கழிமுள்ளி நெஞ்சுக்காரி-38

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-38

கழிமுள்ளி-38

அரவிந்தும் நதியாவும் மாடியில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்த அவனது அக்கா “அரவிந்து நீ மேலயா இருந்த? உங்களுகு காபி கொண்டு வந்தேன். கதவு திறக்கலைன்னு போயிட்டேன். இரண்டுபேரும் வாங்க காபிதாரேன்”என்று எதுவும் தெரியாத மாதிரியே கூப்பிட்டாள்.

நதியாதான் அதுவந்து அண்ணி நாங்க குளிச்சிட்டு வர்றோம்,அப்புறம் காபிகுடிக்கிறோம்”என்றவள் வேகமாக ரூமுக்குள்ளே போய்விட்டாள்.

அரவிந்தும் அவள் பின்னாடியே போனான்.

“அரவிந்து கொஞ்சம் நில்லு. இரண்டுபேரும் குளிச்சிட்டு அப்படியே கிளம்பிடுங்க. நம்ம ஊருக்குப் போறோம். அங்கேயும் நம்ம உறவுமுறைகளுக்கு கல்யாணம் நடந்ததைச் சொல்லணும்ல. கிளம்புங்க”என்று கனகவல்லி சொல்லிவிட்டுப்போய்விட்டார்.

அரவிந்துதான் ஊருக்குப் போகணுமா என்று யோசித்து பின் போய்தானே ஆகணும் என்று உள்ளேபோனவன் குளிச்சிட்டு நதியாவை ரெடியாக இருக்க சொன்னான்.

அவர்கள் அடுத்து சாப்பிட்டு முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பணும்னு என்று வெளியே வந்தார்கள். அங்கே ரமேஷும் குடும்பத்தோடு வந்திருந்தார்.

நதியாவுக்கு கீதாஞ்சலியைப் பார்த்ததும் ஓடிப்போய் கழுத்தோடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள்.

நர்மதாதான் “யப்பா கல்யாணம்னு ஒன்னு ஆனதும் இதுங்க அம்மாவைத்தான் தேடுதுங்கப்பா. பூமராகிட்டாங்க போல”என்று சொன்னவள் நதியாவிடம் முகத்தைது திருப்பிக்கொண்டாள்.

“போடி அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. ஒரே நாள்ல எல்லோரும் மாறிடுவாங்களா என்ன?என்னம்மா நாங்க ஊருக்குப்போறோம்னு வழியனுப்ப வந்திருக்கீங்களா?”என்று கேட்டாள்.

“இல்லையே நாங்களும் உங்கக்கூட கோயமுத்தூர் வரணும்னு உன் மாமனார் கண்டிஷனா சொல்லிட்டாரு.அதுதான் அங்கயே எனக்கும் ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி செட்டிலாகிடலாம்னு முடிவு பண்ணி வந்துட்டோம்”என்று நர்மதா பேசிக்கொண்டிருந்தாள்.

ரமேஷ் சட்டென்று திரும்பி நர்மதாவைப் பார்த்து முறைத்தவர் “ நர்மதா கவனமா பேசு. வாய் துடுக்கு கூடிப்போச்சு”என்று திட்டவிட்டார்.

அதைப்பார்த்த அரவிந்துக்கு எதுக்கு அவர் திட்டுறாருன்னு புரிந்துவிட்டது. 

அதனால் நர்மதாவைக் கூப்பிட்டான் “ நர்மதா இங்க வா?நீ எங்கக்கூடவே எங்க கார்ல வா. அத்தையும் மாமாவும் அம்மா அப்பாக்கூட வருவாங்க”என்று அவளைதன் பக்கமாகக் கூப்பிட்டு நிறுத்திக்கொண்டான்.

முன்னாடியாவது காலேஜ் ஓனர்தான். ஆனால் இப்போ அப்படியில்லையே!மருமகனாகப் போயிட்டானே!எதுவும் சொல்லமுடியாமல் முழித்தார். அந்தக்கோபத்தை தனது கண்களில் காண்பித்து நர்மதாவை முறைத்தார்.

இப்போ எல்லோருமே கார்லயே கோயமுத்தூர் கிளம்பிவிட்டனர்.

நதியாவுக்கு ஏனோ கோயமுத்தூர் போகணும்னு சொல்லும்போதே ஒருமாதிரி உணர்வு வந்தது. அது அரவிந்தை அகொலைகாரன்னு சொன்ன ஊர்னாலாயா?இல்லை அவனோட எதிரி அங்க இருக்கிறதுனாலயான்னு தெரியலை. ஆனால் மனசுக்கு பிடிக்காத மாதிரியே உணர்வு இருந்தது.

அதனால் அவனது தோளில் சாய்ந்து அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அவளது மனநிலையை அரவிந்த் உணர்ந்துவிட்டான் போல உடனே அவளது கையைப் பிடித்து தன்னுடை நெஞ்சில் வைத்தவன் “எதுக்கு இப்படி இருக்கடி. எதுவந்தாலும் இந்த அரவிந்த் உன்கூடவே இருப்பான். என் கண்ணு உன்னைப் பார்க்குதோ இல்லையோ. என் உயிர் எப்பவும் உன்னை உணர்ந்துட்டே இருக்கும். அதனால் இந்த மச்சான் மேல நம்பிக்கை வைங்க அம்மணி அதுபோதும்”என்றவன் அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.

“க்கும் இங்க நானும் இருக்கேங்கிற நினைப்பு இருக்கட்டும். இரண்டுபேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாமாம். அதை காண்பிக்கிறாங்களாமாம். முடியல மக்களே”என்று நெற்றியில் தட்டிக்கொண்டாள்.

அதைப் பார்த்து அரவிந்த் சத்தமாக சிரித்தான்.

“உனக்கும் கல்யாணம் ஆகும்ல அப்போ பார்க்கிறேன். உன் ஹஸ்பிண்ட் எப்படி உன்னைக் கொஞ்சுரான்னு”

“இப்படியெல்லாம் கொஞ்சமாட்டோம்பா”

“பார்க்கத்தானே போறேன்”

“அதை அப்போ பாருங்க. இப்போ உங்க பொண்டாட்டெயை பாருங்கோ”என்று நதியாவைக் கைகாட்டிவிட்டாள்.

அதுக்குப்பிறகு அரவிந்த் எங்கபேச, அவன் பொண்டாட்டியை ரசிக்கத் தொடங்கிவிட்டான்.

எல்லாரும் குடும்பமாக கோயமுத்தூர் வந்து இறங்கும் பொழுதே பார்த்ததும் அசந்துவிட்டனர். அந்த வீடு மொத்தமாக அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளால் ஜொலித்தது அதை பார்த்த ரமேஷ் மொத்தமாக அதிர்ந்துவிட்டார்.

அவ்வளவு பெரிய வீடு, அதுவும் பாரம்பரியமாக இருக்கும் வீடு என்று தெரிந்தது. 

நர்மதாவுக்கும் அது ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக இருந்தாலும், இவங்க எதையுமே சின்னதா கட்டியே வைக்க மாட்டாங்களே என்ற எண்ணம்தான் வந்தது. 

ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாத இறங்கி உள்ளே வந்தார்கள். 

அரவிந்த் நதியாவிற்கும் ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிட்டு போனார்கள்.

மாணிக்கமூர்த்தியும் அவரது மனைவி சிவகாமியும் தான் ரமேஷ் கீதாஞ்சலி கூட்டிட்டு போய் அவர்களுக்கு அங்கே இருக்கும் தனி ரூமைக் கொடுத்தார்கள்.

“நாளைக்கு அரவிந்துக்கும் நதியாவுக்கும் சின்னதா ஒரு ரிசப்ஷன் வச்சிருக்கோம் சம்மந்தி. இங்க இருக்க நம்ம சொந்தக்காரங்க, ரொம்ப நெருங்கிய நண்பர்கள்னு வருவாங்க.அதுக்காகதான் இங்க வந்திருக்கோம்,ஏற்கனவே மூணு நாள்ல கல்யாணத்தை முடிச்சிட்டோம் நிறைய சொந்தங்கள் விட்டு போயிருக்காங்க.அவங்க வந்து தப்பா நினைச்சுக்க கூடாதுன்னு அப்பவே கார்டு அடிச்சு இங்க என் மகன் மூலம் கொடுத்துட்டோம். அதுக்காக தான் இங்க வந்திருக்கும் உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்லை, சொல்லுற சூழ்நிலை இல்லை அதனால்தான் இப்போ சொல்லுறோம் தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணன் தான் வருத்தப்பட்டாங்க. நீங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருந்தா பெரிய அளவுல இங்கயே ஊரைக்கூட்டி செய்திருக்கலாம் அப்படின்னு சொன்னாரு. ஏன்னா நாங்க எல்லாருமே அரவிந்த் கல்யாணத்தைதான் எதிர்பார்த்துட்டு இருந்தோம். அது எப்படி சிம்பிளா முடிஞ்சு போச்சுன்னுதான் அண்ணனுக்கு வருத்தம் .நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க, மனசுல எதுவும் வச்சுக்காதீங்க”என்று சமாதானமாக பேசிவிட்டு போனார்கள். 

அதைக் கேட்டா நர்மதாதான் “யாப்பா சாமி இதுவே உங்களுக்கு சின்னதா கல்யாணத்தை நடத்தினதா? இப்பவே எனக்கு தலை சுத்துதுப்பா” என்றவள் ஹாயாக பெட்டில் படுத்து விட்டாள்.

ரமேஷுக்கு அவர்கள் என்னதான் பண வசதியோடு இருந்தாலும் அரவிந்த பத்திய உண்மை தகவல் தெரிந்ததிலிருந்து அவருக்கு எதுலயுமே ஒரு ஓட்டுதல் இல்லை. மகள் காதலித்தாள்,கல்யாணம் பண்ணிக் கொண்டாள் அவள் நல்லா இருக்கணும்” என்ற ஒரே எண்ணம் மட்டுமே இப்பொழுது அவரது மனதில் இருக்கிறது. 

அங்கே அடுத்த நாள் ஒரு பெரிய மண்டபத்தில் அரவிந்த் நதியா ரிசப்ஷன் நடந்தது. 

அரவிந்த் நதியாவும் நல்ல அலங்காரத்தோடும் சந்தோஷத்தோடு மேடையில் நின்றிக்க வாழ்த்த வந்தவர்கள் எல்லாரும் அரவிந்த் மனைவி அழகா இருக்காங்க. இதுக்குதான் இத்தனை நாள் காத்திருந்து கல்யாணம் பண்ணிருக்கான் அரவிந்த்” என்று நதியாவைப் பார்த்து சொல்லிவிட்டுப்போனார்கள்.

அரவிந்தின் காலேஜ் பிரண்ட்ஸ் சொந்தங்கள் என்று எல்லாரும் வந்து வாழ்த்திவிட்டுச் செல்ல,அபிஷேக்கும் ஷெர்லியும் தங்கள் இரு குழந்தைகளோடு வந்தார்கள்.

“ஹாய் நதியா எப்படி இருக்கீங்க” என்று கேட்ட ஷர்லி அவளது கையை பிடித்துக் கொண்டாள். நீண்ட நாள் பழகிய தோழியைப் போலவே ஷெர்லி அவளிடம் பேசினாள். அதிலிருந்தே நதியாவுக்கு அரவிந்த் ஷேர்லி அபிஷேக் இவர்கள் நட்பு எப்படியாகப்பட்டது என்று புரிந்தது. 

“டேய் அரவிந்த் லவ் சொல்ல வந்த எத்தனை பொண்ணுங்களை அப்போ எல்லாம் விரட்டிவிட்ட,இப்போ பாரு நீயாகத் தேடி போய் நதியாவை விரட்டி விரட்டி காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க.‌ நாங்க காதலிக்கிறதை பார்த்து எல்லாம் கிண்டல் பண்ணினவன்தானே நீ. இப்போ நீயே காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்க. அரவிந்த் ஜமாயிச்சிட்ட போ” என்று வாழ்த்திவிட்டுப் போனார்கள்.

அதைக்கேட்டதும் அரவிந்த் முகத்தில் வெட்கம் வந்துவிட்டது.

அவன் வெட்கப்படுவதை பார்த்த நதியாவுக்கே உண்மையிலே அரவிந்த் தன்னை காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டதை நினைத்து பெருமையாக இருந்தது. அவனது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவனுடைய இன்னும் நெருங்கி நின்று கொண்டாள்.

ராகினி கோயமுத்தூருக்கு வரக்கூடாது என்று இருப்பதால் அவள் இங்கு வரவில்லை. ஆனால் அவள் சார்பாக பரிசு அரவிந்திற்கும் நதியாவிற்கும் சரியாக வந்து சேர்ந்தது.

சண்முகவேலோ ரமேஷையும் கீதாஞ்சலி தனது பக்கத்தில் நிற்க வைத்து எல்லாரிடமும் “இதுதான் என்னோட சம்மந்தி, இவர் நம்ம காலேஜ்ல பிரின்ஸ்பாலாவும் இருக்கிறார்’ என்று பெருமையாக சொல்லி எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

ரமேஷுக்கும் கீதாஞ்சலிக்கும்தான் ஆச்சரியமாக இருந்தது. நிறைய இடத்துல பணம் இருந்தா குணம் இருக்காது. பொண்ணு கொடுத்த வீட்டை மதிக்க மாட்டாங்க ஆனால் சண்முகவேலும் மாணிக்க மூர்த்தியும் அப்படியில்லை. அவங்களுக்கு ரொம்ப மரியாதை கொடுத்து எல்லா சொந்தங்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவே ரமேஷிற்கு கொஞ்சம் தெளிவைக் கொடுத்தது. அரவிந்த் மேலிருந்த கோபம் கொஞ்சம் தணிந்தது. 

எல்லாம் ஓரளவு சுமூகமாக நன்றாக போய்க் கொண்டிருந்த நேரத்தில், அங்கே அழையா விருந்தாளியாக கார்த்திக் பொக்கேயோடு அரவிந்தையும் நதியாவையும் வாழ்வதற்காக மேடை ஏறினான்.

அரவிந்தின் அண்ணன் ஆனந்தராஜ் ஓடிவந்து கார்த்திகேயனை மேடையில் ஏறவிடாது தடுப்பதற்கு போனான்.

ஆனால் மாணிக்கமூர்த்தி அவனது கையை பிடித்து இப்போதைக்கு எதுவும் பண்ணாத அவன் வந்துட்டான் வாழ்த்திட்டுப் போகட்டும் என்று சொல்லிவிட்டார். 

இப்பொழுது கார்த்திக் வந்தவன் அரவிந்திடம் கையை நீட்டி “ வாழ்த்துக்கள் அரவிந்த் உன்னுடைய நண்பன் சீத்தேஷ் சார்பாக நான் வந்திருக்கேன். உன்னோட கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள் சொல்ல வந்திருக்கேன். அவன் உயிரோட இருந்திரீந்தால் இப்போ உன்னோட கல்யாணத்தை ரொம்ப சிறப்பா எடுத்து செய்திருப்பான். உன்கூடவே மாப்பிள்ளை தோழனாக நின்றிருப்பான். எங்கே இருந்தாலும் அவனோட ஆத்மா நண்பனை நினைத்து வாழ்த்தும்ல நான் அவனுக்காக உன்னை வாழ்த்துவதற்கு வந்திருக்கேன்” என்று சொல்லி கைக்கொடுத்தான்.

அரவிந்த் அவனிடம் எதுவுமே சொல்லாமல் லேசான புன்னகையோடு கையை கொடுத்தவன் “ என்னோட கல்யாணம் ரிசப்ஷனுக்கு வந்ததற்காக ரொம்ப நன்றி கார்த்திக்கண்டிப்பா. நீ சொன்ன மாதிரி சித்தேஷும் சந்தோஷப்படுவான். நீங்க சாப்பிட்டு போ, கார்த்திக்” என்று அவனிடம் நன்றாக பேசினான்.

ஆனால் நதியாவோ கார்த்திக் சித்தேஷ் என்ற பெயரை கேட்டதும் அப்படியே பயந்து கைகள் நடுங்க, அரவிந்தோடு இன்னும் அதிகமாக ஒட்டிக் கொண்டாள்.

அதைப் பார்த்த அரவிந்த் அவளது தோள்மேலே கையைபபோட்டு தன்னோடு சேர்த்து இறுக்கிப்பிடித்தவாறே கார்த்திக்கிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“வாழ்த்துக்கள் நதியா அரவிந்த் மாதிரி நல்ல ஹேண்ட்சமா பையன் கிடைச்சிருக்கான். எந்த பொண்ணை ஏறெடும் பார்க்காத ஒரு நல்ல ஆணழகன் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும். உங்களுக்கும் என்னைடைய வாழ்த்துக்கள்” என்று சிரித்தவறே வாழ்த்திவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கி போனவன், திரும்பி ஒரு அழுத்தமான பார்வை அரவிந்தைநோக்கி பார்த்துவிட்டுப் போனான். 

அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்த அரவிந்தோ “போடா டேய் டேஷூ உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது” என்பது போல் இவனும் மறு பார்வை பார்த்தவைதான்.

ஆனால் அந்தப் பார்வை நதியாவின்‌ முதுகுத்தண்டை சில்லிட வைத்தது.

“என்ன மாதிரியான பார்வை இது பழிவாங்கும் பார்வை மட்டுமல்ல உன்னை மொத்தமாக அழிப்பேன்” என்று சொல்லாமல் சொல்லும் பார்வை என்று அவளுக்காக புரிந்தது. 

அரவிந்த் என்று கூப்பிட்டு அவனது முகத்தை ஏறிட்டு பார்த்தாள்.

“இது இது சித்தேஷோட அண்ணன் கார்த்திக்தானே இவங்கதானே உங்களை பழி வாங்கணும்னு நினைக்கிறாங்க இவங்க எதுக்கு நம்ம ரிசப்ஷன் வந்தாங்க” என்று நடுங்கி குரலோடு துடிக்கும் உதடுகளோடும் கேட்டாள்.

“இதைப் பார்த்து எல்லாம் பயந்துட்டியா அப்படி பயப்படக்கூடாது. இவனால் நம்மள என்ன செய்ய முடியும்.ஒன்னும் செய்ய முடியாது. நான் இருக்கேன். நம்ம குடும்பத்தார் இருக்காங்க. நம்ம இப்போ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம். இதையெல்லாம் மனசுக்குள்ள ஏத்திக்காத” என்று அவளது கையை தட்டி கொடுத்தான்.

அவன் என்னதான் சமாதானப்படுத்தினாலும் ஏதோ நெஞ்சுக்குள்ள ஒரு முள் தைத்தது போல கார்த்திக்கின் பார்வை பதறவைக்கத்தான் செய்தது!

இதுக்கெல்லாம் பயந்தா அது அரவிந்த் இல்லையே!

நதியா நீ ஒரு டானோட பொண்டாட்டி மறந்திடாத!பயப்படாத!