அநாயகா-44
அநாயகா-44
இளந்தீரன் லாயர் சொன்னதைக் கேட்டதும் உடனே மதுமதியோடு ஆதிராவின் வீட்டுக்கு வந்தான்.
அவன் வீட்டுக்குள் வந்ததும் “ஆதிரா! ஆதிரா” என்று கத்தினான்.
அவன் கூடவே மதுமதியும் வீட்டுக்குள் வரைக்கும் வந்தாள்.
அவர்கள் இருவரையும் பார்த்ததும் அங்கேயுள்ளவர்கள் யாரும் கண்டு கொள்ளாது, அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இளந்தீரனை ஒரு மனுஷனாகக்கூட யாரும் மதிக்கவில்லை.
அவனது தன்மானம் அந்த இடத்தில் சீண்டப்பட்டது. ஆனாலும் ஆதிராவிடம் பேச வேண்டிய சூழ்நிலை என்பதால், எதையும் கண்டுக்காது மதுமதியை அங்கயே நிற்க சொல்லிவிட்டு வேகமாக மாடிப்படியேறி அவளது ரூமுக்குள் போக நடந்தான்.
இளந்தீரன் சத்தத்தைக் கேட்டதுமே ஆதிரா அப்படியே பதறியவள் “இவங்க எதுக்கு இப்போ இங்க வந்திருக்காங்க?” என்று நினைத்தவள் வேகமாக ஓடிவந்து பார்த்தாள்.
அங்கே மதுமதி கீழே நின்றிருக்க,இளந்தீரன் மாடிப்படி ஏறி வருவதைக் கண்டாள்.
“இவங்க எப்பவும் திருந்தமாட்டாங்க. இன்னும் இவளோடுதான் சுத்திட்டிருக்காங்களா?” என்று நினைத்தவள் அவன் பக்கத்தில் வருவதற்குள் வேகமாக ஓடிப்போய் ரூமுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.
அதைப்பார்த்தவன் “ஆதிராவா? என்னைப் பார்த்துக் கதவை அடைத்தாள்?” என்று அதிர்ச்சியில் அப்படியே நெட்டி நின்றுவிட்டான்.
அவனை எப்பொழுதும் எல்லா சூழ்நிலையிலும் தாங்கி நின்று அன்பு செலுத்தின அதே ஆதிராதான் இன்று அவனைப் பார்த்ததும் கதவு அடைத்துக் கொண்டாள்.
அவனால் அதைத் தாங்கிக்க முடியாது அப்படியே நின்றுவிட்டான்.
இவா இப்படி விவாகரத்து பண்ணுறதுக்கெல்லாம் அப்ளை பண்ணுவான்னுயோசிக்கவேயில்லை. அதைப்பத்தி கேட்கிறதுக்குத்தான் வந்தான்.
ஆனால் அவள் எதைப்பத்தியும் அவனோடு பேசப் பிடிக்காமல் கதவை அடைச்சிட்டுப்போயிட்டாளே. அடுத்தடுத்துநமக்கு ஷாக்கிற்கு மேல ஷாக்கா கொடுக்கிறாளே! இவள் என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டிருக்கா!என்று கோபப்பட்டவன் வேகமாக போய் கதவை தட்டினான்.
அவளோ சத்தமே கேட்காத மாதிரி காதைப் பொத்திக்கொண்டு படுத்திருந்தாள்.
“ஆதும்மா கதவைத் திறடி. எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு .இப்ப நீ கதவை திறக்கலைன்னா இப்படியே நான் திரும்பி போயிருவேன். அதுக்கப்புறம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஆகிடும். தயவு செய்து நான் சொல்லுறதை கொஞ்சம் புரிஞ்சுக்கோடி. நீ வெளியே வா உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு” என்றவன் கதவை ஓங்கி மிதித்தான்.
ஆனால் அவன் பேசிய எந்த பேச்சுக்கும் ஆதிராவிடம் இருந்து ஒரு வார்த்தை கூட பதிலாக வரவில்லை அவள் தனது முடிவில் தெளிவாக இருந்தாள்.
இதையெல்லாம் கீழே நின்று பார்த்திருந்த மதுமதியை மொத்த குடும்பமும் கோபத்தில் முறைத்து பார்த்தார்கள்.
சங்கவிதான் அவள் பக்கத்தில் வந்தாள்.
‘நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க. உன் புருஷனை விட்டுட்டு அடுத்த புருஷன் கூட சுத்திட்டு இருக்க. உனக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா?- என் தங்கச்சி வாழ்க்கை இப்படி கெடுத்துட்டியே. நீ எல்லாம் நாசமாதான்டி போவ பாரு. ச்ச்சீ கருமம் புடிச்சவள் அடுத்தவ புருஷனுக்கு அலையிறாளுக பாரேன். இதுக்குவேற மாதிரிபவகலாமே” என்று அவளை நேருக்கு நேராக சபித்துக் கொண்டிருந்தாள்.
மதுமதியோ அதையெல்லாம் காதில் வாங்காதவளாக அலட்சியமாக மேலே நின்று ஆதிராவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் இளந்தீனனைத்தான் பார்த்தாள்.
ஆதிராவிடம் இவ்வளவு தூரம் இறங்கி பேசுறவனைப் பார்க்கும் பொழுதே அவளது அடிவயிற்றில் இருந்து அப்படி ஒரு கோபம் வெளியே கிளம்பியது. ஆனாலும் அதையெல்லாம் காண்பிக்காது அமைதியாக அப்படியே நின்றிருந்தாள்.
இளந்திரன் ஆதிரவிடம் கதைவத் திறக்கச்சொல்லிக் கத்திக்கதறினான். கதவைத் தட்டினவன் கோபத்தில் மிதித்தான்.
அவன் எவ்வளவோ சத்தம் போட்டு ஆதிராவை கூப்பிட்டு பார்த்தான். ஆனால் அவள் அசைந்து கொடுக்கவில்லை. எந்த விதத்திலும் கதவை திறக்க கூடாது என்று தனது முடிவில் உறுதியாக இருந்தாள்.
அவனுக்கு ஆதிவை பத்தி சின்ன வயசுலிருந்தே தெரியும் என்பதால் கொஞ்சம் வருத்தப்பட்டான். அஹள் இப்படி கோபத்தில் பிடிவாதம் பிடிக்கிற பொண்ணெல்லாம் இல்லை. எல்லாரையும் அவங்க அவங்க சூழ்நிலைக்குத்தகைந்தவாறு புரிந்துக்கொள்ளக்கூடியவள்.
ஆனால் அவள் தன்னை வேண்டாம் என்று வெறுத்து உள்ளுக்குள்ளே கதவை திறக்காது இருந்ததும் கோபத்தில் மீண்டும் கத்தினான்.
“ஆதிரா இப்போ நீ கதவை திறக்கலைன்னா இதுக்காக நீ பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ. நான் உன்கிட்ட இருந்து மொத்தமா விலகி போய்டுவேன். இதுதான் நான் உனக்கு கடைசி வாய்ப்பாக பேசுகிறேன். ஆதும்மா தயவு செய்து கதவை திறந்து என்கிட்ட பேசு. எதுக்கு நீ இப்போ வக்கீல் நோட்டீஸ் அனுப்புன? நான் உன்னை வேண்டாம்னு சொல்லவே இல்லையே. நீயேதான் சண்டை போட்டுட்டு வந்த. இப்பவும் சொல்றேன் மதுமதி அவளோட பிரச்சினை முடிந்தவுடனே போயிடுவா. ஆனால் காலம் முழுக்க எனக்கு நீதான் எனக்கு வேணும். நீமட்டும்தான் என்கூட இருக்கணும். நீ தான் என் மனைவி தயவு செய்து கதவை திறடி”என்று ரொம்ப நேரமாகக் கெஞ்சினான் கத்தினான் தீட்டினான். அவனால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்தான்.
ஆனால் ஆதிரா அவன் பேசுறதைக் காதுக்கொடுத்து கேட்கவேயில்லை. இப்போவரைக்கும், அந்த நிமிஷம்வரைக்கும், தனது முடிவில் உறுதியாக இருந்ததால் கதவை திறக்கவே இல்லை.
மதுமதியோ மனசுக்குள்ளாக நடைக்கத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.இவ்வளவு தூரம் இந்த இளந்தீரன்கெஞ்சிரதைப் பார்த்து இந்த ஆதிரா மனம் திரும்பி வெளியே வந்துருவாளோ?அப்படியெல்லாம் அவள் வந்திடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தாள்.
அவள் பயந்தது மாதிரி அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றதும் அவளுக்கு அவ்வளவு சந்தோஷமும் நிம்மதியும் வந்தது.
அதற்குள் இளந்தீரனின் சத்தம் கேட்டு ஜெயச்சந்திரன் வெளியே வந்தார்.
‘இளந்தீரா அவளை தொந்தரவு செய்யாத?நீ இப்போ கீழ இறங்கி வா. உன்கிட்ட நிறைய பேச வேண்டியது இருக்கு” என்று அவனை கூப்பிட்டார்.
அவனும் வேறு வழியின்றி அவர்கூப்பிட்டதும் கீழ இறங்கி வந்தான். அவர் ரூமுக்குள் போகவும் அவனும் பின்னாடியே போனான். அதைப்பார்த்த மதுமதியும் அவங்க பின்னாடியே ஜெயச்சந்திரன் ரூம்முக்குள் போனாள்.
அதை பார்த்ததும் ஜெயச்சந்திரன் “ஹேய் சிவானந்தன் மவளே ஒரு கட்சியில் இவ்வளவு பெரிய பாதவாயிலும் பொறுப்பிலும் இருக்கக்கூடிய நீ கொஞ்சம் முன்ன பின்ன யோசிக்க மாட்டியா?உனக்கு அறிவு தெளிவுன்னு ஏதாவது இருக்கா? நானும் என் மருமகனும் குடும்ப காரியங்களையும், எங்க கட்சிக்காரியங்களையும் பத்தி நிறைய விஷயங்கள் பேசுவோம். நீ எதுக்கு இபபோ முந்திரிக்கொட்டை மாதிரி எங்களுக்குள்ள இடையில் வந்து நிக்கிற?வெளியபோ, அங்கப் போய் உட்காரு. நீ ஒன்னும் என் மருமகன் பின்னாடியே வால் பிடிச்சிட்டு வரேவண்டிய அவசியமில்லை.உன்னோட பிரச்சினையிலிருந்து வெளிவரதுக்காக உதவிதான் என் மருமகன் பண்ணிட்டிருக்கான். அதுக்காகத்தான் உன்னை கூட்டிட்டு வந்திருக்கான். நீயே அவனக்கு பிரச்சனையாகிடாதே. உன்னோ லிமிட் எதுவோ அதுக்குள்ள நில்லு. இல்லையா நான் நிற்க வைப்பேன் புரியுதா? இப்போ தயவுசெய்து வெளியே ஹால்ல போய் காத்திரு நாங்க பேசி முடிச்சதும் அவன் வருவான்” என முகத்திற்கு நேராகவே அவளைப் பார்த்து சொல்லிவிட்டார்.
அவளுக்கு ஜெயசந்திரன் பேசும்போது பயம் தொண்டையை அடைத்தது. அவர் எவ்வளவு பெரியா ஆளென்று அவளுக்குத் தெரியுமே. அதனால் அவர் கர்ஜிக்கும் கோபக்குரலில் பேசியதும் பட்டென்று ஒரு அடி பின்னாடி நகர்ந்து நின்றாள்.
அவளைத் திரும்பிப் பார்த்த இளந்தீரனோ “என்னை பயந்துப் பார்த்துட்டு நிக்கிற? அதுதான் மாமா சொல்லுறாங்கல்ல ஹால்ல போய் உட்காரு. நீ வேற எழவு கூட்டாத. உனக்கு உதவி செய்ய வந்துட்டு இப்போ நான்தான் பிரச்சனையில் மாட்டிகிட்டு இருக்கேன் போய் உட்காரு போ. நான் என் மாமாகிட்ட பேசிட்டு வர்றேன்” என்று அவளை வெளியே போகச் சொன்னான்.
இதுக்குமேல இங்க நின்னா மரியாதையாக இருக்காது என்று நினைத்தவள் “ சாரி “என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட்டு அப்படியே வெளியே வந்தவள் அங்கே தன்னையே பார்த்துக் கொண்டின்றிருந்தவர்களை கண்டுக்காது, அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்து போனை எடுத்து அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவளது மனமோ இளந்தீரனும் ஜெயச்சந்திரனும் என்ன பேசிட்டிருப்பாங்க? நம்மளைப் பத்திதான் பேசுறாங்களோ?இளந்தீரன்கிட்ட நம்மளை விரட்டிவிடச்சொல்இருவாங்களோ?அப்படிங்கிறதையே யோசிச்சிட்டு இருந்தது.
“ஒருவேளை இளந்தரன்கிட்ட என்னை வெரட்டி விட சொல்லிட்டா? அவனும் கேட்டு நம்மளை விரட்டிவிட்டுட்டா?அவரோட மகளுக்காக அதை செய்தாலும் செய்வாரு. இதை எப்படித் தடுக்கலாம்?” என்ன பண்ணலாம்? என்று மனதிற்குள் தனித்திட்டமே போட்டுக்கொண்டிருந்தாள்.
ஒருமணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேசினார்கள். ஒரு மணி நேரம் கழித்து இளந்தீரன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். அவனது முகமே சரியில்லை என்பதால் யாரும் எதுவும் கேட்கவில்லை மதுமதியுமே ஒன்றும் சொல்லவில்லை.
அவன் கிளம்பி வெளியே வந்தவன் மதுமதியிடம் திரும்பியவன் “ வா போகலாம் “என்று கூப்பிட்டவன் அவளது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றான்.
அதை பார்த்த மொத்த குடும்பமும் “இவன் எல்லாம் சாகுற வரைக்கும் திருந்தவே மாட்டான்” என்று சபித்தார்கள்.
அவர்கள் இருவரும் கையைப் பிடித்தவாறே காரில் ஏறினார்கள். அது தனது ரூமின் பால்கனியிஸ்நின்று பார்த்த ஆதிராவுக்கு இளந்திரன் மீது மொத்தமாக வெறுப்பு வந்துவிட்டது.
இவங்களை இந்த அத்தானை நான் இனி பார்க்கவேகூடாது. நாங்க இரண்டு மொத்தமா பிரிஞ்சிடும். என் வாழ்க்கையில இனி இளந்தீரன் அப்படிங்கிற ஒருத்தன் இல்லைவேயில்லை என்று மனதுக்குள் இருந்த உறுதியை இப்பொழுது மூளைக்குள் ஏற்றிக் கொண்டாள்.
ஆனாலும் அவளால் முடியவில்லை. அப்படியே ஓடிவந்து கட்டிலில் படுத்து சத்தமாகக் கதறி அழுதாள். அந்தளவுக்கு அவனை ஆதிரா காதலித்தாள், நம்பினாள். அவனோடு வாழ்ந்தாள். இது எதுக்குமே அவன் நியாயம் செய்யவில்லை என்று நினைத்து அழுதாள்.
அவளது கண்ணீர்தான் நெஞ்சை நனைத்தது. அவள் நினைத்த இளந்தீரனின் காதலும் அன்புமில்லை!
அப்படியே தன்னைத்தானே ஒடுக்கி படுத்தவளுக்கு அடுத்து தனது வாழ்க்கையில் என்ன என்ற யோசனைதான் வந்தது.
நம்ம ஏன் அப்பாவோடு அரசியல்ல இணையக்கூடாது. இந்த அத்தானுக்கு எதிராக அரசியல்ல களம் காணக்கூடாது என்று யோசனை வந்தது.
ஏன் மொத்தமாக இளந்தீரனுக்கு எதிராக நிற்க்ககூடாது. இந்த அத்தானுக்கு முன்னாடி ஏன் நம்ம தோத்துப்போகணும்!என்னை ஏமாத்தி எம்.எல்.ஏவாகினவரு, அமைச்சர் பதவியையும் வாங்கிட்டு அந்த மதுமதியோடு சுத்தும்போது, நான் ஏன் ஒடுங்கிப்பகணும்?என்று எழுந்தவள் நேராக ஜெயச்சந்திரன் முன்பாக போய் நின்றாள்.
“என்னச்சுமா?”என்று அவர் வாஞ்சையோடு கேட்டதும்தான் உடைந்துவிட்டாள்.
அவரிடம் எல்லாத்தையும் சொல்லி சொல்லி அழுதவள் “ நானும் அரசியல்ல இறங்குறேன். அந்த இளந்நீரனுக்கு எதிரா நிக்கிறேன். நானும் நம்ம கட்சியில் இணையிறேன்”என்று சொன்னாள்.
அதைக்கேட்ட ஜெயச்சந்திரன் “சரிம்மா நாளையில் இருந்து இரண்டுபேரும் ஒன்னாவே நம்ம கட்சி ஆபிஸிற்குப்போறோம். அடுத்த எலக்க்ஷன்ல உன்னையே நிக்க வைக்கிறேன். இளந்தீரனுக்கு சீட்டுக் கிடைக்காமல் செய்திடுவோம்”என்று அவளது கையைப்பிடித்து உறுதியாகச் சொன்னார்.
சரிப்பா என்று தலையாட்டியவளுக்கு இன்னும் இளந்தீரன் மீதான கோபம் போகவில்லை!அது அவளது நெஞ்சுக்குள்ளயே நீறிக்கொண்டிருந்தது.