அயன் நான் ஆல் நீ
ayan

டீசர்
அயன் நான் , ஆல் நீ !!
2023 ஆம் ஆண்டு இன்று ...
சென்னை
எம்பி சத்திய பூபதி இல்லம்
படுக்கையில் ஒரு முதியவர் மூச்சை வேகமாக இழுத்து உயிருக்கு போராடி கொண்டிருக்க...
ஆத்தா, நாங்க உங்களுக்கு என்ன குறை வச்சோம் இப்படி உயிரு வதைப்பட்டுட்டு கிடக்குதே, கிடா வெட்டி பொங்கல் வைக்கிறேன் ஆத்தா, உசுர எடுத்துக்க என பெண்கள் நெஞ்சில் அடித்து கொண்டு அழுதவர்கள் குரல்கள் தொண்டையோடு நின்று கொண்டது படியில் இறங்கி வந்தவனை கண்டு ...
"வெள்ளை நிற சட்டை கருப்பு நிற பேண்டில் மீசையை முறுக்கி , கையில் கிடந்த தங்க காப்பை மேலே ஏற்றி விட்டபடி வந்தவன் இழுத்து கொண்டிருந்த தந்தையை சலிப்பாக பார்த்து உதட்டை வளைத்தான்....
"சார்" என ஒருவர் ஓடி வந்து அவன் அருகே நிற்க
"இவன் சாவுறது போல இல்லையே" என்றான் பிடிறியை கையால் தேய்த்து கொண்டு ..
"பால் ஊத்திடலாம் சார் "
"பால் ஊத்தினா சரியா வராது, பீரை வாங்கி ஊத்தி விடு நாளைக்கு இவர் இறப்பை சிறப்பா கொண்டாடணும்..புரியுதா?? என்றான் புருவம் உயர்த்தி...
"புரியுது சார் ..
"நாளைக்கு நியூஸ்ல இவன் செத்ததுக்கு எதிர் கட்சி காரன் அந்த எம்பி ஈஸ்வரன் தான் காரணம்னு கொட்டை எழுத்துல வரணும்.. இவர் பதவி தானா என் கைக்கு வரும் .. "என்று மீசையை திருகி அவர் அருகே போய் கால் மேல் கால் போட்டு அமர்ந்த திராவகனை கண்டு, பூபதியின் இரண்டு மனைவிகளும் வாயை பொத்தி கொள்ள...
"நீ உயிரோடு இருந்தா நான் எப்போ எம்பி ஆகுறது சீக்கிரம் செத்துடு சரியா இல்லை நானே கொன்னுடுவேன் "என்றவன் நேர்மையை தூக்கி சுமந்த தன் தந்தையை பல்லை கடித்து பார்த்தான்...
"சார் நம்ம கட்சி எம்பி தயாளன் உங்களுக்கு சீட் தர கூடாதுன்னு சண்டை போடுறார்..
"இவனுக்கு என் வழியில குறுக்க வர்றதே வேலையா போச்சு என்று நாடியை தடவியவன்..
"நீ என்ன பண்ற வழக்கமா வருமே டேங்கர் லாரி
"ஆமா ,
"தயாளன் காருக்கு இடையில விட்டிற சொல்லு ...
"சார் ...தோளை உலுக்கிய ஆடவன்
"அவன் இருந்தா என்னைக்கு இருந்தாலும் எனக்கும் பிரச்சனைதான் ஆள முடிச்சிடு அந்த எம்பி பதவிக்கு நம்மாள் ஒருத்தனை போடுவோம் என்று சட்டையை உதறி கொண்டு எழும்பினான்...
"திராவக சக்கரவர்த்தி!! நாளை முதல் தன் தந்தையின் எம்பி பதவியில் அமர போகும் இளம் அரசியல்வாதி.....
********
ஒடிசா மாநிலத்தில் சீறி பாய்ந்த கார் பின்னே போலீஸ் வாகனம் ஒன்று பறந்து போய் அதன் குறுக்கே நிற்க ... தங்கத்தை கடித்து சென்ற கார் பிரேக் போட்டு நிற்க..போலிஸ் வாகனத்திலிருந்து தன் கையில் கிடந்த காப்பை தூக்கி மேலே விட்டு கொண்டு பாப் தலையாக இருந்த , முடியை உதறி கொண்டு காவல் சீருடையில் இறங்கி நடந்த வந்த நபரை கண்டு கடத்தியவன் சீட்டோடு பதுங்க..
"த்த்தூ தேரிக்க, தொங்கனா கொடுக்கா" என்று காலால் ஓங்கி அவன் நெஞ்சில் மிதித்து கொண்டு திரும்பினாள் ..
அயனி சந்திரவதனி ஐபிஎஸ் , ஒடிசா மாநிலம்...
அவனை அடித்து துவைத்து ஜீப்பில் ஏற்றிய அயனி பாக்கெட்டில் சிணுங்கிய போனை எடுத்து காதில் வைக்க...
மேடம் அப்பா செத்துட்டார் என்றதும் யோசனையாக புருவத்தை தடவி.. எதிரே ஓடிய டிவியை பார்க்க
எம்பி தயாளன் அகால மரணம் என சிதைந்த தன் உடலை பார்த்த அயனி கண்களை சுருக்கி நிமிர்த்தி
எப்படி எங்க யார் காரணம்?
எம்பி பூபதி சார் மகனா இருக்க வாய்ப்பு இருக்குன்னு பேசுறாங்க..
யார் அவன்??
திராவக சக்கரவர்த்தி மேடம், நாளைக்கு தமிழ்நாடு நிதித்துறை எம்பியா பதவி ஏற்க போறார், என்றதும் அவள் கண்ணில் குருதியாக சினத்தில் புடைத்து நின்றது ..
வர்றேன் வை, என அயனி தன் தந்தையை கொன்ற திராவகனை காண தமிழ்நாடு நோக்கி கிளம்பினாள்..
சரித்திரம் தொடர்கிறது..........
வெள்ளி இரவு ஏழு மணி முதல்..