துணைவி மனைவி 3
Thunai3
3 இவள் துணைவி!!
அவள் மனைவி !!
மாமா என்ன ஆச்சு ஏன் உங்க முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு" என்று படுக்கையில் கண்ணை உருட்டிக் கொண்டு கிடந்த உமாபதி அருகே உருண்டு வந்து நீலவேணி படுக்க...
அது ஒன்னும் இல்லை, சரக்கு எடுக்க மெட்ராஸ் போயிருந்தேன்ல "
"மெட்ராஸ் போயிருந்தீங்களா, பெங்களூரு தானே போயிருந்தேன்னு சொன்னீங்க"
"ஹான் அது, சரக்கு தானே முக்கியம்... ஊரா முக்கியம் , எந்த ஊர்ல சரக்கு எடுத்தா என்ன??
அதுல என்ன ஆச்சு மாமா "
சரக்கு இன்னும் வந்து குடோன்ல சேரலையாம் அதான் மேனேஜர் ஃபோன் போட்டார் என்றவனுக்கு ஏசி குளிரிலும் வியர்த்து கொட்ட... அவன் வியர்வையை துடைத்து விட்ட நீலவேணி...
"ஏதாவது டிராபிக்ல பொருள் மாட்டி இருக்கும் மாமா நீங்க கவலைப்படாதீங்க தூங்குங்க
"ம்ம் சரிம்மா என்று அவன் கண்ணை மூடி தூங்க ரெடியானான்..
"தூங்க போறீங்களா மாமா "என்று அவள் செல்லமாக சிணுங்க .. இவன் கத்தி மீது நடந்தது போல தொண்டையை செருமி வேணியை அணைப்பதற்கு கையை போட போக
ஹாலில் ஐயோ அம்மா என்று ஹாலிங் பெல் அந்த ஜாமத்தை அலற வைத்தது, அடித்து இருவரும் பதறி நகந்து படுக்க ..
"இந்த நேரத்துல யாரு ??என்று அவள் கேள்வி கேட்க
"எனக்கு என்ன தெரியும் , நானும் இந்த ரூம்ல தான் இருக்கேன் என்று உமாபதி முதுகு காட்டி படுத்துக்கொள்ள அதற்குள் வேணி போன் அடிக்கவும் எடுத்துப் பார்க்க அவள் தங்கை திரவியா
என்ன தீரா, இந்த டைம்ல போன் போட்டிருக்க??" கொட்டாவி விட்டுக்கொண்டே வேடி கணவனை எட்டிப் பார்த்த
அவன் கண்ணை திறந்து பார்க்க .. கணவனுக்கு தங்கச்சி என்று வாயை அசைத்து கூறி விட்டு போனை காதில் வைக்க...
"என்னது எங்க வீட்டு வாசல்லையா??.. அம்மா அப்பா செக்கப்புக்கு டெல்லி வரைக்கும் போறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க... ஏண்டி அன்னைக்கு கேட்கும் போது லீவே , இல்லைன்னு சொன்ன.. இன்னைக்கு திடீர்னு லீவ் விட்டுட்டாங்க , அஞ்சு நாள் எங்க தங்கறதுன்னு தெரியலன்னு சொல்லிட்டு இருக்க .. உனக்கு தங்க இடமே இல்லையா... அக்கா நான் இல்ல .... ஓ, அப்படியா இங்க தான் வந்து இருக்கியா இரு வர்றேன் என்று போனை வைத்த நீலவேணி
"மாமா திரவியா பொங்கல் லீவுக்கு ஏதோ ப்ராஜெக்ட் இருக்கு நான் வரலைன்னு முதல்ல சொன்னா.. அதனால அம்மாவும் அப்பாவும் இவ வரமாட்டான்னு நம்பி செக்கப்புக்கு டெல்லிக்கு போயிட்டாங்க... திடீர்னு அவங்க ஹாஸ்டல்ல பில்டிங் ஒர்க் நடக்குது எல்லாரும் வீட்டுக்கு கிளம்பி ஆகணும்னு சொல்லிட்டாங்க போல , கிளம்பி எங்க போகுறதுன்னு தெரியாம நம்ம வீட்டுக்கு கிளம்பி வந்துட்டாளாம்... வீட்டு வாசல்ல தான் நிக்கிறாளாம்.. நான் போயி கதவை திறந்து அவளுக்கு கெஸ்ட் ரூமை திறந்து கொடுத்துட்டு வந்துடுறேன்.... நீங்க வேணும்னா தூங்குங்க" என்று கணவனுக்கு வேக வேகமாக பதில் சொல்லிக்கொண்டே நைட்டியின் மீது டவலை எடுத்து போட்டுக் கொண்டு தூங்கும் மகனை உமாபதியின் அருகே இழுத்து போட்டவள்
மாமா மாமா என்ன பதிலே சொல்லல... அதுக்குள்ள தூங்கிட்டாரா, பதி குறட்டை விடும் சத்தம் கேட்டு கணவன் முகத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு கதவை சத்தம் இல்லாமல் பூட்டிவிட்டு வேணி கீழே இறங்கி கதவை திறக்க... திரவியா பளீர் புன்னகையோடு ஹாய்க்கா என்று வேணியை கட்டிப்பிடிக்க..
ஏண்டி வந்தது தான் வந்த, கொஞ்சம் முன்னக்கூட்டி வந்திருக்க கூடாது... இப்படி நடுராத்திரி வந்து எல்லாரையும் எழுப்பி விடுற...
"ஏன் ரொமான்ஸ் நேரம் வந்து குழப்பி விட்டுட்டேனா என்ன?
"ச்சீ எப்ப தான் உனக்கு நாவடக்கம் வரப்போகுதோ தெரியல , இப்படி பேசாதன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன் ..
"ம்க்கும், இதுல என்ன அசிங்கம் இருக்கு ... ஆமா நம்ம புருசன் இல்லை "
"என்னடி கேட்க
"உன் புருசன் இல்லையான்னு கேட்டேன் என்று திரவியா கண்கள் மாடியை அலச
"தூங்கிட்டாரு
"தூங்கிட்டாரா அதுக்குள்ளயேவா??
"மணி என்ன ஆகுதுன்னு பார்த்ததானே மணி 2 இப்ப தூங்காம என்ன செய்வாங்க
"ஓஓஓ , அப்போ நீ மட்டும் ஏன் உடனே போன் எடுத்த? ஒரே ரிங்ல எப்படி போன் பிக் பண்ணின
அது என்று வேணி தடுமாற
"ஆக என்னவோ நடந்து இருக்கு"
" போடி லூசு , வயசுக்கு ஏத்த மாதிரி பேசு ஏதாவது சாப்பிடுறியா...
"சூடா என்ன இருக்கு ... தோசையா இட்லியா.
"தோசை தான் இருக்கு போட்டு தரவா..
"ம்ம் சரி போடு" என்று உமாபதி தாய் தகப்பன் அறையை எட்டிப் பார்த்தாள் வேணி
ஒரு படுக்கையில் பக்கவாதம் வந்த பதி தாய் படுத்து தூங்கிக் கொண்டிருக்க .. இன்னொரு படுக்கையில் உமாபதியின் இதய நோயாளி தந்தை படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்...
எப்படி பொண்ணு வேணும் என்று தரகர் வந்து கேட்டதற்கு அம்மா பக்கவாதம் வந்தவங்க, அப்பா ஹார்ட் பேஷண்ட் , அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே மகன் நான்.. சொத்துக்கு பஞ்சம் இல்ல, ஆனா வர்றவ எங்க அம்மா, அப்பாவ என்னைய மாதிரியே பார்த்துக்கணும் அவ்வளவு தான் என்னோட டிமாண்ட் .. நகை, பணம் வசதி ஜாதி எதைப் பத்தியும் எனக்கு கவலையில்லை இந்த வீட்டுக்கு மருமகளா வராம அம்மா அப்பாவுக்கு ஒரு மகளா வரணும்.. அந்த மாதிரி ஒரு பொண்ண பாத்து சொல்லுங்க ...
நீலவேணி அவன் எதிர்பார்த்த அத்தனை லக்சணமும் நிரம்பியவள்... உடல் முடியாத இருவரையும் பார்த்து ஒரு நாள் கூட முகம் சுளித்து அலுத்து கொண்டது இல்லை,., இந்த வீட்டிற்கு செய்வதை கடமை என்று அவள் ஒருநாளும் நினைத்ததில்லை... அன்பு கணவனின் தாய் தந்தை அவர்களுக்கு செய்வது என் புண்ணியம் என்று தான் இத்தனை வருடமும் இந்த வீட்டில் நல்ல மனைவியாக, நல்ல மருமகளாக, நல்ல தாயாக எந்த ஒரு குறையும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறாள்... அவளுக்கா இப்படி ஒரு துரோகத்தை செய்ய சுற்றி இருப்பவர்கள் நினைக்கிறார்கள்...
"சரிடி கெஸ்ட் ரூம் எல்லா ரெடி பண்ணிட்டேன் , நீ போய் தூங்கு , காலையில வந்து பார்க்கிறேன்... என்று வேணி மாடி படி ஏற போக ... அவள் கையைப் பிடித்து தடுத்த திரவியா
"இரு இரு எங்க போற? பொடிசை ஒரு நேரம் பார்த்துட்டு அவனுக்கு கிஸ் பண்ணிட்டு வந்து படுத்துக்கிறேன் ...
"ப்ச் குட்டி தூங்கிட்டு இருக்கான்டி... நீ எங்க போக போற, இல்ல அவன் எங்க போக போறான் காலையில பாக்கலாம்ல...
"அவன் தூங்கும்போது ரொம்ப க்யூட்டா இருப்பான்டி,.. ஒரே ஒரு முத்தம் தானே கொடுக்கிறேன்னு சொல்றேன் ... அவங்க தூக்கம் கலையாம முத்தம் கொடுத்துட்டு வந்துடுறேன்...
"எப்பா , வந்து தொலை என் புள்ளைய கூட சமாளிச்சுடலாம் போல ஆனா உன்ன சமாளிக்கிறது தான் கஷ்டம் என்று வேணி முனங்கி கொண்டே முன்னால் நடக்க அவள் பின்னால் நடந்த திரவியாவோ, மாடிப்படி சுவரில் இந்த ஐந்து வருடமும் வேணியும் உமாபதியும் திருமணம் ஆன புதிதிலிருந்து , அவர்கள் பிள்ளை பெற்றது, அதன் பிறகு பிள்ளைக்கு நடுவில் இருப்பது .. சிறு சிறு வெளிநாட்டு டூர்கள் , கடற்கரையில் நின்று விளையாடுவது என ஒவ்வொரு சம்பவங்களையும் படிக்கு ஒன்றாக சுவரில் அழகாக மாட்டி வைத்திருக்க.... பின்னால் நடந்து கொண்டே இருந்த திரவியா, அதில் ஒவ்வொரு போட்டோவிலும் இருந்த உமாபதியின் முகத்தில் மட்டும் முத்தத்தை வைத்துக் கொண்டே ஏறி வந்தாள்
"சின்ன பொண்டாட்டி வந்து இருக்கேன் , என்ன வந்து வாசல்ல வரவேற்க வழியில்லை, ரூமிலேயே ஒளிஞ்சு கிடக்கிறீங்களா, வரேன் கணவா, வந்து உங்களை ஓட விடுறேன் என்று சிரித்துக் கொண்டவள், தன் அக்காவின் வாழ்க்கை உள்ளேயே துணிந்து வந்தவள், அறை உள்ளே வர மாட்டாளா, அவர்கள் படுக்கையறை உள்ளே நுழைந்தாள்...
"ஒரே போர்வை உள்ளே உமாபதியும் , அவன் மகனும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள், உமாபதி தூங்குவது போல் நடித்துக் கொண்டுதான் இருந்தான.. எப்படி தூங்க , தாலி கட்டிய இரண்டு மனைவியும் ஒரே வீட்டில் .. இன்னைக்கு சாவு வருமா நாளைக்கு சாவு வருமோ என்ற நிலைமையில் அவன் ..
சத்தம் இல்லாம முத்தம் கொடுத்துட்டு போடி, நான் பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன் என்று வேணி குளியலறையை திறந்து கொண்டு உள்ளே போனது தான் தாமதம்
பச்சக் பச்சக் என்று படுத்து கிடந்த உமாபதியின் கன்னத்தில் எச்சில் தெறிக்க முத்தம் வந்துவிழ...
ஏய்இஇஇஇஇஇஇஇஇ"அவன் பதறி கண்களை திறக்க
"ஐ லவ் யூ கணவா !!"என்று அவன் உதட்டிலும் துரித முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு கண்களை சிமிட்டினாள் அவன் சின்ன வீடு...
என்னடி பண்ற ??என்று பல்லை கடித்தவன் தன் உதட்டில் பட்ட அவள் எச்சிலை துடைக்க போக... அவன் கையை வலுவாக பிடித்துக் கொண்டவள்
"அக்கா தான் சொன்னா , சத்தமில்லாம முத்தம் கொடுத்துட்டு போன்னு , பட் எவ்வளவுதான் ட்ரை பண்ணினாலும் சத்தம் வந்துடுச்சு கணவா... நீங்க ஒரு முத்தம் கொடுங்களேன்" என்றவளை ஆத்திரத்தில் பிடித்து உமாபதி ஓங்கி தள்ள பக்கத்தில் இருந்த சோஃபாவில் போய் விழுந்தவள் மீண்டும் அவன் அருகே வந்து
"இன்னும் எதிர்பார்த்தேன் ரொம்ப வயலண்ட் இல்ல நாளைக்கு இதை விட வயலண்ட் வரலாம்.. "என்று தோளை உலுக்கி
"நாளைக்கு காலையில 9 மணிக்கு பக்கத்தில் இருக்கிற ரெஸ்டாரண்டில், உங்களுக்காக வெயிட் பண்ணுவேன் கணவா வரணும்
"ப்ச் மூடிட்டு போடி , தாலி கட்டிட்டேன்னு நீ சொல்றதெல்லாம் நான் கேட்கணும்னு எந்த அவசியமே இல்லை .."
"ஓஓஓஓஓ அவசியம் இல்லையா, இருக்கு கணவரே எனக்கு தாலி கட்டுனது, ஒரு பயலுக்கும் தெரியாது அது செல்லாது , சட்டப்படி நம்மள இவ எதுவும் செய்ய முடியாது, அப்படி இப்படின்னு ஏதாவது கனவு கோட்டை கட்டி வச்சிருந்தீங்கன்னா, அதை இப்பவே தகர்த்து எறிஞ்சிடுங்க கணவரே..
இங்க பாருங்க" என்று திரவியா தன் நெஞ்சு பக்க டீ-ஷர்ட்க்குள்ள இருந்து ஒரு போட்டோவை எடுத்து அவன் முன்னால் காட்ட ... பதறி திகைத்துப் போய் எழும்பி அமர்ந்தான் உமாபதி...தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தாளே பாதகத்தி!!
அவன் திரவியாவிற்கு தாலி கட்டுவதை தெளிவாக போட்டோ எடுத்து வைத்திருந்தாள் அவன் சின்ன மனைவி ..
"அச்சோ புள்ளை பேய் முழி முழிக்குதே... பூசாரிக்கு நூறு ரூபாய் கொடுத்து , தாலி கட்டும்போது அழகா அம்சமா ஒரு போட்டோ எடுத்து கொடுத்துடுங்கோன்னு சொன்னேன் ...மனுஷன் தீயா வேலை செஞ்சு இருக்காரு ... இதை மாதிரி நூறு காப்பி இருக்கு ... நீங்க நாளைக்கு மட்டும் நான் சொல்ற இடத்துக்கு வரல, என்னால எங்க கல்யாணத்துக்கு இன்விடேஷன்தான் கொடுக்க முடியல அதுக்கு பதிலா இதை வச்சுக்கோங்கன்னு வீடு வீடா போயி , பூவும் பழமும் தட்டுல வச்சு இந்த போட்டோவ அது நடுவுல அலங்காரமா வச்சு கொடுத்துட்டு வந்துருவேன் "என்றதும் பதி அந்த போட்டோவை வாங்கி சுக்குநூறாக கிழித்து அவள் கையில் கொடுக்க... அதை தூக்கி தன் மார்புக்குள் மறைத்து வைத்துக் கொண்டவள்
"நீங்க அங்கேயே கிளுகிளுப்பா இருங்க கணவா.. அப்பதான் எனக்கும் ஒரு மாதிரி ஜிவ்வுன்னு இருக்கு என்று கண்ணை சிமிட்டிக் கொண்டே
"அப்புறம் அங்க பூக்கடை வெச்சிருக்கிற தம்பி கிட்ட ஒரு வீடியோ எடுத்து கொடுக்க சொன்னேன்... அதுவும் சுடச்சுட பேஷா நாளைக்கு ரெடியாயிடும் ... இது உங்க முதல் பொண்டாட்டி வேணிக்கு வாட்சப் மூலமா போகாம இருக்கணும்னா , காலைல 9 மணிக்கு பக்கத்துல இருக்குற டீ ஷாப்புக்கு வந்துடுங்க கணவா.... வரட்டா" என்று மீண்டும் முத்தம் கொடுக்க அவள் அருகே வர ... கன்னம் இரண்டையும் பொத்தி வைத்துக்கொண்ட உமாபதியின் உதட்டில் முத்தம் கொடுக்க வந்தவள்... குளியலறை திறக்கும் சத்தத்தில், சட்டென உமாபதி படுத்துக்கொள்ள அவனுக்கு அந்தப் பக்கம் படுத்திருந்த குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து கொண்டு நின்றான் அவள் தங்கை திரவியா..
"என்னடி இவ்வளவு நேரமாவா முத்தம் கொடுத்துட்டு இருப்ப .... புள்ள முழிச்சிடாம,
சத்தம் வராமதான் அக்கா முத்தம் கொடுத்துட்டு இருக்கேன்... பதி கையில அவள் உடல் உரசி கொண்டிருந்தது அதை கண்ட வேணி
"ப்ச் இந்த பக்கம் வந்து கொடுக்க வேண்டியது தானே, எதுக்கு மாமாவை இடிச்சுக்கிட்டு அங்க போய் நிக்கிற..
"அந்த பக்கம் நைட் லேம்ப் இருக்குல்ல மாமா தூங்கிட்டு தானே இருக்கார்...மச்சினிச்சி வந்து பக்கத்துல நிற்கிறது அவருக்கு என்ன தெரியவா போகுது ... வசதியா இருக்கேன்னு இங்க நின்னு ஒரு முத்தம் கொடுத்தேன் தப்பா .. உன் புருஷன நீயே வச்சுக்கோடி கடனா கொடுத்தாலும் வேண்டாம், ஓசியா கொடுத்தாலும் வேண்டாம்
"திரா, இங்க பாரு எதுல வேணும்னாலும் விளையாடு மாமா விஷயத்தில் இப்படி பேசுறத விட்ரு மாமான்னா எனக்கு உயிர், அவரை எவ்வளவு பிடிக்கும்ன்னு உனக்கே தெரியும்... இந்த உலகத்துல நான் பொசசிவ்வா இருக்கிற ஒரே விஷயம் மாமா மட்டும் தான், சோ விளையாட்டுக்கு கூட நீ இப்படி எல்லாம் பேசாத திரா.. எனக்கு அழுகை வந்துரும்" என்று நீலவேணி முகம் தொங்கி போக கேட்டுக் கொண்டிருந்த உமாபதிக்கு எப்படியோ ஆகி போனது...
" சரிடி உன் புருஷனை நீயே வச்சுக்கோ தாயே எனக்கு வேண்டாம் குட் நைட் , குட் நைட் மாமா என்று கத்திக்கூற
தூங்கிறவரை ஏண்டி எழுப்புற ...
"எல்லாம் ஒரு ஜாலிக்குதான் "என்று குதித்துக் கொண்டே மாடி இறங்கி போகும் திரவியாவை பார்த்து பெருமூச்சு விட்டவள் ... மெல்ல தன் கணவனருகில் வந்து, தங்கையின் ஆடைப்பட்ட அவன் கை விரல்களை தன் நைட்டி கொண்டு துடைத்து விட்டு ..
"வேற ஒருத்தியோட ஆடை கூட உங்க மேல படுறத நான் விரும்பமாட்டேன் மாமா , ஐ லவ் யூ என்று விட்டு நீலவேணி போய் மறுபக்கம் படுத்தாள்...
ஆடை கூட பட கூடாது என்று அவள் நினைக்க அவனோ கணவன் என்ற உரிமையின் பாதி பங்கை அவளுக்கு எழுதி கொடுத்து விட்டு வந்து இருக்கிறானே!!