கழிமுள்ளி நெஞ்சுக்காரி-39

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-39

கழிமுள்ளி-39

அரவிந்த் காலேஜிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

அப்போது ரெடியாகி வந்த நதியா “ஹாய் அரவிந்த் நான் கிளம்பிட்டேன்.நீங்க கிளம்பிட்டீங்களா?”என்று அவன் முன் வந்து நின்றவளைப் பார்த்தான்.

“என்னாச்சு ரொம்ப சாந்தமா வந்து நிக்கிறியேடி. என்ன பண்ணி வைச்சிருக்க? முதல்ல அதைச் சொல்லு”

“அதெல்லாம் ஒன்னும் பண்ணல அரவிந்த். உங்களைப் பார்த்தா கொஞ்சணும்போல இருந்துச்சு அதுதான்” என்று அவன் பக்கமாக நெருக்கி வந்து நின்று அவனது நாடியைப் பிடித்துக் கொஞ்சினாள்.

“நீ கொஞ்சிறதுலயே தெரியுது ஏதோ இருக்குன்ன என்னடி பண்ணி வைச்ச?”

“நேத்து என் பைக்கை போலீஸ் பிடிச்சுட்டுப் போயிட்டாங்க”

“என்னஆஆஆ? இதையேன் நேத்தே சொல்லல?”

“நேத்துதானே இன்னைக்கு சொல்லலாம்னுதான்.நான் ஹார்ஸ் டிரைவிங் பண்ணினேன்னு பொய் சொல்லி தூக்கிட்டுப் போயிட்டாங்க. இன்னைக்கு நான் உங்கக்கூட கார்ல வர்றனே”

“பைக் இல்லாமல் நேத்து யார் கொண்டுவிட்டா?”

“தினேஷ்”

“தினேஷா?”

“அப்போ விஜய் எங்க?”

“அது அவன் பைக்கையும் தூக்கிட்டாங்கள்ல ஹாஹாஹா”என்று சிரித்தாள்.

“இது எப்போ நடந்துச்சு?”

“நேத்து நீங்க மீட்டிங்க்ல இருக்கேன்னு டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொன்னீங்கள்ல அப்போ”

அவளை இப்போ முறைத்துப் பார்த்தவன் முதல்ல “விஜயை உதைச்சா நீ சரியாயிடுவ. இரண்டுபேருக்கும் ஏதாவது ஆகிடுச்சுன்னா என்னடி பண்ணுவீங்க. ஏற்கனவே அவங்கப்பா மனைவியை இழந்துட்டு நிக்கிறாங்க. நீங்க இப்படி டிரைவ் பண்ணினா ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்ணுவ தியாம்மாஆஆ?”என்று கோபத்தில் கேட்டான்.

“அது அது அரவிந்த் நான் நான் ஒரு ஃபன்னுக்கு பண்ணனும்னு பண்ணினோம். சாரி”

“உங்கப்பாக்கிட்ட ஏதாவது உன்னைப் பத்தி சொன்னா ஒரே வார்த்தையில முடிச்சிடுறாரு. உங்க மனைவியை நீங்க கண்டிங்க சார். என்னை இதுல இழுக்காதிங்கன்னு சொல்லிடுறாரு. இப்போ நான் என்னடி பண்ண?உன்னை அடிக்கவா?”

 

“அடிங்க அரவிந்த்” என்று கன்னத்தை அழகாக அவன் முகத்துக்கு நேராக காண்பித்தாள்.

அதில் சத்தமாக சிரித்தவன் “என்னை எப்படி கவுக்கணும்னு நல்லாதெரிஞ்சு வைச்சிருக்கடி.பிராடு பொண்டாட்டி” என்றவன் அவளது கன்னத்தை பிடித்து இழுத்து கடித்து வைத்தான்.

“இன்னைக்கு லீவு போட்டிருவோமாடி”

“லெக்ட்சரர் லீவு போடக்கூடாது. ஸ்டுடண்ட் நான்தான் லீவு போடமுடியும்”

“காலேஜ் சேர்மனும் லீவு போடலாம்டி”

“ஆஹாஆன் அப்போ லீவு போட்டிடலாமா?”

“போட்றலாம்”என்று சொல்லி முடிக்கவில்லை வெளியே வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்டது.

அதைக்கேட்டவன் “உன்னைக் கூப்பிட வந்துட்டானுங்கடி. இன்னைக்கு நானே உன்னைக் கொண்டுவிடுறேன்னு சொல்லுடி”என்று சொன்னான்.

“உண்மையா கொண்டுவிடுவீங்களா?”

“ஆமாடி போய் சொல்லிட்டுவா. நான் போய் சொன்னேன்னா நல்லாயிருக்காது. உன்னை ஏதோ அமுக்கி பிடிச்சு வைச்சிட்டு நான் பதில் சொல்லுற மாதிரியே பார்த்துட்டுப் போவானுங்கடி. ஆனாலும் புருஷன்கிட்டயிருந்தே உன்னை காப்பாத்துறானுங்க பாரு. அங்க நிக்கிறானுங்க உன் பிரண்ட்ஸ்.அதுவும் அந்த குள்ளன் இருக்கானே”

“ஏய் அவன் ஒன்னும் குள்ளன் இல்லை. அவன் என்னைவிடலாம் வளர்த்தியா இருக்கான்”

“எனக்கு அவன் குள்ளனாதான்டி இருக்கான். உன் தங்கச்சித்தான் அவனுக்கு அழகா குள்ளவாத்துன்னு பேரு வைச்சிருக்கா”

“ஏய்ய்ய் போதும் போதும் என் பிரண்ட்ஸை குறை சொல்லணும்னா மட்டும் வாய் கோயமுத்தூர் வரைக்கும் போகுமே”

“போய் சொல்லிட்டு வாடி”என்றவன் எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டிருந்தான்.

நதியா வெளியே வந்தவள் “டேய் ரொம்ப ஹார்ன் அடிக்காதிங்கடா. நான் இன்னைக்கு சார்கூட வர்றேன். நீங்க போங்கடா”என்றாள்.

முகேஷ்தான் “ஏன் நதி சார் பைக் பிடிபட்டதுக்கு திட்டினாங்களா?”என்று அக்கறையாக விசாரித்தான்.

நதியாவுக்கு பின்னாடியே வந்த அரவிந்த் “ஆமா திட்டினேன். உன் பிரண்டைத் தூக்கிப்போட்டு மிதிக்கப்போறேன். இப்போ என்ன செய்கிறதா இருக்க முகேஷ்?”என்று சீரியஸ்ஸாக கேட்டான்.

அவ்வளவுதான் “ஒன்னுமில்லை சார். நாங்க காலேஜிக்கு போறோம்”என்று தலையை குனிந்துக்கொண்டான்.

அதைப்பார்த்த நதியா “ முகேஷ் நான் சார்கூட வர்றேன். நீங்க போங்க”என்றுவிட்டு விஜயைப் பார்த்தாள்.

“வாங்கடா அவா சார்கூட வரட்டும். நம்ம முன்னாடி போவோம்”என்று கூப்பிட்டு கிளம்பிப்போயிட்டாங்க.

“ஆனாலும் இவனுங்க ரொம்ப படுத்துறானுங்கடி. விஜயைத் தவிற மூணுபேரும் என்னை எதிரியாவே பார்க்குறானுங்க”

“விடுங்க அவனுங்க உங்களை பின்னாடி புரிஞ்சுப்பாங்க”

“அவனுங்க புரிச்சிங்கிறது இருக்கட்டும். முதல்ல நீ என்னை புரிஞ்சிக்கடி”

“நான் என்ன புரிஞ்சிக்கணுமாம்”

“கல்யாணமாகி ஆறு மாசமாச்சு. இன்னும் முத்தம்கூட கேட்டுவாங்க வேண்டியதிருக்குடி முடியல. நீயா வாடி”

“ஹல்லோ படிக்கிற புள்ளை மனசைக் கெடுத்து காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு,புரிஞ்சுக்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?”

“என்ன அர்த்தம்னா கேட்கிற? நீயெல்லாம் எனக்கு டீடயலு சொல்லுற பாரு முடியலடி”

“ஹல்லோ சார் இன்னும் ஆறுமாசம் இப்படியே இருங்க அதுக்கப்புறம் நானே உங்கக்கிட்ட லவ் சொல்லுறேன்”

“அடிங்க இன்னும் ஆறுமாசமா? தாங்காதுடி”

“ஏதோ தினமும் பொண்டாட்டிய தொடாமல் பட்டினியா இருக்கிறமாதிரியே பில்டப்பு. அதுதான் டெய்லி என்னைய ஆட்டைப்போட்டுட்டுத்தானே இருக்கீங்க ஆபிசர்” 

“அதெல்லாம் நானா எடுத்துக்கிறதுடி”

“அதுசரி அப்போ இது காதல் சமாச்சாரத்துல வராதுங்களா மச்சான்”

“அதெல்லாம் வரும் மச்சான்னு கூப்பிடாத அப்புறம் மொத்தமா லீவு போடவேண்டியதிருக்கும்டி”

“இன்னைக்கு காலையில் இருந்து உங்க ப்ளான் லீவு போடுறதுலதான் இருக்கே மச்சானுக்கு ஆசை கூடிப்போச்சோ?”

“எப்போ ஆசைக் குறைஞ்சிருக்கு கூடுறதுக்கு. எப்பவுமே ஆசை அதிகமாகத்தான் இருக்கு”

“இருக்கும் இருக்கும்” என்று உதட்டை வளைத்து சொன்னவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.

“அரவிந்த் வேண்டாம்”

“வேணும்”

“லேட்டாகிடும்”

“ஆகட்டும்”என்றவன் அவளை சுவரோடு அப்படியே பிடித்து வைத்தவன் அவளது உதடுகளை குனிந்து தன் உதட்டால் தொட்டான்.

அவ்வளவுதான் சும்மாவே அவன்கிட்ட மயங்கிகிடப்பவளுக்கு இது போதாதா? திரும்பவும் மயங்கி கண்களை மூடிக்கொண்டாள்.

அவளது உதட்டை அப்படியே மெது மெதுவாக கடித்து இழுத்தவனின் மூச்சுக்காற்று மொத்தமாக அவள் மீது வெப்ப அனலாக வீசியது. அதிலயே தெரிந்தது ‘இன்னைக்கு மச்சானுக்கு மூடு செம மோசமா இருக்கே’ என்று மனதில் நினைத்தவள் அவளாக அவனது கழுத்தை வளைத்துப் பிடித்துக்கொண்டு அவனது செயலை தனதாக்கினாள்.

அவனது உதடுகளை தனது பற்களுக்குள் வைத்து கடித்து இழுத்துக்கொண்டாள்.

அவனது உதட்டுக்குள் தன் நாக்கினை நுழைத்து, அவனது நாக்கினை தொட்டு ஈரமுத்தத்தின் சுவையை அவனுக்கும் உணர்த்தினாள்.

அவ்வளவுதான் அவளது ஒற்றை முத்தத்தில் தன்னைத் தொலைத்தவன் நதியாவை அப்படியே தூக்கிக்கொண்டான்.

அவளுக்கும் இப்போது அவனைத் தவிற வேற எதுவும் தேவையில்லை!அவனுக்கும் அவள் மட்டும் போதும் என்பதால் எதையுமே யோசிக்காது அளைத் தூக்கிட்டுபோய் சோபாவில் போட்டான்.

“இங்கயா?”என்று கேட்டவளின் மேல் எந்த பதிலுமே சொல்லாது ஊர்ந்துப்போனான்.

“அரவிந்த்த்” என்று அவனது சட்டையைக் கொத்தோடு இழுத்து தன் முகத்திற்கு நேராகக் கொண்டு வந்தவள் அப்படியே அவனது கழுத்தில் செல்லமாகக் கடித்து வாசம் பிடித்தாள்.

போச்சு போ ஏற்கனவே அவன் உன்னை லவுட்டப்போறான். இதுல நீயே ரூட்டுப் போட்டுக்குடுக்கிறியே நதியா!

அவளது உதடுகள் தனது கழுத்தில் தொட்டுத் தொட்டு மீளாவும், மொத்தமாக அவள் மேல் கவிழ்ந்துவிட்டான்.

நதியா அவனைக் காதலோடு அணைத்துக்கொள்ள, அரவிந்த் அவளது ஒவ்வொரு பாகத்திலும் வாசம் பிடித்து சுவைத்து முடித்து அவளை மொத்தமாக ஆண்டுக்கொண்டான்.

இரண்டுபேரும் அயர்ந்து படுத்திருக்க திடீர்னு போன் சத்தம் கேட்டதும் அரவிந்த் எழுந்துப்பார்த்தான். 

அது ரமேஷ் என்றதும் ஐய்யோ கரடி என்று எடுத்து காதில் வைத்தான்.

“சொல்லுங்க சார்?”

“நதியா காலேஜ் வரலையா?”

“வருவா சார்.என்ன சொல்லுங்க சார்”

“கீதாக்கிட்ட ஏதோ சாப்பிட கேட்டாளாம். அதுதான் என்கிட்ட குடுத்துவிட்டா. அவள் கிளாஸ்ல இல்லையேன்னு பார்த்தேன்”

“அவளை நான் கூட்டிட்டு வருவேன் அதுதான் லேட்டு”

“ஓகே ஓகே”என்று வைத்துவிட்டார்.

“யாரு அப்பாவா?”

“உங்கம்மா உனக்காக ஏதோ ஸ்பெசலா பண்ணிருக்காங்களாம். அதைக் கொண்டு வந்தாராம். மனுஷன் மருகன்கிட்ட கொஞ்சம் நல்லா பேசினாதான் என்னவாம்?”

“அதையே நானும் திருப்பி சொல்லுவேன். வேண்டாம். குளிச்சிட்டு கிளம்புங்க”என்று போய்விட்டாள்.

“மாமனாரா போனாரு. இல்லைன்னா”

“இல்லைன்னா” என்று இடுப்பில் கைவைத்து அவனை முறைத்துப்பார்த்தவாறே கேள்விக்கேட்டவளை இன்னும் அவனுக்கு அதிகமாக பிடித்து காதல் பொங்கிவழிந்தது.

“வேண்டாம் அரவிந்த் கண்ணுலயே என்னை திங்காதே காலேஜ் போகணும்” என்று ஓடிவிட்டாள்.

இருவரும் காலேஜ் வரும்போதே அரைமணி நேரத்துக்கு மேலாக லேட்டுதான்.அவளுக்கு கிளாஸ்குள்ள போகமுடியலை. வெளியே நின்றிருந்தாள்.

அப்போ அவளுக்கு விஜய்கிட்டயிருந்து மெசேஜ் வந்தது. இவன் கிளாஸுக்குள்ள இல்லையா?எங்க இருந்து போன் யூஸ் பண்றான் என்று யோசித்தவாறே போனை பார்த்தாள்.

“நான் கேட்டுக்கு வெளிய நிக்கிறேன். நம்ம வண்டியை எடுக்கப்போகணும் வா. வெளிய டேக்ஸில இருக்கேன்”என்று தகவல் வந்திருந்தது.

அதைப் பார்த்தவள் உடனே வேகமா வெளியே போகவும் அதைப்பார்த்த அரவிந்த் அவளுக்கு போன் பண்ணினான்.

“எங்கடி போற?கிளாசுக்குள்ள போகலையா”

“அந்த மேடம் லேட்டுன்னு வெளிய நிக்க வைச்சிட்டாங்க. விஜய் வண்டி கிடைச்சிட்டு எடுத்துட்டு வருவோம்னு சொன்னான். வெளிய நிக்கிறானாம். பை வண்டியை எடுத்துட்டு வந்திடுறேன்”என்று போனை வைத்துவிட்டாள்.

“இவளோட முடியல. இரண்டுபேரு வண்டியையும் முதல்ல காலேஜ்குள்ள வர்றதுக்கு அலோவ் பண்ணக்கூடாது. அப்போதான் இரண்டும் திருந்தும்”என்று திட்டிக்கொண்டிருந்தான்.

அடுத்த அவனோட கிளாஸ் என்பதால் உள்ளே நுழைந்தவன் கண்ணில் விஜய்படவும் ‘இவன் வண்டிய எடுக்கப்போனவன் எப்போ வந்தான்?அப்போ நதியாவும் வந்திருக்கணுமே?” என்று யோசித்தவாறே நதியா இருக்காளான்னு பார்த்தான் அவளில்லை.

உடனே அரவிந்தை பக்கத்தில் கூப்பிட்டான் “அரவிந்த் இங்க வா”என்றதும் அவனும் பக்கத்தில்போகவும் “நதியா எங்கடா? உன்கூடத்தானே வந்தா. நாங்க இரண்டுபேரும் வண்டியை வாங்கப்போறோம்னு சொல்லிட்டுப்போனா”என்று சந்தேகத்தில் கேட்டான்.

“என்னது வண்டியை எடுக்கப்போறோம்னா சொன்னா?நான் காலையில் இருந்து இங்கதானே இருக்கேன்”

“நீதான் மெசேஜ் பண்ணினதா சொன்னா”

“நானா?மெசேஜா?ஐய்யோ என் போனைக் காலையில் இருந்துக் காணலை. கேண்டீன்ல இருக்கும்போது வைச்சிருந்தேன். ஆனால் அதுக்கப்புறத்துல இருந்துக் காணோம். ஐய்யோ அப்போ யாரு என் போன்ல இருந்து மெசேஜ் பண்ணிருப்பா?”

நதியாவை அந்தபோன்ல இருந்து மெசேஜ்பண்ணி கூப்பிட்டிருக்க்ங்கன்னா, இல்லை இதுல ஏதோ தப்பாயிருக்கு விஜய் என்றவன் எதையுமே யோசிக்காது வெளியே ஓடினான். உடனே போனை எடுத்து நதியாவுக்கு அழைத்துப்பார்த்தான். அது சுவிட்ச்டு ஆஃப் என்று வந்தது. அவ்வளவுதான் பதறிட்டான்.

விஜய் நதியாவுக்கு ஏதோ ஆபத்து மாதிரி தெரியுது. நீ சத்தம்போடாமல் என்கூட வா என்று அவனைக் கூட்டிட்டு உடனே சீ.சி.டீ.வி புடுடேஜை பார்க்க ஓடினான். அவள் வெளியே டேக்ஸில் ஏறிப்போவதைப் பார்த்தவனுக்கு நெஞ்சம் பதறியது?

நீ வரச்சொன்னமாதிரியே யாரோ வரச்சொல்லிருக்காங்க. உன் போனை எடுத்தவன்தான் இதை செய்திருக்கணும் என்று கேண்டீன் புட்டேஜை பார்த்தான்.

காலையில் விஜயை யாரோ இடிச்சிட்டுப்போற மாதிரி இருந்தது. அது யாருன்னு பார்த்தால் மனோஜோட பிரண்டு என்றதும் அவனைப் பிடித்து விசாரித்தான்.

அதற்குள் போலேஸுக்கு தகவல் சொல்லிவிட்டு தனது மாமா வெற்றெவேலுக்கும் சொல்லிவிட்டான். அவர் நேரடியாகவே போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுத்துவிட்டார்.

இப்போது மனோஜை தேடிப்போனாள் அவனைக் காணவில்லை. உடனே அவன் செல்போனுக்கு போன் பண்ணி அவன் எங்கிருக்கான் என்று ட்ரேஸ் பண்ணினார்கள்.

அதற்குள் மனோஜின் பிரண்டை பிடித்து அடிவெளுத்ததில் அவனே மனோஜ்தான் நதியாவைக் கூட்டிட்டுப்போனான். ஆனால் எனக்கு எதுவும் தெரியாது என்றவன் இப்போ மனோஜ் எங்கிருக்கான் என்று சொல்லிவிட்டான்.

உடனே விஜயை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியாக காரை எடுத்துக்கொண்டு நதியாவைத் தேடி போனான்.

ஆனால் அவன் மனசோ இது மனோஜ் செய்திருக்க வாய்ப்பேயில்லை. அவன்கூட வேற யாராவது இருக்கணும்?என்று நினைத்தவனுக்கு உடலும் மனமும் பதறியது!

‘கடவுளே! நதியாவுக்கு எதுவும் ஆகக்கூடாது” என்று வேண்டிக்கொண்டே காரில் அவள் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான்!