பிட்டான்.
அவளோ அவனது முகத்தைப் பார்க்காமல் நெஞ்சில் கைவத்தவாறே ம்ம்ம் என்றாள்.
“ஓ நதியா”
“ம்ம்ம்”
“தியாம்மாஆஆ”
“என்னடா சோடாபுட்டி?” என்று கேட்டுவிட்டு அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவளது இந்த வார்த்தைக்காக காத்திருந்தவன் போல உதட்டில் குறுஞ்சிரிப்போடு உதட்டை குவித்து “உம்மாஆஆஆடி”என்றான்.
“என்ன?”
“முத்தம் கொடுத்தேன்டி”
“ஓஓஓ”என்று உதட்டைக் குவித்துக் கேட்டவளின் உதடுகள் இப்போது அவனது உதட்டுக்குள் இருந்தது.
“ஐய்யோ முதல் நாளே நம்மளை மொத்தமா கவுக்கப் பார்க்கிறான்” என்று நினைத்தவள் அவனது தோளில் கைவைத்து தடுக்கப்பார்க்கிறேன்னு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.
ஆஹா இதுபோதுமே அவனுக்கு, அப்படியே அவளது கழுத்தோடு போட்டிருந்த கையை இடுப்புக்கு கொண்டுவந்து பிடித்துக்கொண்டான்.
அவளால் இப்போது அங்கேயும் இங்கேயும் அசையமுடியாது போனது.
அரவிந்த் உதட்டோடு உதடுப்பொருத்தி முத்தத்தைத் தொடங்கியவனால் நிறுத்தமுடியாது போனது.
அவனது அந்த நிலையை உணர்ந்து நதியாவும் அப்படியே அவனோடு ஒட்டிக்கொண்டு நின்றாள்.
அவள் தலையில் வைத்திருந்த மல்லிகைப்ப்பூவின் வாசம் அவனை இன்னும் கிறங்கச்செய்தது. அந்த மயக்கம் தந்த இனிமையில் அவளை அப்படியே இடுப்போடுப்பிடித்து தூக்கிக்கொண்டான்.
“ஏய்ய் ஏய்ய் என்ன பண்ற?” என்று பயந்து மெல்ல சத்தம்போட்டவளை மெதுவாக கட்டிலில் இறக்கினான்.
அவளோ கட்டிலில் இருந்து இறங்க முயல, அப்படியே அவளது வயிற்றோடு தனது முகத்தை வைத்து அழுத்தினான்.
ஹ்ஹாஹா இவன் என்னென்னமோ பண்றானே? இவன்கிட்ட பேசவேண்டியது நிறைய இருக்கே! என்று நினைத்தவள் அவனது தலையைப் பிடித்து இழுத்தாள்.
அவனோ அவளது புடைவையோடு சேர்த்து வயிற்றை கடித்துப்பிடித்தான்.
ஷ்ஷ்ஷ் என்று சத்தமிட்டவளைப் பார்த்தவன் மெதுவாக கட்டிப்பிடித்தே அவளை கீழ இறக்கினான்.
அவளது உடல் முழுவதும் அவன் மீது உரசி அவனுக்கு இருந்த காதல்தீயை இன்னும் தூண்டிவிட்டிருக்க, அப்படியே அவளை இழுத்து கட்டிக்கொண்டான்.
ஹ்ஹாஆஆ என்று மூச்சுமுட்ட கட்டிக்கொண்டவனிடம் அடங்கிப்போனாள்.
அவளது கன்னம் தொட்டுத் தடவியவாறே, மறு கையால் தோளை அழுத்திப்பிடித்தான். நதியா அவனது நெஞ்சோடு சாய்ந்துக்கொள்ள, முதுகில் கைவைத்து தனது பரவிப்பாய்ந்த விரல்களால் தொட்டு அழுத்தியவாறே அவளது இடுப்பின் கீழ் கைவரவும் நெகிழ்ந்து அவனிடம் வயிற்றை எக்கி அப்படியே காலை எவ்வி நின்றாள்.
நதியா மொத்தமாக அவன் மீதே சாய்ந்து நின்றாள். அரவிந்தின் கண்களோ எதைக் கண்டு மயங்கலாம் என்று மயக்கத்திலே அவளது உடல் மீது விரல்கள் படருவதுபோன்று பார்வையை பரடரவிட்டான்.
அவனது கண்களில் தெரிந்த மயக்கம் அவளையும் மயங்கவைத்தது.
“தியாஆஆஆ” என்று கூப்பிட்டு அவளது முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான்.
“நான் என்னை விட்டுட்டுப்போன்னு சொன்னா சாகப் போயிடுவியாடி?என் முன்னாடி வந்து கெத்தா நிக்கவேண்டாமாடி?சத்தியமா நீ ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது என் உயிரே என்கிட்ட இல்லடி. என்ன ஆனாலும் பரவாயில்லை உன்னை என்கிட்ட கொண்டுவந்தே ஆகணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்டி”என்று சொன்னவன் அவளை இன்னும் இன்னும் தனக்குள் பொத்தி வைக்கிறளவுக்கு நெருக்கி இறுக்கினான்.
அதில் மூச்சு முட்டவும் “மூச்சு முட்டுது அரவிந்த்” என்று முணங்கினவளை லேசாக விடுவித்தவன் அவளது முகத்தை இழுத்துவைத்து, எங்கெல்லாம் முத்தம் கொடுக்கமுடியுமோ அங்கெல்லாம் இச்சு இச்சுன்னு சத்தத்தோடு முத்தம் கொடுத்தான்.
ம்ம்ம் என்று நதியா அப்படியே பின்னாடி சாய, அவளோடு சேர்ந்து அவனும் சாய்ந்தான். அவள் கட்டிலில் வெழ, அவன் அவள்மேல விழப்போனவன் இருபக்கமும் கையை தாங்கி அப்படியே அவளது முகத்தைப் பார்த்தவாறேயிருந்தான்.
“நான் ஐ.சி.யூவ்ல கண்ணு முழிக்கும்போது என் கையை பிடிச்சிருந்தது நீதான அரவிந்த்?அப்போ விஜய்கிட்ட கேட்டதுக்கு ஒருத்தமில்லைன்னு சொன்னான். எனக்கு நல்லூஆதெரியும் அது நீதான்னு. அப்பவே நீ என்னைப் பார்க்க வந்துட்டியா?”
“முதல் நாளே வாசல்தான்டி இருந்தேன். விஜயிக்குத் தெரியாமல் வந்து நின்னுட்டு உன்னைப் பார்க்கமுடியாமல் போயிட்டேன். ஆனால் விஜய் என்னைத் தேடி வந்து சண்டைப்போட்டான். அதுலதான் நானும் அவனை அடிச்சு அவனுக்கு நெத்தியில காயம் வந்துச்சு. அப்புறம் அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப்போய் தையல் எல்லாம் போட்டு உண்மை என்னென்னு சொன்னேன். அதுக்கு அப்புறம்தான் அவன் உன்னைப் பார்க்க என்னைக் கூட்டிட்டு வந்தான்”
“அப்படியா?”
“அப்போ அவன் என்னைப் பார்க்க தினேஷோடு வீட்டுக்கு வந்தானே அந்தக் கார்ல வந்தது நீயா அரவிந்த்”
“எஸ்ஸூ நானேதான். உங்கப்பாதான் என்னை பார்க்க உள்ள விடமாட்டாரே அதுதான் ட்ரிக்கா ப்ளான் பண்ணி வந்தோம்”
“இந்த முகேஷும் வஸந்தும் இப்பவும் என்கிட்ட அதிகமா பேசமாட்டுக்கானுங்க. என்மேல கோபமாம்”என்று சொல்லி சிரித்தவனின் முகத்தை கண்ணெடுக்காது பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கிற?”
“ஒன்னுமில்லை”
“என்ன இந்த நாலுபேரையும் சேர்த்துதானே நம்மளை அசிங்கமா திட்டினான். இப்போ எப்படி இப்படி பேசுறான்னா?”
“ம்ம்ம்”
“அது உண்மையிலயே சந்தேகப்பட்டு திட்டலையேடி. உன்னை சீண்டணும்னா உன் பிரண்டஸ்ஸை வைச்சு பேசினாலே நீ கோபப்படுவன்னு தெரிஞ்சு உன்னையும் அவங்களையும் தப்பா பேசினேன். ஆனால் மனசுக்குள்ள அப்படி பேசும்பேது வேதனையாதான் இருந்துச்சு. அந்த வார்த்தைகள் தப்புத்தான். என்னை மன்னிச்சிடு. நீ கோபத்துல போயிடுவ. பிரச்சனை சரியாகும்போது எதுன்னாலும் பேசி சமாளிச்சிக்கலாம்னு நினைச்சேன்டி. ஆனா நீ கையை அறுத்துப்பன்னு நினைக்கலைடி” என்றவனின் முகத்தில் அந்த குற்றவணர்ச்சி தெரிந்தது.
அவள் மெதுவாக அவனது உதட்டில் கையை வைத்து அவன் பேச்சைத் தடுத்தாள்.
அவனோ அவளது கையில் முத்தம் வைத்து, விரலைக் கடித்து தனது வாயிற்குள் வைத்துக்கொண்டான்.
“ஆஆஆ விடு அரவிந்த் வலிக்குது”
அப்படியே அவளது விரலை விட்டவன், குனிந்து மூக்கோடு மூக்கு வைத்து உரசினவன் மெதுவாக அவளது உடலில் தன் மீது தீண்ட மெதுவாக அவள் மீது சாய்ந்தான்.
நதியாவுக்கோ அரவிந்த் தன்னுடைய ஆபாத்தான நேரத்திலும் விட்டுட்டுப்போகாமல் கூடவே இருந்திருக்கான் என்றதுமே பாதி பயம் போயிற்று. அவன் என்னை ஏமாற்றவில்லை என்றதுமே மறத்துப்போன காதல் உயிர்பெற்ளு அவளுக்குள்ளான உணர்வைத் தூண்டியிருந்தது.
அவனது கண்களில் தன்னைப் படித்தவள் அவளை அறியாமலயே அவனது கழுத்தைப் பிடித்து வளைத்து,இழுத்தவள் அவனது உதட்டை வேகமாகக் கவ்விக்கொண்டாள்.
இதுதானே அவனுக்கு வேணும் அப்படியே அவளை வாரிச்சருட்டியவன், அவளது தலையைப் பிடித்து அப்படியே உருண்டான்.
இப்போது அரவிந்த் பெட்டிலிலும் அவன் மீது நதியாவும் இருக்க, அந்த முத்தம் இன்னும் தொடர்ந்தது.
இருவரது கண்களும் மோனநிலைக்குப் போக, நெஞ்சுக்கூடு இரண்டும் ஏறியிறங்கி முட்டிக்கொண்டது.
உதட்டில் தொடங்கிய முத்தம் மெதுமெதுவாக யுத்தமாக மாறியிருந்தது. அவளது உதட்டிற்குள் தனது நாவை நுழைத்து எச்சில் முத்தம் வைக்கத் தொடங்கினான்.
ஏற்கனவே காதலர்களாக முத்த பரிச்சயம் இருந்தாலும், இது கணவன் மனைவியாக தங்களது உறவுக்கு அச்சாரமாக கொடுத்துக்கொண்டிருந்தனர்.
அரவிந்தின் கைகள் மெது மெதுவாக அவளது தோளில் இருந்த புடவையை உருவியெடுத்தது. நதியா அதை உணர்ந்தும் அவனுக்காக விட்டுக்கொடுத்தாள்.
கைகள் இரண்டும் பளிங்கு இடையில் தொட்டுப்பிடிக்க, மொத்தமாக பதறியவள் அவனிடமிருந்து விலகினாள்.
அவள் இப்போது கட்டிலில் சாய்ந்து படுத்திருக்கவும் அவளிடம் நெருங்கியவன் தனது மீசையைக் கொண்டு கழுத்தில் தேய்த்தான்.
இதுக்குமேல அவனாலயும் தாங்கிக்கமுடியாது, அவளாலையும் உணர்வை எப்படி பிரதிபலிக்கவென்று தெரியாது, ஒருத்தரையொருத்தரை தங்களுக்குள் ஏற்றுக்கொள்ள பாய்ந்தனர்.
அரவிந்தின் முரட்டுக்கைகள் தன்னைத் தொடும்போதெல்லாம் மொட்டவிழ்ந்து தன்னை இழந்துக்கொண்டிருந்தாள் நதியா!
அவனோ மொத்தமாக ஓடிவரும் காட்டாற்று வெள்ளமாக தன் காதலை அவள்மேல் கரைபுரண்டோட செய்தான்.
அந்தக்காதலில் மூழ்கிப்போனவள் தன்னை மொத்தமாக அவனுக்கு விடுடுக்கொடுத்தாள். அவனை தனக்குள் ஏற்றுக்கொண்டாள்.
“ஏன் அரவிந்தோடான கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டோம்?”என்ற கேள்விக்கும் சந்தேகத்துக்கும் அவளது உடல் அவளுக்கு அழகாகப் பதில் சொல்லியது.
அரவிந்த் தொட்டாலே உருகிக் கரைந்து, அவனோடு இழைகின்றவளின் உடல் மட்டுமல்ல, உள்ளமும் அவனோட கரைந்துப்போனதை அவள் உணர்ந்தாள்.
அவன் என்னதான் தப்பு பண்ணிருந்தாலும் அவன் என்னவன் என்ற உள்ளுணர்வு அவளை வழிநடத்தியது.
நான் தப்பே பண்ணலை என்னவளை நான் கல்யாணம் பண்ணிருக்கேன்.அவள்தான் என் உயிர் என்றிருந்தவன் அவளை மொத்தமாக ஆண்டுக்கொண்டான்.
அவளை தனக்குள்ளாக கொண்டுவந்து, அப்படியே கைவளைவில் வைத்து தூங்கிக்கொண்டிருந்தான்.
அரவிந்துக்கு நதியாதான் உயிர் என்பதை உணர்ந்துகொண்டவளுக்கு அதுக்குமேல் எதுவும் தெரியவேண்டாம் என்று அவனது கழுத்தோடு கட்டிக்கொண்டு படுத்திருந்தாள்.
அடேய் அரவிந்த் என்னடா பண்ணி வைச்சிருக்க? உன்கூட சண்டைப்போடணும்னு இருந்த பிள்ளையை வசியம்பண்ணி மயக்கிட்டியேயடா!