உன் நினைவே என் சுவாசமடி 1-5

உன் நினைவே என் சுவாசமடி 1-5

உன் நினைவு என் சுவாசமடி...

                

அத்தியாயம்-1

காலை 6 மணி.

அந்த காலைப்பொழுதின் அமைதியை கெடுக்கும் விதமாக கல்யாண வீட்டின் டீஜே மிக சத்தமாக வைத்து அந்த பகுதியவே அலறவிட்டுக் கொண்டிருந்தனர்.

மும்பையின் ஒரு பகுதியான மாட்டுங்கா பகுதியின் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருக்கும் வீட்டில் பெண்ணழைப்பு விசேஷம் முடிந்து அந்த வீடே ஆரவாரமாக காணப்பட்டது.

வந்தவர்களுக்கு காலை உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது.

(திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதி மக்கள் திருமணத்திற்கு முந்திய நாளோ அல்லது திருமணத்திற்கான நேரத்திற்கு முன்போ பெண்ணை அவர்கள் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து வருவார்கள். இந்த நிகழ்விற்கு பெயர்தான் பெண்ணழைப்பு. மராத்தியர்களும் இப்படித்தான் திருமணத்தை நடத்துவர்

அதன் பின்னே மாப்பிள்ளை வீட்டில் அல்லது அவர்கள் சார்ந்த இடத்தில் வைத்துதான் தாலியைக் கட்டுவார்கள்)

அந்த கட்டிடத்தை சுற்றியும் ஃப்ளாக்ஸ் எனப்படும் மனப்பெண்ணும் மனமகனும் இணைந்து எடுத்த ஃபோட்டக்களை அங்காங்கே கட்டவுட்டுகளாக வைத்திருந்தனர்.

மனமகன்-கார்த்திக்கேயன்.B.Com

மனமகள்-மோனல் M.E

என அச்சடிக்கப்பட்டிருந்தது.

என்ன இரண்டு பெயருக்குமே பொருத்தமில்லையே என பார்க்கறவங்க கண்டிப்பா சிந்தனை செய்வாங்க.

பெயர் மட்டுமல்ல குணமும் பொருந்தாது.

கலரும் பொருந்தாது. அவள் பாலின் குங்குமப்பூ கலந்த கலர் மிகவும் சாது.

அவன் திராவிடக் கலரிலும் சிறிது தூக்கலான நிறம் முரட்டு ரௌடி.

மும்பையின் மையப்பகுதியில் இருந்தாலும் தங்களது முரட்டுத்தனங்களை விடாது சிறிது ரௌடிசத்தைக் கையில் வைத்திருந்தனர்

தன் கணத்த சரீரத்தை தூக்கமுடியாம ஒரு நடுத்தர வயதுடைய பெண் வந்தாங்க

" என்ன இப்படி உட்கார்ந்திருக்க. பத்தரை மணிக்கு முகூர்த்தம் மாட்டுங்கா முருகன்கோவில்லதான். எல்லாம் தெரிஞ்சிக்கிட்டே இப்படி இருந்தா என்ன அர்த்தம்."

அதைக்கேட்டதும் அந்த பெண்ணின் கண்களில் கண்ணீர்.

எதுக்கெடுத்தாலும் கண்ணை கசக்கிட்டு பன்னோத்தி( ராசியில்லாதவள்) எழும்பி ரெடியாகு.அவா அம்மைய மாதிரியே அழுது நடிக்கா "என திட்டினார்.

தனது இந்த பூமியில் இல்லாத தனது தாயை சொல்லவும் இன்னும் ஒடுங்கி அழுதாள் அவள்தான் மோனல். அவளை திட்டிக்கொண்டிருப்பவர் அவளது சொந்த அத்தை நாயகி தான்.

சுப்பையா பாண்டின் -ராசாத்தி அவர்களின் மூத்த மகள்தான் இந்த நாயகி.இரண்டாவது மகன் சரவணபாண்டியன் இப்போதைக்கு உயிருடன் இல்லை.இவரின் மகள் மோனலுக்கும் நாயகியின் மகன் கார்திக்கேயனுக்கும் தான் இன்று திருமணம்.

விரும்பி நடக்கும் திருமணமல்ல.குடும்ப சொத்து வெளிய போயிடக்கூடது என்பதற்காக நடத்தப்படும் திருமணம் மோனலின் விருப்பம் இல்லாமலே.

அவளை சுற்றியிருக்கும் சொந்தங்களையே ஒரு வாரமாகத்தான் தெரியும்.

பக்கத்தில் அமர்ந்திருந்த அவளின் சித்தப்பா மகளிடம் எனக்கு வாஷ்ரூம் போகனும் எங்க இருக்கு எனக்கேட்கவும்,அவள் இடத்தை கை காட்டினாள் எழும்பி சென்றவள் கதவை நன்றாக கொண்டியிட்டு தன்னிடம் மறைத்து வைத்திருந்த மொபைல் எடுத்து தனது உயிர்தோழி தந்த நம்பருக்கு அழைக்கவும் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என சொல்லவும் தளர்ந்து போனாள்.

இப்போ என்ன செய்யறது என பயந்தாள் இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சிதா என கடவுளை வேண்ட ஆரம்பித்தால்

அதற்குள்ளாக வெளியே இருந்து கதவு தட்டப்படவும் வெளியே வந்தவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

அவங்கவங்க கல்யாணத்திற்கு கிளம்பவும் அலங்காரம் பண்ணவுமே முனைப்பாக இருந்தனர் கல்யாண பொண்ணு அவ சாப்பிட்டாளா,எதாவது வேணுமா எனக்கேட்ககூட ஆளில்லை.

தாயும் தகப்பனும் இல்லை அவளை வளர்த்த தாத்தா- பாட்டியும் இல்லை. கசாப்புக்கடையில் பரிதாபமாக நிற்கும் ஆட்டுக்குட்டியின் நிலைதான் அவளுக்கு. பரிதபாமாக இருந்தது அவளின்நிலை.

அவளின் நிலையறிந்து உதவி செய்கிறேன் என்று தோழிக்கொடுத்த போன் நம்பருக்கும் அழைத்தாகிற்று ஒரு பதிலுமில்லை.

மணி காலை ஒன்பது. அழகு நிலையத்திலிருந்து வந்த பெண்ணும் அவள் வேலையை முடித்து மோனலை தயார் செய்துவிட்டாள்.

அலங்காரம் முடித்து வெளியே வந்தவளைப் பார்த்தவர்கள் ஸ்தம்பித்தனர். அவ்வளவு அழகு சர்வாலங்கார பூஷிதையாக தேவதை மாதிரி வந்து நின்றாள்.

ஏற்கனவே அவளோட ஆச்சி கொஞ்சம் நகைகளை அவளுக்கு செய்துக்கொடுத்திருந்தார் அதைத்தான் போட்டிருந்தாள்.

அங்கு இருந்த சொந்தத்தில் ஒரு ஆச்சி

அவளைப்பார்த்து திருஷ்டி சுத்தி " உங்கம்மா மாதிரியே அழகா இருக்கராசாத்தி.

உங்கப்பன் கல்யாணமும் இப்படித்தான் அப்பவே சிறப்பா நடந்திச்சி என்ன செய்ய அதுதான் எப்படி எப்படியோ ஆகிப்போச்சிது. எல்லார் காலுலயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ ராசாத்தி " என முடித்தார்.

அவங்க குடும்பத்தில் இவளைத்தவிர பெண்கள் முதற்கொண்டு திராவிட நிறம்தான். இவளைப்பார்த்து எல்லோருக்கும் கொஞ்சம் பொறாமைத்தான்.

எல்லோரும் வந்து அவளை அழைத்து கொண்டு காருக்கு செல்லவும் அங்க ஏற்கனவே மாப்பிள்ளையின் காரும் ரெடியாக இருந்தது.

கார்த்திக்கேயன் இவளைத்தான் பார்த்திருந்தான் நம்மள பார்ப்பாளா இல்லையானு. அவ எங்க பார்க்க இவங்க குடும்பம் வருதுன்னு தெரிஞ்சாலே தெரிச்சி ஓடுவா. அதுல அவங்கூட கல்யாணம் வேறு.

அவள் இவன என்னனுக்கூட திரும்ப்பி பார்க்கல. மனதில் நினைத்துக்கொண்டான்

" வாடி வா நான்தான் தாலிகட்டனும் உன் திமிர இல்லாம பண்றேன் பாரு" எனக் கருவிக்கொண்டே காரில் ஏறினான்.

தனித்தனி காரில் 5 நிமிடத்திற்குள் கோவிலை சென்று அடைந்தனர்.

மணமேடையில் அருகருகே அமர்த்தவும் கார்த்திக்கேயனின் உருவத்திற்கு அருகில் இவள் ஏதோ சிறு பொம்மையாக தெரிந்தாள்.

மோனலுக்கு ஏதோ கரடி பக்கத்துல இருக்கற மாதிரி முகத்தை வைத்திருந்தாள். அடுத்து என்னவோ என்ற மனநிலையில்.

ஐயர் மந்திரம் ஓதிக்கொண்டிருக்கவும் சிறிது நேரத்தில் கோவிலின் வெளியே சிறு சலசலப்பு கேட்கவும் நாயகியின் இரண்டாவது மகன் சரவணன் வந்து பார்க்க அங்கே நான்கைந்து போலிசாரும் ஒரு இன்ஸ்பெக்டரும் கூட ஒரு புதியவனும் நின்றிருந்தனர்.

கல்யாணம் பெண்ணின் பெயர் மற்றும் உறவினர்களை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.

சரவணன் வெளியே வந்து என்ன என்று விசாரித்தவனுக்கு கோவம். அவன் போலிஸாரோடு வாக்குவாதத்தில் இறங்கினான். அவர்களை உள்ளே விடாமல் கொஞ்சம் பேரை தன்னருகில் அழைத்து வாயிலை அடைத்து வைத்து நின்றான்.

இதற்கெல்லாம் அசருபவனா வந்திருந்தவன். அவர்களை தள்ளி அப்புறப்படுத்தி அவன் உள்ளே நுழைந்த தோரணையே அவனிடமிருந்து எல்லோரையும் சிறிது விலகி நிற்க வைத்தது.

அங்கிருந்தோர் யாருடா இவன் என விழியுயர்த்தி பார்த்தனர்.

அவர்கள் உள்ளே வரவும் அங்கிருந்த நெருங்கிய சொந்தங்கள் என்ன பிரச்சனையோ என திரும்பி அவன் நின்றிருந்த இடத்திற்கு வந்தனர்

சத்தங்கேட்டு நிமிர்ந்து பார்த்த மோனல் இப்போதுதான் அவளுக்கு உயிர் வந்தது போல சீராகமூச்சிவிட்டவள்.

மணமேடையிலிருந்து எழும்பவும் பின்னாடி நின்றிருந்த நாயகி அவளை எழும்ப விடாது அவள் தோள்களைப்பிடித்து அழுத்தி உட்கார வைத்தார்.

இதைப்பார்த்துக்கொண்டிருந்த புதியவன் இன்ஸ்பெக்டரை பார்க்கவும் அவர் பேசினார்.

இந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லாம கட்டாயக் கல்யாணம் பண்றதா கம்ப்பிளையின்ட் வந்திருக்கு.

அந்தப்பொண்ணை நாங்க விசாரிக்கனும் என இந்தியில் உரைத்தார்.

இதைக்ககேட்டுக்கொண்டிருந்த நாயகியும் அவரது வீட்டாருக்கும் கல்யாணம் எங்க நின்றுவிடுமோ என பதைத்து நின்றனர்.

அங்கிருந்த சொந்தங்களில் பெரியவர் ஒருவர் எழுந்து என்னப்பா இப்படி கடைசி நேரத்துல பிரச்சனையா வந்து நிக்குது.

நம்ம சுப்பையாண்ணே பேத்தி நம்மகிட்ட பழகலனாலும் அண்ணனுக்காக அந்தப்பொண்ணுக்கிட்ட விசாரிங்க என சொல்லவும் தான் சொந்தங்கள் கொஞ்சம் அமைதியாகினர்.

எல்லாருடைய முன்பும் இன்ஸ்பெக்டர் மோனலிடம் உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமா என்று கேட்கவும். அவள் தன் தலையை வேகமாக மறுத்து அசைத்து விருப்பமின்மையை கூறவும்.

அந்த புதியவன் சொன்னான் " அவங்களுக்கு இந்தக்கல்யாணத்துல விருப்பமில்ல ஏன்னா அவங்களும் நானும்தான் காதலிக்கறோம், அவங்களைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கபோறேன் " என மொழிந்தான்.

இதைப்பார்த்திருந்த நாயகியின் மக்கள் ஆத்திரத்தில் அந்த புதியவனை அடிக்கவரவும் இன்ஸ்பெக்டர் சத்தமிட்டார்.

அவர யாருன்னு நினைச்சிட்டு இருக்கீங்க புனே நகரின் எஸ்பி அவருதான் ஜெபானந்த் ஐபிஎஸ்.

அடிக்கவந்தவர்கள் அப்படியே அமைதியாக கைகளை கீழேப்போட்டு நின்றனர்.

நான் அவங்களை என்கூட கூட்டிக்கொண்டு போறேன் என சொல்லவும்.

மோனல் அவங்க அத்தை கையிலிருந்து தப்பி ஓடிவந்து அவன் அருகில் நின்று கொண்டாள்.

மீண்டுமாக சில பெரியவர்கள் பேசினர். அப்படியெல்லாம் கல்யாணமாகாத பெண்ணை உங்ககூட அனுப்ப முடியாது தம்பி.

" நீங்க போலிஸ்காரங்கனுதான் மரியாதைக்கொடுத்து சும்மா இருக்கோம். இல்லன்னா இங்க வேறமாதிரி பிரச்சனைய நாங்க முடிச்சிக்குவோம். அந்த தாயி வேற எல்லாரு முன்னாடியும் இந்த கல்யாணம் பிடிக்கலன்னு சொல்லிட்டு. அதுவே தாய்தகப்பன் இல்லாத பொண்ணு. யாரும் பொறுப்பும் எடுக்கமாட்டாங்க"என சொல்லவும்

ஜெபா பேசினான் "அவங்களுக்கு நான் பொறுப்பெடுக்குறேன் "

பெரியவர் " அதெப்படி தம்பி முடியும் நீங்க யாரு யவருன்னே தெரியாத ஆளு. ஒருத்தொருக்கொருத்தர் விருப்பமிருந்தாலும் பெண்பிள்ளை பாருங்க அதனால அந்த தாயை உங்க கூட அனுப்புறதுல சிக்கல் தம்பி. வேணும்னா ஒன்னு பண்ணலாம் இந்த மேடையிலயே தாலிக்கட்டி ரிஜிஸ்டர் பண்ணி உங்க பொண்டாட்டியாக கூட்டிட்டுப் போங்க அதுதான் சரிவரும் " என பேசி முடித்தார்

இதைக்கேட்ட மோனலுக்கு அப்படியே தலைசுத்தியது. கல்யாணத்த நிறுத்த இப்படி உதவி செய்ய வந்தா. ஐயோ இப்போ இவருக்கூட கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க என நினைத்து அவசரவசரமாக வாயைத்திறந்தாள்

" இல்ல தாத்தா இவங்க எனக்கு உதவி செய்ய.." என பேசவும் கடைசி வார்த்தையைய முடிக்கவிடாமல் அவள் உதட்டில் கைவைத்து அதட்டினான்.

ஜெபா " நான் இவங்களை இப்பவே உங்க முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கறேன் " என சொன்னான். மோனல் மௌனமாக அவனைப்பார்த்து வேண்டாம் என் தலையசைத்தாள்.

அவன் அவளருகில் நெருங்கி வந்து உன் வாழ்க்கைகாக இல்ல என்னோட வாழ்க்கைக்காக மட்டும்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன் மனசார ஏத்துக்கிட்டு. அமைதியாக இரு என அவளிடம் மெதுவாக பேசினான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் நினைத்தது அழகான ஜோடி..எவ்வளவு பொருத்தமா இருக்காங்க எனதான்.

அவர்கள் நினைத்தது காதலித்தவர்கள் ஏதோ தங்களுக்குள்ள ரகசியம் பேசிக்கிறாங்க எனவும்தான்.

மோனல் சிந்தனையில் உதவிதான செய்ய வந்தாங்க எப்படி கல்யாணம் பண்ண சம்மதிச்சாங்க.நம்ம வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாகப்போகுது என நொந்தே போனாள்.

அவ்வளவுதான் கோவிலில் இருந்த சில பெரியவர்கள் கார்த்திக்கேயனை அங்கிருந்து அகற்றி ஜெபாவை அங்கு அமரவைத்தனர் .

ஐயர் மந்திரம் ஓத ஏற்கனவே வாங்கியிருந்த திருமாங்கல்யத்தை மோனலின் கழுத்தில் சந்தோஷமாக கட்டினான். அவனே மூன்று முடிச்சையும் போட்டான். இந்த சம்பிரதாயங்கள் அவனுக்கு புதிது.

இனிதான மனநிலையில் ஜெபா,குழப்பமான மனநிலையில் மோனல்.

அத்தியாயம்-2

தாலிக்கட்டி முடிந்ததும் ஐயர் அவனிடம் அக்கினியை சுத்திவாங்க என சொல்லவும்.

அங்கிருந்தவர்களைப் பார்த்தான் அவர்களும் அவனுக்கு புரியும்படி சொல்லிக்குடுத்தனர்.

அதற்காக அவள் கைளை பிடிக்க போனான் அவள் தயங்கினாள் அக்கினியை வலம் வருவது சத்தியம் பண்றதுக்கு சமம் அல்லவா. இந்த ஜென்மம் முழுவதும் நீ என் மனைவி என்ற பந்தத்தை அக்கினி சாட்சியாக உறுதி செய்வது அல்லவா விளையாட்டு இல்லையே.

அவள் தயங்கவும் அவன் அதை முன்னெடுத்து உரிமையாக அவளது வலது கரம் பற்றி மூன்று முறை சுற்றி வரவும்

நினைத்தான் மாதாகோவில்ல கட்டவேண்டிய தாலிய முருகன் கோவில்ல கட்டியிருக்க அவ்வளவுதான் வித்தியாசம். பொண்ணு அவதான் உறுதி பண்ணிட்டுதான இருந்த என மனம் எடுத்துரைத்தது.

தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்தது அவனுக்கு நிறைவைக்கொடுத்தது.

அங்கிருந்த கல்யாண ரிஜிஸ்டர்லயும்

இரண்டும் பேரும் கையெழுத்திட்டு தங்கள் திருமணத்தை பதிவு செய்தும் கொண்டனர்.

எல்லா சடங்கும் முடிந்து கீழே இறங்கி நடக்கவும் மோனல் அப்படியே மயங்கி சரிய ஜெபா தன் கரங்களில் பூச்செண்டு போல ஏந்திக்கொண்டான்.

ஏற்கனவே கல்யாணம் பற்றிய சிந்தனையிலும்,பசியிலும் ஜெபாவுடனான இந்த திடீர் திருமணம் கொடுத்த அதிர்ச்சியும் மொத்தமாக அவளை மயக்கமுறசெய்தது.

அவளை தனது ஜீப்பிற்கு ஓடிக்கொண்டு சென்றவன் டிரைவரிடம் வண்டியை எடுக்க சொல்லி கூட வந்திருந்த இன்ஸ்பெக்டரிடம் தன் நன்றியைத் தெரிவித்து இங்கு பார்த்துக்கொள்ளுமாறு சைகை செய்து கிளம்பிவிட்டான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மும்பையின் பிரபலமான ஆஸ்பத்திரியில் மோனலை அட்மிட் செய்திருந்தான்.

டாக்டர் அவளை பரிசோதித்து விட்டு

சாப்பிடாமல் இருந்ததினாலும் சோர்வினாலும் வந்த மயக்கம் இன்ஜெக்க்ஷன் போட்டிருக்கேன் அரைமணி நேரத்துல எழும்பி சரியாகிடுவாங்க என அவனிடம் தெளிவுபடுத்திவிட்டு சென்றார்.

ஜெபா அவள் படுத்திருந்த பெட்டிற்கு அருகிலயே இருந்த ஒரு சேரில் அமர்ந்து கொண்டு அவளை விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரே நாளில் என்னை அடித்து சாய்த்த காதல் தேவதையல்லவா இவள்.

பார்த்த அந்த நாளிலிருந்து தன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் இராட்சஷி என ரசித்துக்கொண்டிருந்தவன். காதல் சொல்லாமலே ஒரு காதல் திருமணம் அவனை நினைத்து அவனே சிரித்துக்கொண்டான்.

அவனின் அந்த லேசான உதடுவிரிந்த சிரிப்பு அவனுக்கு அவ்வளவு அழகை கொடுத்தது.

அவளை முதல் முறை பார்த்த அன்றைய நாளின் ஞாபகம் தன் தங்கை அனிஷாவின் பிரச்சனைக்காக புனேக்கு

தன் அத்தை வீட்டிற்கு சென்றவன் கண்டது அனிஷாவின் குழந்தை சாரா அழுதுகொண்டிருந்ததையும்,சாராவை

 மோனலின் குழந்தை என தவறாக எண்ணி அவளிடம் உங்க குழந்தை அழுது அவள வாங்கிங்க என சத்தமிடவும் பயந்து மிரண்டு

அழுது "அது என் குழந்தையில்லை அனிஷாவின் குழந்தையென " கண்கள் மிரண்டு சொன்ன மோனலை பார்த்துதான் கொஞ்சம் ஜெர்க்கானான்

என்னா கலரு என்னா பொண்ணுடா என ஆராய்ச்சி பார்வை என்கின்ற பெயரில் அவளை மனதிற்குள் ரசித்துக்கொண்டிருந்தான்.

முதன்முதலாக ஒரு பெண்ணைப்பார்த்து மனதில் தடுமாறியது அன்றுதான்.

டெல்லி போகனும் என சீக்கிரம் கிளம்பி சென்றாலும் அவன் மனதில் அப்போதே விதையாக விழுந்து இன்று மரமாக வளர்ந்து நின்றாள் விஷ்வரூபமாக.

அடுத்து ஆறுமாதம் கடந்தும் அவளை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு வரவில்லை.

அதன் பிறகு புனேக்கு மாற்றல் கிடைத்தபோது சந்தோசமாகவே வந்தான்

வந்து என்ன பிரயோஜனம் அவளை தூரத்திலிருந்து பார்த்திட்டு அப்படியே போயிடுவான்.(பெரிய இதயம் முரளின்னு நினைப்பு காதல் சொல்லாம மனசுக்குள்ள வச்சிக்கிட்டு யாருக்கு நன்மை)ஆறுமாசமா பார்க்கறது மட்டுந்தான் நடந்திச்சி.

நேற்றிரவு அவன் தங்கை அனிஷா அவனை அழைத்து மோனலின் திருமணத்தை பற்றிய செய்தி சொல்லவில்லை எனில் பிறகு நம்ம போலிஸ்காரர் தாடி வச்ச தேவதாஸா மாறியிருப்பாரு.

செய்திக்கேட்டு துரிதமாக யோசித்து அதிகாலையில் கிளம்பியவன் கிட்டதட்ட மூன்றரை மணி நேரப்பயணத்தை எப்படி கடந்து வந்தான் என தெரியாது டிரைவர் வண்டியோட்ட சிந்தனை முழுவதும் அலைப்புறுதலாகவே இருந்தது.

நம்ம போகிறதுக்குள்ள திருமணம் முடிஞ்சிட்டா என்ன பண்றது என மனக்கலக்கம் வேற அவனும் நேற்று இரவிலிருந்து எதுவுமே உண்டிருக்கவில்லை. சரியான நேரத்திற்கு இங்கு வந்து தாலிக்கட்டி இப்போ ஆஸ்பத்திரியில என சிந்தனை சென்றது அவனுக்கு.

இப்போ எல்லாம் முடிந்ததும் தான் பசி தெரியுது அவள் வேறே மயக்கத்தில் இருக்கவும் எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை.

அவளையே பார்த்திருந்தவன் கவனித்தது அவளது வலது கையை பார்த்தான் அக்கினியை வலம் வரும்போது கையை பிடித்த இடம் கன்றி சிவந்து இருந்தது.

அம்மாடி லேசா பிடிச்சதுக்கே இப்படியா. இதுக்கே இப்படினா மற்றதுக்கெல்லாம் ஜெபா உன் நிலைமை ரெம்ப மோசம்டா என நினைத்தான்.

அவள் மெதுவாக அசைந்தவள் விழிப்பு வரவும் அவனைப்பார்த்து பதறி எழுந்தவள் தன் ட்ரஸ்ஸை சரிசெய்து கட்டிலின் ஓரமாக ஒடுங்கியவளுக்கு இப்போதுதான் எல்லாம் ஞாபகம் வந்து சுற்றிலும் கண்களை ஓட்டிப்பார்த்தாள் அது எந்த இடம் என்று.

அவன் அவளது எண்ணவோட்டங்களை அறிந்து " இது ஹாஸ்பிட்டல் மயங்கி விழுந்திட்ட ,இங்க அட்மிட் பண்ணிருக்கேன் " என சொல்லவும் கேட்டு அமைதியா இருந்தாள்.

வெளிய இருந்த டிரைவரை அழைத்து இரண்டு ஜூஸ் வாங்கிட்டு வரச்சொன்னான்.டிரைவர் வர்றவரைக்கும் அமைதியாகவே இருந்தனர்.

சட்டென அவள் கீழிறங்கவும் அவளால் நிற்கமுடியாமல் போக தாங்கிப்பிடித்து எதுக்கு எழும்புற என கேட்கவும் என்ன சொல்ல என திருதிருக்கவும் " வாஷ் ரூம் போகனுமா வா " என அவளை கைபிடித்து நடத்தி அருகில் கொண்டுவிட்டு வெளியே நின்றான்.

திரும்பி வந்தவளுக்கு இன்னும் உடம்பு அந்தரத்தில் மிதக்குற மாதிரியே இருக்கவும் தலைசாய்த்து அமர்ந்தவளிடம் கேட்டான் எத்தனை நாள் சாப்பிடல எனக்கேட்கவும் கைவிரல்களினால் இரண்டு என காண்பித்தாள்.

எப்படி அப்படியே பட்டினி கிடந்து செத்துறலாம்னு நினைச்சியா எனக்கேட்கவும் ஆம் என தலையசைத்தாள்.அவன் கோவத்தில் முறைத்தான் அதை பார்த்தவள் இல்லை என மீண்டும் தலையசைத்தால் அவனுக்கே பாவமா இருந்தது யாருமே இல்லாம எப்படிப்பட்ட சூழ்நிலையில இருந்திருக்கா.

நம்ம கொஞ்சம் முன்னாடியே ஸ்டெப்ஸ் எடுத்திருக்கனுமோ என எண்ணினான்.

அதற்குள்ளாக டிரைவர் ஜூஸுடன் வரவும் ஒன்றை எடுத்து அவளுக்கு கொடுத்தவன் தானும் ஒன்றை எடுத்துக்கொண்டான்.

அவள் கைநடுங்கவும் அவன் அதை பிடித்துக்கொண்டு குடிக்க கொடுத்தான்.

அவனுக்கே அவள பார்க்க பார்க்க பரிதாபமாக உணர்ந்தான்.

எழுந்தவன் டாக்டரிடம் கேட்டு டிஸ்சார்ஜ் செய்து அவளுக்கு தேவையான மருந்துகளையும் வாங்கி வந்தான்.

நம்ம போகலாம் டாக்டர்கிட்ட பேசியாச்சி என சொல்லி அவள் கைப்பிடித்து நடக்கவைக்க முயல அவள் மெதுவாக

" நானே நடக்குறேன் " திக்கித்தினறி வார்த்தைகள் வெளியவர.

சரி என அவன் கையைவிடவும் அவள் நடக்க முற்பட எங்க மீண்டும் தலைசுற்றி

நடக்ககூட முடியாமல் தடுமாறினாள்.

சரி என் கையைபிடித்து நட என சொல்லி கையை கொடுக்கவும் அதற்கும்

" வேண்டாம் "என தலையசைத்தாள்.

இதைப்பார்த்தவன் யோசிக்கவேயில்லை சட்டென்று அவளைத்தன் கரங்களில் தூக்கிக்கொண்டான். என்ன நடக்குது என அவள் உணரும் முன்னே ஹாஸ்பிட்டல் காரிடாரில் நடக்க ஆரம்பித்திருந்தான்.

பூப்போல இருப்பவளை தூக்கி சுமப்பது அந்த ஜீம் பாடிக்கு ஈஸியா இருந்தது.

மோனல் அவன் சட்டையை இறுக்கமாக பிடித்தவள் ஏதோ சொல்ல அது அவனுக்கு கேட்கவில்லை. என்ன சொல்ற நீ என அவள் பக்கம் மெதுவாக குனிந்து அவள் வாயருகில் தன் காதுகளை அவள் பக்கம் திருப்பவும்.

க்கும் எங்க பேச இப்போ தேவர் மகன் படத்துல ரேவதி சொல்ற மாதிரி வெறுங்காத்துதான் அவள் வாயிலிருந்து வந்தது .அதுபோல நிலைமைத்தான் அவளுக்கும்.

அவள் மிரண்டு விழிப்பதை பார்த்து இன்னும் தன் மார்போடு இறுக்கிபிடித்து தூக்கி சென்றான் அவன் கண்களோ சிரிப்பை பிரதிபலித்தது.

ஜீப் அருகில் வந்ததும் டிரைவர் வந்து கதவைத்திறந்து விட்டான். ஜெபா அவளை மெதுவாக ஜீப்பினுள் சீட்டில் இறக்கவும் அவள் இறங்காமல் அவன் சட்டையை இறுக்கிபிடித்திருந்தாள் பிடிமானத்திற்காக.

ஜெபா " எனக்கும் இப்படியே இருக்க ஆசைதான் பாரு நம்ம ஜீப்ல இருக்கோம்.

என் சட்டையை விட்டனா நானும் ஏறிக்குவேன் நம்ம வீட்டுக்கு போயிடலாம், அங்கப்போய் எப்படி வோணாலும் இருந்துக்கலாம் சரியா" என சொல்லி அவளது கரங்களைத்தான் பார்த்தான்.

அப்போதுதான் பார்த்தாள் தாம்தான் அவனே பிடிச்சிருக்கோம் என பட்டென்று அவனது சட்டையை விட்டாள்.

சிரித்துக்கோண்டே கதவை அடைத்து அவன் டிரைவர் பக்கமாக ஏறிக்கொண்டு அமர்ந்தான்.

ஜீப் நகரத்தொடங்கவும் நீ பின்னாடி படுத்துக்கோ எப்படியும் நம்ம போகுறதுக்கு சாயங்காலமாகிடும்.அதுவரைக்கும் உன்னால உட்கார்ந்து வரமுடியாது என சொல்லவும் தன்னை குறுக்கி படுத்துக்கொண்டாள். அவள் கண்களில் தன் நிலையை எண்ணி கண்ணீர் தானக வரவும், துடைத்துக்கொண்டே இருந்தாள்.முன் சீட்டில் இருந்தாலும் போலிஸ்காரன்ல பின்னாடி அவள் பக்கமும் ஒரு கண்வைத்திருந்தவன் அவள் அழுவதையும் பார்த்தே இருந்தான் இபபோதைக்கு ஒன்னும் செய்ய முடியாது என அமைதியாக இருந்தான்.

ஒரு ஒன்றரை மணிநேர பயணத்திற்கு பிறகு மும்பை டூ புனே ஹைவேஸில் உள்ள உணவுக்காகவும் இயற்கை உபாதைக்களுக்காகவும் உள்ள ஒரு லக்சுரியஸான இடத்தில் ஜீப்பை விடவும் டிரைவருக்கு பணத்தை கொடுத்து சாப்பிட்டு வருமாறு சொல்லி அனுப்பியவன்.

பின்பக்கம் வந்து கதவைதிறக்கவும் பார்த்தது ஃபேரி டேயில் கதைகளில் வரும் தேவதை ஒன்று தூங்குவதைத்தான் டால் மாதிரி அயர்ந்து தூங்கினாள்.

எப்படியும் இரண்டு மூனு நாளா தூங்கியிருக்க மாட்டாள் என கணித்தான்.

மெதுவாக குனிந்து அவளது கன்னங்களில் தன் உதட்டை பதித்து சடுதியில் எடுத்து மீண்டவன் அக்கம் பக்கம் பார்த்தான் யாருமில்லை.

தனது பிடதியில் லேசாக தட்டியவன்

எப்படிடா இப்படியான

தூங்கிட்டிருந்தவளுக்கு முத்தம் கொடுக்குற. நீயெல்லாம் போலிஸ் அதுவும் எஸ்பி என அவன் மனேசே அவனக் காரித்துப்பியது.

மெதுவாக அவள் கன்னத்தை தட்டி எழுப்பவும் பதறி எழுந்தவள் அவசர அவசரமாக தன் சேரியை சரி செய்தவளை பார்த்தான்.

அவன் பார்ப்பதை உணர்ந்தவள் " அது அது இயற்க்கையா உள்ள பாதுகாப்பு உணர்வுல சேரி சரி பண்ணேன்.உங்கள தப்பா நினைக்கல " என வாய்க்கு வலிக்குமோ என்கிற ரீதியில தலையை குனிந்து பேசினாள்.

அவனுக்கு ஆச்சர்யம் பரவாயில்லையே நம்ம கண் பேசறத புரிஞ்சிக்கிட்டா அப்படி சந்தோசத்தோடவே சந்தேகம் அப்போ பாப்பா வீட்ல வச்சி இவள சைட் அடிச்சத புரிஞ்சித்தான் கிளம்பி போயிட்டா என சரியாக நினைத்தவன்.

ஜெபா" வா ப்ரஷ்ஷப் ஆகு சாப்பிடலாம் "

என வாஷ்ரூம் கூட்டிப்போயி வாயில்லயே காவல் நின்றான். திரும்பி வந்தவள் அவனைத்தான் பார்த்து ஒரு பாதுகாப்பாக உணர்ந்தாள்.

புனேயிலிருந்து அவங்க ஆச்சியை பார்க்க போகும்போதெல்லாம் இந்த வழிதான். யாருமே இல்லாததனால பஸ்ஸவிட்டுக்கூட கீழ இறங்க மாட்டா

பட்டினியா பேயிச்சேருவா.

அவள் வந்தவுடன் இணைந்து நடந்தவன் உணவகம் சென்று உட்காரவும் கேட்டான் இப்பவே மணி மூனு ஆகிட்டு ரெம்ப ஹெவியா இல்லாம சாப்பாடு ஆர்டர் பண்ணவா.

உனக்கு என்ன வேணும் என கேட்டான்.

அவா ஒன்னுமே சொல்லமா இருக்கவும்.

" ஏன் இப்படி இருக்க நா ஒன்னும் உன்ன கடிச்சி திண்னுற மாட்டேன் " என லேசாக கோபப்படவும்

அவள் மிரண்டு அவசரமாக " நான் இப்படி எங்கேயும் போனதில்ல என்ன கிடைக்கும்னு எதுவும் தெரியாது " என சொல்லவும்.

அதிர்ந்தான் பாப்பா கூடத்தான இவளும் படிச்சி வேலைபாக்குறா இப்படி சொல்றா என குழம்பியவன்.

ஜெபா" அனிஷா கூடவும் வெளியே போனதில்லையா எனக்கேட்டான்"

மோனல்" போயிருக்கேன் ஆனா அவளே எனக்கு பிடிச்சது என எல்லாம் சொல்லிருவா "

ஜெபா" சரி இன்னைக்கு நம்ம கல்யாணம் முடிஞ்சதுனால நம்ம இரண்டு பேருக்கும் நானே எனக்கு பிடிச்ச மாதிரி ஆர்டர் பண்றேன் நாளையில இருந்து உனக்கு என்ன பிடிக்குதோ அதையே நானும் சாப்பிட்டுக்குறேன் சரியா "

மோனல் இப்படி சொல்றாங்க நம்மதான் ஹாஸ்டல் போயிடுவோமே என நினைத்து மெதுவாக சரி என தலையாட்டினாள் .

ஆர்டர் செய்து சாப்பிட்டு மறுபடியும் பயணம் அவளை மாத்திரை சாப்பிட வைத்து தூங்க சொல்லிருந்தான்.

கிட்டதட்ட ஐந்து மணி அளவில் புனே வந்து சேரவும் வண்டி அவளோட ஹாஸ்டல்ல முன்னாடி நின்றிருந்தது .

மோனலை எழுப்பியவன் அவளிடம் அதை சொல்ல இறங்கியவள் அவனிடம் வந்து " ஹெல்ப் பண்ணதுக்கு தேங்க்ஸ்.பை " என சொல்லவும் கதவை பட்டடென திறந்து கோவத்தில் இறங்கியவன்.

டிரைவர் இருக்கிறான் என்று உணர்ந்து மெதுவாக பல்லைக் கடித்துக்கொண்டு

" இன்னும் பத்து நிமிஷம் டைம் தர்றேன் உன் முக்கியமான பொருள் அப்புறம் தேவைக்கான ட்ரஸ் எடுத்திட்டு இங்க வர்ற ஓகே கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தா தேங்கஸ் பை யாம் பிச்சிடுவன் பார்த்துக்க "

என்கூட நட என அழைத்துக்கொண்டு வார்டனைப்ப பார்க்க சென்றான் .

அவர்களிடத்தில் அவனை அறிமுகப்படுத்திக் கொண்டு " எங்களுக்கு கொஞ்சம் அவசரமா கல்யாணமாகிடுச்சி அவளோட கொஞ்சம் பொருட்களை இப்போ எடுத்திட்டு போக வந்தோம் " என்க

வார்டனும் சம்மதிக்க மோனல் சென்று எடுத்து வரவும் அதை டிரைவர் வாங்கிக்கொண்டு வைத்தான்.

அவர்களிடம் விடை பெற்று வண்டியில் ஏறி அவனோட குவர்ட்டஸ்க்கு வந்து சேர ஏழு மணிக்கு மேலாகியது.

டிரைவரிடம் வண்டிய எடுத்துச்செல்ல சொல்லியவன் அவளை அழைத்துக்கொண்டு தன் வீட்டை திறந்தவன் சொன்னான்.

" எப்படி நடந்திருந்தாலும் நீ தான் இந்த ஜென்மத்திலான என்னோட வாழ்க்கை துணை வலது கால் எடுத்து வச்சி உள்ள போவோம் " என உள்ள அழைத்து வந்திருந்தான்.

அத்தியாயம்-3

வீட்டின் உள்ளே சென்றதும் அங்கயிருந்த சோபாவில் இரு எனக் கைகாட்டினான்.

அவளும் மெதுவாக அமரவும் அவள் பக்கத்தில் அமர்ந்து என்ன தைரியத்துல ஹாஸ்டல் போறேன்,தேங்கஸ் பை அப்படினு சொன்ன.

உன்ன கல்யாணம் பண்ணிருக்கேன் நான் கட்டினதாலி உன் கழுத்துல இருக்கு எல்லாம் விளையாட்டு என நினைச்சியா.

உனக்கு உதவி செய்யமட்டும் வந்திருந்தா என் போலிஸ் பவர் வச்சி நான் அங்க வராமலே கல்யாணத்த நிறுத்திருக்க முடியாதா. யோசிக்க மாட்டியா நீ ஒரு இன்ஜினியரிங்க் காலேஜ் லெக்ட்சரர்.

உதவிப்பண்றதுக்காக இவ்வளவு பெரிய பெறுப்பான வேலையில இருக்க நான் விளையாட்டா கல்யாணம் பண்ணுவேனா.

ம்ம்.சொல்லு "

அவள் இல்லையென தலையசைக்கவும்.

ஜீப் டிரைவர் இருக்கான் அவன் முன்னாடியே போறேன்னு சொல்ற நீ போசுற தமிழ் புரியாட்டாலும் தேங்க்ஸ் பை இதெல்லாம் புரியும் தான.

சரி விடு போய் ட்ரஸ் மாத்து என அவனோட ரூமைக் காமிக்கவும்

தயங்கி நின்றாள் பின்னாடி வந்தவன்.

அவள் நிற்பதை பார்த்து என்ன எனக்கேட்கவும் "வேற ரூம்..." என வார்த்தைய முடிக்கவில்லை அவளை இடித்துக்கொண்டு நின்றான்.

" ம்ம்.மேல சொல்லு "

மௌனமாக நின்றாள்.

" ஒன்னும் தெரியாம இருக்க நீ சின்னபிள்ளையில்ல. என் ரூம்தான் உன் ரூம் இனி அது நம்மளோடது. போ மாத்திட்டு வா சாப்பிட போகனும் "

அவசர அவசரமாக மாற்றி வெளியே வந்தவள் அவனைத்தேட அவன் வெளியே போன் பேசிட்டிருந்தான்.

அவனோட ஹைட்டுக்கும் உடம்பிற்கும் இவள் அவனுக்குள் அடங்கிவிடுவாள் அப்படித்தான் இருந்தாள் அவனைத்தான் பார்த்துகொண்டிருந்தாள்.

பேசிக்கொண்டே திரும்பியவன் அவளைப்பார்த்தான் ஷர்ட் வித் லாங்க் ஸ்கேர்ட் போட்டிருந்தா. சேரில பார்த்தவிட இப்போ சின்ன பிள்ளையாகத்

தெரிந்தாள் அவன் ரசனை வேற எங்கயோ அவள் மேனியில் போயிற்று சட்டென அவள் திரும்பி நின்றாள்.

ஜெபா நன்றாக உணர்ந்தான் என் பார்வைய நல்ல உணர்ந்து உள்வாங்குறா ஆனா வெளிய காமிச்சிக்க மாட்டுக்கா பார்க்கலாம் எத்தனை நாளைக்கு என.

ஜெபா " ஐஞ்சு நிமிஷம் நான் பிரஷ்ஷப் ஆகி வர்றேன் " என உள்ளே சென்றவன் ரெடியாகி வந்தான்.

ஜெபா " இந்த ஏரியாலாம் உனக்கு தெரியுமா வா நடந்து போயி எதாவது ரெஷ்ட்ராண்ட்ல சாப்பிட்டு வரலாம் "

கொஞ்சதூரம் நடந்து ஒரு ரெஷ்டாரண்ட்க்கு உள்ளே போயி எதிர் எதிரா அமர்ந்தனர். அவனுக்கு அவள் முகம் பார்க்கனும் அதுக்காக ,அவளுக்கு அவன் பக்கத்துல உட்கார பயம் அதுக்காக.

அவனே ஆர்டர் செய்தான் நார்த் இன்டியன் உணவுதான். மெதுவா சாப்பிட்டு வெளியவரவும் குளிர் என அவள் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு வந்தாள்.

இவா எதையுமே காட்டிக்க மாட்டுக்கா தனக்குள்ளவே வச்சிக்குறா.

இது நல்லதில்லயே என இதுக்கு என்ன பண்ணனும் யோசித்துகொண்டே வந்தவன்.

" உனக்கு சமைக்கத்தெரியுமா "

அவள் அவனை ஏறிட்டு பார்த்து உதடு பிதுக்கி இல்லை என தலையசைத்தால்.

சரிதான் அப்போ நம்ம ஊரு சாப்பாடு சாப்பிட நான் என்ன பண்ணுவேன்.

அங்கயும் இங்கயும் இந்திய முழுவதும் சுத்தியாச்சி எல்லா ஊரு சாப்பாடும் சாப்பிட்டாச்சி. சரி கல்யாணம் முடிஞ்சா பொண்டாட்டி கையால சாப்பிடலாம்னு நினைச்சேன் போச்சி போ .இனி நீ எப்போ சமைக்க படிச்சி நான் எப்போ சாப்பிடுறது."

மோனல் அவனைப்பார்த்து லேசாக சிரித்தாள்.அப்படியே பேசி வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

அவளுக்கான மாத்திரை எடுத்து சாப்பிடக்குடுத்தவன் தூங்கலாம் எனக்கு நாளைக்கு ட்யூட்டி போகனும்

நீ என்ன பிளான் பண்ணிருக்க.

மோனல் " தூங்கறதுக்கா "

ஜெபா " அத நான் பிளான் பண்ணிக்குறேன்.வேலைக்கு போகுறதுக்கு என்ன பிளான் "

மோனல் " தெரியல என்ன பண்றது என "

ஜெபா" இல்ல எதக்கேட்டாலும் தெரியல இல்லை இப்படித்தான் சொல்ற. நீயா யோசித்து சொல்லு. இன்னும் மூன்று நாளில் நமக்கு ஊர்ல ரிசப்ஷன் முடிச்சிட்டு உடனே வந்திறலாம். அதுக்கு அப்புறமா காலேஜிக்கு போ. நீ தனியாதான இருப்ப கஷ்டமா இருக்கும்

சமையல் பண்றதுக்கு ஆள் ஏற்பாடு பண்றேன் சரியா ஊருக்கு போயிட்டு வந்து " என்கவும். இப்பவும் தலையசைத்தால்.

ஜெபா " பாவம் அந்த தலை என்ன பாவம் பண்ணிச்சி வலிக்கப்போகுது. இனி தலையாட்டமா வாயில சொல்லுமா " என சிரித்தான்.

எழுந்து ரூமிற்குள் சென்றுவிட்டான்

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தவன் சோபாவை பார்த்து அப்படியே நின்றுவிட்டான்.

அங்கே அவன் கண்டது மோனல் தன் உடலைக்குறுக்கி படுத்து தூங்கிவிட்டாள்.

மெதுவா வந்தவன் இவள எந்த லிஸ்ட்ல சேர்க்க என எண்ணி அவளை அப்படியே மெதுவாக தூக்கினான்.

அரைத்தூக்கத்தில் இருந்தவள் விழித்து பார்த்து கீழ இறங்க முற்பட அதற்குள் அவன் ரூமிற்குள் சென்று அவளை கட்டிலில் கிடத்தியிருந்தான்.

" நீ அங்கயும் நான் இங்கயும் தூங்கறதுக்கா ஹீரோ வேலையெல்லாம் செய்து உன்ன இங்குகொண்டுவந்தேன் ம்ம்.."

அவள் கண்களில் கண்ணீர் அவளையறியாமலே வந்தது.

" ச்ச் எதுக்கு அழற நான் எதுவும் பண்ணமாட்டேன் பேசாம படுடி "என சொன்னவன் கதவைத்திறந்து சென்றுவிட்டான்.

இப்போதுதான் ஐயோ கோவத்துல போறாங்களோ என நினைத்து பின்னாக ஓடிவரவும் அவன் அங்க

சிகரட்ட கையில் வைத்து புகைத்து கொண்டிருந்தான்.

அவளை பார்த்தவன் அவசரமாக அதை கீழே போட்டு மிதித்து விட்டு அவளின் அருகில் வரவும் அவள் முகத்தை சுளித்தாள் சிகரட்டின் வாசனை.

ஆண் வாசனையே அவளுக்கு புதியது இதில் இதுவேறயா என நினைத்தாள்.

அவன் அவசரமாக இது எப்போவாவது தான் வீட்ல சொல்லிறாத குறிப்பா பாப்பா கிட்ட .வா குளிர் இருக்குப் பாரு உள்ள போவோம் என கூறி உள்ளே செல்லவும்

அவனோடு அவளும் சென்றாள்.

ஒரு கட்டிலில் இருவரும் படுத்திருந்தாலும் உடல் உரசாம அவள் படுத்திருந்தாள்.

அவன் விட்டா இப்பவே அவக்கூட குடும்பம் நடத்திடுவான்.

சிறிது நேரம் சென்று அவன் அவளை ஒட்டிக்கொண்டு படுக்க அவள் தள்ளிப்போனாள்.

மறபடியும் அவன் ஒட்டிக்கொள்ள அவள் மறுபடியும் தள்ளிப்போக அது கட்டிலின் முடிவு பகுதி.

இன்னும் அவன் தள்ளிப்படுத்தால் அவள் விழுந்துவிடும் நிலை சட்டென அவள் இடுப்பினூடே கைகொடுத்து பிடித்து தன் பக்கமா திருப்பிக்கொண்டான் அவளை.

அவளுடைய உடல் முழுவதும் அவன் வசம். அவள் பயந்து பார்க்க அவள் இரு கண்களிலும் மெதுவாக முத்தமிட்டான்

அவள் இமைகள் தானாக மூடியது.

அது அவனுக்கு இன்னும் ஆசையைத்தூண்டியது. அவளுடைய கன்னங்களில் முத்தம் வைக்கவும் அவனுடைய மீசை குறுகுறுப்பில் அவள் உடலில் சிலிர்ப்பை உணர்ந்தவள் அதை அவனுக்கும் கடத்தினாள் .

அதை உணர்ந்தவன் முகத்தை தூக்கி அவளைப்பார்ககவும் கண்கள் இரண்டும் கவி பேசியது.

அப்படியே தன்னிலை மறந்து அவளின் சிவந்த அதரங்களை தன் உதடுகளால் முற்றுகையிட்டான்.

அவள் தலை ஒரு கையில் தாங்கி

அவன் உணர்வுகளை இதழ்வழி உணர்த்தினான்.

இப்பொழுதும் அவள் கண்களை காண அது சொன்னது அவளின் ஈடுபாட்டின் அளவையும் அது அவன் மீதான மயக்கத்தையும் வெளிப்படுத்தியது.

இன்னும் அவன் உதடுகளின் பிடியில் அவளிதழ்கள் அவன் கைகள் கீழிறங்கி

அவளின் இடையினை அழுத்திப்பிடித்து

தன் தேடல்களை தொடங்கினான்.

அனிச்சை செயலாக அவள் கரங்கள் அவன் கரங்களை பற்றி தடுத்தன. அது எல்லாம் அவனை தடை செய்யுமா என்ன அவனின் கைகள் செய்த மாயத்தில் மங்கையவள் மயங்கித்தான் போனாள்.

அவளின் இசைவு அவனுக்குமே ஆச்சர்யம்.

மீட்டுக்கொண்டவன் மெதுவாக அவள் முகத்தை ஏறிட்டு பார்த்தவன் அவளின் கிறங்கிய கண்களும் அதில் அவளது காதலையும் தான்.

சிறிது முன்னேறி அவளது காதுகளில் அவன் மீசை முடி உரச " உனக்கு என்ன பிடிக்குமா "

அவள் தலையசைத்து ஆம் என சொல்ல

மறுபடியுமாக கேட்டான்"எவ்வளவு பிடிக்கும் "

" ரெம்ப "

அவன் மீசையின் குறுகுறுப்பில் கண்விழித்தவள் அவனை பார்த்து எப்படி உணர்ந்தாள் என தெரியாது.

சட்டென அவனைத் தள்ளிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.

அவனுக்கு ஏதோ அவன் கையிலிருந்த பிரியாணிய யாரோ பிடிங்கியது போல இருந்தான்.சற்று தெளிந்து அவளை ஒட்டிப்படுத்துக்கொண்டான்.

நல்லத் தூக்கத்தில் புரண்டு படுத்தவன் அவளைக் காணாது எழும்பியவன் அவளைத் தேடவும் கண்ணுக்குதென்படலை.

அவசரமா எழும்பியவன் பார்த்தது கடைசி ஓரமா முக்குல சாய்ஞ்சி உட்கார்ந்து தலைசாய்த்து அனாதரவாக யாருமற்றவள் போல முட்டு மடக்கி அதில் தலைவைத்து தூங்கியிருந்தாள்.

அவள் பக்கத்தில் சென்று அவளை தட்டி எழுப்பி என்னம்மா இது இங்க உட்கார்ந்திருக்க என கேட்கவும்.

நல்ல அழுதிருப்பா போல கண்களும், இமையெல்லாம் வீங்கிருந்தது

அமைதியா இருந்தாள்.அவனுமே யோசித்தான் கொஞ்சம் அப்னார்மலா தெரியுதே என யோசித்தவன்.

சரி வா மேல வந்து படு என அழைத்தான்.மெதுவாக எழும்பியவள் வந்து அமைதியாக படுத்துக்கொண்டாள்.

அவனுக்குத்தான் தூக்கம் போச்சிது

மறுபடியும் எப்போ தூங்கினான் என்று தெரியாது.

வெளியே ஜீப்பின் ஹார்ன் சத்தத்தில் எழும்பியவன் மணி பார்க்க.

அது ஒன்பதைக்காட்டியது பக்கத்தில் பார்த்தான் அவளுமே நல்ல அசதியான உறக்கத்தில்.

வெளியே சென்று டிரைவரிடம் பணம் கொடுத்து டிபனும் பாலும் வாங்கிட்டு வரச்சொன்னவன் பிரஷ்ஸப் ஆகி வந்து பார்த்தான் இன்னும் மோனல் தூங்கிக்கொண்டிருக்க அவளை

மெதுவாகதட்டி எழுப்பியவன் " நேரமாயிட்டு எழும்பி ப்ரஷ்ஷப் ஆகு நான் போகனும்" என சொல்லவும் எழுந்து போனாள்.

ஜெபா நினைத்தான் இப்படி அமைதியா இருந்து போலிஸ்காரனுக்கே தண்ணி காட்டுறா. எப்படிடா சமாளிக்கப்போற கஷ்டம்தான் தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

அவன் மனசுக்குள்ள ஒரு நெருடல் தன்ன அறியாமலே நம்மள பிடிக்கும்னு சொல்லிட்டா. பிறகு இராத்திரி அழுதிட்டிருக்கா என்னவோ பிர்ச்சனையிருக்கு கண்டுபிடிக்கனும் என நினைத்தான்.

அதற்குள்ளாக மோனல் வெளிய வரவும்

அவளைப பார்த்து புன்னகைத்தவன் இங்க வா என அழைத்து அருகில் உட்கார வைத்தவன் " இன்னைக்கு ட்யூட்டிக்கு போகனும் கண்டிப்பா ஏற்கனவே லேட் சாப்பிட்டு கிளம்பிடுவேன் தனியா இருந்துப்பியா "

மோனல் அவனை ஏறிட்டுப்பார்த்து

" கிட்டதட்ட 23 வருசமா தனியாதான் இருக்கேன் "

ஜெபா என்ன உணர்ந்தானோ அவளை தன் மடியில் இருத்திக் கட்டிக்கொண்டான்.

ஒன்றுமே பேசாது இருவரும் அமைதியாக இருக்கவும் வெளியேயிருந்து ட்ரைவர் சாப்பாடும் பாலும் வாங்கி வந்திருந்தான்.

சாப்பாட்ட டேபிள்ள வச்சிட்டு டீ போடப்போனவன் அவகிட்ட கேட்டான்

உன் போன் எங்க என கேட்கவும்

மோனல்"அங்க அத்தை வீட்லயே வச்சிட்டேன். உங்களுக்கு கால் பண்ணிட்டு ஒளிச்சி வச்சது "

இருவரும் சாப்பிட்டு எழ. அவன் வெளியே போக ஆயத்தமானவன் மறுபடியுமாக அவளிடம் சொல்லிட்டு செல்லலாம் என வந்தவனை அவள் பார்த்தது வெறுப்பு பார்வை .

அவன் என்ன பார்வை இது

என பார்க்கவும்

அது உணரந்து அவளாக பேசினாள்

" எனக்கு உங்கள பிடிக்கும் ஆனா இந்த ட்ரஸ் இந்த வேலை அத எனக்கு பிடிக்காது வெறுப்புத்தான் வருது "

கண்களில் கண்ணீருடன் சொன்னாள்.

அவளை இழுத்து அணைத்தான் அவள் திமிறினாள் அப்படியே உதடுக்கொண்டு அவள் இதழ்களுக்குள் புதைந்தவன் அவளை இன்னும் அதிகமாக தனக்குள் அடக்கினான்.

சிறிது நேரங்கழித்து விடுவித்தவன் " என்ன பிடிக்கும் சொன்னல அதுக்குத்தான் இந்த முத்தம்.எனக்கு உன்ன ரெம்ப பிடிக்குங்கறத இப்போதான காமிச்சேன்.

என்னோட வேலை விசயமா உனக்கு எதாவது பிரச்சனை இருந்திச்சின்னா

அத பேசிதீர்த்துக்கலாம். மனசுக்குள்ள எதுவும் வச்சிக்கிட்டு இருக்க கூடாது

"என அவளது கன்னத்தில் தட்டி வர்றேன் நேரமாயிட்டு இங்க குவார்ட்டஸ்னால எதுவும் பயமில்ல வெளிய எங்கயும் போக வேண்டாம் பார்த்துக்க சரியா " என்று விரைந்து சென்றுவிட்டான்.

கடமை அவனது நேரத்தை எடுத்துக்கொண்டது. மதியம் மூன்று மணியளவில் அவன் அம்மா அனுராதா அழைக்கவும் எடுத்து பேசினான்

அப்போதுதான் அவனுக்கே ஞாபகம் வந்தது மோனல் சாப்பிட்ருக்கமாட்டா

ஐயோ இவ்வளவு நேரமாகிட்டே என நினைத்தவன் அவகிட்ட போனும் இல்லையே என்ன பண்ணலாம் என யேசித்தவன். ட்ரைவரிடம் சொல்லி சாப்பாடு வாங்கிக்கொண்டு போகச்சொன்னான்.

அவன் வீட்டிருக்கு வரும்போது மாலை ஏழு மணி வந்தவன் பார்த்தது டேபிளில் சாப்பாடு அப்படியே இருந்தது .

அவள் ஒன்றுமே பேசாமல் டீவி பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஜெபா" என்ன நீ சாப்பிடாம இருந்திருக்க.ஏன் "

மோனல் " தனியா சாப்பிடனும் ஒரு மாதிரி இருந்தது அதுதான் "

ஜெபா " ச்ச்.என்ன இது எப்பவுமே மதியம் எனக்கு வீட்டுக்குவரமுடியாது.

உன்கூட உட்கார்ந்து சாப்பிட எனக்கும் ஆசைதான் முடியல.இப்போ கிளம்பு கொஞ்சம் வெளியே போயிட்டு வருவோம் " என்றவன் பார்மல் ட்ரஸ்க்கு மாறியிருந்தான் அவளும் ஜீன்ஸ் குர்தி போட்டிருந்தாள் ன.சும்மாவே அவளப்பார்த்து ஜொள்ளுவான் இப்போ கேட்கவே வேண்டாம் அவளுக்குத்தான் அது லட்ஜையா இருந்திச்சி.

ஆட்டோ பிடித்து வெளியே சென்றவர்கள் நின்றது ஒரு புகழ் பெற்ற மொபைல் ஷாப்லதான் அவளுக்கு பிடித்தமான மொபைல் வாங்கி பணம் கொடுக்க கார்டை நீட்டியவன் பார்த்தது அவளும் தன்னுடைய கார்டை எடுத்த நீட்டியிருந்தாள்.ஹாஸ்டல்ல இருந்து வரும்போது அவளுடையதையும் எடுத்து வந்திருந்தாள்.

ஜெபாவுக்கு கண்கள் இரண்டும் சிவந்து கோவத்தை உக்கிரமாக வெளிப்படுத்தினான். அவள் ஏதேச்சையா செய்த செயல் அவனை அவ்வளவு கோவப்படுத்தியது.

அவள் தனதை திரும்ப எடுத்துக்கொண்டாள்.மொபைல் வாங்கிகொண்டு உணவருந்தி வீடு வர நேரமாகியது வந்து உடனே இருவரும் அமைதியாகவே படுத்திருந்தனர்.

மோனல் எதிர்பார்த்தாள் அவன் பேசுவான் என அவனிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை திரும்பி பார்த்தாள் அவன் நல்ல உறக்கத்தில்.

அவளும் அவனைப்பார்த்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

தேவைக்கு மீறி எதுவும் இரண்டுபேரும் பேசிக்கொள்ளவில்ல மூன்று நாட்கள் இவ்வாறே சென்றது.

ஊருக்கு சென்று ரிசப்ஷன் முடிந்த அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட ஜெபாவின் அறையில் அவன் படுத்திருக்க பக்கத்தில் மோனல் படுத்திருப்பா என மூளைய கசக்காதிங்க.

மோனல் படுத்திருந்தது அவளின் இரண்டு மாமியார்களின் பாதுகாப்பில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

ஜெபா இந்த பிரச்சனைய எப்படி கையாள என சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அத்தியாயம்-4

மூன்று நாள் கழித்து அவளிடம் நாளைக்கு ஊருக்கு போறோம் உனக்கு என்ன வேணுமோ எடுத்து வை புதுசா எதாவது வாங்கனுமா என கேட்டான்.

மோனல் "ஒன்னும் வேண்டாம் ஹாஸ்டல்ல இருக்கறத கொஞ்சம் எடுத்திட்டு வந்திட்டா பரவாயில்லை"

கல்யாணம் முடிஞ்ச பொண்ணு,முதல் முதல்ல ஊருக்கு போறோம் புதுசா வாங்கலாம் வா கிளம்பு என சொல்லி கூட்டிப்போயி தேவையானதை வாங்கிக்கொண்டு

நள்ளிரவு பிளைட்ல ஏறி விடியலில் வீடு வந்து சேர்ந்தனர்.

மோனல் சிறிது தயங்கினால் ஆனால் அனிஷா அவளை கட்டிப்பிடித்து " நீயே எங்க அண்ணியா வந்ததுல எனக்கு ரெம்ப சந்தோசம். ஜெபாண்ணா ரெம்ப லக்கி காத்திருந்து ஒரு ஏஞ்சல எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டாங்க."

மோனலை இங்க எல்லாருக்கும் தெரியுமாதலால் அவங்களுக்கு எந்த வித்தியாசமும் படவில்லை.

ஜெபாவின் அன்னை அனுராதா,சித்தி சாரதாவிற்கும் பொம்மை மாதிரி அமைதியா இருக்கற அவளை பிடிக்கும். முன்னாடியே அனிஷா அவளை பத்தி பேசி பேசியே பிடிக்க வச்சிருந்தா.

இப்போ மருமகளா வந்ததும் அவ்வளவு பிடிச்சது இரண்டு பேருக்கும்.

அவளோட குடும்ப விசயம் எல்லாம் ஓரளவுக்கு தெரியும் அதுனால யாரும் எதுவுமே அவகிட்ட கேட்கவும் இல்ல அதை அவகிட்ட காண்பிக்கவும் இல்ல.

அவளுக்கு பிடிச்ச சமையல்தான் இருந்தது.

எல்லாரும் டைனிங்க் டேபிள்ல குடும்பாமா உட்கார்ந்து சாப்பிடும் போது அனிஷா என்னமா மருகளுக்கு பிடிச்சது எல்லாம் தட்டுல இருக்கு. என்ன மறந்திட்டீங்க போல எனக்கேட்கவும்.

சாரதா அத உன் மாமியார் வீட்ல போயிக்கேளு என பதில் குடுத்தார்.

ஜெபா அவள் பக்கத்தில் உட்கார்ந்து உனக்கு என்ன வேணும்டா சொல்லு நான் ஆர்டர் செய்து வாங்கித்தர்றேன் என சொல்லவும் குடும்பம் மொத்தமும் அவனைத்தான் முறைச்சி பார்த்திட்டிருந்திச்சு.

இதைப்பார்த்தவன் வம்பா வாயக்குடுத்திட்டமோ என நினைத்து மீ எஷ்கேப்னு கிளம்பிட்டான்.

மோனலுக்கு இங்க ரெம்ப பிடிச்சது. அவளுடைய குடும்பம் அத நினைக்கும்போது எங்க போனாலும் எல்லாரும் ஒதுக்கி வச்சது தான் நியாபகத்திற்கு வந்தது.

அனிஷா மோனலை தனியாக அழைத்தவள் "அண்ணாவ தப்பா நினைக்கதப்பா நீ கல்யாணத்த நிறுத்ததான் உதவிக்கேட்ட எனக்கு அண்ணாவோட மனசு தெரியும்.

இது இல்லண்ணா கண்டிப்பா உங்கிட்ட லவ்வ சொல்லி கல்யாணம் அது எப்போ நடக்குமோ.அதான் அவன பேசி சரிகட்டி அங்க அனுப்பி வச்சேன் "

மோனல் " எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பண்ணா எப்படி பா "

அனிஷா " உன்ன பத்தி தெரிஞ்சதுனாலதான் இதுக்கு ஏற்பாடு செய்தேன். வாழ்க்கை முழுசும் தனியா இருப்பியா உன்ன நேசிக்கற ஒருத்தங்கதான் உன்ன புரிஞ்சிக்க முடியும்.அண்ணா பார்க்கதான் அப்படி

உறவுகளுக்கு ஒன்னுனா அவ்வளவுதான் துடிச்சிடுவார்.ரெம்ப பாசம் வைப்பாங்க ஆனா வெளிய தெரியாது "

மோனல் " தெரியும் அதனாலதான்டா யோசிக்குறேன். நா எப்போம் சரியாகி.

போலிஸ்னாலே ச்ச்ச் விடு.அந்த ஆளு நியாபகம்தான் வருது "

அனிஷா " அவருனாலதான் இப்படியொரு தேவதைப்பொண்ணு எனக்கு பிரண்ட்டா எங்கவீட்டு மருமகளா வந்திருக்கா அப்படி யோசி "

மோனல் " அம்மா இல்லாமா போனதுக்கும் அவருதான் காரணம் அதையும் நீ யோசி "

அதற்குள் ஜெபா அந்தபக்கம் எட்டிப்பார்த்து என்ன பாப்பா உன் பிரண்ட் என்ன சொல்றா. என் மேல எதுவும் கம்ப்ளயின்ட்டா எனக்கேட்டு அவங்க பேச்சை மாற்றியிருந்தான் அவங்க பேசறது கடைசியில கேட்டுட்டு தான் வந்தான்.

அப்படியே ரிசப்பஷனுக்கு என்ன பண்ணிருக்காங்க என பேச்சை ஆரம்பித்து அனிஷாவிற்கு கண்ணை காண்பித்தான்.

அவளும் புரிந்துக்கொண்டு மோனல் நான் கீழப்போறேன் நீங்க பேசிட்டிருங்க என போய்விட்டாள்.

என்ன எங்க பாப்பாகிட்ட என்னையபத்தி புகாரா.

மோனல்" ஹான் எதுக்கு புகாரு "

மெதுவா போலாஸீக்கே புகார் குடுக்கமுடியுமா என சொல்லவும் அவனுக்கே பாம்பு செவி கேட்காம இருக்குமா.

கேட்டவன் அவளை தன் பக்கமா இழுத்து கைப்பிடி செவரில் சாய்த்து நிறுத்தியவன் " நீங்க இரண்டுபேரும் பிரண்ட்ஸ்னாலும் இந்த புருஷனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கனும் சரியா என்ன விசயமானாலும் எங்கிட்ட சொல்லலாம்

நான் நல்ல ஃபிரண்டும் கூட...ம்ம் "

மோனல " ம்ம்ம் "

ஜெபா " என்ன ம்ம்ம் உம்மா வேணுமா "

வாய்பிளந்த மோனல் " ஹான் வேண்டாம் " என அவசர அவசரமாக வேண்டாம் என்ற உதடுகளுக்கு ஒத்தடம் கொடுத்து எடுத்தான். நான் கீழப்போறேன் என ஓடிச்சென்றுவிட்டாள்.

அவள் ரூமிற்குள் சென்றவள் யோசித்தது இந்த சந்தோசத்திற்கும் இந்த கல்யாணத்திற்கும் நான் தகுதியானவளா என சிந்தித்தாள்.

என் பின்னனி தெரிஞ்சா எல்லாரும் எப்படி எடுத்துப்பாங்க குறிப்பா ஜெபா என பல யோசனையில் படுத்திருந்தாள்.

மூன்று மணியளவில் அழகு நிலையத்திலிருந்து வந்திருந்தனர்

அந்தப்பெண் மோனலைப்பார்த்ததும்

திருதிரு என முழிக்கவும் அனிஷா என்னாச்சி மேம் இப்படி பார்த்திட்டு நிக்கறீங்க எனக்கேட்கவும்.

நாங்க நம்ம ஊரு பொண்ணு என நினைச்சோம் இவங்களுக்கு ஹேர்ஸ்டைல் மட்டும் செய்துவிடட்டுமா.

மோனல் பரவாயில்லை லைட்டா டச்சப் பண்ணிடுங்க ஃப்ரீ ஹேர் விடுறமாதிரி பண்ணிடுங்க என அவளும் சொல்ல எல்லாம் முடித்து வெளிய வந்தவளை பார்த்த குடும்பத்தினருக்கு அவ்வளவு மிகழ்ச்சி.

அழகா சிலைமாதிரி இருந்தாள் ஜெபா நல்ல டார்க்ப்ளு மிக்ஸ் கோட்டு போட்டு வெளியே வந்தவன் மோனலைப் பார்த்து நின்றவன் அப்படியொரு பார்வை அவளை நோக்கி.

அனிஷாதான் சிரிச்சா " அண்ணா எல்லாரும் உங்களத்தான் பாக்குறாங்க "

ஜெபா தன் பிடதியில் தட்டி தன்னை சமன் செய்து வெட்கப்பட்டான்.

ஹப்பா என்ன ஒரு காட்சி டெரர் போலிஸ் அனிஷா-அர்ஷாத் காதலின் மெயின் வில்லன் ஒரு பெண்ணை பிடித்து இப்படி விழுவான்னு யாரும் நினைச்சிக்கூட பார்க்கல.

அனிஷா" பார்த்தியா உன் சாபம் எங்கண்ணாக்கு பலிச்சிட்டு "

அனிஷாவின் கனவன் அர்ஷாத் " ஆமா நம்மள பிரிச்சி வச்சதுக்கு அவரும் காதல்னா என்னனு தெரிஞ்சி ஒரு பொண்ணுகிட்ட தலைக்குப்பற விழனும்னு சொன்னேன். பார்த்த இவரு டபுள் பல்டி அடிச்சி விழுந்திருப்பாரு என கனவுலக்கூட நினைக்க " என சொல்ல மொத்தக்குடும்பத்திற்கும் சுத்திதான் போடனும் அவ்வளவு சந்தோசம் அவங்களுக்கு.

ஜெபா வந்தவன் மோனலையும் இழுத்து அவங்க பெற்றோர் ஆனந்தராஜ்-அனுராதா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்

அடுத்து சித்தி சித்தப்பாவாகிய சாரதா-ஜெயராஜ் அவர்களிடமும் ஆசிப்பெற்று மண்டபம் சென்றனர்.

நிறைய சொந்தங்கள் வந்திருந்தனர்.

ஜெபானந்த்IPS

மோனல் ME

என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஃப்ளாக்ஸ் வைத்திருந்தனர் .

மண்டபம் உள்ளே செல்லும் போதே பார்த்தாள் அதைப்பார்த்து அவளின் முகத்தில் வர்ணஜாலம்.

ரிசப்ஷன் தொடங்கும் போது நல்லாத்தான் இருந்தாள். போகப்போக அவனின் சொந்தங்களையும் நட்புக்களையும் என சுற்றம் அனைத்தையும் பார்த்து மனதிற்குள் அழுதுக்கொண்டிருந்தாள்.

அவளிற்கு என்று யாருமேயில்லை அதைவிட அவளின் பின்னனித் தெரியும்போது இந்தக் குடும்பத்திற்கும் அவனுக்குமே தான் வேண்டாதவளா போயிடுவனோ என தானே ஒரு கற்பனை செய்துக்கொண்டிருந்தாள்.

பக்கத்தில் நின்றிருந்தவளின் முகமாற்றத்தை கண்டுக்கொண்டவன் கேட்டான். எங்க சும்மாவே பேசமாட்டாள் இப்போவா பேசிடுவா அமைதியாக நின்றாள். மெதுவாக தன் தங்கைய அழைத்து பேசினான்.

அனிஷா அவளருகில் வந்து " என்னப்பா இது இப்பவும் மனசப்போட்டுக் குழப்பிக்கிட்டு.சந்தோசமா மனசவச்சிக்கோ இதுதான் உன் குடும்பம் அதமட்டும மனசுல நல்ல பதியவை எது வந்தாலும் நான் உன்கூட இருக்கேன் புரியுதா.வேண்டாத சிந்தனையெல்லாம் தூக்கி தூரப்போடு " என்று கடிந்தவள் அவளுக்கு குடிக்க ஜூஸ் கொண்டுவந்து கொடுத்து சமாதானப்படுத்தினாள்.

அர்ஷாத் அனிஷாவிடம் " எப்பா என்னா ஒரு பாசம்டா உங்க அண்ணனுக்கு பொண்டாட்டி முகம் வாடுனாக்கூட தாங்க முடியல. ஐயோ எப்படி இருந்த எங்க அத்தான் எப்படி ஆகிட்டாரு " என கேலி செய்து கொஞ்சம் அந்த சூழ்நிலையை மாற்றினான்.எல்லாம் நல்லபடியாக முடிந்து வீட்டிற்கு வந்ததும்.

மோனலை அனுராதா அழைத்து அங்கு வேறு உடைகள் கொடுத்து குளித்து மாற்றி வரச்சொல்ல அவளுக்கு புரிந்தது. அவளுக்கு இரு மனது வேணும்னு ஒன்னு வேண்டாம்னு ஒன்னு கடைசியில வேண்டாம் இது நமக்கு நிலைக்காத சொந்தம் என மனதில் உறுதிக்கொண்டாள்.

உடை மாற்றி வரவும் அனிஷாதான் அவள் காதில் ஏதோ சொல்லி அனுப்பவும் இவள் தலையதலைய ஆட்டி உள்ளே சென்றாள்.

ஜெபா உள்ளதான் இருந்தான். கட்டிலில்

சாய்ந்து படுத்திருந்தான் இவள் உள்ளே வரவும் அவன் கண்ணுல அப்படி ஒரு பிரகாசம்.ஹேய் வா வா இது என்ன புதுசா வர்றமாதிரி தயங்குற அங்க மூனு நாளா ஒரே ரூம்லதான் படுத்திருந்தோம் இது சும்மா பார்மலிடீஸ்க்கு இந்த செட்டிங்க்.

சிரித்துக்கொண்டே அவள இழுத்து கட்டிலில் உட்கார வைத்தான்.

பின் கண்ணெடுக்காமல் அவன் அவளைத்தான் பார்த்துகொண்டிருந்தான் மெல்லிய புடைவை நகை எதுவும் இல்லாம தாலிமட்டும் அவள் கழுத்தில் ரசித்தவன் ருசிக்க என கிட்ட நெருங்கியவன் அவள் கையை பிடித்து வளையல்களை நெருடிக்கொண்டே இருந்தவன் .

ஜெபா" மோனல் உனக்கு இங்க எல்லாம் பிடிச்சிருக்கா "

" ம்ம் "

ஜெபா" என்ன "

மோனல்" பிடிக்கல"

ஜெபா அதிர்ந்தான் கண்கள் இடுங்க பார்த்தான் அவளை.

மோனல்" எனக்கு போலிஸ் பிடிக்காது "

ஜெபா " இதுதான் சொல்லிட்டியே.இன்னும் கொஞ்ச நாள்ல பிடிக்கவச்சிரலாம் என கண்ணடித்தான் "

மோனல் " நான் மோசமான பொண்ணு.உங்களுக்கு வேண்டாம் "

ஜெபாவின் உள்ளிருந்த போலிஸ்காரான் கொஞ்சம் உஷாரானான் மனசுக்குள்ள என்னத்தையோ வச்சிட்டு என்னமோ பேசுறா.இவ கண்ணு ஒன்னு பேசுது இவ வாய் ஒன்னு சொல்லுது.

" மோசமான பொண்ணுனா எந்த அர்த்தத்துல "

மோனல்"அது அது" அப்படிப்பட்ட வார்தைகளை சொல்றதுக்ககே அழுதாள்.

ஜெபா விடாமல்"அது "

மோனல்" அது நான் கால்கேர்ள் மாதிரி " என சொல்லி முடிக்கல.

மோனல் கண்ணுல மின்னல் பறக்க காதுல கொய்ய்ய்ய்ய் என சத்தம் மலங்க மலங்க தன் கன்னத்தில் கைவைத்து பார்த்திருந்தாள்.

ஆம் ஜெபா அவ சொல்ல வர்றது புரிந்தவுடனே விட்டான் ஒரு அறை.

அவள் இருந்த நிலையை பார்த்தவன் அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்தவன் " முட்டாளாடி நீ

உன் மனசுல என்னவோ வச்சிட்டு விலகிப்போற.என்ன விட்டு போறதக்கு இப்படிபட்டதையா சொல்லுவ " என பேசிக்கொண்டே அவள் முகத்தை பார்க்க

அவள் கண் அப்படியே மெதுவாக மூடியது.

ஜெபா ஒரு நிமிடத்தில் பயந்தே போனான் அவளை முழுவதுமாக ஆராய மூச்சி சீராக வந்தது. இருந்தும் பயம் அவங்க அண்ணன் ஜீவா டாக்டர். அடுத்த ரூம்னாலும் இப்போ அங்க போகமுடியாது.

எனவே ஜீவாவுக்கு போனில் அழைத்து தகவல் சொல்லவும் அவன் அவசரமாக அவன் ரூமிலிருந்த இங்க வரவும் சாரதா பார்த்துக்கொண்டார்.

என்னடா அங்க போற என கேட்கவும் எல்லாரும் விழித்தாகிற்று ஜெபாவின் ரூமிற்குள் நுழைந்தவன் அவளை பரிசோதித்து ஒன்னும் பிரச்சனையில்லை என சொல்லவும்தான் ஜெபாவிற்கு போன உயிர் திரும்ப வந்தது.

மோனல் விழிப்பதற்காக காத்திருந்து அவளை அனுராதா தன்னுடைய ரூமில் படுக்கவைத்துக்கெண்டு வெளிய வந்தார்.

எல்லாரும் ஹால்லதான் இருந்தனர்.

அனுராதா "பொண்டாட்டிய அடிக்கற பழக்கம் எப்படி வந்திச்சி நம்ம வீட்ல அப்படி யாரும் செய்ததில்லை.

அவ என்ன பண்ணிருந்தாலும் ,என்ன பிரச்சனைனாலும் நீ கையநீட்டினது தப்பு

உன்கிட்ட இருந்து இத நான் எதிரபார்க்கல நம்ம மருமகன் இப்படி செய்தா விட்ருவியா நீ .என்ன ஆட்டம் போட்ட உங்க வீட்டு பிள்ளைனா துடிக்கும் அடுத்தவீட்டுப்பிள்ளைனா வலிக்காது அப்படித்தான."

" இனி எங்கிட்ட பேசாத ஜெபா என அழுதுவிட்டார்.அதுவே யாருமில்லாத பிள்ளை அதப்போயி இப்படி அடிச்சிருக்கான்.பாவம் போல படுத்திருக்கு." என சொல்லி உள்ளே சென்று அமர்ந்துக் கொண்டார்.

இதையெல்லாம் உள்ளிருந்துக் கேட்டுக் கொண்டிருந்த மோனல் இப்படி ஒரு நல்லக்குடும்பம் கிடைக்கத்தான் கடவுள் எனக்கு இவ்வளவு கஷ்டம் தந்தாரோ என நினைத்தவள் அடுத்து என்ன செய்ய என ஓடவில்லை கண்களை மூடி படுத்திருந்தாள்.அவங்கள காயப்படுத்திட்டமே என எண்ணிக்கொண்டே.

இங்க ஜெபாவிற்கு ஆளாளுக்கு விசாரனை புத்திமதி நொந்துபோயிட்டான்.

அவன் படுக்கையில் படுத்திருந்தவன் சிந்தித்துக்கொண்டே இருந்தான் இவ பிரச்சனைய எப்படி கையால என யோசித்தவன் ஜீவாவிடம் கேட்கனும் என முடிவு செய்து தூங்கிட்டான்.

அனுராதா நல்ல துணியெடுத்து தண்ணியில நனைத்து மோனலின் அடிபட்ட கன்னத்தில்

தடவிக்கொண்டிருந்தார்.

நிமிஷத்திற்கு ஒரு முறை கேட்டார் வலிக்குதாடா என. அவள் கண்களில் கண்ணீர் வடிந்துக்கொண்டிருந்தது.

திரும்பவும் கேட்டார் வலிக்குதாடா அவள் இல்லை என தலையசைத்து " அம்மா நியாபகம் "என சொல்லியவள் அனுராதா மடியில் படுத்துக்கொண்டாள்.அப்படியே உறங்கிப்போனாள்.

ஜெபா அடுத்த நாள் காலை எழுந்தவன்

நேராக சென்றது ஜீவாவிடம்தான் அவனிடம் கொஞ்சம் பேசியவன் குளித்து கிளம்பி வரவும் அம்மாவின் முகம் பார்த்தான் அவர் ஒன்றுமே பேசவில்லை.

இப்போ யாரை சமாளிக்கனு அவனுக்குத்தெரியல கல்யாணம் முடுஞ்சி ஐஞ்சு நாள் ஆகல அதுக்குள்ளாக இவ்வளவா என நொந்தே போனான்.

சாரதாதான் மருமக இன்னும் எழும்பலடா தூங்குறா என தகவல் சொன்னார்.

" அவளை எழுப்பி ரெடியாகச் சொல்லுங்க

முக்கியமான ஒரு இடம்வரை போகனும் "

சரி என அவளை தட்டி எழுப்பினார் இன்னும் கன்னத்தில் லேசாக விரல்களின் தடம் இருந்தது தடவிக்கொடுத்த சாரதா " சீக்கிரம் கிளம்புவியாம் ஜெபா எங்கயோ கூட்டிட்டு போறானாம் " என சொல்லவும் தலையசைத்து .

தனது ரூமிற்குள் சென்று தயாரானவள்

இப்போ கொஞ்சம் நிதானமா சிந்திச்சா.

அதான இந்த அடியே முன்னாடியே தந்திருக்கனும்.உனக்கு அடி வாங்கினாதான் மூளையும் மனசும் சரியா வேலைசெய்து.

அங்கு வந்தவன் அவள் கன்னத்தைதான் பார்த்தான் லேசாக தடவி " சாரி "என சொல்லவும் அவள் கண்களும் கலங்கியது அவனதும்.

மெதுவாக அவள் கன்னத்தில் இதழ் பதித்து மீண்டும் " மன்னிச்சிரு டி"

என அவள் கண் பார்த்து நின்றான்.

பின் பெரியவர்களிடம் வெளியபோறதாக சொல்லி அழைத்து வந்தவன் இப்போது இருப்பது அந்த ஏரியாவின் புகழ்பெற்ற சைக்கியார்டிஸ்ட்( மனோதத்துவ நிபணர்)அவரின் வீட்டில்.ஜீவாதான் விவரம் சொல்லி கேட்டிருந்தான் ..

அத்தியாயம்-5

காலையிலயே கிளம்பி ஜெபாவும் மோனலும் கீழே வரவும் அவன் பைக்கை எடுத்து வெளியே நிறுத்தினான்.

இதைப்பார்த்த மோனல் அப்படியே நிற்கவும் அவளுக்காக காத்திருந்தவன் அவள் வண்டியில ஏறாம இருக்கவும் என்ன எனக்கேட்டான்.

"வண்டியில நான் போனதே இல்ல "

ஜெபா"எ ன்ன! "இப்போ என்ன பண்ண பழகிக்கோ.

அதற்குள்ளாக இவங்க போயிட்டாங்கலா எனப்பார்க்க வந்த சாரதா " என்ன இன்னும் போகாம என்ன செய்யுறீங்க "

என்க.

மோனல்" மா நான் வண்டியில போனதே இல்லை பயமா இருக்கு "

சாரதாஹ" இதுல என்ன இருக்கு இனி பழகிக்கோ.வா நான் உன்ன பிடிச்சிக்குறேன் ஏறி உட்காரு " எனச்சொல்லி அவளை பிடித்துக்கொண்டார்.

இரண்டுபக்கமும் கால் போட்டு ஏறி இருந்தவள பார்த்து பிடிச்சுக்கோ என சொல்லவும் அவள் எங்க பிடிக்க என திணற அவள் கைகைள் இரண்டையும் எடுத்து தன் வயிற்றை சுற்றி போட்டுக்கொண்டான்.

" ம்ம்.கிளம்புறேன் இன்னும் இறுக்கமா பிடி.இலல்னா நீ விழுந்திரபோற "

வண்டிய எடுத்து கிளம்பவும் மோனலுக்கு அப்படியொரு பயம்.கண்ணை முடிக்கொண்டு அவனை இன்னும் ஒட்டிக்கொண்டாள்.

ஜெபாவிற்குத்தான் மிதக்குற ஃபீலிங்க்.

பின்ன காதல் மனைவி பின்னாடி அதுவும் அவள் தேகம் முழுவதும் அவனின் முதுகோடு பசைபோட்டு ஒட்டியதுபோல எப்படியிருக்கும்

அவள் அங்கங்கள் அனைத்தும் அவனின் முதுகில் என்னென்னவோ மாயம் செய்தது.

ஜெபா மயங்கித்தான் போனான்.

ஒரு அரைமணி நேரப்பயணம்.அது அவனுக்கு பெண்ணுடலின் தீண்டுதலினால் சொர்க்கத்தை காட்டியது.

அவர்கள் செல்லவேண்டிய வீடு வந்ததும்

மெதுவாக இறங்கியவன் கண்டது பயந்து முகமெல்லாம் சிவந்திருந்த மோனலைத்தான்.

ஜெபா" என்னாச்சி பயந்திட்டியா "

மோனல்" ம்ம் ரெம்ப "

ஜெபா " ஒன்னுமில்லமா முதல் நாளுல அப்படித்தான் இருக்கும் அப்புறம் நீயே பைக்ல போவமானு கேட்ப பாரு "

அப்படியே பேசியபடியே உள்ளே செல்ல அங்கு 45 வயதிற்கு மேலான ஒரு பெண் இவர்களை வரவேற்று அழைத்து சென்றார் .

முதற்கட்ட விருந்து உபசரனைகள் முடிந்து பேசிக்கொண்டிருக்கவும்.

அந்த பெண் "க்ஷஜெபா உங்க மனைவி ரெம்ப அழகா சாந்தமா இருக்காங்க "

மோனல் வெட்கப்பட்டு சிரித்தாள்

அந்த பெண் அவளிடம் " ஹாய் மோனல் என்னோட பெயர் பாரதி உங்க பெரியத்தான் ஜீவா இரண்டுபேரும் ஒரே ஆஸ்பத்திரிலதான் வேலைபாக்குறோம் நாங்க நல்ல பிரண்ட்ஸ். அதுதான் நீங்க ஊருக்கு போக முன்பே விருந்துக்கு கூப்பிட்டோம்.

வாங்க நம்ம இரண்டுபேரும் வீட சுத்தி பார்ப்போம்.தோட்டம்லா போட்டிருக்கேன்

என மோனலை அழைத்துக்கொண்டு வெளியே தோட்டத்திற்கு சென்றார்.

ஜெபா அவரின் வீட்டுக்காரரோடு பேசிக்கொண்டிருந்தான்

ஒரு மணிநேரம் கழித்து இருவரும் சிரிப்புடன் வரவும் ஜெபாவின் கண்களில் எதிர்பார்ப்பு பாரதி அதைக்கண்டு கொண்டார்.

பாரதி மோனலை அவரது பிள்ளைகளின் ரூமில் அவர்களோட பேசவிட்டு ஜெபாவை தனியாக அழைத்து பேசினார்.

பாரதி" ஜெபா உங்க மனைவி அருமையான பொண்ணு அவகிடைக்க நீங்க குடுத்தி வச்சிருக்கனும்.

ஆனா ரெம்ப கஷ்டப்பட்டிருக்காங்க லைஃப்ல .

ஒரு மூனுவயசு குழந்தை திருவிழாவில் தன் சொந்தங்களை தொலைத்துவிட்டு எப்படி தேடி அலையுமோ அதே நிலைதான் உங்க மனைவியின் நிலை.

உங்கள ஆறு வருசமா காதலிக்குறாங்க"

ஜெபா" என்ன டாக்டர் சொல்றீங்க எங்க அனிஷா பாப்பா பிரச்சனையில தான் நான் முதல் தடவையா அவள பார்த்தேன் கிட்டதட்ட ஒரு வருசம் இருக்கும்.அது எப்படி இத்தனை வருசம் " என ஆச்சர்யம் பிளஸ் குழப்பத்தோடு கேட்டான்.

பாரதி" அது தெரியல உங்கள அப்படி ரசனையோட காதலிக்குறாங்க.

அதைவிட அவங்க குடும்ப பின்னனில ஏதோ இருக்கு.அது தெரிஞ்சா நீங்க என்ன செய்வீங்க ,விட்ருவேங்களோனு பயமிருக்கு. அதனாலதான் உங்க கிட்டயிருந்து விலகுறாங்க "

ஜெபா" என்ன இருந்தாலும் அவள விட்டுக்கொடுக்கமாட்டேன்.விட்டும் போகமாட்டேன் அவதான் என் வாழ்க்கையே அவள எப்படி புரிஞ்சிக்காம போவேன்"

பாரதி " அதுதான் நானும் சொல்றேன் அந்த நம்மபிக்கைய அவங்களுக்கு கொடுங்க வர்த்தையால இல்ல உங்க ஒவ்வொரு செயலிலும் காமிங்க.

அவளோட மனக்காயங்கள் ரெம்ப ஆழமானது.அந்த காயத்தை ஆற்றி அத நிரப்ப உங்க அன்பால மட்டுந்தான் முடியும்."

என்ன பண்ணுனீங்க உங்களவிட உங்க

குடும்பத்தை பத்தி பேசம்போது மோனலுக்கு அவ்வளவு சந்தோசம் முகத்துல பார்த்தேன்.

ஜெபா" பின்ன என்ன விட்டுட்டு எங்க அம்மாக்கள் இரண்டு பேரக்கூடவும் படுத்திருக்கா பாருங்க அதுல இருந்தே தெரியலையா என வேடிக்கையா பேசி சிரித்தான் "

பாரதி இப்போ கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் பேசினார் " உங்களுக்கு அவ தகுதியில்லாதவளா நினைச்சிட்டிருக்கா

இப்படியே விட்டா உங்ககிட்ட இருந்து பிரியறதுக்கு எந்த எக்ஸ்ட்ரீம் வரைக்கும் போகலாம்.அது ஒருவேளை தற்கொலையாக கூட இருக்கலாம்."

ஜெபா சட்டென பதறி சேரிலிருந்து எழுந்தவன் தடுமாறிட்டான்.அந்த சத்தத்துல மோனல் பதறி ஓடி வந்து அவன் கையை பிடித்தாள்.

சுதாரித்தவன் ஒன்னுமில்ல சேரு கொஞ்சம் வழுக்கிட்டு வேற எதுவும் இல்ல. நீ போ குட்டீஸ் கூட இரு ஒரு கேஸ் விசயமா பேசிக்கிட்டு வர்றேன் என அவளை அனுப்பி வைத்தான்.

பாரதி" என்ன சார் நீங்க இப்படி பயப்படலாமா உங்கிட்ட சூழ்நிலைய சொன்னேன்.

அவள கொஞ்சம் தனிமையில்லாம பார்த்துக்கோங்க.ரெம்ப பிரச்சனைனா ஹிப்னாடிசம் பண்ணி பார்த்திரலாம் .

இப்போ அவ நார்மல்தான்.எப்படி உங்க மனைவியா மாத்தமுடியுமோ பாருங்க.அவளுக்கு ஒரு ரெஸ்பான்ஸ் குடுங்க வாழ்க்கையில அது உங்க குழந்தையா இருந்தா ரெம்ப சந்தோசம்.என்னோட வாழ்த்துகள் "

அங்கிருந்து சிறிது பலகாரம் சாப்பிட்டே கிளம்பினர்.இங்கு எதுக்கு வந்தோம் என அவளுக்கு தெரியாது.பாரதியின் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.

அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன் மோனலிடம் கேட்டான் பீச் போவோமா. சரி என சந்தோசமாக தலையாட்டினாள் பாரதியிடம் உரையாடியது அவளுக்கு எதோ பாரத்தை இறக்கி வைத்தமாதிரி மனசு நல்லாயிருந்தது "

திரும்பவும் பைக்ல பயணம் ஜெபா சொன்னான் "ஹபயமாயிருந்தா என்ன நல்லக்கட்டிபிடிச்சிக்கோ " எனக் கூறியவன் பைக்கை ஓட்ட ஆரம்பித்தான்.

மறுபடியும் ஒரு கிறக்கமான பயணம் போலிஸ்காரனுக்கு.

கடற்கரை சென்று அவளை அலையில் கால் நனைத்து விளையாட சொல்ல அவள் பயந்து அவன் கைகளை பிடித்து அவனில் ஒளிந்து நின்றாள்.

" மும்பைலதான் பிறந்தேன்.ஆனா நான் இதுவரைக்கும் கடல் பக்கம் போனதேயில்ல.அதவிட யாரும் கூட்டிட்டும் போனதும் இல்லை "என தனது தலைசாய்த்து சொன்னதும் அப்படியே உருகிப்போனான் அவளது காதலன்.

அவனுக்கு எல்லாம் புதியதாய் தெரிந்தது.அழாகனதொரு நேரம் அவர்களுக்கு அது.

ஜெபா அவளை மட்டும்தான் பார்த்திருந்தான்.திடீரென அவள் அவனைப் பார்க்க இருவரின் விழிகளும் பேசிய மொழிகள் ஆயிரம் .

இருவரின் பார்வையும் ஒருவரின் ஒருவர் உயிர்தீண்டிச்சென்றது. அதுவே அவர்களின் உடல்களுக்கு ஒரு இளக்கத்தை கொண்டு வந்திருந்து.

மோனலின் பெண்மை அவனின் உடலில் படுமாறு நின்றிருந்தாள் அவள்

மூச்சிவிடும் போது ஒவ்வொருதடவையும் ஏறியிறங்கும் பெண்மை அவனை பதமாய் இம்சித்தது.

ஜெபா இப்போது அவளின் இடுப்பில் கரம்கோர்த்து தன்னோடு இன்னுமாக சேர்த்து நின்றான்.

அவனின் மொபைலின் சத்தத்தில் தான் உணர்வு வந்தது இருவருக்கும். எடுத்து பேசிவிட்டு " வா வீட்ல எல்லாரும் தேடுறாங்க போகலாம் "

அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேரவும்தான் பசியை உணர்ந்தனர்.

சாப்பிடும் போதும் இருவருக்கும் மோனநிலையே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

சாரதா கேட்டார் " எப்போ டா ஊருக்கு போறீங்க "என

ஜெபா" சாரும்மா இன்னைக்கு நைட் கிளம்பிடுவேன். அப்போதான் அங்க போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு டூயூட்டிக்கு போக முடியும் எதுக்குமா கேட்டீங்க"

சாரதா" அக்கா கேட்க சொன்னா எதாவது பேக்பண்ணி வைப்பா அதுக்கா இருக்கும்.சரி இப்போ போயி தூங்குங்க "

என்று அவர் சென்றுவிட்டார்.

தங்களுடைய அறைக்கு வந்ததும் மோனல் கொஞ்சம் தயங்கி தயங்கி நின்றாள்.ஜெபா அதைப்பார்த்து எதுவுமே சொல்லாமல் தன்னுடைய ட்ரஸ்ஸ கழட்டி மாத்திக்கொண்டிருந்தான் அவளுக்கு வெட்கம்வேறு தலையை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளின் அருகில் வந்தமர்ந்து " மோனல்" என அவள் பெயருக்கு வலிக்காது அழைத்தான்.

மோனலும் முனங்கினாள் " ம்ம்ம்ம் "

அந்த ஒற்றைச்சொல்லே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

அவளைத்தூக்கி தன மடியில் இருத்திக்கொண்டு கட்டிலில் சாய்ந்தான்.

" ட்ரஸ் மாத்தலையா "

இல்லையென தலையாட்டலில் பதில்

அவளிடமிருந்து.

" நான் மாத்திவிடட்டுமா "

அமைதியாக இருந்தாள்.

" அப்போ மௌனம் சம்மதம்னு எடுத்துப்பேன் பரவாயில்லையா"

இதற்கும் அமைதியே பதில்

"அப்போ சரி நானே மாத்திவிடுறேன் " என கூறியவன் அவள் சுடிதாரின் மேலாடைய சட்டென கழட்டியிருந்தான்.

அவள் அதை எதிர் பார்க்கவில்லைபோல கைகளை தனது உடையாக மாற்றியிருந்தாள்.அவளின் ஆடையாக அவன் மாறத்துடித்துக் கொண்டிருந்தான்.

மெதுவாக அவளின் கைகளை விலக்க.

அது அவளுக்கு அப்படியொரு வெட்கத்தையும் நாணத்தையும் கொடுத்தது அவளுக்கு.

அவளை சரித்து அவளருகில் படுத்துக்கொண்டான் அவளது நாடியை பிடித்து தூக்கி அவள் கண்களில் முத்தம் வைத்தான்.

அவள் கிறங்கவும் முகத்தில் அவன் உதட்டு எச்சிலால் அர்ச்சித்துக்கொண்டிருந்தான்.

அவளின் சிவந்த ரோஸ்பட் நிற அதரங்களை முத்தமிட்டு முத்தமிட்டு செவ்வானமாக மாற்றிக்கொண்டிருந்தான்

தன் கைகளால் மெதுவாக அவளது இதழ் வருடி தன் முரட்டு உதடுகளால் ஒத்தடம் கொடுத்தவன் அது கடித்து சுவைக்க மோனல் உடலில் ரசாயன மாற்றங்கள் அவளை துடிக்க வைத்தது.

சிறிது நேரங்கழித்து இதழ்களை விட்டவன்.தன் இளமை விரத்தை முடிக்க ஆயத்தமானான்.

அவள் மேல் படர்ந்தவன் தன் கைகளின் விரல்களால் அவள் உடலில் ஓவியம் வரைந்துக்கொண்டிருந்தான் அதன் கணம் தாளாது மோனலின் உடல் நிறம் இரத்தமாக மாறியது.

இதுதான் உயிரின் இணை விளையாட்டோ என மோனல் நினைத்து

அவன் கரங்கள் தன் மேனியில் நடமாட சுதந்திரம் கொடுத்தவள் மயங்கி கிறங்கி அவனுக்கும் தன் உணர்வகளை கடத்தி அவனை அவளின்பால் பித்தங்கொள்ள செய்தாள்.

பெண்ணவளின் அங்கங்கள் அவனுக்கு கொடுத்த மயக்கத்தில் இன்னும் இன்னுமாக முன்னேறினான் .

திடீரென மோனலின் மூளைக்குள் வந்து சென்ற நியபகத்தின் அடையாளமாக அவள் உடல் விரைத்து அவனுக்கு எதிர்ப்பு காட்டியது பெண்ணவள் மூச்சுவிட சிரமப்பட்டாள் அவளின் உடலின் மொழி வேறுபட்டதை அறிந்து அவள் முகம் பார்த்தவன் பட்டென் விலகி அவளைத்தாங்கி ஆசுவாசப்படுத்தினான்.

சிறிது நேரங்கழித்து சரியானவள் கண்களில் கண்ணீர் எதிர்பார்ப்பு பொய்யாய் போனதே என அழுகை.

அவனுக்குமே கஷ்டமாகத்தான் இருந்தது.

வெளியேக் காட்டிக்கொள்ளாமல் அவளை சமாதானப் படுத்தினான்.

தன் மார்பில் சாய்த்து தட்டிக்கொடுத்தான் அப்படியே தூங்கிப்போனாள்.

ஜெபாதான் துவண்டு போனான்.

நம்ம மேல நம்பிக்கை வரட்டும்

என்னால கட்டுப்பாடோட இருக்கமுடியும்.

அவ மனசுல இருக்க காயம் முதல்ல என்ன என்று கண்டுபிடிப்போம் என முடிவுடுத்து அவனுமே உறங்கிப்போனான்.

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் ஜெபாதான் முதலில் எழும்பினான்.

மோனல் அந்த பாதி ட்ரஸ்லயே படுத்திருந்தாள். அதை சரி செய்தவன் கதவைத்திறந்து வெளியே வந்தான்.

வெளிய குடும்பத்தினர் எல்லோரும் இருந்தனர். ஆனந்தர்ஜ் எப்போம்பா கிளம்புற ஆறு மணி ஆகிட்டு பாரு. முடியலன்னா கூட ஒருநாள் தங்கிட்டு போங்களேன் .ஏன் அவசரமா போறீங்க "

ஜெபா" இல்லப்பா போகனும் லீவ் போட முடியாது.இன்னும் ஒருமணி நேரத்துல கிளம்பிடுவேன் "என சொல்லி அறைக்கு வந்தவன் மோனலை எழுப்பினான்.

மெதுவாக எழும்பியவள் தன் கனவனைத்தான் இமைகொட்டாமல் பார்த்தாள்.

அவளின் என்ன போக்கை உணர்ந்தவன்

" வேண்டாத சிந்தனை வேண்டாம் நீயில்லன இன்னொருத்திய கனவுலக்கூட நினைக்க மாட்டேன அப்படியே எங்கயாவது தொலைஞ்சி கானமாபோயிடுவேன் நான் உயிரோட இருக்கனா இல்லையானுக்கூட தெரியாத அளவுக்கு.புரியுதா எதுவா இருந்தாலும் சரிபண்ண பாரக்கனும். எனக்கு உன்னோடத்தான் வாழனும் பேரப்பிள்ளைங்களாம் எடுக்கற வரைக்கும் ஒன்னா வாழ்ந்து எல்லாத்தையும் உன்கூட மட்டுந்தான் அனுபவிச்சு வாழனும் "

மோனல் கண்களை விரித்து அவன் சொன்னதை உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.

அந்த சைக்கியார்டிஸ்ட் சொன்னது நியபகம் வச்சிருந்தான் ஆறு வருசம் மேலா நம்மள லவ் பண்றா ஆனா சொல்லல.அப்படினா அனிஷா என்னபத்தி சொல்லிருக்கனும் பார்க்கமலயே வா.ஆனா ஏன் விலகி போக நினைக்கா.

எப்பா இப்பவே கண்ணக்கட்டுதே என தலையைசைத்துக் கொண்டான்.

சீக்கிரம் கிளம்பு அப்புறம் லேட்டாகிடும் என சொல்லவும் அவள் எழும்பபோக அறைகுறை ட்ரஸ் அது அவன் கண்களுக்கு விருந்தாகியது.

கண்களினாலே களவாடிக்கொண்டான்.

அவள் அப்படியே வெட்கத்தில படபடவென எழும்பி ஓடிவிட்டாள்.

இரண்டுபேரும் ரெடியாகி வெளியே வரவும் ஆனந்தராஜ் சாரதாவும் ஆசிர்வாதம் பண்ணி கொஞ்சம் பணத்தை அவள் கையிலக்கொடுத்து

" எதுவும் இவன் பிரச்சனை செய்தா அப்படியே பிளைட் பிடிச்சி இங்க வந்திரனும் சரியா. யாருமில்லனு நினைக்க கூடாது நாங்க தான் உன் குடும்பம் சரியா " என்க

ஜெபா " ஆமா இன்னும் நல்ல ஏத்தி விடுங்களேன்.ஏன் எங்கூட அனுப்புறீங்க உங்க மருமகளை நீங்களே வச்சுக்கோங்க.

ஆளப்பாருங்க நல்ல குடும்பம் நடத்துனு அவளுக்கு அட்வைஸ் பண்ணுங்க."

அனுராதா "வாயக்குறை அவக்கிட்ட உன் கோவத்த காமிக்காத.உன் போலிஸ் புத்தியெல்லாம் வீட்டுக்குள்ளவரக்கூடாது.

அவள நல்ல பார்த்துக்க."

ஜெபா " இவ்வளவு நாளும் எல்லாரும் என்ன அப்படி ஹீரோ மாதிரி பார்த்தாங்க. கல்யாணமாகி ஒருவாரங்கூட ஆகல குடும்ப மொத்தமும் காமெடி ஃபிஸா பாக்குது "

இதக்கேட்டு சின்ன பிள்ளைங்க சிரிக்கவும் பெரியவர்களும் சிரித்துவிட்டனர் மோனலுக்கு சந்தோசம் மாமியாரு அப்படி சொன்னதும்.

" அங்க ஒரு சிட்டியே என்ன ஹீரோவா பாக்குது. உள்வீட்டுக்குள்ள ஒரு ஆளு மதிக்கமாட்டுக்கு கொடுமடா "

நேரமாகிடும் நாங்க கிளம்புறோம் என சொல்லிக்கொண்டு வந்தனர்.

அதிகாலை நான்கு மணிக்கு புனே வந்து சேர்ந்தனர்.

புனே நகரம் அவர்களுக்கு என்று

அதிர்ச்சியை பரிசாக வைத்திருந்தது.