துணைவி 20
Thunai20
20 இவள் துணைவி
அவள் மனைவி !!
"என்னம்மா சுமங்கலி பூஜையா" என்று மேஜையில் இருந்த லட்டை எடுத்து உமாபதி வாயில் போட
"ஆமா மாமா குங்குமம்" என்று நீட்ட அதை எடுத்து தாலியில் வைத்து விட்டான்... வெறும் சம்பிரதாயம் சடங்குகள் அதில் எதிலும் உயிர்ப்பு இருந்தது இல்லை ... சுமங்கலி பூஜை கூட இவனுக்கு ஒரு புது வாழ்க்கை கொடு ஆண்டவா என்று விரதம் இருப்பது இன்று வரை உமாபதிக்கு தெரியாத ஒன்று ,
அறையில் இருந்து தன் தகப்பனும் தாயும் அவர்களை நிறைவாக பார்த்துக் கொண்டிருக்க பெருமூச்சு விட்டுக் கொண்டான்..
கணவனாக பூஜை செய்கிறாளோ இல்லையோ கடவுளாக பூஜை செய்கிறாள்,. அவளை பொறுத்தவரை அவன் கடவுளாகி விட்டான்...
சிலர் வந்து விட்டு போன இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, போஸ் இடத்தை , இந்த உமாபதியால் கூட நிரப்ப முடியாது போனது..
பூஜை அறைக்குள் போன வேணி அந்த தாலியை கையில் தூக்கி வைத்து
அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடு , ஏன்னா என்னால அவருக்கு எப்பவும் ஒரு சொட்டு காதலை கூட கொடுக்க முடியாது... என் காதல் மொத்தத்துக்கும் சொந்தக்காரன் என்னோட போஸ் மாமாதான்... மாறனும் மாத்திக்கணும்னு நினைச்சா தானே என்னால மாற முடியும்... அவரை மறந்தது போல என்னால நடிக்க கூட முடியல.. ஒவ்வொரு சுமங்கலி பூஜையோடும் புருஷன் தீர்க்க ஆயுசோட இருக்கணும்னு வேண்டிப்பா ... ஆனா என்னோட வேண்டுதல் என்னோடு காதலுக்கு மரியாதை தந்து தள்ளி நின்ன அவருக்கு , ஒரு காதலை கொடு அவருக்கு ஒரு வாழ்க்கையை கொடு .. அவர் வாழ்றதை நான் பார்க்கணும்... அந்த ஒரு சந்தோஷத்தையாவது எனக்கு கொடு .. என்று வேண்டிக் கொண்டவள்
மாமா
"சொல்லும்மா
"உங்க கூட கொஞ்சம் பேசணுமே...
சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் என்ன என்று பார்க்க
மொட்டை மாடியில வெயிட் பண்றேன் வாங்க என்று வெட்கத்தில் சிவப்பது போல சிரித்து விட்டு மாடி ஏறிப் போனாள்.. இருவரும் அழகாக நடிக்க பழகிக் கொண்டனர்
"சொல்லும்மா என்ன பேசணும்?
"நான் நாளைக்கு எங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்..
"என்ன ஆச்சு என்று அவன் பதற
"இதுக்கு மேலயும் உங்க வாழ்க்கையில நந்தி மாதிரி நான் இருந்துட்டு இருக்க விரும்பல என்ன ஆனாலும் பரவால்ல நான் அவமானப்பட்டாலும்
"என்னால என் புள்ளையை பிரிஞ்சு இருக்க முடியாது வேணி என்றவன் பதிலில் அவள் அரண்டு முழிக்க ... தலையை குனிந்து கொண்ட வேணி
"நானும் முடிஞ்ச வரைக்கும் போராடி பார்த்தேன் முடியல .. வெட்கத்தை விட்டு சொல்றேன் , அவர் கூட வாழ்ந்த வாழ்கையை நினைச்சுகிட்டு மட்டும் தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்... எனக்கும் அவருக்கும் இடையில யாருக்கும் என்னால இடம் கொடுக்க முடியாது ... அது உங்களுக்காக இருந்தாலும் சரிதான்... நான் என் வீட்டுக்கு போறது தான் சரி விட்டுடுங்க ? எங்களை புடிச்சு வச்சுக்கிட்டு, நீங்க வேதனை படாதீங்க.. டைவர்ஸ் பத்திரம் அனுப்பி விடுங்க , எத்தனை கையெழுத்து வேணும்னாலும் போட்டு தர்றேன்.
"என்னால முடியாது வேணி, நீ என் மனைவின்னு நான் உரிமை பட்டது இல்லை .. ஆனா அவன்தான் என் புள்ளன்னு நெஞ்சில உரிமையா சுமந்திட்டேன் ... நான் உன்கிட்ட உன் காதலுக்காக போராடல, என் பிள்ளைக்காக போராடுறேன்.. நீ என் மனைவியா இந்த வீட்ல இருக்கும் வரைக்கும் தான் அவன் என் பிள்ளையா, இந்த வீட்ல இருப்பான், எனக்கு என் புள்ள வேணும்... அதுக்காக இந்த நாடகத்தை உன்னால காலம் முழுக்க போட முடியாதா ? நான் உன் காதலுக்கு எப்போதும் தடையா இருக்க மாட்டேன் வேணி , சுதந்திரமா நீ உன் போஸை காதலிச்சுகிட்டு, அவன் கூட வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சிக்கிட்டு வாழ உனக்கு முழு சுதந்திரத்தையும் நான் தர்றேன்.... எனக்கு நீ வாழ்க்கை பிச்சை போட வேண்டாம் ... என் பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு போயிடாதம்மா... அப்பான்னு சொன்ன அவன் வாயால நீங்க யாரோ, நான் யாரோன்னு அவன் ஒரு வார்த்தை கேட்டா, அந்த இடத்திலேயே நான் செத்துருவேன்மா... அவனுக்கு கடைசி வரைக்கும் நான் அப்பாவாவே இருக்கிற பாக்கியத்தை கொடேன் என்று பதி கையெடுத்துக் கும்பிட...அவன் கையை தட்டி விட்டவள்
"அய்யோ நீங்க எனக்கு வரம் கொடுத்த சாமி உங்கள கை ஏந்தி நிக்க வெச்சிட்டேனே... இந்த பாவிக்கு ஏழேழு ஜென்மம் வந்தாலும் மன்னிப்பே கிடையாது" என்று வேணி தலையில் அடித்து கொண்டு அழுதவள் சிறுது நேர அமைதிக்கு பிறகு ..
"மாமா
"ஏதோ முடிவெடுத்து இருக்க, என்ன முடிவுன்னு சொல்லும்மா ...
"அப்போ நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் ... நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, நான் இந்த வீட்ல இருக்கேன்..
"அது எப்படிம்மா சாத்தியம் ,..
"ஏன் சாத்தியம் இல்ல , உங்களுக்கு வாழ ஆசை இல்லைன்னு சொல்லுங்க.... என்று அவனை நேர் கொண்டு அவள் பார்க்க ... உமாபதி தலையை குனிந்தான்..
"உங்களுக்குன்னு ஒரு ஆசை பாசம் இல்ல... பொய் மட்டும் சொல்லாதீங்க மாமா ...
எப்படி சொல்வான்? மனதை திறந்து பேசும் அளவுக்கு இருவருக்கும் இடையில் எந்த உறவும் இல்லையே...
அவனும் இளம் வயதுக்காரன் வயதும் வாலிபமும் அவனுக்கும் போட்டி போடும்... யாரோ ஒருவரை மனதில் சுமக்கும் இவளை காதலியாகவும் பார்க்க முடியவில்லை , மனைவியாகவும் பார்க்க முடியவில்லை, அவன் படும் பாடு அவனுக்குத்தான் தெரியும்... இனி இதுதான் வாழ்க்கை என்று புரிந்து போனது... வாழாமலேயே அவன் இளமை வீணாய் போகப் போகிறது...
நான் என்ன பாவம் செய்தேன், ஏன் எனக்கு இந்த தண்டனை? என்று அவன் கேட்காத நாள் இல்லை ... உச்சகட்ட வேதனை அவனுக்கும் இளமை தேவை உண்டே ....
தாய்லாந்து வரை போய் விட்டான் , யாருக்கும் தெரியாது உடல் தேவையை தீர்த்து விட்டு வந்து விடலாம் என்று.. ஆனால் , அவன் மாசுபடாத மனதை கொண்டவனாயிற்றே .. பணத்தை அள்ளி அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தவன்
மனசுல ஒருத்தனை சுமக்காம, அவனை உடம்புல சுமந்தா தாலி கட்டின பொண்டாட்டியே ஆனாலும் அவ விபச்சாரி ஆகிடுவா... அதேபோல, மனசுல ஒருத்தி இல்லாம, ஒரு பொண்ணோட உடம்பை தொட்டா அவன் விபச்சாரன் ஆகிடுவான்... என்னால இந்த ரெண்டையும் ஏத்துக்க முடியாது சாரிம்மா" என்று மொழி புரியாது முழித்த அந்த பெண்ணின் முகத்தை கூட பார்க்காது வந்துவிட்டான்...
உங்க சூட்கேஸ்ல அந்த லாட்ஜ் போன பில் இருந்தது சட்டை துவைக்கும் போது பார்த்தேன் இவன் பதறி போய்
அது வந்தும்மா "
"ஒரே அறையில இத்தனை வருசம் நான் இருந்து இருக்கேன் , நீங்க யாருன்னு சொல்லித்தான் தெரியணும்னு அவசியம் இல்லை .. காசு வீணா போச்சே" என்றவளை பார்த்து அசடு வழிந்தான்
"பொண்ணு பார்க்கவா... பெருமூச்சு விட்ட உமாபதி
"ஆனா
"தாலி கட்டினா நான் மனைவின்னா எனக்கு முதல் தாலி கட்டி என்னோட வாழ்ந்தது வாழ்ந்துட்டு இருக்கிறது போஸ் மாமா அப்போ இந்த தாலியை நான் என்ன பண்ண ?என்று தங்க சரடை அவள் தூக்கி காட்டிட....
"இப்ப சொல்லுங்க நான் அவருக்கு சொந்தமா இல்லை உங்களுக்கா... தாலி புனிதமா, காதல் புனிதமா ?
ரெண்டுமே புனிதம்னு சொன்னாலும் இந்த ரெண்டுமே அவர்கிட்ட இருந்து எனக்கு கிடைச்சிடுச்சு... கட்டுன ஒரு கயித்துக்காக நீங்க உங்க வாழ்க்கையை தொலைச்சிட்டு நின்னுடாதீங்க., நீங்க இன்னொரு வாழ்க்கைக்கு தயார் ஆகலைன்னா , உங்க மகனை உங்ககிட்ட தந்துட்டு நான் என் போஸ் மாமா போன இடத்துக்கே போக
வேணிஇஇஇஇஇஇஇஇ
"அவர் உயிரோட தான் இருக்கார்னு வாழ்ந்துட்டு இருக்கேன், அப்படியே என்ன வாழ விட்டுட்டு நீங்க உங்க வாழ்கைக்கு போறது உத்தமம் .... தலையை தடவியபடி அவன் அமர்ந்து இருக்க ... அமைதியாக அவன் யோசிக்கட்டும் என்று வேணி எழும்பி போக பார்க்க
"கடைசி வரை நீயும் கெளரியும் "
"இந்த வீட்டுல இருப்போம் இது சத்தியம்"
"காலம் என்ன வச்சிருக்கோ அதை ஏத்துக்கிறேன்" என்றுவிட்டு உமாபதி எழும்பி போனான்... வேணி சிரித்த முகமாக போகும் அவனை பார்த்தவள் டைரி எடுத்து தன் வாழ்க்கையில் நடந்ததை எழுதி அதை தன் புடவை நடுவே பத்திரப்படுத்தி வைத்தாள்...
கெளரி பிறந்த சமயம் அவளை பார்த்துக்க வந்த திரவியா கையை காலை வைத்து கொண்டு சும்மா இருக்காது திரவியா அலமாரியை திறக்க வேணி டைரி வழுவி அவள் காலில் நங்கென்று விழ
ஸ்ஆஆஆஆ என்று கீழே குனிந்து அதை எடுக்க போனவள் ஷாக் அடித்து நின்றாள்..
"போட்டோவில் போஸ் வேணி தோளில் கைபோட்டு நின்றான் ... அந்த போட்டோவை அப்படியே விட மனமில்லை டைரியை எடுத்து திறந்து படிக்க படிக்க யாரை குற்றம் சொல்ல என்று தெரியவில்லை ..
பதி மீது காதல் எல்லாம் வரவில்லை , அவன் மீது பரிதாபம் மட்டும் மிஞ்சி நின்றது, அவனை பார்க்கும் போதெல்லாம் அக்கா அவளோட போஸ் மாமாவை மறந்து பதியோடு வாழ்ந்து விட மாட்டாளா என்று தான் ஏக்கம் வந்தது... இங்கே வரும் போதெல்லாம் இந்த டைரியை எடுத்து பார்ப்பாள், தவறுதான் !! ஆனால் அவளுக்கு அவர்கள் வாழ ஆரம்பித்து விட்டார்கள் என்ற ஒரு செய்தி கிடைத்து விட்டால் போதும் ... நிம்மதியாக இருப்பாள்... கடைசி இரவு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள கேட்டது வரை வேணி எழுதி வைத்திருக்க
வழிகாட்டும் ஒருவனாக வேணி வாழ்கையில் உயரிய இடத்தில் உமாபதி இருந்தானே தவிர, ஒரு இடத்தில் கூட காதல் என்ற புள்ளியில் அவனை வைக்கவில்லை எங்கும் எதிலும் போஸ்தான் இருந்தான்... கோழையாக இருந்தாலும் அவள் காதலை அசைக்கவே முடியாது போனது !!
"இங்க என்னடி பண்ணிட்டு இருக்க??" என்று வேணி குரலில் மொட்டை மாடியில் உட்கார்ந்து டைரியை புரட்டிக் கொண்டிருந்தவள் பதறி அவள் கையில் இருந்த டைரி கீழே விழ.. பிடிபட்ட உணர்வில் திரவியா திருதிருவென்று விழிக்க.. அவள் கையில் இருந்து விழுந்த தன் டைரியை வேணி ஓடிப்போய் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்.. பளார் என்று தன் தங்கை கன்னத்தில் ஒன்றுவிட்டாள்
"யார கேட்டுடி இதெல்லாம் எடுத்த?
"அவர் பாவம் அக்கா" என்ற தங்கையை தாவி அணைத்துக் கொண்டு கதற ஆரம்பித்து விட்டாள்
தங்கைக்கு உண்மை தெரிந்து விட்டது பகீர் என்று ஆகிப்போனது...
" நீ தொலைச்ச தங்கத்தை தேடிக்கிட்டு இருக்க, உன் கையில கிடைச்சிருக்குறது வைரம் அக்கா.. தங்கத்துக்காக வைரத்தை விட்டுட்டு வாழ பாக்குறியே"
"கிடைச்சது வைரமே ஆனாலும், நான் தொலைச்ச அந்த தங்கத்து மேல தாண்டி என் மனசு கிடந்து அடிச்சிக்குது ... என் நிலமை எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது" என்று தன் கழுத்தில் கிடந்த இரட்டை தாலியை தூக்கி காட்டியவள்
ஒன்னு காதல் தந்த பரிசு !! இன்னொன்னு காலம் தந்த பரிசு !! இந்த ரெண்டுல எதுக்குடி நான் உண்மையா இருக்கணும், எனக்கே பதில் தெரியல....
சரி, இன்னொரு பொண்ணு வந்தா உன்னை இந்த வீட்ல அந்த பொண்ணு இருக்க விடுவான்னு நினைக்கிறியாக்கா... அவரோட நிம்மதி மொத்தமா போயிடும்... அவர் உயிரா நினைக்கிற பிள்ளையை, அவர் பிள்ளைன்னு உரிமை கொண்டாட விடுவான்னு நினைக்கிறியா ... அவருக்கு நீ சொன்னது போல வாழ்க்கை கிடைச்சுடும் ... ஆனா நிம்மதி கிடைச்சுடுமா... உன்னால போன நிம்மதியை அவருக்கு உன்னால திரும்பி கொடுக்க முடியுமா?
இப்ப அவருக்கு இந்த குழந்தை உசுரு ... நீ தப்பு பண்ணலக்கா, ஆனா எல்லாம் தப்பாகி போச்சுக்கா ... இவர் தான் அப்பான்னு கௌரி நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கான், இனி எதையுமே திருத்த முடியாது அக்கா உன்ன மாத்திக்க முயற்சி பண்ண கூடாதா?
"அதுக்கு என்னோட மரணம் மட்டும்தான் முடிவா இருக்கும்...
"என்னக்கா இப்படி பைத்தியக்காரத்தனமாக பேசுற... நீங்க சொல்ற நியாய தர்மத்துக்கு எவ ஒத்துப்பா... அவர் என்னன்னா உன்னையும் குழந்தையையும் இந்த வீட்டை விட்டு போகவே கூடாதுன்னு சொல்றார்... அதே சமயம் நீ அவர் இன்னொரு பொண்ணு கூட வாழனும்னு சொல்ற இதுக்கெல்லாம் சம்மதம் சொல்ல எந்த கிறுக்கச்சி வருவா? வேணி கையைக் கட்டி கொண்டு தங்கையை அழுத்தமாக பார்க்க
"ஆமா இப்ப எதுக்கு நீ என்னை குறுகுறுன்னு பாக்குற , என்று திரவியா தன் அக்காவை பதறிப் பார்க்க..
"இங்க பாரு அக்கா புருஷனை வளைக்க பார்த்தேன்னு என்ன காரி துப்புவாங்க ... அக்கா வாழ்க்கையை கெடுத்தவன்னு போற இடத்துல எல்லாம், என்ன அசிங்கம்படுத்துவாங்க...
உமாபதி மனைவியா நீ பார்க்கிற
நான் போஸ் கெளரி மனைவியா தான் இப்ப வரை உன் முன்னாடி நின்னுட்டு இருக்கேன்!! சவப்பெட்டி ஏறும் வரை நான் போஸோட மனைவிதான்...
போஸ் மாமா கூட வாழ்ந்து குழந்தை பெத்த நான் எப்படி இவரோட துணைவியாக முடியும்??
"இங்க பாருக்கா, உனக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு... நிறைய யோசிக்கலாம் ... ஒருவேளை எப்பவாவது அவர்மேல உனக்கு காதல் வரலாம் அவர் கூட நீ நல்லா வாழுவக்கா! அதை நான் கண்டிப்பா பார்ப்பேன், தப்பா முடிவெடுக்காத
ஜீவன் உள்ள நாளெல்லாம் நான் அவர் ஒருத்தருக்கு தான் .. இவர காத்திருப்பார் காலம் முழுக்க எனக்காக காத்திருக்க சொன்னாலும் அவர் காத்திருக்க தயாராக இருப்பார் ... ஆனா, கடக்க போறது , மாறப்போறது காலமும், வயதும் தானே தவிர என் மனசு இல்ல...
அதைவிட குமரகுரு மாமாவுக்கு நான் அவர் கூட வாழலை என்கிற சந்தேகம் இன்னைக்கு வரைக்கும் இருக்கு , சில நேரம் எங்க அறைய எட்டிக் கூட பாக்குறார். , பாவம் அவரை தப்பா சொல்ல முடியாது, இவருக்கு அவங்க உலகம் , அவங்களுக்கு இவர் உலகம்... தான் பையன் உண்மையாவே நல்லாதான் இருக்கானான்னு சந்தேகம் ... ராத்திரி நேரத்துல சில சமயம் அந்த அறையை ஜன்னல் வழியா எட்டிப் பார்ப்பார்.. அப்போ என் மனச கல்லாக்கிக்கிட்டு, அவர் மேல கைய போடுவேன்....
அப்பா பார்க்கிறாரோ அப்படின்னு அவர் தொடுகை கூட விரசம் இல்லாமல் ஒரு அணைப்பு கொடுப்பார் அந்த நொடி செத்து செத்துப் பிழைக்கிற நொடிகள் !!
அவருக்குதான், காதலிக்கிற மாதிரி நடிக்க சொன்னா எப்படி நடிக்க முடியும் சொல்லு ... அவருக்கு வேணும்னா போஸ் மாமாவை காதலிச்சு குழந்தை பெத்துக்கிட்ட என்ன ஏத்துக்க அருவருப்பு இல்லாம இருக்கலாம் ... ஆனா, எனக்கு அருவருப்பா இருக்கு .... ப்ளீஸ் என்னை விட்டிருங்க...
எனக்காக நின்ன அந்த மனுசனுக்கு உன்னால ஒரு காதலை கொடுக்க முடியும், "
அக்கா "
அவருக்கு ஒரு வாழ்க்கை கொடுடி என்று திரவியா காலில் திடுதிப்பென விழுந்த வேணி செயலில் திரவியா அதிர்ந்து போய் நின்றாள்..
மனதில் சுமந்தவனுக்கு உண்மையாக இருக்க நினைத்த வேணி துரோகியா ?
மனதில் தனக்கு இடமே இல்லை என்று தெரிந்து விலகி நின்ற உமாபதி துரோகியா??
கேட்பாரற்று கிடந்த வைரக்கல்லை கையில் எடுத்த திரவியா துரோகியா??