கழிமுள்ளி நெஞ்சுக்காரி-36
கழிமுள்ளி-36
அரவிந்த் அவசர அவசரமாக ப்ளைட் பிடிச்சு கோயமுத்தூர் வந்து,ராகினியை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு ஓடினான். அவளைப் பார்க்கப்போகும்போதே அபிஷேக் அவன்கூடவே வந்தான்.
“என்னடா மச்சான் நடந்துச்சு?”என்று கலங்கிய கண்களோடு கேட்டான்.
“என்ன நடந்துச்சுன்னு தெரியல மச்சான். ஆனால் டாக்டர்ஸ் சொல்லுறாங்க கொடூரமா ரேப் பண்ணிட்டு செத்துட்டான்னு தூக்கிப்போட்டுட்டு போயிருக்காங்கன்னு சொன்ன்ங்கடா, யாரோ கட்டதிட்டு போயிருப்பாங்க போலிருக்குடா?”என்றவனக்கு அழுகையை அடக்கமுடியவில்லை.
அதைக்கேட்டதும் அரவிந்த் மொத்தமாக உடைந்துப்போய்விட்டான்.
“என் பிரண்ட் ராகினிக்கா இந்த நிலைமை. அவளுக்கு கல்யாணம்னுதானே இங்க வந்தா. அவளோட உயிருக்கே ஆபத்தாயிருக்குன்னா யாராக இருக்கும்?”என்று யோசித்தவனுக்கு முதலில் ஞாபகம் வந்தது கார்த்திக்தான் ஒருவேளை இருக்குமோடா என்று யோசித்தான்.
முதலில் போய் ராகினியைப் பார்த்துட்டு வருவோம் என்றுதான் அவளைப் பார்க்க போனான். ஏன்டா அவளைப் பார்த்தோம் என்று நொந்து கதறி அழுதுவிட்டான்.
அவள் எதிர்த்து நிறைய போராடியதில் முகமெல்லாம் காயம்,உதடுகள் கிழிந்து பார்க்கவே அவ்வளவு கொடூரமாக இன்னும் சொல்லமுடியாதளவுக்கு வேதனையோடு குற்றயுராக ஐ.சி.யூவில் கிடந்தாள்.
அவளுக்கு உணர்விருக்கு ஆனால் அவளிடம் அசைவில்லை. அப்படியே உயிரற்றவள் போலயே படுத்திருந்தாள்.
“ராகினி அப்பா எங்கடா?”
“அவருக்கு ராகினி விசயம் தெரிஞ்சு மயங்கி விழுந்துட்டாரு. லேசா ஹார்ட் அட்டாக் மாதிரி இருக்குன்னு அவரையும் அட்மிட் பண்ணிருக்காங்க”என்று அபிஷேக்தான் கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்ததினால் அரவிந்திடம் தகவல் சொன்னான்.
அவன் இப்போது வெளியே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான். அதற்குள் ஜெகதீஷுக்கும் தகவல் தெரிந்து அவனும் வந்திருந்தான்.
இன்னும் பத்து நாளில் கல்யாணம் அப்படியிருக்கும்போது இப்படியாகிற்றே என்ற வேதனை அவன் மனதிலும் இருக்கிறது.ஆனாலும் வெளியே சொல்லாமல் ராகினியைப் போய் பார்த்துவிட்டு வந்தவனுக்கு துக்கம் தாளாது அரவிந்தின் தோளில் சாய்ந்து சத்தமாக கதறி அழுதுவிட்டான்.
“என்ன அரவிந்த் சார் இப்படி பண்ணிட்டாங்க. என்கிட்ட பேசிட்டிருந்தாளே. போன் பண்ணினேன். நான் என்னோட பிரண்டை பார்க்கப்போயிட்டிருக்கேன் ஜெகதீஷ். ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கப்போறேன்னு சொல்லிட்டுத்தான் போனை வைச்சா சார். இப்போ இப்படி படுத்திருக்காளே!” என்று வேதனையோடு அழுதான்.
ஜெகதீஷ் சொன்ன பிரண்டு அப்படிங்கிற வார்த்தையில் கவனம் வைத்தவன் நம்மளுக்குத் தெரியாமல் இவளுக்கு வேற பிரண்டு இருக்காங்களா?என்று யோசித்தவன் ஒருவேளை ஸ்கூல் பிரண்டா இருக்கும் என்று நினைத்தான்.
அதன்பிறகு அது போலீஸ் கேஸ் என்று போய் விசாரனை நடந்துக்கொண்டிருந்தது. ஒருவாரத்தில் ராகினி கண்முழித்து உணர்வுக்கு வந்துவிட்டாள். ஆனால் எதையும் பேசக்கூடிய நிலையில் அவளில்லை.
ராகினி கண்ணுமுழித்த அடுத்தநாள்தான் சித்தேஷ் ராகினியை பார்க்க வந்தான். அரவிந்திடம் வந்தவன் “நீ எப்போடா வந்த? நான் பிஸினெஸ் விசயமா கொல்கத்தா போயிட்டேன்டா. செட்யூல் முடிஞ்சு இன்னைக்குத்தான் வந்தேன். ராகினி கண்ணு முழிச்சிட்டாளா?எதுவும் சொன்னாளா?”என்று கண்கள் கலங்க கேட்டான்.
“இல்லைடா?எவன் செஞ்சதுன்னு தெரியலை. எனக்கென்னமோ உங்க அண்ணன் கார்த்திக் ஏதும் ஆள் வைச்சு செய்திருப்பானோன்னு சந்தேகமா இருக்கு. அவனாமட்டும் இரந்துச்சு அவன் உயிர் என் கையிலதான் பார்த்துக்க”என்று எச்சரித்தான்.
“கார்த்திக் என்கூட கொல்கத்தூ வந்துட்டானே அரவிந்த். அவன் இப்போ பிஸினெஸ்ல இறங்கிட்டான்டா. அது காலேஜ் டேய்ஸ்ல தெரியாம சண்டைப்போட்டது. அதையெல்லாமா இப்போ மனசுல வைச்சிருப்பாங்க. போலீஸை நல்ல விசாரிக்க முடுக்கிவிடணும்”என்று பேசியவாறே இரண்டுபேரும் சேர்ந்து ராகினியைப் பார்க்க உள்ளே வந்தனர்.
அரவிந்த் சத்தம் கேட்டதும் கண்ணைத் திறந்துப் பார்த்தவள் அப்படியே திரும்பவும் கண்ணை மூடிக்கொண்டாள்.
அரவிந்திற்கு அழுகையாக வந்தது. எவ்வளவு தைரியமான ஆளாக இருந்தவள் இப்போ கிழிந்தநாராக படுத்திருக்காளே என்று அழுதான்.
அப்படியே வெளியே வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தனர்.
அரவிந்த் ராகினி அம்மாவிடம் அவளைப் பத்திரமாக பார்த்துக்க சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.
அவனது முகம் கல்லாக இருகிப்போயிருந்தது. கனகவல்லி வந்து அவனது தலையை கோதிவிட்டவர் “ராகினிபுள்ளை எப்படி இருக்கா?டாக்டர்ஸ் என்ன சொல்லுறாங்க?”என்று விசாரித்தார்.
“இருக்காம்மாஆஆ. ஏதோ உயிர் இருக்கு அவ்வளவுதான்”
“ஏன்டா அவா கோயமுத்தூர்ல இருந்து ஊட்டிக்கு எதுக்குப்போனா?உங்க பிரண்ட்ஸ் யாரும் இல்லை. அப்போ எப்படி ஊட்டிக்கு போற வழியில் அவள் உயிருக்குப் போராடிட்டு இருக்கிறதைக் கண்டுப்பிடிச்சாங்க”
“எங்க கண்டுபிடிச்சாங்க. யாரோ போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்காங்க. டெட் பாடி கிடக்குன்னு. அவங்க டெட் பாடின்னு போய் பார்த்தா ராகினி உயிரோட இருந்திருக்கா. அவாசெத்துட்டான்னு தூக்கிப்போட்டுட்டு போயிருப்பாங்களாயிருக்கும்”
“அப்படியா?கடவுளே அந்தப்புள்ளையை போய் யாரு இப்படி செய்தது. அவன் நாசமாதான் போவான். நல்லாவேயிருக்கமாட்டான்”என்று சபித்தார்.
“நான் நைட்டு ராகினியைப் பார்க்கப்போவேன்மா எனக்கு சாப்பாடு எதுவும் வேண்டாம். மனசுக்கு முடியலம்மா” என்று அவர் மடியில் படுத்துவிட்டான்.
அவனது தலையை கோதிவிட்டவர் இப்படி ஒரு நாளும் அவன் படுத்ததேயில்லை. வேணும்னா அண்ணன் பிள்ளைங்கூட விளையாடுறதுக்கு வந்து படுத்துப்பான். இப்படி மனசு ஓடிஞ்சுப்போய் படுத்ததேயில்லை. அதுவும் அவன் வந்து ஒருவாரமா சாப்பாடு தூக்கம் என்று எதுவும் சரியாகயில்லாமல் ஒருமாதிரி பைத்தியம் பிடிச்சமாதிரியே இருப்பதைப் பார்த்து வருத்தப்பட்டார்.
சண்முகவேல் கனகவல்லியிடம் மெதுவாக விசாரித்தார்.
“என்னாச்சு ரொம்ப ஒரு மாதிரியாகிட்டானே. உதவி எதுவும் தேவையான்னு கேளுடி. போலீஸ்ல நமக்குத் தெரியாத ஆளா என்ன?எவன்ன் தெரிஞ்சா உள்ள வைச்சே கையக்காலை உடைச்சிடலாம்”என்றார்.
“அதைக்கேட்டவன் அவன் யாருன்னு தெரிஞ்சா நானே கொன்னுடுவேன்மா. என்னை ஜாமீன் எடுக்க ரெடியா இருங்க அவ்வளவுதான். இன்னும் ஆளு யாருன்னு தெரியலை. போலீஸும் ஒன்னும் சொல்லமாட்டுக்காங்க. அவா வாயைத்திறந்து பேசினால்தான் தெரியும்னு சொல்லுறூங்க. எந்த தடையமும் இல்லை. ஒருவேளை அவளா எவன்கூடவாவது போயிருப்பான்னு பேசுறானுங்க. எங்க ராகினி அப்படி கிடையாதுன்னு இவனுங்களுக்கு எப்படி புரிய வைகக்கிறது. அவா முதல்ல நல்லபடியா எழுந்து வரட்டும்னு இருக்கும்மா”
“சாமியைக் கும்பிடுறேன் தம்பி. அவா கண்டிப்பா குணமாகி வந்திடுவா நே வேணும்னா பாரேன்”என்று அவனுக்கு ஆறுதல் சொன்னார்.
இராத்திரி தனது காரை எடுக்காமல் வண்டியில் போனான்.
“ஏன் கார் எடுக்கலையா?அரவிந்த்?”என்று மாணிக்கமூர்த்தி கேட்டார்.
“இல்ல சித்தப்பா மனசுக்கு ஒருமாதிரியா இருக்கு வண்டி போதும்”என்று கிளம்பியவன் நள்ளிரவில் கண்ணுமுழித்திருந்த ராகினியின் கையைப் பிடித்துக்கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவள் அவன் பேசுறதுக்கெல்லாம் தலையாட்டிக்கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென்று சித்தேஷ் மெதுவாக உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் ராகினியின் கண்கள் அப்படியே நிலைக்குத்தி நின்றுவிடவும் அரவிந்த் பயந்துப்போனான்.
ராகினி ராகினி என்று கூப்பிடவும் அவள் கண்களை தானாக மூடிக்கொண்டது மயங்கிட்டாளோ என்று பயந்து நர்ஸை கூப்பிட்டு செக் பண்ணினான். அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் என்று நர்ஸ் சொன்னதும்தான் நிம்மதியானான்.
இப்போ சித்தேஷ் அப்படியே உறைந்துப்போய் நிற்கவும் “என்னாச்சு சித்தேஷ்?நீ எப்படி இங்க வந்த?அதுவும் இந்த நேரத்துல வந்திருக்க?”என்று அரவிந்த் அவனிடம் கேட்டான்.
“அதுவா அரவிந்த் நீ வீட்டுக்குப்போயிட்டியா?அதுதான் ராகினிக்கு பாதுகாப்பாக இருக்க வந்தேன்”என்று சொன்னான்.
“நான் இங்க இருக்கேன். அங்கிளுக்கு உதவியா ஆண்டி இருக்காங்க. நான் ராகினியை பார்த்துக்கிறேன் நீ போ சித்தேஷ்”என்று அவனிடம் பேசியவாறே வெளியே வராண்டா வரைக்கும் வந்துவிட்டுட்டுப் போனான்.
அரவிந்த் திரும்பவும் ராகினிக்கு துணையாக வந்து உட்கார்ந்துக்கொண்டான்.
அடுத்தநாள் ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்குப்போனான். அங்கே அவனைத் தேடி போலீஸ் வநதிருந்தது.
இன்ஸ்பெக்டர் யாருன்னு பார்த்தா ஊட்டியில் பிரச்சனை வரும்போது இருந்த அதே இன்ஸ்பெக்டர்.
இப்போ அரவிந்தையும் சண்முகவேலையும் பார்த்ததும் இவனுங்ககிட்ட பணத்தையும் கறக்கணும், சும்மா விடக்கூடாது என்று நினைத்தவர் அரவிந்தின் சட்டையைப் பிடித்து இழுத்துட்டுப்போய் ஜீப்பில் ஏற்றினார்.
சண்முகவேலுக்கு கோபம் வந்துவிட்டது. “யோவ் இன்ஸ்பெக்டர் என்னய்யா பிரச்சனை. என் மகனை எதுக்குய்யா அரஸ்ட் பண்ற?”என்று கேட்டார்.
“ஹான் உன் மகன் அவனோட பிரண்டு சித்தேஷை கொலை பண்ணிட்டு வந்திருக்கான். அவனைக் கொன்னு காரோட ஊட்டி ரோட்டுல தள்ளிவிட்டிருக்கான். அவங்கப்பாவும் அண்ணனும் இதுக்கு காரணம் அரவிந்துதான்னு சொல்லிருக்காங்க. அதுதான் கொலை கேஸ்ல அரஸட் பண்ண வந்திருக்கேன். எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க”என்றவர் அரவிந்தை ஜீப்பில் ஏற்றி கூட்டிட்டு போய்விட்டார்.
அவன்மேல கொலை கேஸ் பதிவாகிட்டு. ஆனால் அவன்தான் சித்தேஷை கொலை பண்ணினான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கார்த்திக்கும் அவங்கப்பாவும் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருந்தனர்.
அரவிந்த் ஜீப்பில் இருந்து சண்முகவேலைப் பார்த்தான். அவனது பார்வையின் அர்த்தம் தெரிந்தவர் உடனே தம்பியை கூப்பிட்டு பேசியவர் உடனே அவங்க வக்கீலுக்குப் போன் பண்ணினார்.
அடுத்த ஒரு மணி நேரத்துல சண்முகவேல் ஸ்டேஷனில் இருந்தார். அவரோடு அங்குள்ள எம்.பியும் வந்திருந்தார்.
இன்ஸ்பெக்டருக்கு அதுக்குமேல ஒன்னுமே செய்யமுடியவில்லை.
கார்த்திக்கும் அவனது அப்பாவும் அங்கு வந்திருந்தார்.
கார்த்திக் அரவிந்தைப் பார்த்ததும் “ நேத்து நைட்டு அந்த ராகினியை பார்க்க சித்தேஷ் போகும்போது இவனும் அங்க இருந்திருக்கான். இவங்க இரண்டுபேரும் பேசிருக்காங்க. அதுக்கப்புறம் சித்தேஷ் மட்டும் வெளியே வந்தவன். வீட்டுக்கு வரலை. இவன்தான் ஆளை வைச்சு என் தம்பியைக் கொன்னுருக்கணும்”
“நான் எதுக்கு என் பிரண்டை கொல்லப்போறேன் கார்த்திக் உளறாத. அவனைக் கொல்லவேண்டிய அவசியம் என்ன?”என்று கேட்டான்.
“அதான் அந்த ராகினியோட கேஸ்ல உனக்கு சித்தேஷ் மேல சந்தேகம் இருக்குன்னு அவனே சொன்னான்”
“எனக்கு எதுக்கு சித்தேஷ் மேல சந்தேகம் வரணும்?ராகினிக்கே யாருன்னு தெரியல, அடையாளம் தெரியாதவங்கன்னு சொல்லிட்டா. அப்புறம் எப்படி சித்தேஷை நான் கொல்லமுடியும். லுசுத்தனமா உளறாத கார்த்திக். உனக்கும் எனக்கும் சண்டைன்னா உன் தம்பி சாவை வைச்சு என்னை பழிவாங்க நினைக்காத”
“நான் எதுக்கு உன்னை பழிவாங்கணும்,நீதான் என் தம்பியை கொன்னுட்டு நாடகமாடுற. எதுக்குடா என் தம்பியைக் கொன்ன?”என்று அரவிந்தின் சட்டையைப் பிடித்துக் கேட்டான்.
சித்தேஷை காணவில்ல. நைட்டு வீட்டுக்கும் வரவில்லை என்று கார்த்திக் அவனைத் தேடினான்.
அவனுக்குப் போன் பண்ணினால் ரிங் போனது ஆனால் எடுக்கவில்லை என்றதும் பயந்து இராத்திரியோட இராத்திரியாக ஆள் வைச்சு தேடியும் கிடைக்கவில்லை. உடனே கம்ப்ளெயிண்ட் ககொடுத்த,செல்போன் வைச்சு ட்ராக் பண்ணி அவனைக் கண்டுப்பிடித்தார்கள்.
ராகினி எங்கே விழுந்துக்கிடந்தாளோ அதே ஊட்டி மலையில் காரோடு சேர்ந்து விழுந்து, காருக்குள்ளாகவே இறந்துக்கிடந்தான் சித்தேஷ்!
அதுதான் கார்த்திக்கிற்கு அரவிந்த் மீது சந்தேகம் வந்தது!
அரவிந்தும் சித்தேஷும் நல்ல பிரண்ட்ஸ் என்பதைத் தாண்டி வேறு எந்த பகையுமில்லை என்றதும் ஜாமீன் கொடுத்தனர்.
அந்த இன்ஸ்பெக்டர் வேண்டுமென்றே கேஸ் பைல் பண்ணி எப்.ஐ.ஆரும் போட்டிருந்தார். ஆனால் அரவிந்துதான் குற்றவாளி என்று யாருமே சாட்சிக்கு இல்லை. எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.
“அரவிந்தை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த சண்முகவேல் “நீ உண்மையிலயே கொலை செய்திருந்தாக்கூட ஒரு அப்பாவாக நான் உன்னை வெளியே எடுத்துட்டு வந்திருப்பேன்”
“இப்பவும் ஒரு அப்பாவாக யோசிங்க. உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கா. கல்யாணம் பண்ணி வாழ அனுப்பிருக்கீங்க. நம்ம வீட்டுலயும் அடுத்தடுத்து பொண்ணுங்க இருக்காங்க. பெண் குழந்தைங்களுக்கு அப்பாவா யோசிங்க. நான் அண்ணானா நல்ல நண்பனா யோசிச்சேன்பா”என்று பேச்சை முடித்துவிட்டான்.
அவருக்கு அவன் சொல்ல வந்தது புரிந்தது. அதனால் அவனது தோளைத் தட்டிக்கொடுத்தவர் அப்பா நான் பார்த்துக்கிறேன் என்று அந்த பேச்சை அத்தோடு முடித்துவிட்டார்.
சித்தேஷ் எப்படி இறந்தான்?யாரு கொன்னாங்க?என்று இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது. இனியும் யாருக்கும் தெரியாது.
ராகினி ஒரு மாதத்தில் கொஞ்சம் தேறி வந்துவிட்டாள். அவளிடமும் சித்தேஷ் இறந்துவிட்டான் என்ற தகவலைச் சொன்னான்.
அவளிடம் அதுக்கான எந்தவிதமான வலியையோ, அல்லது நண்பன் இறந்துவிட்டான் என்கின்ற வேதனையோ வரவில்லை. அதற்கு மாறாக லேசான ஒரு புன்னகை கீற்றை அவளது உதட்டில் அரவிந்த் பார்த்தான் அதுபோதுமே அவனுக்கு!
ராகினியின் அப்பாவும நல்ல குணமாகி வந்துவிட்டார். ராகினி குணமாகி வீட்டுக்கு வர்றவரைக்கும் அரவிந்துதான் கூடவே இருந்தான்.
ராகினி குடும்பத்துலயோ சொந்தக்காரங்களோ யாருமே அவளைப் பார்க்க வரவில்லை. அரவிந்த் வீட்டிலருந்துதான் அவளைப் பார்க்க வந்தனர்.
இப்போதைக்கு கல்யாணம் நின்றுவிட்டது. ஆனால் ஜெகதீஷ் அவளைப் பார்க்க அடிக்கடி வந்தான்.
இனி இந்த ராகினியோட கேஸ் கோர்ட்டுக்குகூட போகாவேண்டாம் என்று அரவிந்தும் ராகினி அப்பாவும் பேசி, வெளியே வரவிடாமல் செய்துவிட்டனர்.
அரவிந்த்துக்குமே இனி ஜப்பான் போய் வேலை செய்யவிருப்பமில்லாமல் ஜெகதீஷை வைத்துதான் நடத்திக்கொண்டிருந்தான்.
அவன்மேல் கேஸ் இருக்கிறதால் வேற எங்கேயும் போகவும் முடியாது என்பதால் ஒரு வருஷம் அவங்கப்பா மில்லு, பேக்டரின்னு சுத்திட்டு வந்தான்,
ஒரு வருஷம் ராகினிக்கும் நடந்த விசயத்திலிருந்து வெளியே வர தேவைப்பட்டது. எப்போதும் போல அரவிந்த் ஷெர்லி, அபிஷேக் என்று பிரண்ட்ஸ்கூட பேசிட்டிருந்தாள்.
ஜெகதீஷ் வந்து இப்போ அரவிந்திடம் பேசினான். “எனக்கு ராகினியை கல்யாணம் பண்ணிக்கணும், ஆனால் அவாவேண்டாம்னு சொல்லுற, எனக்கு உதவி பண்ணுங்கன்னு” வந்து கேட்டான்.
ஜெகதீஷ் அப்படி சொல்லவும் அரவிந்த்திற்கே ஆச்சர்யமாக இருந்தது.
“ஜெகதீஷ் இது விளையாட்டு இல்லை.நடந்த விசயங்கள் உனக்குத் தெரியும். அதுக்கப்புறம் பின்னாடி இதை வைச்சு அவளைக் காயப்படுத்தக்கூடாது. எல்லாம் யோசிச்சுதான் உங்க வாழ்க்கையை தீர்மானிக்கணும்”
“எல்லாம் யோசிச்சுதான் கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.ஆனால் அவள்தான் பயப்படுறா”
“அப்போ நான் ராகினிக்கிட்ட பேசுறேன்” என்றவன் அடுத்த நாளே ராகினியிடம் போய் பேசி, அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்திருந்தான்.
ராகினி ஜெகதீஷ் கல்யாணத்தை ஒரு மாதத்தில் நடத்தி முடித்து, ஜப்பானில் உள்ள அவங்க கம்பெனியை நாங்க நடத்துறோம்னு அவங்க அங்கயே போயிட்டாங்க!அதுதான் ராகினிக்கு நல்லதுன்னு அரவிந்த் நினைத்தான்.
பிரண்ட்ஸ் எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கவும் இவனுக்கு சும்மாயிருக்க பிடிக்காமல் நம்ம காலேஜ்லயே எம்.பீ.ஏ படிக்கிறேன் என்று படிக்க கிளம்பிட்டான்.
அந்த ஒரு வருஷத்துக்குள் அரவிந்த் மேல இருந்த கொலை வழக்கை மொத்தமாக சண்முகவேல் இல்லாமல் பண்ணிவிட்டார்.
அரவிந்த் படிக்கப்போறேன்னு சொன்னதுமே வீட்டுல உள்ளவங்களுக்கு “இவனை என்ன செய்யலாம்?என்று கோபம்தான் வந்தது.அப்படி இப்படின்னு இருபத்தெட்டு வயசுக்கு மேலாகுது. இவன்கூட உள்ளதுக எல்லாம் கல்யாணம் முடிச்சிடுச்சிங்க. அபிஷேக்குக்கு இரண்டு குழந்தை இருக்கு. இவன் மறுபடியும் படிக்கப்போறானே! என்றுதான் கோபம் வந்தது.
அவன் காலேஜுக்குப் போனான். எம்.பீ.ஏ படிப்போம் எதுக்கும் யூஸாகும். அடுத்து இங்கயே கம்பெனி தொடங்கிடலாம் என்றுதான் நினைத்துப்போனான்.
சித்தேஷின் அண்ணன் கார்த்திக்தான் அரவிந்தை ஏதாவது செய்யணும்னு முடிவோடு இருந்து, அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான்.
அரவிந்தை ஏற்கனவே அவனுக்குப் பிடிக்காது. அவன் மேல் சித்தேஷின் கேஸ் இருக்கிறது என்று இருந்தவனுக்கு, அந்த கேஸையும் யாருக்கும் தெரியாமல் ஒன்னுமில்லாமல் ஆக்கிட்டாங்க என்றதும்தான் இன்னும் பழிவெறி அவனுக்குக் கூடிவிட்டது.
அரவிந்தோ எம்.பீ.ஏ பர்ஸ்ட் இயர் முடிஞ்சதும் லீவுல அப்பாவோட மில்லுல இருக்கிற வேலையை பார்ப்போம்னு மில்லுக்குப்போயிட்டு வந்திட்டிருந்தான்.
அதுபிடிக்காமல் கார்த்திக் ஆட்களை செட் பண்ணி அரவிந்தை கொல்லுவதற்கு ஏவிவிட்டிருந்தான். அரவிந்த்தின் தனிக்குணம் தெரியாதவங்களாயிருப்பானுங்க போல, அவன் காரை வழிமறிச்சு அவனைப் போட்டுத்தள்ள முயல, அவனோ அவனுங்க ஆயுதத்தை பிடுங்க அவனுங்க முதுகிலயே கோடுபோட்டுவிட்டுவிட்டான்.
அதுல அரவிந்த் மீண்டும் பேலீஸ் ஸ்டேஷன் பக்கம் எட்டிப் பார்க்கவும்கு, இதுக்குமேல இவனை இங்க வைச்சா தாங்காதுன்னு அமைதியா நல்லபிள்ளையா இருந்துக்கன்னு சென்னைக்கு அனுப்பி வைச்சிட்டாங்க!
சென்னை வந்த அரவிந்த்துக்கு அங்கேயும் எதிரிகள்தான் நதியா மூலமாக கிடைச்சாங்க.
எங்கப்போனாலும் அம்மாஞ்சி மாதிரியே முகத்தை வைச்சிக்கிட்டு மொத்தபிரச்சனையையும் இழுத்துட்டு வர்றதுதான் கோயமுத்தூர் ரவுடிக்கு வழக்கம்!