மீளா காதல் தீவிரவாதி 25
Mila25

25
மீளா காதல் தீவிரவாதி!!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான், அண்ணன் உடையான் காதலுக்கு அஞ்சான்... ஊரே மருது கூட்டத்தைக் கைமா போட காத்திருக்க, அங்கே பாம்பு பிடி சண்டையை ஆரம்பித்து வைத்த விருமன் ,ஊர் அடைந்த நேரம் புல்லட்டை ஒதுக்குபுறமாக விட்டுவிட்டு.. எப்போதும் காதல் கிளிகள் கொஞ்சும் ஆலமரம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்..
"அண்ணன் மதனியை கூட்டிட்டு வந்ததே போதும் எப்படியும் அவுகள விட்டுட்டு இருக்க மாட்டார் ..மதனிக்கு விவரம் இருந்தா பொழச்சிக்க வேண்டியதுதான்.. சமாளிச்சி புடுவாக இல்லைன்னாலும், புருஷன் பொஞ்சாதி ஒன்னு மண்ணா இருந்தா தானா எல்லாம் ஆகும் "என்று தெளிவு வந்த பின்தான் காதலி ஆசை வந்தது...
ஏனோ மருது சோகத்தில் இருக்கும் போதும் தன் சுகம் பெரிதென ஒரு நாளும் நினைக்க தோன்றியது இல்லை.. மருதுவும் அப்படியே, ஊரே விருமனை அனாதை என்ற போதும் அவனுக்கு என் அன்னைதான் பெறாத தாய் ,, அண்ணன் நான் இருக்கேன்ல என்று தோளோடு அணைத்து கொள்வான்..
இரத்த உறவுகள் கூட எக்கேடோ போ, என்று போகும் உலகில்.. இவர்கள் உறவு விசித்திரமானதே... நீ செத்தா நானும் சாவேன் என்பது கண்துடைப்பு.. நீ சாகாம இருக்க என்ன செய்யணும் , அதை நான் செய்றேன் என்பதுதானே உண்மை உறவின் விளக்கம் .. இருவர் அன்பும் சொல்லி தெரிவதில்லை ..
மாடப்புறா வர,காத்திருந்து விருமனுக்கு அலுத்துப் போனது ..
"ப்ச் எங்கன போனா , ஏன் போன் போட்டாலும் போவ மாட்டைக்குது ? காலையில கூட வர்றேன்னு சொன்னாளே, ஒரு மணிநேரம் காத்திருந்து பார்த்தான்.. ஆளை காணவில்லை என்றதும் மெதுவாக கள்ளன் போல நடை வைத்து அவள் வீடு நோக்கி போனான்..
"சீக்கிரம் அண்ணன் கிட்ட சொல்லி கல்யாணத்தை முடிக்கோணும் , பிள்ளை பெக்க முடியாம போயிற போவுது, ச்சை அண்ணனே கில்லி மாதிரி விளையாண்டுபுட்டார் நமக்கு என்ன, முதல்ல தனியா வீடு பார்க்கோணும், இதுநாள் வரை நமக்குன்னு எதையும் யோசிக்கல , பயல்வ கூட தின்னு அண்ணன் தந்த காசுல வாழ்ந்து அப்படியே போயாச்சு .. இவ வந்த பின்னாடி அது சரியா இருக்காது , கெளரவமா குடித்தனம் பண்ணி சம்பளத்தை அவ கையில கொடுத்து, கூழோ கஞ்சோ அவ கையால குடிக்கோணும் .. நமக்கு யாரு நல்லது கெட்டது யோசிப்பா , நாமளே செஞ்சிகிட்டாதான் உண்டு .. அண்ணன் கிட்ட சொன்னா எல்லாம் பண்ணி தருவார்தேன், அதுக்காக ஒன்னு ஒன்னுக்கா போய் நிற்க முடியுமா.. "மாதம் முதல் தியதி பிறந்தால் மருது அத்தனை பேருக்கும் சம்பளம் கொடுத்து விடுவான் .. எதுக்கு அண்ணன் இது என்றால்.. நீ உழைச்ச , உன் பணம் வாங்கி குடிப்பியோ, முக்குவியோ அது உன்ற விருப்பம் இப்ப எடுத்துட்டு போறியா, இல்லை ஓடையில போடவா என்று கூறவும் விருமன் எடுத்து கொண்டான்... சேர்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது இல்லை, வருவதை அப்படியே தான தர்மம் பண்ணிட்டு வெறும் பையோடு திரும்பி வருவான்.. அதுக்கும் பல நாள் மருதுவிடம் வசை வாங்குவான் கொடுக்கிறதுக்கும் ஒரு அளவு உண்டுடா..
"யாருக்கு அண்ணன் இதை சேர்த்து வைக்க போறேன், யாரோ வாழ்ந்துட்டு போவட்டும் என சொத்தை சேர்த்து வைத்தானோ இல்லையோ தர்மத்தை சேர்த்து வைத்தான்.. தனக்கென ஒருத்தி வர போகிறாள் என்ற பிறகுதான் சேர்த்து வைத்து இதோ ஒரு கொலுசு, தாலியையும் வாங்கி அடுத்து வீட்டுக்கு சேர்க்கணும் என குடும்ப தலைவன் பொறுப்பு சுமக்க ஆசை வந்தது ...
"இம்புட்டு தூரம் வந்துட்டு வெறுமனே போனா எப்படி , ஏன்டி வரலைன்னு நாலு போடு போட்டுட்டுதேன் போகணும் ,"மின்னல்தான் இவனை போட்டு படுத்தி எடுப்பாள், அவன் ஆட்டு உரல் போல அடி வாங்கி , அடித்த கடித்த அத்தனைக்கும் கூலி வாங்கி, உதடு வீங்கிதான் வருவான் ..விருமன் அவள் வீட்டை சுற்றி சுற்றி வந்தான் ..
எங்கன அவ தலை தெரியல.. வெளியே அவள் தகப்பன் குறட்டை விட்டு கொண்டிருக்க..
"யோவ் உன்ற மகள எங்க?" என்று அவரிடமே தோளை தட்டி வழி கேட்க .. அவர் கையை மின்னல் அறை பக்கம் நீட்டி இடம் சுட்டி விட்டு தூக்கத்தை தொடர..
"நல்ல தகப்பன் , இது தெரியாம ஆலமரத்தடியில கொசுகடியில கிடந்திருக்கேனே" என புலம்பிகொண்டே அவள் அறை பக்கம் போய் ஜன்னலை தட்டினான்... ஜன்னல் திறந்து கிடக்க சற்று திறந்து பார்த்தான்.. மின்னல் கட்டிலில் தலை சாய்த்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்..
"என்ன ஆச்சு இவ ஏன் அழுதுகிட்டு இருக்கா ..மின்னல் ஸ்ஊஊஊ ஸ்ஊஊஊ" என்று விருமன் சத்தமிட .. ஊரடங்கிய,நேரம் யார் தன்னை அழைப்பது என்று எட்டி குரல் வந்த திசை பார்க்க விருமன்..அதிர்ந்து போன மின்னல் அவன் அருகே ஓடியவள்..
"இங்கன ஏன் வந்த... குசுகுசு சத்தம் கொடுத்தாள் ..
"என்னடி லூசா நீ , காலையில வருவேன்னு சொல்லிட்டுதான வந்தேன்.. உன்ற பாட்டுக்கு உட்கார்ந்து நேரம் போகாம அழுதுகிட்டு இருந்தா எப்படி? மனுசன் தேடுவானே, போவோம் அப்படி இப்படி கேட்டது கொடுத்து கொஞ்சிட்டு வருவோம்னு இல்லாம எங்க வந்தன்னு கேட்கிற ... கடும் சினம் கொண்டான்..
அங்க ஒரு ஜோடிக்கு விளக்கு ஏத்தி வைத்து விட்டு நாமும் கொஞ்சம் ஜோதியில் ஜாலியா கலக்கலாம் என வந்தால், காடு மேடு அலைய வைத்து விட்டாளே
"நான் நேரம் போகாம அழுறேனா..எனக்கு வீட்டுல மாப்பிளை பாத்துட்டாக..
"ஓஓஓ "என்று கேஷுவலாக கூறி...
"ஏதேஏஏஏஏஏஏஏஏ மாப்பிள்ளையா..
"ம்ம்
"யாருக்குடி??..
"லூசாடா நீ , இங்கன யாருக்கு மாப்பிள்ளை பார்ப்பாங்க எனக்குதேன் ...
"ஏன்டி தலையில கல்லை போடுற , ஏன் எங்கிட்ட சொல்லலை..
"ப்ச் உன்னைய பார்க்கதான் கிளம்பினேன்,அய்யன் போனை தூக்கி போட்டு உடைச்சு புட்டார்... காலையில பரிசம் போட வாறாவளாம் ., அதேன் அழுதுகிட்டு இருக்கேன்..
"என்னடி சொல்ற அப்போ நான் என்ன பண்ண? ...
"ஹாங் நல்லா வந்து மொக்கிட்டு போ... நீதான் ஏதாவது பண்ணணும் ... அப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சி போல, என்னை வீட்டை விட்டு நகர விட மாட்டைக்கிறார்.. காலையில அந்த நாச்சி வேற அப்பாகிட்ட வந்து கல்யாணம் பத்தி பேசிட்டு போச்சு .. அதுலயிருந்து அப்பா பண்றது எதுவும் சரியில்லை.. எனக்கு என்ன பண்றதுன்னு புரியலடா" என ஜன்னல் கம்பியை பிடித்து கொண்டு நின்ற விருமன் விரல் மீது தன் விரலை வைக்க..அவள் கை சில்லிட்டு போயிருந்தது ....
"இதுக்காடி அழுதுட்டு இருக்க.. எப்படியும் இது ஒரு நாள் நடக்கும்னு தெரியும்டி ..
"தெரியுமா ..பின்ன ஏன்டா அப்படியா நொப்பிடியான்னு அதிர்ச்சி காட்டின..
"பின்ன அவ்வளவு வருத்தமா கண்ணீர் எல்லாம் வடிச்சு நீ கஷ்டப்பட்டு அழுவாச்சி சீன் நடிக்கும் போணு கெக்கே பிக்கேன்னு சிரிச்சா நல்லாவா இருக்கும் ,அதேன் நாலு அதிர்ச்சியை காட்டினேன்..
"ச்சை போடா என்று அவன் தோளில் அடிக்க அவள் கையை பிடித்து உதட்டில் வைத்து தடவி கொண்டே ..
"உன் மனசுல என்ன தோணுது மின்னல்.. நான் என்ன பண்ணணும் சொல்லு .. "
"எனக்கு நீ வேணும்...சோத்துக்கு வழி இல்லை ஜாதியை பிடிச்சிட்டு என் அய்யன் தொங்குறான் அந்த மாப்பிளை பயல நானே வேற பொண்ணுங்க கூட காட்டு பக்கம் ஒதுங்கினதை பார்த்திருக்கேன்.. உனக்கு என்னடா குறை , என்ன தவிர வேறொருத்தி முகம் பார்த்திருப்பியா உன்ன ஏன் கல்யாணம் பண்ண கூடாதுன்னு நினைக்கிறான்வ"
"குறையா , அவுக கண்ணுல அது நிறைய படுமே , மேலூர் காரிய என்ன கட்ட விடுவானுவளா, அதோட நான் அனாதை வேற.."
"யோவ் அப்படி சொல்லாத , உனக்குதேன் உசிர விடுற அண்ணன் இருக்காரே...
"அது அவர் பெருந்தன்மைடி , ஆனா என் மனசுக்கு தெரியும்ல நான் செத்தா" அவன் வாயை அடைத்துவிட்ட மின்னல்...
"நான் இல்லையா..
"அதனால தானடி உன்னையே தேடி வந்திருக்கேன் ... வெளிய வா...
"அப்பா வாசல்ல படுத்து கிடக்கார் எப்படி வர..
"எப்படியோ வா உன்ற கூட பேசணும்
"இப்போ பேசிட்டுதான இருக்க..
"ம்ம் ஜெயில் கைதி போல நீ கம்பிக்கு அங்க, நான் இங்க இதுக்கு பேர் பேச்சாடி...
"ம்க்கும் இங்க தலை போற விஷயம் போயிட்டு இருக்கு .. உனக்கு ஆசை வேற எங்கையோ போகுது..
"தலையே போனாலும் நீயும் நானும் உறுதியா இருக்க, எவன்டி நம்மள பிரிக்க முடியும்.. நாளைக்கு பரிசம் போடுறது வேணும்னா அவனா இருக்கலாம் ஆனா உன் கழுத்துல தாலி காட்டுறது இந்த விருமன்தேன்" .. என்று காதலில் துணிந்து நிற்க..அவன் துணிவு இவளுக்கும் கடத்தப்பட .. விழியில் பயம் போய் ஆசை ததும்பி அவனை தள்ளாட வைக்க
வாடி ,
போடா
வாடி
போடா
போடி
வாடா
"அப்ப வா "என்றான் மீசையை திருகி கண்ணடித்து கொண்டு
"அப்பா வாசல்ல இருக்கார்டா..
"உன் அப்பன வில்லன் ரேஞ்சுக்கு சொல்லாத.. நீ வா உன் அப்பன் எள்ளுண்டை தலையன் எப்படின்னு காட்டுறேன்.. மின்னல் பொத்தி பொத்தி பாதம் வச்சி தகப்பன் அருகே வர ..விருமன் அவள் தகப்பன் அருகே கட்டிலில் படுத்து கொண்டு ...
"போவ் பெருசு உன்ற மகளை தனியா தள்ளிட்டு போய் பிள்ளை கொடுத்து அனுப்பவா" அவர் போயிட்டு வா என்று கையை அசைக்க..
"பார்த்தியாடி என்ற மாமனார.."
"கத்தி ஊரை கூட்டாத , பண்றது திருட்டு வேலை இதுல பெருமை வேற வா" என்று அவனை இழுத்து கொண்டு வீட்டுக்கு பின்னால் நின்ற மாட்டு வண்டி மேலே இருவரும் ஏறி அமர்ந்தனர்...
"மின்னல்
"ம்ம்
"மின்னல்
"ம்ம்ம்
"ஒன்னு கேட்டா கேவலமா நினைக்க மாட்டியே...
"ஏய் ஏதாவது அசிங்கமா கேட்ட மண்டையை பிளந்திடுவேன்...
"அய்ய நீதான்டி அசிங்கமாவே மாமாவை நினைக்கிற.."
"பசிக்குது ஏதாவது இருந்தா எடுத்துட்டு வா ..
"யோவ்ஊஊஊஊ என்று கலங்கி போய் விருமனை பார்க்க..
"இதுவரை, என் பசியை துக்கத்தை கண்ணீரை யாரும் பார்த்து இல்லைடி ஆனா என்ற அண்ணனுக்கு செல்லாமலேயே தெரியும் .. லேய் போய் சாப்டுட்டு வான்னு அனுப்புவார், இந்த ஒரு மாசமா என்ற அண்ணன் சாப்பிடல, அரை வயிறா கிடந்தார் .. எனக்கும் பசிக்கல ஆனா இனி அண்ணன் பத்தி கவலை இல்ல.. அதோட என் பசியை துக்கத்தை பகிர்ந்துக்கதான் நீ இருக்கியே சோத்தை போட்டு எடுத்துட்டு வா.. நீயும் சாப்பிட்டிருக்க மாட்டல்ல என்றவனை விரும்பியே கட்டி கொண்டாள்..
சுகம் அனுபவிக்க துணை , நல்லதுக்கு துணை என்று கூறாது என் அத்தனை உணர்வுகளுக்கும் நீ மட்டும் என தன்னை அவளுக்கு வரதட்சணையாக எழுது கொடுத்த ஆணை அடைய அவள் என்ன பாக்கியம் செய்தாளோ?
மின்னல் சோற்றை அள்ளி கொடுக்க அவள் விரலை கடித்து உருண்டயை வாங்கி கொண்டு, வயிற்றை நிறைத்து மின்னல் மடியில் படுத்து கொண்டவனை குனிந்து முத்தமிட பளிச்சென்று கண்ணை திறந்து பார்க்க..
"ஒன்னும் கிடையாது அப்படி பார்க்காத, இனி ரெண்டு எபி கழிச்சு தான் கில்மா சீனாம், ரைட்டர் பிக்ஸ் ஆயிட்டாம், இப்போதைக்கு தலையை மட்டும் தான் தடவி விட பெர்மிஷன் கொடுத்திருக்கு" என தலையை கோதி விட்டபடி..
ரைட்டரை போட்டு தள்ளினா சரியா போகும்
அதை பண்ணிட்டு வா யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டைக்குது என கலகலத்து பேசி கொண்டே கவலை மறந்தனர்
"எனக்கு என்னவோ இந்த நாச்சி ஏதோ வினையம் புடிச்ச வேலைக்கு அடி போடுதோன்னு பயமா இருக்கு..."
"தோ இல்ல அதேதான் அண்ணன் கிட்ட சீண்ட முடியல , கொண்டையை அறுத்துபுடுவார், அதேன் என்கிட்ட வர்றா என்ன வச்சி அண்ணன ஏதாவது பண்ண பார்க்கிறா , எவ்வளவு தூரம் தான் போறான்னு பார்ப்போமோ... நாளைக்கு நீ தயாரா இரு நானும் அண்ணனும் வர்றோம்..
"நிஜமாவா..
"ம்ம் பின்ன உன்ன விடவா காதல் பண்ணினேன் என்ன ஆனாலும் ஒரு கை பார்த்து புடுதேன்.. கடைசி நேரம் வரை சமாளி நான் வந்துடுவேன் ..சுமூகமா போனா பிரச்சனை இல்லை.. இல்ல அடிதடி பண்ணிதான் தூக்கிட்டு போகணும்னா அதுக்கும் தயார்தேன்... மின்னல் கண்ணில் இபபோதுதான் ஒளிவட்டம் வந்தது ..
"சரி நீ கிளம்பு நான் நாளைக்கு எப்படியாவது சமாளிக்க பார்கிறேன்...
"ஏதே போகணுமா அதெல்லாம் முடியாது பரிசம் போட போற பொண்ணுக்கு எல்லாம் சரியா இருக்கான்னு மாப்பிள்ளை பார்க்க வேண்டாமா...
"உதை வாங்க போற போ
"போகவா அப்ப" என இழுத்த விருமன், சட்டையை இழுத்து ஒரு இச் முத்தத்தை அவன் கன்னனதில் கன பொழுதில் கொடுக்க ...
"இந்த முத்தம் வாங்கவா நாலு தெரு நாய் சுத்தி கால் கடுக்க காடு வழியா நடந்து வந்தேன் .. என்று கண்கள் கவரிமான் புள்ளி மீது பாய ..
"அய்ய போ" என தாவணியை இழுத்து மூடினாள் ... விருமன் அவளை பார்த்து கண்ணால் ஆசை கேட்டு..
"கொஞ்சமாவது தந்துட்டு போடி..
"வினையே வேண்டாம் யார் கண்ணுலையாவது பட்டா நாளைக்கு பரிசம் நடக்காது. நேரே கல்யாணத்தையே முடிச்சு புடுங்க போயிட்டு வா..
"தா போறேன் இல்லை போக மாட்டேன், நானா ரைட்டரான்னு பார்கிறேன்" என ரைட்டர் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எல்லாத்தையும் ஒரளவுக்கு முடிச்சிட்டு கிளம்பினான்..
"என்னது சீனை எங்க ?அதான் சொன்னேனே மச்சீஸ் ரைட்டர் கண்ணுல மண்ணை தூவிட்டான்னு..நான் கண்ணை கசக்கின நேரத்துல பய வேலையை முடிச்சிட்டான் போல ....
"தேவிம்மா!!" என்று அருவாளை சீவி கொண்டிருந்த நாச்சி அருகே ஒருவன் பணிவாக வந்து நின்றான்..
"என்னலே விருமன் வந்தானா..
"ஆமா தேவிம்மா...
"ம்ம் எப்படியும் இன்னைக்கு பரிசம் போட விட மாட்டாணுவ அண்ணனும் தம்பியும் வருவானுங்க..
"ஆமா தேவிம்மா ..
"வரட்டும் இளநீர் சீவுறது போல சீவி புடுதேன்... நீ என்ன பண்றன்னா , பொன்னி வீட்டுல தனியா இருப்பா முடிச்சிடு .. அவன் ரத்தம் ஒன்னும் இனி உசுரோட இருக்க கூடாது " என பெட்ரோலையும் தீப்பெட்டியையும் கையில் எடுத்து கொடுக்க..
"சரி தேவிம்மா...
"ம்ம் நான் அந்த வைத்தியர் வீடு வரை ஒரு எட்டு போய் வர்றேன் "என்று மின்னல் வீடு நோக்கி நடந்தாள்....
இன்னையோடு அத்தனை பேருக்கும் முடிவுரை நான் எழுதுறேன்லே என்று வீறு கொண்டு நடை போட்டாள்....
அவர்ளுக்கு முடிவுரை எழுதுவாளா?
ஆக இத்தோடு விளையாட்டு செய்திகள் நிறைவடைகின்றன அதான..
அதேதான் மச்சீஸ் !! சூனியம் வைக்க சூப் குடிச்சிட்டு இருக்கேன் தெம்பாக வர்றேன்..