துணைவி மனைவி12

Thu12

துணைவி மனைவி12

12 இவள் துணைவி !!

      அவள் மனைவி!!

என்ன மாமா குட்டி தூங்கிட்டானா?

ஆமாம்மா

திரா, ட்ரெயின் சரியா பிடிச்சிட்டாளா? உள்ளே நுழைந்த உமாபதி தோளில் தூங்கிக் கொண்டிருந்த மகனை வேணி ஓடி வந்து வாங்கியவன் மணியை பார்க்க இரவு ஒன்று 

மணி என்ன ஆகுது, நீ இன்னும் தூங்கலையா வேணி

"இல்ல மாமா நீங்க வீட்டுக்குள்ள வந்தா தானே எனக்கு நிம்மதியா தூக்கம் வரும் ... அவளை ஒரு நிமிடம் தடுமாற்றமாக பார்த்துவிட்டு 

"சரிம்மா போய் குளிச்சிட்டு வந்துடுறேன்

"ம்ம் , நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் 

"இல்லம்மா பசிக்கல .

"ஏன் மாமா என்ன ஆச்சு? உடம்புக்கு ஏதாவது செய்யுதா ...

"அப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா , இன்னிக்கி மனசு ஒரு மாதிரி ஃபுல்ஃபில்லா இருந்த மாதிரி இருக்குது.. அதனால பசிக்கல போல

"ஓஓஓ அப்படியா புதுசா ஏதாவது கிடைச்சிருக்கா மாமா? என்ற வேணி கேள்வியில் பதி அதிர்ந்து போய் திரும்பி பார்க்க

"புதுசா ஏதாவது ஆர்டர் கிடைச்சி இருக்கான்னு கேட்டேன் மாமா

"அது

"சிங்கப்பூர் கிளைண்ட் ஒருத்தர் கொட்டேஷன் கொடுத்திருக்கார்னு சொன்னீங்கல்ல ... அது கிடைச்சிடுச்சோ

"ஆமாம்மா கிடைச்சிடும் போல...

"நினைக்காத ஒன்னு கையில கிடைச்சா அந்த பீலே ஹேப்பி இல்ல மாமா "

"ம்ம் என்று மென்று முழுங்கி விட்டு குளியலறை நோக்கி போய்விட்டான்... 

தலையை துடைத்து கொண்டு பதி வெளியே வர , வேணி படுக்கை மீது புத்தகத்தை வைத்து புரட்டி கொண்டிருந்தாள் ஒரு கை அவள் பாதத்தை வலியில் அமுக்கி கொண்டிருக்க 

என்னம்மா கால் வலியா ?

"ஆமா மாமா எப்பவும் வர்றதுதான்.... இந்த பொடியன் பின்னாடியே ஓடி ஓடியே கால் வலி வந்துடுது , கெளரி நல்லா வளர்ந்துட்டான் இல்ல மாமா .... 

"ம்ம் நல்லா வளர்ந்துட்டான்" என்றவன் தைல பாட்டிலை எடுத்து கொண்டு வந்து வேணி காலடியில் அமர ...

வேண்டாம் மாமா லேசு வலிதான் 

"ப்ச் கொடு" அவள் காலை பிடித்து தன் தொடை மீது வைத்து சூடு பறக்க தைலத்தை தேய்த்து விட ஆரம்பித்தான்... அவன் கை விரலில் சூடாக நீர் வந்து தெறிக்க!.. ஏதோ யோசைனையில் இருந்த உமாபதி ஏதோ யோசனை என்ன ? ட்ரெயினில் ஒத்தையாக போகும் திரவியா சரியான நேரத்திற்கு போய் சேர்ந்து இருந்தால் இவ்வளவு நேரத்தில் மெசேஜ் செய்திருப்பாளே .. என்ன ஆனது என்ற யோசனை தான் அது ... கையில் பட்ட சூடான நீரில் பதறி உமாபதி அண்ணாந்து பார்க்க, படுக்கை மீது சாய்ந்து உட்கார்ந்து இருந்த வேணியின் கண்களில் இருந்து தான் அந்த கண்ணீர் துளிகள் பதி கையில் தெறித்தது 

"என்னமா என்ன ஆச்சு வலி பொறுக்க முடியலையா ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிட்டல் வேணும்னா, போகலாமா ? அவன் பேச்சில் மாயமில்லை பொய்யில்லை ,வலிக்கிறதோ என்ற பதட்டம் உண்மையாகவே இருந்தது ...

அவளைப் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது என்பதற்காக இவளை பிடிக்கவில்லை என்றெல்லாம் கிடையாது ...  

தேங்க்ஸ் மாமா..

எதுக்கும்மா ? 

"எல்லாத்துக்கும்!! வேற யார் கூடையாவது கல்யாணம் நடந்திருந்துச்சுன்னா,இந்த அளவு நான் நிம்மதியா சந்தோஷமா இருந்திருப்பேனான்னு எனக்கு தெரியாது, கடவுள் எனக்கு தந்த வரம் மாமா நீங்க... மனம் உருக பேசிக் கொண்டிருந்த வேணியின் முகத்தையே உமாபதி வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் தோளில் கை வைத்து அழுத்திய வேணி  

"என்ன மாமா நான் பேசிட்டு இருக்கேன் , என் முகத்தையே இப்படி பார்த்துகிட்டு இருக்கீங்க..

"சும்மாதான்மா, உன் முகத்தில இருக்கிற இந்த நிம்மதி சந்தோஷம் எப்பவும் கெட்டுற கூடாது... அதுக்காக முடிஞ்ச வரைக்கும் போராட பார்க்கிறேன்... 

"உங்களால என் நிம்மதி சந்தோஷத்தை ஒரு நாளும் கெடுக்க முடியாது மாமா...

ம்ம நானும் அதுக்கு தான்மா ட்ரை பண்றேன்... வலி குறைஞ்சிடுச்சா ? 

ஆமா மாமா "

படுத்துக்கோ "என்று அவளுக்கு தலையணையை சரி செய்து கொடுத்துவிட்டு , அவள் படுத்ததும் இன்னொரு பக்கத்தில் வந்து படுத்தான்.. திரும்பி வேணியை பார்த்தான்.. அவளும் தலையை திருப்பி உமாபதியைத்தான் பார்த்தாள்.. 

குட் நைட் மாமா புன்னகை முகமாக வேணி கூற 

குட் நைட்ம்மா.... பெருமூச்சு விட்டான்

எப்படி பார்த்தாலும் இது முறையல்ல!! சரியில்லை என்று மனித மூளைக்கு தெரிந்தது.. மனம் தான் எல்லாவற்றிற்கும் ஆசைப்படுமே !! ஆசைப்பட்டதை எல்லாம் அடைய நினைத்தால், அவன் எப்படி நல்ல மனிதனாக இருக்க முடியும்?

தவறுகிறோம் என்று தெரிந்தது , திருத்திக் கொள்ள வாய்ப்பு இன்னும் இருக்கிறது... திருந்தி விடுவோம் இல்லை இவளுக்கும் கஷ்டம் , அவளுக்கும் கஷ்டம் புரிந்தது.. நிம்மதியாக தூங்கும் வேணி தூக்கத்தை தலையை திருப்பி பார்த்த உமாபதி மனதிற்குள் சொல்ல முடியாத பாரம் போட்டு அமுக்கியது போல் இருந்தது... ஃபோனை எடுத்து திரவியா இரண்டு என்ற நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டு படுத்து விட்டான்....  

திரவியா நம்பரை ப்ளாக் செய்த அவனுக்கு 

நியாயப்படி நிம்மதி வந்திருக்க வேண்டும் .. நிம்மதி வந்ததா ? வரவில்லையே !!

தூக்கம் வராமல் அங்கும் இங்கும் படுக்கையில் புரண்டவன்... 

"ப்ச் வேண்டாம்னு ஓட ஓட வம்படியா இழுத்து இப்ப மண்டை முழுக்க சுத்தி வருது குட்டி நாயி, இவளை நினைக்க கூடாதுன்னு சொல்லி சொல்லியே நினைக்க வச்சிடுவா போல .. அப்படி என்னதான் என்கிட்ட இருக்குதுன்னு என் காலை சுத்தி வந்துட்டு இருக்கா , இவ அறியாம செய்யிறது மாதிரியும் இல்ல, பக்காவா பிளான் பண்ணி என்ன கவுக்குறா.... ஊப்ஸ்இஇஇ 

அவளுக்கு முன்னாடி வேற ஒரு பையன் கஞ்சா குடிக்கி மாதிரி இருந்தானே ஏதாவது சில்மிஷம் பண்ணி இருப்பானோ ? அந்த கம்பார்ட்மெண்ட்ல பெண்களே இல்லையே , பாதுகாப்பா போய் சேர்ந்திருப்பாளா? எத்தனை தடவை எனக்கு போன் போட்டு பார்த்தாளோ தெரியலையே.. பிளாக்கை எடுத்து ஒரு தடவை வாட்சப் செக் பண்ணுவோமா? ப்ச் வேண்டாம் , பிளாக் பண்ணினது பிளாக் பண்ணுனதுதான்... அவளோட நலனைப் பத்தி யோசிக்கிறதுக்கு, அவங்க அம்மா அப்பா இருக்காங்க .... போதும் , இத்தோட நிறுத்திப்போம் நாம அவ பக்கத்துல திரும்பி பாத்தாதானே பிரச்சனை... அவ பக்கத்துல திரும்பி பார்க்க வேண்டாம்.... இப்ப மனசை இறுக்கி வச்சுக்கலன்னா முதலுக்கே மோசம் ஆகி போகும்... மீண்டும் அவள் பின்னால் போகும் மூளையையும் , இதயத்தையும் கட்டி இழுத்துக்கொண்டு வந்து சிறை செய்து, அமுக்கிப் போட்டு அமைதிப்படுத்த முயற்சி செய்து , அதில் வெற்றியும் கண்டு சற்று தூக்கத்திற்கு கண்கள் சொக்கிய நேரம்..... 

நினைவில் மறைந்தவள் கனவில் வந்தாளே... திரவியா எதிரே இருந்த அந்த கஞ்சா குடுக்கிற, அவள் மீது அத்துமீற போக அவ்வளவுதான் வந்த தூக்கம் போன இடம் தெரியவில்லை.... 

பதட்டம் பற்றிக்கொள்ள, நீரை எடுத்து மடக் மடக் என்று குடித்தான்... பதட்டம் குறைய மறுத்தது...போனை எடுத்து அவள் நம்பரை நோக்கி அவன் விரல் விரைய.... கையை நகர விடாது அழுத்தி பிடித்து கொண்டான்... 

"நோ நோ என்ன ஆனாலும் பரவால்ல, அவளுக்கு போன் போடக்கூடாது... அவ கூட பேசக்கூடாது இத்தோட அவளுக்கு முற்றுப்புள்ளி வச்சே ஆகணும் உமாபதி, அவ சொல்றது போல பாதி பாதி எல்லாம் செட்டே ஆகாது.... அவ சொன்னா உனக்கு எங்க போச்சு மூளை , வம்பா செத்துடாத ... 

இந்த நிமிஷம் நீ தடுமாறிட்டன்னா, இனிமே உன்னை காப்பாத்த அந்த கடவுள் கூட வர முடியாது... ரிலாக்ஸ் ரிலாக்ஸ், அவள நினைக்காத ரிலாக்ஸ் என்று தன் இருதயத்தை தடவிக் கொண்டான்... படபடவென்று துடித்துக் கொண்டே இருந்த இருதயம் அவன் சொல்பேச்சை கேட்கவில்லையே.. 

ப்ச் இது வேலைக்கு ஆகாது சாமி , வெளிக்காத்து வாங்கினாதான் மூச்சடைப்பு தீரும் போல" என்று எழும்பி சத்தம் இல்லாமல் கபோர்டு திறந்து துணிகளுக்கு அடியில் வைத்திருந்த சிகரெட் பாக்ஸை எடுத்துக்கொண்டு பால்கனி நோக்கி நடந்தான் ... எப்போதாவது இந்த பழக்கம் உண்டு வேணிக்கும் தெரியும்... நடு இரவு யாருக்கும் தெரியாமல் ஒரு இழு இழுத்து விட்டு வருவான்...

புகையை ஊதியும் பதட்டம் குறைய மறுக்கவே.. 

புது வீட்டுக்கு வேற ஆட்டோ பிடிச்சு போகணும்னு சொன்னாளே, ஒருவேளை அந்த கஞ்சா நாதாரி பின்னாடி போய் .. நோ நோ இவ மிதிக்கிற மிதிக்கு அவன்தான் அலறி அடிச்சு ஓடணும்... என்னையே தெறிச்சு ஓட வைக்கிற புண்ணியவதில்ல வயசு தான் குட்டி , வாய் என்னாமா நீளுது வெட்ககெட்ட பேச்சு பேச இவகிட்ட தான் கிளாஸ் போகணும் அவள் நியாபகத்தில் உதடு விரிய திண்டில் அமர்ந்து புகையை விட்டு முடிக்க வேறு ஏதோ நம்பரில் இருந்து போன் கீர் கீர் என்று அடித்தது இப்போது எல்லாம் இவளுக்கு பயந்தே இரவு சைலண்டில் போனை போட்டு விடுவது வழக்கம் 

யார் இந்த நேரத்தில, ஒருவேளை அவளுக்கு எதாவது ஆகிடுச்சோ? கடவுளே!! பதறி போனை எடுத்துவிட்டான்...

மாமா மாமா திரவியா பதட்ட குரல் வர 

என்னடி ஆச்சு ?... இவனும் பதற

"தேங்க் காட் .... உங்க போனுக்கு போன் போட்டுக்கிட்டே இருந்தேன்.. ரீச் ஆகல , அதான் பயந்துட்டேன்... பக்கத்துல இருந்தவர் கிட்ட போன வாங்கி உங்களுக்கு போன் போட்டு பார்த்தேன் ஒன்னும் ஆகலையே.... சரியா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டீங்க இல்ல ... 

இவ்வளவு நேரமும் மாறி மாறி போன் போட்டு பார்த்து ஒரு மாதிரி நெர்வஸ் ஆயிடுச்சு.. நல்லா இருக்கீங்கதானே என்றவள் அழுதுவிடும் குரலில் கேட்க .... பதி கையில் முடியும் தருவாயில் இருந்த சிகரெட் அவன் கையை சுட்டுவிட 

ஆஆஆஆ என்று பதறி சிகரெட்டை கீழே போட்டவன் குரலில்

"மாமா என்னாச்சு?

" வீட்டுக்கு வந்துட்டேன் போன் சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு .. இப்பதான் சார்ஜ் போட்டு எடுத்தேன்

வேற எதுவும் இல்லையே மாமா... 

நல்லாதான் இருக்கேன், நீ போய் சேர்ந்துட்டியா?

ம்ம் இப்பதான் மாமா வந்து இறங்கி இருக்கேன் ஆட்டோவில் ஏற போறேன்...

"ம்ம் பாத்து பத்திரமா போ ... வீட்டுக்கு போய் சேர்ந்ததும் மெசேஜ் பண்ணு .. 

சரி மாமா, மறுபடியும் போன் ஆப் பண்ணி வச்சிட மாட்டீங்களே ?

மாட்டேன்

ம்ம் வைக்கிறேன் மாமா என திரவியா போன் வைக்க ..

அவன் இதயத்தை தைத்த முள் வலித்தாலும் அது வேண்டும் என்றே அறைகூவல் விடுக்க... அவன் கையால் ப்ளாக் செய்த திரவியா நம்பரை மறுபடியும் விடுவித்து 

செல்லவீடு என்று சேவ் பண்ணி வைத்தான் ....

ஆசையே துன்பத்துக்கு காரணம் சும்மாவா சொல்லி வைத்தார்கள்!!

ஆசைபடுவதே துன்பம் வர காரணம் என்றால் 

இவர்கள் ஓடுவது பேராசையே என்ன வர காத்திருக்கிறதோ??