துணைவி மனைவி 4

Thu4

துணைவி மனைவி 4

4 இவள் துணைவி!!

  அவள் மனைவி!!

சித்தி நீ எப்ப வந்த ? என்று முழித்ததும் முழிக்காததுமாக ஓடி வந்து கௌரிபதி, ஓடி வந்து திரவியா மடியில் உட்கார்ந்து கொள்ள , அவனை தூக்கி போட்டு பிடித்த திரவியா

 ராத்திரியே வந்துட்டேன், வந்தது மட்டும் இல்ல உனக்கு நச்சுன்னு ஒரு முத்தம் கொடுத்தேனே ஞாபகம் இல்லையா, மாடிப்படியில் நடைபயிற்சிக்காக சோம்பலாக இறங்கி வந்து கொண்டிருந்த உமாபதியை உதட்டை கடித்து பார்த்துக் கொண்டே முத்தத்தை அழுத்தி அவள் சொல்ல .. அவளை முறைப்படி இறங்கி வந்து கொண்டிருந்த உமாபதி .. முகத்தை திருப்பிக் கொள்ள 

"ஹாய் மாமா இங்க ஒருத்தி அஞ்சரை அடி தாஜ்மஹால் மாதிரி நின்னுகிட்டு இருக்கேன்.... எப்ப வந்த , எப்படி வந்தன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம உங்க பாட்டுக்கு போறீங்க, இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று அவனிடம் வம்பு வளர்க்க..

"நீ ராத்திரியே வந்துட்டேன்னு , என் பொண்டாட்டி சொன்னா" என்றவன் என் பொண்டாட்டி என்ற வார்த்தையை அழுத்தி சொல்ல 

"ஓஓஓ உங்க பொண்டாட்டி சொல்லிட்டாங்களா.. வாங்களேன் மாமா, ஒரு கப் காபியை சேர்ந்து குடிக்கலாம் என்று புருவத்தை உயர்த்த 

 வேண்டாம் நீயே குடிச்சுக்கோ,, வேணி

"இதோ மாமா என்று காபியை கொண்டு வந்து அவன் கையில் கொடுக்க... அதை வாங்கி குடித்தவன் தன் தாய் தகப்பன் அறைக்குள் நுழைந்து விட்டான்..

"காபியை குடிச்சிட்டு போய் அத்தை, மாமா கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு வா திரா.. வீட்டுக்கு வந்துட்டு அவங்க கிட்ட பேசாம இருந்தா நல்லாவா இருக்கும்

 "என்னத்த பேச சொல்ற , உன் அத்தை பேசுறது எனக்கு ஒண்ணுமே புரியாது... உன் மாமா பேசுறது ரெண்டு வார்த்தை அது எனக்கு பிபி ஏகிற வைக்கும், எதுக்கு தேவையில்லாத பிரச்சனை ??

ஒரு குடும்பத்துக்குள்ள இருந்தா , பெரியவங்க அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க. திரா நாம தான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும் ... அடுத்த வீட்டுக்கு கல்யாணம் கட்டி போக போறவ இதெல்லாம் எப்ப தான் கத்துக்க போற

"நான் எதுக்கு அடுத்த வீட்டுக்கு கல்யாணம் கட்டி போக போறேன்... நான் இந்த வீட்டிலேயே இருக்கிறேனே.."

"இது என்ன உன் வீடா?

" ஏன் என் வீடு இல்லையா ... என் அக்கா வீடு என் வீடு தானே என்ற அவள் தலையில் வலிக்காது கொட்டிய வேணி 

"முதல்ல போய் அவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு ரெண்டு வார்த்தை பேசிட்டு வா... தன் தாயிடம் உட்கார்ந்து ஏதோ குசு குசு என்று பேசிக்கொண்டிருந்த உமாபதியை இங்கிருந்து பார்த்தவள்

"நம்மாளு அங்க தான் இருக்கா .. போயிடுவோம் ..நீ சொன்னா கேட்க வேண்டியதுதான் .. இப்பவே போயி அத்தைக்கிட்ட பேசிட்டு வந்துடுறேன்... என்று திரவியா காபி கப்பை வேணி கையில் கொடுத்துவிட்டு அந்த அறைக்குள் ஓடினாள்

ஹாய் சிம்ரன் எப்படி இருக்கீங்க? என்று உமாபதி உட்கார்ந்திருந்த படுக்கையில் போய் திரவியா அமர 

 நியூஸ் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்த உமா பதியின் தகப்பன் குமரகுரு, டிராக் பேண்ட் டிஷர்ட் அணிந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த திரவியாவை எரிச்சலாக பார்க்க ... உமாவதியும் அவளைத்தான் முகத்தை சுளித்து பார்த்தான்..

உமாவதியின் தாய் மனோகரி மெலிதாக அவளைப் பார்த்து சிரிக்க முற்பட, பாவம் முகம் கோணி போய் இருந்தவர் அதற்கு மேல் முடியாமல் தலையை அசைக்க...

"சிம்ரன் இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல , நீங்க மட்டும் உம்முன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க.. உங்கள கடத்திட்டு போயி இந்த மனுஷ கிட்ட இருந்து காப்பாத்திடுறேன்" என்று செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்த குமரகுருவை பார்த்துக்கொண்டே கூற 

"வந்ததும் வராததுமா என்கிட்ட ஆரம்பிச்சுட்டியா.. என் மருமகளுக்கு தங்கச்சிங்கிற ஒரே காரணத்துக்காக தான் உன் சேட்டை எல்லாம் பொறுத்துக்க வேண்டியது இருக்கு.... அவளும் உன்ன மாதிரி பொண்ணு தானே, உன் கூட பிறந்தவ எவ்வளவு பொறுப்பா , அடக்கமா இருக்கா உன்னால பொண்ணால லட்சணமா அடக்கமா இருக்கவே முடியாதா என்று குமரகுரு தலையில் அடிக்க...

"சரி நான் அடக்கமாய் இருந்தா, சிம்ரனை கழட்டி விட்டுட்டு என்னை கல்யாணம் கட்டிக்க போறீங்களா.

"அபச்சாரம், அபச்சாரம் வாயில போடு , என்ன பேச்சு பேசுற ... குமரகுரு பதறிவிட 

"இல்ல உங்க மகனுக்கு என்ன ரெண்டாவது பொண்டாட்டியா கட்டி வைக்க போறீங்களா?

"கடவுளே குடும்பத்தை கெடுத்திடுவ போல இருக்கே

"பின்ன என்னவோய், சும்மா வந்ததும் வராதுமா, நீங்க என்ன வம்புக்கு இழுக்காதீங்க .. நான் சிம்ரன் கிட்ட பேசிட்டு இருக்கேன்... 

"சரிப்பா நான் வாக்கிங் போயிட்டு வந்துடுறேன் உமாபதி எழும்பி வெளியேற ...

"ஓகே சிம்ரன் கருப்பு காய் , முன்னாடியே போகுது சிகப்பு காயும் பின்னாடியே போகுது.. பாய் என்று விட்டு உமாபதியின் பின்னாலேயே அவளும் வெளியே ஓடிவிட 

"ஏன்டி காபி கேட்ட காஃபியை குடிக்காமலேயே போற

"நீ போட்ட காபிய மனுஷன் குடிப்பானா நான் வெளியவே குடிச்சுக்கிறேன்" என்று கத்திக்கொண்டே விறு விறுவென்று நடந்து கொண்டிருந்த உமாபதி பின்னால் அவளும் அவனுக்கு இணையாக நடந்து சென்றாள்....

அந்தக் காலைப் பொழுதில் ஆள் இல்லாத ரெஸ்டாரன்ட் உள்ளே உமாபதி அங்கும் இங்கும் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டே நுழைய ... அவன் பின்னாலையே இவளும் அந்த ரெஸ்டாரண்ட் உள்ளே போனாள்

ஏசி அறையில் ஆட்கள் இல்லாமல் அமைதியாய் கிடக்க... உமாபதி தலையை தடவிக் கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க , அவன் மனநிலை போல அவன் முன்னே இருந்த தேனீரும் சுடாய் கொதித்தது ... அவன் அருகே கஸ்தூரி மஞ்சள் மணம் வர , சட்டென தலையை தூக்கி பார்த்தான்... 

"என்ன கணவா, உங்க முதல் பொண்டாட்டி நீலவேணி வாசம் அடிச்சிடுச்சோ... அது ஒன்னும் இல்ல அவளோட கஸ்தூரி மஞ்சளை ஆட்டையை போட்டுட்டேன் என்று சிரித்தவள் சிரிப்பை ரசிக்க முடியாமல் எழும்பி அவள் கொத்து முடியை பிடித்து ஆட்டியவன் செயலில் அவள் வலியில் முகத்தை சுருக்க 

"சீசீ ஏன்டி என் வாழ்க்கையில விளையாடுற ... என் நிம்மதியை கெடுக்கிற , உன் உயிரை காப்பாத்தணும்னு நினைச்சதுக்கு நீ தர்ற கைமாறா இது... தாலி கட்டினா விட்டுவிடுவேன்னு சொன்னேன்ல... அதை நம்பி தானே தாலி கட்டினேன்...

ஹாஹா யாரு உங்களை என்னை நம்ப சொன்னது? என்றவளை சுவரோடு வைத்து அடித்துக் கொல்லும் வெறியில் திரவியாவை அவன் சுவற்றில் ஓங்கி பிடித்து அவள் நெற்றியை உடைக்க போனவன் சட்டென அவளை விட்டுவிட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான் இச்செயலை செய்ய அவன் அரக்கன் இல்லையே... அரக்கனாக இருந்திருந்தால், முதல் நாளே, இந்த செயலை அவன் செய்திருந்திருப்பானே!! 

திரவியா அவனால் கலைந்த தன் முடியை சுருட்டி விட்டுக்கொண்டே இருக்கையில் அமர்ந்தவள்... அவன் பாதி குடித்து வைத்திருந்த காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தவள் ... 

"அவங்க அவங்க வாழ்க்கைக்காக அவங்க அவங்க நிம்மதிக்காக , அவங்க அவங்க தான் போராடனும் கணவரே... செல்பிஷ்ஷா இருக்கலைன்னா இப்படிதான் 

ப்ச் , உதட்டை பிதுக்க பதி அவளை முறைக்க 

"தாலி என்ன விளையாட்டு பொருளா? இல்ல கையில கட்டுற கோவில் தாயத்தா, கட்டுங்கன்னு சொன்னதும் கழுத்துல புடிச்சு கட்டுறதுக்கு... என்றதும் அவன் அதிர்ந்து அவளை பார்க்க 

"நான் கட்ட சொன்னா , நீங்க என்ன செஞ்சிருக்கணும் என் அக்கா கிட்ட போய் சொல்லி இருக்கணும் ... 

"உங்க அக்கா நிலைமை உனக்கு தெரியாது .... அந்த புள்ளைய பெத்து எடுக்கும் போதே. டாக்டர் சொன்னதை நீயும்தானே கேட்ட, அவங்க மனநிலை எதையும் தாங்குற நிலைமையில இல்ல... அது போக போக தான் சரியாகும், சோ அதுவரைக்கும் எந்த அதிர்ச்சியான விஷயத்தையும் உங்க மனைவி கிட்ட சொல்லாதீங்கன்னு , உன் கண்ணை முன்னாடி தானே டாக்டர் சொன்னாங்க 

"ஓ சொன்னாங்களோ , சரி உங்க பொண்டாட்டி கிட்ட சொல்ல முடியாது... என் அப்பாக்கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே?

"இப்படி ஒரு கேடுகெட்ட பிள்ளைய பெத்து வச்சிருக்கீங்களேன்னு உங்க அம்மா அப்பா கிட்ட சொல்றதுக்கு போன் போட்டா , அதுக்கு முன்னவே உங்க அப்பா நெஞ்ச புடிச்சுக்கிட்டு ஹார்ட் அட்டாக்ல விழுந்து தொலைச்சுட்டாரே 

"ஓஓஓ டூ பேட் , உங்களுக்கு நேரம் சரியில்ல என்று அவள் கேலியாக உதட்டை வளைக்க...

"அப்படியே அடிச்சேன்னு வை தலை சில்லு சில்லா உடைஞ்சுரும்டி...

"அடிச்சு தான் பாருங்களேன் கணவரே... இப்ப என்ன நடந்து போச்சு நடந்தது நல்லதுக்கே நடந்திருச்சு... நான் உங்க சின்ன வீடா மாறிட்டேன்... நீங்க என் புருஷனா மாறியாச்சு., அடுத்த பிராசஸை பத்தி யோசிங்க ..

"என்ன பிராசஸ்? என்ன பிராசஸ்னு கேட்டேன், தாலி கட்டுனா போதும்னு சொன்னல்ல.. பின்ன எதுக்கு என் வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்து, எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இடையில கலவரத்தை உண்டாக்க பார்க்கிற .... சத்தியம் பண்ணினதானே உங்க வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன்னு... 

"பச்சை புள்ளையா இருக்கியே கணவா... இந்த உலகத்துல ஆயிரம் உறுதிமொழி, லட்சம் சத்தியங்கள் போற இடம் தெரியாம போகுது கணவரே... அது தெரியாம பச்சை புள்ளை ஒரு சத்தியத்தை கொடுத்துட்டு , அதையும் நான் செய்வேன்னு நம்புறீங்க பாருங்க... ஐயோ ஐயோ என்னத்த சொல்ல என்ற தலையில் அடித்துக் கொண்டவள் 

"சரி சத்தியம் பண்ணினேன் தான்... எனக்கு புள்ள வேண்டான்னு, ஆனா புருஷன் வேண்டாம், புருஷன் கூட வாழ மாட்டேன்னு சத்தியம் பண்ணலையே என்றவளை பதி கண்களை விரித்து பார்க்க

புள்ள வராம பாத்துக்கலாம்... அதுக்கு நான் கேரண்டி வாரண்டி தர்றேன், தட்ஸ் ஆல்... 

"தூது , உன்னை பார்த்தா எனக்கு அருவெறுப்பு தான் வருதுடி ... எவ்வளவு கேவலமா பேசுறேன்னு தெரியுமா

"புருஷன் கிட்ட என்ன சென்சார் இருக்கு.. மனசுல தோன்றதை பேசறதுல என்ன தப்பு இருக்கு.. 

" உன் மனசு யோசிக்கிறதே அருவருப்பா இருக்கு இதுக்கு பேரு காதல் எல்லாம் இல்ல , காஜி!!!

கணவரே, இந்த உலகத்தில் காதல்னு ஆரம்பிக்கிறது எல்லாமே காஜிலதான் போய் முடியுது, நாம ஒரு ட்ரெண்டுக்கு காஜியா ஆரம்பிப்போம், அது ஆத்மார்த்தமான காதலா மாறிடுமா இருக்கும் என்றவள் 

ஆஆஆஆஆ என்று அலறினாள்

மேஜையில் அவள் வைத்த சூடான காபியை திரவியா முகத்தில் எடுத்து ஆத்திரம் தீராது ஊற்றிவிட்டான் ....

"சாரி சாரி தன்னை மீறி நடந்து விட்ட செயலில் பதறி உமாபதி அவள் கன்னத்தில் வடிந்த காபியை தன் கைகொண்டு துடைக்க , அவனை அசையாத கண் கொண்டு பார்த்தவள் ... அவன் கையை தன் கன்னத்தோடு பிடித்து வைத்துக் கொண்டு

"இதுதான் மாமா உங்க கிட்ட என்ன மயங்க வச்சது ... 

"பாரும்மா நீ தப்பான வழியில போற என்ன மிருகமா ஆக்கிடாதம்மா, என்று அவனும் கெஞ்சவே செய்து விட்டான் ...

இந்த கரிசனை இந்த அன்பு அவளக்கு மட்டும் கிடைக்குது... எனக்கும் அது வேணும் என்றவள் கன்னத்தில் இருந்த கையை உமாபதி வெடுக்கென்று எடுத்துக் கொண்டவன்... 

"அவளை நேசிச்ச என்னால உன்னை எப்பவும் நேசிக்க முடியாது ..

"அவ இடம் எனக்கு வேண்டாம், அவளையும் நேசிங்க என்னையும் நேசிங்க .. ஷேரிங் ஷேரிங் போதும்

"அது ஒருபோதும் நடக்காது..

" அது எப்படி நடக்காதுன்னு நானும் பாக்குறேன் பேசலாமா ??? என்ற திரவியா குரலில் காதல் , நக்கல் கேலி எல்லாம் போய் அழுத்தம் கூடி இருக்க உமாபதி பல்லை நரநரத்துக் கொண்டு சேரில் உக்கார 

"என்கூட வாழலைன்னா, அவ கூடையும் வாழக்கூடாது என்ற அவளை பதி புரியாமல் பார்க்க... 

"என் கூட படுக்கலைன்னா , அவ கூடையும் படுக்கக் கூடாது.... 

ஏய்இஇஇஇஇஇஇ"

"ஸ்ஊஊஊ , எனக்கு நீங்க கிடைக்கலைன்னா அவளுக்கும் கிடைக்கக்கூடாது.... எனக்கு உங்க அணைப்பு கிடைக்கலைன்னா... அவளுக்கும் அந்த அணைப்பு கிடைக்கக்கூடாது..

"சீசீ என்ன பொம்பள நீ ... என்ன பேசிட்டு இருக்கேன்னு உனக்கு புரியுதா

"ஏன் புரியாம,என் வாழ்க்கைக்காக நான் ரிஸ்க் எடுக்கிறேன் .... எனக்கு தாம்பத்திய வாழ்க்கை உங்க கூட கிடைக்கலைன்னா .... எங்க அக்காவுக்கும் அந்த தாம்பத்திய வாழ்க்கை உங்க கூட இருக்கக் கூடாதுன்னு சொல்றேன் .... என்ன தொடாத உங்க கை , அவளையும் தொடக்கூடாது... என் கூட வாழாத நீங்க, அவ கூடையும் வாழக்கூடாது , மீறி அவ கூட வாழணும்னு நினைச்சீங்க ... உங்க வீட்ல இருக்கிற நிம்மதியை கெடுத்துட்டு தான் அடுத்த வேலை பார்ப்பேன் ...

"ஊப்ஸ்ஊஊஊ சிறு எறும்புகள் தான் பலமான யானையை தோற்கடித்து விடுமாம் மெய்தான் !! 

"இவ என்ன ரூம்குள்ள வந்து பாக்கவா செய்யப் போறான்னு நினைக்காதீங்க.... உங்க ரூம்ல சிசிடிவி கேமரா மாட்டி வச்சி வச்சி நீங்க என்ன பண்ணுறீங்கன்னு பார்க்கிற அளவுக்கு கொடூரமான ஒருத்தி தான் நான்... சோ சமூக இடைவெளியை மெய்ன்டைன் பண்ணிக்கிட்டா உங்களுக்கு நல்லது... அப்படி மெயின்டெயின் பண்ண முடியலன்னா, எனக்கு மெயின்டனன்ஸ் கொடுங்க... புரியல.... என்னோடையும் குடும்பம் நடத்த ரெடியாகிக்கோங்க... ஒரு நாள் இங்க , ஒரு நாள் அங்க... வேணும்னா முதல்ல அவளுக்கு தாலி கட்டுன பாவத்துக்கு நாலு நாள் அவளுக்கு... மூணு நாள் எனக்கு , எப்படி வசதின்னு யோசிச்சிட்டு முடிவு சொல்லுங்க ... சிசிடிவி கேமராவுக்கு ஆர்டர் கொடுக்கணுமா வேண்டாமான்னு நீங்களே யோசிச்சுக்கோங்க வரட்டா ... காபியால அர்ச்சனை பண்ணிட்டீங்க சீக்கிரமே முத்தத்தால அர்ச்சனை பண்ணுவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் லவ் யூ கணவா!!"என்று சிலையாக உறைந்து போய் இருந்த பதி கன்னத்தை தடவி விட்டு திரவியா வெளியேறினாள்

பிச்சை கேட்டால் ஐஞ்சோ பத்தோ பணத்தை போடுவதோடு நிறுத்திக் கொள்வது நலம்!! ஐயோ பாவம் யாசகம் கேட்கிறார்களே என்பதற்காக நடு வீட்டில் தூக்கி வைத்தால். நம் வாழ்க்கையை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு பொம்மலாட்டத்தில் ஆடும் பொம்மைகளாக மாற வேண்டியது இருக்கும்..

பொம்மலாட்டத்தில் மனங்கள் ஆட போகிறது , அதை ஆட்டுவிப்பாள் இரண்டாம் தாலிக்கு சொந்தக்காரி!!