யாமக்களவனே

யாமக்களவனே

ஹாய் டியர்ஸ்...

 நேரடிக்கதை"யாமக்கள்வனே!"இப்போது அமேசான் கிண்டிலில் படிக்கலாம்.

இதோ சின்ன டீசர்...

ஆனந்தவள்ளியைப் பார்த்து “நீ எதுக்கு ஆயா இங்க வந்த? உன்னை நான் கூப்ட்டனா?நீ உன் தங்கச்சி தம்பி பிள்ளைங்க கல்யாணத்துல இருந்து எதுக்கு இங்க வந்த?”

“அதுதான் கல்யாணம் முடிஞ்சிட்டே! அப்புறம் அந்த சுந்தரம்தான் சாவியை குடிச்சுட்டு மொத்தமாக எங்கயோ தொலைச்சிட்டானே! எல்லோரும் இப்போ வராண்டாவுள்ளதான் படுத்துக்கிடக்காங்க. இனி காலையில் சாவி பண்றவனைப் பார்த்துத்தான் புதுசு பண்ணி கதவைத் திறந்து உள்ளே போகமுடியும்”

அதைக்கேட்ட மாரியோ “ஏன் ஆயா அப்போ முதலிரவெல்லாம் நடக்கலையா?”

அவனைத் திரும்பிப் பார்த்த ஆனந்தவள்ளியும் சிவாவும் திரும்பிப்பார்த்து முறைக்கவும்”க்கும் நான் கேள்விக்கேட்டால் மட்டும் முறைங்க.நடந்தது தெரியாமல் என்மேல ஏறுறதைப் பாரேன்”என்று புலம்பிக்கொண்டே வந்தான்.

இப்போது ஆயாவைத் தனது காரிலே ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருக்க ஆயாவோ”ஏன்டா காலையில்தானே அவ்வளவு பெரிய கலாட்டா பண்ணிட்டு எல்லார் வாயிலயும் விழுந்த. அதுதான் இப்படி போலீஸ் கேஸ்னு ஆகிட்டு. கொஞ்சம் நல்லவனா இருக்கக்கூடாதா? உனக்கும் ஒரு பொண்ணுப் பார்த்துக் கட்டி வைச்சுட்டம்னா நான் நிம்மதியா இருப்பன்ல?”

“எதுக்கு எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுற? என்னைக் கல்யாணம் பண்ணிட்டு வர்றவளும் உன் மகள் மாதிரியே ஒரு பிள்ளையைப் பெத்துப்போட்டுட்டு இவனைப் பிடிக்கலை, இன்னொருத்தனை பிடிச்சிருக்கு அவனோடு வாழப்போறேன்னு போவதற்கா?அப்புறம் என் பிள்ளையும் என்னை மாதிரி அநாதையா நாய் மாதிரி தெருவுல நிக்கிறதற்கா?பேசாம போயிடு.கல்யாணம் அதுஇதுன்னு ஏதாவது பேசினனு வையேன் அப்படியே கொன்றுவேன்”

அதைக்கேட்டதும் அவர் அமைதியாகவிட்டார். வார்த்தைகளை ஈட்டி மாதிரி அவரது நெஞ்சில் இறக்கினான். அதனால் மனம் நொந்து அமர்ந்திருந்தார்.

இப்போது கார் வந்து நின்றிருந்த இடத்தைப் பார்த்து “ஐயோ ஏன்டா இங்க காரைக்கொண்டு நிறுத்தியிருக்க? உனக்கு கண்ணுகிண்ணுத் தெரியலையா? அடேய் ஏற்கனவே அவனுங்க உன்மேல கடுப்புல இருக்கானுங்க”

“அதெல்லாம் எனக்குத் தெரியும் நீ இறங்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு”

“இப்போதானடா ஒருத்தனை மூக்காமண்டையெல்லாம் உடைச்சு போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்து முடிஞ்சிருக்கு.அதுக்குள்ள உன் பெரியப்பனுங்கக்கிட்ட என்னடா பஞ்சாயத்து.அதுவும் விட்டவிடியகாலையில் ஐஞ்சு மணிக்கெல்லாமா பஞ்சாயத்துக்கு வந்து நிற்ப?”

“உன் தம்பிங்களை டென்சன் படுத்துறதுன்னா எனக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிடுறமாதிரி.வா வா”என்று உள்ளே அழைத்துச்சென்றான்.

ஏற்கனவே கொசுக்கடி பேன் இல்லை,வராண்டாவில் படுத்திருக்கிற கோபம்,ஆத்திரம் என்று எல்லோரும் பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

அப்போது சரியாக அவர்கள் முன்புபோய் நின்ற சிவா தனது பெரியப்பாக்களைப் பார்த்து”ஹாய் பெரியப்ஸ் நல்லா தூங்கினீங்களா? ஹாய் அத்தைஸ் கொசு கடில நல்ல தூக்கம் வந்துச்சா?ஹலோ புதுப்பொண்ணு மாப்பிள்ளை பர்ஸ்ட் நைட் சிறப்பாகப் போச்சுதா?”என்று கேள்விமேல் கேள்விக்கேட்டவன் நக்கலாகச் சிரித்தான்.

அதில் கடுப்பான அருணாச்சலமும் அழகுசுந்தரமும் “ஏற்கனவே நாங்க கடுப்புல எவனைக் கடிக்கலாம்னு கோபத்தில் இருக்கோம்.நீ வந்து வாலண்டியரா தலையைக் கொடுக்காத.மரியாதையா போயிடு.இதுக்குமேல எல்லாம் உனக்கு ஈவு இரக்கமெல்லாம் பார்க்கமாட்டோம்”

“ஹாஹாஹா இதுக்கு முன்னாடி மட்டும் ஈவு இரக்கமெல்லாம் பார்த்தீங்களா என்ன?பசிக்கு சாப்பாடு போட எங்க ஆயா இருந்தாலும் பாசங்காட்டாமல் நாய் மாதிரி விரட்டிவிட்டவங்கதானே நீங்க.கல்நெஞ்சக்காரனுங்கதானே! ஆமா சுந்தரலிங்கம் மாமா சாவியை எங்கத் தொலைச்சாருன்னு கடைசிவரைக்கும் சொல்லிருக்கமாட்டாரே?” என்று மீண்டும் சத்தமாகச் சிரித்தான்.

அப்போதுதான் எல்லோருக்கும் அவன்மேல் சந்தேகம் வந்தது.ஒருவேளை இவன் சாவியை எடுத்திருப்பானோ?என்று யோசித்திருந்தனர்.

சிவாவோ “சந்தேகமெல்லாம் படாதிங்க உங்க வீட்டு மொத்த சாவியையும் எடுத்தது நான்தான். என்கிட்டதான் இருக்கு.இப்போ என்ன பண்ணப்போறீங்க? ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தெருவுல படுக்க வைச்சேன் பார்த்தீங்களா? அடியேய் அறுந்தவாலு இந்தாடி சாவியைப் பிடி”என்று சக்தியிடம் சாவியைத் தூக்கிவீசினான்.

ஒட்டமொத்தக் குடும்பமும் அதிர்ந்து நிற்க ஆனந்தவள்ளி அவனை வேகமாக அறைந்துவிட்டார்!

லிங் இதோ!!!

இந்தியா லிங்...

https://www.amazon.in/dp/B0D31XJD2F

அமெரிக்கா லிங்...

https://www.amazon.com/dp/B0D31XJD2F