அநாயகனே-6

அநாயகனே-6

அநாயகனே-6

ரகுவரன் மெதுவாக இளந்தீரனிடமிருந்து விலகியவன் “என்னடா உன் தாய்மாமாக்கு உன்மேல பாசம் ஓவரா பொங்குது. அவர் கட்சிக்கு உன்னை எடுக்கப்பாக்குறாரோ?அப்படி கூப்பிட்டா போயிடுடா. அவர் கட்சியில் ஒரு சீட்டும் தந்து, அப்படியே உனக்கு அவரோட இரண்டாவது பொண்ணையும் கட்டித்தந்துன்னு செமையா பார்த்துப்பாருடா. நீ ராஜ வாழ்க்கை வாழலாம். ஏன்டா இந்த வாய்ப்பைக் கெடுக்கிற மாதிரி இங்கயே இருக்கிற?” என்று அவனுக்காக பரிதவித்துக் கேட்டான். 

“அப்படியெல்லாம் இல்லைடா. நான் நம்ம தலைவர் போஸ்டரை ஒட்டிக்கிட்டு அந்த ஆளை பார்த்து நக்கலா சிரிச்சேனா, அந்த ஆளு என்னடான்னா எனனைப் பாத்து நக்கலாதிருப்பிச் சிரிச்சிட்டுப் போறாருடா. இவருக்கூடவெல்லாம் நானாவது சேர்றதாவது. அப்படியெல்லாம் போகமாட்டேன்டா. எனக்கு நம்ம கட்சியும்,நம்ம தலைவரும்தான் முக்கியம். நம்ம கட்சியில் இருந்துக்கிட்ட நான் இந்த ஆளுக்கு எதிராக நின்னு எம்.எல்.ஏ ஆகணும் அதுதான் என் வாழ்க்கையோட இலட்சியம்”

“அப்படியெல்லாம் சொல்லாதடா,அவர் உன்னோட தாய் மாமாடா. உனக்கு நல்லதுதான் செய்வாரு. அதனால்தான் நான் இவ்வளவு சொல்லுறேன். நம்மளுக்கு நல்லது செய்றவங்ககூடதான் எப்பவுமே நம்ம இருக்கணும். அப்படின்னாதான் அவங்களோட ஆசிர்வாதம் கிடைச்சு நம்மளும் நல்லா இருப்போம் நான் சொல்ல வர்றது உனக்கு புரியுதா?”

“உனக்கு அப்படி ஒரு தாய் மாமா கிடைச்சிருக்காருடா நீ என்ன சொன்னாலும் கேட்டுக்குறாரு. நீ என்ன சொன்னாலும் செய்றாரு. உன்னை அவரோட தலைமேல தூக்கி வைச்சிக் கொண்டாடுறாரு. ஆனால் எனக்கு அப்படியில்லல்ல. என் மாமா அவரோட கட்சியில எனக்கு உறுப்பினர் அட்டை தந்ததோடு சரி. அதுக்கப்புறம் அந்த கட்சியிலே எதுக்குமே கூப்பிடலையே.என்னோட கட்சி பதவி ஆசைக்கு அவர் எதுவும் சொல்லலை. அப்படியே சும்மா பொம்மை மாதிரி வச்சுக்கணும் நினைச்சுக்காரு.அந்த கட்சியில் பொம்மையா இருக்குறதுக்கு நம்ம கட்சியில் ஆக்டிவா இருக்கலாம்தானே. இங்கயே அவ்வளவு பெருசா வளர்ந்து, நான் பெரியாளாகி, என் குடும்பத்துக்கு முன்னாடி தலை நிமிர்ந்து நிக்கணும்டா. அந்த ஆளைத்தலை குனிய வைக்கணும் டா”

“நீ அரசியல்ல எல்லாம் படிச்சுக்கணும், மேல வரணும்னு நியாயமா சொல்லி இருப்பார்டா. அது புரியாம நீ அவரை எதிர்த்து நிற்கிற?”

“அப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லடா நான் அவரை விட கொஞ்சம் நல்லா கட்சியில இறங்கி வேலை செய்வேன்னு அவருக்கே தெரியும். அப்புறம் அவரைவிடவும் நான் மேல வந்துட்டேன்னா அவருக்கு வாய்ப்பு இருக்காதுல்ல. அந்த பயத்துலதான் என்னை மேலே வரவிடாம மத்த கட்சி ஆளுங்க மாதிரியே என்னையும் அடிமட்டத்திலேயே வச்சிருந்தார். அதுதான் மொத்தமா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உன்கூட வந்துட்டேன்.உன்கூட வந்ததும் ஒரு விதத்துல நல்லதுதான், இப்போபாரு கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷமா நம்ம கட்சியில் நான் என்னெல்லாம் வேலை பார்த்திருக்கேன்னு, எல்லோருக்கும் தெரியும், கட்சில் இருருக்க அத்தனை தொண்டர்களுக்குமே என்னைத் தெரியும்.இங்க இருக்க மொத்த கட்சி தலைவர்களுக்கு நான் யாருன்னு தெரியும் இதைவிட எனக்கு என்னடா வேணும்? அவரே இனி வழியவந்து கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன் அவர் பொண்ணும் எனக்கு வேண்டாம்”

“அவர் பொண்ணு வேண்டாம்னு சொல்லு,ஆனால் கட்சி வேண்டாம்ன்னு சொல்லாதடா அது ஒரு பெரிய வாய்ப்பு உனக்கு. நீ கல்யாணம் பண்ணுறதுக்கான பொண்ணாக உனக்குன்னு மதுமதி காத்திருக்காளே. இனி நீ வேற யாரையாவது திரும்பிப் போய் பார்த்தாலே உன் மூஞ்சை உடைச்சிடுவா”

“அது என்னவோ உண்மைதான்டா அவளைத் தவிர வேறு யாரை பார்த்தாலும் என்னைக் கொன்னுடுவாடா” என்று சொன்னவனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அது மதுமதி தன் மீது எவ்வளவு பொசசிவான காதலை வைத்திருக்கிறாள் என்று நினைத்துப் பார்த்தவனுக்கு இப்பவே மதுமதிவை பார்க்கணும் போல இருந்தது.

உடனே ரகுவரனிடம் “நான் ஒரு முக்கியமான விஷயமா போயிட்டு வந்திடுறேன் பங்காளி. நீ இந்த போஸ்டர் எல்லாத்தையும் ஓட்டச் சொல்லிடு. நான் அப்புறமா தோப்பு வீட்டுல வந்து பார்க்குறேன்”என்று வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் போகும்போதே மதுமதிக்கு போன் பண்ணி வர சொல்லிவிட்டான். அவளீம் கிளம்பி வந்தவள் சிவானந்தனிடம் வந்தாள்.

“அப்பா நான் கோவிலுக்கு போயிட்டு,அப்படிமே என் பிரண்ட்ஸையும் பாத்துட்டு வந்துடுறேன்ப்பா”என்று சொல்லிவிட்டு வெளியே வந்ணவள், காரைஎடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவள் வீட்டை விட்டு வெளியே போனதும் மரகதம்தான் தனது கணவர் சிவானந்தனிடம் வந்தவர் “இந்த நேரத்துல எதுக்கு அவளை வெளியே போவ பெர்மிஷன் கொடுத்தீங்க? இன்னைக்கு பொங்கல் விழா திடல்ல நடக்கும்போதே நான் பார்த்ததுட்டுத்தான் இருந்தேன். அவ அந்த இளந்தீரன்கூட இளிச்சிடுச்சு இளிச்சு, இழைஞ்சி இழைஞ்சி பேசிட்டு இருந்தாள். இது நாளைக்கே வெளிகிளியே தெரிஞ்சா என்னாகும்னு தெரியும்தானே. அடுத்த வீட்டுக்கு வாழபோகக்கூடிய பொண்ணு. நாளைக்கு யாராவது பொண்ணுகேட்டு வருவாங்களா என்ன?எவ்வளவு பணம் இருந்தாலும் கவனமாக இருக்கணும்ல. இப்போ என்ன நினைச்சிட்டு இப்போ அவளை வெளியே அனுப்புனீங்க. அவ இப்போ அந்த பையனைதான் பார்க்கபோறான்னு எனக்கு தெரியாமலா இருக்கு. உங்களுக்கும் தெரிஞ்சுதானே அனுப்புறீங்க. இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன் ”என்று பெண்ணைப் பெற்றவளாக கொஞ்சம் வருத்தப்பட்டு கேள்வி கேட்டார். 

“ப்ச்ச் சும்மா இருடி. என்னத்தையாவது உளறிட்டு இருக்காத. எனக்கு என் பொண்ணை எப்போ எங்க அனுப்பனும் தெரியும். அவ ஒன்னும் சின்ன பிள்ளையில்லை. அவள் நம்மளைவிடவும் ரொம்ப விவரமான பொண்ணுதான். அதேமாதிரி இளந்தீரனும் அப்படி ஒன்னு மோசமான பையன் கிடையாது. நான் எதுக்கு அவளை வெளியே அனுப்பினேன் அப்படிங்கிறது எனக்கு தெரியும். அதை உன்னிடம் புரிய வைக்கணும்னு அவசியம் இல்லை. அவளோட வாழ்க்கையை பெத்தவனான எனக்கு எப்படி பார்த்துக்கணும் தெரியாதா? நீ சும்மா கண்டதையும் உளறிட்டிருக்காத. உன் வேலையைமட்டும் பார்த்துட்டு இரு”என்று கொஞ்சம் கோபமேறி சத்தம் போட்டார்.

“அதுதானே நான் சும்மா இந்த வீட்ல அலங்கார பொம்மையாதானே இருக்கேன். மத்தபடி என் பேச்சை நீங்க எங்க கேக்க போறீங்க. என்னவோ செய்யிங்க போங்க,அப்புறம் கடைசில என்கிட்ட வந்து குத்துதே குடையுதேன்னு அப்பாவும் மகளும் அழுதுட்டு இருக்கக்கூடாது. என்னதான் நீங்க அரசியல்ல சாணக்கியத்தனம் நிறைந்தவராயிருந்தாலும் எப்பவும் ஒரு ஆள் கட்ட தோத்துகிட்டேதான் இருக்கீங்க. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கட்டும். மகளையும் அதேமாதிரி வாழ்க்கையில் தோற்க வைச்சிடாதீங்க”என எடுத்தது சொல்லிவிட்டு போய்விட்டார். 

ஆனால் சிவானந்தனின் திட்டமும் தீர்மானமும் வேறாக இருந்ததால் அதெல்லாம் அவரது புத்திக்குள்ளாக போடவேயில்ல. அவர் தனது கை விரல்களால் தாளம் போட்டவாறே கண்களை மூடி வேறேதோ யோசனையோடு இருந்தார். அவருக்கு மரகதம் பேசியதெல்லாம் காதிலே ஏறவில்லை. 

இளந்தீரன் தனது வண்டியில் வந்து இறங்கவும்,தனது காரில் இருந்து இறங்கினாள் மதுமதி.

இளந்தீரனுக்கு மத்மதியைப் பார்த்ததும் இதுவரைக்கும் இருந்த பிரச்சனைகள், ஜெயச்சந்திரனை பார்த்தது,ரகுவரனிடம் பேசினது என்று எல்லாமே பின்னுக்குப்போய்விட்டது. மதுமதி மட்டுமே அவனது கண்ணுக்கு மருந்தாகவும் விருந்தாகவும் ஞாபகத்திலும் இருந்தாள்.

அந்த ஆளில்லாத ஆற்றுப்பாலத்தில் அவர்கள் இருவரும் மட்டும்தான் இருந்தார்கள்.

அவளைப் பார்த்ததும் அப்படியே கைகள் விரித்து நின்றான். அவ்வளவுதான் மதுமதி ஓடிவந்து அவனது கைகளுக்குள் அடைக்கலமாகிவிட்டாள்.

இளந்தீரனோ அவளை வாரிச்சுருட்டி தனது நெஞ்சுக்குள் வைத்து இறுக்கிப்பிடித்துக்கொண்டான்.

மதுமதி அவனது நெஞ்சில் முத்தம் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“ஏன்டி இப்படி நெஞ்சுல சும்மா ஒரு இச்சு வாங்கவா உன்னை பார்க்க வரச்சொன்னேன். காலையில் இருந்து மனுஷனை இடிச்சு இடிச்சு ஏத்திவிட்டுட்டு இப்போதான் பார்க்க வந்திருக்க. ஸ்ட்ராங்க ஒரு லிப் கிஸ் உதட்டைக் கடிச்சுத் தரலாம்ல”என்று விசனப்பட்டுக்கேட்டான்.

“உதட்டைக் கடிச்சு முத்தம் வேணுமா தந்துடலாமே. முதல்ல எம்.எல்.ஏவாகி அப்படியே என் கழுத்துல ஒரு தாலியையும் கட்டிட்டீங்கன்னா உதட்டில் என்ன உதட்டில் எங்கவேணும்னாலும் கடிச்சு முத்தம் தந்திடுறேன். இப்பவே வாங்க தர்றேன்”

“ஆமாடி உடனே முத்தம் வாங்க எம்.எல்.ஏ ஆகுறதுக்கு அங்க எலக்க்ஷன் கமிஷன்ல எங்க மாமானாரா இருக்கான். போடி முத்தம் தரமாட்டேன்னு நேரடியா சொல்லேன்ட. அதுக்கு எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிற?”என்றவன் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டான்.

அவனது மீசையைப் பிடித்துத் திருகி விளையாடியவளின் கையைப் பிடித்துத் தடுத்தான்.

“ப்ச்ச் மீசையைப் பிடிக்காதடி. எனக்கு அது பிடிக்காதுன்னு தெரிஞ்சும் விளையாடுறபாரு” என்றவன் அப்படியே தூரமாகப்போய் உட்கார்ந்தான்.

மதுமதி அவன் பக்கத்தில் போகாது அங்கயே நின்றிருந்தாள்.

“ஏன்டி பக்கத்துல வந்து உட்காரத்துக்குக்கூட எம்.எல்.ஏ ஆகணுமா என்ன? வாடி பக்கத்துல வந்து உட்காரு. இனி அடுத்தடுத்து எலக்க்ஷன் வேலை வந்துட்டா ஓடிட்டேயிருப்பேன். உன் பக்கத்துல மூணு மாசத்துக்கு வரவே முடியாது. இப்பவே உன்னைத் தடவித் தடவிக் கொஞ்சிக்கிறேன்”

“க்கும் அந்தத் தடவித் தவிக் கொஞ்சிரது எப்படின்னு எனக்குத் தெரியும். எதுன்னாலும் கல்யாணத்துக்கு அப்புறம்தான். இப்போலாம் நீங்க முன்னாடிஸ்ரீமாதிரி இல்ல இளா. எப்பவும் என்னைய ஆட்டையை போடுறதுலயே இருக்கீங்க. என்னாச்சு. ஏதும் பிரச்சனையா?” 

“அப்படி பிரச்சனையெல்லாம் இல்லை. வீட்டுல வேற கல்யாணத்துக்கான பேச்சு தீவிரமா போகுது. எங்க மாமாவேற அம்மாக்கிட்ட ஏதாவது பேசி நம்மக்கிட்ட கேட்டிருவாங்கன்னு இருக்கு. அது எப்படியும் பிரச்சனையிலதான் முடியும்னு வையேன். அதுக்குள்ள உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் நிம்மதின்னு யோசிக்கிறேன்”

“ஏது ஆதிராவை பிடிக்காம பிரச்சனையகிடும்னு நீங்க யோசிக்கிறீங்களாக்கும். ஏய் டகால்ட்டி. அவளை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அவளைத்தான் நீங்க சின்ன வயசுல காதலிச்சீங்க. என்னைப் பார்த்து மயங்கலைன்னா அவப்பின்னாடிதானே ஆதிமா ஆதிமான்னு சுத்திருப்பீங்க. உங்களுக்கு அவா இப்பவும் கிரஷ்ஷூன்னு எனக்குத் தெரியும். எப்பவும் அவளை உங்களுக்குப் பிடிக்கும்தான”

“ஏய் சும்மா ஏதாவது உளறாதடி. அது அறியா வயசுல மாமா மகள்னு ஒரு பாசம். அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்லை. எங்க மாமா மாதிரியே அவளும் செம போல்டானவ, செம ஷார்ப் மூளை. அதனால் அப்போ பிடிச்சிருக்கலாம். இப்போ நீதானடி என் காதலி, என் உயிரு, என் எதிர்காலமெல்லாம். வாடி இங்க”என்று அவளை இழுத்து தன் மடியில் வைத்தவன் வேறெதையும் சிந்திக்க்கூடாது என்று அவளது கழுத்தில் முகத்தை வைத்து தேய்த்து அவளை வாசம் பிடித்தான்.

“இளா!தலைவரே உங்க போக்கு சரியில்ல தள்ளிப்போங்க. நான் வந்து நேரமாகிட்டு வீட்டுக்கு போகணும்”

“இருடி உன்னை நல்லா வாசம் பிடிச்சிக்கிறேன்”

“அதுசரி எவ்வளவு நாளைக்கு வாசம் மட்டுள் பிடிப்பீங்க. சீக்கிரம் தலைவாழை இலையில போட்டு சாப்பிடவும் ரெடியாகுங்க தலைவரே!” என்றவள் அவனிடமிருந்து விலகி எழுந்தாள்.

அவளது கையைப் பிடித்தவன் ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் வைத்துதான் அவளை விடுவித்தான்.

அவள் சொல்லுகிற அந்த தலைவரே என்கின்ற வார்த்தைக்காகவே தேர்தல் நிக்கணும் என்ற முடிவெடுத்திருந்தான்.

அதனால் அவளை இழுத்து அவள் திமிறத்திமிற உதட்டைக் கடித்து முத்தம் கொடுத்துவிட்டே அவளை போகச்சொன்னான்.

அவனது நெஞ்சில் வேகமாக அடித்தவள் “ரவுடி!ரவுடி! நான் சொல்லுறதைக் கேட்கிறதேயில்ல இளா நீங்க”என்று வெட்கப்பட்டவள் அவனுக்கு டாட்டா காட்டிவிட்டு காரில் ஏறினாள்.

அவளது அந்த சிவந்த முகத்தைப் பார்த்தாவறே தனது வண்டியை எடுத்தவனுக்கு ஏதோ சாதிச்சதுபோன்ற உணர்வு வந்தது.

அந்த சந்தோசமான உணர்வோடும் தங்களது கல்யாண வாழ்க்கையைப் பத்தின கனவுகளோடும் அப்படியே இளந்தீரன் தோப்பு வீட்டுக்கு தனக்காக காத்திருக்கும் ரகுவரைப் பார்க்கப்போனான்.

அவன் வண்டிதான் அவன் நினைச்ச இடத்துக்குப்போனது. அவனது இலட்சியமும் கனவும் அதுபாட்டுக்கு தேரை இழுத்து தெருவில் விடுவதற்காக அவனை மொத்தமாக தனக்குள்ளாக இழுத்துக்கொண்டது!