ரணம்15

Ra

ரணம்15

15 ரண ரணமாய் !!

சில வருடங்கள் கழித்து !!

அம்மா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் என்று மதன் குமார் ஸ்கூல் ஃபேக்கோடு வெளியே வர..

"ஒரு நிமிஷம் இருடா கண்ணா , லஞ்ச் பேக் கட்டிட்டு வந்துடறேன் என்று நிறை மாத வயிற்றோடு நின்ற காவ்யா திரும்பப் போக .. அவளை தடுத்து நிறுத்திய மாதவன்

ராத்திரி முழுக்க கால் வலியில தூங்கல.. இப்ப எதுக்கு காலையிலேயே எழும்பி சர்கஸ் பண்ணிக்கிட்டு இருக்க என்று மாதவன் கொட்டாவி விட்டான் .... 

நிறை மாதம் அவளுக்கு, சற்று பயம் என்னதான் மருத்துவன் அருகிலேயே இருந்தாலும் பிள்ளையை பெற்று எடுத்து விடுவேனா என்று உண்டான நாளிலிருந்து கலக்கம் ..

அம்மா நான் தான் ஸ்கூல்ல சாப்பிட்டுடுறேன்.. எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரைன் பண்றீங்க" என்று மதன் ஷூவை போட போக

"அங்க நாலு காய் போட்டு எல்லாருக்கும் பண்ற மாதிரி பண்ணுவாங்க உன் உடம்புல சத்து ஏறுமா பக்குவமா செஞ்சா தானே உனக்கு உடம்புக்கு வலு கிடைக்கும் "என்று அவன் தலையை சீப்பு வைத்து சீவ

"அம்மா நான் சின்ன பையன் கிடையாது

"ப்ச் , எனக்கு நீ சின்ன பையன் தான்...முதல் நாள் மாதவன் இதுதான் என் மகன் என்று மதனை கை காட்ட.. 

நம்ம பையனா என்றவள் அமைதியாக தலை குனிந்து நின்ற அவனை அணைத்துக் கொண்டாள் முதலில் ஒதுங்கி ஒதுங்கி போனவன் ... அதன்பிறகு காவ்யா கொட்டிக் கொடுக்கும் பாசத்தில் மூச்சு திணற ஆரம்பித்தான்.. மாதவன் கவியையும் அழைத்து வந்து விட்டான் அவள் தாய் தகப்பன் லொலொ என்று கத்த 

"நீங்க செஞ்ச காரியத்துக்கு போலீஸ்ல பிடிச்சு கொடுத்தேன் 

"போலீஸ்னா பயந்துடுவோமா?? என்றவர்கள் அங்கே வந்து நின்ற போலீஸ் ஜீப்பில் அடித்து புரண்டு ஓட விட்டார்கள்..

 கிட்டத்தட்ட ஐந்து வருடம் அவளுக்கு குழந்தை பாக்கியமே இல்லை ... அதற்காக இருவரும் கவலைப்படவும் இல்லை.. 

குழந்தை இல்லைன்னு கவலையா இருக்கா என்று மாதவன் கூட கேட்கத்தான் செய்தான்.. 

அவனுக்கு தெரியாதா கர்ப்பப்பை சேதம் ஆகி இருக்கிறது என்று .. குழந்தை வேண்டாம் என்ற முடிவில் தான் அவனும் இருந்தான்.. ஆனால் கடவுள் எண்ணம் வேறல்லவா..

5 வருடம் கழித்து அவனே எதிர்பாராத நேரத்தில் காவ்யா தலையைப் பிடித்துக் கொண்டு மனைவி விழ.. அவள் பிள்ளை உண்டாகி இருக்கிறாள் என்று மகிழ வேண்டியவனுக்கு இதை பெற்றெடுத்து விடுவாளா என்ற பயம்தான் அதிகம்..

இப்போது உள்ள காவ்யா , நல்ல உப்பிய உடல் அவன் கவனிப்பில் மினுமினு வென்று இருந்தாள்

நான் சமைச்சு தருவேன் கொண்டுட்டு தான் போகணும் என்று அடம்பிடித்த மனைவியை மகனும் தகப்பனும் தலையில் கை வைத்து பார்த்துக் கொண்டிருக்க வேகமாக சமையல் செய்து கொண்டு ஓடி வந்து மதன் கையில் கொடுத்து அவன் தெருவை தாண்டி போகும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்..

உன் மகன் போய்ட்டான் இனி உன் புருஷனை பார்க்கலாமே என்று அவள் கழுத்தில் மாதவன் மீசை உரச ..

அஞ்சு வருஷம் இந்த புருஷனையே தானே பார்த்துக்கிட்டு இருக்கேன்... என்றவள் அவளை விரும்பி அவனை கட்டி கொண்டு 

"டாக்டர் சார் 

"ம்ம் அவளுக்கு எப்போதும் சார் தான் ... 

பழைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்க இருவருக்கும் நேரம் இருந்ததே இல்லை என்பதை விட அவர்கள் காதல் அதை திரும்பிப் பார்க்க விடவில்லை, யோசிக்கக்கூட இருவருக்கும் தனிமை கிடைத்தது இல்லை 

கொடைக்கானல் ஹாஸ்பிட்டல் கேம்பஸ் உள்ளேயே வீடு... காவ்யா வேலையெல்லாம் செய்து வைத்துவிட்டு இவளும் ஹாஸ்பிட்டலுக்கு போய் அங்கே அரட்டை அடித்து விட்டு, மாலை மதன் வரும் நேரம் வீட்டுக்கு வருவாள், இரவு வரை அவனுடன் நேரம் கழிப்பாள் ... 

"இது ஆகுறதுக்கு இல்ல வெட்டி கதை விட்டுக்கிட்டு சுத்துற, பக்கத்துல நர்சிங் கோர்ஸ் சேர்த்து விடுறேன் போய் படி

" எது வயசு கெட்ட காலத்துல படிக்கணுமா என்று அவள் வாயை பிளக்க

" காதலுக்கும் கல்விக்கும் வயசு கிடையாது போய் படி என்று புத்தகப்பையை கையில் கொடுத்து அனுப்பி விட்டான் ..

இவளுக்கும் ஏக சந்தோஷம் காலையில் அவன் போகும்போது அவளும் காலேஜ் போவாள் இதோ மருத்துவமனையில் செவிலியராக சேவை செய்து கொண்டிருக்கிறாள்

அவள் வாழ்க்கை மாறியதா ஆம் சொர்க்கமாக மாறிவிட்டது

என்ன யாராவது அடையாளம் கண்டுபிடிச்சு நீ அவதானேன்னு கேட்டா சங்கடம் தானே சார், பேசாம எனக்கும் சிலிக்கான் முகம் ஏதாவது வச்சு விட்டுறீங்களா என்று ஒருநாள் பேச்சு வாக்கில் மாதவனிடம் கூற

"இதுதான் நீ இந்த காவ்யாவைதான் நான் விரும்புறேன்..

"இல்லை மதனுக்கு என்ன பத்தி தெரிஞ்சா...

"அவர் என் வளர்ப்பு காவ்யா 

"அப்போ பிரச்சனை எல்லை 

"ஏன் , உனக்கு அப்படி ஒரு ஆசை இருந்தா சொல்லு அடுத்த நிமிஷம் சிலிக்கான் முகம் மூடி உனக்கு தயாரா இருக்கும் .. 

அப்படியே ஏற்றுக்கொண்ட அவனை வலிக்க வைக்க அவளுக்கு மனம் இல்லை விட்டுவிட்டாள்

இதோ காலங்களும் அழகாய் ஓடிவிட்டது.. அதில் அவ்வப்போது முட்கள் தோன்றாமல் இல்லை ஆனால் இந்த முட்கள் எல்லாம் அவர்கள் காதலுக்கு முன்பு காணாமல் போகிறது அவ்வளவுதான்

ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பி வந்தவன் வயிற்றை பிடித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து பதறி..

என்ன ஆச்சு பெயின் ஆரம்பிச்சுடுச்சா என்ன என்று முகத்தில் பதட்டத்தை காட்டாமல் அவளை செக்கப் செய்தவன்... நாடியை தடவ 

"என்னாச்சு சார் குழந்தைக்கு எதுவும் ஆகலையே

"ஒன்னும் இல்ல நார்மல் டெலிவரிக்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம் இந்த ஒரு குழந்தை போதும் சரியா.. காவ்யா உன்னோட முடிவு என்ன?

"என்ன சார் என் முடிவு எனக்கு நல்லது மட்டுமே யோசிக்கிற உங்களுக்கு தெரியாதா என்ன, உங்களுக்கு ஒரு குழந்தை போதும்னா .. எனக்கும் போதும் சார் என்றவளை தொடையோடு தூக்கிக் கொண்டவன்

பயமா இருக்கா 

ம்ஹூம் உங்க முகம் பார்த்தா மரணத்தை கூட நேருக்கு நேர் சந்திப்பேன் சார் இதுதான் அவன் கொடுத்த காதலின் வெற்றி!!

ஆபரேஷன் தியேட்டரில் கொண்டு போய் அவளை கிடத்தினான்...

பேசிட்டே இருங்க சார் 

"ம்ம் பேசிட்டா போச்சு" என்று அவளிடம் பேசிக்கொண்டே பிள்ளையும் பெற்று எடுத்து விட்டாள்

முயல் குட்டி போல பிறந்து கிடந்த மகளை இருவரும் ஒரு சேர அள்ளி அணைத்து தூக்கி கொண்டார்கள்...

அவள் பட்ட ரணம் காற்றில் கலைந்து காணாது போயே விட்டது.. 

குழந்தை படுக்கையில் இருவருக்கும் நடுவே படுத்து கிடந்து கை கால் ஆட்டி கொண்டு இருக்க மதன் விடுமுறை என்பதால் ராகவ் வீட்டிற்கு சென்றிருக்க... சிறிது நேரம் கேஸ் ஃபெயிலை பார்த்துக் கொண்டிருந்தவன் கால் விரலில் ஏதோ கூச்சம் ஏற்பட்டு பார்க்க .. அவன் மனைவிதான் போர்வைக்குள்ளே படுத்து தூங்குவது போல் கிடந்தவள் அவன் காலை சுரண்டிக் கொண்டிருந்தாள்

"என்னடி ரொம்ப நாள் கழிச்சு காத்து புருஷன் பக்கம் அடிக்குது 

"அதெல்லாம் டெய்லி காத்து உங்க பக்கம் தான் அடிக்குது .. உங்க காத்துதான் இப்போ என் பக்கம் அடிக்கிறது இல்லை .. என் செல்லத்தை எல்லாம் உங்க மக வாங்கிக்கிட்டா... என்ன பார்க்கிறதே இல்லை என்று போர்வைக்குள் இருந்து அவள் குரல் குற்றம் சாட்ட பைலை மேஜையில் போட்டவன்

"அப்படியா பெரிய தப்புதான், என்ன பண்றது

" என்ன பண்றதா தப்பு செஞ்ச பாவத்துக்கு பொண்டாட்டி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும் என்று காலை அவன் முன்னால் நீட்ட .. அவள் காலை பிடித்து சொடுக்கு விட்டான் மாதவன்.. அவள் கூச்சத்தில் கிளுக்கி சிரிக்க... காவ்யா மெட்டி அணிந்த விரலில் இச்சு வைத்தவன்..

"உன்ன அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவேனா

என்ன.. மதியம் சாப்பிடும் போது என் பொண்டாட்டி சாப்பிட்டு இருப்பாளான்னு யோசிப்பேன், கரெக்டா 11:00 மணி ஆனதும் குளிச்சிருப்பாளான்னு யோசிப்பேன்... ஈவினிங் மூணு மணிக்கு தூங்கி இருப்பாளான்னு யோசிப்பேன்... ஆறு மணிக்கு தலையில் பூ வைத்திருப்பாளான்னு யோசிப்பேன் இப்படி ஒவ்வொரு நேரமும் உன்னை யோசிக்கிறதை மறந்ததே இல்லடி "என்றதும் போர்வையை விலக்கி அவனைப் பார்த்த காவ்யா 

"அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு டாக்டர் சார் ,.ஆனா பொண்டாட்டிக்கு குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிட்டு ன்னு மறந்து போச்சு போல இருக்கு ..

"ஓ அதுதான் கோவமா 

"பின்ன இறுக்கி கட்டி கூட பிடிக்க மாட்டேங்கிறீங்க

"பக்கத்துல வரவா?? என்று அவன் கேட்க விஸ்தாரமான படுக்கையில் தள்ளி அவனுக்கு இடம் கொடுத்தாள் அவன் மனையாள்... மாதவன் சுற்றி வந்து அவள் அருகை படுத்து கொண்டவன்.. அவள் இடையோடு கையை நுழைத்துக் கொண்டு அவள் கையோடு கை சேர்த்து விளையாட ஆரம்பித்தவன்..

"மறந்தது தப்புதான் என்ன பண்ணலாம் என்று கிசுகிசுக்க ..

"ம்ம் மறந்த பாவத்துக்கு சேர்த்து கொடுங்க "என்று அவனை நோக்கி திரும்பி படுக்க.. போர்வைக்குள் பூக்களின் கதம்பம் கொண்டு அழகாக மாலை தொடுக்க ஆரம்பித்து இருந்தனர்..

முல்லைமலர் பெண்ணின் மருதாணி மலரோடு தொட்டு உரசி போனது கூட இன்பம் இல்லை.. ஆனால் இருவர் கண்ணும் உரசி போனதில் அத்தனை இன்பம் கண்டனர் ... அவர்கள் கையின் அழுத்தத்திலேயே கொண்ட காதலின் ஆழம் தெரிந்தது... கால்கள் ரெண்டும் பின்னி கிடந்ததிலேயே அவர்கள் இருவர் கொண்ட மோகத்தின் அளவு தெரிந்தது ... அவன் அழுத்தி அவளின் நாசியில் கொடுத்த முத்தத்தில் மொத்தமாய் மதி மயங்கி கிடந்தாள் அவன் மனைவி...

எது அழுக்கு?? மனமா உடலா? 

உடலை தீட்டுப்படுத்தினால் அது தீட்டாகிவிடுமா அழுக்காகி விடுமா.. மனம் அதுதான் தூய்மையாக இருக்க வேண்டும் ...

இங்கே மனதில் அழுக்கை வைத்துக் கொண்டு வெளியே அழகாய் காட்சியளிக்கும் பல மனிதர்கள் உள்ளம் அழுக்காக இருக்கிறது .. அது யாருக்கும் தெரியாது..

இவள் பாசி படிந்த வைர மாளிகை எல்லோரும் அந்த மாளிகை மீதி இருந்த அழுக்கை மட்டுமே பார்த்தார்கள்.. ஆனால் அவன் ஒருவன் மட்டும் தான் படிந்திருந்த பாசிக்கு உள்ளே இருந்த வைர மாளிகை பார்த்தான்... சுத்தம் செய்து தனக்கே தனக்காய் பொக்கிஷமாய் எடுத்துக் கொண்டான் அவளின் முதல் காதலுக்கு சொந்தக்காரன் ஆகிவிட்டான்... உயிர் உள்ளவரை அவளுடைய முதல் காதலும் இறுதி காதலும் அவனாக மட்டும் தான் இருப்பான் என்று அவனுக்கு தெரியும் ... 

உலகில் நரகத்தை கண்டவளுக்கு சொர்கத்தை காட்டும் ஆண் தேவதா அவன் !! 

நன்றி 

வாழ்க வளமுடம் 

வாழ்க தமிழ் 

வளர்க தமிழ்நாடு!!