துணைவி மனைவி15
Thunai15
15 இவள் துணைவி!!
அவள் மனைவி!!
ஏர்போர்ட் வந்து இறங்கிய உமாபதி வெளியே வந்ததும் வேணிக்கு போன் போட... உடனே அங்கே எடுக்கப்பட்டது
" என்ன மாமா ஊர் போய் சேர்ந்துட்டீங்களா??
ஆமாம்மா, இப்பதான் வந்து இறங்கி நிற்கிறேன்..
குட்டி தூங்கிட்டானா..
"எங்க தூங்க?? மடியில படுத்து கிடக்கிறான், எப்போதும் போல கதை சொல்லனுமாம்,
"இன்னைக்கு என்ன கதை மேடம் சொல்றீங்க ?
"வேறு என்ன கதை அவனுக்கு ஒரே கதை தான் வேணும் துப்பாக்கி பிடிச்சு சண்டை போடுற அடிதடி கதை தான் வேணும் .... நீங்க இருந்தா ஆக்ஷனோட அவனுக்கு ஆஆ ஊஊ சத்தம் போட்டு உண்மையாவே சண்டை போடுற மாதிரி கதை சொல்லுவீங்க... எனக்கு அப்படியெல்லாம் வராதே... சாமி கதை சொன்னா போர் அடிக்குதுன்னு கிண்டல் பண்றான்..
"ஹாஹா என்று சிரித்த உமாபதி
"போனை குட்டிக்கிட்ட கொடு; நான் கதை சொல்றேன்" என்று உமாபதி ஆட்டோவை பிடித்து அட்ரஸை காட்டிவிட்டு ஆட்டோவில் ஏறி அமர..
டேய் இந்தா .... "
அப்பா "
"என்னடா அம்மாவை தொல்லை பண்றியா??
"அப்பா எப்பவும் போல துப்பாக்கியை எடுத்து 10 எதிரியை சுட்டு கொல்லுற மாதிரி ஹீரோ கதை சொல்லுப்பா ... அம்மாவுக்கு கதை சொல்லவே தெரியல போர் பண்றா
"ஹாஹா அப்படி உன்ன போர் அடிக்கிற மாதிரி அம்மா என்ன கதை சொன்னா?
"கிருஷ்ணனோட கதை , கதை என்னவோ நல்லா தான் இருக்கு , ஆனா ஒன்னும் புரியல என்றதும் உமாபதி சிறிது நேரம் அமைதியாக இருக்க
"நீயே ஒரு கதை சொல்லு" என்றதும் இவன் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தான்
""அப்படியே 10 பேர் நம்ம ஹீரோவை சுத்தி நிக்கிறாங்க ...
ஹான் அப்புறம்
"ஆனா நம்ம ஹீரோவுக்கு கண்ணுல ஒத்த பயம் இல்லை இந்த பத்து பேரையும் அடிச்சு கொன்னுட்டு அந்த ரூம்ல அடைச்சு போட்டு இருக்கிற சின்ன குழந்தைகளை எல்லாம் காப்பாத்திடனும் என்கிற வெறி
"இங்கே கெளரி கையைத் தட்டி சிரித்தான்..
"சூப்பர் ஹீரோ இல்லப்பா ??
"ம்ம்
"அப்புறம் என்ன நடந்தது ..
"அப்படியே ஒத்த கையால துப்பாக்கியை தூக்கி பிடிச்சு இன்னொரு கையால. அவர தடுக்க வந்தவங்கள எல்லாம் அடிச்சுக்கிட்டே , சுட்டு போட்டுக்கிட்டு முன்னாடி போக ஆரம்பிச்சான்...
"வாவ்ஊஊஊஊஊ நம்ம ஹீரோ எல்லாரையும் ஒரே அடியில பிளாட்டா ஆக்கி இருப்பாரே
"எஸ் அவன் நம்ம ஹீரோ ஆச்சே, எல்லாரையும் கொன்னுட்டு அங்க அடைச்சு போட்டிருந்த பிள்ளைகளை எல்லாம் நம்ம ஹீரோ காப்பாத்திகிட்டாரு ....
"சூப்பரு ஊஊஊஊஊ
"அவங்க எல்லாம் ஓடி வந்து அவர் காலை கட்டிக்கிட்டு தேங்க்யூ மேஜர்ன்னு சொன்னதும் அவர் எல்லாருக்கும் குனிஞ்சு முத்தம் கொடுத்துட்டு நேர் கொண்ட நடையோட தன்னோட வாகனத்தை நோக்கி போனாராம்.... அவ்வளவுதான் கதை!!
அப்பா நாளைக்கும் இதே மாதிரி. இதே ஹீரோ கதை சொல்றியாப்பா...
"அவ்வளவுதானே சொல்லிட்டா போச்சு , அம்மா கிட்ட கொடு என்றதும் கௌரி தூக்கத்திற்கு கண்கள் சொக்கி தன் தாயிடம் போனை கொடுக்க
"ம்ம் , நானும் டெய்லி விதவிதமா கதை சொல்றேன்... ஆனா அது புடிக்கல போர்னு சொல்றான்., ஆனா நீங்க எப்பவும் போல துப்பாக்கி கத்தி கடப்பாரைன்னு சொல்றீங்க , அவனும் கைத் தட்டி ஆ ஊன்னு சத்தம் போட்டு என்ஜாய் பண்றான்..
"அவனுக்கு என்ன புடிச்சிருக்கோ அதைக் கேட்கட்டும் விடு , தூக்கிட்டானா
"ஆச்சு ஆச்சு தூங்கிட்டான் .... தாய் தகப்பன் நலன், நீ சாப்பிட்டாயா கொண்டாயா என்று சிறிது நேரம் அவளிடம் பேசிக்கொண்டு இருந்தவன்..
" சார் இடம் வந்துருச்சு என்று ஆட்டோ ட்ரைவர் சொன்னதும்
"சரிம்மா போனை வைக்கிறேன் என்ற போனை வைத்தான்...
வேணி கையில் வைத்திருந்த போனை சிறிது நேரம் பார்த்து விட்டு தன் மடியில் தூங்கும் மகனை குனிந்து பார்த்தவள் அவன் வெற்றியில் முத்தம் கொடுத்து அவளும் மகனை கட்டிக்கொண்டு கண்களை மூடினாள்
டக் டக் கதவு தட்டப்பட்டது
படுக்கையில் கால் கைகள் வலியில் சுருண்டு கிடந்த திரவியா கண்களை திறக்க முடியாமல் திறந்து மணியை பார்க்க ...இரவு 12
"யார் இந்த டைம்ல வந்து கதவை தட்டுறது ..
"டொக் டொக் மீண்டும் சத்தம் வேகமாக வர
கடவுளே !!இவ்வளவு நாளும் பிரச்சனை இல்லாமதானே இருந்தது ... இன்னைக்கு யாரு வந்து கதவை தட்டுறது ... ஒருவேளை தெரு முக்குல இருக்கிற அந்த ரவுடி பசங்களா இருக்குமோ...திக்கென ஆகி போனது ....
இவள் வரும் பொழுதும் போகும் பொழுதும் அங்கே இருக்கும் வெட்டிபயல்க கிண்டல் அடிப்பது வழக்கம் இவள் கண்டு கொள்ளாமல் வந்து விடுவாள், ஒருவேளை அவர்களாக இருக்குமோ என்றவளுக்கு சற்று பயம் இருக்கத்தான் செய்தது...
டொக் டொக் டொக் இன்னும் வேகமாக கதவு தட்டப்பட....
ப்ச் எவனா இருந்தா என்ன , என்கிட்ட அத்து மீற பார்த்தா குடலை உருவிடமாட்டேன்... நேரா இடுப்புல ஒரு குத்து போட்டு முடிச்சு வைக்கிறேன் என்று தடுமாறி எழும்பி மேஜை மீது வைத்திருந்த கூர்மையான கம்பி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து கதவைத் திறந்து .... ஓங்கி குத்த போக
"ஏய்இஇஇஇஇஇஇஇ அவள் மணிக்கட்டை பிடித்து தடுத்து இருந்தான் உமாபதி ...
ஜஸ்ட் மிஸ் கொஞ்சம் தாமதித்து இருந்தால் பதி காலாவதி ஆகி இருப்பான்... வாசலில் நின்ற பதியை கண்டு அதிர்ந்த திரவியா
""அய்யய்யோ மாமா நீங்களா?? , நான் வெட்டிப்பயலுகன்னு நினைச்சேன்"திரவியா அசடு வழிந்தாள் ..! மெல்லிய நைட்டி ஒன்று அணிந்து இருந்தாள், தாலி தாராளமாக வெளியே தொங்கி கொண்டு கிடந்தது
ரெண்டு செகண்ட்ல குடலை உருவி எடுத்துட பாத்துட்டியே... என்றவன் பார்வை தாலியில் இருக்க
"இங்க யாரும் வர மாட்டாங்க ,அதான் வெளிய போட்டேன்.... "மாமா உண்மையாவே நீங்களா? என்ன தேடி வந்திருக்கீங்களா, நம்பவே முடியல
"ப்ச் வாசலை மறைச்சுகிட்டு நிக்காத தள்ளு ,உள்ள வரவா வேண்டாமா என்றதும் அவள் விலகி நிற்க உமாபதி உள்ளே வந்து வேகமாக கதவை அடைத்தான்
"என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்து இருக்கீங்க ...
"வாங்க வாங்கன்னு நீதான் உயிரை எடுத்த... வந்தா ஏன் வந்து இருக்கீங்கன்னு கேக்குற, ஏன் வரக்கூடாதா , இல்ல இப்ப வந்தது தப்பா
"அம்மாடி எத்தனை கேள்வி கேக்குறீங்க , நீங்க எப்ப வேணாலும் வரலாம் சாமி அதுக்கு ஏன் வந்ததும் வராதுமா குதிக்க ஆரம்பிக்கிறீங்க ..
"என்ன சொல்லிட்டு வந்தீங்க ?
"பெங்களூர் போறேன்னு சொல்லிட்டு வந்தேன்
" ஓ எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும் என்ன கவனிச்சுக்க வந்தீங்களா மாமா... உண்மையாக இந்த நேரத்தில் இப்படி வந்து திடுதிப்பென்று உமாபதி நிற்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை .. அந்த ஆச்சரியத்தின் வெளிப்பாடு அவள் சோர்ந்த முகத்திலும் சிரிப்பிலும் இருந்தது...
"அப்படி எல்லாம் இல்ல சிங்கப்பூர் கிளைன்ட் ஒருத்தன் என்னை அவசரமா பாக்கணும்னு கூப்பிட்டான் சென்னையில மீட்டிங் பாயிண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க.. வேற வழி இல்லாம ராத்திரி ஓட ராத்திரியா கிளம்பி வந்துட்டேன்..
"ஓஓஓஓ அவ்வளவுதானா??? என்றவள் அவன் பின்னாலே நடக்க ...
"ம்ம் இவனும் அங்கிருந்த சோபாவில் பேக்கை வைத்தபடி ஓரக்கண்ணால் அவளை பார்த்தான் காய்ச்சலில் சற்று வாடி வதங்கி தான் இருந்தாள்..
"நேத்தே தெரியும் சேலை கட்டிக்கிட்டு போய் ஆட போறேன்னு நீ சொன்னப்பவே புரிஞ்சிடுச்சு, உன்னை எவன் சேலை கட்டிட்டு போக சொன்னது...
"ஹான் சேலை கட்டினதுக்கும் காய்ச்சல் வந்ததுக்கும் என்னடா சம்மந்தம் என்று அவள் தலையை சொரிய
"பின்ன சாதாரணமாகவே இவ அழகா இருப்பா. சேலையில தங்கச் சிலை மாதிரி இருந்திருப்பா ஊர் கண்ணே இவ மேலதான் பட்டு இருக்கும், அதனால வந்த காய்ச்சல்தான் இது... முதல்ல காலடி மண்ணை எடுத்து சுத்தி போடணும் என்று அவன் உதடு அவளுக்கு தெரியாமல் முணுமுணுத்துக் கொண்டே வாங்கிக் கொண்டு வந்த காய்ச்சல் மாத்திரை, உணவு பொருட்களை தூக்கி டொம் என்று மேஜை மீது வைத்தான்
சாப்பிட்டியா?
இல்ல மாமா எழும்பவே முடியாம படுத்திருந்தேன் எங்க இருந்து சாப்பிட ?
"இந்த டைம்ல எவனும் கடையை திறக்கல இருந்த கடையில தான் ரெண்டு இட்லி வாங்கிட்டு வந்தேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... கிச்சன் எங்க ?என்று அவன் கேள்வியாக அவளை பார்க்க ... திரவியா கிச்சன் இருக்கும் பக்கம் கையை நீட்ட அப்போதுதான் கவனித்தான்.. ஹாலில் அவர்கள் திருமண போட்டோ அழகாக பிரேம் போட்டு நடு அறையில் தொங்கிக் கொண்டிருந்தது... அவன் முறைப்பாக அவளை பார்க்க
"ஹிஹி, இங்கு யாரு வருவாங்க... என் பிரெண்ட்ஸை கூட இந்த வீட்டுக்குள்ள நான் அனுமதிச்சது இல்லை .... முதல் முதல்ல, என்ன தாண்டி இந்த வீட்டுக்குள்ள வர்றது நீங்கதான் மாமா , அதனால பயம் இல்லை.. யாரும் பார்த்திருக்க மாட்டாங்க" தோளை உலுக்கிக் கொண்டு கிச்சன் உள்ளே போனவன் சுடுதண்ணீரை வைத்து அவளுக்கு குடிப்பதற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு,
"சாப்பிடு குளிச்சிட்டு வரேன்",
"ம்ம் அப்படியே போறதுக்கு முன்னாடி எனக்கும் கொஞ்சம் சுடுதண்ணி வச்சு தந்துட்டு போயிடுறீங்களா, காலையில இருந்து படுத்தே கிடந்தது உடம்பெல்லாம் வலிக்குது மாமா, கொஞ்சம் சுடு தண்ணியில உடம்புக்கு ஊத்துனா நல்லா இருக்கும் போல தோணுது.. பார்சலை பிரித்து கொண்டே அவனுக்கு கட்டளை வர ...
"நாய ஏவினா. நாயி தன் வாலை ஏவுமாம் அந்த கதையா இருக்கு ... ஐயோ பாவம்னு செஞ்சா நீ ரொம்ப தாண்டி ஏத்தம் பிடிச்சு என்ன ஏவி விடுற... என்று வாய் அவளை திட்டிக் கொண்டே கிச்சனில் அவளுக்கு நீரை எடுத்து அடுப்பில் வைத்துக் கொண்டிருந்தது ....
"நான் சாப்பிடுறது இருக்கட்டும் , நீங்க சாப்பிட்டீங்களா மாமா
"ம்ம் சாப்பிட்டு தான் வாங்கிட்டு வந்தேன் , இட்லியை எடுத்து வாயில் வைத்துக் கொண்டே குளியலறை உள்ளே நுழைந்த உமாபதியை நெட்டி முறித்தாள்...
என்னைய பார்க்க வந்திருக்கார் .. இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே, கடவுளே சந்தோஷத்துல மூச்சு அடைச்சு செத்துப் போவேன் போல இருக்கே ... ஒரு மாதிரி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதே நம்ப முடியாது மூச்சு திணறிக் கொண்டிருந்தாள்....
குளியலறை கதவு திறக்க இவள் ஆவலாக அங்கே திரும்பி பார்க்க.. அவனோ டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு வெளியே வர ... சலித்து கொண்டவள்
ஏன் வெளியே வந்து உடம்பு துடைச்சா ஆகாதா கணவரே என்று கேட்க அவளை கடுகடுப்பாக முறைத்தவன்
"காய்ச்சல் காரின்னு பாக்க மாட்டேன், நாலு அறை செவுட்டு வாக்குல விட்டுருவேன்...உன் மூச்சு காத்து கூட என் மேல படக்கூடாது அப்படி இருக்கிறதா இருந்தா ராத்திரி இங்க இருக்கேன் , இல்ல பக்கத்துல நல்ல லாட்ஜ் இருக்காம் அங்க போய் ரூம் போட்டு படுத்துகிறேன்" என்றதும் வாயை பொத்திக் கொண்டவள்
" சத்தியமா உங்க பக்கத்துல நான் வரமாட்டேன் படுத்துக்கோங்க" படுக்கையில் அவனுக்கு படுக்க இடம் கொடுக்க ... அவளை மேலும் கீழும் பார்த்தவன் அவள் அருகில் வர, இவளுக்கு மூச்சு நின்று விடும் உணர்வு !!
ஒரே கட்டிலில் அவனோடு அவள் , நைட்டி மீது கிடந்த தாலியை அவள் கைகள் சுருட்டி விளையாட அவனோ அவள் பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்துக்கொண்டு போய் அங்கே கிடந்த சோபாவில் போட்டு குப்புற படுத்துக்கொண்டான்...
அய்ய என்று தலையில் அடித்தவள்
மாமா
மாமா
யோவ் மாமா ப்ச் உண்மையாவே தூங்கிட்டாரா??
"சரி தேடி வந்துட்டார்ல அதுவே போதும் "என்று படுக்கை குலுங்க விழுந்து படுத்தவள் கொலுசு சத்தம் அவனை இம்சை செய்து கொண்டே இருந்தது ... தூங்காது அவள் கண்கள் அவனை ரசித்து கொண்டு கிடக்க.... தூங்குவது போல நடத்து கொண்டு கிடந்த அவனும் அரை கண்ணில் அவளை ரசித்து கொண்டு கிடந்தான்...
தேடி வந்தே விட்டான் இனி என்ன முக்காடு?
ஒரு நாள் கண்ணியம் காக்கலாம்
தினமும் காக்க முடியுமா
ஆசை கண்ணியத்தை வெல்லும்!!