சில்லு சில்லாய்
jilu

சில்லு சில்லாய் !!
டீசர்!!
ஹாங்காங் ஆராய்ச்சி கூடம்
என்ன மிஸ்டர் ஹெலன் மார்க் சீனாவை மாதிரி என்னாலையும் சிலிக்கான் பொம்மை எல்லாம் செஞ்சு அதை மனுஷங்க மாதிரியே செயல்படுத்த முடியும்.. மனுஷங்க செய்ய முடியாத செயலையும் இந்த பொம்மைகளை வச்சு செய்ய முடியும், இந்திய ராணுவத்துல இந்த மாதிரி பொம்மைகளை பாதுகாப்புக்கு நிப்பாட்டி விட்டா, நமக்கு உயிர் சேதம் குறையும் அப்படி இப்படின்னு சொன்னீங்க... இப்போ என்னன்னா அஞ்சு வருஷமா சத்தமே இல்லாம இருக்கீங்க என்று ஒருவர் ஊமையாக சிரிக்க ..
ஆராய்ச்சியாளர் மிஸ்டர் மார்க் அந்த கூட்டத்தின் நடுவே எழும்பி முன்னே சென்றவர்... தன் கோட் பாக்கெட்டில் இருந்து கையளவு பொம்மை ஒன்றை எடுத்து அந்த மேஜை மீது வைத்தார் ...
அழகான அம்சமான குட்டியான சிலிகான் சிலை பார்ப்பதற்கு அச்சு அசல் பெண் போலவே உருவம் , என்ன ?அசைவு இல்லாமல் கிடந்தது..
ஃபார்முலா எல்லாம் சரியா பண்ணிதான் இந்த சிலிக்கான் சிலையை நான் செஞ்சிருக்கேன் .. பட் எங்க மிஸ்டேக் பண்ணினேன்னு தெரியல அதோட பெர்பார்மன்ஸ் தான் இல்ல என்று யோசனையாக புருவத்தை சுருக்க ..
அந்த சிலையையே அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் உண்மையாக உயிர் வந்தால் அது பெண் போலவே இருக்கும் அவ்வளவு நேர்த்தியாக அதை வடிவமைத்து வைத்திருந்தார்..
மிஸ்டர் மார்க் இத பாக்குறதுக்கு உண்மையாகவே ஹியூமன் மாதிரி இருக்குது .. என்னென்ன ஃபார்முலா எல்லாம் பயன்படுத்தி இருக்கீங்க , இந்த பொம்மை என்ன செய்யும் திறன் உண்டு...
மனுஷன் என்ன பண்ணுவானோ அதை எல்லாம் இந்த பொம்மையும் பண்ணும்... இதற்கும் உணர்வுகள், பேசுறது சிரிக்கிறது எல்லாமே உண்டு .. என்ன மனுஷனுக்கு சாவு உண்டு இதுக்கு சாவு கிடையாது ..
வாவ் அப்படின்னா மனுசனை போல இதால சிரிக்க அழ வேலை செய்ய முடியுமா?
யா , கண்டிப்பா அதே சமயம் இதோட உயரத்தை கூட்டவும் குறைக்கவும் முடியும், சில ஆபத்து கட்டத்துல தன்னோட உருவத்தை இந்த மாதிரி பொம்மை உருவத்துக்கு மாத்திக்கவும், சில சமயத்துல மனுஷங்க மாதிரி சாதாரண உயரத்துக்கும் இதால தன்ன வடிவமைத்துக் கொள்ள முடியும்..
வெறு வாயால வடை சுட்டது போதுமா மிஸ்டர் மார்க் நீங்க சொல்றது எல்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா ஆனாவோ பொம்மை மாதிரி சும்மாவே கிடக்குது ..
ப்ச் , அதுதான் தெரியல நேத்து நைட் வரைக்கும் இந்த பொம்மை என்கிட்ட பேசிட்டு இருந்தது..
சரிதான் காதுல பூ சுத்த ஆரம்பிச்சிட்டர் என்று சிலர் சிரிக்க..
நான் சொல்றது அத்தனையும் உண்மை இந்த பொம்மை பக்கத்துல மனுஷனை விட்டு பார்த்தா அதுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது.. இன்னும் ரெண்டு நாள் டைம் தாங்க நீங்க எல்லாரும் ஆச்சரியப்படுற அளவுக்கு இத நான் பயன்படுத்தி காட்டல என் பெயர் மார்க் இல்லை என்று வெளியேறிய மார்க் ,, ஹாங்காங்கில் இருந்து இந்தியா செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தார் ...மார்க் வந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறில் விமானம் வெடித்து சிதறி விட.. அந்த குட்டி சிலிகான் சிலை அடர்ந்த காட்டிற்குள் விழுந்தது..
வீரா சரியாக காலையில் திருமணத்திற்கு வந்து சேர்ந்தான்... அவனுக்கு மாலையிட்டு மணமேடையில் கொண்டு வந்து அமர வைத்தனர் ... அவன் அருகே சர்வ லட்சணத்தோடு உஷா வந்து அமர வீரா யோசனையாக அமர்ந்திருந்தான்.. அவன் மாலை நடுவில் ஏதோ கிச்சு கிச்சு மூட்ட , நெளிய முடியாது தன் கையை வைத்து அந்த இடத்தை பிடித்துக் கொண்டவன்..
என்ன வேணும் என்று பல்லிடுக்கில் வீர் மெதுவாக கேட்க ..
மனுசா, ரொம்ப நேரமா உள்ள இருக்கேன் எனக்கு மூச்சு திணறுது.. அதோட உன் மேல இருந்து வர்ற கப்பு என்னால இருக்கவே முடியல, இந்த சட்டையை துவைச்சு எத்தனை நாள் ஆகுது நாத்தம் குடலை புடுங்குது என்று குட்டி குரல் ஒன்று அவனுக்கு கேட்க ..
ப்ச் இது புது சட்டை இதுலயிருந்து உனக்கு நாத்தம் வருதா?
அப்போ நீ போட்டிருக்க பனியன்ல தான் எலி செத்த நாத்தம் வருது துவைக்கிறதே இல்லையா , என்றசதும் வீர் மாலையை சற்று நகர்த்திவிட்டு கீழே குனிந்து பார்க்க, அவன் சட்டைக்கு உள்ளே குட்டியாக ஒரு பெண்ணுருவம் கிடந்தது ..
ஆம் அங்கே விழுந்த அந்த சிலிகான் சிலை இவன் கையில் கிடைத்து அதன் செயல்பாடுகளை தொடங்கி விட்டது...
சில்லு சில்லாய் சிதறச் செய்வாள்...