கழிமுள்ளி நெஞ்சுக்காரி-41

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-41

கழிமுள்ளி -41

அரவிந்த் முன்னாடி உட்கார்ந்திருந்த நதியா முகத்தை உர்ரென்று வைத்து உட்கார்ந்திருந்தாள்.

அவளது கோபத்தைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தவன் அதை வெளியே காட்டிக்காது அவள் அடுத்து என்ன செய்யப்போகிறாள் என்று பார்த்திருந்தான்.

அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதைத் துடைத்துவிட்டு அங்கிருந்து எழுந்துப்போக முயன்றவளின் கையைப்பிடித்து இழுத்து தன்மடியில் உட்காரவைத்தான்.

அவளோ எதுவும் பேசாமல் அவனிடமிருந்து எழுந்துப்போக முயன்றாள். அவனோ அவளது வயிற்றோடு கையைப்போட்டு இறுக்கிப் பிடித்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

அதற்குப்பிறகு எங்கே எழுந்துப்போவாள். அவனது நெஞ்சில் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழுதாள்.

“ப்ச்ச் தியாஆஆஆ எதுக்கு இப்போ இவ்வளவு அழுகை. இப்போ என்ன நடந்துச்சுன்னு இவ்வளவு அழுகை ம்ம்ம்”என்று கொஞ்சம் கோபமேறிய குரலில் சொன்னான்.

“அதுதான் என்னை இங்கிருந்து பிரிச்சிக் கூட்டிட்டுப்போக பார்க்கிறீங்களே. அப்போ அழாமல் என்ன செய்வேனாம்?அழுகைதானே வரும்”

“அப்படியா அப்போ ஒன்னு பண்ணு நீ இங்கயே இரு. நான் மட்டும் போறேன்”

அதைக்கேட்டவள் “அப்படியா?உண்மையாகவா?” என்று சந்தோசத்தில் முகம்மலர கேட்டாள்.

“ஆமா நீ வரவேண்டாம். உன் பாஸ்போர்ட் எல்லாத்தையும் கிழிச்சிப்போட்டிரு. உன்னோட விசாவைக் கேன்சல் பண்ணிடுறேன். நான் மட்டும் ஜபபான் போறேன். நீ உங்கம்மா அப்பாக்கூட இருந்துக்கோ. உன் பிரண்ட்ஸ்க்கூட அடுத்து இங்கயே படி. உன் கரியரைப் பார்த்துக்க. அதுதான் உனக்கு பெஸ்ட் ஆப்ஷன்”

அதைக்கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவனது முகம் எந்த உணர்வையும் பிரதிபலிக்கவேயில்லை. அமைதியான அம்மாஞ்சியாக இருந்தது.

“என்னை விட்டுட்டு நீங்கமட்டும் ஜப்பான் போறீங்களா?”

“சின்ன திருத்தம் உன்னை விட்டுட்டு இல்லை. நீ வரலை நான் போறேன்”

“நீங்க போறீங்களா?நான் இல்லாமலா?”

“ம்ம்ம்”

“ஏன்?”

“நீ?”என்றவன் அவளை மடியில் இருந்து கீழே இறக்கிவிட்டு எழுந்துப்போய்விட்டான்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுக்கு அவன் இவ்வளவு நாளும் கொடுத்த அந்த அன்பின் நிழலில் காதலாடி செல்லம் கொஞ்சியவளுக்கு, இப்போ அவன் உணர்ச்சியே இல்லாது தன்னை விலக்கி இருத்திவிட்டு வெளியே போனதும், ஒருமாதிரி அடிவாங்கியது போன்று உணர்ந்தாள்.

அவளது கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. அடுத்து என்ன செய்யணும் என்று புரியாது முழித்தாள்.

அவனது கார் வெளியே போகும் சத்தம் கேட்டதும் எழுந்து ஓடிவந்துப் பார்த்தாள். அவன் போய்விட்டான்.

இது என்ன அரவிந்த் இப்படி பிஹேவ் பண்ணிட்டு போறாங்க?என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டவள் அவனுக்குப் போன் பண்ணினாள். அவனோ போனை எடுக்கவேயில்லை.

“அடேய் ரவுடி மச்சான் என் கையிலக் கிடைச்ச கடிச்சே கொன்றுவேன்டா”என்று கத்தியவள் உள்ளே போய் படுத்துக்கொண்டாள்.

அவளுக்கு ஏனோ கண்ணீர் வந்தது. அப்போ நர்மதா அவளுக்குப் போன் பண்ணினாள்.

நதியா போனை எடுத்து காதில் வைத்தவள் “சொல்லுடி?”என்றவாறே எழுந்து சாய்ந்து உட்கார்ந்தாள்.

“என்ன பேக்கிங் எல்லாம் தொடங்கிட்டியா? ஏதாவது வாங்க போனா என்னையும் கூட்டிட்டுப்போடி.உன் பேரைச் சொல்லி நானும் கொஞ்சம் பர்சேஸ் பண்ணிக்கிறேன்”

“எங்க பேக்கிங் பணறதாம். நான்தான் ஜப்பான் வரலைன்னு சொல்லிட்டனே. அதனால் அரவிந்த் மட்டும்தான் போறாங்க”

“ஏய் லூசே என்னடி உளறிட்டிருக்க. அத்தான் உன்னோட போய் அங்க செட்டிலாகிறுததானே ப்ளானு நீ என்ன இப்படி பேசுற?அப்போ அரவிந்த் அத்தான் உனக்கு வேண்டாமா. அவரை பிரிஞ்சிருக்க முடிவு பண்ணிட்டியா?”

“நான் எங்க அப்படி சொன்னேன். அரவிந்த் வந்து என்னை பார்த்துட்டுப் போவாங்க. இல்லைன்னா நான் போய் பார்த்துட்டு வருவேன்”

“அதுசரி அத்தான் இதுக்கு சரின்னு சொன்னாங்களா?”

“இல்லை”

“அப்புறம் எந்த தைரியத்துல இப்படி பேசிட்டிருக்க?”

“அப்புறம் உங்களை என் பிரண்ட்ஸ விட்டுட்டு எப்படி அங்க இருப்பேன்”

“அதுக்காக அத்தானை விட்டுட்டு நீ இங்க இருப்பியா?உன்னால முடியுமா?”

“அது அது”

“எங்களை விட்டுட்டுக்கூட உன்னால இருக்கமுடியும், சத்தியமா அத்தானை விட்டுட்டு உன்னால இருக்கமுடியாதுடி லூசே. முதல்ல அத்தான்கூட கிளம்புற வழியைப் பாரு”

“நான் கொஞ்சம் யோசிக்கணும். அரவிந்த்கிட்ட பேசிட்டுத்தான் கிளம்பணும்”

“இன்னும் பேசலையா. நீ என்ன மாதிரியான மனநிலையில் இருக்க நதி. அரவிந்த் உன்னைக் காதலிக்கிறாங்க அப்படிங்கிறதுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடியே கூஜா தூக்கிட்டு வரணும்னு நினைக்கிறியா?இது உன் வாழ்க்கை. உன் குடும்பம். இதுக்கூட உன்னால யோசிக்க முடியாத தத்தியா நீ. எனக்கு அக்கான்னு சொல்லிக்காத. ஒன்னு பண்ணு பேசாம அத்தானை டிவோர்ஸ் பண்ணிடு. அவங்க அவங்க வாழ்க்கையை பார்த்துப்பாங்க. நீ அந்த விளங்காத உன் பிரண்ட்ஸ்கூட சுத்து. அப்பா அம்மா பின்னாடி ஓடு”என்றவள் போனை வைத்துவிட்டாள்.

அவள் சத்தமாக பேசிவிட்டு போனை வைக்கவும் கீதாஞ்சலிதான் “என்னடி ஆச்சு. நதியாக்கூட சண்டைப்போடுற?”என்று கேட்டாள்.

“ஹான் வேண்டுதல் இப்படியொரு லூசு மகளைப் பெத்து வைச்சிருக்கீங்கள்ல அதுதான்” என்றவள் நடந்ததை சொன்னாள்.

“ஏன்டி அவன் அவன் வெளிநாடு போக வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுறான். இவளுக்கு மாப்பிள்ளைக்கூட போனா என்னவாம்?லூசாடி இவ?”என்று கோபப்பட்டாள்.

“ம்ம்ம் அதைத்தான் நானும் கேட்டேன். உங்க மகளுக்கு பட்டுத் திருந்தணும்னு விதியிருந்தா யாரால மாத்த முடியும்”என்றுவிட்டு போய்விட்டாள்.

கீதாஞ்சலி உடனே நதியாகிட்ட போன் பண்ணி பேசினாள். அவளோ ஒரே அழுகை. அவளுக்கே இதுல முடிவெடுக்க தெரியலை. அவளாகவே குழம்பி தெளிந்து வரட்டும் என்று அப்படியே விட்டுவிட்டாள்.

இரவு வீடு வந்த அரவிந்த் எதுவுமே பேசாமல் வந்து சாப்பிட்டான் அவனுக்குள்ளது எஸ்லாத்தையும் பேக் பண்ணினான். அப்படியே போய் படுத்துக்கொண்டான்.

நதியாக்கிட்ட எதுவுமே பேசவுமில்லை எதுவுமே கேட்கவுமில்லை. நதியா எப்பவும் போல அவன் பக்கத்தில் போய் படுத்தாள். அரவிந்தோ கண்டுக்கொள்ளவேயில்லை. அவன் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

“என்னடா இது இவன் இந்தளவுக்கு தள்ளிப்போறான்?நான் என்ன சொன்னன்னு இவ்வளவு பண்றான். ஜப்பான் வரலைன்னு சொன்னது குத்தமாடா?” என்று நினைத்தவள் எதுவுமே அவனிடம் கேட்காமல் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள்.

எப்படியும் அரவந்தால் நம்மக்கிட வராமல் இருக்கமுடியாது என்று அவனருகில் படுத்திருந்தாள்.அவனோ நல்ல தூங்கிவிட்டான்.

அவன்கிட்டயிருந்து எந்த சத்தமும் வரவில்லை என்றதும் எழுந்து அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு ஒருமாதிரியாகிவிட்டது. எதுவுமே சொல்லாமல் அவன் மேல் ஏறிப்படுத்துக்கொண்டாள். அரவிந்த் கண்ணைத் திறந்து பார்த்தவன் அவள் மீது கையைப் போட்டு அணைத்துக்கொண்டான். அவளும் இதுபோதும் என்று அப்படியே படுத்தவள் தூங்கிவிட்டாள்.

காலையில் எழுந்து பார்த்தாள் அரவிந்த் பக்கத்தில் இல்லை. அப்படியே வெளியே வந்தாள்.

அங்க அரவிந்த் குடும்பம் மொத்தமும் அவர்களைப் பார்க்க வந்திருந்தார்கள்.

“இவங்கெல்லாம் வர்றாங்கன்னு சொல்லவேயில்லை. எப்போ வந்தாங்கன்னே தெரியலையே!” என்று முழித்துக்கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்த கனகவல்லி “ என்ன நதியா இப்போதான் தூங்கியெழுந்து வர்றியா?சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா. எவ்வளவு நேரமாகுது பாரு இன்னும் சாப்பிடாமல் இருக்க”என்று சொன்னார்.

“நீங்கெல்லாம் சாப்பிட்டீங்களா அத்தை. நீங்க வர்றீங்கன்னு அரவிந்த் என்கிட்ட சொல்லவேயில்லை” 

“நாங்க நேத்து கிளம்பும்போதே சொல்லிட்டோமே மறந்திருப்பான்.நாளைக்கு அவனுக்கு ப்ளைட்டுல அதுதான் அவனைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்”

“ஓஓஓ”என்றவள் அமைதியாக போய் குளித்துவிட்டு வந்தாள்.

“அப்போ உண்மையிலயே என்னோட விசாவை கிழிச்சு போட்டுட்டாங்களா? அப்போ நான் போய் அடிக்கடி அரவிந்தை பார்க்க முடியாதா?”என்று யோசித்தவளுக்கு ஏதோ உள்ளுக்குள் வலிப்பது போன்று இருந்தது.

அதை வெளிக்காட்டிக்காது மெதுவாக போய் சாப்பிட்டுவிட்டு அவங்களோடு வந்து உட்கார்ந்தாள்.

அப்போ வெளியபோயிட்டு வந்த அரவிந்த் அவளைக் கண்டுக்காது அவங்கம்மாவிடம் போய் உட்கார்ந்தவன் “ நாளைக்கு காலையில ப்ளைட்டுமா. எப்படியும் நைட்டே கிளம்பிடுவேன். அப்பா எங்க எதாவது சைன் வாங்கணும்னா வாங்கிடச்சொல்லுங்க. காலேஜ் சம்பந்தமா செக் புக் எல்லாம் ஏற்கனவே மாமாகிட்ட கொடுத்து வைச்சிட்டேன். நான் இரண்டு வருஷம் கழிச்சுத்தான் வருவேன்.அங்கயே வேறோரு பிரான்ஞ்ச் ஆரம்பிச்சு அதை நான் பார்த்துக்க ப்ளான். எனக்கு வேறெங்கேயும் அசையமுடியாது”என்று பேசிக்கொண்டிருந்தான்.

“அப்போ இரண்டுவருஷமா உங்க இரண்டுபேரையும் பார்க்கமுடியாதா?”

“என்னைத்தான் பார்க்க முடியாது. நதியா அவங்கம்மா வீட்டுலதான் இருப்பா. அவள் அடுத்து எம்.ஈ நம்ம காலேஜ்லயே படிப்பா. அவளுக்கு அதுதான் விருப்பம்”என்றதும் எல்லோரும் அவர்கள் இருவரையும் திரும்பித் திரும்பி பார்த்தார்கள்.

“என்ன சொல்லுற அரவிந்த்? நீ வர்றதுக்கு இரண்டு வருஷம் ஆகும்னு சொல்லுற. அப்புறம் எதுக்கு நதியாவை இங்க விட்டுட்டுப்போற. அங்க கூட்டிட்டுப்போய் படிக்கவைக்கலாம்ல”

“எனக்கும் ஆசைதான் ஆனால் அவளுக்கு அவங்க அப்பா அம்மாவையும் பிரண்ட்ஸையும் விட்டுட்டுவர கஷ்டமா இருக்காம். அதனால் இங்கயே இருக்கட்டும். படிச்சு முடிச்சிட்டு கூட்டிட்டுப்போறேன்”

“இப்பவே கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷமாகிட்டு இன்னும் குழந்தை இல்லையான்னு கேட்கிறாங்க. இப்போ இன்னும் இரண்டுவருஷம் பிரிஞ்சிருக்கீங்கன்னா நீங்க எதுக்கு இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அரவிந்த்?”என்று ஆதங்கத்தில் கனகவல்லி கேட்டார்.

நதியா பயந்துவிட்டாள்.இதையெல்லாம் நம்ம யோசிக்கவேயில்லையே. 

‘ஐய்யோ அரவிந்த் வேற இரண்டுவருஷம் வரமாட்டேன்னு சொல்லுறாங்களே. நிஜமாவே நம்மளை விட்டுட்டு போறாங்களா. நம்மளைக்கூட பார்க்க வரமாட்டாங்களா?’என்று யோசனையோடு அவனைப் பார்த்தாள்.

அவனோ “அதுக்கு என்னம்மா அவசரம் அவளுக்கு எப்போ குழந்தை வேணும்னு தோணுதோ அப்போ பெத்துப்பா. விருப்பமில்லாமல் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அது தானாக நடக்கக்கூடிய விசயம். இப்போ அதுதான் பிரச்சனையா இருக்கா விடும்மா”என்றவன் தனது ரூமுக்குள் போய்விட்டான்.

இப்போ எல்லோரும் நதியாவைத் திரும்பிப் பார்த்தனர்.

“ஐய்யோ அத்தை எனக்கு எதுவுமே தெரியாது. அரவிந்துதான் ஏதோ பேசுறாங்க. நான் நான் குழந்தைக்கு விருப்பமில்லைன்னு சொல்லவேயில்லை”என்றவள் இதுக்குமேல நின்னா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லமுடியாது என்று அரவிந்த் பின்னாடியே ஓடிவிட்டாள்.

ரூமுக்குள்ளே போனவள் அரவிந்த் முன்னாடி போய் நின்றாள். அவனோ அவளைக் கண்டுக்காது சுத்திப்போய் அவனது கப்போர்டில் இருந்து எல்லாத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.

இதுக்குமேல தாங்காது “ஏன் அரவிந்த் இப்படி பண்ற?நான் ஜப்பானுக்கு வரலைன்னுதானே சொன்னேன். அதுக்கு ஏன் என்னைவிட்டு விலகிப்போற. நீ வேண்டாம்னு நான் சொன்னனா?”என்று கேட்டாள்.

அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மீண்டும் தனது வேலையில் கவனம் வைத்தான். நதியா கோபத்தில் அவன் முன்னாடி இருந்த சூட்கேஸிற்குள் போய் உட்கார்ந்துகொண்டாள்.

“ப்ச்ச் எழுந்திரு நதியா?எனக்கு வேலையிருக்கு. நான் ஏர்லி மார்னிங் கிளம்பணும். உன்கிட்ட பேசிட்டிருக்க எனக்கு டைம் இல்ல”

“அப்போ இரண்டு வருஷமா அங்கதான் இருப்பியா?இரண்டுவருஷம் கழிச்சுத்தான் என்னைப் பார்க்க வருவியா? நான் எப்படி உன்னைப் பார்க்கிறது?”

“நான் எதுக்கு வரணும்?நீ எதுக்கு என்னைப் பார்க்கணும்?எனக்குப் புரியலை?”என்று அரவிந்த் அவளது முகத்தைப் பார்த்துக்கேட்டான்.

“என்ன அரவிந்த் இப்படி கேட்கிற?இரண்டுவருஷம் கழிச்சு உன் பொண்டாட்டியை பார்க்க வரமாட்டியா?என்னை பார்க்க வரமாட்டியா?”என்று பயந்துப்போய் கேட்டாள்.

“நான் எதுக்கு உன்னைப் பார்க்க வரணும் அதுக்கு காரணம் சொல்லு?”

“நீ என் புருஷன் அரவிந்த். நீ என்னைப் பார்க்க வரணும்ல. எனக்கும் உன்னைபு பார்க்க ஆசையிருக்கும்ல. அதுவும் இரண்டுவருஷம் பிரிஞ்சி இருக்கப்போறோம். அப்போ எனக்கு உன்னைப் பார்க்கணும்னு இருக்காதா?”என்று கண்களை உருட்டி உருட்டிப் பேசிக்கொண்டிருந்தவளை கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாகப் பார்த்தான்.

“எதுக்கு இப்படி பார்க்கிற அரவிந்த்?பதில் சொல்லு?”

“இரண்டுவருஷம் என்னை பிரிஞ்சிருக்க முடிவுபண்ணிட்ட போல. அப்போ உன்னால என்னைப் பிரிஞ்சு இரண்டுவருஷமெல்லாம் இருக்கு முடியும்னு சொல்லுற?” என்று கேட்டதும்தான் உணர்ந்தாள்.

இரண்டுவருஷம்னு ஈஸியா சொல்லிட்டமோ?இவனைப் பார்க்காமல் இரண்டுவருஷம் இருந்திடுவோமா?என்று தனக்குள்ளே யோசித்துக்கொண்டிருந்தாள்.

அவளது தோளைப்பிடித்து கோபத்தில் அழுத்தியவன் “உன் பிரண்ட்ஸ் உன் அப்பா அம்மான்னு பார்த்துட்டு என்னைப் பிரிஞ்சி இரண்டுவருஷம் இருக்கமுடியும்னு முடிவு பண்ணிட்டல்ல. ஆனால் என் பொண்டாட்டியை பிரிஞ்சி இரண்டுநாள்கூட நான் இதுவரைக்கும் இருந்ததில்லை. இரண்டுவருஷம் இருக்கணும்னு நினைக்கும்போதே நெஞ்சுக்குள்ள வலிக்குது. உனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. நீ உன் பிரண்ட்ஸ் பேரண்ட்ஸ்னு ரொம்ப சந்தோசமா இந்த இரண்டுவருஷத்தை ஜாலியா என்சாய் பண்ண ப்ளான் பண்ணிட்டபோல. அரவிந்துக்கு இப்போ ரொம்ப ஹாப்பீ நதியா மேடம்”என்று அந்த சூட்கேஸை எடுத்து தூக்கி சுவற்றில் வீசிவிட்டு வெளியே போய்விட்டான்.

அவன் பேசினதைக்கேட்டு நதியா அப்படியே விக்கித்துப்போய்விட்டாள். 

“ஏன்டா நான் ஜப்பான் வரலைன்னு மட்டும்தானே சொன்னேன்.உன்னை பிரிஞ்சி இருந்துப்பேன்னு எப்போ சொன்னேன்? அட லுசு அரவிந்து”என்றவள் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

அதன்பின் அரவிந்த் அவளிடம் பேசவேயில்லை. அவள் பக்கத்தில் போனாலே விலகிப்போனான். 

இரவு ரமேஷ்குமார் குடும்பத்தோடு வந்தார்.

கீதாஞ்சலியும் நர்மதாவும் தனியாக வந்து நதியாவிடம் பேசினார்கள். அவள் அழுதாள். அவளை சமாதானப்படுத்திவிட்டுத்தான் அரவிந்திடம் காலையில் ஏர்போர்ட்டுக்கு வர்றோம் என்றுவிட்டு போனார்கள்.

ஏற்கனவே நதியாவோட பிரண்ட்ஸுக்கும் அரவிந்த் ஜப்பான் போறதை சொல்லிவிட்டான்.

அரவிந்த் எல்லாத்தையும் ரெடியாக எடுத்துவைத்துவிட்டு படுத்துவிட அவனுக்கு போன் வந்தது.எடுத்து காதில் வைத்தவன் “ஆமா சார் ஒரு டிக்கெட் கேன்சல் பண்ணியாச்சு.நேத்தே பண்ணியாச்சு. ரீபண்ட் என் அக்கவுண்டுக்கே அனுப்பிடுங்க. நோ நோ இனி டிக்கெட் தேவைப்படாது ரீபண்ட் பண்ணிடுங்க”என்று பேசிமுடித்துவிட்டான்.

“அரவிந்த்”

“ம்ம்ம்”

“உண்மையிலயே என்கிட்ட பேசமாட்டீங்களா?”

“நமக்குள்ள பேசுறதுக்கு எதுவுமில்லை. என்னைத் தொந்தரவு பண்ணாத. டயர்டா இருக்கு. குட்நைட். காலையில் நீ எழுந்திருக்கும்போது நான் ஜப்பான்ல இருப்பேன். நீ உன் வாழ்க்கையை என்சாய் பண்ணு”என்றவன் கவுந்தடிச்சு படுத்துவிட்டான்.

‘எவ்வளவுக்கெவ்வளவு அவாய்ட் பண்றான் பாரு’ என்று கோபம் வந்தவள் அவனது முதுகில் ஓங்கி குத்திவிட்டு அவனது முதுகோடு ஒட்டிப்படுத்துக்கொண்டாள்.

“எனக்கு உங்கக்கிட்ட முக்கியமான விசயம் ஒன்னு சொல்லணும்”

“எந்த முக்கியமான விசயமும் எனக்குத் தேவையில்ல”

‘நானும் தேவையில்லையா”

“உனக்குத்தானே நான் தேவையில்லை பேசமா படுடடி”

“என்னைப் பாருங்க அரவிந்த்”

“இப்படி தொந்தரவு பண்ணினனா இப்பவே ஏர்போர்ட் கிளம்பி போயிடுவேன்”

“ஏர்போர்ட்டுக்கூட என்னைக் கூட்டிட்டு போகமாட்டீங்களா?”

“எதுக்குக் கூட்டிட்டுப்போகணும்?உனக்குத்தான் நான் வேண்டாமே”

“நான் எப்போ அப்படி சொன்னேன்”

“சொன்னாதான் உண்டா?அதுதான் மனசுக்குள்ள இருக்கிறது வெளிய தெரியுதே. யூ ஆர் ஸ்டோன் ஹார்ட்டட்”

அவ்வளவுதான் அதுக்குமேல் அவள் அவனிடம் பேசவில்லை. அப்படியே அழுதுகொண்டே தூங்கிவிட்டாள்.

அரவிந்த் இரண்டுமணிக்கு எழுந்து கிளப்பிக்கொண்டிருக்க நதியாவும் எழுந்து பார்த்தவள் அவளும் அவன்கூட ஏர்ப்போர்ட் போறதுக்குக் கிளம்பினாள்.

எல்லோரும் குடும்மபமாக கிளம்பி ஏர்போர்ட்டுக்கு போய் இறங்க, அங்கே விஜய் தினேஷ் என்று நன்குபேரும் வந்து இவர்களுக்காக காத்திருந்தனர். 

அவர்களைப் பார்த்ததும் நதியா திரும்பி அரவிந்தின் முகத்தைத்தான் பார்த்தாள். எங்கே இதுக்கும் ஏதாவது சொல்லுவானோ என்று பயந்தாள். அவனோ அதைக் கண்டுக்கொள்ளாது இறங்கிப்போனான்.

ரமேஷ்குடும்பமும் காரில் வந்து இறங்கினார்கள். நர்மதா ஓடிவந்து அரவிந்திடம் கைக்கொடுத்து பேசிக்கொண்டிருந்தாள்.

இப்போது செக் இன்னிற்கு டைமானதால் விஜய் கேங்க் வந்து அரவிந்துக்கு வாழ்த்துகள் சொல்லவும் நதியாவுக்கு அவ்வளவுதானா?என்னோடு எதுவுமே பேசமாட்டானா?போயிட்டுவர்றேன்னுகூட சொல்லமாட்டானா?எதுக்கு இப்போ இப்படி பண்றான்?என்று நெஞ்சம் குமுறிக்கொண்டுவந்தது.

என்னை பிரிஞ்சு அவனால இருக்கமுடியுமா?என்று நினைத்து ஏக்கத்தோடு அவனது முகத்தைப் பார்த்தாள்.

அவனோ அவளிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லாது வேகமாக செக்கின் பண்ண உள்ளே போய்விட்டான்.

அவ்வளவுதான் அதை எதிர்பார்க்கதவள் அப்படியே அதிர்ச்சியில் அவன் போகும் திசையையே பார்த்திருந்தாள். அவளது கண்களில் கண்ணீர் நிறைந்து அது கன்னத்தில் இறங்கியது.

அதைப் பார்த்த நர்மதா “ஏய் நதி அழறியா என்ன?அதுதான் அத்தான் இரண்டு வருஷம் கழிச்சு உன்னை பார்க்க வருவாங்களே!நாங்களாம் உன்கூடவே இருக்கமே. எதுக்கு அழற?”என்று அவளது தோளைப் பிடித்துக்கொண்டாள்.

“அதுதானே உன் பிரண்ட்ஸ் நாங்களும் உன்கூடவே இருக்கோமே எதுக்கு அழற. விடு அடுத்த இரண்டுவருஷம் இன்னா பிடின்னு போயிடும். நம்ம காலேஜ்ல் ஜாலியா ரவுடிசம் பண்ணலாம்ல”என்று மறுபக்கம் வந்து அவளது கையைப் பிடித்துக்கொண்டான்.

இப்போது நதியா இரண்டுபேரோட கையையும் தன்னிடமிருந்து விலக்கிவிட்டவள் “ நீங்க யாரும் எனக்கு வேண்டாம்டா.எனக்கு அரவிந்த் மட்டும் போதும். எனக்கு அரவிந்துக்கூட போகணும். நான் அவன்கூடவே போறேன்”என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

“ஹல்லோ அப்போ உண்மையாவே நாங்கெல்லாம் உனக்கு வேண்டாமா?”என்று நர்மதா கேட்டாள்.

“நீங்க யாரும் எனக்கு வேண்டாம். எனக்கு அரவிந்த் மட்டும் போதும். நான் அரவிந்துக்கூடவே போறேன். எனக்கு இப்பவே டிக்கெட் எடுத்துத் தாங்கப்பா” என்று ரமேஷின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

“நதியா டான் கொஞ்சம் நிமிர்ந்து அங்கப்பாரு. அங்க நிக்கிறது உன் புருஷர் மிஸ்டர் அரவிந்த் மாதிரியே இல்ல” என்று தினேஷ் நக்கலாகக் கேட்டான்.

“எங்க?”என்று கண்ணைத் துடைத்துவிட்டுப் பார்த்தாள். அவன் அந்தப்பக்கம் செக்கின் போற இடத்துல நின்னு கையைக் காட்டியவன் இரண்டு கையையும் நீட்டி வா என்றான்.

அவ்வளவுதான் பக்கத்துல யாரு இருக்கா இல்லை என்று பார்க்காது ஓடிப்போய் அவனது கைக்குள் அடைக்கலமானாள்.

அரவிந்த் என்று எதுக்கு அழறோம்னு தெரியாமல் ஏங்கி ஏங்கி அழுதாள். 

“ஏய் அழுகுணி நதியா ஜப்பான் ப்ளைட் போயிடப்போகுது. ப்ளைட்டுக்குள்ள ஏறிட்டு அழு.இப்போ உனக்கும் சாருக்கும் டாட்டா”என்று விஜய் டாட்டா காட்டினான்.

எல்லோரும் பை நதியா என்று கையசைக்க அரவிந்த் இதுக்குமேல அங்க நின்னா நதியாவோட மனசு ம்றிட்டபோகுதுன்னு அரவிந்த் அவளை இழுத்துக்கொண்டு உள்ளே ஓடிவிட்டான்.

அவ்வளவுதான் வெளியே நின்று பார்த்திருந்த குடும்பத்தாருக்கு அவ்வளவு மனநிறைவான சிரிப்பாக இருந்தது.

நர்மதா கீதாஞ்சலியிடம் வந்து “ இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் கீதாஞ்சலி. மகள் பாரீன் போய் படிக்கணும், அங்கயே செட்டிலாகணும்னு ஆசைப்பட்டாய் கீதாஞ்சலி. உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா?”என்று சத்தமாகக் கேட்டாள்.

“என் ஆசையும் நிறைவேறிட்டு என் மகள் ஆசையும் நிறைவறிட்டு ரொம்ப சந்தோசம்” என்று நிறைந்த மனசுடன் மகளை மனதார வாழ்த்திவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

முகேஷ்தான் “இனி நம்ம நதி இங்க வரமாட்டாள்ல. நம்மக்கூட முன்னாடி மாதிரி சுத்தமாட்டாள்ல. அவளுக்கு அங்க பிரண்ட்ஸ் கிடைப்பாங்கறோ என்னவோ?”என்று எப்பவும்போல சந்தேகம் கேட்டாலும் அதில் வருத்தம் இருந்தது.

“டேய் அவளுக்கு பிரண்ட்ஸ் நம்ம மட்டும்தான். ஆனால் வாழ்க்கையும் உயிரும் மொத்தமும் அவளுக்கு அரவிந்துதான் . அதனால் அவா அரவிந்த் சாரோடு சந்தோசமா வாழுவா அது போதும். எப்படியும் நம்மளை பார்க்க வருவா. காத்திருப்போம்”என்று விஜய் சொன்னான்.

ஆனாலும் நதியாவைப் பிரிவதில் எல்லோருக்குமே ஒரு வலி இருக்கத்தான் செய்தது.

நதியா ப்ளைட்டில் அரவிந்த் தோளில் சாய்ந்தவள் தனது உள்ளைங்கையை விரித்து அரவிந்திடம் காண்பித்தாள்.

அதைப்பார்த்தவன் “தியாம்மாஆஆ! உண்மையாவா!இதை நீ அப்பவே சொல்லிருக்கலாமே!”என்று கேட்டவனுக்கு அந்த சந்தோசத்தை எப்படி வெளிப்படுத்தவென்று தெரியாது அவளது நெற்றியில் முத்தம் வைத்து அவளது கையில் உள்ளதை வாங்கிப்பார்த்தான்.

“ஏன்டி அம்மா நேத்து கேட்டாங்கள்ல அப்போவாவது சொல்லலாம்ல”

“நான் உன்கிட்டதான் முதல்ல சொல்லணும்னு வந்தேன். நீதான் பேசலை”

“ஏன்டி நான் உன்னைவிட்டுப்போவனாடி. உன்மேல கோபம் மட்டும்தான் இருந்துச்சு”

“எது எப்படியோ என்னால் உன்னைப் பிரிஞ்சு இருக்கமுடியாதுன்னு உணர்த்திட்டீங்க. நான் டபுள் ஹாப்பீ”

“நானும் டபுள் ஹாப்பீ. நமக்கு பாப்பா வரப்போகுதே”என்று அவளை இன்னும் தோளில் சாய்த்து அணைத்துக்கொண்டான்.

ரொம்ப நல்லது தங்கங்களே! ஜப்பான்ல போய் புள்ளைக்குட்டிகளா பெத்துப்போட்டு சந்தோசமா வாழுங்க!

வாழ்க வளமுடன்!!!