இவள் துணைவி அவள் மனைவி 17

Thunai17

இவள் துணைவி அவள் மனைவி 17

17 இவள் துணைவி !!

    அவள் மனைவி !!

படுக்கை மீது வேணி நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க 

திறந்து கிடந்த அலமாறி உள்ளிருந்த டைரி வழுக்கி கீழே விழ சடசடவென அடித்து கொண்டிருந்த காற்றில் அதன் பக்கம் ஒவ்வொன்றாக திறக்க ஆரம்பித்தது... 

முதல் இரவு அறைக்குள் பல கனவுகளோடு தான் ஆணும் பெண்ணும் நுழைகிறார்கள் .. அந்த கனவுகள் எல்லாம் மெய்யாக போவதும் பொய்யாகப் போவதும் அவர்கள் இருவரில் கையிலும்தான் இருக்கிறது

பால் சொம்போடு உள்ளே நுழைந்த புது மனைவியை உமாபதி செல்போனை விட்டு தலையை தூக்கிப் பார்த்தான்... பொம்மை போல சிவப்பு பட்டில் நீலவேணி அறைக்குள் நுழைந்தாள் .. மணமேடையில் கூட தலையை குனிந்தே உட்கார்ந்து இருந்தாள் 

சரி பெண்ணுக்கான கூச்சம், பயம் புது வீட்டில் வந்து வாழப்போகும் பதட்டம் எல்லாம் இருக்கும் என்று அவனும் , அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... இங்கேயும் அதேபோல தலையை குனிந்து அவன் முன்னால் வந்து அவளுடைய பாதம் நின்றது.. படுக்கையை விட்டு உமாபதி எழும்பி நீலவேணி தோளை தொட்டதுதான் மாத்திரம் .....

ஆஆஆஆஆஆஆ தரையோடு தரையாக பால் சொம்பொடு கீழே சரிந்தாள் நீலவேணி ... பால் ஒரு பக்கத்தில் சொம்பில் இருந்து குலுங்கி குலுங்கி கீழே கொட்ட ஆரம்பிக்க... நீலவேணி கை கால்கள் இழுத்துக் கொண்டு , வாயில் இருந்து நுரை தள்ளி கண்ணெல்லாம் மேலே சொருகிக்கொண்டு தலை வெட்டப்பட்ட ஆடாக அவள் துடிக்க

"வேணி வேணி இவன் பதறிப் போய் அவளை தூக்கி பிடித்து இரும்பை கையில் கொடுத்து பார்த்தான் , அவளுடைய வெட்டு அடங்கவில்லை, கத்தி பார்த்தான் , மாத்திரை போட்டு விட்டு தூங்கும் தன் தாய் தகப்பன் காதுக்கு கேட்கவில்லை தாமதம் ஆபத்தாகி விடக்கூடாது என்று வேணியை அப்படியே அள்ளி தோளில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான், 

சில மணி நேரங்கள் கழித்து படுக்கையில் நீலவேணி கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க ... அவள் முன்னால் அமர்ந்திருந்த உமாவதியின் கண்களும் கலங்கி இருந்தது..

தவறு செய்துவிட்டான், பெரும் தவறு செய்துவிட்டான்.. ஒரு தாலியை ஒரு பெண்ணின் கழுத்தில் கட்டுவதற்கு முன்பாக, அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டிருக்க வேண்டும் ... இதயத்திற்கு மேலே தாலியை உரிமையாக கட்டும் ஒருவன் , அவள் இதயத்திற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டிருக்க வேண்டும்...  

பதி தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க மருத்துவர் ரிப்போர்ட்டை கொண்டு வந்து அவன் கையில் நீட்டி

"அவங்க குழந்தை உண்டாகி இருக்காங்க உமாபதி" என்றதும் பெருமூச்சுவிட்டு அதை வாங்கிக் கொண்டவன்.. நீலவேணியை எட்டிப் பார்க்க... தன் முன்னால் இருந்த அந்த அந்நியனை பார்க்க கூட முடியாமல் கிடு கிடுவென்று நடுங்கிய உடலோடு தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள் வேணி ... 

அவள் உடலை விட்டு உயிர் போய் 24 மணிநேரம் ஆகிறது ... உயிர் போன உடலில் தாலி விழுந்தது கூட அவளுக்கு தெரியாது என்று சொன்னால், நம்புமா உலகம் ?? முதலில் தாலியை கட்டிய இவன் நம்புவானா?? 

உயிரே இல்லாத அவள் உடலுக்கு எதற்கு அலங்காரம்?? உடல் விட்டு ஆவி போன பிறகு அவள் வாழ்ந்து எதற்கு? வாழ காரணமே இல்லை என்றாலும் அவள் வயிற்றில் உற்றவன் ரத்தம் துடித்துக் கொண்டிருக்கிறதே... உதடு நடுங்க வயிற்றை தடவி பார்த்தவள் உதடுகள்...

போஸ் மாமா என்று படபடப்பாக கூறி எதிரே இருந்த உமாபதியை கண்ணீரோடு பார்த்த நீலவேணி.... கண்ணீரோடு சேர்ந்து அவள் காதலும் வழிந்தோடியது

மேஜர் போஸ் கெளரி!!! 

இராணுவ அதிகாரி!! 

"போஸ் மாமா , வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்க" வீட்டுக்கு தெரியாது போனை கொள்ளை புறம் வைத்து பேசி கொண்டு நின்றாள் நீலவேணி 

"பார்த்தா கட்டிக்கடி "கேலி குரல் கம்பீரமாக வர 

"ப்ச் , இப்படி கிண்டல் பண்ணாதீங்கன்னு உங்களுக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் பத்து வருஷமா லவ் பண்றோம்... 

"நீ பல்லு முளைச்ச காலத்துல இருந்து என்ன லவ் பண்றடி என்று அந்த பக்கம் அசத்தலாக சிரிப்பு வர

"சரி பல்லு முளைச்ச காலத்துல இருந்தே உங்கள லவ் பண்றேன்னு வச்சுக்குவோம்... நீங்களும் தானே என்னை லவ் பண்ணுகிறீங்க.. 

"அப்படித்தான்னு நினைக்கிறேன்.. அதனால தான டெய்லி, உன் கூட கடலை போட மிலிட்டரில இவ்வளவு பேரை மேய்க்க வேண்டிய மேஜர் வேலை இருந்தாலும், நீ தான் முக்கியம்னு உனக்கு போன் போட்டு ஊர் கதை கேட்டுகிட்டு இருக்கேன்...

காஷ்மீர் பனிப்பொழிவில் உயிர்காக்கும் வீரர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்க அவர்களை கட்டமைக்கும் இராணுவ தளத்தில் நிற்கும் மேஜர் போஸ் மிடுக்கான யூனிஃபார்மில் அந்த குளிர் எல்லாம் சர்வ சாதாரணமானது என்பது போல அங்குமிங்கும் எல்லையை வேங்கை போல வேவு பார்த்துக்கொண்டே , காதில் மாட்டி இருந்த ஹெட்போன் மூலமாக தன் காதலி நீலவேணிக்கு காதல் அம்பு தொடுத்துக் கொண்டிருந்தான் மேஜர் போஸ் கெளரி ...

ஒரே ஊரில் பிறந்தவர்கள் , தூரத்து சொந்தம் வேறு மாமன் முறை ... எதிர் எதிர் துருவம் ஈர்க்கும் என்ற கொள்கை இவர்களுக்கு பொருந்தும் இவள் பயந்த பேர்வழி அவன் அடித்து பல்லை உடைத்து விட்டுதான் பேசவே செய்வான், வாய் நீளும் முன்னே கை நீளும்!!  

நாட்டின் மீது தீராத பசி , பற்று ஏதாவது செய்த தீர வேண்டும் என்ற ஆசை... அது வளர வளர அவனுக்கு பேராசை ஆகி போக.. மிலிட்டரிக்கு போகிறேன் என்று சொன்ன மகனை தாய் நாட்டிற்கு அர்ப்பணித்து விட்டார்கள்.. நாட்டின் மீது எத்தனை ஆசை இருந்ததோ, அதேபோல இரட்டை ஜடையில் கண்கள் கலங்க மரத்திற்கு பின்னால் இருந்து உத்து உத்து பார்த்த நீல வேணி மீதும் அதே அளவு ஆசை காதல் இருந்தது மெய்!! 

இதோ தாய்நாடு காக்க , பேருந்தில் ஏறி எல்லைக்கு போக கிளம்பும் அவனை நீலவேணி புறங்கையால் கண்ணை துடைத்து துடைத்து ஒளிந்து நின்று பார்த்து கொண்டு நின்றாள் ... கண்ணால் மட்டுமே வளர்த்த காதல் இதுவரை அவனும் சொன்னது இல்லை அவளுக்கும் சொல்ல தைரியம் இல்லை ... 

என்னவோ மனதில் உள்ள காதலை சொல்லாது போக மனமில்லை , போஸ் புறப்பட்ட பேருந்தில் இருந்து இறங்கி ஓடி வந்தான்..

"என்னடா போஸூ, பஸ்ல இருந்து இறங்கி வர்ற

"இல்லப்பா ஒரு பொருளை விட்டுட்டு போயிட்டேன் எடுத்துட்டு அடுத்த பஸ்ல போயிடுறேன் "என்று சொன்னவன் விறு விறுவென்று அந்த வயல்வெளிக்குள் ஓடினான்..  

முழங்காலில் முகம் புதைத்து கதறி அழுது கொண்டிருந்தாள் வேணி, அவள் அருகே போய் கைகட்டி நின்றான்..

"போய்யா போஸூ, முட்டைகோஸ், உன்ன போய் லவ் பண்ணுனேன் பாரு ..உனக்கு நாடுதானே முக்கியம் அந்த நாட்டையே கட்டிபிடிச்சுகிட்டு கிட.. உனக்காக இத்தனை வருஷம் காத்திருந்த என் காதல் எல்லாம் பொய்யா போச்சு ?காதல சொல்லலைன்னா என்ன உங்களுக்காகதானே நீங்க படிக்கிற காலேஜ் பக்கத்துல அவ்வளவு தூரம் சைக்கிள் மிதிச்சு வந்து ஒரு தடவையாவது பார்த்துட்டு போகணும்னு பாத்துட்டு போவேன்.. நீங்களும் கண்ண கண்ண உருட்டி , என்ன பாரக்க தானே செஞ்சீங்க... நான் காதலிச்சது உங்களுக்கு தெரியாதா ? இல்ல நீங்க என்னை காதலிச்சது எனக்கு தெரியாதா? எப்படி என்ன விட்டுட்டு போக மனசு வந்தது... ம்க்கும் தைரியம் இல்லாத நான் எல்லாம் எதுக்கு காதலிக்கணும்... வீட்ல இவரை காதலிக்கிறேன்னு சொல்றதுக்கும் தைரியம் இல்ல... இவர்கிட்ட சொல்லவும் வீரம் இல்லை ... 

நான் எல்லாம் கோழையா பிறந்ததுக்கு பொறக்காமலேயே இருந்திருக்கலாம்... எதை பார்த்தாலும் பயமா இருக்கு, காதலிக்க தெரிஞ்ச எனக்கு அதை எப்படி சொல்றதுன்னு கூட தெரியல... இப்போ என் கையை விட்டு நீங்க போயிட்டீங்க.. விசும்பி விசும்பி ஆள் இல்லாத அந்த வயல்வெளியில் உட்கார்ந்து வாய்விட்டு புலம்பி தீர்த்தாள் நீலவேணி 

ஐஞ்சு வருஷம் கழிச்சு நீங்க வரும்போது என்னதான் மனசுல நினைச்சுகிட்டு இருப்பீங்களா இல்ல, வேற யாரையாவது கட்டி கூட்டிட்டு வந்தா நான் என்ன பண்றது... அய்யய்யோ!! அதையெல்லாம் கண்ணால பாக்க கூட என்னால முடியாதே... உங்க அத்தை மகள்கள் உங்க கைய புடிச்சாவே எனக்கு பதறும்... இதுல உங்க பொண்டாட்டியா வேற எவளாவது வந்துட்டா.. என்ன செய்ய , கையை விட்டு நீங்க போன மாதிரி ஒரு மாதிரி பதட்டமா இருக்கே , என்ன மறந்துடுவீங்களா போஸ் மாமா? என்று தன் போக்கில் வேணி பித்தாக பேச.. 

ஆமா உன்ன மறந்துட்டு அங்கிருந்து வெள்ளையா காஷ்மீர் பொண்ணை கல்யாணம் கட்டி கூட்டிட்டு வர போறேன் .. 

"கட்டிட்டு வந்து பாருங்களேன், காலை கையை முறிச்சி" என்றவள் பதறி தலையை தூக்கி பார்க்க மரத்தில் கையை கட்டிக்கொண்டு சாய்ந்தபடி அவளை பார்த்து கண்ணை சிமிட்டினான் போஸ் 

"நீங்களா? அவனை கண்டு பதறி எழும்ப போக, தடுமாறி அவன் மீது விழ... அவளை இடையோடு அழுத்தி பிடித்து தூக்கி தன் நெஞ்சில் சாய வைத்தவன்...

"யாரடி லவ் பண்ற?என்னதான?? 

"அப்படி எல்லாம் இல்லையே 

உடல் நடுங்க படபடத்த கண்ணோடு வேணி போஸை அண்ணாந்து பார்க்க...

"சரி அப்போ நான் போறேன்... சரி நம்மள லவ் பண்ற பொண்ணு. நம்மள நினைச்சு வருத்தப்படுவாளே கொஞ்சம் ஆறுதல் சொல்லிட்டு போகலாம்னு நெனச்சேன்.. நீ தான் என்னை லவ் பண்ணலையே" என்று போஸ் நகர போக , அவன் சட்டை முனையை அவள் பிஞ்சு விரல்கள் இழுத்து பிடித்து போகாதே என்பது போல் தவிப்பாக பார்க்க.... 

எல்லை காக்கும் வீரனே எவ்வளவு வேகம் இருக்கும் சட்டென முதல் முத்தமே அவள் இதழில் அல்லவா பதித்து விட்டான்..

ஆவ்ஊஊஊஊ அவள் துள்ளி அடங்கி காதலில் அவன் நெஞ்சில் விழுந்து கிடக்க... அவளுடைய கண்ணீர் மட்டும் தான் அவன் சட்டையை நனைத்துக் கொண்டே இருந்தது... 

விசும்பி விசும்பி அழுது கொண்டு இருந்தாள்... பேருந்துக்கு நேரம் ஆகிறது ... அவர்களைப் பொறுத்தவரை இந்த ஒரு முத்தம் போதும் அவர்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ள

எது காதல் ??ஒருவர் ஆசையை ஒருவர் புரிந்து கொண்டு பக்குவமாய் செயல்படுவது தானே! அவன் ஆசை நாட்டிற்காக போராடுவது , அதை தடுக்க அவளுக்கு கூட உரிமை இல்லை என்பதை புரிந்து

"சரி போஸ் மாமா நேரம் ஆயிடுச்சு கிளம்புங்க என்று வலியோடு அவள் சிரிக்க 

இவளை விட்டுவிட்டு போக மனமே இல்லை என்றாலும் அவனுக்கான கடமை இருக்கிறதே.. 

 நீ படிச்சு முடி அஞ்சே வருஷம் தானே உன் போஸ் மாமா ஓடி வந்துடுறேன் ..

"அஞ்சு வருஷம், அஞ்சு யுகம் மாதிரி இருக்கும் போஸ் மாமா

" ஏன் அப்படி நினைக்கிற அஞ்சு வருஷம் காதலிக்க நமக்கு நேரம் இருக்குன்னு நினை .."

"ம்ம் 

எவ்வளவு வேலை இருந்தாலும் கண்டிப்பா உனக்கு போன் போடுவேன்... உன் கூட தினமும் பேசுவேன் என்று பேருந்தில் ஏறி அவளுக்கு கையை அசைத்தவனை மரத்திற்கு பின்னால் இருந்து கையை அசைத்து கொண்டே பார்த்தாள் நீலவேணி

அவர்களுக்கான ஐந்து வருட காதல்... சாதாரண பணியிலிருந்து இதோ மேஜராகிவிட்டான்.. ஒரு படையை அழைத்துக் கொண்டு சென்று எத்தனையோ யுத்தக்களம் பார்க்கும் அளவிற்கு ஒரு மேஜர் அந்தஸ்தை பெற்றிருந்தான் ... 

ஆனால் அவன்அங்கே ஒவ்வொரு நேரமும் எல்லையில் நின்று , தீவிரவாதிகள் , எதிரி ஆர்மியோடு சண்டையிடும் பொழுது... இவளுக்கு இங்கே உயிரே போய்விடும்.. அங்கே போர் இங்கே போர் என்று செய்திகளில் ஏதாவது நியூசை கண்டுவிட்டால் கூட அவளுக்கு பயம் பிடித்துவிடும்... ஆனால் , மனதில் இருந்த காதலை யாரிடமும் ஒரு நாளும் மூச்சு விட்டது கிடையாது... என்பதை விட, இந்த சமுதாயம் கேட்கும் கேள்விகளுக்கு அவளுக்கு பதில் சொல்லத் தெரியாது , கோழையாய் வளர்ந்தது அவள் குற்றம் இல்லை ... பிறர் கேள்விகளுக்கு பயம் , பிறர் பார்வைகளுக்கு பயம் ... 

இன்ஜினியரிங் கடைசி வருடம் படித்து கொண்டு இருந்தாள் 

சண்டை தீவிரவாதம் எல்லாம் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டு காஷ்மீர் சுற்றுலா தளமாக பதட்டம் இல்லாத இடமாக காணப்பட.... 

அவர்கள் காலேஜிலிருந்து காஷ்மீருக்கு அருகே உள்ள இடத்துக்கு சுற்றுலா அறிவிக்கப்பட .... எதற்குமே வாய் திறந்து தன் வீட்டில் கேட்காதவள். தன் தங்கையிடம் ஓடிப்போனாள் 

சிறிய வயதில் விளைந்த கழுதை அது... வாயைத் திறந்தால் மூடாது தந்தையின் சட்டை பையில் இருந்து பணத்தை திருடி விட்டு ஓடி விடுவாள், ஊரெல்லாம் ஓடி ஓடி அடி விழும் ... அதையும் வாங்கிக்கொண்டு சாப்பிடுவதற்கு சரியாக வந்துவிடுவாள் 

"நீ மட்டும் எப்படி மாடு மாதிரி வளர்ந்து நிக்கிற உன்னைய பெத்ததுக்கு நான் சும்மா இருந்திருக்கலாம்

" சும்மா இருந்திருக்க வேண்டியதுதானே உங்களை யாரு பெக்க சொன்னது .. பெத்துட்டு இப்ப லபோ லபோன்னு கத்துறீங்க ... அந்த குழம்புல மீனை எடுத்து போடுங்க,, அவளுக்கு மட்டும் பெரிய மீனு எனக்கு மட்டும் சின்ன மீனா? 

"எருமை , எல்லாமே ஒன்னு தாண்டி 

"எனக்கு பாக்குறதுக்கு சின்னதா தான் இருக்கு" என்று மீனை பிய்த்து வாயில் வைத்து கொண்டு இருந்த,திரவியா கையை ஒரு விரல் சுரண்ட

திரும்பி பார்த்தாள் .. நீலவேணி சாப்பிடாமல் பிசைந்து கொண்டு இருந்தாள்

"என்ன மேட்டர் மேடம் என் கைய சுரண்டுறீங்க, காசு ஏதாவது வேணுமா... இல்ல அப்பா கிட்ட ஏதாவது சிபாரிசு பண்ணனுமா? வேணி ஆம் என்று தலையாட்டினாள்

எது வேண்டுமென்றாலும் தங்கையிடம் வெகுவாக கேட்டு விடுவாள், அப்பா கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுடி அம்மா கிட்ட கொஞ்சம் வாங்கி தாடி என்னவோ இவளிடம் பேச வரும்.. அதை வைத்து ஓரளவு சமாளித்து விடுவாள்

"எல்லாரும் காஷ்மீர் டூர் போறாங்க... எனக்கும் போக ஆசையா இருக்கு, 

" சரி அப்பாகிட்ட கேட்டு பெர்மிஷன் வாங்கி தரேன் எனக்கு என்ன தருவ ? 

"அங்கிருந்து வரும்போது உனக்கு ஸ்வெட்டர் குங்குமப்பூ எல்லாம் வாங்கிட்டு வரவா?

"அய்ய அதெல்லாம் வேண்டாம், மிலிட்டரி சரக்கு சூப்பரா இருக்குமாம் வாங்கிட்டு வர்றியா?? என்று தலையில் ஒரு கொட்டு கொட்டிய நீலவேணி 

"முளைச்சு இரண்டு இலை விடல, மிலிட்டரி சரக்கு கேக்குதா...

"அப்ப போ உனக்கு சிபாரிசு பண்ண முடியாது 

"சரிடி வாங்கிட்டு வரேன் ,

"அப்படி வா வழிக்கு" என்று முற்றத்தில் படுத்து கிடந்த தன் தகப்பன் அருகே போய் அமர்ந்த திரவியா அப்பாவின் காலை அமுக்கி விட

" என் பொண்ணுக்கு என்ன வேணும் தலையை சரித்து திரவியா

"அக்கா காஷ்மீர் போகணுமாம அனுப்பிவிடுப்பா 

"அவ்வளவு தூரம் எல்லாம் அனுப்ப முடியாது

"உன் பொண்ண என்ன ஒத்தையாவா அனுப்ப சொன்னேன் எல்லா பிள்ளைகளும் போறாங்க போகட்டுமே ..

"முடியாதுன்னா முடியாது தான் 

போஸை பார்ப்பதற்கு ஒரு நல்ல தருணம் கிடைத்தது. இப்படி தகப்பன் முடியாது என்று விட, அவளுக்கு அடம் பிடித்து வாங்கவும் தெரியாமல் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க பக்கத்தில் படுத்து இருந்த திரவியா 

"உண்மையாவே காஷ்மீர் பார்க்க போக முடியலன்னு அழுறியா,, இல்ல வேற யாரையாவது பார்க்க முடியலன்னு அழுறியாக்கா.."

"வயசுக்கு மீறி பேசாத திரா, காஸ்மீர் பாக்குறதுக்கு ஆசை அவ்வளவுதான் என்று திரும்பி படுத்துக்கொள்ள... காலையில் எழும்பி வந்த நீலவேணி கையில் காசை கொடுத்த அவள் தகப்பன்

"போயிட்டு பத்திரமா வரணும் "என்றதும் உள்ளுக்குள் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....  

எல்லா காதலும் சேரத்தான் வேண்டும் இல்லை, சேராத காதல் என்பதற்காக அது புனிதமான காதல் இல்லாமல் ஆவது இல்லை ...