இவள் துணைவி அவள் மனைவி 1
Thunavi1
1இவள் துணைவி!!
அவள் மனைவி!!
மதுரை
அப்பா எங்க போற ? என்று ஐந்து வயது மகன் எங்கோ கிளம்பி கொண்டிருந்த தன் தகப்பன் கையை எட்டி பிடிக்க...
"டேய் கெளரி, அப்பா வேலைக்காக பெங்களூர் வர போறார்.. அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாத என்று கழுத்து அடைக்க தாலிச்சரடோடு பட்டு புடவை வந்தாள் அவன் மனைவி
நீலவேணி...
வயது 28
"அப்படியா அப்பா" என்று பெட்டி உள்ளே பொருளை அடைக்கும் தகப்பன் கழுத்தில் தொங்கி ஏறிய மகனை ஒரு கையால் அணைத்து பிடித்து கொண்டவன்
"ஆமாடா பட்டுக்குட்டி அப்பா பிசினஸ் ட்ரிப் போயிட்டு ரெண்டு நாள்ல வந்திடுறேன் சரியா
"ப்ச் ரெண்டு நாள் ஆகுமாப்பா
"ம்ம்
"அப்போ அது வரை நான் யார்கூட விளையாட ??
"அம்மா இருக்காள்ல அவளோட விளையாடு ... என்றவன் அவசரமாக பெட்டியை தூக்கி கொண்டு ஹாலுக்கு வந்தவன்
"வேணி
மாமா என்ற மனைவியை பெருமூச்சு விட்டு பார்த்தவன்
"பிள்ளையை பாத்துக்க
"சரிங்க மாமா
"நீயும் பத்திரமா இரு , அம்மா அப்பாவுக்கு மாத்திரை மருந்து சரியா கொடு "
"சரிங்க மாமா ..
"போயிட்டு வர்றேன் "என்று தலையசைத்த கணவனை போகும் வரை வாசலில் நின்று பார்த்து கொண்டு நின்றாள் அவன் மனைவி நீலவேணி... அழகு சாந்தம் அமைதி அதிர்ந்து கூட பேச தெரியாத ஒருத்தி.. இன்று அவர்களுக்கு ஆறாவது ஆண்டு திருமண நாள்... அதை கூட கொண்டாட முடியாது வேலை விஷயமாக போகும் கணவனை தடுக்கவா முடியும் ....
மதுரையில் ஏர்போர்ட் உள்ளே புகுந்தவனோ சுற்றி முற்றி ஒரு பார்வை பார்த்தான்..
சென்னை செல்லும் விமானம் இன்னும் சிறிது நேரத்தில் கிளம்ப தயாராக உள்ளது என்ற அறிக்கை வர , தன் கையில் இருந்த விமான டிக்கெட்டை சரி செய்து கொண்டவனுக்கு மனதில் மகனின் முகமும் , மனைவி முகமும் வந்து போக , தான் செய்ய போகும் செயல் தெரிந்தால் குடும்பத்தின் அமைதி நிலைக்குமா ?
இல்லவே இல்லை என்று தெரியும் ஆனாலும் இந்த மாபாதக செயலை செய்தே தீர வேண்டும் என்று துணிந்து விட்டானே....
விறுவிறு என்று சென்னை ப்ளைட்டில் ஏறி அமர்ந்தான் அவன்
அவன் நாமம்
உமாபதி !!வயது 34 ..
திருமணம் முடிந்து ஐந்து வயது பிள்ளைக்கு தகப்பன் , அழகிய மனைவி வேணிக்கு கணவன் ... ஆனால் இன்னும் சில மணிநேரத்தில் இன்னொரு பெண்ணுக்கும் தாலி கட்டி தன் துணைவி ஆக்க போகிறான்...
பிளைட்டில் கண்களை மூடி அமர்ந்தான் உமாபதி
பளார்இஇஇஇஇ என்ற அறையில் அந்த பச்சை கன்னத்திற்கு சொந்தக்காரி சுத்தி போய் அவன் நெஞ்சில் மீதே விழ போக ... ஒரு விரல் கொண்டு அவளை விலக்கி விட்டவன்..
ச்சைக், உனக்கு அருவருப்பா இல்லை.... என்ன பேசுறேன்னு புரியுதா?
அவன் மனைவி சாந்தமான அழகி என்றால்
எதிரே நின்றவள் அடாவடி அழகி ...
திரவியா
வயது 20 !!
அவன் மனைவியின் கூட பிறந்த தங்கை இவள் தன் மச்சினிச்சி சொன்னதை காது கொடுத்து கேட்க முடியவில்லை நாராசமான வார்த்தை அவை ...
நான் என்ன தப்பா கேட்டேன் மாமா, என்ன கல்யாணம் கட்டிக்கோங்கன்னு கேட்டேன்.. இதுல என்ன தப்பு இருக்கு?சுடிதார் ஷாலில் அவன் அடித்ததில் உதடு கிழிந்து வந்த ரத்தத்தை துடைத்து கொண்டே எதிரே அழகனாய் நின்ற உமாபதியை ரசித்தாள்...
"என்ன தப்பு இருக்கா? நீ கல்யாணம் பண்ணிக்க கேக்குறது யாரு கிட்டன்னு உனக்கு தெரியுதா.
"ம்ம் எனக்கு என்ன கண்ணுல குறையா..நல்லாதான் இருக்கு மாமா ..
"முதல்ல நீ தெளிவா தான் இருக்கியா .. இல்ல பைத்தியம் எதுவும் பிடிச்சிருச்சா?
"எனக்கென்ன நான் தெளிவா தான் இருக்கேன்.... என் எதிரில் நிற்கிறது உமாபதி மாமா...
"வெறும் உமாபதி மாமா இல்ல உன் அக்காவை கட்டினதனால நான் உமாபதி மாமவா ஆனேன்னு சேர்த்து சொல்லு
"இப்போ முறையெல்லாம் எதுக்கு, நீங்க மாமா நான் மச்சினிச்சி, உங்கள புடிச்சிருக்கு அவ்வளவு தான்
கடவுளே !!என்ன பேசுகிறாள் இந்த பெண் இவனுக்கு தான் தலை கிறுகிறுத்தது.. ஆயிரம் பேரை சுத்த விடும் அழகி , கல்யாணம் ஆன ஒருவன் பின்னே சுத்துகிறாள்..
"யாரோ ஒருத்தர முன்ன பின்ன தெரியாம கல்யாணம் கட்டி காலத்துக்கும் கஷ்டப்படுறதுக்கு எனக்கு முன்ன பின்ன தெரிஞ்ச நீங்க... அதோட அக்காவை நல்லா வச்சிருக்கீங்க , என்னையும் நல்லா வெச்சிருப்பீங்கன்னு ஒரு நம்பிக்கையில கல்யாண கட்டிக்கங்கன்னு கேட்கிறேன் ... இதுல என்ன தப்பு இருக்கு ... அவன் மறுபடியும் அடிப்பதற்கு கையை ஓங்க
"அடி என்பது போல் கையை கட்டிக் கொண்டு நின்றாள் திரவியா ...
"மாமா ஃபேக்ட் யோசிங்க, ஒரு பொருள் நல்லா இருக்குன்னு ஒருத்தவங்க வாங்குறாங்க வாங்கிட்டு ரிவ்யூ சொல்றாங்க... அந்த பொருள் நல்லா இருக்குன்னு அதே பொருளை நானும் வாங்கிறது இல்லையா... அந்த மாதிரி தான், நல்ல பையன்னு உங்களை கல்யாணம் கட்டி வச்சாங்க. நீங்க ரொம்ப ரொம்ப நல்ல பையன் .. ஏழு உலகம் சுத்தி வந்தாலும் உங்களை மாதிரி பையன் கிடைக்காது... அக்காவுக்கு இத்தனை வருசம் நல்ல மாப்பிள்ளை இருந்தீங்கல்ல ... இப்ப, எனக்கும் மாப்பிள்ளையா இருங்க அவ்வளவுதான் ... இதுல என்ன தப்பு இருக்கு என்று அசால்டாகக திரவியா தோளை உலுக்க
ஆஆஆஆ அவள் கழுத்தை நெரித்துவிடும் கோபத்தில் உமாபதி நிற்க ..
"பாருங்க மாமா நான் விளையாட்டுக்கு எல்லாம் உங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணல.. ஐ லவ் யூ சுயநினைவோட , முழு மனநிலையில, கடைசி வரைக்கும் உங்க கூட வாழனுங்கிற ஒரே குறிக்கோளோட தான் ஐ லவ் யூன்னு சொல்லி இருக்கேன் ...
"ப்ச் உன் மெண்டல் தனத்துக்கு எல்லாம் நின்னு பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை திரவியா, நடு ரோடுன்னு பார்க்க மாட்டேன் , அப்படியே இழுத்து வச்சி அப்பிடுவேன் ...
ம்க்கும் இழுத்து வச்சி முத்தம் கொடுப்பீங்கன்னு பார்த்தா அப்பிடுவீங்களா ...
ஒருத்தனுக்கு ஒருத்திதான் திரவியா, அதுதான் பண்பாடு ..
"ஹாஹா, எந்த காலத்துல இருக்கீங்க மாமா நீங்க, சுகர் டாடி , பிரெண்ட் வித் பெனிஃபிட், ஓன் நைட் ஸ்டெண்டுன்னு உலகம் எங்கேயோ போயிட்டு இருக்கு..
"உலகம் எப்படி மகா மட்டமா வேணும்னாலும் போகட்டும்.. நமக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கு
வாட் எ ___கிங் கல்ச்சர், ஒன்று தெரியுமா தமிழ்நாடு கள்ள உறவுல இரண்டாவது இடத்தில இருக்கு... நான் ஒன்னும் உங்கள வச்சுக்க சொல்லலியே.. கல்யாணம் கட்டிக்கங்கன்னு தான சொல்றேன் ..அக்கா அங்கேயே இருக்கட்டும் .. நான் இங்கே இருக்கேன் ....
நோ நோ நோ "
"ப்ச், உங்களால முடியாதுன்னா வேணும்னா சொல்லுங்க.. நானே அக்கா கிட்ட போய் பேசிக்கிறேன், உங்க வாழ்க்கைக்குள்ள நான் தலையிட மாட்டேன் மாமா, ஆனா எனக்கும் உங்க கூட வாழணும்.... கொஞ்சோண்டு ஸ்பேஸ் எனக்கு கொடுங்க...நான் பாட்டுக்கு சமத்தா அமைதியா இருந்துக்குறேன்....
"இத்தோட முடிச்சுகிட்டா நல்லது திரவியா, இதுக்கு மேல ஏதாவது பேசின.. உங்க அம்மா அப்பா கிட்ட போய் நீ இந்த மாதிரி என்கிட்ட வந்து பேசினேன்னு சொல்ல வேண்டியது இருக்கும்
"வொய் நாட் சொல்லுங்க மாமா... நானே எப்படி சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்... நீங்க ஓகே இல்லன்னு சொன்னா, அடுத்தது அம்மா அப்பா கிட்ட தான் போய் பேசணும்... எப்படியும் கல்யாணம் கட்டி வைக்கிறது உறுதி , அதுக்கு எனக்கு மாமாவை கட்டி வைங்கன்னு ஸ்ட்ரைட்டாவே கேட்டுடுவேன்... பட் உங்க கூட வாழனும்னு நான் முடிவு எடுத்துட்டேன், யாரு சொன்னாலும் கேட்கிறதா இல்லை
சின்ன வயது பெண்தான்... வேணியை அவன் திருமணம் செய்யும் போது மணவறையில் பொடியூண்டு நின்று கொண்டு மாமா மாமா என்று சுற்றியயவளா இது? இப்படி அசிங்கமான நடத்தை ஒன்றை செயல்படுத்துகிறாள் நம்பவே முடியவில்லை அவனால்...
விஷக் கிருமி, ஆனால் விளைந்தவள்... வினை பிடித்தவள் , கொடிய ஜந்து இவளை போயா சின்ன புள்ள ஒன்னும் தெரியாதவள் என்று இத்தனை நாள் சுற்றினான்.. அவனுக்கு தலை வலி எடுக்க..
"என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ என்ன உன்னால ஒன்னும் பண்ண முடியாது
"ஓஓ ஒன்னும் பண்ண முடியாதா? என்றவள் பதி அலர்ட் ஆகும் முன்பு ரோட்டில் வந்த லாரியின் முன்னால் போய் விழுந்தாள்
"மாமாஆஆஆஆ காற்றில் பறந்து அவன் முன்னாலேயே இரத்தமும் சதையுமாக விழுந்தாள்
"திர..........வியாஆஆஆஆஆஆஆஇ என்று அவன் அலற அவளோ ரத்தம் வடிந்த முகத்தோடு கண்ணை சிமிட்டியவள்
"பிழைச்சு வரக்கூடாதுன்னு நினைச்சுக்கோங்க, மாமா பொழைச்சு வந்தேன்னா... வாழ்க்கையை பங்கு போட தயாரா இருங்க" என்று விட்டு மயங்கி விழுந்தவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினான் உமாபதி
சார் ட்ரீட்மென்ட் பண்ண பண்ண தட்டி விடுறாங்க மூச்சை தம் புடிச்சு இழுத்து வச்சிக்கிறாங்க.... மூச்சு விடவே மாட்டேங்கிறாங்க , இப்படியே போனா ஒண்ணுமே பண்ண முடியாது என்று மருத்துவர் வெளியே காத்திருந்த உமாபதியிடம் வந்து சொல்ல
என்ன சொல்றா?
" உங்க கிட்ட பேசணும்னு சொல்றாங்க.. நீங்க ஓகே சொன்னா தான் ட்ரீட்மென்ட் எடுத்துக்குவேன்னு ஏதோ முனங்குறாங்க , எங்களுக்கு ஒன்னும் புரியல என்றதும் தலையில் அடித்துக் கொண்ட உமாபதி அந்த ஐ சி யு அறை உள்ளே போனான்..
திரவியா..
ம்ம் ம்ம் முனங்கி கண்ணை திறந்தாள்
"ஏன் இப்ப டிரீட்மென்ட் எடுத்துக்க மாட்டேங்குற... நீ இந்த நிலைமையில் இருக்கிறது தெரிஞ்சா எல்லாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.. தயவு செஞ்சு ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ
"மாட்டேன் நீங்க என்ன கல்யாணம் கட்டிக்கிறதுக்கு சம்மதம் சொல்லுங்க..
"அறிவு இல்லாம பேசாத , ஐயம் மேரீட் ..
"கல்யாணம் முடிச்சவங்க இன்னொரு கல்யாணம் கட்டக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன ... ஒரு கார் இருக்கு தேவை இருந்தா அடுத்த கார் வாங்குறது இல்லை
காரும் மனுசனும் ஒன்று இல்லை
ஏன் இல்ல , அந்த காலத்து ராஜாக்களுக்கு தனியா ஒரு அந்தபுரமே இருந்துச்சாம் மாமா
"அந்த காலம் வேற இந்த காலம் வேற
"எல்லா காலத்திலும் ஆசை உள்ள மனுஷன் இருந்துகிட்டே தான் மாமா இருக்கான்..அவனுக்கு வாய்ப்பும் வசதியும் இருந்திருக்கு, இப்ப இல்ல, இருக்கிறவன் வாழ்றானே நீங்க ஏன் வாழ கூடாது
எனக்கு உங்க மேல ஆசை , அந்த ஆசை என்னை பேயா மாத்துது மாமா, கொஞ்ச நாள்ல உங்களுக்கும் என் மேல ஆசை வரும் .... அந்த ஆசை உங்களையும் பேராசைக்காரனா மாத்தும் எனக்கு நம்பிக்கை இருக்கு.... உங்களுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்ல ...பின்ன என்ன மாமா?
பிடித்தம் வேற காதல் வேற திரவியா
என் மனைவியோட தங்கச்சின்னு உன் மேல அன்பு இருக்கிறது உண்மை,
"என்ன பொறுத்த வரைக்கும் அந்த அன்பும், நேசமும் ஒன்னு தான் மாமா,.. எனக்கு இந்த உலகத்துல எந்த ஆம்பளையைப் பாத்தாலும் ஆம்பளையா தெரியல ... நீங்க மட்டும் தான் ஆம்பளையா தெரியுறீங்க , அந்த ஒத்த ஆம்பளையை கல்யாணம் கட்டிக்க ஆசைப்படுறேன்... தட்ஸ் ஆல்!! என்னை கல்யாணம் கட்டிக்க முடியுமனா, நான் இந்த ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்குறேன்... மறுபடியும் உயிர் பிழைச்சு வர்றேன்... முடியாதுன்னா வெளிய போங்க ....ஆனா என் பிரேதத்துக்கும் முதல் மாலை நீங்கதான் போடணும் என்று திரவியா மீண்டும் மூச்சை இழுத்து வைத்துக் கொண்டாள்.. அவள் உயிர் கருவி மேலும் கீழும் தடார் புடார் என்று சத்தம் போட
"இப்ப பைனலா என்னதான் சொல்ற???
என்ன கல்யாணம் கட்டிக்கோங்க
இதுதான் என்னோட முதல் கோரிக்கையும் கடைசி கோரிக்கையும்.. இரண்டு கையையும் தலையில் வைத்து அப்படியே உட்கார்ந்து இருந்தவன் பெருசு விட்டு
சரி கட்டிக்கிறேன்
"சத்தியமா என்று கையை நீட்ட..
" கட்டிக்கிறேன்னு சொல்லிட்டேன்ல
" நம்ப மாட்டேன் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு நான் பொழைச்சு வந்ததும் மறுபடியும் மறுத்து பேசினா.. உங்க மகன் மேல சத்தியமா என்ன கட்டிக்கிறேன்னு சொல்லுங்க "
என்ன எந்த நிலைமையில் நிறுத்தி வைக்கிறேன்னு உனக்கு புரியுதா திரவியா..
"என்னோட நிலைமை உங்களுக்கு தான் புரியல மாமா, விரும்பினவரோட வாழ்வதற்கு எதுவும் தடை கிடையாது... அவன் மனைவி கூட எனக்கு தடை கிடையாது....
சீசீ
என்ன கெட்ட பொண்ணா நெனச்சா நெனச்சிட்டு போங்க.. ஐ டோன்ட் கேர் , எனக்கு நான் நினைச்சது வேணும்... நீங்க வேணும் , உங்க மகன் மேல சத்தியமா என்ன கல்யாணம் கட்டிப்பேன்னு சொல்லுங்க ... செத்துப் போ என்று விட முடியவில்லை... சின்னஞ்சிறு வயது பெண்... விவரம் புரியாமல் பேசுகிறா ,நடந்து கொள்கிறாள முதலில் பிழைத்து வரட்டும் என்று நினைத்தாலும் உயிருக்கும் மேலாக நேசிக்கும் தன் மகன் மீது சத்தியமாக வாங்க... பதி யோசனையோடு நடுங்கிய விரலோடு அவள் கை மீது தன் கையை வைக்க
அவன் கையை இறுக்கி பிடித்துக் கொண்ட திரவியா..
ஐ லவ் யூ மாமா, ஐ லவ் யூ சோ மச் வெயிட் பண்ணுங்க , உங்கள லவ் பண்ண வந்துட்டே இருக்கேன் .... என்று கண்ணைச் சிமிட்டி அவள் தலை சாய., வேக வேகமாக அவளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது ...
அவள் பிழைத்து விட்டாள்தான், ஆனால் இவன் உயிர் இனி போய்விடுமே!!
ஒரு பொண்டாட்டி இருந்தாலே டப்பா டான்ஸ் ஆடும்
அய்யாரு ரெண்டு பொண்டாட்டி வைக்க போறார், டவுசர் கிழிஞ்சு தொங்க போகுது...
ரெண்டு பொண்டாட்டி கதைதான் பொங்கல் அதுவுமா பொங்கலோட ஆரம்பிப்போம்... கழுவி ஊத்த வசதியா ஒரு கதை ..ஆரம்பமே அமோகமா ஆரம்பிப்போம்...
சீரியஸா இது ரெண்டு பொண்டாட்டி கதைதான் ... சோ படிப்பதும் தவிர்ப்பதும் உங்கள் விருப்பம் படிச்சிட்டு என்னை போட்டு அது ஏன், இது ஏன் இப்படின்னு பாடா படுத்த படாது ... பித்த உடம்பு தாங்காது ...