கழிமுள்ளி நெஞ்சுக்காரி-34

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-34

கழிமுள்ளி-34

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்திருந்த நதியாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அப்படியே அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.

அவள் பக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தை பார்த்து கோபம் எல்லாம் வரவில்லை ஆனால் இன்னும் அவனைப் பற்றி சரியாக தெரியாமல் அவனோடு வாழ்ந்து விட்டோமே என்ற ஒரு பதட்டமும் பயமும் தான் உள்ளுக்குள் இருந்தது. அதை அவனிடம் காண்பிக்கவும் அவள் விரும்பவில்லை. 

அதனால் மெதுவாக எழுந்து குளித்துவிட்டு வந்து உட்கார்ந்தாள்.

அவளை இழுத்து தனது பக்கத்தில் போட்டவன் அவனது வயிற்றின் மேலே தனது தலையை வைத்து படுத்துக்கொண்டான். 

“அரவிந்த்”என்று மெதுவாக குரல் நடுங்ககூப்பிட்டவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவளது கண்களில் என்ன கண்டானோ உடனே எழுந்துபோய் அவனும் குளித்துவிட்டு வெளியே வந்தான். 

இன்னும் இருளாகவே இல்லை என்பதால் அவளை மெதுவாக இழுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு நடந்தான். 

“எங்க போறோம்? அரவிந்த் யாராவது பார்த்தா தப்பா நினைக்க போறாங்க” இன்று அக்கம் பக்கம் பார்த்தவாறே நடந்தாள்.

“ஏன்டி நம்மளுக்கு கல்யாணம் முடிஞ்சு குடும்பமே நடத்தியாச்சு இதுக்கு அப்புறம் யாராவது பார்த்துடுவாங்கன்னு பயப்படுற.இங்க இருக்கிறது எல்லாம் நம்ம குடும்பம், நம்மவீட்டு ஆட்கள் நம்ம என்ன பண்ணாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க தப்பாவும் நினைக்க மாட்டாங்க. என் கூட வா” என்று மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். 

அங்கிருந்த பூஞ்செடிகளையும் அதில் போட்டிருந்த திண்டுகளையும் பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது

“என்ன பார்க்குற குடும்பமா வாழ ஆரம்பிக்கணும் அப்படின்னா பொண்டாட்டியோட உணர்வுகளையும் புரிந்துகணும் அதுதான். உனக்குப் சேர்த்து நானே யோசித்து எல்லாம் வாங்கி செட் பண்ணிட்டேன்.‌ நல்லா இருக்கா?”

“ம்ம்ம் ரொம்ப நல்லாயிருக்கு”

“வா இங்க உட்காரு” என்று அவளை இழுத்து உட்காரவைத்து விட்டு, அப்படியே அவனும் சுவரோடு சாய்ந்த உட்கார்ந்தான்.

இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்து, அந்த காலை நேர அமைதியை அனுபவித்தார்கள். 

அரவிந்த் மெதுவாக நதியாவின் தோளைத்தொட்டு தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு, அவளது கழுத்தோடு கையை போட்டு பிடித்துக் கொண்டான்.

“என்ன பண்றீங்க அரவிந்த். இப்போ மணியென்னன்னு பாருங்க. நாலரை மணிக்கு யாராவது இப்படி வந்து உட்காருவாங்களா?”

“ஏன் நான் உட்காருவனே”

“அதுசரி எல்லாத்துலயும் வித்தியாசமா செய்யிற ஆளுதானே நீங்க. செய்வீங்க செய்வீங்க”

“அப்போ இப்போ வித்தியசாமா ஏதாவது செய்யவா?

“ஐய்யோ நான் போறேன்”என்று எழுந்தவளின் கையைப் பிடித்து அவனின் காலுக்கு இடையில் வைத்துப் பிடித்துக்கொண்டான்.

“உன்கிட்ட நிறைய பேசணும்டி அதுதான் இங்க கூட்டிட்டுவந்தேன்”

“என்ன பேசணும் அரவிந்த்? எனக்கு இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம்னு தோணுது”

“உங்க அப்பா அம்மா என்னைப்பார்த்து கொலைகாரன்னு சொன்னதும் பயந்தல்ல, அதைப்பத்தி நீ நேத்து கேட்டிருத்தன்னா கண்டிப்பா நான் சொல்லிருப்பேன்தான். ஆனால் நீ அதைக் கேட்கவேயில்லை. என்னோடு வாழவே ஆரம்பிச்சிட்ட. உனக்கு என் காதல் தேவையா இருந்துச்சு. அந்தக் காதல்தான் என்னையும் உன்கிட்ட இழுத்துட்டு வந்துச்சு. ஒன்னு தெரியுமா?என்கிட்ட காதல் சொல்ல வந்த எத்தனையோ பேர துரத்திவிட்டிருக்கேன்னு. ஆனால் நான் உன்னை துரத்தி துரத்தி ஒரு வருஷமா காதலிச்சேன்னு சொன்னால் யாராவது நம்புவாங்களா?”

“என்னது ஒருவருஷமா காதலிச்சீங்களா? என்ன சொல்லுறீங்க?”என்று அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் கேட்டவளைப் பார்த்து சிரித்தான்.

“ப்ச்ச் சொல்லுடா சோடாபுட்டி” என்று அவனிடம் திரும்பி சட்டையைப் பிடித்து இழுத்தவளின் உதட்டை தனது விரலால் தீண்டினான்.

“ப்ச்ச் என்ன பண்ற?”என்று சிணுங்கியவளிடம் ஸ்ட்ர்ங்கா ஒரு முத்தம் தா உனக்கு கதை சொல்லுறேன்”

“ஒன்னும் வேண்டாம்”

“ஆனா எனக்கு முத்தம் வேணுமே”என்றவன் அவளது கொடுங்கையோடு சேர்த்து தனது கையைப்போட்டு பிடித்து தனது நெஞ்சுக்கு நேராக தூக்கி வைத்தான், அப்படியே குனிந்து அவளது உதட்டைக் கடித்து இழுத்தான். 

அவ்வளவுதான் நதியா கண்கள் இரண்டும் மூடிக்கொள்ள, அவனது உதடுகள் அவளது உதடுகளைக் கவ்விப்பிடித்து கபடியாடத் தொடங்கியது.

அந்தக் காலை நேரக் குளுமையும் அவளது உதட்டின் குளுமையும் சேர்த்து அவனை எங்கெங்கோ கூட்டிச்சென்றது.

நதியாவின் நாவினை கடித்து உள்ளிழுத்துக்கொண்டான். அவளுக்கும் அதற்குமேல் என்ன செய்யமுடியும், அவனது நெஞ்சோடு மோதி அழுந்த, அவளைத் தன்னோடு இழுத்துப்பிடித்தவன், இன்னும் இன்னும் என்று அவளது உதட்டில் தனது உயிரை உயிலாக எழுதிக்கொண்டிருந்தான்.

நதியாவுக்கு புது உலகம் கண்ணிலாடியது. என் அரவிந்த் என்ற நெருக்கம் தானாக அவளுக்குள் வந்திருந்தது. இப்போது மெதுவாக அவளை தன்னிடமிருந்து விலக்கியவன் அந்த முத்த மயக்கத்திலயே அப்படியே உட்கார்ந்திருந்தான்.

“அம்மணி என்ன ஒத்தை முத்தத்துலயே சாஞ்சிட்டீங்க. இந்த மச்சானோட காதல் கதையெல்லாம் தெரியவேண்டாமா?”என்று காதில் கிசுகிசுத்தான்.

“வேண்டாம்” என்று தலையை ஆட்டியவள் அவன் நெஞ்சில் அழகான முயல்குட்டியாக புதைந்துக்கொண்டாள்.

அவளது தலையைத் தடவியவாறே முத்தமிட்டவன்” உனக்கு ஒன்னு தெரியுமா உன்னை நான் இந்த காலேஜிக்கு வந்தன்னைக்கே பார்த்துட்டேன். அப்பவே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சது. அந்த துருதுரு கண்ணும் ஓயாமல் பேசுற பேச்சும், சும்மா அன்ன நடைபோட்டு நடந்து, நளினமா நடக்கிறேன்னு தெருவை அளக்காமல் ஸ்டைலா என்பீல்ட்ல வந்து இறங்கி நடந்து வந்த தெரியுமா அதுலயே மச்சான் ப்ளாட்டாயிட்டேன் தெரியுமா?ஆனா உங்க கேங்கைப் பார்த்து எனக்குப் பொறாமையா இருந்துச்சு”

“ஏன் அரவிந்த் உங்களுக்கு அப்படி எதுவும் பிரண்ட்ஸ் கிடையாதா?”

“பிரண்ட்ஸ் கிடையாதாவா?பெரிய பட்டாளமே பிரண்ட்ஸா இருந்தாங்க. கோயமுத்தூர்ல அப்பா பெரிய புள்ளின்றதுனால படிச்சதெல்லாமே பெரிய ஸ்கூல்லதான். அங்க பிரண்ட்ஸ் இருந்தாங்கன்னா அந்தளவுக்கு இல்லை. ஆனால் காலேஜிக்குப் போனதும்தான் பிரண்ட்ஸ் கிடைச்சாங்க”

“உண்மையாவா”

“உண்மைதான்டி”என்றவன் என்ன நடந்தது என்பதை சொன்னான்.

சில வருடங்களுக்கு முன்…

அரவிந்த் வீட்டிலிருந்து காலேஜிக்கு கிளம்பும்போதே அவங்கம்மா கனகவல்லி “ தம்பி கவனமா போயிட்டு வரணும்”என்று சொல்ல, அவங்கப்பாவோ அவனை எதுக்குடி கவனமா போயிட்டுவான்னு சொல்லுற. போறது நம்ம காலேஜிக்குத்தான். இவன்கிட்ட எவன் அடிவாங்கப்போறானோ அவன்தான் கவனமா வரணும். மூணாவது பொம்பளை பிறந்திருந்தா முத்தாயிருந்திருக்கும். பையனா பொறந்து நான் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாதுன்னு சுத்திட்டிருக்கான். சண்முகவேல் பையனா இப்படி முரடா சுத்துறான்னு கேட்கிறாங்கடி”என்று திட்டினார்.

“ஹப்பாடா எங்க அப்பா திட்டாம அனுப்பிடுவாரோன்னு பதறிட்டேன். இன்னைக்கான வாழ்த்து கிடைச்சிடுச்சு. இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா போகும். நான் புட்பால் பிராக்டிஸ் முடிஞ்சுதான் காலேஜ் போவேன்மா. வர்றேன்”என்றவன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

“அவன் சும்மா போயிருப்பான். அவனைத் திட்டுறேன் ஏதாவது சொல்லி வைக்கிறது. அவனும் வீம்புக்கு எதையாவது செய்துவைக்கிறது. அப்பனுக்கும் மவனுக்கும் வேற வேலையே இல்லை”என்று போய்விட்டார்.

அவன் புட்பால் பிராக்ட்டிஸ் முடிஞ்சு காலேஜ் உள்ள வந்து டீ குடித்துக்கொண்டிருந்தான்

“டேய் அரவிந்த் நம்ம கேங்க் காலேஜ் கல்ட்சுரலுக்கு ஒரு பெர்பாமென்ஸ் குடுக்கணும். நீ ஏதாவது ஐடியா குடுறா”என்று சொன்னவள் அவன் கையில் இருந்த டீ கிளாஸை பிடுங்கி குடித்தாள்.

“ஏய் ராகினி அதுதான் அவன் டீ குடிச்சிட்டிருக்கான்ல அதையெதுக்கு பிடுங்கிக் குடிக்கிற?நீ வேற ஆர்டர் பண்ணிருக்கலாம்ல”என்று சித்தேஷ் சொன்னான்.

“பிரண்ட்ஸ்குள்ள என்னடா விடுறா விடுறா”

“நம்ம கேங்க்னா யாரெல்லாம் நம்ம டிபார்ட்மெண்ட் மட்டுமா இல்லை வேற யாரு வேணும்னாலும் பண்ணலாமா?

“நம்ம டிப்ர்ட்மெண்ட் மட்டும்தான். அதுல நீ, நான், சித்தேஷ் அப்புறம் ஷேர்லி, அபிஷேக் இன்னும் நாலு பேரு”

“அப்போ பண்ணிடுவோம். டேன்ஸ் போட்றலாமா”

“டன்னு”

“பிராக்டிஸ் எங்க பண்ணலாம்?”

“நம்ம வீடுகளுலதான். யாரு வீட்டுலயாவது ஷெட்யூல் போட்டுப்போம்”

ஓகே டன் டன் என்று பேரையும், எந்த டிபார்மெண்டுன்னும் கொடுத்துட்டு வந்து அதற்கான பிரண்ட்ஸ்ஸும் பிராக்டிஸ்ஸும் சேர்ந்து அந்த நாட்களை கொண்டாடி தீர்த்தனர்.

காலேஜ் கல்ட்சுரல்ஸ்லயும் அரவிந்தைத்தான் எல்லோரும் பார்த்தனர். 

“இந்த அரவிந்த் மட்டும் எப்படி படிப்புலயும் டாப்புல இருக்கான், எல்லா ஆக்டிவிட்டிஸ்லயும் டாப்புல இருக்கான். இதுல ரவுடின்னும் பேர் வேற எடுத்திருக்கான்னு” அவன் டிபார்ட்மெண்ட்லயே பொறாமையில் பேசினர்.

அதாவது மச்சீ காலேஜ் அவங்கப்பா கட்டினது. சம்பளம் அவரு குடுக்கிறாரு. அப்புறம் அவனுக்கு எல்லாத்துலயும் பர்ஸ்ட் பிளேஸ்தானே கொடுப்பாங்க என்று அவனது எதிராளி கேங்க் கார்த்திக் பேசிக்கொண்டிருந்தான்.

ஏற்கனவே அங்க காலேஜ்ல ரவுடின்னு பேரெடுத்துட்டு இப்போ ஹீரோன்னும் பேரெடுத்தா எல்லோருக்கும் பொறாமையா இருக்குமா?இருக்காதா?அதனால் அவனைக் கண்டா கார்த்திக்கிற்கு ஆகாது.

அரவிந்த் ரவுடி க்ரூப்னாலே சும்மா அதிரும்ல!அரவிந்த் சும்மா நடந்து வந்தாலே அடாவடிதான். அரவிந்தின் வாய் பேசியதைவிடவும் கை ரொம்ப பேசும்.

எங்க அரவிந்த் இருக்கானோ அங்கெ கண்டிப்பா ஒரு சண்டை,கலவரம் கண்டிப்பாக இருக்கும்!

ராகினி, அரவிந்த் என்று அவனோட கேங்க் எல்லோரும் இப்பொழுது பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே வந்த ஒருத்தி அரவிந்திடம் வந்து வெட்கத்தோடு தலையை குனிந்தவாறு நின்றிருந்தாள்.

அதைப் பார்த்த ராகினியும் ஷெர்லியும்தான் “என்னம்மா? கையில கார்டு ஒத்த ரோசா! என்ன விசயம்?” என்று மெதுவாக விசாரித்தார்கள்.

அரவிந்தன் அந்த பொண்ணை ஏற இறங்க பார்த்துவிட்டு என்னவென்று தன் புருவம் உயர்த்தி கேட்டான்.

சித்தேஷும் அபிஷேக்கும் “என்னடா இங்க நடக்குது?” என்று திரும்பிப் பார்த்தனர். 

அப்பொழுத தான் அந்த பெண் அரவிந்திடம் “என் பேரு சரண்யா. நானும் உங்க கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்தான். செகண்ட் இயர் படிக்கிறேன்.எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அரவிந்த். யூ ஆர்‌ சோ ஹேண்ட்ஸம் அண்ட் மேன்லி" என்று சொல்லி ரொஜாவை நீட்டினாள்.

அவ்வளவுதான் ராகினி அதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.ஏனென்றால் அரவிந்திற்கு இப்படியான லவ் ப்ரொபோஸ் எல்லாம் செட்டாகாது என்பது அவளுக்கு தெரியுமே!

அரவிந்த் இப்பொழுது அந்த பெண்ணிடம் திரும்பிய அந்த கிரீட்டிங் கார்டையும் ரோஸையும் வாங்கி சித்தேஷ் கைலயும் அபிஷேக் கைலயும் கொடுத்தான்.

“இங்க பாரு இப்படி நானி கோணி நான் பொண்ணு இப்படித்தான் இருப்பேன்னு இப்படியெல்லாம் பூ எல்லாம் கொண்டு வந்து ப்ரொபோஸ் பண்ணினேன்னு வையேன் மண்டையிலே ஒன்னு தருவேன். ஓடிப்போ. இந்த இருக்கானுங்கள்ல இவங்க ரெண்டு பேரும் ஃப்ரீயா தான் இருக்கானுங்க,இவனுகள்ல யாரையாவது ஒருத்தனை வேணும்னா செலக்ட் பண்ணி லவ் பண்ணு. போ அந்தப்பக்கம்”என்று விரட்டிவிட்டான்.

அதைக்கேட்டவளுக்கு கோபம் வந்து கார்டையும் ரோஸையும் திரும்ப பிடுங்கியவள் “போடா சாமியாரு. இந்த காலேஜ் ப்யூட்டி நானே வந்து உன்கிட்ட லவ் சொல்லிருக்கேன் என்னை கேவலப்படுத்துற. உனக்கெல்லாம் லவ்வே செட்டாகது. நீ எவா பின்னாடியாவது அலைவ பாரு”என்று சாபம்விட்டுட்டு போய்விட்டாள்.

சித்தேஷோ “ஏன்டா டேய் நீ லவ் பண்ணலன்னா விடேன்டா. நாங்களாவது லவ் பண்ணிட்டு போறோம் உன் கேங்க்ல இருக்கோம்னு எங்களை ஏன்டா லவ் பண்ண விடமாட்டேங்கிற?”என்று புலம்பினான்.

“டேய் பிரண்டஸ்ஸிப்பைவிட அழகானது இந்த நாட்கள்ல வேறெதுவுமே இல்லைடா. இப்போ நம்மளைப் பாரேன் நம்ம கேங்க்ல ராகினி, ஷேர்லின்னு இருக்காங்கள்ல நமக்கு என்ன தோணுச்சு. நல்ல நட்புத்தான் தோணுச்சு. அப்படித்தான் இருக்கணும். அப்போதான் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்க முடியும்டா. அந்த நட்பு போதும்டா நமக்கு” என்றவனை ஷேர்லியும் ராகினியும் கைபை கொடுத்து ஹக் பண்ணிக்கிப்டாங்க.

அந்த மூன்றாம் வருஷமெல்லாம் அவ்வளவு இனிமையாக போனது. நாலாவது வருஷம் தொடக்கத்துலயே ஷேர்லியும் அபிஷேக்கும் லவ் பண்றாங்க அப்படின்னு தெரிஞ்சதும் உண்மையில் அரவிந்துக்கு கஷ்டமாக இருந்தது.

“என்ன ஷேர்லி உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல. என்னாச்சு மண்டைக்குள்ள பேய் எதுவும் போயிடுச்சா?” என்னு திட்டினான்.

அபிஷேக்கோ “சாரி மச்சான். தப்பா நினைக்காத எங்களுக்குள்ள பீலிங் வந்திடுச்சு. நாங்க லவ் பண்ணி வாழ்க்கையிலயும் ஒன்னாயிருக்கணும்னு நினைக்கிறோம். ப்ளீஸ் மச்சி எங்களை புரிஞ்சிக்கோ” என்று கெஞ்சவும் அதை அத்தோடு விட்டுவிட்டான்.

சித்தேஷ்தான் “ஏன்டா மச்சான் நீ பொறக்கும்போதே இப்படித்தானா?இல்லை இப்போதான் இப்படியாகிட்டியா?”என்று சந்தேகமாகக் கேட்டு வைத்தான்.

“ஏன்டா?”

“ஏன்டா எல்லாரும் பொம்பளை பிள்ளைங்ககிட்ட சாப்ட்டா நடந்துப்பாங்க. நே ஏன்டா எப்பவும் இஞ்சித் தின்னுக்கிட்டே பேசுற?”

“அது தெர்ல மச்சி. நல்லா போல்ட்டா இருக்கிற பொண்ணுங்கன்னா மட்டும் ஹாய் இந்தப்பொண்ணு நல்லாயிருக்கேன்னு தோணுது. ஆனா பீலிங்க்ஸ்லாம் வரமாட்டேங்குது. அந்த இழவு எதுக்குன்னு கடவுள் நமக்குத் தரலையோ என்னவோ?”

“உனக்குத் தரலைன்னா எங்களுக்கும் தெரியும் மச்சீ. ஆனால் எங்களுக்கும் தரலைன்னு நீ நினைக்கிற பாரு. அதுதான் தப்பு மச்சான். எங்களை சைட்டடிக்காவாவது விடுடா”

“போய் தொலைடா”

“தேங்க்ஸ் மச்சான்” என்று பறந்துவிட்டான்.

அரவிந்த் மட்டும் தனியாக இருக்க, அவனுக்கு எதிரில் கார்த்திக் கேங்க் வந்து உட்கார்ந்தார்கள்.

அந்தநேரம் ராகினியும் ஷேர்லியும் வர, கார்த்திக் சட்டென்று கையை உயர்த்தி ராகினியின் பின்பக்கய் அடித்துவிட்டான். அதை எதிர்பார்க்காத ராகினி சட்டென்று பதறியவள் கர்த்திக்கினை திரும்பி ஓங்கி அடித்துவிட்டாள்.

இதை எதிர்பார்க்காத கார்த்திக்கோ உடனே எழுந்து அவளது முடியைப் பிடித்து இழுத்தான். அவ்வளவுதான் அடுத்த நொடி டேபிள் உடைய அவனை தூக்கிப்போட்டிருந்தான் அரவிந்த்.

“ஏன்டா என் பிரண்டுமேல கைவைச்சதே தப்பு, இதுல திருப்பிவேற அடிப்பியான்னு?” கேட்டு கேட்டு அடித்தான். அவனது கையையும் சேர்த்து உடைத்துவிட்டான்.

அவ்வளவுதான் அடுத்த நாள் கார்த்திக் கையில் மாவுக்கட்டோடு வந்திருக்க, அரவிந்தும் கேங்கும் எதிரில் பிரின்சிபால் ரூம்ல பாவமாக நின்றிருந்தனர்.

அவனது சித்தப்பாதான் மாணிக்க மூர்த்திதான் விசாரித்தார். சண்முகவேல் வரமாட்டேன்னு சொல்லிட்டதால் இவர் வந்திருந்தார்.

பிரின்சிபால்தான் “கார்த்திக் நீ பொம்பளை பிள்ளை மேல கைவைக்கலாமா அது தப்பில்லையா?நீ ராகினிக்கிட்ட மன்னிப்புகேளு. அரவிந்த் கார்த்திக் தப்பு பண்ணிருந்தா உங்க எச்.ஓ.டிக்கிட்ட சொல்லி கம்பளெயிண்ட் பண்ணிருக்கணும். அதுவிட்டுட்டு இப்படி எலும்பு முறியற அளவுக்கா அடிப்பாங்க. இரண்டுபேருக்குமே பணிஷ்மெண்ட் உண்டு. சேர்மன் சார் நீங்க சொல்லுங்க”என்று மாணிக்கமூர்த்தியிடம் விட்டுவிட்டார்.

“இரண்டுபேரையும் பதினைஞ்சு நாள் சஸ்பெண்ட் பண்றேன். இதுக்கப்புறமும் சண்டை அடிதடின்னு இறங்கினாங்கன்னா சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவோம்” என்று முடித்துவிட்டார்.

ராகினிதான் “என்னடா உங்க சித்தப்பா ஏதோ நாட்டாமை வம்சத்துல வந்தமாதிரியே நியாயம்டா, தீர்ப்புடான்னு பதினைஞ்சு நாள் சஸ்பெண்ட் பண்ணிட்டாரு. என்னடா நினைச்சிட்டிருக்காரு அவரு?” என்று எகிறினாள்.

விடுடி நமக்கு ஒரு பதினைஞ்சு நாள் லீவு கிடைச்சிருக்கேன்னு சந்தோசப்படுவோம். டூர் எங்கேயாவது ப்ளான் பண்ணுவோமா?என்று அவங்க பிரண்ட்ஸ்குள்ளயே தனி உலகத்திலிருந்தார்கள்.