அநாயகா-40

அநாயகா-40

அநாயகா-40

இங்கே இளந்தீரனும் ஆதிராவும் தங்களது வெற்றியை காதலின் வெற்றியாக கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

அதே நேரம் சிவானந்தன் வீட்டிலோ மதுமதியின் அறை முழுவதும் மொத்தமாக அலங்கோலமாகக் கிடந்தது. 

ரகுவரனும் ஒரு பக்கமும் மதுமதி ஒரு பக்கமுமா உட்கார்ந்திருந்தார்கள்.

இருவருக்குள்ளும் பயங்கரமாக சண்டை நடந்திருந்தது.

மதுமதி முகம் எல்லாம் வீங்கிருந்தது.‌ அவளோட ட்ரஸ் கிழிந்து தொங்கியது.

“இதுக்கு மேல என்னால முடியாது நம்ம பிரிஞ்சிடுவோம். நான் மாமாவோட பேசிடுறேன். உனக்கும் எனக்கும் செட் ஆகாது. இந்த வாழ்க்கையை இப்பவே முடிச்சுக்கலாம்” என்று ரகுவரன் கத்தினான்.

மதுமதியுமே “இதுக்கு மேல நான் உன்கூட வாழ மாட்டேன். ஒன்னு நீ இந்த நின்னு ஜெயிச்சிருக்கணும், இல்ல எங்கப்பா நின்னு ஜெயிச்சிருக்கானும். ஆனால் அதுதான் உங்க இரண்டு பேராலையும்ம் இத்தனை வருஷத்துல முடியாமல் போச்சுதே.அந்தப்பக்கம் ஆதிரா நிக்கிற்ன்னுதான் என்னை நிக்க சொன்னீங்க. எனக்கும் ஆசை இருந்துச்சு நின்னேன். இப்போ அந்த பரதேசி நின்னு ஜெயிச்சிட்டான்னு எதுக்கு எல்லாரும் என்கிட்ட வந்து நிக்கிறீங்க. உங்க கட்சி இலட்சணம் அப்படியிருக்கு. அதனால்தான் ஓட்டு எல்லாம் நக்கிட்டு போயிருச்சு. அதுக்கு ஏன்டா என்கிட்ட சண்டைக்கு வர்றீங்க. இனி எத்தனை வருஷமானாலும் ஜெயச்சந்திரனும் அவன் குடும்பமும் இருக்கிற வரைக்கும் உங்களால ஒன்னும் புடுங்க முடியாதுடா. இப்படித்தாண்டா தோத்துபோவீங்க போய் சாவுங்கடா”என்று திட்டினாள்.

“இங்கப்பாரு அதிகமா பேசுற. இதுக்கு மேல பேசினேன்னு வையேன் நானே உன்னை கொன்றுவேன்டி”

“நானும் உன்னை என் புருஷன்னு பார்க்க மாட்டேன்டான உன்னை கொலை பண்ணிடுவேன்டா” என்று அவளும் சண்டைக்கு நின்றாள்.

இவர்கள் போடும் சண்டையைப் பார்த்த சிவானந்தனும் மரகதமும் வேதனையோடு உட்கார்ந்திருந்தார்கள். 

ஏற்கனவே தேர்தல்ல மோசமா தோற்றுப் போயாச்சு. இப்போ மகனும் மருமகளும் சண்டை போட்டுட்டு இருக்காங்க இதுக்கு மேல வாழ்க்கையில என்ன கஷ்டம் வந்திடப் போகுது என்றுதான் தலையில் கையை வைத்துக் கொண்டு அமைதியாக அவர்களது சண்டைக்குள் போகாது உட்கார்ந்திருந்தார்கள். 

ஆனால் ரகுவரனோ இதுக்குமேல இவக்கூட வாழக்கூடாது என்று முடிவே எடுத்துவிட்டான்.

அதனால் நேரடியாகவே மதுமதியிடம் சொல்லிவிட்டான்.

“இங்க பாரு நான் இப்பவே இந்த வீட்டைவிட்டுக் கிளம்பி போறேன். உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது. நீயாச்சு உங்க அப்பாவாச்சு நான் கட்சியில வேற ஏதாவது பண்ணி மேல வந்திடுறேன். உங்க சங்காத்தமே வேண்டாம். நான் போறேன் தாயே.உனக்கு என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ” என்று அங்கிருந்து வெளியே வந்தான். 

ஆனால் மதுமதியோ அதுக்கெல்லாம் பயப்படாமல் “அப்படியெல்லாம் உன் இஷ்டத்துக்கு போகமுடியாது. என் கழுத்துல ஆசை ஆசையா தாலிகட்டினல்ல. இவ்வளவு நாளும் உன் பொண்டாட்டியா இருக்கிற நான் என்ன பைத்தியக்காரியா? இல்ல ஒன்னுமில்லாத உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைச்ச எங்கப்பா பைத்தியக்காரரா? அப்படியெல்லாம் உன்னை விடமுடியாது. நீ என்கூடதான் வாழ்ந்தாகணும். அப்படி எங்களை மீறி நீ வெளியே போகணும்னு நினைச்சன்னா போ. நீ போனதுக்கு அப்புறம் என்ன பண்ணனும் நானும் எங்க்ப்பாவும் என்னை பண்ணனுமோ அதை பார்த்துப்போம்” என்று அவனுக்குப் பயப்படாமல் தெனாவெட்டாக பதிலுக்கு ரகுவரனை எச்சரித்தாள்.

“நீ என்ன வேணாலும் புரிஞ்சிக்கோ, எதுவேணும்னாலும் செஞ்சிக்க. இனி உனக்கு எனக்கும் செட் ஆகாதுன்னா ஆகாதுதான். நீதான் தேர்தல தோத்துப்போயிட்டியே இதுக்கு மேல உன்கூட வாழ்ந்தா என்ன வாழாமல் போனால் என்ன? எனக்கு என்னோட அரசியல் என்னோட வாழ்க்கை முக்கியம். உங்க அப்பா சொன்னதுக்காகத்தான் உன் கழுத்துல தாலி கட்டினேன். இனி நான் உன்கூட வாழமாட்டேன்” என்று அவனுமே தெனாவெட்டாக பதில் சொன்னான்.

இப்போ இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டு அடிதடியில் இறங்கி இருந்தார்கள். 

ரகுவரனுக்குதான் தேர்தலில் நிற்கணும் என்று ஆசை சிவானந்தனுக்கு அவரு எம்.எல்.ஏகாணும்னு ஆசை. இவங்க இரண்டுபேரும் போட்டி போட்டனர். இறுதியாக மதிமதியை நிற்கவைத்து இப்பொழுது மோசமாக தோற்று நிற்கிறார்கள். 

அதனால் ஒருத்தர் மேல் ஒருத்தர் உள்ளக் கோபத்தை இப்பொழுது வெளிப்படையாக காட்டிக் கொண்டார்கள். 

மதுமதி சண்டை போட்டதுனால உடனே ரகுவரன் தஎட இவீட்டை விட்டு போறேன் என்று போய்விட்டான். 

சிவானந்தனும் மரகதமும் அவனை போகாதே என்று தடுக்கவில்லை.

அதிலே அவர்கள் எண்ணம் புரிந்து விட்டது மகளுக்கு கூஜா தூக்கத்தான் நம்மளை கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க போலிருக்கு. உண்மையிலே நம்ம மேல பாசமெல்லாம் இவங்களுக்குக் கிடையாது. இப்படிபட்டவங்களுக்குத்தான் இத்தனை நாளும் நம்ம நாயா பேயா ஓடி சேவகம் செய்திருகேன் என்று கோபம் வந்தது. அதனால் யாரையும் திரும்பி பார்க்காமலே அவனோட ஊருக்கு போய்விட்டான். 

அவனுக்கு அம்மா அப்பா கிடையாது. அங்கே அவங்க வீடு மட்டும்தான் இப்போ இருக்கு . அந்த வீட்டுக்கு இப்போ கோபத்தில் போய்விட்டான்

ஆனாலும் அவனுக்கு மனசு நிறைய இடறலாகவே இருந்தது. நம்ம மாமாக்கூட எதுக்கு போற? இங்க இரு அப்படின்னு சொல்லலையே. அப்போ அவங்க மகள்தானே அவங்களுக்கு முக்கியமா இருக்கு. அவங்க மகளும் நானும் சண்டைப்போட்டா மகளுக்காக சப்போர்ட் பண்ணுவாரா? நமக்காக சப்போர்ட் பண்ண வரமாட்டாரா? அப்போ இத்தனை வருஷமா தாய்மாமான்னு அவருக்காக என்னெல்லமோ செய்தனே அதுயெல்லாம் மறந்திட்டாங்களே. நன்றியில்லாதவங்கதானே என்றுதான் யோசனை உட்கார்ந்திருந்தான்.

அடுத்து என்ன செய்ய? அரசியல் தவிற நமக்கு வேற எதுவும் தெரியாது. அந்த கட்சியில்தான் நம்ம இருக்கணும்.நாளைக்குப் பார்க்கலாம் திரும்ப கூப்பிட்டா போவோம். இப்போதைக்கு மதுமதிக்கூட வாழ முடியாது. அப்போ நான் மதுமதி கூட வாழலைன்னா இந்த அரசியல் வாழ்க்கையை மொத்தமா முடிஞ்சு போயிருமோ? இதுக்கு என்ன பண்ணலாம்?” என்று அவன் தனியாக யோசிக்க ஆரம்பித்தான். 

ரகுவரன் தன்னை விட்டுப்போவான் என்று எதிர்பாக்காத மதுமதி வெளியே ஓடிவந்தாள்.

அவன் அங்க எங்கேயும் இல்லையென்றதும் அப்படியே சோர்ந்துப்போய் உட்கார்ந்தாள்.

சிவானந்தனோ அவளையே பார்த்தார். ஆனால் அவக்கிட்ட எதுவுமே பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

அதைப்பார்த்தவள் “ இப்போ என்ன? நீங்களும் என்னைத்தான் குறை சொல்லப் போறீங்க? அப்படித்தானே அதுதான் நீங்க பார்க்கிற பார்வையிலயே தெரியுதே”என்று கோபத்தில் அவரிடமும் கத்தினாள்.

“நான் உன்கிட்ட எதுவுமே பேசலையே. உன்னைப் பத்தி குறையெதுக்கு சொல்லப்போறேன்?””

“ஆனா நீங்க இப்படி அமைதியா உட்க்கார்ந்திருக்கீங்களே” என்று அவரெடக்கூடவும் சண்டையைத் தொடங்கினாள்.

ஏற்கனவே அவள் இளந்தீரன்கிட்ட தோத்துப்போன கோபத்திலும்,விரக்தியிலும் இருக்கா. இப்பொ போய் அவக்கிட்ட பேசினா பிரச்சனை பெருசாகுப் எனு நினைத்தவர், எதுவும் பேசாது அப்படியே அங்கிருந்து எழுந்து போய்விட்டார்.

அவரைப் போகவிடாது வழியை மறித்து மதுமதி “அப்பா நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க. நீங்கதானே அத்தானை எனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சீங்க. இப்போ என்கூட சண்டை போட்டுட்டு போயிட்டாரு. நீங்களும் என் மேல குற்றம் சொல்ற மாதிரி உட்கார்ந்திருக்கீங்க. இப்போ நான் அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க” என்று கேட்டவள் கையைக்கட்டிக்கொண்டு பதில் சொல்லுங்க என்பதுபோன்று நின்றாள்.

“ரகுவரன் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? எல்லாமே உன்னால மட்டும்தான் நடந்துச்சு. உன்னாலதான் இப்ப நாங்க தோத்து போயிட்டோம். நீ நிக்காமல் இருந்தால் கொஞ்சமாவது மரியாதையாவது கிடைத்திருக்கும்.‌‌ இப்போ மொத்தமா எல்லாம் போச்சு.காட்சிகாரன் கிட்டையும் பதில் சொல்லணும்? எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம் இப்போ எதுவும் பேச வேண்டாம்” என்றுவிட்டு அவளிடம் இருந்து விலகி போய்விட்டார். 

மதுமதிக்கு அதை தாங்கிக் கொள்ள முடியாது அப்படியே உடைந்து அந்த இடத்திலேயே விழுந்து அழுதாள்.

மரகதம் அவள் பக்கத்தில் வந்து அவளை தூக்கிவிட்டவர் “நான் நீ இளந்தீரன்கிட்ட பழகும் போதே சொன்னேன் ஆரம்பத்துல இது சரிவராதுன்னு சொன்னேன். ஆனா நீதான் அதைக் கேட்கல. இப்போ பாரு எல்லா பிரச்சனையும் மொத்தமா வந்து உனக்கு முன்னாடி நிக்குது. அடுத்து என்ன பண்ணலாம்னு நீ யோசிச்சிருக்க. ரகுவரனும் கோபத்துல வீட்டை விட்டுவிட்டு கிளம்பி போயிட்டான். இனி அவனை கூப்பிட்டு வரணும்னா அவனா மனசு வைச்சு வரணும். இல்ல ந்ங்கபோய் உனக்காக மன்னிப்பு கேட்டு கூப்பிட்டு வந்தால்தான் உண்டு.‌ எதுக்காக நீ இப்படி எல்லார் கூடையும் சண்டை போட்டுட்டு நிற்கிற அப்படி சண்டை போட்டு நீ என்னத்த சாதிக்க போற. உன்னோட ஆசையெல்லாம் விபரீதமாகத்தான் போய் முடியும்னு ஆரம்பத்துலயே சொன்னேன் நீ கேட்டியா. பொம்பளை இப்படி பேராசையெல்லாம் படக்கூடாது. ”

“நான் எங்கம்மா சண்டை போட்டேன் நான் சும்மாதானே இருக்கே.ன் நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை ஏத்தி விட்டுட்டு, இப்போ நான் செய்தது சரியில்லைன்னு என் மேலயே பலியைத் தூக்கிப்போடுறீங்க. இதெல்லாம் நல்லாயில்லை‌ சொல்லிட்டேன்”

“உன்னை யாரும் குறை சொல்லல உன் மேல யாரும் பழியை தூக்கி போடல. ஆனா இதுக்கு முழுமுதல் காரணம் நீதான். நீ மட்டும்தான். இனி இதை நீ நினைச்சாக்கூட சரி பண்ண முடியாது. இனி வாழ்க்கை என்ன வச்சிருக்கோ அதை ஏத்துக்கிட்டு வாழ பாரு. நானே நாளைக்குப்போய் மருமகனை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர்றேன். உன் வாழ்க்கையை இனியாவது சமாதானமா வாழு” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். 

“என்னடா இது ஆளாளுக்கு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறாங்க என்ன நினைச்சிட்டு இருக்காங்க?” என மதீமதி தனக்குத்தானே குழம்பிப்போனாள்.

ரகுவரன் மதுமதி வாழ்க்கை தேர்தலுக்கு பின்பு குழப்பத்துடன் சண்டையுடனும் போய்க்கொண்டிருக்க, ஆதிரா இளந்தீரனின் வாழ்க்கைத் தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் இன்னும் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்கள். 

அதிலும் இளந்தீரனக்கு பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாக கிடைத்திருந்தது. 

முதன் முதலாக எம்.எல்.ஏ ஆனதோடு அமைச்சர் பதவியும் கிடைத்ததும் இளந்தீரனுக்கு தலைகால் புரியவில்லை. 

சங்கவி கர்ப்பமாக இருப்பதால் மொத்தக் குடும்பத்துக்கும் இரட்டிப்பு சந்தோசம். ரவிக்குத்தான் ரொம்ப நிம்மதியாக இருந்தது. எங்க இந்த விசயத்துல தம்பி ஓவர்டேக் பண்ணி போயிடுவானோன்னு பயந்திருந்தான். நல்லவேளையாக நீண்ட நாள் காத்திருப்புக்குப்பின் அவன் எதிர்பார்த்ததை கடவுள் குடுத்திருந்தார்.

இப்போதெல்லாம் அந்த வீடு அமைச்சர் வீடு என்று எல்லோருக்கும் தெரிய வந்திருந்தது.

அதைப்பார்த்த மகேஷ்வரிதான் ஒரு நாள் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து பேசினார்.

நான் கல்யாணம் முடிஞ்சு வந்ததிலிருந்து இந்த வீடு எம்.எல்.ஏ ஜெயச்நதிரனோட வீடாகத்தான் இருந்துச்சு. இப்போ எல்லோரும் அமைச்சர் வீடுன்னு சொல்லும்போது உள்ளுக்குள்ள சுருக்குன்னு வலிக்கது. இந்த வீடு எம்.எல்.ஏ ஜெயசந்திரனோட வீட்கவே இருக்கட்டும். அதுக்காக நான் சின்னமருமகன் மேல பொறாமைபடுறேன்னு இல்ல. இனி அவரும் அரசியல்ல இன்னும் மேல வருவாருல்ல. அப்போ அவருக்குன்னு ஒரு தனிய அடையாளம் வேணும்ல. அதுக்காக நாங்க வாங்கியிருக்கிற வீட்டுக்கு இளந்தீரனையும் ஆதிராவையும் குடிவைக்கலாம்னு இருக்கோம். அது அவளோட கல்யாணத்துக்கு சீதனமா குடுக்க வாங்கினவீடுதான் இந்த வீடு எங்க காலத்துக்கு அப்புறம் ரவிக்கும் சங்கவிக்கும் எழுதி வைச்சிடுவோம். உங்க அபிப்ராயத்தைச் சொல்லுங்க”என்று பேசி முடித்தவரை ஆதிராவே ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

ஜெயசந்திரனுக்கு அவள் இப்படியொரு முடிவு எடுப்பாள் என்று முன்னாடியே தெரிந்நிருக்கும்போல, அதனால் அவளது கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு சிரித்தார்.

சங்கரிதான் “அதெப்படி மகேஷ்வரி பிள்ளைங்களை தனியா அனுப்ப முடியும்”

“தனியா அனுப்பமுடியலைன்னா நீங்களும்கூட போங்க. அவங்களுக்குத் துணையா இருக்கும்”

“அதுசரி என்னை இத்தனை வருஷத்துக்கு அப்புறம் விரட்டிவிடுறியா” என்ன என்று கோபப்பட்டார்.

“ஐய்யோ இந்த வயசுல மாமியார் மருமக சண்டையா?” என்று சங்கவி அலுத்துக்கொண்டாள்.

இளந்தீரன் சிரித்துக்கொண்டே “சரிங்கத்தை நீங்க சொல்லுறமாதிரியே நாங்க அந்த வீட்டுக்கே போயிடுறோம். அங்கப்போனால் என் பொண்டாட்டி தைரியமா இது என் புருஷன் எம்.எல்.ஏ இளந்தீரனுடைய வீடுன்னும், என் புருஷன் அமைச்சர்னும் அங்கபோய் தைரியாம உங்களை மாதிரியே சொல்லுவாள்லே. அதுபோதும்”என்றவன் புருவத்தை ஏற்மியிறக்கியவாறு ஆதிராவைப் பார்த்து எப்படி என்று கேட்டான்.

அவன் சொன்னதும்தான் ஆதிராவுக்கே ‘அம்மா ஏன் நம்மளே தனிக்குடித்தனம் போகச்சொல்லுறாங்க’ என்பதற்கான நியாயமான காரணமே புரிந்தது.

அதனால் “ அம்மாஆ நாங்க அங்கயே தனிக்குடித்தனம்போறோம்மா”என்று சம்மதம் சொல்லிவிட்டாள்.

அப்படி அவங்க இரண்டுபேரும் பேசி முடிவெடுத்து ஒரு மாசத்துக்குள்ளாகவே அந்த வீட்டை அவங்களுக்குன்னு ரெடி பண்ணி பால்காய்ச்சி குடிபோயிட்டாங்க. அவங்கக்கூட துணைக்கு கவிதாவும் விஜயராஜூம் அவங்க வீட்டைக் காலிபண்ணிட்டு இங்க வந்துட்டாங்க.

ரவி ஜெயசந்திரனுக்கு எப்போதும்போல பக்கபலமாக நின்றானென்றால், இப்போ ஆதிரா இளந்தீரனுக்கு பீ.ஏவாகி எல்லாத்துக்கும் அவள்தான் அவனுக்காக நிற்கிறாள்.

இவர்களது வாழ்க்கை எந்தவிதமான பிரச்சனை இல்லாமல் நல்லபடியாக தான் போய்க்கொண்டிருந்தது. 

ஒருத்தரோட வாழ்க்கை நல்லபடியாக போனாதான் கடவுளுக்கும் பொறுக்காது, அந்த விதிக்கும் பொறுக்காதே!

அவர்களுடைய மொத்த வாழ்க்கையும் கெடுப்பதற்கு என்று அன்று இரவு இளந்தீரனுக்கு ஒரு போன் கால் வந்தது. 

அர்த்த இராத்திரி போன் வந்ததும் எடுத்து பேசினான்.

அந்தப் பக்கம் சொன்ன செய்தியை கேட்டு அப்படியே அதிர்ச்சியாகிவிட்டான்.

அவன் அடுத்து என்ன பேச என்று தெரியாது “சரி நான் வர்றேன்” என்று போன வைத்து விட்டான். 

அவனது போன் சத்தத்திலே தூக்கத்திலிருந்து முழித்துவிட்ட ஆதிரா அவன் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அவனோ ஆதிராவிடம் எதுவுமே பேசாது உடனே எழுந்து அவசர அவசரமாக சட்டை எடுத்து போட்டுவிட்டு வெளியே கிளம்பினான். 

ஆதிராவோ அவன் ஏதாவது சொல்லிட்டுப்போவான் என்று எதிர்பார்த்திருக்க, அவன் எந்தவித பதிலும் சொல்லாமல் அப்படியே வேகமாக போய்விட்டான். 

அவன் இவ்வளவு அவசரமாக போவதைக்கூட அவள் ஒன்றும் தப்பாக நினைக்கவில்லை. ஆனால் தன்னிடம் சொல்லாமல் போறாங்க என்று தான் யோசித்துக்கொண்டேயிருந்தாள்.

ஏதோ சரியில்லையே! இத்தனை நாள் வாழ்க்கையில் இப்படி என்னை கண்டுக்காம போனதே இல்லையே! இதுல யாருக்கு என்ன ஆச்சு? யாரு போன்ல என யோசித்து குழம்பி கொண்டிந்திருந்தாள்.

அவ மனசு ஏதோ சரியில்லை என்று திட்டமாக சொல்லி படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. 

அவளது மனசு சொன்னது போலவே இளந்தீரன் திரும்பி வரும்போது தேவையில்லாத ஒருத்தரை வீட்டுக்கு அழைத்து கூட்டிட்டு வந்திருந்தான்.

அதை பார்த்ததுமே மொத்தமாக அப்படியே அதிர்ந்தவள் இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கு, வாழ்ந்த வாழ்க்கையும் ஒன்னுமேயில்லாமல் எல்லாமே முடிஞ்சு போச்சே என்ற மனநிலைக்கு ஆதிரா வந்துவிட்டாள்!

அவளது அதிர்ந்த முகமே அவளின் மனநிலையை இளந்தீரனுக்குமே உணர்ந்தியிருந்தது!