சிறுமல்லிப்பூவே லிங்

சிறுமல்லிப்பூவே
"மெய் பேசும் மித்தியமே" நாவல் ஹீரோயின் ரோஜாவின் அண்ணன் கருணாகரனுக்கும் ஜீவிதாவுக்கும் காதல் மலர்ந்ததா?அவர்கள் வாழ்க்கை என்னவானது என்பதை சிறுமல்லிப்பூவே நாவலாக அமேசான் கிண்டிலில் போட்டிருக்கேன் டியர்ஸ்.படிச்சிட்டு உங்க ஸ்டார்ஸையும் கருத்துக்களையும் போடுங்க.
டீஸர்
ஜீப் சத்தம் கேட்கவும் சூர்யாவும் ரோஜாவும் வெளியே வந்துப் பார்தனர்.
குணசேகரன் ஜீப்பை எடுப்பதை பார்த்ததும் சூர்யா வேகமாக இறங்கி “வந்து மச்சான் எங்க நிச்சயதார்த்த வீட்டுக்கு போறீங்களா? என்ன கூப்பிடாம நீங்க மட்டும் தனியா போறீங்க வாங்க சேர்ந்து போவோம்.மச்சான் துணையிருந்தால் மலையே ஏறலாமாம்” என்று முன்பக்க டோரைத் திறந்துக்கொண்டு ஏறினான்.
“ஐயோ மாப்ள நீங்க எதுக்கு அங்கெல்லாம் வந்துகிட்டு? நான் அப்பாவுக்கு துணையா போறேன். தம்பி அப்பா விட்டுட்டு போயிட்டான்னா அவரை கூட்டிட்டு வரணும்ல” என்று ஏதும் சொல்லி குணசேகரன் சமாளித்தான்.
“பெரிய மச்சான் ரொம்ப சமாளிக்காதீங்க. விஷயம் என்னன்னு எனக்கு ஓரளவு புரிஞ்சிட்டு. எப்படியும் சின்ன மச்சான் கல்யாணம் முடிச்சு மாப்பிள்ளையாதான் வருவாரு. அவரை கூட்டிட்டு வர்றதுக்கு இந்த மாப்ள துணை வேண்டாமா? அதுக்குத்தான் நானும் வர்றேன் ஜீப்பை எடுங்க சீக்கிரம் போவோம். சின்ன மச்சான் அங்க என்ன குளறுபடி செய்து வைக்கப் போறாரோ தெரியல” என்று குணசேகரனையே சூர்யா பிரகாஷ் அவசரப்படுத்தினான்.
“மாப்ள உங்களுக்கு எல்லாமே தெரியுது. நான் என்னமோ உங்களுக்கு ஒன்னும் தெரியாது நினைச்சுட்டு கிளம்ப பார்த்தேன். சரிதான் வாங்க என்ன பிரச்சனை வந்தாலும் மச்சானுக்கு துணையா வர்றீங்களே அதுவே சந்தோஷம்” என்று சூரிய பிரகாஷையும் அழைத்துக் கொண்டு சரியான நேரத்தில் போய் நிச்சயதார்த்த வீட்டில் இறங்கினான்.
அதற்கு முன்பாகவே கருப்பசாமியும் கருணாகரனும் அங்கே போய் இறங்கிவிட்டனர்.
தியாகராஜோ பால்ராஜைத்தான் பார்த்தான் “நம்ம கருப்பசாமி அவங்க மகன் பிரச்சினை பண்ணக்கூடாதுன்னு அவரையே கூப்பிட்டா, அவரும் மகனை கையோடவேகூட்டிட்டு வந்திருக்காரு. இது எங்க போய் முடியும்னு தெரியலையே” என்று மூணுமுணுத்தார்.
உடனே தியாகராஜனிடம் “நீ உன் மகள் நிச்சயதார்த்தம் நல்லபடியா முடியணும் என்கின்ற முடிவில் மட்டும்தான் உறுதியாக இருக்கும்.அவங்கக்கூட எப்படியாவது சண்டை போடணும்னு கருணாகரனையே பாத்துட்டிருக்காத புரியுதா? இது உன் மகன்கிட்டயும் சொல்லிவை” என்றுவிட்டு சபையில் போய் உட்கார்ந்தார்.
இந்த பக்கம் சீனிசாமியும் கருப்பசாமி என்று உட்கார்ந்திருக்க, அந்தப்பக்கமாக பால்ராஜ், தியாகராஜன் வெங்கடேஷ் என்று வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள்.
கருணாகரன் தனியாக அங்கே நின்றிருந்தான். ஏற்கனவே அவரை இறக்கிவிட்டதும் மகனிடம்”கருணா நீ போய் மில்லுல கணக்கு வழக்கைப்பாரு. நான் இதை முடிச்சிட்டு குணசேகரனை வரச்சொல்லி வீட்டுக்குப் போயிடுறேன்”என்று அவனை அனுப்பிவிடுவதிலயே குறியாக இருந்தார்.
“அப்படி ஒன்னும் பெரிய வேலை எதுவும் அங்கஇல்லை நான் இங்கயே இருக்கேன். இது முடிஞ்சதும் உங்கள நானே வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். எனக்கு அப்படி ஒன்னும் அவசரமான வேலை இல்லை” என்று அவர் கூடவே வந்தவன் அவருக்கு பின்னாடியே நின்றான்.
அவனை கண்டதும் மாப்பிள்ளை பிரபாகரன் உட்பட எல்லாரும் கருணாகரனையே முறைத்து முறைத்து பார்த்தனர்.
ஆனால் அதை எல்லாம் கண்டுக்காத கருணாகரன் ஜீவிதாவையே கண்ணெடுக்காது பார்த்திருந்தான்.
அழகாக பட்டுப் புடவை உடுத்தி, மணப்பெண் அலங்காரத்தில் அங்கே வந்து உட்கார்ந்திருந்தவளை பார்த்ததும் அவனது மொத்த கண்ட்ரோலும் போய்விட்டது.
அதனால் கருணாகரன் தனது பார்வையை அங்கும் இங்கும் விலக்காது ஜீவிதாவையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளும் அவனை கவனிக்கத்தான் செய்தாள். அவனது பார்வையை உணர்ந்தவள் “என்ன இவங்க இப்படி பாக்குறாங்க? நம்ம பணத்துக்காக தான் இவங்க பின்னாடி போறோம் என்று அவளை அசிங்கமா பேசும்போது கொடூரமாக இருந்த முகம். இப்போ இப்படி இருக்கு. இவங்க அப்பாவாவை வச்சுக்கிட்டே இப்படி என்னை சைட் அடிக்கிறாரே” என்று கொஞ்சம் ஒரு மாதிரியாக உணர்ந்தவள் அங்கேயும் இங்கேயும் கொஞ்சம் முகத்தை திருப்பிகொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த பிரபாகரன் அவளிடம் திரும்பி “உனக்கு சபையில் உட்கார கஷ்டமா இருக்கா? இங்க இருக்கு ஒரு மாதிரி பீல் பண்றியா?” என கருணாகரனைப் பார்த்துக் கொண்டே ஜீவிதாவின் பக்கவாட்டில் சாய்ந்து அவளது காதரோமாக கேட்டான்.
அதைக் கேட்டதும் ஜீவிதா “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”என்று தலைய வேகமாக ஆட்டினாள்.
பிரபாகரன் அவள் காது பக்கமாகத் திரும்பி காதோடு ரகசியம் பேசுவதை பார்த்த கருணாகரனின் காதிலிருந்து கோபத்தில் புகைதான் வந்தது.
‘இந்த பிரபாகரன் ரொம்ப ஓவரா பண்றான். நான் இங்க இருக்கேன்னு தெரிஞ்சும் வேண்டுமென்று அவ பக்கத்துல திரும்பி ரகசியம் பேசுறான்.
அதுவும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து பேசுறான்’ என்று கருணாகரன் மனதிற்குள் கருவிக்கொண்டே தனது சட்டையை முழங்கை வரைக்கும் ஏத்திவிட்டான்.
ஜீவிதாவுமே அவனுக்கு கோபம் வரும் என்று தெரிந்தும் அவனிடம் வேண்டுமென்றே பேசினாள். ஆனாலும் பிரபாகரனிடம் மனதளவில் நெருக்கமெல்லாம் வரவில்லை. அவளுக்கு இப்போதும் கருணாகரனைப் பிடிக்கும்தான். அவன் பேசியதை நேத்து இராத்திரி நடந்துக்கிட்டதுன்னு எல்லாத்தையும் நினைத்து தன்னைத்தானே கல்லாக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
மூணுவருஷமா ஆசைப்பட்டுக் காத்திருந்தது நடக்காமல் இன்னொருத்தனோடு கல்யாணம் நிச்சயமாகுறதெல்லாம் ஒரு பொண்ணுக்கு எப்பேர்பட்ட வலின்னு யாருக்குமே தெரியலை.
அந்த வலியோடுதான் அவள் அங்கே உட்காராந்திருக்கிறாள் என்பதை கருணாகரன் புரிந்துக்கொள்ளவில்லை. நம்மளைவிட ஒருத்தன் நல்லதா வந்ததும் கட்டிக்க சம்மதிச்சிட்டாளே என்று ஆதங்கப்பட்டான்.
இந்தியா லிங்
https://www.amazon.in/dp/B0FRTY41C
அமெரிக்கா லிங்
https://www.amazon.com/dp/B0FRTY41CX
இங்கிலாந்து லிங்