கழிமுள்ளி நெஞ்சுக்காரி-40
கழிமுள்ளி-40
நதியாவை ஒரு சேரில் கட்டிப்போட்டு உட்காரவைத்திருந்தனர்.
அவளுக்குப் பக்கத்தில் சும்மா கீழே இருந்த ஒரு குட்டி ஷோபாவில் மனோஜின் கையையும் காலையும் சேர்த்து கட்டிப்போட்டிருந்தனர். அதில் வலி தாங்கமுடியாமல் அழுதான்.
இப்போ நதியா தன் முன்னாடி பவமாக அழுதிட்டிருந்த மனோஜைப் பார்த்து சிரித்தாள்.
“உனக்கு இது தேவையா மனோஜ்?எதுக்கு என்னை இந்த கார்த்திக்கிற்கு கடத்திக்கொடுத்த? இப்போ உன்னையும் அடிச்சு உட்கார வைச்சிட்டான் பார்த்தியா. என்னைக் கொன்னுட்டு பழியை உன்மேல போடப்போறான். சாகப்போற பாரு. இது உனக்கு தேவையான தண்டனைதான் போ”என்று திட்டினாள்.
“எனக்கு இந்தாளைப் பத்தி தெரியாது நதியா. சார் மேலயும் உன் மேலயும் இருக்க கோபத்துல இப்படி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்று அழுதான்.
“அடச்சை அழாதடா நானே அழாம இருக்கேன். இப்போ வந்து மன்னிப்பு கேட்டுட்டிருக்கான் லூசு மாக்கான் என்றவள் கார்த்திக்கை கெத்தாகப் பார்த்தாள்.
“உன்னைக் கொன்னு அரவிந்தை பழிவாங்கணும்தான் உன்னைக் கடத்தியிருக்கேன். என் தம்பியை உன் புருஷன்தான் கொன்னான். அதுக்காகத்தான் இவ்வளவு திட்டமும் போட்டிருக்கேன்.என் தம்பியைக் கொன்னவன் உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கான். நாங்க அவன் இல்லாமல் வேதனையில் இருக்கிறோம். அரவிந்தும் உன்னை இழந்துட்டு அழணும் அதை நான் பார்க்கணும்”என்று சொன்னான்.
“ஏன்டா டேய் நீ லூசாடா?என் புருஷனும் உன் தம்பியும் பிரண்ட்ஸ். அவனை எதுக்கு அரவிந்த கொல்லப்போறாங்க. பைதுதியம் மாதிரி உளறாத. எவன் கொன்னானோ அவனைப் பிடிச்சு பழிவாங்கு போ”
“பிரண்ட்ஸ்தான். ஆனால் உன் புருஷன் ராகினிக்குத்தானே உயிர் தோழன். அப்போ ராகினிக்காக என் தம்பியை கொலை செய்வான்ல”
“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம். ராகினிக்காக உன் தம்பியை ஏன் கொல்லணும்?
அரைப்பைத்தியமாவே திரிவீங்களாடா?”
“ரொம்ப பேசாத. சித்தேஷை கொல்ல காரணம் ஒன்னே ஒன்னுதான் ராகினி. அவளுக்காக சித்தேஷை கொன்னுட்டான்”என்றவனை பார்வையைப் பார்த்த நதியாவுக்கு அது கொடூரமான பார்வையாக இருக்கவும் உள்ளுக்குள் பயம் வந்தது. ஆனாலும் அதையும் மீறி ராகினி விசயத்தில் ஒன்று புரிந்தது.
“ஒருவேளை இவனுங்க இரண்டுபேரும்தான் ராகினியை ஏதோ பண்ணிருப்பாங்களோ?என்று யோசித்தவள் உன் தம்பி சித்தேஷ்தான் ராகினியை தூக்கிட்டுப்போய் கொடூரமா கொல்ல நினைச்சானா? அதுக்கு நீ உடந்தையா?”என்று கார்த்திக்கிடம் தைரியமாக எதிர்த்துக் கேள்விக் கேட்டாள்.
“என் தம்பி அவளை கொல்லுதுக்கு தூக்கிட்டுப்போனானா?அவளை உயிருக்கு உயிரா லவ் பண்ணினான்மா. அதனால்தான் அரவிந்த்தை பிடிக்கலைன்னாலும் சித்தேஷ் அவங்க கேங்குல இருந்தான். நிறைய தடவை ராகினிகிட்ட லவ்வை சொல்ல முயன்றான். ஆனால் உன் புருஷன்தான் பிரண்ட்சிப்புக்குள்ள லவ் இருக்கக்கூடாதுன்னு எல்லோருக்கிட்டயும் சொல்லிருக்கானே.அதை நினைச்சிட்டு இவனும் ராகினிக்கிட்ட எதையும் சொல்லலை. கடைசியில் பார்த்தால் அவளுக்கு அந்த மேனேஜர் ஜெகதீஷ் மேல லவ்வாம், கல்யாணம்னு இன்விட்டேஷன் குடுக்க வந்திருக்காள். சித்தேஷும் மனசு உடைஞ்சு அவக்கிட்ட தன்னுடைய லவ்வை சொன்னான். ஆனால் அவா அதை ஏத்துக்கலையாம், அப்போ அவளை எடுத்துக்கிட்டி தன்னைக் காதலிப்பான்னு பலவந்தப்படுத்தி காரியத்தை முடிச்சிட்டுப் பார்த்தால் அவா மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்திருக்காள். சித்தேஷ் பயந்துப்போய் எனக்குப் போன் பண்ணி சொன்னான். நான் வந்துப் பார்த்துட்டு செத்துப்போயிட்டான்னு தெரிஞ்சு இரண்டுபேரும் அவளைத் தூக்கிட்டுப்போய் ஊட்டி போற வழியில போட்டுட்டு வந்துட்டோம். சித்தேஷுக்குத்தான் மனசு கேட்காமல் எங்க ஆளுங்கள்ல ஒருத்தன் மூலமா போலீஸ்க்கு போன் பண்ணி டெட் பாடி கிடக்குன்னு சொல்ல வைச்சோம்”
அதைக்கேட்டதும் நதியாவின் உள்ளமெல்லாம் நடுங்கிவிட்டது.
“அடப்பாவிங்களா?உன் தம்பிதான் அந்த பாதகத்தைச் செய்ததா? அப்போ உன் தம்பியை கொன்னது தப்பேயில்லை. அவனுக்குஇப்படித்தான் சாவு வரணும். அவனைக் கொன்னவன் நல்லாயிருக்கட்டும்”என்று கோபத்தில் சொன்னாள்.
இது எதுவுமே புரியாத மனோஜோ அடக்கடவுளே இவன் ஒரு கொலைகாரனா?ஏதோ மிரட்டுவான் விட்றுவான்னு நினைச்சமே என்று பயந்து மிரண்டுவிட்டான்.
கார்த்திக்கோ “என்னடி கொன்னவன் கொன்னவன்னு சொல்லுற?அது அரவிந்துதான்டி என் தம்பி சித்தேஷைக் கொன்னது. அந்த ராகினி செத்துட்டான்னு நினைச்சுத் தூக்கிப்போட்டா, அவள் தூக்கிப்போட்ட வேகத்துல ஊயிர் வந்து பிழைச்சிட்டாள். அவள் வாயைத் திறந்து உண்மையை சொல்லுறதுக்குள்ள அவளை இராத்திரியோடு இராத்தாரியே கொன்னுடணும்னு ஹாஸ்பிட்டல் போனான். அவா ஏதோ அரவிந்துக்கிட்ட பேசிட்டிருந்திருக்காள். அவா கண்டிப்பா சித்தேஷை பத்தி சொல்லிருப்பள்னு தோணுது. அன்னைக்கு நைட்டுத்தான் சித்தேஷையும் காணலை. நான் அவனைத் தேடிப்பார்த்தேன். அந்த ராகினியை நாங்க போட்ட அதே இடத்துல காரோட விழுந்து சித்தேஷ் செத்திருந்தான். அது உன் புருஷன் அரவிந்தோட வேலைதான்னு நான் இப்பவும் நம்புறேன்.அவனையும் கொல்லணும் உன்னையும் கொல்லணும்டி அதுக்குத்தான் நான் சென்னைக்கே வந்தேன்”என்றவன் ஓடிவந்து நதியாவை அடித்தான்.
அவள் இதை எதிர்பார்க்கவில்லை அவள் அம்மாஆஆஊ என்று வலியில் துடித்து கட்டியிருந்த சேரோடு கீழே விழவும் அந்த சேரை பிடித்து அவளையும் பிடித்திருந்தான் அரவிந்த்.
கார்த்திக் இவ்வளவு சீக்கிரமாக அரவிந்த் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. நதியாஆஆஆ கிடுகிடுவென்று பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்க, அவளைக் கட்டியிருந்த கயிற்றை அரவிந்த் அவிழ்த்துவிட்டான்.
அவ்வளவுதான் நதியா தாவி அரவிந்த் என்று அவனைக் கட்டிக்கொண்டு பயத்தில் கண்ணை மூடிக்கொண்டாள். அவ்வளவு நேரம் இருந்த தைரியமெல்லாம் காணாமல் போய்விட்டது.
அரவிந்த் அவளை அணைத்துப்பிடித்துக்கொண்டான். அவளது உடல் நடுங்குவதைப் பார்த்தவனுக்கு மனம் பதறியது. அவளது கன்னத்தில் கார்த்திக் அடித்ததில் தடம் பதித்திருந்தது.
அதைப்பார்த்த அரவிந்த் கோபத்தில் கார்த்திக்கை முறைத்துப் பார்த்தான்.
“என்னடா முறைக்கிற? இது என் இடம். உன்னை பழிவாங்கவே பார்த்துப் பார்த்து வாங்கின இடம். உன் பொண்டாட்டிய மட்டும்தான் கொல்லணும்னு இருந்தேன்.இப்போ உன்னையும் அவளையும் சேர்த்து புதைக்கிறேன்”என்றவன் ஓடிவந்தான்.
அவ்வளவுதான் அடுத்த நொடியே அவன் அடிவாங்கி கீழே விழுந்துக்கிடந்தான்.
“யாருடா நம்மளை அடிச்சது?” என்று எழுந்துப் பார்த்தான். அவனை சுற்றி விஜய் கேங்க் நின்றிருந்தார்கள்.
அரவிந்த் மெதுவாக அவன் பக்கத்தில் வந்தவன் கார்த்திக்கின் நெஞ்சில் காலைவைத்து அழுத்தி மிதித்தவன் “ சித்தேஷோட அண்ணன்னு உன்னை சும்மாவிட்டு வைச்சா என் பொண்டாட்டெயவே கடத்துவியா?உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்.இதுக்கு மேல நான் இருக்கிற திசைக்குக்கூட நீ திரும்பிப் பார்க்கக்கூடாதுடா”என்று நெஞ்சிலயே ஓங்கி மிதித்தான்.
அவனோ கோபத்தில் அரவிந்தின் காலைப்பிடித்து இழுத்து “என் தம்பியைக் கொன்ன உன்னை சும்மாவிடாமாட்டேன்டா.உன்னையும் உன் குடும்பத்தையும் இல்லாமலயே ஆக்கிடுவேன்”என்றவன் எழுந்து முதுகில் வைத்திருந்த கத்தியை உருவியெடுத்து அவனை வெட்டவந்தான்.
அவ்வளவுதான் அரவிந்த் நதியாவை தனக்குப் பின்னாடி நிக்கவைத்துகொண்டு கார்த்திக்கை பிடிக்கப்போனான்.
விஜயும் தினேஷும் அவனைப் பின்னடியிருந்து மிதித்து அவனைத் தள்ளிவிட்டார்கள்,அவன் முன்பக்கமாக தள்ளாடி விழவும் அரவிந்த் அவன் கையிலிருந்த கத்தியை பிடுங்கிக்கொண்டான்.
அப்போது போலீசும் உள்ளே வந்துவிட கார்த்திக்கை பிடித்துக்கொண்டு ஜீப்பில் ஏற்றினார்கள்.
நதியாவோ பயத்தில் இன்னும் நடுங்கியவாறே அரவிந்தைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.
“நதி!!!” என்று விஜய், முகேஷ் ஓடிவந்து அவர்களை சுற்றி நின்றனர்.
அரவிந்த் சத்தம்போட்டான் “நீங்க எப்படிடா இங்க வந்தீங்க. உங்களை வரவேண்டாம்னுதான சொன்னேன். இதுல நீங்க ஏன் தலையிட்டீங்க. அவன் உங்களை ஏதாவது பண்ணியிருந்தா என்ன பண்ணுவீங்க?”
“எங்களுக்கு என்ன ஆனாலும் பார்த்துக்கலாம் சார். அந்த நாயி நம்ம நதியையே கடத்தியிருக்கான். அவனை சும்மாவிடலாமா?அதுதான் நாங்க உங்களை பாலோவ் பண்ணியே வந்துட்டோம்”
“அவனை விடுங்க இங்க ஒருத்தன் பம்மிக்கிட்டிருக்கான் பாருங்க அவனைப் பிடிச்சு நாலு மிதி மிதிங்க சரியாயகிடும்”என்று நதியா மனோஜைக் கைகாட்டினாள்.
அப்போதுதான் மனோஜைப் பார்த்தார்கள். அவனை அடிக்கப்போகவும் அரவிந்த் தடுத்துவிட்டான். அவனை போலீஸ் பார்த்துக்கும் என்றதும் ஓடிவந்து அரவிந்த் காலில் விழுந்து “என்னை மன்னிச்சிடுங்க சார். ஏதோ பைத்தியம் பிடிச்சு இதை செய்துட்டேன்” என்று அழுதான். அரவிந்த் அவனைப் பிடித்து போலீஸ்ல ஒப்படைச்சிட்டான்.
“ஏன் சார்?”என்று விஜய் கேட்டதுக்கு “காலேஜ் டேய்ஸ்ல இப்படியான சண்டை பிரச்சனையெல்லாம் அதிகமா வரும். அதை அப்பவே மறந்துட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடணும். அதை மனசுல வைச்சிட்டு பழிவாங்க காரணம் தேடி அலைஞ்ச மனோஜும் கார்த்திக் மாதிரிதான். சும்மாவிட்டால் நாளைக்கு பெருசா ஏதாவது பண்ணுவான். இப்போ ஜெயிலுக்குப் போனா அடுத்து அதை செய்யமாட்டான்.அதுதான்”
இப்போ வெற்றிவேலும் அங்கு வந்துவிட்டார். அரவிந்தையும் நதியாவையும் பார்த்ததும்தான் நிம்மதியே வந்துச்சு.
“அரவிந்த் நீங்க வீட்டுக்குப்போங்க. போலீஸ் ஸ்டேஷன்ல உள்ள விசயத்தை நான் பார்த்துக்கிறேன்”என்று அவர்களையும் பிரண்ட்ஸ்களையும் வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டார்.
வீட்டுக்கு வந்துமே நதியாவால் நார்மலாக இருக்க முடியவில்லை. அவள்கூடவே அரவிந்த் ஒட்டிக்கொண்டு இருந்தான்.
“தியாம்மாஆஆ இன்னைக்கு நடந்ததை வெளிய சொல்லாத குறிப்பா உங்க அப்பாக்கிட்ட எதையும் சொல்லாத. நான்தான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டேன்ல புரியுதா”
“சரி” என்று தலையாட்டினாள். இப்போது அவனையே கண்ணெடுக்காது பார்த்தாள்.
“என்னம்மாஆஆ?”
“ராகினி பாவம்ல”
“ம்ம்ம்”
“நண்பன்னு நம்புனவனே அவங்களை கொடூரமா ரேப் பண்ணிருக்கான்னா எவ்வளவு பெரிய மிருகமா இருப்பான் அவன் செத்தது நல்லது. அவனைக் கொன்னவனுக்கு ஆயிரம் முத்தம் கொடுக்கலாம்”
“ஆமா அவனுக்கு நானும் முத்தம் கொடுப்பேன்”என்றவனை திரும்பி ஒரு மார்க்கமாகப் பார்த்தாள்.
“ஏன்டி இப்படி பார்த்து வைக்கிற?”
“சும்மாஆஆஆ”
“நீ இப்படி அடிக்கடி சும்மா பார்த்து வைச்சன்னு வையேன் நான் வேற மாதிரி பார்க்கத் தொடங்கிடுவேன்”
“இல்லன்னா மாட்டும் மச்சான் பார்க்க மாட்டீங்களாக்கும். காமெடி பண்ணிக்கிட்டு”
“என் பொண்டாட்டிய நான்தானேடி முழுசா பார்க்கணும்”
“பாருங்க பாருங்க”
“உனக்கு பயமில்லையா?கார்த்திக் கடத்தினதுல”
“இல்லையே நான் அவன்கிட்ட பேச்சு வார்த்தைதான் நடத்திட்டிருந்தேன். அவன் சொன்ன நிறைய விசயங்கள்ல அப்படியே ஆடிப்போயிட்டேன். கடவுளேன்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனால் கடைசில ஓடிவந்து அடிச்சிட்டான் பரதேசி அதுலதான் கொஞ்சமா பயந்துட்டேன்”
“இப்போ அவன் திரும்ப வருவான்னு பயமா இருக்கா?”
“இல்லையே”
“ஏன்?”
“ராகினிக்காகவே இறங்கி வந்து சித்தேஷை போட்டுத்தள்ளின அந்த தெய்வம் எனக்காக இறங்கி வந்து இந்த கார்த்திக்கை தூக்கிப்போட்டு மிதிக்காதா என்ன?அந்த தைரியம்தான்”
அதைக்கேட்டதும்“கண்டிப்பா தூக்கிப்போட்டு மிதிக்கும்”என்றவன் அவளை அப்படியே இறுக்கி அணைத்து நெஞ்சோடு பொத்தி வைத்துக்கொண்டான்.
அதில் அவனது காதலும் அவளுக்காக அவன் துடிக்கும் துடிப்பும் தெரிந்தது.
நதியா அப்படியே அவனது நெஞ்சில் உதட்டால் ஒத்தடம் கொடுத்தாள்.அந்த முத்தமே அவனை சமாதானப்படுத்தியது.
“மச்சான்”
“என்னடி?”
“லவ் பண்ணலாமா சோடாபுட்டி”
“ஹாஹாஹாஆ தாராளமா லவ் பண்ணலாமே என் டானுக்குட்டி”என்றவன் சத்தமாகச் சிரித்தான்.
இப்படியே அவனை சமாதானப்படுத்து நதியா!