அநாயகனே-10
அநாயகா-10
இளந்தீரன் அப்படி பேசுவதைக் கேட்டதும் கவிதாவுக்கு நெஞ்சே அடைச்சதுபோன்று இருந்தது.
இத்தனை வருஷமாக பெத்து வளர்த்து ஆளக்கிவிட்டதுக்கு, இவன் இப்படி பேசுறதை கேட்கவேண்டியதாயிருக்கே என்று ஆதங்கப்பட்டவர் அப்படியே நெஞ்சைப்பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார்.
விஜயராஜ்தான் “டேய் என்னடா இப்படியெல்லாம் பேசுற. உனக்கு அரசியல் பைத்தியம்தான் பிடிச்சிருக்குன்னு நினைச்சோம். ஆனால் அப்படியில்லை மொத்தமாவே உனக்கு ஏதோ பேய் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். குடும்பம் வேண்டாம்,பெத்தவங்க வேண்டாம்னு சொல்லுற பார்த்தியா இதெல்லாம் அந்த சிவானந்தனும் அவனோட பொண்ணும்பண்ணுற வேலைன்னு நல்லா புரியுது. அவள் மேல உள்ள ஆசையில இப்படியெல்லாம் நடந்துக்காத இது உனக்கு நல்லதில்லை. அவங்க சொல்லித்தானே நீ உங்க மாமா வீட்டுக்குப்போய் அவரை செங்கல்லால அடிச்சிருக்க?”
“க்கும் அவங்க எதுக்கு எனக்குச் சொல்லித்தரணும். நானேதான் அங்கப்போய் சண்டைப்போட்டேன். அவரு எங்களோட எதிர்கட்சித் தலைவரா இருக்கலாம் அதுக்காக நாங்க என்ன செய்தாலும் அதை அவரும் செய்யணும்னு இல்லை.அதுதான் ஒரு காட்டு காட்டிட்டு வந்தேன். இதுக்கு முன்னாடியெல்லாம் சண்டைமட்டும்தான் போட்டேன். இன்னைக்குத்தான் அடிக்கணும்னு தோணுச்சு, அடிச்சேன். இனியும் அவர் எங்க வழியில வந்தாருன்னா கொலையும் பண்ணுவேன். நீங்க யாரும் வந்து அதைகேட்கவும் முடியாது சொல்லிட்டேன். அரசியல்ல ஜெயிக்கணும்னா சிலபல கொலைகளும் செய்யணும்ல அப்படி நினைச்சு செய்துட்டுப்போறேன்”
“உன்னை எல்லாம் பெத்த என் வயித்துல பிரண்டையை வைச்சுத்தான் கட்டணும். உன்னைய என் மகன்னு சொல்லிக்கவே கேவலமா இருக்கு. இப்படிபோய் எங்க அண்ணன் மண்டையை உடைச்சிட்டு வந்து நிக்கிறியே நீ எல்லாம் மனுசனா? மிருகமா? அவரே அவருபாட்டுக்கு அவரோட வேலை செய்திட்டு இருக்காரு. யாருக்கு எந்த தொந்தரவும் இல்லாம இருக்காரு. நீயேன் அவருக்கு அடிக்கடி தொந்தரவு பண்ணி இப்படி பிரச்சனை பண்ணிட்டிருக்க. ஆனால் நீ என்ன பண்ணினாலும் உன் மேலிருக்க பாசத்துல அவரு அப்படியே பொறுமையா போய்ட்டு இருக்காரு. அதுக்காக நீ ரொம்ப ஓவரா ஆடாத. அப்புறம் விழுந்துப்போவ”என்று ஆதங்கத்தில் பேசினார்.
“என்ன கவிதா பெத்த பிள்ளைக்கு சாபம் எல்லாம் கொடுக்கிற. உங்க அண்ணன் மேல இருக்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா. அவர் மேல வச்சு பாசத்துக்காக என்ன சபிப்பியா? நான் வாழாமல் போகணும்னு நினைப்பியா?நீயெல்லாம் என்ன அம்மா?உன் மகன் அரசியல்ல ஒரு காமராஜர் போலவும்ஃஒரு எம்ஜிஆர் போலவும் வரணும்னு நினைச்சு வாழ்த்தாமல் என்னை இப்படி சபிக்கிறியே. நீ என்ன பெத்தியா இல்லை குப்பைத் தொட்டியில இருந்து எடுத்தியா? எப்படி பேய் மாதிரி நிக்கிறியே? ஒரு நாள் நான் பெரிற ஆளாதும் வந்து என் மகன்னு சொல்லும்போது வெட்கமா இருக்காதா உனக்கு?”இன்றைய ரைமிங்காக டயலாக் விட்டான்.
“இப்படி வக்கனையா பேச மாட்டும் செய். நீயெல்லாம் என்ன செய்தாலும்,எப்படி பேசினாலும் அது உருப்படாத காரியமாதான இருக்கு. எதுக்குடா எங்க அண்ணன் தலையில கல்லை தூக்கி எறிஞ்சிட்டு வந்த?அவரு இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கார். ஆதிரா போன் பண்ணி சொன்னா? அப்படி என்னடா உனக்கும் அவருக்கும் பகை. இரண்டு பேரு எதிரதிர் கட்சியில இருக்கீங்க. இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு அவர்கிட்ட அடிக்கடி சண்டைக்கு போற. ஒரு தாய்மாமா என்கின்ற மரியாதை கூட கொடுக்க மாட்டியா?” என்று பேசியவருக்கு இப்போது வேதனையாக இருந்தது. அந்த வேதனையில் அழுதார்
“ஐயோ யம்மா கவிதாயினி இப்போ எதுக்கு நீ அழுதிட்டிருக்க. உன் அண்ணங்காரன் பண்ணினது தெரியாமல் இப்படி என்னைக் குத்தம் சொல்லாத?”
“அப்படி எங்கண்ணன் என்னடா செய்துட்டாங்க. என்ன செய்திருந்தாலும் இப்படியா அவரைக் கல்லால் அடிச்சு கொலை பண்றளவுக்கு போல. அச்சோ எங்கண்ணனே இவன் கொல்லப் பார்த்திருக்கானே. இவனை வீட்டுக்குள்ளவே ஏத்தக்கூடாது. இவனை வெளிய அனுப்புங்க” என்று கவிதா சத்தம்போட்டு அவனை வெளியே தள்ளிவிட்டார்.
அதை எதிர்பாக்காதவன் கோபத்தில் அவரது கையை பிடித்து இழுத்தவன் “நீங்க எல்லாரும் என்ன நினைச்சுட்டிருக்கீங்க. உங்க அண்ணன் எனக்கு ஒரு கட்சி உறுப்பினர் கார்டு தந்து அத்தோடு முடிச்சிக்கிட்டாரு. அதுக்கப்புறம் என்ன கட்சியில் ஒண்ணுமே செய்யவிடல, நானும் அரசியல்ல பெரிய ஆளாகணும்னு சின்ன வயசுல இருந்தே கனவுகண்டேன்.அவரைம் பார்த்து பார்த்து வளர்ந்தேன். என்னை அவர் கட்சியில் ஒரு பதவியும் தராமல் வெறும் உறுப்பினராக மட்டும்தான் வச்சிருந்தாரு. அதனால்தான் எதிர்க்கட்சியில, எனக்கு பதவி தர்ற இடத்தில போய் உட்கார்ந்து இருக்கேன். அதையும் கெடுக்கிற மாதிரி உங்க அண்ணன் செய்தால் நான் அதுக்குத்தகுந்ததைத் திருப்பிச் செய்யதான் செய்வேன். அதுக்கு இடைஞ்சலா நீங்களும் இருந்தா உங்களையும் என்கிட்ட இருந்து தள்ளி வைக்கறதுக்கு நான் தயங்க மாட்டேன். நான் இப்படித்தான்.எனக்கு அரசியல்ல பெரிய ஆள் ஆகணும். அதுக்காக நான் என்ன வேணாலும் இறங்கி செய்வேன்.யாரை வேணாலும் போட்டு தள்ளுவேன்” என்று பேசியவாறே தன்னைப் பிடித்திருந்த கவித்வினை கையை இழுத்து விட்டுவிட்டான்.
அவன் தனது கையை இப்படி விடுவான் என்று எதிர்பார்க்காத கவிதா நேரடியாக போய் வீட்டு வாசற்படி நிலையில் இடித்துக்கொண்டார்.
அவரது நெற்றியில் இருந்து இரத்தம் வழிந்தது.
இதையெல்லாம் எதிர்பார்க்காத விஜயராஜ் ஓடி போய் தனது மனைவியை தூக்கினவர் ரத்தம் வடிவதைப் பார்த்ததும் அப்படியே பதறிவிட்டார்.
இதுக்கு மேலையும் பொறுமையா இருக்க முடியாதென விஜயராஜ் இளந்தீரனைப் பிடித்து அடித்து விட்டார்.
இதுவரைக்கும் அடியே வாங்கியிராத இளந்தீரன் தனது தந்தையிடமிருந்து அடி வாங்கியதும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.
இவ்ளோ நேரம் பேசியது, சண்டை போட்டதென் எல்லாம் தாண்டி அவன் அடித்த சரக்கு முதற்கொண்டு மொத்தமாக இறங்கி அப்படியே ஷாக்காகி நின்றிருந்தான்.
“ நீ இவ்ளோ தூரம் பண்ணதுக்கு அப்புறமா உங்க மாமா இன்னைக்கு இராத்திரி உங்க அம்மாக்கிட்ட போன் பண்ணி ஆதிராவுக்கு நல்ல மாப்பிள்ளை அப்படின்னா அது இளந்திரன்தான். என் சின்ன மருமகன்தான் அவனைத் தவிர வேற யாருக்கும் நான் ஆதிராவை கட்டெக் கொடுக்கமாட்டேன். அவன்கிடட பேசி ஆதிராவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைங்க. எனக்கு அப்புறம் என் கட்சிக்கு தகுதியான ஆளு என் சின்ன மருமகன்தான். என் இரத்தம் உறவுதான் இந்த கட்சிக்கு அடுத்த தலைமையா வரணும்னு நான் விரும்புறேன். அவன் ஆளுமையான ஆளு. அது தெரியாமல் என்னெல்லாமோ பண்ணிட்டிருக்கான். நீங்க அவன்கிட்ட பேசுங்க மச்சான்” என்று என்கிட்டயும் உங்க அம்மாகிட்டயும் பேசி சம்மதம் வாங்கிட்டுதான் தூங்கவே போனாரு. அப்படிப்பட்ட நல்ல மனுஷனை நீ செங்கல்லால அடிச்சு உயிருக்கு போராடுறளவுக்கு வச்சிருக்க. நீ எல்லாம் உருப்படவே மாட்டாடா. அழிஞ்சி நாசமாதான் போவ. பெத்தவங்க நாங்களே நீ அப்படி போகணும்னுதான் இப்போ உன்னை சபிக்கிறோம், பெத்தவங்க சாபம் வாங்குன எவனும் உருப்பபட்டதா சரித்திரமே இல்லை. நாசமா போ நீ இந்த பக்கம் வராத”என திட்டியவர்அவனை பிடித்து தள்ளிவிட்டார்.
ஏற்கனவே அவன் போதையில் இருந்ததாலும், விஜயராஜ் தள்ளினதாலும், அப்படியே தள்ளாடி கீழே விழப்போனான் அந்த நேரத்தில் அவன் விழாதபடி கவிதா அவனை தாங்கிப் பிடித்துக்கொண்டார்.
புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நான் வந்ததும் நல்ல நாடகமாடி என்னை வெளியே துரத்திநவிடலாம்னு பிளான் பண்ணிதான பண்ணிட்டு இருக்கீங்க. அண்ணன் குடும்பம் தங்கச்சி குடும்பமும் சேர்ந்து என்னை வெளியே துரத்ததுக்கு ரெடியாயிட்டீங்க நடத்துங்க நடத்துங்க. எத்தனை நாள் இந்த நாடகத்தை நடத்துறேங்கன்னு பார்ப்போம்.ஆனால் நான் இதுக்கெல்லாம் தரமாட்டேன். எனக்காக என் தலைவர் இருக்காரு என் உயிர் நண்பன் இருக்கான் உயிர் காதலி இருக்காள். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஊரிலேயே பெரியாகி உங்க முன்னாடியே நான் வாழ்ந்து காண்பிக்கல என் பேர் இளந்தீரன் இல்ல. அப்போ பேரனைக் கொஞ்சணும், பேத்தியைக் கொஞ்சணும்னு என் பிள்ளைகளை பார்க்க வருவீங்கள்ல உங்களை இதே மாதிரி நான் விரட்டி விடல நான் உங்களுக்கு பிறக்கலன்னு நினைச்சுக்கிறேன். இது நடக்கும் இது என் தலைவர் சிவானந்தன் மேல சத்தியம்”
என்று அவன் தலையின் மேலே அவன் கையை வைத்து சத்தியம் பண்ணிக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் பார்த்து ரகுவரன் அவனுக்கு போன் பண்ணினான். போன் ரிங் சத்தம் கேட்டதும் எடுத்து பார்த்தவன் “வாடா பங்காளி. எனக்கு ஒரு பிரச்சனை என்றால் சரியா வந்து நிற்பான் என் பங்காளி, என் உயிர் நண்பன்” என்று சொல்லியவாறே போனை எடுத்து காதில் வைத்தான்.
ருகவரனோ அவசர அவசரமாகப் பேசினான்“டேய் இளா சீக்கிரம் அங்கேயிருந்து ஓடி தப்பிச்சிடு. உன்னை கைது பண்றதுக்கு போலீஸ்காரங்க வந்துட்டு இருக்காங்களாம். எனக்கு தகவல் கிடைச்சுது. உங்க மாமா மகள் ஆதிராவும், உங்க அத்தையும் உனக்கு எதிராக போலீஸ்ல கொலை முயற்சின்னு கேஸ் கொடுத்துட்டாங்களாம். அதனால் இப்பொழுது நீ போலீஸ் கண்ணில் படாமல் இருப்பது நல்லது” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
இளந்திரன் பதில் பேசுவதற்குள் அவன் போனை வைத்ததும், இவன் என்ன அவசரமா பேசிட்டு, போனை வச்சிட்டான். என்னைக் இது பண்ணாலும் இவன் என் கூட நிப்பான்ல்ல. அப்புறம் எதுக்கு நான் கலங்கணும் என் காட்சி எனக்காக வாதாடும், என்னை ஜாமில் எடுப்பாங்க” என்று தனக்குத்தானே சொல்லியவாறே திரும்பி அவங்க அம்மாவை பார்த்து சிரித்தான்.
நீங்க எல்லாரும் திட்டம் போட்டு என்னை ஜெயிலுக்கு அனுப்பலான்னுதானே பிளான் பண்ணி இருக்கீங்க உன் மருமகதானே இந்த ஐடியாவை கொடுத்தது. அவளைக் கல்யாணம் பண்ணிக்காமல் மதுமதியைக் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அவளுக்குப் பொறாமை. அதானல்தானே இதையெல்லாம் பண்றாள். அவளை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னது சொன்னதுதான். மதுமதியைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். அவகூட வாழ்ந்து புள்ளகுட்டியா பெத்துப்போடுவேன். அதையெல்லாம் பாத்துட்டு வயிறெரிஞ்சு சாவுங்க. ஜெயிலுக்குப் போனால் வெளியே வர மாட்டேன் நினைச்சீங்களோ, கொலை கேஸ்ல என்னை உள்ள அனுப்பிட்டா வெளியே வர மாட்டேனா என்ன?என் வருங்கலா மாமனார், என் கட்சி தலைவார் சிவானந்தன் என்னை ஒரு மணி நேரத்துல வெளியே கொண்டு வருவார். பாக்கறீங்களா பாக்கறீங்களா?” என்று சொடக்கு போட்டு சொல்லிக் கொண்டிருந்தவன் பின்னாடி போலிசார் வந்துநின்றனர்.
அவர்கள் வந்து பார்த்தபோது கவிதா குமாரி நெத்தியிலும் ரத்தம் வடிந்து கொண்டு இருக்க, இவன் பேசிக்கொண்டிருந்ததை எல்லாம் கேட்டனர்.
உடனே அவனை பிடித்து கைது செய்ய முயன்றனர்.
ஆனால் அவனா அவர்களிடமிருந்துத் தப்பி போக முயற்சி செய்தான்.
“டேய் நான் யாருன்னு தெரியுமா யாரை போய் கைது செய்ய பாக்கறீங்க. நான் எதிர்க்கட்சித் தலைவர் சிவாந்தனோட வருங்கால மருமகன். அவர் கட்சியில் பெரிய பதவியில இருக்கிறவன். நீங்க எப்படி என்னைக் கைது செய்யலாம். இப்பவே எங்க கட்சித் தலைவருக்கு போன் பண்ணி எங்க கட்சி வக்கீலை வர சொல்றேன்” என்றவன் திமிறி அவர்களிடமிருந்து விலகிநின்றான்.
அவர்கள் அவனை பிடிக்க முயற்சி செய்யும்பொழுது அவர்களை கைவைத்து தடுத்தவன் “இருங்க சார் எங்க வக்கீலுக்கு போன் பண்ணிட்டு அதுக்கப்புறம் உங்கக்கூட வர்றேன். நான் என்ன கோழையா?ஓடி ஒளிறதுக்கு” எனத்தெனவட்டாக பேசியவாறே உடனே ரகுவரனுக்கு போன் பண்ணனினான்.
அவன் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. அடுத்த உடனே தலைவருக்குப் போன் பண்ணினான் அவரது போன் நாட் ரீச்சபிள் என்று வந்தது.
மதுமதிக்கு போன் பண்ண நம்பரை டயல் பண்ணவன் கட் பண்ணிவிட்டான். அவளே பாவம் பயந்துடுவா இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். நம்ம இவங்ககூட போவோம் காலையில எல்லாரும் வந்து நம்மள ஜாமீன்ல வெளியே எடுத்துடுவாங்க” என்று தைரியமாக போலீஸ் ஜிப்பில் ஏறி உட்கார்ந்து கவிதாவையும் விஜயராஜையும் பார்த்த நக்கலாக சிரித்தான்.
சிரிடா சிரி நீ உலகத்தை ஆளப்பிறந்தவன்ல நல்ல சிரி!