அநாயகா-46
அநாயகா-46
இளந்தீரன் தன்னுடைய ஆபிஸில் உட்கார்ந்திருந்தான்.
அப்போ அங்க வேகமாக வந்த ரவீந்திரன் இளந்தீரனின் சட்டை பிடித்து தூக்கி “ஆதிராவையும் மாமாவையும் எங்கடா கடத்தி வச்சிருக்கீங்க? நீயும் மதுமதியும் சேர்ந்து பிளான் பண்ணி இப்போ எங்க மாமாவையும் என் கொழுந்தியாளையும் கடத்திட்டீங்கள்ல. நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா. ஆதிராவை ஏமாத்தி எம்.எ.ல்ஏ சீட்டு வாங்கிப் அமைச்சரானதும் அவளை வீட்டைவிட்டு விரட்டிட்டு அந்த எச்சை மதுமதிக்கூட வாழ்ந்துட்டிருந்தல்ல அதுக்கு இடைஞ்சலா இருக்கிற ஆதிராவை கொல்லனும்னு பிளான் பண்ணி தூக்கிட்டல்ல. அவளுக்கும், அவளோட வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் உன்னை சும்மா விட மாட்டேன்டா. உடம்பு சரியில்லாத அந்த பாவப்பட்ட மனுஷன் மாமாவையும் சேர்த்து கடத்தியிருக்க. அவரை தூக்கிறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்துச்சு? அதுவும் கர்ப்பமா இருக்குற ஒரு பிள்ளைய இப்படி தூக்கிட்டு போயிட்டியே! அவளுக்கு என்ன ஆச்சு தெரியலையே. அவளைக் கொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு? அவங்க இரண்டு பேருக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உன்னைத் தம்பின்னுக்கூட பார்க்காமாட்டேன். நானே உன்னை நடுரோட்டுல வைச்சே கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்”என்று ரவி அவனை திட்டியவாறே அவனது கோபம் தீருமட்டும் அடித்தான்.
இளந்தீரனோ ஒன்றுமே பேசாமல் அவனிடம் அடியை மட்டும் வாங்கிக் கொண்டான்.
இப்போ அவனது கையை பிடித்து நிறுத்தினான்.
“என்னது ஆதிரா கர்ப்பமா இருக்காளா? இதை ஏன் யாரும் என்கிட்ட சொல்லல?" எனக் கோபத்தில் கேட்டான்.
அவனது மனதிற்குள் இவ்வளவு முக்கியமான தகவலை தன்னிடம் யாரும் சொல்லலையே! என்ற ஆதங்கம் வந்தது. அதனால்தான் அந்த நேரத்தில் அப்படி ஒரு கேள்வி கேட்டான்.
(இதுவாடா இப்போ முக்கியம் அங்க பொண்டாட்டியை கடத்தகருக்காங்கடா!முட்டைப்போண்டா)
“உனக்கு எதுக்குடா நாங்க சொல்லணும், எதுக்கு சொல்லணும்னு கேக்குறேன். ஆதிரா கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சதும் வீடே சந்தோஷப்பட்டுச்சு ஆனா அந்த பிள்ளை சந்தோஷமா இல்லை. ஏன்னா நீ அவளுக்கு செய்த துரோகம் அவ மனசை அப்படி பாதிச்சிருந்துச்சு. எல்லாரையும் விடவும் உன்னைத்தானே நம்பி உன் கூட வாழ்ந்தாள். அந்த வாழ்க்கைக்கு சாட்சியாக கர்ப்பமாக இருக்கான்னு சந்தோஷப்படுவதைவிடவும் வேதனைதான்பட்டா. உன்னை மாதிரி ஒரு இரண்டாந்தரமான துரோகியோட வாழ்ந்து குழந்தையை வயித்துல வாங்கிட்டோமே அப்படிங்கிற வேதனைதான் அவளுக்கு இருந்துச்சு. போயும் போயும் அடுத்தவன் பொண்டாட்டியோ நீ வாழ்ந்துட்டு இருக்கல்ல உன்கிட்ட சொல்ல
வேண்டிய அவசியமில்லை. நீ மதுமதியோட வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியாதான் இப்போ அவளும் மாசமா இருக்களாமே!ஆதிரா கர்ப்பமா இருக்கிறதை ஹாஸ்பிட்டல்ல உறுதி செய்த அன்னைக்குத்தான் மதுமதியும் வந்து ஆதிராக்கிட்ட இந்த விசயத்தைச் சொல்லிட்டு போனாள். ஆதிராக்கிட்ட வந்து உன் வயிதில வளர்ற குழந்தையை அழிச்சிடு. இளா அத்தானுக்கு நான் குழந்தைப் பெத்துக்குடுத்திக்கிறேன், அந்த குழந்தைதான் அவரோட வாரிசா வளரும். அதனால இனி அவங்க உன்கூடவெல்லாம் வாழமாட்டாங்க. அப்படி வருவாங்கன்னு கனவுலக்கூட நினைக்காதன்னு அவளை மிரட்டிட்டு போயிருக்கா. அப்படி சொல்லுற அளவுக்கு நீ அவக்கூட கொஞ்சிக் குழாவி, குடும்பம் நடத்திட்டிருக்கல்ல. அந்த தைரியம்தானே அவ வந்து எங்களையே மிரட்டுற அளவுக்கு தைரியம் வந்திருக்கு. அப்படிப்பட்டவக்கூட சேர்ந்துடடு மாமாவையும் ஆதிராவையும் கடத்திக் கொல்லுறதுக்கு திட்டம் போட்டிருக்கல்ல . மதுமதி ஆதிராவையும் மாமாவையும் கடத்திட்டு போனதை பார்த்துட்டுதான் மாமாவோட ஆளுங்க வந்து சொன்னாங்க. உனக்கு ஆதிராவும் மாமாவும் செத்தாதான் இந்த அரசியல்ல இருக்க முடியும்னு, அந்த சிவானந்தனோட சேர்ந்து இவ்வளவு திட்டம் போட்டிருக்க. உன்னையெல்லாம் ஜெயிலுக்குள்ளேயே இருந்து சாகட்டும்னு விடாமல் வெளியே கொண்டு வந்ததுதான் ஆதிரா செய்தபெரிய தப்பு. ஆதிராவையும் மாமாவையும் இப்பவே விட்டிருக்கணும். அவங்களை எங்க வைச்சிருக்க சொல்லு” என்று கதறியவன் இளந்தீரனை மீண்டும் கன்னத்தில் ஓங்கி அடித்தான்.
அந்த அடியை எதிர்பாக்காத இளந்தீரன் சற்று தள்ளாடித்தான் போனான்.
சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போல சாதுவான ரவியே இப்போ ஆத்திரத்திலும், அந்த அளவுக்கானகோபத்திலும் இளந்தீரனை அடித்தான்.
அடுத்ததும் ரவி அவனை அடிக்கப் போகவும், உடனே அவன் ரவியின் கையைப் பிடித்து தடுத்தான்.
“இங்க பாரு எதுவும் தெரியாமல் கண்டதையும் உளறாதே! இப்போ எனக்கு நடந்ததை விவரமா சொல்லு ஆதிராவும் மாமாவும் கடத்தினது மதுமதிதான் உனக்கு யாரு சொன்னா? மாமாவோட ஆட்கள்தான் சொன்னாங்கன்னா அந்த தகவல் உண்மைதான்னு உனக்கு தெரியுமா? நீ விசாரிச்சு பார்த்தியா ஆதிராவும் மாமாவும் வீட்ல இருக்காங்களான்னு ஒருதடவை போன் பண்ணி கேட்டுக்கோ. நான் எதுக்கு என் பொண்டாட்டியைக் கடத்தப்போறேன். அதுவும் நீ இப்ப சொல்லுறியே கர்ப்பமா இருக்கான்னு.அது எனக்கு தெரியவே செய்யாது. அது அப்பவே தெரிந்திருந்தால் நான் அப்பவே அவளோட கையில கால்ல விழுந்து என்கூடவே கூட்டிட்டு வந்திருப்பேன். என் உள்ளங்கைல வைச்சு என் பொண்டாட்டிய தாங்கியிருப்பேன். மாமா எனக்கு செய்த நல்லதுக்காக அவர் காலில்தான் விழுந்துக்கிடக்கணும். அதைவிட்டுட்டு அவரைக் போய் நான் எப்படி கடத்துவேன். இதையெல்ல்ம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா”என்று பதட்டத்தில் பேசினான்.
“என்ன உளறிட்டு இருக்க? நீதான் அந்த மதுமதிக்கூட சேர்ந்துட்டு ஆதிராவை விலக்கி வைச்சுட்டியே. அப்புறம் எப்படிடா உன்கிட்ட வந்து அவா கர்ப்பமா இருக்குற விஷயத்தை சொல்லுவா. அதை சொல்லுற அளவுக்கு நீ இல்லையே. நீயும் மதுமதியம் சேர்ந்து பேசிவைத்து பிளான் பண்ணாமல், அவா எப்படி மாமாவையும் ஆதிராவையும் தனியா கடத்த முடியும். நாங்க சங்கவியோட ஹாஸ்பிட்டலுக்கு செக்கப் போயிட்டு வந்து பார்த்தா மாமாவையும் ஆதிராவையும் வீட்டுல காணலை. அவங்கள தேடிப்பார்த்துட்டுத்தான் போலீஸ் ஸ்டேஷன் கேஸ் கொடுத்திருக்கோம். அதுவும் இல்லாம நம்ம ஆட்கள் நாலா பக்கம் தேடிட்டு இருக்கும் பொழுதுதான் இப்படி ஒரு தகவல் வந்துச்சு. மதுமதி கார்ல கூட்டிட்டு போனதை யாரோ நம்ம ஆட்கள் பார்த்திருக்காங்கன. மதுமதி கூட வாழ்ந்து அவளையும் கர்ப்பம் ஆக்கியிருக்கனா நீ எப்படிப்பட்ட கேவலமான ஆளா இருக்கணும்னு. எங்களுக்கு தெரியும் நீயும் அவளும் சேர்ந்துதான் ஏதோ திட்டம் போட்டு இருக்கீங்க. தயவுசெய்து ஆதிராவையும் மாமாவையும் அவக்கிட்ட சொல்லி விடசொல்லு”என திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தான்.
“மதுமதி ஆதிராவையும் மாமாவையும் கார்ல கூட்டிட்டு போனது உண்மைதானா? ஆமா ஏன் இதைஎன்கிட்ட தகவலா சொல்லலை. என்கிட்டதானே முதல்ல சொல்லிருக்கணும்?”
“கடத்தின உன்கிட்டயே வந்து காப்பாத்துன்னு நிப்பாங்களா என்ன?நீ அந்த மதுமதிக்காக என்ன வேணும்னாலும் செய்வன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன?எங்களையும் சேர்த்து போட்டுத் தள்ளதுக்கு இதுக்குள்ள ப்ளான் பண்ணி தூக்குனாலும் தூக்கிருப்படா. உன்னையெல்லாம் நம்ப முடியாது. அமைச்சர்ன பெரிய புடுங்கியா. உன்னை நானே கொன்றீவேன்டா”என்று ஆத்திரத்தில் ரவீந்திரன் கத்தினான்.
“அட கிறுக்கனுங்களா?அதுசரி என் கூடப்பிறந்தவன்தான நீ. என்னை மாதிரியேதானே இருப்ப. ஒன்னும் சொல்லுறதிக்கில்லை. கொஞ்சம் பொறுமையா இரு நான் பேசுறேன்”என்றவன் உடனே மதுமதிக்கு போன் பண்ணினான்.
அவளது போன் ரிங்காகி கொண்டேயிருந்தது. ஆனால் அந்த பக்கம் இருந்து யாரும் எடுக்கவில்லை.
திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்தவனுக்கு ஏதோ நெருடலாக இருக்கவும்,உடனே ரகுவரனுக்கும் சிவானந்தனுக்கும் போன் பண்ணினான்.
அவனுக்குமே இப்போ பதற்றம் தொற்றிக்கொண்டது. அங்கேமாட்டிக்கொண்டிருப்பது தன் உயிர் ஆதிரா அல்லவா!
அவனது பதற்றத்தைப் பார்த்துதான் ரவீந்திரன் கொஞ்சம் பொறுமையாக நிதானமாக அவனைக் கூர்ந்து கவனித்தான்.
இளந்தீரன் போன் பண்றான் என்றதுமே சிவானந்தன் மெதுவாக போனை எடுத்தார்.
அவர் போனை எடுத்த உடனே இளந்தீரன் சொன்ன வார்த்தைகளில் அப்படியே சிவானந்தன் மிரண்டுவிட்டார்.
இளந்தீரன் போன் என்றதுமே சிவானந்தன் கொஞ்சம் பயத்துடனேதான் எடுத்தார்.ஏனென்றால் மகள் செய்து வைத்திருக்கும் காரியம் அவ்வளவு பெரிய விஷயம் அல்லவா! அதனால் பயந்து கொண்டேதான் போன் எடுத்து காதில் வைத்தார்.
“உன் மகள் உயிரோட இருக்கனும்னா என் பொண்டாட்டியையும் என் மாமனாரையும் எங்க வச்சிருக்கான்னு இப்போ எனக்கு சொல்லுற. இல்லையா உன்னையும் உன் குடும்பத்துல இருக்க மொத்தபேரையும சேர்த்து இப்பவே இன்னைக்கே கொழுத்திடுவேன். இந்த இளந்தீரன் சொன்னால் செய்வான்னு உனக்கு தெரியும்ல. நான் ஒரு விசயதுல இறங்கினேன்ன் அந்த காரியத்தை முடிச்சிட்டுதான் வெளியே வரவேன்னும் உனக்கும் தெரியும்ல. இப்போ சொல்லு என் பொண்டாட்டியை எங்க கொண்டு போய் வச்சிருக்கான்னு இப்போ சொல்லு. நீங்க எல்லோரும் போட்ட நாடகம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா? எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே
தான் உன் மகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் புரியுதா சிவானந்தன். நான் குறிவைச்சிட்டுத்தான் மொத்தமா உங்களுக்கு வலைப்போட்டேன்”என்று அவன் சொல்லும்போது அவன் குரலில் இருந்த அந்த கோபத்தையும் அடக்கப்பட்ட ஆத்திரத்தையும் புரிந்து கொண்ட சிவானந்தன் நடுங்கிவிட்டார்.
“இளந்தீரா அவ ஏதோ பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டா,அவளை தயவு செய்து நீ எதுவும் செய்துடாதே. உன் பொண்டாட்டியையும் உன் மாமனாரையும் நான் பத்திரமா உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாக இரு”என நடுங்கும் குரலில் சிவானந்தன் இளந்தீரனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்ட இளந்தீரனோ “உன்னோட கெஞ்சலையும் கொஞ்சலையும் கேக்குறதுக்கு நான் போன் பண்ணல. நீ நினைக்கிற எனக்கு என் பொண்டாட்டி நகம் கூட உடையாமல் திருப்பி வேணும். என் மாமனாரும் பத்திரமா வேணும் இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு உனக்குத் தெரியும்ல” உறுமினான்.
அவ்வளவுதான் சிவானந்தன் போனை வைத்துவிட்டார். அவர் உடனே ரகுவரனைக் கூப்பிட்டார்.
ரகுவரன் ஓடிவந்தவன் “என்னாச்சு மாமா மதுமதி போன் பண்ணிருந்தாளா?நான் வேணும்னா அங்க போகட்டுமா?”என்று கேட்டு நின்னான்.
“ரகு நீ வேற சும்மா இருடா?அங்க பிரச்சனை நம்ம கையைமீறி போயிட்டிருக்கு. மதுமதி ஆதிராவையும் ஜெயசந்திரனையும் கடத்திட்டுப் போனதை யாரோ பார்த்துட்டாங்க போலிருக்கு. இரண்டுபேரையும் காணலைன்னுஅவங்க குடும்பமே போய் மொத்தமா போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் கொடுத்திருக்காங்கன்னு நமக்கு தகவல் வந்துச்சு. ஆனால் அதுக்குள்ளாக மதுமதி மூலமாக அவங்க கடத்தப்பட்டிருக்காங்கன்னு யாரோ தகவல் சொல்லிருக்காங்க. இப்போதான் இளந்தீரன் எனக்கு போன் பண்ணி மிரட்டுறான். அவங்க இரண்டுபேருக்கும் ஏதாவது ஆச்சுன்னா நம்மளையும் சேர்த்து கொளுத்திருவேன்னு மிரட்டுறான்.எ ன்ன பண்ண நம்ம போட்ட திட்டமெல்லாம் இப்படி வந்து மாட்டிகிட்டு நிக்குதே! அடுத்து என்ன பண்ணலாம்?”என்று கேட்டார்.
“மாமா நான் முதல்லயே இந்த ப்ளான் வேண்டாம்னுதானே சொன்னேன்.அவன் வீட்டுக்குப் போகாத பிரச்சனை பெருசாகும்னு சொன்னேன். உங்க மகதான் அவன் வீட்டுக்குள்ளே போயி பிரச்சனையாக்கி அவங்களை வாழ விடாமல் பண்ணனும் அந்த குடும்பத்தை நான் நாசாம் பண்ணனும்னு நம்மை மீறி போய் நின்னாள். இப்போ இவ்வளவு பெரிய பிரச்சனையாக்கி வச்சிருக்காளே எப்படி இதுல இருந்து தப்பிக்கிறதுன்னு தெரியலையே? அவ இந்தக் கடத்தலை யாருக்கும் தெரியாம பண்ணிருக்கணும் இல்லையா? இல்லையா அப்படியே விஷத்தை வைச்சு அங்கேயே கொன்னுட்டு வந்துருக்கணும்.இப்போ நம்மளுக்கும் சேர்த்து பிரச்சினையை கொண்டு வந்துட்டா பாருங்க. உடனே உங்க மகளுக்குப் போன் பண்ணி அவங்க ரெண்டு பேரையும் விடச்சொல்லுங்க. நான் சொல்லுறதையெல்லாம் அவ எங்க கேட்க்க போறா? பட்டாதான் புத்தி வரும்” என்றவன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
அதற்குள் இளந்தீரன் அவங்க வீட்டு வாசலில் காரோடு வந்து நின்றான். அவனோடு போலீஸ் படையே வந்து நின்றது.
இதுக்குமேல் நம்ம சும்மாயிருந்தா நம்மளையும் தூக்கிட்டுப்போயிடுவாங்க என்று சிவானந்தன் பயந்தார்.
ரகுவரன்தான் வேற வழியின்றி வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் அவனது சட்டையைப் பிடித்து கொத்தாகத் தூக்கி இழுத்து, அவன்கிட்ட எதுவுமே பேசாது,அப்படியே அவனைக் காருக்குள் தூக்கிப்போட்டவன்,தானும் ஏறிக்கொண்டான்.
இப்போது ரகுவரன் பயந்துபோய் இளந்தீரனிடம் கெஞ்சினான்.
“பங்காளி இளந்தீரா!என்னைத் தயவு செய்து மன்னிச்சிடுடா. மதுமதி என்ன தப்பு பண்ணினாலும் அதுக்கு நானும் உடந்தையா இருந்துட்டேன். ஆனால் ஆதிராவையும் உங்க மாமாவையும் நான் கடத்த சொல்லலை. இதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இதை செய்தது அவங்க அப்பாவும் மகளும் மட்டும்தான். தயவு செய்து என்னை விட்டுடு” என்று அவன் காலில் விழாத குறையாக கெஞ்சினான்.
அவன் கெஞ்சிறதை பார்த்த இளந்தீரனோ “ உன்னுடைய மன்னிப்பையும் கெஞ்சலையும், நீ என் காலில் விழுறதையும் ரசிக்கிறதுக்கோ, இல்லை சந்தோசமாகப் பார்க்கிறதுக்கோ உன்னை என் கார்ல் தூக்கிப்போட்டுக் கொண்டுப்போகலை.என் பொண்டாட்டி உன் பொண்டாட்டி எங்க வைச்சிருக்கான்னு உனக்குக் கண்டிப்பா தெரியும். ஆதிராவை மதுமதி எங்க கடத்தி வைச்சிக்கான்னு உனக்கும் உன் மாமனுக்கும் நல்லா தெரியும்னு எனக்கும் தெரியும். இப்போ அந்த இடத்தை சொல்லுற. நீயும் என்கூட வர்ற, அதுக்காக மட்டும்தான் உன்னை என் காருக்குள்ளே ஏத்திருக்கேன். இல்லைன்னா உன்னை இப்பவே கொன்னு, என் பின்னாடி வர்ற வண்டி டயருக்குள்ள தூக்கிப்போட தயங்க மாட்டேன். நசுங்கிடுவா புரியுதா என் பொண்டாடியா எங்க வைச்சிருக்கா? உன் ஆசை காதலி, உன் பொண்டாட்டி அதைச் சொல்லுடா முதல்ல”என்று அவன் கழுத்தில் கத்தியை வைத்தான்.
“அதுவந்து அதுவந்து என்னோட கிராமத்து வீட்டுல கொண்டுபோய் வைச்சிருக்கா பங்காளி. அவளுக்காகத்தான் நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு உனக்குத் தெரியும்ல. அவ ப்ளான் போட்டா நான் பாலோ அப் பண்றேன் அவ்வளவுதான்”என்று சொல்லிமுடிக்கும் முன்பே அவனது கன்னத்தில் பளார் பளீரென்று அடி விழுந்தது.
இளந்தீரன்தான் அவனை அடித்தான்.ரகுவரனுக்கு இப்போது அவனை எதிர்க்க முடியாது. அவன் இப்போ பெரிய பதவியில் இருக்கான். முன்னாடி அவனை ஜெயிலுக்குள்ள அனுப்பின மாதிரி எல்லாம் சுலபமா எதுவும் செய்திடமுடியாது. அதனால் பயந்து பம்மினான்.
“இளந்தீரா!பங்காளி நான் உன் நண்பேன்டா!சத்தியமா உனக்கு எதிரா எதையும் நானா செய்யலைடா!என் காதலிக்காக செய்தேன்டா .அதுதான் என் மதுமதிக்காக செய்தேன். அவள் சொல்லுறதையெல்லாம் செய்தேன். அந்தக் காதல் என் கண்ணை மறைச்சிட்டுடா” என்று உண்மையிலயே வருத்தப்பட்டு சொன்னான்.
அதைக்கேட்டவன் அவனைப் பார்த்துக் காறித் துப்பினான்.
உனக்கு அரசியல்ல பதவி கிடைக்கணும்னு, உன் காதலி கிடைக்கணும்னு, எப்படி எல்லாம் நாடகம் போட்டு இருக்கா உன் காதலியை என்னை காதலிக்கிற மாதிரி நடிக்க வச்சிருக்க இதைவிட வேற கேவலம் உனக்கு வாராதுடா. நீயெல்லாம் என்ன வேலை பார்த்திருக்கத் தெரியுமா கட்டினவளை எனக்குக் கூட்டிக்…. மாமா வேலையை பார்த்திருக்க பரதேசி. துக்கூட பரவாயில்லை. ஆனால் இப்போ ஒன்னு செய்தீங்களே அதெல்லாம் தூஊஊஊஊ சோத்துல உப்புத்தான் போட்டுத் திங்கிறியா என்ன?அந்தாளு பெத்த பொண்ணை என்கூட படுத்தாலும் பரவாயில்லைன்னு அனுப்பி வைச்சான்னா, நே கட்டினவளை ச்சை அசாங்கபுடிச்சவனுங்களா. இன்னும் என்னவெல்லாம் பண்ணியிருக்கீங்களோ தெரியலை. நீங்க எல்லாம் மனுச ஜென்மங்களாடா இப்போ எனக்கு உங்க பழைய கதை எல்லாம் தேவையில்லை. எனக்கு என் பொண்டாட்டி வேணும் அது மட்டும்தான் என் மண்டையில் இருக்கு “என்று சொன்னவன் எப்போடா ரகுவரனின் கிராமத்து வீட்டிற்கு போவம் என காரை அவ்வளவு வேகமாக ஓட்டினான்!
அவனது மனதும் அவனை அறியாமலயே பயந்து நடுங்கியது. ஏனென்றால் மதுமதி தனக்கு பதவி கிடைக்கணும் அப்படின்னா எந்த எல்லைக்கும் செல்லுவாள் என்பது அவனுக்கு தெரியுமே! அதனால் தான் ஆதிரவுக்கு எதுவும் ஆகிடக்கூடாது என்று மனதிற்குள்ளே வேண்டிக்கொண்டிருந்தான்!
அங்கே மதுமதி என்னும் அரக்கியின் பிடியில் இப்போது அவனது தேவதைப்பெண் ஆதிரா மாட்டிக்கொண்டிருக்கிறாளே!