துணைவி மனைவி 2

Thunai2

துணைவி மனைவி 2

2 இவள் துணைவி 

அவள் மனைவி! 

விமானத்தில் தன் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் அசையும் குரலில் பழைய சிந்தனை விட்டு கலைந்து எழும்பினான் பதி ... 

ப்ளைட் விட்டு இறங்கிய அடுத்த நொடி அவன் மனைவி வேணியிடம் இருந்து அழைப்பு ... 

ஹலோ 

மாமா "

சொல்லும்மா "

"போய் இறங்கிட்டீங்களா?

"ம்ம் வந்துட்டேம்மா ..

"ஓகே மாமா  

"நீ போய் சாப்பிடு நான் நல்ல படியா வந்து இறங்கிட்டேன், குட்டியை பாத்துக்க முடிஞ்ச வரை சீக்கரம் வர பார்க்கிறேன் , வரும் போது உனக்கு என்ன வேணும்மா பழமாக பேசினானா? இல்லை பாசமாக பேசினானா கடவுளுக்கே தெரியும் ..

"எப்பவும் போலத்தான் மாமா , நீங்க பத்திரமா வந்து சேர்ந்தவரா போதும் ., 

தூரமாக அவன் பிரயாணம் செய்ய வேண்டியது இருந்தால் வேணி சாப்பிடாது பூஜை அறையில் காத்தே இருப்பாள்... அவன் நல்லபடியாக போய் சேர்ந்து விட்டான் என அறிந்த பின்னரே பச்சை தண்ணீ பல்லில் படும் அப்படி கணவன் பைத்தியம் பிடித்தவள்....அவளுக்காக இப்படி ஒரு துரோகத்தை செய்ய தீவிரமாக போகிறான்.. 

பங்கு போட முடியாத சொந்தம் ஒன்று அது கணவன் பந்தம் தானே , அதையும் பங்கு கேட்டு வந்தாளே அவள் உடன்பிறப்பு... 

சென்னை ஏர்போர்ட் வாசலில் போய் பதி நிற்க ஆடம்பர கார் வந்து நின்றது , அதில் ஏறி பிரபல கோவில் ஒன்றுக்கு போய் இறங்கி கண்களை அலைய விட ...

மாமாஆஆஆஆ இங்க இருக்கேன் என்று ஓடி வந்தாள் திரவியா... 

"ப்ச் கத்தி உன் அக்காவுக்கு நீயே காட்டி கொடுத்துடு...

"சாரி மாமா ...அக்காவுக்கு தெரியாதுல்ல "

"பெங்களூர் போறேன்னு சொல்லிட்டு வேணிக்கு தெரியாம தான் வந்திருக்கேன்...

"ம்ம் , தாலி வாங்கி வச்சுட்டேன் ... 

"இன்னொரு தடவை யோசிச்சிக்க திரவியா? நீ பங்கு போட போறது உன் அக்காவோடு வாழ்க்கையை "

"எத்தனை தடவை என் மூளையை சலவை செய்ய பார்த்தாலும் நான் உறுதியாதான் இருக்கேன் மாமா ..."

"உன்னால என் நிம்மதி போயிடும் 

"நீங்க இந்த தாலியை கட்டலைன்னா என் உயிர் போயிடும்" என்று தாலியை திரவியா நீட்ட ... அன்று டிஸ்சார்ஜ் ஆனதும் இவன் பேக் அடிக்க ..

"உன்ன காப்பாத்த சத்தியம் பண்ணினேன் இது எல்லாம் ஏய்ஏஏஏஏஏஏஏஏஏஏ அங்கிருந்த கத்தியை எடுத்து நறுக்கென்று மணிக்கட்டில் ஒரு போடு போட்டு ரத்த வெள்ளத்தில் திரவியா விழுந்து விட ...

மனிதாபிமானம் பார்ப்பது தானே நம்மை மரணிக்க செய்து விடும் இவன் பதற , அவளுக்கு அது லாபம் இதோ நினைத்ததை முடித்தே விட்டாள்... 

அவள் மணிக்கட்டில் பெரிய வெட்டு காயம் அதில் இன்னும் கூட ரத்தம் கசிந்தது ... பதி தாலியை கை நடுங்க வாங்கினான்... 

போகலாம் மாமா நல்லநேரம் முடிஞ்சிட போகுது .. 

"அதுக்கு முன்ன ஒரு சத்தியம் பண்ணி கொடு 

"என்ன மாமா 

"கடைசி வரை நீ என்னோட ரெண்டாவது பொண்டாட்டி மட்டும் தான் .... என்னோட ஆஸ்தி , குடும்பம் , என் முதல் மனைவி அந்தஸ்த்து எங்க குடும்பம் வாழ்க்கை எதுக்குள்ளேயும் நீ வர கூடாது...  

"அதாவது என் அக்கா உங்க முதல் மனைவி , நான் உங்க ரெண்டாவது மனைவி மட்டும் தான்... ஊர் மெச்ச அவ, ஊருக்கு ஒதுக்குபுறமா நான் ... அப்படிதான..

ம்ம் என்று பதி இறுகிய முகத்தோடு ம்ம் கொட்ட 

"சரி மாமா எனக்கு நீங்க வேணும், அது எப்படி இருந்தாலும் ஓகே 

"அப்பறம் 

"குழந்தை கேட்க மாட்டேன் ... எனக்காக நீங்க இதுவரை இறங்கி வந்ததே போதும்" 

"யோசி திரவியா, நீ கெடுக்க போறது உன் அக்கா வாழ்க்கையை...

"நான் வாழ போறது என் வாழ்க்கையை 

"உன்னதான் அசிங்கமா பேசுவாங்க 

"பேசிட்டு போகட்டும் எனக்கு நீங்க மட்டும் போதும் தாலி கட்டுங்க மாமா லேட் ஆகுது" எங்கே காட்டாது தவிர்த்து விடுவானோ என்று பயந்து அவள் பதியை தவித்து பார்க்க.. பெருமூச்சு விட்ட உமாபதி தாலி உடல் நடுங்க உள்ளம் பதற ,, முதல் மனைவி பிள்ளைக்கு இது தெரிந்தால் என்ற பயமும் சேர்ந்து கொள்ள வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட படகைக் போல அவன் மனமும் தவித்திட ... 

எதிரே நின்ற இருபது வயது இளம் அழகிக்கோ தன் ரசித்த மாமா கையில் தாலி வாங்க போகும் பேராவல் அவள் கண்ணில் மின்ன... உமாபதி திரவியா கழுத்தில் தாலியை கட்டி மூன்று முடிச்சு போட்டு தன் ரெண்டாவது மனைவி என்ற இடத்தை அவளுக்கு கொடுத்தான் ... 

ஆஆஆஆஆஆஆ மகனை அணைத்து தூங்கி கொண்டிருந்த வேணி பதறி எழும்பினாள்.. அவர்கள் திருமண போட்டோ காற்றில் அசைந்து கீழே விழுந்து கிடக்க ஓடி போய் அதை எடுத்து பார்க்க உமாபதிக்கும் அவளுக்கும் இடையே கண்ணாடி உடைந்து ஒரு இடைவெளி உண்டாகி இருந்தது ... 

அவன் கையால் தாலி வாங்கிய திரவியா முகம் நிறைந்த புன்னையோடு உமாபதி கையை கட்டிகொள்ள வர , சட்டென அதை தள்ளி விட்டவன் 

தாலி கட்டியாச்சு இனி தொல்லை பண்ணாத ... என்று ஆட்டோவுக்கு கை காட்டி 

"இதுல ஏறி ஹாஸ்டல் போய் சேரு, படிக்கிற வழியை பாரு 

"நீங்க மாமா, 

"என் பொண்டாட்டி பிள்ளை இருக்கிற எடத்துக்கு போறேன் 

"அப்போ நான் யாராம் சார்? என்று தாலியை தூக்கி காட்டி திரவியா உதட்டை வளைக்க... 

"சட்டபடி இது செல்லாது தெரியுமா ? 

"பட் ,மனசாட்சி படி இது செல்லும் கணவா , அது போதும் எனக்கும் .. 

"ப்ச் மனசாட்சி இருக்கிறவ அக்கா புருசனை அடைய அலைவாளா? "

"மனசு புல்லா உங்களை வச்சிருக்கிற நான் அலைவேன்"என்றவளை உமாபதி முறைக்க 

"ஓகே ஓகே பாய் கணவா ,போய் சேர்ந்ததும் போன் போடுங்க பாய்" என்று அவனுக்கு பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு ஓடி போய் ஆட்டோவில் ஏறியவள் கழுத்தில் கிடந்த தாலியை பார்க்க பார்க்க இவனுக்கு மனபாரம் தாங்க முடியவில்லை.... 

ஒருத்தி மனைவி !!

ஒருத்தி துணைவி !!

இனி , இருவருக்கும் இவன் சொந்தம் !!

"என்ன மாமா பெங்களுர் போயிட்டு வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகும்னு சொன்னீங்க , இன்னைக்கே வந்துட்டீங்க ... உள்ளே நுழைந்த உமாபதி பேக்கை ஓடிவந்து நீலவேணி வாங்கி வைக்க.. மனைவியை முகம் கொடுத்து பார்க்க முடியாமல் பதி ஓடி வந்த தன் குழந்தையோடு உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்..

நீலவேணி இரவு தலை நிறைய மல்லிகை பூ வைத்து மெனக்கெடல் எடுத்து தயாராகி தங்கள் அறைக்குள் நுழைந்தாள், படுக்கையில் மகனை தூங்க வைத்துக் கொண்டிருந்த உமாபதி உள்ளே நுழைந்த மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தூங்கும் மகனுக்கு தட்டிக் கொடுக்க 

மாமா என்று உமாபதி அருகே வந்து படுத்து, அவன் நெஞ்சின் மீது நீலவேணி கையை போட ... அவனும் தன் மனைவி நோக்கி படுத்தவன் விளக்கை அணைத்துவிட்டு மனைவியை அணைக்க கை போட போக... கிர் கிர் என்று அவன் போன் ஒலி எழுப்ப 

திரவியா நம்பர் 2 என்று இருக்க பதிக்கு புரையேறி விட்டது 

இவளா?? இப்ப எதுக்கு போன் போட்டிருக்கா, பதறி போன உமாபதி சட்டென போனை எடுத்து காதில் வைத்தான்

கணவாஆஆ என்று அவள் குரலில் அப்படியே உச்சி மண்டையில் கோபம் நட்டுக்கொண்டு நின்றது...

இந்த நேரம் யாரு மாமா ?என்று அவன் அருகே படுத்திருந்த முதல் மனைவி நீலவேணி கணவன் முகத்தை இருட்டில் பார்க்க முயல..

ஆபீஸ் கால் வேணி, நீ தூங்கு வந்துடுறேன் என்று அடித்து புரண்டு போனை எடுத்துக் கொண்டு பால்கனி நோக்கி ஓடினான் உமாபதி...

எதுக்குடி இந்த நேரம் போன் பண்ணின , உள்ளே இருக்கும் மனைவி பிள்ளைக்கு கேட்காது சீறும் குரலில் பதி எரிச்சலாக கேட்க 

நான் உங்க பொண்டாட்டி ,நீங்க என் புருசன் 

ப்ச் 

ஓகே ஓகே ரெண்டாவது பொண்டாட்டி, ஆனாலும் பொண்டாட்டி தானே கணவா "

"ஊப்ஊஊஊ என்ன வேணும்

"நீங்க தான் வேணும், தாலி கட்டுன ரெண்டாவது பொண்டாட்டியை தவிக்க விட்டுட்டு வரலாமா?  

அசிங்கமா எதாவது கேட்டுற போறேன் வை போனை "

"அசிங்கமா கூட கேளுங்க கணவா, ஆனா போனை வச்சிடாதீங்க.... ஐ லவ் யூ "

"நீ என்ன பண்ணிட்டு இருக்க தெரியுதா "

"ஏன் தெரியாம என் புருஷனுக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணிட்டு இருக்கேன் இச் இச் இச் நீங்க ஒன்னு கொடுங்க பார்ப்போம்.

வாட் ______க் அறிவு கெட்ட வேலை எல்லாம் பண்ணணும்னு முடிவு பண்ணி இருக்கியா.. நம்மாள ஒருத்தி செத்து மலந்துட கூடாதுன்னு பேருக்கு ஒரு தாலியை கட்டி தொலைச்சா, நீ அதையே வச்சி என்கிட்ட இடம் பிடிக்க பார்க்கிறியா இனிமே போன் போடு அப்ப இருக்கு 

என்ன செய்வீங்க கணவா ??கீர் கீர் என்று போன் கட் ஆகி விட திரவியா பல்லை நரநரத்தாள்... மணி இரவு 1, நகத்தை கடித்து துப்பினாள் ... மீண்டும் பதிக்கு அழைப்பு விடுக்க ... அறை உள்ளே வந்து அரைகுறை தூக்கத்தில் இருந்த வேணி அருகே படுக்க வந்தவன் போன் மணி எழுப்பவும் சலித்து கொண்டு போனை எடுத்து காதில் வைத்தவன் கண்களை விரித்தான் 

"கனவா,நான் உங்க வீட்டுக்கு கீழே தான் நிக்கிறேன்

ப்ச் எரிச்சலை கிளப்பாத"

"நம்பலைன்னா வந்து பாருங்க" உமாபதி ஜன்னல் வழியாக கீழே எட்டி பார்க்க ... அவன் வீட்டு வாசலில் ட்ரக் பேண்ட் டிசர்ட்டில் அவன் ரெண்டாவது மனைவி திரவியா அவனை பார்த்து கண்களை சிமிட்டி கைசைக்க 

கடவுளே!! இவ எங்க இங்க வந்தா??? என்று தலையில் கை வைத்து திருட்டு முழி முழித்தான் ரெண்டு பொண்டாட்டிக்காரன் ...

இதயத்துல நாலு அறை இருக்கு இரண்டு அறைக்கு ஆள் வச்சிருக்கிறது தப்பா ஆபீசர், 

அவ அங்கிட்டு, இவ இங்கிட்டு இருந்துட்டு போகட்டுமே!!