கசக்குமோ நேரடி அமேசான் கதை

Kasa

கசக்குமோ நேரடி அமேசான் கதை

கசக்குமோ மல்கம்

நாளை முத‌ல்

1 கசக்குமோ மல்கம்??

மல்கம் _ தேன் 

அம்மாடி கற்பகம் என்ற அழைப்புக்கு உடனே பதில் வந்தது ... 

"அண்ணன் "

பிறந்து நான்கு மாதமே ஆன குழந்தையை கையில் வைத்துக் கொண்டு தன் அண்ணன் அழைப்புக்கு மங்களகரமான முகத்தோடு திரும்பினாள் கற்பகம்

கை நிறைய மருமகனுக்கு பொம்மையோடு வந்து நின்றார் சதாசிவம் ..

"அண்ணே இப்பதான் வந்தியா ??"

" ஆமா தங்கச்சி, இப்பதான் ஊர் பஞ்சாயத்து முடிச்சுட்டு வந்தேன், மாப்பிள்ளை எங்கம்மா???தங்கை தலையை கோதியவர் வீட்டுக்குள் தங்கை கணவனை கண்ணால் தேடிட...

"வேலை விஷயமா டவுன் வரைக்கும் போய் இருக்காரு அண்ணே"

"ஓஓஓ இந்தா, மருமகனுக்காக எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன்"

" என்ன அண்ணன் நீ , டெய்லி ஏதாவது வாங்கிட்டு வரணுமா, சாப்பாடு வைக்கவா??? என்ற தன் தந்தையை சிரித்தபடி பார்த்த சதாசிவம் 

"ஒன்னும் வேண்டாம் மாப்பிள்ளை எப்போ வருவார் ??

"விடியற்காலைதான் வருவேன்னு சொன்னாரு" என்று வெள்ளந்தியாக சிரித்துவிட்டு கற்பகம் தன் மகனை தூக்கிக்கொண்டு படுக்கையறைக்குள் போக.. அவளை பார்த்தபடி ரத்தம் கக்கிய கண்ணோடு நின்றார் சதாசிவம் 

எப்பா அரசியல் ஆசை உனக்கு எதுக்கு , கற்பகம் புருஷனுக்கு ஊர்ல நல்ல மரியாதை செல்வாக்கு இருக்கு பேசாம அவரை அரசியல்ல இறக்கி விடு ஜெயிப்பார் , நீ வீணா ஆசை படாத என்று காலை ஊர் பெரியவர்கள் சொன்னது இன்னும் அவர் காதை சிவந்து ஆட வைக்க 

தங்கச்சியை கட்டி கொடுத்து மச்சான் பணத்துல பந்தா காட்டாதப்பா தகப்பன் சொத்து மச்சான் சொத்து நீ என்ன சம்பாரிச்ச என்று சிரித்த தோழர்கள் பேச்சு எல்லாம் சற்றே மனிதனாக இருந்த அவனை அரக்கனாக மாற்றியே விட்டது விளைவு 

என் அரசியல் வாழ்க்கை என் பணக்கார வாழ்க்கைக்கு முதல் பலி என் தங்கை குடும்பம் என்று சிரித்த சதாசிவம் சூழ்ச்சி வலையில் சிக்கினார் கற்பகம் ... 

நடு இரவு வீட்டு தோட்டதுக்காரன் கற்பகம் றைக்குள் பதுங்கி படுத்துக் கொண்டான்.... 

காலை , அய்யோ மாப்பிள்ளை, என் தங்கச்சி இப்படி உங்க மானத்தை வாங்குவான்னு நினைச்சு கூட பாக்கலையே இந்த குடும்பத்தில பிறந்த இவளுக்கு இப்படி ஒரு புத்தி எப்படி வந்தது.. ஆம்பள சுகத்துக்கு அலைஞ்சிருக்காளே என்று இரவு தங்கை தங்கை என பினாத்திய அண்ணன் சதாசிவம் இப்போது தங்கையை தூற்றி தலையில் அடித்துக் கொண்டு அழ ...

சட்டை இல்லாமல் அவளின் முதுகின் பின்னால் ஒளியும் தோட்டக்காரனை காமாட்சி தன் குழந்தையை நெஞ்சோடு பிடித்துக் கொண்டு பயந்து போய் பார்த்தாள்..

என்ன நடந்தது என்ன நடக்கிறது எப்படி ஏன் என்று முளை யோசிக்கும் முன் ,சதாசிவம் தங்கை பின்னே நின்ற அவன் உச்சி முடியை பிடித்து இழுத்து கன்னம் கன்னமாக அடித்து 

"என்னடா இதெல்லாம் என்க 

"முதலாளி அம்மாதான் ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கு பிறகு வான்னு சொல்லி கூப்பிட்டாங்க, ஆரம்பித்துல நான் வேண்டாம்னு தான் சொன்னேன் .. ஆனா அவங்க அவங்க ஆசையா அழைக்கவும் என்னால மீற முடியாம , தப்புதான் தப்புதான் , என்ன மன்னிச்சிடுங்க அய்யா ,உங்க உப்பை தின்னுட்டு உங்க படுக்கையில பங்கு போட்டது மிகப்பெரிய பாலம்தான், இனிமே இப்படி பண்ண மாட்டேன் அய்யா மன்னிசுடுங்க" என்று அந்த வீட்டின் தோட்டக்காரன் கற்பகம் கணவன் காலில் ஓடி போய் விழ 

செத்த உடலோடு தன் மனைவி கறபகத்தின் கண்ணைப் பார்த்துக் கொண்டிருந்த வீரய்யன் கால்கள் வேக வேகமாக மொட்டை மாடியை நோக்கி நடக்க ஆரம்பிக்க

அய்யோ மச்சான் ஆஆஆ என்ற அண்ணன் பதட்ட குரலில் திடுக்கிட்டு முழித்த கற்பகம் கணவன் விறுவிறுவென நடந்து போகவும் தன்னை விட்டு தூரம் போகும் கணவனை என்ன சொல்லி சமாதானம் செய்ய என்று தெரியாத கற்பகமோ,  

ஐயோ அத்தான் நான் எதுவுமே செய்யல எனக்கு எதுவுமே தெரியாது என்று கணவன் பின்னால் கை குழந்தையை தூக்கிக் கொண்டு கற்பகம் ஓட ... 

அத்தான் நான் என்ற மனைவி பேச்சை கை நீட்டி தடுத்த வீரய்யா.. 

"இன்னைக்கி சரக்கு எடுக்க போகலன்னு சொன்னதுக்கு நீ என்ன சொன்ன..

"இன்னைக்கு வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு போயிட்டு வாங்கன்னு நான்தான் அத்தான் உங்களை கட்டாயப்படுத்தினேன் ., ஆனா நான் தன் நியாயத்தை கேட்க கூடாது விட்டவர் 

இதுக்குத்தானா என்றவர் ஒற்றை வார்த்தையில் அவள் உடைந்து போய் நின்ற வேளை.. அந்த மனிதன் மானம் போய் இனி வாழ்ந்து எதற்கு என்று மாடியிலிருந்து குதித்து விட.. 

அய்யோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ரத்தம் சிதற உயிர் விட்டுக் கிடந்த தன் கணவனை வெறித்து கண்ணோடு கற்பகம் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்க..

முடிந்தது அவள் மகிழ்ச்சி , சந்தோசம் ... பழியை சுமந்து வாழ்வதா? இல்லை இடையில் இருக்கும் மகனை வளர்க்க வாழவா? மகன் தாயின் முகத்தையே பார்க்க அவளும் வெறித்த கண்ணோடு மகனை பார்த்தாள் .... 

சூழ்ச்சியில் வீழ்த்தப்பட்டு சாக வேண்டுமா தன்னை நம்பாது உயிரை விட்ட கணவனுக்காக சாக வேண்டுமா?  

மாட்டேன் என் கூட வாழந்த அவருக்கு இந்த கற்பகம் அப்படி இல்லைன்னு தெரியாதா? கண்ணீரை இழுத்து கொண்டாலும் உள்ளம் உடைந்து கிடந்தது...

சிந்திய கண்ணீரை விட சிந்தாத கண்ணீருக்கு விலை அதிகம் என்று சூழ்ச்சிகாரன் அறியவில்லை போலும் ..அவள் சிந்தாக்கண்ணீர் இடம் பார்த்து குறி பார்த்து தாக்க அம்பாக தயார் ஆகும்... 

தன் தங்கை வாழ்க்கையை பறித்து அவள் நிம்மதியை குலைத்தும், இது போதாது என்று நினைத்தானோ சதாசிவம்....  

தன் தங்கையின் கொண்டை முடியை பிடித்து இழுத்து நடுவீதியில் கொண்டு வந்து தள்ளி, 

விபச்சாரம் செஞ்சது என் கூட பிறந்தவளாவே இருந்தாலும் ஊர் வழக்கப்படி அவ காலை வெட்டுங்க என்று கட்டளை போட கருணை இல்லா மனிதக்கூட்டமும் தவறு செய்யா ஒரு பெண்ணின் காலை வெட்டி வீச 

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று கற்பகம் அலற அலற கால்கள் ரெண்டும் வெட்டப்பட்டது.. தன் தாயின் ரத்தம் முகத்தில் தெறிக்க ஊரே காறித்துப்பும் தன் தாயின் முடியை தேடி ஓடியது குழந்தை, கால்கள் இழந்த அவளோ வலியில் நடுங்கிய கையோடு பிள்ளையை அணைத்து கொண்டாள் ... வைராக்கியமும் பழி உணர்வும் சொல்லி கொடுப்பது இல்லை சில மாந்தரும், சூழ்நிலையும் கற்று கொடுத்து விடுகிறது ... 

அவரை இழுத்து கழுதையின் மீது கருப்பு வெள்ளை புள்ளி குத்தி விபச்சாரி என்ற போர்டை அவள் கழுத்தில் தொங்க போட்டு ஊர்வலம் நடத்த . வெறித்த கண்ணோடு அவளை காறி உமிழும் ஊரை பார்த்து கொண்டிருந்தாள் கற்பகம்..

இனிமேல் இவள் இந்த வீட்டிற்குள் வரக்கூடாது என்று அவள் பேரில் கணவன் வாங்கி குவித்தகு சொத்து முழுவதையும் கையெழுத்து வாங்கி கொண்டு ... கற்பகமும் , கைக்குழந்தையையும் ஊருக்கு எல்லையில் கொண்டு போய் தள்ள .... 

வஞ்சம் எல்லாம் தானாய் உருவாவது இல்லை விதைக்கப்படுவது தானே, இங்கே விதிக்கப்பட்டது பெரும் வஞ்சம்!!   

இதோ 30 வருடங்கள் கழிந்து போனது..

சென்னையின் அந்த சந்தடியான தெருவில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது ..நெட்ட நடு உருவம் நெற்றியில் அழகிய குங்குமம் நடிகனாகி இருந்தால் டாப் நடிகனாகி இருப்பான்.. அரசியல்வாதியாக இருந்தால் அரசியலில் ஜாம்பவான் ஆகியிருப்பான் படித்திருந்தால் கலெக்டர் ஆகி இருப்பான், அத்தனை ராஜஅம்சமும் பொருந்திய அழகன் அவன் ..

காக்கிச்சட்டையை ஆட்டோவில் தொங்க போட்டுவிட்டு, தன் சட்டை பேண்ட் எல்லாவற்றையும் தடவி இரவு முழுவதும் செய்த சவாரியில் வந்த காசை பெருமூச்சு விட்டு எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினான் அவன்,.,, 

அம்மா 

இருட்டு அறையில் வீல் சேர் ஒன்று உருண்டு வந்தது .. கால்கள் இரண்டும் ஊனமான காமாட்சி வீல்சேரில் அந்த இருட்டு அறையில் இருந்து வெளியே வந்தார் ... 

மகனை கண்டு மெலிதான புன்னகை .. அதில் நிம்மதி இல்லை, ஏதோ அடக்கப்பட்ட வெறி.. தன் மகனின் ஓங்கி உயர்ந்த உயரத்தை பார்க்கும் பொழுதெல்லாம் உதட்டில் ஒரு விரக்தி.. அதையும் தாண்டி ஒரு மகிழ்ச்சி,

இவனை வைத்து தான் தான் போட்ட சபதத்தை நிறைவேற்ற போகிறார் தாயின் சபதத்தை நிறைவேற்ற பிறந்த மகன் இவன் அல்லவா?? 

திரள் சேத்திரன் 

வயது முப்பது !!!

வா திரள் ..

ம்மா , அவ படிக்கிறதுக்கு இந்த ஊர் காலேஜ்ல சேர்ந்திருக்கா 

நமக்கான நேரம் தொடங்கிருச்சுன்னு சொல்லு "

"ம்ம்   

"என்ன விபச்சாரின்னு சொல்லி, ஊரை விட்டு அடிச்சு விரட்டினான்ல அவனுக்கு பதிலுக்கு பதில் நான் செய்யணும் திரள் அம்மா சொல்லு என்று கற்று கொடுத்ததை விட இந்த அம்மா மீது விழுந்த களங்கத்தை துடைக்கணும் பழிக்கு பழி வாங்கணும் திரள்" என்று சொல்லி கொடுத்தது தான் அதிகம் ....  

"அதுக்காக தானம்மா காத்து இருக்கேன்...உன் மேல போட்ட சபதம்... நீ பட்ட அவமானம் அவன் பொண்ணும் பட்டு நிக்கணும், ஒரு பொண்ணுக்கு அவன் செஞ்சதை அவன் பொண்ணுக்கு நான் குறையாம செய்யணும் எ"ன்று கண்கள் சிவக்க நின்ற மகனை பெருமையாக பார்த்தார் கற்பகம் ..

உன் சபதம் நிறைவேறும் குரு , என்னோட இத்தனை வருச வலிக்கு மருந்து அவனும் , அவன் பொண்ணும் அதே அவமானத்தை சுமந்து நிக்கணும் ... 

"செய்றேன் ம்மா பழி வாங்கும் வெறியில் இருவர் கண்ணும் பளபளத்து நின்றது ...

பிரபல கல்லூரி முன்னே வந்து எம்பி சதாசிவத்தின் வெளிநாட்டு கார் நின்றது 

ம்ம் இறங்கு என்றதும் தந்தையின் குரலுக்கு பூனைக்குட்டி ஒன்று மிரண்ட கண்ணோடு கீழே இறங்கியது... 

அவள் நிவாரணா சதாசிவம்!! 

சூழ்ச்சி கொண்ட தகப்பனின் சூலில் பிறந்த வெண்தாமரை அவள் , சூழ்ச்சியும் கொடுரமும் தெரியாத சேற்றில் மலர்ந்த செந்தாமரை அவள் , அரக்கன் குகையில் பிறந்த அன்பு புத்திரி அவள் !!

அய்யகோ!!இவர்கள் ஆடுபுலி ஆட்டத்தில் பழியாக போவதும் தேனிலும் இனிய இவள் அல்லவா!!

நீ அடம் பிடிச்சதுக்காகதான் இங்க கொண்டு வந்து சேர்க்கல, இந்த சேர்மனுக்கு தான் உன்ன பேசி இருக்கேன், அந்த பையன பிரியபட்டார்... அதான் உன்ன அந்த காலேஜ் விட்டு இங்க கொண்டு வந்து சேர்க்கிறேன் ... அவளோ சென்னையை சுற்றி சுற்றி ஆசையாக பார்த்தாள் ..தாயை போல அழகு தாயை போல அடக்கம் தாயை போல நல்லவள்....

உன் அத்தையை காலை உடைச்சி விபச்சாரி பட்டம் கொடுத்து விரட்டி விட்டுட்டார் உன் அப்பா, அந்த பாவம் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் போகாது நிவி ... என்று தாய் வழிதான் தனக்கு ஒரு அத்தை உண்டு என்றே அறிந்தாள்... 

"இப்ப அவங்க எங்க இருக்காங்க?  

"சென்னையிலன்னு நினைக்கிறேன், கடவுள் கிட்ட தினமும் வேண்டும் போது கேட்கிறது ஒன்னுதான் மறுபடியும் அவங்க உன் அப்பா கண்ணுல மாட்ட கூடாது ... அன்னைக்கு உன் அப்பன் பணக்காரன் இன்னைக்கு பணத்துக்காக கொலையும் செய்யும் எம்பி.. நீயும் பார்த்து நடந்துக்கம்மா நிவி. "

தன் தகப்பன் செய்த பாவத்தின் கூலி அவள் சுமக்க போவது தெரியாது எங்காவது அத்தையை கண்டுவிட மாட்டோமா? என்று பழைய கற்பகம் படம் ஒன்றை சுருட்டி பெட்டிக்குள் வைத்து கொண்டு இங்கே வந்தாள்...

என் மரியாதை உன் கையில புரியுதா , மரியாதை போச்சு உன்ன குழி தோண்டி புதைச்சுடுவேன் என்ற தகப்பனுக்கு நாலா பக்கமும் மான்விழிகள் மலர்த்தி தலையாட்டினாள் நிவாரணா !!

அந்த கல்லூரி வாசலில் வந்து நின்றது திரள் சேத்திரன் ஆட்டோ... அந்த கல்லூரி பார்க்கும் போது அவன் மனம் ரம்பம் கொண்டு அறுப்பட்டது 

அண்ணன் சாப்பிட்டு பத்து நாள் ஆகுது அம்மாவுக்கு கால் இல்லை, அம்மா பசியா கிடக்குது காசு இருந்தா கொடுங்க அண்ணன் என்று ஆறு வயது பிள்ளையாக கையை ஏந்தி இதே இடத்தில் பிச்சை எடுக்க நின்றதை எங்கனம் மறந்து விடுவான் 

தள்ளுடா அழுக்கு பயலே என்று அவனை சிலர் எட்டி உதைக்க ...

அய்யோ என் புள்ள என்று கால்கள் இல்லாது தவழ்ந்து தவழ்ந்து வந்து தன் மகனை வாரி அணைத்து கொண்ட அன்னை கண்ணீரை துடைத்து விட்ட அந்த நாளை மறக்க முடியாது மூச்சு திணறினான் .. 

அம்மா நான் பிச்சை எடுத்தாவது உனக்கு சாப்பாடு தர்றேன் நீ அழாதம்மா, நான் உன்ன பார்த்துக்கிறேன் "

"ம்ஹூம் பட்னியா கிடந்தாலும் பரவாயில்லைய்யா எவன் கையையும் எதிர்பார்க்காத " என்று முந்தானை சேலையை கிழித்து எடுத்த கற்பகம்  

ஷூ பாலிஸ் போடணுமா தம்பி, என்று கத்தி கத்தி போகும் மாணவர்களை கத்தி கத்தி அழைத்த தாயின் பாசப்போராட்டம் ஒவ்வொரு நாளும் கண்டவன் ஆயிற்றே 

அன்று தன் தாய் உட்காந்து இருந்து ஷூ பாலிஷ் போட்ட அந்த கல்லை குனிந்து தடவி பார்த்தவன் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுக்க 

ம்ஹூம் நீ பட்ட வேதனைக்கு என் கண்ணீர் பரிசு இல்லேம்மா அவன் வடிக்கணும்... மக படுற பாட்டை பார்த்து அவன் வடிக்கணும் ... மனுசனா இருந்தா என்னால இந்த காரியத்தை எப்பவும் பண்ண முடியாது உனக்காக மிருகம் ஆக போறேன், அவளை வேட்டை ஆடுற மிருகம் ஆக போறேன்.. நீ வடிச்ச கண்ணீருக்கு வட்டி போட்டு கண்ணீரை வாங்குறேன் ... 

அவன் அப்பன் செஞ்ச தப்புக்கு மக என்ன பண்ணுவான்னு மனுச குணம் சொல்லுது... ஆனா மிருக குணம் என்ன சொல்லுது தெரியுமா? உன் பண ஆசைக்கு நாங்க என்னடா பாவம் பண்ணினோம்.... என் அப்பனை கொன்னு என் அம்மாவை விபச்சாரியா சித்திரித்து காலை உடைச்சு, என்ன பசியும் பட்னியுமா இத்தனை வருடம் அலைய வச்ச அவனுக்கு இரக்கம் பார்க்கவே செய்யாது... அவன் செஞ்சது சரின்னா நீ செய்ய போறது சரிதான்னு சொல்லுது ... மனிதாபிமானம் கொண்ட இருதயத்தை தன் தாய் பல வருடம் உட்கார முடியாது முடமாக கிடந்து பிறர் கால் பிடித்து ஷூ துடைத்த அந்த கல்லில் வைத்தவன் ... அந்த கல்லுக்கு ஒத்த கடினத்தை தன் இதயத்தில் எங்கும் நிரப்பி கொண்டு சதாசிவம் காரை வெறித்து பார்த்து கொண்டு நின்றான் திரள் ..அவன் பார்வை கூட்டத்தில் தனித்து நின்ற தங்க நிற மாமன் மகளை பல் நரநரக்க பார்த்தது..

அவனின் முப்பது வருட வலிக்கு ஈடுகட்ட போவது அவளின் சொற்ப காலத்து வலி அவ்வளவே !!

இனி அவன் எடுத்த சபதம் மட்டுமே வெல்லும் !! 

தேன் கசப்பாகுமா??

தேனும் வஞ்சத்தால் கசக்கும் !!

நம் புதிய சேனலில் தினமும் வரும் 

தொடர்கதைகள் ஒரு சேனலிலும் முழுக்கத்கதை ஒரு சேனலிலும் வரும் 

சோ ரெண்டு சேனலையும் subscribe பண்ணி வச்சிக்கோங்க மச்சீஸ்

புது சேனல் லிங்க் இதோ 

https://youtube.com/@sujagalaxy?si=cS04KExekox0I91r