கழிமுள்ளி நெஞ்சுக்காரி-35
கழிமுள்ளி-35
அரவிந்த் வீட்டுக்கு வந்ததுமே சண்முகவேல் மாணிக்கமூர்த்தியைக் கூப்பிட்டு என்ன நடந்துச்சுன்னு கேட்டார். அவரும் நடந்ததைச் சொல்லவும் மொத்தக்குடும்பமும் அவனை சுற்றி உட்கார்ந்து பேச ஆர்மபிச்சிட்டாங்க.அரவிந்த காதுல இரத்தம் வராத குறைதான்.
சண்முகவேல் முடிவாக ஒன்று சொன்னார்.
“இவன் இப்படியே அடங்காம திரிஞ்சான்னா அவனை எங்கேயாவது வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பிடுவேன். அவ்வளவுதான் சொல்லி வை”என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.
அரவிந்தை அவங்க அண்ணன் பார்த்த பார்வையில் இதுக்குமேல இங்கிருந்தோம்னா அவ்வளவுதான் என்று நினைத்தவன் பிரண்ட்ஸோடு வெளியே சுற்றப்போய்விட்டான்.
எப்படியோ பதினைஞ்சு நாள் கழித்து திரும்பவும் காலேஜிக்கு வந்தான். ஆனால் அதே அரவிந்தாகத்தான் வந்தான். சித்தேஷ் கொஞ்சம் அமைதியாக இருந்தான்.
கார்த்திக்கும் சித்தேஷும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கார்த்திக்கும் சித்தேஷும் அண்ணன் தம்பிங்க. இரண்டுபேருக்கும் ஆகவே ஆகாது. இப்போ அரவிந்த் கார்த்திக்கை அடிச்சதுக்கு வீட்டுல சித்தேஷூக்குத்தான் திட்டுவிழுந்தது.
“ஏன்டா அவன் உன் அண்ணனை அடிச்சிருக்கான். நீ சும்மா பார்த்திட்டிருந்தியா?அவன்கூட இனி சேரக்கூடாது”என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவனாவது அதை கேட்கிறதாவது.
ராகினிக்கு அவங்கப்பா புதுமாடல் பைக் வாங்கி குடுத்திருக்கவும், ரொம்ப சந்தோசத்தோடு வந்தாள்.
“டேய் இன்னைக்கு என்னோட ட்ரீட் அப்பா எனக்கு புது பைக் வாங்கித் தந்திருக்காங்க. என்ன வேணும்னாலும் வாங்கிக்கோங்கடா”என்று வந்து உட்கார்ந்தாள்.
“ஹேய் சூப்பர். இதை நம்ம கொண்டாடணுமே”என்று அரவிந்த் சொன்னான்.
“எப்படி கொண்டாட?”
“ஊட்டிக்கு எப்பவும் போல வண்டியிலயே போவோம். அங்கப்போய் டீ குடிச்சிட்டு வருவோம்”என்று அரவிந்த் சொல்ல,உடனே ப்ளான் பண்ணி எல்லோரும் ஊட்டிக்கு கிளம்பினார்கள்.
அவர்கள் ஐந்து பேரும் ஊட்டிக்கு பைக்லயே போனார்கள். அவங்க சந்தோசத்தைக் கெடுக்க கார்த்திக்கும் அவனது கேங்கும் அவங்க பின்னாடியே போனார்கள்.
அங்கதான் மொத்த பிரச்சனையின் ஆரம்பமே இருந்தது.
ஊட்டிக்குப்போய் ஒரு டீயை குடிச்சிட்டு மழையோடு நனைஞ்சிட்டே சுத்திக்கொண்டிருந்தனர்.
அரவிந்தை பழிவாங்க நினைத்திருந்த கார்த்திக் ராகினியின் பைக்கினை மட்டும் தனியாக சுத்துப்போட்டு வளைத்துக்கொண்டான்.
மழை வேறு, பக்கத்துல பிரண்ட்ஸை காணும் என்று ராகினி பைக்கை நிறுத்திவிட்டுத்தான் பார்த்தாள்.
அவளைச் சுற்றி கார்த்திக் கேங்க் நின்றிருந்தது. அவளோ அவர்களைப் பார்த்தாலும் பயப்படுற ஆளெல்லாம் இல்லை. தைரியமாக பைக்கை நிறுத்திவிட்டு அதில் கெத்தாக உட்கார்ந்தாள்.
கார்த்திக் இறங்கி “அவளது வண்டியை சாவியை எடுக்க வந்தான். அவ்வளவுதான் ராகினி தனது கராட்டே அடியை அவனது கையில் காண்பித்துவிட்டாள். அவன் கையை ஏற்கனவே உடைந்த கை என்பதால் அது அதிகமாக வலிக்கவும், கார்த்திக்கிற்கு வெறிப்பிடித்தது போலாயிற்று. அவளது கையைப்பிடித்து இழுத்தவன், என்ன செய்கிறோம்” என்று தெரியாது அவளைப் பிடித்து கீழே தள்ளினான்.
அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் மேல் விழுந்தவன் அவளது கையையும் காலையும் பிடித்து வைத்து, அவளுக்கு முத்தம் கொடுக்கப் போனான்.
“அரவிந்த்த்த்”என்று ராகினி கதறினதைக் கேட்ட அரவிந்த், எங்கயோ ராகினி மாட்டிக்கிட்டாள் என்று பைக்கை அந்த தேயிலை எஸ்டேட்டிற்கு ஓட்டினவன் ராகினியின் சத்தம் வந்த இடத்திற்கு வந்தான். அவன் பின்னாடியே சித்தேஷும் வந்தான்.
ராகினி ஓரளவு சமாளித்து கார்த்திக்கிடம் இருந்து விடுபட முயன்றாள். அதற்குள் அவனது பிரண்ட்ஸும் வந்து அவளது கையையும் காலையும் பிடித்துக்கொண்டனர்.
அடுத்து என்ன நடக்கும் என்று யூகித்த ராகினிக்கு இருந்த தைரியம் போய் பயத்தில் உறைந்துவிட்டாள்.
“கடவுளே இவனுங்க சண்டைக்கு வர்றாங்கன்னு பார்த்தால், நம்மளை அசிங்கம் பண்ண நினைக்கிறானுங்களே!” என்று பயந்தாள். எவ்வளவுதைரியமான ராகினிக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
அவள் பயத்தில் நடுங்கி அடுத்தும் அரவிந்த் என்று கத்துவதற்கு வாயைத் திறந்தாள், அவளது வாயை தனது கையால் கார்த்திக் அடைத்துவிட்டான்.
அதற்குள் சத்தம் வந்த திசையைப் பார்த்து சரியாக அரவிந்த் வந்துவிட்டான். அவன் பைக்கிலயே உள்ளவரைக்கும் வந்தவன் அங்கே கண்ட காட்சியில் அப்படியே உறைந்து போய்விட்டான்.
ராகினியின் மேல் சட்டையை கிழித்து எறிந்திருந்தான். கார்த்திக், அவளை பலவந்தப்படுத்தி முத்தமிட முயன்றவனிடமிருந்து ராகினி எகிறிக்கொண்டிருந்தாள்.
அவ்வளவுதான் கார்த்திக் மேலயே வண்டியை விட்டுவிட்டான். அதில் அவனது முதுகில் அடிபட்டு அவன் விழ, அவனது பிரண்ட்ஸ் அரவிந்தைப் பிடிக்க வந்தனர். அதற்குள் அரவிந்த கார்த்திக்கை தூக்கிப்போட்டு பொளந்துவிட்டான்
“பொண்ணுங்க மேல தப்பாவா கைவைக்கிற” என்று முகத்துலயே குத்தினான். அவனுக்கு வந்தக் கோபத்தில் கார்த்திக்கை அப்பவே கொன்றுபோட்டிருப்பான். அதற்குள் சத்தம் கேட்டு அங்கே வேலைப் பார்த்திட்டிருந்த ஆட்களெல்லாம் வந்துவிட்டனர்.
இவர்களின் சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தி சண்டையை வேடிக்கப்பார்க்கத் தொடங்கிவிட்டது ஒரு கூட்டம். ராகினிதான் “அரவிந்த் போதும் விடு அவன் செத்துடப்போறான். கொலை கேஸாகிடும்” என்று அவனைது தடுத்தாள்.
“விடு ராகினி அவன் சாகட்டும். எல்லா இடத்துலயும் க்ரூப்பிஸம் இருக்கும் சண்டையிருக்கும். அப்படிபட்ட சண்டையாகத்தான் இவன்கூட போட்டேன். ஆனால் அவன் பொண்ணுங்களைத் தப்பா பயன்படுத்த நினைக்கிறான் இவனை கொன்னாலும் தப்பில்லை” என்று மீண்டும் அவனை மிதித்தான்.
ராகினியின் சண்டை கிழிந்திருப்பதைப் பார்த்தவன் கார்த்திக்கை அடிச்சாலும் வேகமாக தனது சட்டையைக் கழட்டி ராகினிக்கு குடுத்தான்.
இப்போது சித்தேஷ் ஓடிவந்து “விடு அரவிந்த் ரொம்ப அடிச்சிட்ட இரத்தம் கொட்டுதுபாரு. அவன் அரை மயக்கத்துக்கே போயிட்டான்”என்று அவனை இழுத்தான்.
“என்ன உங்க அண்ணன் பாசம் தூக்கலா வருதா சித்தேஷ். அவன் செய்த வேலைக்கு கை காலை முறிச்சிவிடணும்டா”என்று எகிறிக்கொண்டிருந்தான்.
அதற்குள் போலீஸ் வந்துவிட்டது. அவர்கள் வந்ததும் இரத்தத்தில் கிடந்த கார்த்திக்கைத்தான் முதலில் தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினார்கள்.
அவர்கள் அரவிந்தை அரஸ்ட் பண்ணினார்கள். ராகினி நடந்ததைச் சொன்னாள். ஆனாலும் விசாரிக்கணும் என்று இரண்டு க்ரூப்பையும் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப்போய் விசாரித்தார்.
கார்த்திக் மேல தப்பு என்பது தெரிந்தும் அரவிந்த அவ்னை அடிச்சது பிரச்சனையாகிட்டு என்று கேஸ் போடணும்னு சொன்னார்.
பிரச்சனை பெருசாக போகுது என்று தெரிந்ததும் ராகினிஅவங்கப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டாள்.
அவர் பயத்தில் அங்கிருந்து கிளம்பினார். அவர் வரும்போது அரவிந்த் வீட்டுக்கும் சொல்லிவிட்டார்.
சண்முவேலுக்கு அதைக் கேட்டு அரவிந்த் மேலதான் கோபம் வந்தது.
“இந்த வயசுல காலேஜை கட்டடிச்சிட்டு பொம்பளைபிள்ளைங்களையும் கூட்டிட்டுப் போயிருக்கான்பாரு தறுதலை, ரவுடிப்பையலை பெத்துப்போட்டிருக்கேன்” என்று திட்டினார்.
அவரும் அவர் தம்பி மாணிக்கமூர்த்தியும் உடனே மில்லில் இருந்து அவங்க வக்கீலையும் கூட்டிக்கொண்டு ஊட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார்கள்.
அவர் வந்ததும் அரவிந்தை அடிக்க கையோங்கினார்.
ராகினிதான் இடையிஸ் நுழைந்து “அங்கிள் கார்த்திக்தான் பிரச்சனை பண்ணினான். என்னை அரவிந்துதான் காப்பாத்தினான்”என்று நடந்ததைச் சொன்னாள். அவங்கப்பாவும் வந்து ராகினியிடம் பேசிவிட்டு கேஸ்லாம் வேண்டாம் பொம்பளை பிள்ளை விசயம் வெளிய தெரியாமல் முடிக்கணும் என்று சொல்லிவிட்டார்.
அதனால் சண்முகவேல் பணத்தை கொடுத்து அதை முடிக்க சமாதானாம் பேசினார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப எதிர்பார்க்கவும் அவர் பெரிய லெவல்ல ஆட்களிடம் பேசி அதை பேசிமுடித்து கேஸ் ஆகாமல் பார்த்துக்கொண்டார்.
அந்த இன்ஸ்பெக்டருக்கு கோபம் வந்துவிட்டது. வேற எதுலயாவது மாட்டாமலா இருப்ப. அப்போ பார்த்துக்கிறேன் என்று விட்டுவிட்டார்.
கார்த்திக் அடிப்பட்டதை ஏற்கனவே சித்தேஷ் வீட்டுக்கு சொல்லிருந்தாலும், ஸ்டேஷன் மூலமும் தகவல் போயிருந்தது.
அவங்கப்பா தங்கமணி வந்து சித்தேஷைதான் அடித்தார். அரவிந்தை உள்ளே தூக்கி வைக்கணும்னு எவ்வளவோ முயன்று பார்த்தும் கடைசியில் முடியாமல் பேச்சு வார்த்தையிலயே எஸ்லாம் முடிந்ததில் கோபமும் வஞ்சகமும் மனசுக்குள் வந்திருந்தது.
சித்தேஷை அவருக்கூடவே கூட்டிட்டுப் போயிட்டார்.
சண்முகவேல்தான் இது வெளியே தெரிந்தால் காலேஜ் பேரும் கெட்டுப்போயிடும் என்று தங்களது பண்ணை வீட்டில் வைத்தே எல்லாத்தையும் பேசி முடித்தனர். பிரின்சிபாலிடம் ஸ்ட்ரிக்டா சொல்லிவிட்டார்.
கார்த்திக் இனி அங்க படிக்ககூடாது. டீசியை கொடுத்த அனுப்ப சொல்லிட்டார். இதுக்குமேல அரவிந்தையும் வார்ன் பண்ணியிருந்ததால் அவனும் கொஞ்சம் சின்சியரா படிக்க ஆர்மபித்திருந்தான்.
அரவிந்த் வீட்டில் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கணும் என்று திட்டம்போட்டுவிட்டனர். கார்த்திக் இப்போதும் அரவிந்த் மேல கோபத்தில்தான் இருந்தான். இந்த பிரச்சனையில் இருந்தே அரவிந்த் கொஞ்சநாள் தள்ளியிருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான் வீட்டில் நினைத்தார்கள்.
அரவிந்துமே கொஞ்சம் யோசித்து சரி வெளிநாட்டுக்குப்போய் படிக்கலாம் என்று அவர்கள் சொன்னதுக்கு சம்மதம் சொல்லிவிட்டான்.
அரவிந்த் ஒரு மாதிரியாக இருக்கவும் ராகினி வந்து அவனது தோளைத்தட்டி “விடுறா நாங்களும் நீ எங்கப்போனாலும் உன்கூடவே வந்திடுவோம். நமக்கு என்ன பணப்பிரச்சனையா என்ன?என்னடா சொல்லுறீங்க?”என்று மற்றவர்களிடமும் கேட்டாள்.
“ஹேய் இது நல்ல ஐடியா?அரவிந்த எங்க படிக்கப்போறானோ அங்கயே நம்மளும் படிக்கப்போவோம். டொட்டடொய்ன்”என்று ஷேர்லியும் சந்தோசப்பட்டாள்.
இதுக்கு அப்புறமாவது கொஞ்சம் நல்லபிள்ளையா இருப்போம் என்று ஐந்து பேரும் படிப்பில் கவனம் சொலுத்தினர். அவர்கள் நினைத்த மாதிரியே படித்து முடித்து ஐஞ்சு பேருமே ஒன்னாகவே ஜப்பான்ல படிச்சிட்டு அங்கயே ஒரு கம்பெனி ஆரம்பிக்க ப்ளானோட ஊருக்கு வந்தனர்.
அரவிந்த் கார்த்திக் பிரச்சனையால் அவன் வேறகாலேஜில் சேர்ந்து,அரியர்ஸ் வைச்சு படித்து முடிக்கவில்லை. அதனால் ஜப்பானில் கம்பெனி தொடங்க சித்தேஷை அவங்க வீட்டுல அனுமதிக்கவில்லை.
அதனால் அவர்களது ப்ளான் மொத்தமாக மாறிவிட்டது. அதற்கிடையில் ஷேர்லி அபிஷேக்கின் காதல் அவங்க வீட்டுல தெரிஞ்ச பிரச்சனையாகிடுச்சு.
ஷேர்லி வீட்டுல மகளுக்காக சம்மதம் சொல்லிவிட்டனர். ஆனால் அபிஷேக் வீட்டில் பொண்ணு வேற மதம்னு ஒத்துக்கவேயில்லை.
அதனால் பிரண்ட்ஸ் சேர்ந்து அவர்களுக்கு ரெஜிஸ்டர் கல்யாணம் முடிச்சு வைத்தனர்.
அது போலீஸ் ஸ்டேஷன் அதுஇதுன்னு போய் அவங்க பிரச்சனையை தீர்த்துவைக்க கடைசியில் சண்முகவேல்தான் வந்து நின்றார்.
ஒருவழியாக இரண்டு குடும்பத்தையும் அரவிந்த் மூலமாக பேசி சமாளித்து அவர்களை ஏற்றுக்கொண்டனர். இனி அவர்களும் அவனோடு ஜப்பானில் பிஸினெஸ் ஆரம்பிக்கமுடியாது.
அரவிந்த் பிஸினஸைப் பத்தி யோசித்துக்கொண்டிருந்தான்.
ஆனால்அவங்கப்பாவோ “இவனால் இன்னும் எவ்வளவுபிரச்சனையைத்தான் சமாளிக்கிறது? என்று நொந்துப்போனவர் இவனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிடலாமா?” என்று யோசித்தார்.
“என்னங்க இது அவனுக்கு இப்போ இருபத்தைஞ்சு வயசுக்கூட ஆகலை. அதுக்குள்ள கல்யாணமா?பெரியவனுக்குக்கூட இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கலையே. இப்போ இவனுக்கு பொண்ணு பார்க்கிறீங்களே?” என்று ஆதங்கப்பட்டார்.
“இவன் வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தாலாவது கொஞ்சம் திருந்திருப்பான்னு நினைச்சா மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப்போயிட்டான். இதுக்குமேல என்னால முடியல. இவனை சரிபண்ண ஒருத்தி வந்தால்தான் சரி”
“நம்மளால முடியாததை பாவம் அடுத்த வீட்டுப்பொண்ணு வந்து சரிபண்ணிடுவாளா?”
“வேற என்ன பண்ண சொல்லுற?”
“என்னவோ செய்யிங்க. உங்க விருப்பம்” என்று சொல்லிவிட்டார்.
அரவிந்தோ ஜப்பானில் கம்பெனி தொடங்க எல்லாத்தையும் ரெடிபண்ணிட்டான். ராகினியும் அவங்கப்பாக்கிட்ட பேசி அதுக்கு சம்மதம் வாங்கிவிட்டாள்.
அரவிந்தும் ராகினியும் கம்பெனி தொடங்குறாங்க என்றதும் சித்தேஷும் நானும் வர்றேன் என்று சொல்லி வீட்டில் பணம் கேட்டான். அவங்களோ அரவிந்த் ராகினியோடு போகக்கூடாது. இங்கயே ஏதாவது கம்பெனி தொடங்குன்னு சொல்லிவிட்டார்.
வேறு வழியில்லாமல் சித்தேஷ் இங்கயே இருந்துவிட்டான்.
அரவிந்த ஜப்பான் போறான் என்றதும் சண்முகம் யோசனையோடு “ நீ கல்யாணம் முடிச்சிட்டு போ”என்று தடைபோட்டார்.
“என்னது கல்யாணமா? எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவெல்லாம் இல்லை
எனக்கு பணம் தாங்க போதும். நான் கம்பெனிக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டேன். இப்போவே கல்யாணம் பண்ணினா என் வாழ்க்கை என்னாவாகும்?”
“அப்போ ராகினியை கல்யாணம் பண்ணிக்க. நான் அவங்கப்பாக்கிட்ட பேசுறேன். இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிட்டு போங்க”
“ச்சை என்னப்பா பேசுறீங்க. அவா என் பெஸ்ட் பிரண்டு, அவக்கூட கல்யாணமா?தப்பா பேசாதிங்கப்பா”
“க்கும் அப்போ யாரைத்தான் கல்யாணள் பண்ணிப்ப?”
“எனக்கென்று எவளாவது பிறந்திருந்தா சரியான நேரத்துல வருவா.அப்படி வராமல் போனாலும் பரவாயில்லை. எனக்கு இந்த வாழ்க்கையே நல்லாயிருக்கு ரொம்ப ஜாலியா இருக்கு. நான் அடுத்தவாரம் ஜப்பான் போறேன். பைனான்ஸ் தாங்க அதுபோதும்”
“இவன் திருந்தமாட்டான். இவன் தறுதலையாதான் சுத்தப்போறான். நம்ம பேரை கெடுக்கத்தான் பொறந்திருக்கான்” என்று வேதனைப்பட்டார்.
மொத்தக்குடும்பமும் அரவிந்துக்காகத்தான் வருத்தப்பட்டனர். கடவுளிடம் வேண்டிக்கொண்டனர்.
அதையெல்லாம் கண்டுக்காதவன் ராகினியோடு ஜப்பானில் கம்பெனியைத் தொடங்கி, வேலை செய்துகொண்டிருந்தான். அங்கே மேனேஜராக வேலைப் பார்க்க வந்த ஜெகதீஷை ராகினிக்குப் பிடித்திருந்தது.
அதை முதலில் சொன்னது அரவிந்திடம்தான். அவனோ அதைக்கேட்டதும் “ராகினி உண்மையாவே நீ ஜெகதீஷை காயலிக்கிறியா? சத்தியமா உனக்கு காதல் வரும்னு எனக்கு நம்பிக்கையேயில்லைடி. உனக்கு மண்டையில எதுவும் அடிபட்டிருக்கா?”என்று சந்தேகப்பட்டுக் கேட்டான்.
‘உன்கிட்டப்போய் என் காதலை வந்து சொன்னேன் பாரு. நான் அப்பாக்கிட்ட ஏற்கனவே ஜெகதீஷனைப் பத்தி சொல்லிருக்கேன். அவருக்கு சம்மதம்தான்.அடுத்த வாரம் ஜெகதீஷ் ஊருக்குப் போறான்ல நானும் போறேன். கல்யாணத்துக்கு பேசி அவங்க வீட்டுலயும் சம்மதம் வாங்கணும்ல”என்றவளுக்கு வெட்கம் வந்தது.
அதைப்பார்த்தவனுக்கு மினி அட்டாக்கே வந்துவிட்டது. “நீ காதலிக்கிறேன்னு சொன்னதையே என்னால ஜீரணிக்கமுடியலை. இதுல வெட்கமெல்லாம் படாதடி. என்னால முடியல”
“போடடேய் உனக்குத்தான் காதல் பொண்ணுன்னா செட்டாகது. அதுக்காக நாங்கெல்லாம் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கூடாதா என்ன?ஒரு நாளும் நீயும் என்கிட்ட வருவடா. ராகினி ராகினி நானும் ஒருத்தியை லவ் பண்றேன்னு அப்போ வைச்சிக்கிறேன்டா”
“அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை. எவளும் நமக்கு செட்டாகமாட்டாள்”
“அதையும் பார்க்கலாம் நான் அடுத்தவாரம் ஊருக்குப்போறேன் தெரியும்ல. ஒருவேளை நீ என் கலயாணத்துக்கு ஊருக்கு வரவேண்டியதா இருக்கும்.ரெடியா இரு”
“ஓகே ஓகே டன்”என்றவள் அடுத்தவாரம் கிளம்பி ஊருக்கு வந்துவிட்டாள்.
அரவிந்த் ராகினியின் கல்யாணத்துக்காக ஊருக்குப் போக எல்லாத்தையும் ரெடி பண்ணி வைத்திருந்தான்.
ஆனால் அவனுக்கு ஊரில் இருந்த வந்த செய்தகி அவனை மொத்தமாக உடைத்துப்போட்டது.
ராகினியை சீரியஸ்ஸாக ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிருக்காங்க என்ற தகவலை கேட்டு உடைந்துப்போனவன் ஊருக்கு உடனே கிளம்பி வந்தான்.
அவன் ராகினியை ஹாஸ்பிட்டலில் போய் பார்த்துட்டு வந்தான். அதன்பின் அவனது வாழ்க்கையை அந்த நொடியில் இருந்து தலைகீழாக மாற்றிவிட்டது!