துணைவி மனைவி13
Thunai13
13 இவள் துணைவி
அவள் மனைவி!!
"மாமா வீடு வந்து சேர்ந்துட்டேன் "என்று செல்ல வீட்டிடம் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வர...அதற்காக காத்திருந்த உமாபதி தம்சப் பட்டனை அமுக்கி பார்வேர்ட் பண்ண...
"லவ் யூ மாமா , குட் நைட் என்று அங்கிருந்து ஹார்ட்டின் அம்பு எல்லாம் காதலாக பறக்க .. அதற்கு எந்த ரிப்ளையும் அனுப்பவில்லை
"இச் இச் இச்" அவளோ உதடுகள் குவித்து எமோஜி அனுப்ப இவன் முறைத்தமேனிக்கு இங்கிருந்து பொம்மைகள் அனுப்பி விட
"போடா ஐ லவ் யூ தான்"
"டாவா பல்லை உடைச்சுடுவேன்டி"
"பல்லை உடைச்சாலும் பரவாயில்லை , போடா சொல்லுவேன் .. என் புருஷனை டா போட்டு கூப்பிடுறதுக்கு யாரு கிட்ட கேக்கணும் ... ஐ லவ் யூ டா கணவா "என்று இவள் மீண்டும் இச் இச் அனுப்பி விட...
"தூக்கம் வருது" என்று இவன் கொட்டாவி விட்ட பொம்மையை அனுப்ப
"ஓகே மாமா , தலையணையை நீங்களா நினைச்சு கட்டி புடுச்சிட்டு தூங்க போறேன்... எப்படின்னு கேட்கிறீங்களா?? இப்படி !!"தலையணை மீது அவன் போட்டோவை ஒட்டி வைத்து அதை போட்டோ எடுத்து அனுப்பி விட்டிருக்க .. பதி அதை பார்த்து கொண்டே இருக்க
"நீங்களே என்ன கட்டி புடிச்ச மாதிரி பீலா இருக்கும் அதுனாலதான் ஹாஸ்டல் போகல.. இங்க நானும் உங்க நினைவுகளும்னு சுதந்திரமா உங்களை லவ் பண்ண போறேன் .... கனவுலை மறக்காம வந்துடுங்க குட் நைட் , :குறட்டை விடும் பொம்மைகளை அனுப்பி வைத்து விட்டு அவள் ஆப்லைன் போக
"ஊப்ஸ்இஇஇ, இதுவும் நல்லாதான் இருக்கு தலையை கோதி அவள் அனுப்பிய செய்திகளை மறுபடி மறுபடி ரீட் செய்து கொண்டே நிற்க.. படாரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டு உமாபதி பதறி போனை கீழே விட , பட்டென்று வேணி கைகள் அந்த போனை தாங்கி பிடித்து கொள்ள ... திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் உமாபதி தன் முன் போனோடு நின்ற வேணியை எச்சில் விழுங்கி பார்க்க
"என்ன மாமா இந்த நேரம் யார்கிட்ட போன் பேசிட்டு இருக்கீங்க ??"என்று வேணி போனை பார்க்க போக உமாபதி , அவள் கையில் இருந்து வேகமாக போனை வாங்கி தன் ட்ராக்பேண்ட் உள்ளே போட்டு கொண்டவன்..
"அது அது ,ஹான் சிங்கபூர் கிளைண்ட் . இப்ப தான அவங்க ப்ரீயா இருப்பாங்க "
ஓஓஓஓ ப்ராஜக்ட் ஓகே ஆகிடுச்சா மாமா..
"இல்லம்மா பேசிட்டே இருக்கேன், ஓகே ஆகிடும்
ஓகே ஆன பின்ன ஒருநாள் சேர்ந்து கோவில் போய் காணிக்கை கொடுத்துட்டு வந்திடுவோம் மாமா
"அது எல்லாம் சரிதான்மா , ஆனா இதுக்காக உழைச்சது நான், கடவுள் என்ன செஞ்சார்னு அவருக்கு கிம்பளம் கொடுக்கிற..."
"மாமா இதுக்கு வாய்ப்பு தந்தது கடவுள்தானே... கடவுள் வாய்ப்பை கொடுபபான், அதை அப்படியே பிடிச்சிக்கணும் அவர் அந்த மனுசனை அனுப்பி விட்டதாலதான , உங்களுக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைக்க போகுது .... அவரை பழிச்சு பேசாதீங்க கன்னத்துல போடுங்க , முறைப்பாக வேணி அவனை பார்க்க ...
"கடவுளை பற்றி பூசாரிக்கு நிறைய தெரியுமோ... இல்லையோ, உனக்கு தான் அதிகமா தெரியும் உன்கிட்ட போய் உன் கடவுளை குறை சொல்லுவேனா, தப்புதான் தப்புதான்" என்று உமாபதி கன்னத்தில் போட்டுக்கொள்ள...
"அது ,இனிமே கடவுளை பத்தி தப்பா சொல்லக்கூடாது... "
பேசி முடிச்சிட்டிங்களா மாமா? "
"யாரு.....க்கிட்ட ??
"அதான் கிளைண்ட்கிட்ட
"ஹான் ஆமா
"அப்போ வந்து தூங்குங்க மாமா, ராத்திரி நேரம் இப்படி முழிச்சு கிடக்காதீங்க உடம்பு கெட்டு போகும்" கொட்டாவி விட்டு கொண்டு வேணி அறைக்குள் போக நெஞ்சில் கை வைத்தவன்
"அப்பாடா ஆஆஆ கரணம் தப்பினா மரணம் ரேஞ்சுலல்ல இருக்கு .... இழுத்து மூச்சை விட்டவன் மெல்ல போய் படுக்கையில் படுத்தவன் அருகே புதிய தலையணை ஒன்று கிடக்க
"புது தலையணை வாங்கி போட்டியாம்மா
"இல்லைங்க மாமா, இது திரா பண்ணின தலையணை? எனக்கு செஞ்சு தந்தா , ஆனா தலையில வைக்க முடியல , எப்பவும் உயரமா வச்சி பழகிட்டேனா, இது ஒரு மாதிரி சப்பையா கிடக்கு..." அரை தூக்கத்தில் அவள் கதை சொல்ல ...
"ம்ம்ம் போட்டவன் அந்த தலையணையை அவன் கைகள் மெல்ல எடுத்து தன் முகத்தில் வைத்து அழுத்தி கொள்ள சின்னமனைவி வாசம் அடிப்பது போல உணர்வு, அப்படியே அதை அணைத்து கொண்டே உமாபதி தூங்கி போனான்..
காலை அவன்மீது மகன் காலை போட்டு தூங்கிக் கொண்டிருக்க.. கண்களை முழித்த உமாபதி தன் மகனுக்கு வழக்கம் போல ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு அறையைப் பார்க்க ... எப்போதும் போல காட்சிகள் எதுவும் மாறவில்லை, சாம்பிராணி புகையோடு வேணி நின்று கொண்டிருந்தாள் .ரர அரக்கப் பறக்க காலை நேரத்தில் வேலையில் அவள் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்க .. இவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வைத்திருந்த தன் போனை எடுத்து வேகமாக திரவியா வாட்ஸ் அப்பை திறந்து பார்க்க அசப்பு இல்லாமல் இருந்தது...
ப்ச் ஏதோ சலிப்பு, போய் குளித்து கிளம்பி கீழே வந்தவன் தட்டில் சாப்பாடு ஆவி பறக்க வர... ஒரு கை சாப்பிட, மறுகை போனை அவ்வப்போது திறந்து திறந்து பார்த்தது
ப்ச் மணி ஒன்பதாவது இன்னும் எழும்பாம, இந்த குட்டி நாய் என்ன பண்ணுது? என்று ஏகத்துக்கு எரிச்சல் வேறு வர
"என்ன மாமா யார் போனுக்கு வெயிட் பண்றீங்க" என்று வேணி அருகே வரவும் போனை பாக்கெட் உள்ளே திணித்து கொண்டவன்
"இல்லையே
"இல்ல இதோட ஆயிரமாவது தடவை போனை தட்டுறதும் வைக்கிறதுமா இருக்கீங்களே அதான் கேட்டேன் "
"ச்சை அத்தனை தடவையா அவளை தேடுது இந்த பொல்லா மனசு, நான்தான் யோக்கியன் நினைச்சுட்டு இருந்தேனே, இப்படி அயோக்கியன் ஆக்கிட்டாளே
"மாமா என்ன யோசனை என்று வேணி மறுபடியும் குரல் கொடுக்க
"ஓஓஓ அதுவா கிளைண்ட் ஒரு பைல் வாட்சப்ல அனுப்புறேன்னு சொன்னார் , அதான் அப்பப்ப செக் பண்ணுனேன்மா.... தடுமாற்றம் இல்லாது பொய் சொல்ல பழகி விட்டான்..
பின்னாடி ஓடுறது எல்லாம் சரிதான் மாமா, ஆனா என்னைக்காவது மாட்டிக்காதீங்க "என்ற வேணியை பதி திகைத்துப் போய் பார்க்க...
"எதை சொல்ற ???
"அதான் மாமா வேலையை சொல்றேன்.. வேலை வேலைன்னு ஓடுறது எல்லாம் சரிதான் ... நோய் வந்து மாட்டிக்க கூடாது , கொஞ்சம் ரிலாக்ஸும் அவசியம் ... பேசாம இந்த வாரம், ரெண்டு நாள் லீவ் போடுங்க .. சாய்பாபா கோவில் வரைக்கும் போயிட்டு வந்துடலாம்..."
"அம்மாடி இந்த கோவில் பூஜை இதெல்லாம் உன்னோட வச்சுக்க , எனக்கு காவி வேட்டி கட்டி விட்டுராத நான் பாவம்.... நேரம் ஆயிடுச்சு குட்டி கிளம்பிட்டானா பாரு, ஆபீஸ்க்கு போகணும் "
"மணி 9 தானே மாமா ஆகுது.. எப்பவும் 10 மணிக்கு தானே போவீங்க ..."
"ஹான், அது கொஞ்சம் வெளிய வேலை இருக்கும்மா...
"சரி மாமா, அவனுக்கு சாப்பாடு மட்டும் கொடுத்து கூட்டிட்டு வரறேன் என்று வேணி மகனை ரெடி பண்ணி அனுப்ப .. மகனை , காரில் அழைத்துக் கொண்டு வந்து ஸ்கூலில் விட்டவன்.. ஸ்கூல் கேட் கூட தாண்டவில்லை... வேகமாக போனை எடுத்து செல்லவீட்டுக்கு தட்டினான்..
நீ பாதி நான் பாதி அன்பே நீ இன்றி தூங்காது கண்ணே!! என்ற பாடல் அழகாக காதை சிவக்க வைக்க ...
ப்ச் எங்க போய் தொலைஞ்சா?
மீண்டும் அழைப்பு போக ,
ஹலோ மாமா" என்ற அவளின் உற்சாக குரலில்தான் இவனுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டதோ?
எங்க இருக்க ?"
"வீட்டுல தான் மாமா காலேஜ் ரெடியாகிட்டு இருந்தேன் .. காரின் மீது சாய்ந்து நின்றவன்,
"அங்க ஓகே தானே
"என்னாச்சு மாமா?
"இல்ல காலையில இவ்ளோ நேரம் ஆயிடுச்சு எந்த சத்தமும் இல்லையே அதான் வீடு எல்லாம் ஓகே தானே கேட்க போன் போட்டேன்.."
"இல்ல நீங்க வீட்ல இருப்பீங்க , எதுக்கு என்னால தேவையில்லாத பதட்டம்னு போன், மெசேஜ் எதுவும் பண்ணல .... நீங்க பத்து மணிக்கு வெளியே வருவீங்கன்னு தெரியும் ... அதுக்கு பிறகு போன் போட்டுக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. இப்பதான் போனை கீழ வச்சிட்டு சாப்பாடு ரெடி பண்ண போனேன்... அதுக்குள்ள , உங்க போன் வந்தது , அப்படியே அடுப்புல எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி வந்துட்டேன்.... வீட்லயா இருக்கீங்க மாமா ? ""
"இல்ல குட்டியை ஸ்கூலுக்கு விட்டுட்டு ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கேன்... இப்பதான் ஞாபகம் வந்தது அதான் அங்க எல்லாம் ஓகேவான்னு கேக்குறதுக்கு போன் போட்டேன்.. வேற ஒன்னும் இல்ல" உமாபதி அசால்ட் குரலில் பேச
"வேற எதுவும் இல்லையா மாமா? " என்று குரலில் சற்று நக்கல் தொனி இருக்க...
"ஒத்தையா கிடக்கிறியே பாதுகாப்பு எல்லாம் எப்படி இருக்குன்னு கேட்கிறதுக்கு தான் போன் போட்டேன் வேற எந்த கருமமும் இல்லை ...
"பாதுகாப்புக்கு என்ன மாமா, வலது பக்கம் இருக்கிற வீட்டுல அஞ்சு காலேஜ் பசங்க இருக்காங்க ...இடது பக்கம் நடுத்தர வயசு ஜோடிங்க இருக்காங்க... ஓரளவுக்கு சேஃப் தான்...
"காலேஜ் பசங்களா இவனுக்கு கடுகடுவென்று காது நரம்பு சிவந்தது
"ஆமா
"நேத்து ராத்திரி தானே இந்த வீட்டுக்கு வந்த
"ம்ம்
அதுக்குள்ள அக்கம்பக்கத்துல யாரு இருக்காங்கன்னு போயி கதை பேச ஆரம்பிச்சுட்டியா ? அங்க எதுக்குடி போய் வாய் பார்த்துகிட்டு நிக்கிற... காலேஜ் முடிச்சா வீடு , வீட்ட தாண்டுனா காலேஜ் வேற எங்கேயாவது உன் தலை தெரிஞ்சது தொலச்சிடுவேன் ....
"இது பொசசிவா இல்ல பொண்டாட்டி மேல வந்திருக்க லவ்வா மாமா??
"முதல்ல ஒழுங்கா படிக்கிற வழிய பாரு
" ஏன் மாமா ஒழுங்கா படிச்சா என்ன பிளைட் ஓட்ட அனுப்ம போறீங்களா? எங்க அக்கா இன்ஜினியரிங் கோல்ட் மெடலிஸ்ட் அவளையே படிச்சு முடிச்சு பட்டம் வாங்குன அடுத்த நாள் உங்களோட புடிச்சு தள்ளி விட்டுட்டாங்க.. எனக்கு மட்டும் என்ன நடக்க போகுது, அரியர் வச்சா என்ன வைக்கலன்னா என்ன ... சோ லவ் தான் முக்கியம் லைப் தான் முக்கியம்,
லவ் , லவ்வுன்னு கோட்டி பிடிச்சு திரியாத...
"அந்த கோட்டி தானே ரொம்ப பிடிச்சு இருக்கு என்ன கலர சட்டை போட்டு இருக்கீங்க மாமா
"ப்ச் அது எதுக்குடி உனக்கு?
"சரி சொல்ல வேண்டாம் நான் கருப்பு கலர் தாவணி
"தாவணியா?? இவன் சத்தம் இல்லாது முனக
"ம்ம் இன்னைக்கு ஏதோ விழாவாம் அதான் தாவணி கட்டிட்டு வர சொன்னாங்க சோ கட்டியாச்சு...மாமா கேட்கிறீங்களா? தன் கருப்பு சட்டையை மணிக்கட்டு வரை மடித்து விட்டு பிடரி முடியை கோதினான்..
"நசநசன்னு பேசுற உன் பேச்சை கேட்க எனக்கு டைம் இல்ல வை" என்று போனை சூர்மையாக பதி வைத்து விட்டான்
"தாவணியா சும்மாவே அழகா இருப்பாளே தாவணியில ஊப்ஊஊஊஊ ஒரு போட்டோ அனுப்பினா நல்லா இருக்குமே, எப்படி இருக்கான்னு பார்த்துடலாம்" என்று பதி கழுத்தை தடவ டிங் டிங் டிங் என்று போட்டோக்கள் வந்து விழ விரல் பரபரப்பாக அதை ஓபன் பண்ண போக
"நோநோ பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்த மாதிரி பார்த்து வச்சா அவ கிண்டல் பண்ணியே சாகடிச்சிடுவா , வெயிட் வெயிட் சிறுது நேரம் விட்டு போட்டோவை டவுன்லோட் பண்ண
"வாவ்ஊஊஊஊஊ "கருப்பு தாவணி கோல்டன் பாவாடை ஜாக்கெட்டில் அழகிய யுவதியாக திரவியா செல்பி எடுத்து அனுப்பி இருந்தாள்..
ஒன்றில் உதட்டை குவித்து
மற்றொன்றில் பூவை முன்னால் தொங்க போட்டு...
"எப்படி இருக்கு மாமா??" மெசேஜ் வர
"இந்த மாதிரி போட்டோ அனுப்புற வேலையை எல்லாம் வச்சிக்காத.. இதுதான் லாஸ்ட் வார்னிங் என்று வாய்ஸ் நோட் அனுப்பியவன் கைகள் பத்திரமாக மூன்று போட்டோவையும் பாஸ்வேர்ட் போட்ட பைல் உள்ளே சேவ் பண்ணியது அவள் எப்படி அறிந்தாளோ
"சேவ் பண்ணிடீங்களா மாமா அழிச்சிடவா? அவள் கேள்வி வர ,
"கண்டுபிடிச்சிட்டா" என்று நாக்கை கடித்தான்....
"உன் போட்டோவை சேவ் பண்ணி நான் என்ன செய்ய போறேன்
மண்ணு மீசையில இருக்கு , துடைச்சிட்டு போங்க
மாமா இச் இச் என்று அவள் வாய்ஸ் நோட் அனுப்ப ... சிரித்தபடி போனை அணைத்து உள்ளே போட்டவன் விசில் அடித்தபடி ஆபீஸ் நோக்கி சென்றான்...
கடைசியா ஒரு கருத்து சொல்ல நீங்க என்ன கும்மவா?