இவள் துணைவி அவள் மனைவி 5
Thunaavi5
5 இவள் துணைவி !!
அவள் மனைவி !!
சித்தியில்ல சின்னம்மான்னு சொல்லு..
போ சித்தி , இவ்வளவு நாள் உன்னை சித்தின்னுதானே கூப்பிட்டேன்.. இப்போ ஏன் என்னை சின்னமான்னு கூப்பிட சொல்ற... எனக்கு வரல விடு ... நீ சித்தி தான்...
"டேய் சின்னம்மா சொல்ற, இல்ல மண்டையில கொட்டி பல்ப் வரை வெச்சிருவேன்...
"அம்மா பாரு சித்தி , என்ன கொடுமை படுத்துறா என்று கௌரி உதட்டைப் பிதுக்கிக் கொண்டே கிச்சன் உள்ள நின்ற தன் தாயின் காலை போய் பிடித்துக் கொண்டு நிற்க ... அவனை தூக்கி இடையில் உட்கார வைத்துக் கொண்ட நீலவேணி... தோசையைக் கொண்டு வந்து தட்டை வைத்து மேஜையில் டொக்கு டொக்கு என்று அடித்துக் கொண்டிருந்த தன் தங்கை தட்டில் தோசையை போட்டவள்
"ஏண்டி காலையிலேயே அவன் உயிரை எடுக்கிற, இவ்வளவு நாள் அவ உன்ன சித்தினுனுதானே கூப்பிட்டான்... இப்ப எதுக்கு திடீர்னு சின்னமான்னு கூப்பிட சொல்ற
நீ யாரு??
அவனுக்கு அம்மா "
"அப்ப நான் முறைப்படி சின்னமாதான வரணும்.. எதுக்கு சித்தின்னு கூப்பிடுறான்.... நீ அம்மான்னா நானா சின்னம்மாதான் ஒழுங்கா, உன் மகன சின்னமான்னு கூப்பிட சொல்ற
"போடி பைத்தியம் என்று விட்டு கௌரி மாடிப்படியில் இருந்து சட்டையை மடக்கி விட்டுக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த தன் தகப்பனை நோக்கி ஓட ..
"அப்பா என்ற மகனை தூக்கி தன் தலை மேல் போட்டு பிடித்த உமாபதி
"சாப்பிட்டியாடா குட்டு "
"ம்ம் ஆமா சித்தி அள்ளி கொடுத்தா...
"டேய் நோ சித்தி சின்னம்மா" என்று இங்கிருந்து தோசையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டே அவள் கத்த
"போடி பைத்தியம்
" இந்தா வர்றேன் நான் பைத்தியமா??" என்று அவள் எழும்ப போக, அவள் கையைப் பிடித்து உட்கார வைத்த நீலவேணி
"அம்மா தாயே மறுபடியும் ஆரம்பிக்காத உக்காந்து சாப்பிடு, நான் மாமாவை கவனிக்கணும்"
"நீ உன் வேலையை பாருக்கா, நான் வேணும்னா மாமாவை கவனிச்சுக்கிறேன்... எதுக்கு நீ முறைக்கிற பதிய பாதி பாதியா பார்த்துக்கலாம்னு பார்த்தா, எங்க விடுறீங்க? அவருக்கு உமாபதின்னு பேர் வச்சதுக்கு பதிலா, உமாபாதின்னு பேர் வெச்சிருக்கலாம் இல்ல மாமா.... சாப்பாட்டு மேசையில் திரவியாவிற்கு எதிர் இருக்கையில் வந்து உட்கார்ந்த உமாபதியை பார்த்து அவள் துரிதமாக கண்ணடித்துவிட்டு தோசையை வாயில் வைத்து மென்று விழுங்க .... அவள் முகத்தில் காலையில் பட்ட காபி சூட்டில் அங்கங்கே சிவந்து போயிருந்ததது
"எங்கடி போய் விழுந்த , இப்படி முகம் எல்லாம் சேறும் சகதியுமாக வந்து நிக்கிற என்று கேட்ட அக்காவிற்கு
கால் தடுக்கி கீழ விழுந்துட்டேன் "
"அதுக்கு ஏன் முகத்தில் இப்படி அழுக்கா இருக்கு "
"இன்னொரு தடவை விழும்போது உன்னை
கூப்பிடுறேன், வந்து என்னன்னு பாத்துட்டு போ
"எதாவது ஒரு கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்றியா ... எல்லாம் குதர்க்கமாகவே பண்ணு போய் குளிச்சிட்டு வா
"நீ ஏதாவது ஒரு கேள்வி நான் பதில் சொல்ற மாதிரி கேக்குறியா?? என்று போன தங்கையை தலையில் அடித்துக் கொண்டு பார்த்தவள் ...
"இவள கட்டிக்கிற புருஷன் என்ன பாடுபட போறானோ தெரியல என்று அவளுக்கு கேட்கவே முனங்க...
"அதெல்லாம் என் புருஷன் ஜாலியா இருப்பான்... நீ உன் புருஷன முதல்ல ஒழுங்கா போய் பாரு ... என்று அதற்கும் பதில் சொல்லிக்கொண்டேதான் போனாள்
"மாமா இட்லி வைக்கவா? தாலியை வழக்கம் போல வந்து உமாபதி முன்னே வேணி நீட்ட.. அவனும் எப்போதும் போல குங்குமத்தை எடுத்து தாலி மீது வைத்து விட்டு அவள் நெற்றி மீது வைத்தவன் ஓரக்கண்ணால் சேனல் டூவை பார்க்க .... தன் அக்காவுக்கு தெரியாது , திரவியா மறைத்து போட்டிருந்த தாலியை நீட்டி காட்ட ... இவன் அதை காணாதது போல முகத்தை திருப்பி கொண்டான் ..
"சாப்பாடு எடுத்துட்டு வர்றேன் மாமா..
"சரிம்மா , நீயும் வந்து சாப்பிடு
"இல்ல மாமா நீங்க சாப்பிடுங்க, நீங்க சாப்பிடுட்டு போனதும் நான் சாப்பிடுறேன்... நீங்க வச்சுட்டு போற தட்டுல தானே மாமா நான் சாப்பிடுவேன்.. இன்னைக்கு என்ன புதுசா கேக்குறீங்க என்று பத ல் தட்டில் இட்லியை ஆவி பறக்க கொண்டு வைத்தவள்.. பதமாக மிளகாய் பொடியை அவன் தட்டில் வைத்து குழி தோண்டி, எண்ணெயை ஊற்றி சட்னி சாம்பார் என்று அத்தனையும் ஊற்றிவிட்டு
"சூடா ஒரு ஊத்தாப்பம் போட்டு கொண்டு வரேன் எதிரில் உட்கார்ந்து மிளகாய் பொடியில் தோசையை தொட்டு சாப்பிட்டு முடித்துவிட்டு விரலை திரவியா உமாபதியை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே சப்பிட , இவன் சட்டென மேஜையில் வைத்திருந்த தட்டை பார்த்து அதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்காமல் விழுங்க ஆரம்பித்தான்.. வேணி கிச்சன் உள்ளே நுழைய சட்டென உமாபதி தட்டை வெடுக்கென்று பிடுங்கி தன் பக்கத்தில் வைத்துக் கொண்ட திரவியா.. அவள் தட்டை அவனுக்கு தள்ளி விட்டுவிட்டு, அவன் கை வைத்து சாப்பிட்ட இட்லியை இவள் கைவைத்து சாப்பிட ஆரம்பிக்க ... அவன் கழுத்து நரம்பு பிடைக்க அவளை கோபத்தில் பார்க்க
புருஷன் தட்டிலதான் சாப்பிடணுமாம், அக்கா டீச் பண்ணி தந்துட்டு போயிருக்கா... அவ உங்க தட்டுல சாப்பிடுறது சரின்னா...நான் உங்க தட்டுலதான சாப்பிடணு, ம் ரூல்ஸ்னா எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ் தானே... இதுல பெரிய வீடு, சின்ன வீடுன்னு பிரிச்சு பார்க்க கூடாது ... நாங்க எப்படி வேணாலும் அடிச்சுப்போம் , சேர்ந்துப்போம்.. ஆனா, நீங்க நடுவுல நின்று நியாயமா நடக்கணும் , பிகாஸ் அவளுக்கு பாதி எனக்கு பாதி இந்த பதி... அப்போ இந்த தட்டுல பாதி சேர் எனக்கும் இருக்கு கனவா, சோ நீங்க என் தட்டில் சாப்பிடுங்க ... நான் உங்க தட்டில் சாப்பிடுறேன் டிகே ... இது இட்லி இல்ல கனவா உங்க உதடு பிச்சு பிச்சு திங்க போறேன், அதே மாதிரி அங்க இருக்கிறது தோசை இல்ல ... என் கீழ் உதடு தொட்டு தொட்டு சாப்பிடுங்க , என்று கிசுகிசுப்பாக கூறியவள் , அவன் தின்று வைத்த இட்லியை ரசனையாக எடுத்து உதட்டில் தடவி உச்சுக்கொட்டி அவள் சாப்பிட .... அவன் தட்டில் வந்து ஊத்தாப்பத்தை வைத்த நீலவேணி உமாபதி தட்டில் இருந்த தோசையையும் , தன் தங்கை தட்டில் இருந்த இட்லியையும் மாறி மாறி பார்த்தவள்
"ஏண்டி நீ தோசை தானே சாப்பிட்டுக்கிட்டு இருந்த மாமா உங்களுக்கு நான் இட்லி தானே வச்சேன்..
"தோசைதாம்மா வச்ச என்றான் சிறிதாக நடுங்கிய குரலில்..
" எனக்கு தோசை தான் வச்ச, பட் இட்லி சாப்பிடணும் போல இருந்தது .. ஒரு இட்லியை எடுத்து வச்சு சாப்பிட்டுகிட்டு இருக்கேன் ...இட்லி சாப்பிடுறது குத்தமா என்று திரவியா கேட்க..
"அம்மாடி நீ எது செஞ்சாலும் குத்தமில்ல சாப்பிடு வேற ஏதாவது வேணுமா...
"நிறைய வேணும் தான் ஆனா கிடைக்காது போல இருக்கே , இன்னும் அவள் கை வைத்த சாப்பாட்டை தன் உதட்டில் வைக்காமல் பதி அலைந்து கொண்டிருக்க, இவள் குசும்பாக விசில் அடித்துக் கொண்டே பார்க்க...
"என்ன மாமா நீங்க சாப்பிடாம உட்கார்ந்தே இருக்கீங்க.. உடம்புக்கு ஏதாவது செய்யுதா" என்ன என்று நீலவேணி அவன் அருகே நெருக்கமாக நின்று கழுத்தில் நெற்றியில் கைவைத்து பார்த்தவள்..
நான் வேணும்னா அள்ளித் தரவா" என்று தன் தங்கை அலைந்த தோசையை கையில் எடுத்து உருட்டி உமாபதியின் உதட்டில் வைக்க... மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் , அதை அவன் வாய்க்குள் விழுங்க...
அய்யய்யோ அடுப்புல தோசை போட்டேன் மாமா சாப்பிட்டுகிட்டு இருங்க ஓடி வந்துடுறேன் "என்று நீல வேணி உள்ளே ஓட..
ஓகே மிஷன் கம்பிளிட்டட், என் உதடு எப்படி இருக்கு கணவா ? என்று கேலியாக சிரித்த அவளை நோக்கி தட்டை தூக்கி உமாபதி வீசப்போக
"வீசினா சத்தம் வரும், சத்தம் வந்தா, உங்க முதல்வீடு உள்ள இருந்து மாமா என்ன ஆச்சு உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சா, நான் வரவான்னு டூத் பேஸ்ட்ல உப்பு இருக்காங்கிற ரேஞ்சுல பதிவிரதையா ஓடிவந்து எதிர்ல நிப்பா.. அவளுக்கு காரணம் சொல்ல முடியாம , மறுபடியும் கோலி உருண்டையை தொண்டையில விட்ட மாதிரி நீங்க முழிக்கணும்.... தேவையா, பேசாம சத்தமே இல்லாம சாப்பிட்டுட்டு போங்க கணவரே!! வேணும்னா ஈவினிங் என்ன மீட் பண்ண தோட்டத்துக்கு வருவீங்கல்ல.. அங்க வச்சு என்ன அடிங்க. கடிங்க இல்ல அடிச்சுக்கிட்டே கடிங்க அது உங்க சாய்ஸ்...
வாட் , என்னது ஈவினிங் உன்ன சந்திக்கணுமா?
"ஓஓஓ ஷட், இன்னிக்கு டைம் டேபிள் சொல்லவே இல்லல்ல,, நீங்க காலைல வேலைக்கு போறீங்க மதியம் சாப்பிடுறதுக்கு வீட்டுக்கு வர்றீங்க ... உங்க முதல் பொண்டாட்டி கூட மதிய சாப்பாடு தாராளமா சாப்பிட்டுக்கோங்க ... ஆனா, நைட் உங்களுக்கான டின்னர் நான் ரெடி பண்ணி , பின்னாடி தோட்டத்துல ரெடியா உட்கார்ந்திருப்பேன்.... நீங்க என்ன பண்றீங்க? உங்க பொண்டாட்டி புள்ளைய தூங்க வைப்பீங்களோ இல்ல போட்டு தள்ளுவீங்களோ... அது உங்க தனிப்பட்ட விஷயம்.. அதுல நான் தலையிட மாட்டேன். ஆனால் 11:00 மணிக்கு டின்னர் சாப்பிட பின்னாடி தோட்டத்துக்கு வர்றீங்க ஓகே என்று அவன் கன்னத்தில் தட்டி விட்டு...
"அக்கா இட்லி செம சாஃப்ட், அப்படியே என் புருஷன் உதட்டை கடிச்சு தின்ன மாதிரி இருந்தது" என்று கத்தி கொண்டே தன் அக்காவை நோக்கி போனவள் தட்டை போட்டுவிட்டு , நீலவேணி கன்னத்தில் முத்தமிட்டபடி
"இப்படி ஒரு நல்ல புருஷனை எனக்கு தந்ததுக்காக உனக்கு தேங்க்ஸ்" என்று அவள் கன்னத்தில் மீண்டும் ஒரு முத்தத்தை கொடுக்க
"என்னடி சொன்ன?
"இப்படி ஒரு நல்ல இட்லியை எனக்கு தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்னு சொன்னேன் ... அப்படியே ஊரை சுத்திட்டு மதிய சாப்பாட்டுக்கு வந்துடுறேன்.. செலவுக்கு ஏதாவது காசு இருக்கா?
"என்கிட்ட ஏதுடி காசு , எல்லாமே மாமா கிட்ட தான் இருக்கும்...
"ஓ அப்போ மாமாகிட்டேயே வாங்கிக்கிறேன் ..
"ஏய் இருடி அவருகிட்ட போய், ஏன் அம்மா அப்பா தந்த காசு உன்கிட்ட இல்லையா?
"ஏண்டி நான் என்ன கோடி ரூபாயா கேட்க போறேன் ஒரு ஆயிரம் ரூபா தாங்கன்னு கேட்டா , நம்ம புருஷன் தர மாட்டாரா என்ன?
"நீ அடிக்கடி பேசுறதுல பாதி வார்த்தை முழுங்கிட்டு பேசுறியே ஏன்...
இனி முழுங்காம பேசுறேன் , ஆனா நீ உசுரோட இருக்கணும்ல... அவர்கிட்டேயே போய் கேட்டுக்குறேன் என்று உமாவதியின் அருகே ஓடி வந்து நின்றவள்
மாமா"
"மாமோய்
"ம்ம் வேணி அங்கிருந்து பார்த்து கொண்டு நிற்கவும் இவன் எரிச்சலாக ம்ம் கொட்ட
"ஷாப்பிங் போகணும் காசு இருந்தா குடுக்குறீங்களா? அவன் நீலவேணியை பார்த்துக்கொண்டே பாக்கெட்டை தடவ.. நீலவேணி கொடு என்பது போல் தலையசைக்க... பர்ஸை திறந்து காசை அவன் எண்ண ஆரம்பிக்க... பர்ஸில் நீலவேணி உமாபதி இடையில் அவர்கள் மகன் என்றிருந்த போட்டோவை நகத்தைக் கடித்து துப்பிக்கொண்டே பார்த்தவள்...
"நானும் உங்க ரெண்டாவது பொண்டாட்டியா சமத்தா இருக்கணும்னு தான் கணவா நினைக்கிறேன்... ஆனா என்ன சைக்கோவா மாத்துறீங்களே கணவரே ... நீங்க என்ன பண்றீங்க இந்த பக்கத்துல அவ கூட இருக்கிற போட்டோவை வச்சுக்கோங்க... அந்த பக்கத்துல நானும் நீங்களும் இருக்கிற போட்டோவை நாளையிலிருந்து வைக்கிறீங்க ... போட்டோ ரெடி பண்ணிட்டு, உங்க வாட்ஸ் அப்ல அனுப்புறேன் "என்று அவன் நீட்டிய பணத்தை எடுத்து ஜீன்ஸ் பேண்ட் பின் பாக்கெட்டில் வைத்தவள் ... தன் அக்காவுக்கு தெரியாமல் ஐ லவ் யூ கணவா! என்று குனிந்து எதையோ எடுப்பது போல எடுத்தபடி பதியிடம் கிசுகிசுத்து விட்டு
"அக்கா உன் ஸ்கூட்டியை எடுத்துக்கிறேன்..
"ஏய் அது என் ஸ்கூட்டர் எனக்கு மட்டும் தான் அதை ஓட்ட தெரியும்டி
"உன் புருசனையே ஓட்ட பழக போறேன் ஸ்கூட்டியை ஓட்ட மாட்டேனா? போம்மா அங்கிட்டு" என்று முனங்கிக் கொண்டே. தன் அக்காவின் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வெளியே போய் விட
லாரி டயர் உள்ளே எலுமிச்சம் பழம் மாட்டினாலும், எலுமிச்சை பழம் மீது லாரி ஏறினாலும் சேதம் என்னவோ எலுமிச்சை பழத்திற்கு தான்..
இது ரெண்டு பொண்டாட்டி காரன் கண்டுபிடிச்ச தத்துவம்னு நினைக்கிறேன்.. பதி பாதியாக நசுங்க போவது போவது உறுதி!!