அநாயகா-50
அநாயகா-50
ஜெயசந்திரனை மருத்துவனையில் ஐ.சியூவிற்குள் வைத்திருக்க, டாக்டர்ஸ் அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார். அவராக இனி கண்ணுமுழிச்சு எழுந்தாதான் உண்டு என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.
மகேஷ்வரியோ அழுது அழுது அப்படியே சாப்பாடு தூக்கம் எதுவுமின்றி அவங்களுக்குன்னு குடுத்த ரூம்ல அரை மயக்கத்துல படுத்திருந்தார்.
அப்போ ஆதிராதான் அவர் பக்கத்துல போய் நின்று “அப்பாஆஆஆ” என்று கையைப்பிடித்து அழுதுகொண்டிருந்தவள் அவர் பக்கத்துலயே தலையை கவிழ்ந்து இருந்த சேரில் உட்கார்ந்தாள்.
அந்த நடு இரவில் அப்போது ஆதிராவின் கையை யாரோ இறுக்கமாகப் பிடித்திழுக்கவும் பயந்துப்போய் யாரென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.
அது ஜெயச்சந்திரன்தான் கண்ணுமுழித்து எழுந்து உட்கார்ந்து மகளின் கையைப்பிடித்து அழைத்தார்.
அவர் கண்ணுமுழித்து எழுந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்த ஆதிராவுக்கு சந்தோசத்துல பேச்சே வரவில்லை.
அவள் அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்திருக்க, அவளது கன்னத்தைத் தட்டியவர் “ஆதும்மா என்னாச்சுடா?என்ன இப்படி உட்கார்ந்திருக்க?”என்று கேட்டவாறே சுத்திப்பார்த்தார்.
அவர் ஹாஸ்பிட்டல் ரூம்ல் இருக்கார் என்றதும் மெதுவாக கண்களை மூடி யோசித்தவருக்கு அப்போதான் நடந்தது ஞாபகத்துக்கு வந்தது. உடனே தலையைத் தொட்டுப்பார்த்தார்.
இளந்தீரன் அடிச்சதுல வந்த காயம் இன்னும் ஆறாமல் வலித்தது. அதைத் தொட்டுப்பார்த்தவர் “ இளந்தீரன் எங்கம்மா?நான் எத்தனை நாளா இங்க இருக்கேன்? காயமெல்லாம் கொஞ்சமா ஆறினமாதிரி இருக்கே. தையல் போட்டிருந்தாங்களா?ஆமா மகேஷ்வரியை எங்க?”என்று தெளிவா பேசினவரைப் பார்த்து இன்னுமே அதிகமான ஆனந்த அதிர்ச்சியில் “அப்பாஆஆஆ’ என்று எழுந்தவள் அவரைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
அவளது அழுகை சத்தத்தில் ஓடிவந்த நர்ஸ் ஜெயசந்திரன் எழுந்து உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு “சார் நீங்க எப்படி கண்ணுமுழிச்சீங்க? நீங்க பத்து நாளா கோமாவுலதானே இருந்தீங்க?”என்று ஷாக்குல கேட்டவர் “இருங்க சார் நான் டாக்டர்ஸ்ஸை கூட்டிட்டு வர்றேன்” என்று வேகமாக வெளியே போக நடந்தார்.
அதைப்பார்த்த ஜெயசந்திரன் உடனே “ யம்மா நர்ஸ் இங்க வாம்மா. இப்போதைக்கு யாருக்கிட்டயும் எதுவும் சொல்லவேண்டாம். இங்க வந்து உட்காரு” என்று நர்ஸை உள்ளே கூப்பிட்டு அமைதியாக உட்கார சொல்லிவிட்டு அன்று என்ன நடந்தது,அதுக்கப்புறம் என்னவெல்லாம் நடந்துச்சு என்று ஆதிராவிடம் கேட்டார்.
ஆதிரா அன்று இளந்தீரன் செங்கல்லை வைத்து அடித்ததிலிருந்து இப்போவரைக்கும் நடந்தைச் சொல்லிமுடித்துவிட்டு அழுதாள்.
அவளது தலையை ஆறுதலாகத் தடவிக்கொடுத்தார்.
“அப்பாஆஆஆ நீங்க இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டுட்டம்பாஆஆஆ. எப்படிப்பா இப்போ எழுந்தீங்க?ஆச்சர்யமா இருக்கு?”என்றவளுக்கு இன்னும் நம்பமுடியவில்லை.
அவளது கண்ணைத் துடைத்துத் துடைத்து, அவரை திரும்பத் திரும்பத் தொட்டுப் பார்த்தாள்.
அவருக்கே அவளது செய்கை பாவமாக இருந்தது. நர்ஸுக்குமே கண்கள் கலங்கிவிட்டது.
ஆதிராவின் கையைப்பிடித்து முத்தம் கொடுத்தவர் “அப்படியெல்லாம் உங்களைவிட்டு போகமாட்டேன்டா. ஏதோ அடிபட்ட அதிர்ச்சியில் மூளை ஸ்தம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன். இப்போதான் அப்பா வந்துட்டனேம்மா அழாதடா”ஆறுதல் சொன்னார்.
இப்போ கொஞ்சம் தெளிந்தவள் “ அப்பாஆஆ நான் போய் அம்மாவைக் கூட்டிட்டு வர்றேன்.சிஸ்டர் நீங்க எங்கேயும் போயிடாதிங்க”என்றவளின் கையைப் பிடித்து தன் பக்கத்தில் உட்காரவைத்தார்.
அங்கே நின்றிருந்த நர்ஸைப் பார்த்து “நர்ஸ் நீ போய் டாக்டர்கிட்ட நான் கண்ணுமுழிச்சு எழுந்துட்டேன்னு சொல்லிகூட்டிட்டு வாம்மா. நான் எழுந்தது வேற யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது. போற வழியில என் பொண்டாட்டி இருக்கான்னு அவாக்கிட்டக்கூட சொல்லிடாத. டாக்டர்கிட்ட போய் சத்தமில்லாமல் எம்.எல்.ஏ எழுந்துட்டாருன்னு கூட்டிட்டு வாம்மா”என்று அமைதியாக சொல்லி அனுப்பினார்.
நர்ஸ்ஸும் இவ்வளவு பெரியா ஆளு சொன்னா கேட்டுத்தானே ஆகணும்னு.அமைதியா போய் டாக்டர்கிட்ட சொல்லி கூட்டிட்டுவந்தார்.
அவரும் ஜெயசந்திரனை செக் பண்ணிட்டு “நீங்க ரொம்ப நார்மலா இருக்கீங்க சார். உங்களுக்கு ஆயுசு கெட்டி. இனி பயமில்லை. நார்மலாவே இருக்கலாம். அப்புறம் ஒரு கேள்வி எதுக்கு சார் நீங்க கண்ணு முழிச்சதை யாருக்கிட்டயும் சொல்லாமல் மறைக்கறீங்க”என்று நேரடியாகவே கேட்டார்.
“அது கொஞ்சம் பெர்சனல், கொஞ்சம் அரசியல் டாக்டர். தயவு செஞ்சு இதை இப்போதைக்கு வெளியே சொல்லவேண்டாம். நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு பணம் எவ்வளவு வேணும்னாலும் சொல்லுங்க உங்களுக்கும் உங்க ஹாஸ்பிட்டலுக்கும் சேர்த்து தந்திடுறேன்”
“சார் உங்களுக்குத் தெரியாதா சார் எங்களை எப்படி கவனிக்கணும்னு. நாங்க இந்த நியூஸை வெளியவிடவே மாட்டோம்.நீங்களா சொன்னாதான் உண்டு”
“நல்லது. இப்போ எனக்கு என் மகள்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு ஆதிராவை தன் பக்கத்தில் உட்காரவைத்து அவளது தோளில் தோழனாகக் கைப்போட்டுப் பிடித்தவர் “ரொம்ப பயந்துட்டீங்களாம்மா?”என்று தகப்பனா வால்சயத்தோடு கேட்டார்.
அவரது முகத்தைபு பார்த்து ஆமா என்று தலையாட்டியவளுக்கு பேச்சு வரவில்லை. அதற்குப் பதிலாக கண்ணீர் துளிகள் வந்து அவரோடு பேசியது.
அவளது கண்ணீரைத் துடைத்தவள் “ஏன்மா இளந்தீரனை ஜெயிலுக்கு அனுப்புனீங்க?”என்று கொஞ்சம் வருத்தத்தோடு கேட்டார்.
அதில் அவள் மீண்டும் ஆச்சர்யமாக அவரது முகத்தைப் பார்த்தாள்.
“இளந்தீரன் பாவம்மா. அவனுக்கு சூதுவாது எதுவுமே தெரியலை. அதுக்காகத்தான் அவனை அடிப்படை உறுப்பினராக சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா அரசியலைப் பத்தி முழுசா புரியை வைச்சை அதுக்குப்புறம் மேல கொண்டுவரணும்னு நான் ஒரு திட்டம்போட்டேன். ஆனால் அந்த சிவானந்தனும் அவன் மருமகனும் சேர்ந்து ஏதோ பண்ணிட்டாங்க. இன்னும் அவனுக்கு துரோகம் தெரியலை, அரசியல்னா என்னன்னு புரியலை. மனுஷங்க மனசை புரிஞ்சிக்கத் தெரியாது இப்படியிருக்கான். பாவம்மாஆஆ
ஜெயில்ல என்ன பாடுபடுறானோ?”என்றவருக்கு கண்கள் கலங்கிவிட்டது.
“அப்பாஆஆஆஆ இப்போ என்ன பண்ணலாம். எதுக்கு நீங்க கண்ணு முழிச்சதை அம்மாவுக்குக்கூட சொல்லவேண்டாம்னு சொன்னீங்க. அம்மா பாவம்பா. உங்களை நினைத்து சாப்பிடாமலயே இருக்காங்க. இனனைக்கு மயங்கிட்டாங்க. அம்மாக்கிட்ட மட்டுமாவது சொல்லுவோமா?”
“வேண்டாம்மா. நான் அதைப் பார்த்துக்கிறேன். இப்போ முதல் வேலையா நீ இளந்தீரனை வெளிய எடுக்குற. அதுக்கு நம்ம லாயரைப் பாரு. நான் கையெழுத்துப் போட்டுத்தர்றேன். அப்புறம் இத்தனை நாள்ல வேற என்ன நடந்துச்சு சொல்லு”
“அதுவந்து அத்தானோட அந்தக் காதலிக்கும் அவங்க பிரண்டு ரகுவரனுக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சு இன்னும் பதினைஞ்சு நாள்ல கல்யாணம்”
“அப்படியா? ஆனா அந்தப்பொண்ணு நம்ம இளந்தீரனைத்தானே காதலிச்சா?”
“ம்ம்ம்” என்று சொல்லும்போதே அவளுக்கு மனது கணத்தது.
“ஆதும்மா கடவுள் யாருக்கு யாருன்னு முடிச்சு போட்டிருக்காரோ அதுதான் நடக்கும். நமக்கு நல்லதுன்னு நாம நினைப்போம். ஆனால் நம்மைவிட நமக்கு எது நல்லதுன்னு கடவுளுக்குத் தெரியும். நீ என்ன பண்ணுற அந்தப்பொண்ணுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே இளந்தீரனை வெளிய இறக்கிக்கொண்டுவந்திடு. அதுக்கான எல்லாத்தையும் உடனே செய். ஏன்னா உண்மையாவே அந்தப்பொண்ணும் இவனை காதலிச்சிருந்தால் தீரன் வெளியே வந்தா அவங்க கல்யாணம் பண்ணிக்கட்டுமே. அவனாவது நல்லாயிருக்கட்டும். சில அரசியல் களமும் அவனுக்கு புதிதாக இருக்கும் புரிஞ்சக்கூடியதா இருக்கும்”என்று மகளுக்காகவும் தீரனுக்காகவும் சேர்ந்து யோசித்தார்.
அவர் சிலபல கணக்குக்களைப் போட்டுத்தான் காய்களை நகர்த்தினார். அவருக்குத் தெரியாதா சிவானந்தனைப் பத்தியும் அவன் குடும்பத்தை பத்தியும். இத்தனை வருஷத்துல மதுமதியைப் பத்தி தெரியாமல் இருந்திருப்பாரா?விசாரிக்காமல் இருந்திரும்பாரா என்ன?
“சரிப்பா நான் எல்லாம் பண்றேன். உங்களுக்கு அடுத்து என்ன ப்ளான்பா?”
“அது அப்புறம் சொல்லுறேன்மா. நீ என்ன பண்ற முதல்ல அவனை வெளியே எடுக்குற. அப்புறம் அந்தப்பொண்ணுக் கல்யாணத்துக்குக் கூட்டிட்டுப்போற, மீதியை அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு ஐ.சி.யூவில் கோமாவில் இருப்பது போன்றே படுத்துக்கொண்டார்.
ஆனாலும் ஜெயச்சந்திரன் தலைவரே உங்க நடிப்பு வேற லெவல். அவர் சொன்னதையெல்லாம் யாருக்கும் தெரியாமலயே ஆதிரா சரியாக செய்தாள்.
ஆனால் வெளியே வந்ததும் இளந்தீரன்தான் ரகுவரன் மதுமதி கல்யாண போஸ்டரைப் பார்த்து கொஞ்சம் கிறுக்குத்தனமான வேலையைப் பார்த்து, மதுமதியை பார்க்கப்போறேன்னு அவன் ஒரு ப்ளான் போட்டு அதன்படி போயிட்டான்.
ஆதிராவுக்கு கொஞ்சம் அவனைத் தனியாக விட்டுட்டு வர கஷ்டமாகத்தான் இருந்தது. அதனால் உடனே நர்ஸுக்கு போன் பண்ணி மெதுவாக அங்கு நடந்ததையும் இளந்தீரன் சிவானந்தன் வீட்டுக்குப் போய் பிரச்சனை செய்ததையும் ஜெயச்சந்திரனிடம் சொன்னாள்.
“என்ன ஆதிரா செய்து வைச்சிருக்க?ஆதும்மா அந்தப்பொண்ணுதான் உள்ளதுலயே ரொம்ப மோசமான பொண்ணு. தயவு செய்து சீக்கிரம் போய் அவனைப் பாரு. தீரனை என்னவேணும்னாலும் இரண்டுபேரும் சேர்ந்து செய்வாங்க”என்றதும்தான் அவளுக்கு பயம் கொடுத்தது. உடனே அவனைப் பார்க்க ஓடிவந்தாள். அங்கே அவனை அடித்துப்போட்டிருந்தார்கள்.
அவனைத் தூக்கிட்டுப்போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து உயிரைக் காப்பாத்திட்டு, அவனுக்கு வேற எதுவும் இல்லையென்று வீட்டுக்கு வந்துவிட்டாள்.
இளந்தீரனுக்கு இப்படியாகிட்டே என்று ஜெயச்சந்திரனுக்கும் கஷ்டமாகிபோச்சு. இராத்திரி நேரத்துல இளந்தீரனை யாருக்கும் தெரியாமல்,அவனுக்குமே தெரியாமல் பார்த்திடணும்னு ரூம் கதவைத் திறந்து அமைதியா மெல்ல மெல்ல நடந்துவந்தார்.
அதை அந்த அரையிருட்டிலும் பார்த்த இளந்தீரன் அதிர்ந்துவிட்டான்.
“என்னடா இது கோமாவுல கிடந்த மாமா இப்போ நம்மளைப் பார்க்க வர்றாரு. நம்மளை கொல்லுறதுக்கு வர்றாரோ?” என்று படபடப்புடன் பயந்து கண்ணை மூடிக்கொண்டு படுத்தான் இளந்தீரன்.
ஆனால் அவர் இந்த நேரத்துக்கு உள்ளே வருவார் என்று எதிர்பார்க்காத ஒரு நான்குபேர் உள்ளேயிருந்தனர்.
வேற வழியில்லாமல் இந்தாளைப்போட்டுத் தள்ளிடவேண்டியதுதான் என்று ஒளிஞ்சிருந்த நாலுபேரும் வேகமாக ஓடிவந்து ஜெயசந்திரனை வெட்டுவதற்கு வர,அவர் தடுப்பதற்குள் இளந்தீரனை முன்னாடி வந்து தடுத்து நாலுபேரையும் வைச்சு செய்துவிட்டான்.
அதற்குள் ஜெயசந்திரன் லைட்டை போட்டுவிட்டார். நாலுபேரையும் உட்காரவைத்து இளந்தீரன் கட்டிப்போட்டு, அவர்கள்கொண்டு வந்த ஆயுதங்களை எடுத்து அவர்களை வெட்டுவதற்காக நின்றான்.
அவனைப் பிடித்து இழுத்து சமாதானப்படுத்தி “முதல்ல மூளையை யூஸ் பண்ணுடா மரமண்டை”என்று திட்டியவர் அவனுங்களை விசாரித்தார்.
இவனுக்கு அவனுங்களை விசாரிக்கிறதை விடவும் “இவரு எப்போ கோமாவுல இருந்து எழுந்துவந்தார்னு விசாரிக்கணும்னு” யோசிச்சிட்டிருந்தான்.
ஒரு வழியாக அவர்களை சரியாக டாக்டர் மூலமாவே போலீஸுக்கு பிடிச்சுக் கொடுத்துவிட்டு இளந்தீரன், ஜெயசந்திரனைப் பார்க்க அவரோட ரூமுக்கு வந்தவன் அவரிடம் எதுவும் போசாது அவரையே பார்த்திருந்தான்.
“வாடா இங்க” என்று அவனது கையைப் பிடித்து தன் பக்கததில் உட்காரவைத்து அவனது தோளில் நண்பனாக கையைப்போட்டுக்கொண்டார்.
உண்மையிலயே அவனுக்குக் கண்கள் கலங்கிவிட்டது.
“பார்த்தியா சிவானந்தன் உன்னையும் என்னையும் ஒன்னா போட்டுத்தள்ளுறதுக்கு ஆளு அனுப்பியிருக்கான். இப்போவாவது உன் வாழ்க்கையில அவங்க என்ன விளையாடிருக்காங்கன்னு புரிஞ்சுதா?”
“ம்ம்ம்”என்றவன் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
“நாளைக்கு அந்தப்பொண்ணுக்குக் கல்யாணம்.அந்தப்பொண்ணு உன்னை உண்மையாவே விரும்பியிருந்தால் உனக்காக காத்திருக்கும்ல. அதனால் நாளைக்குக் காலையிலயே ஆதிரவை வரச்சொல்லுறேன். அவக்கூட போய் அவளைத் தூக்கிட்டு வந்திடு. உன் வாழ்க்கை அவதான்னு முடிவு பண்ணிருந்தல்வ. இது உனக்கான வாழ்க்கையாக இருந்தால் கைநழுவவிட்றாத”என்றவர் அவனது தோளைத்தட்டிக்கொடுத்தார்.
இப்போ அவர் சொன்னதையெல்லாம் கேட்டவன் திரும்பி அவரது முகத்தை எந்தவிதமான சலனமுமுமின்றி பார்த்தான்.
“என்ன தீரா?”என்று வாஞ்சையோடு கேட்டார்.
“என்னை அடிச்சுப்போட்டது யாரு தெரியுமா?”
“அந்த ரகுவரன்தானே?”
“இல்லை அவன்தான் என்னை காப்பாத்தி புதருக்குள்ள போட்டுட்டுப்போனான்”
“அப்போ உன்னை அடிச்சுப்போட்டது யாரு. வேற எதிரிங்க நமக்குக் கிடையாதே தீரா?”
“எதிரிங்க நமக்கு சிவானந்தன் குடும்பம் மட்டும்தான் மாமா. ஆனால் காதலி என்கிற துரோகியை சம்பாதிச்சு நான் வைச்சிருக்கனே. என்னைக் கட்டையால அடிச்சு முதுகுல குத்தினதே மதுமதிதான்”
“என்ன சொல்லுற தீரா?”அந்தப்பொண்ணு அப்பனை மாதிரி குணமுள்ள பொண்ணுதான். ஆனால் காதலிச்ச உன்னையே முதுகுல குத்தினாளா?தலையில அடிச்சாளா?”
“அவள் எவ்வளவு கொலைவெறியோடு என்னை அடிச்சான்னு நான் கார் கண்ணாடியில பார்த்துட்டேன் மாமா. நான் சுதாரிக்கிறதுக்குள்ள தலையில அடிச்சுட்டா. அவ கத்தியை வைச்சு என் கழுத்தை அறுத்துப்போடணும்னு சொன்னாள். ஆனால் வேண்டாம் மது. நாளைக்கு நம்ம கல்யாணம் இத்தனை நாள் காதலிச்சுட்டு இப்போ கல்யாணத்தைன்னுக்கு கொலை பண்ணிட்டு பிரச்சனையாகவேண்டாம். வா நீ கார்ல இருன்னு ரகுவரன் அவளைப் பிடிச்சு காருக்குள்ள அடைச்சான்.இல்லைன்னா அன்னைக்கே என் உயிரை அவள் எடுத்திருப்பா மாமா. நல்வேளையா ஆதிரா வந்து காப்பாத்தினாள்.இல்லைன்னா உங்க மருமகனை புதைச்ச இடத்துல செமையா புல்லு வளர்ந்திருக்கும்”என்று சொல்லிவிட்டு சிரித்தான்.
ஜெயசந்திரன் அவனை அப்படியே இழுத்து கட்டிக்கொண்டு முதுகை வருடிக்கொடுத்தார்.
“என்னை மன்னிச்சிடுங்க மாமா.உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்”என்று கண்கள் கலங்க மன்னிப்புக் கேட்டான்.
அவரோ அவன் எல்லாத்தையும் புரிஞ்சிக்கணும்னுதான் நினைச்சாரே தவிற, அவன் கஷ்டப்படணும், மன்னிப்புக் கேட்கணும்னு எல்லாம் நினைக்கவேயில்லை.
ஒருவழியாக சமாதானமாகப்பேசி முடித்தனர்.
“நாளைக்கு அப்போ என்ன பண்ணப்போற?”
“வெயிட் அண்ட் சீ மாமா” என்றவன் அவன் மனதிற்குள் ஒரு ப்ளானை அப்பவே போட்டு அடுத்த நாள் ஆதிராவைக் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்.
அப்படி ஆதிராவைக் கல்யாணம் பண்ணினவன் எப்படி அந்தத் துரோகி மதுமதியை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தான்?
அதுதான் எனக்குமே உன்மேல டவுட்டாவே இருக்கு இளந்தீரா?