ஆலங்குயிலின் ஆலாபனை-7
ஆலாபனை-7
முரளி காரில் வீட்டுக்கு வரும்வரைக்கும் துளசியின் கல்யாண பத்திரிக்கையை கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டேதான் வந்தான்.
முத்துமாரியும் பெருமாளும் அப்படியே அவங்க ஊருக்குப்போய்விட்டார்கள்.
முரளி அந்தப் பத்திரிக்கையே பார்த்துக்கொண்டு வருவதைக் கவனித்த கோதை அப்படியே அந்தப் பத்திரிக்கையை அவனது கையாலிருந்து பிடுங்கினார்.
“என்னல அதுல என்ன நடிகை படமா போட்டிருக்கு இப்படியே வாயைப்பிளந்துப் பார்த்திட்டிருக்க. அதுதான் அவளுக்கும் அந்த அறிவழகனுக்கும் கல்யாணம்னு அன்னைக்கே தெரியுமே. ஏதோ இன்னைக்குத்தான் புதுசா தெரிஞ்சிருக்கிங்கிற மாதிரியே உட்கார்ந்து உத்து உத்துப் பார்த்திட்டிருக்க. லேய் ராகவா இவனுக்கு எதையும் எடுத்து சொல்லமாட்டியா?”என்று காரை ஓட்டிக்கொண்டிருந்த ராகவனையும் சேர்த்து திட்டினார்.
“அத்தை நீங்க சொல்லியே உங்க மவன் கேட்கல. நான் சொல்லியா கேட்கப்போறான். அவங்க கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள் இருக்கு. அதுக்குள்ள இவனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்து அதே நாள்ல கல்யாணத்தை முடிச்சுவிடுங்க. அப்போதான் வேற நினைப்பேயில்லாமல் சம்சாரியா மாறி குடும்பம் நடத்துவான்”
அதைக்கேட்டதும் முரளியோ “என் காலுக்கு தோதாதான் இருக்க பார்த்துக்க,அப்படியே எட்டிட்டு மிதிச்சம்னா எட்டடி பறந்துபோய் விழுவ. கூட்டாளின்னுலாம் பாக்கமாட்டேன்”என்றவன் மெதுவாக எழுந்தான்.
தன்னை மிதிக்கத்தான் எழுந்திருக்கான் என்று ராகவனும் பயந்து எழுந்துவிட்டான்.
“அடச்சை உட்காருல. உன்னை அடிக்கவா எழும்பினேன்?நான் எங்கயேவாது போறேன்.காரை நிறுத்துல காரை ஓட்டிக்கிட்டே டேன்ஸ் ஆடுத பாரு.உன்னையெல்லாம் கார் ஓட்ட சொன்ன எங்கப்பாவை சொல்லணும்”என்றான்.
அதைக்கேட்டதும் ராகவன் காரை நிறுத்திவிட்டான்.
அதைப்பார்த்த சமுத்திரம்தான் “எனக்கு மட்டும் கார் ஓட்டத் செரிஞ்சிருந்தா இவனுங்க இரண்டுபேரையும் நடுரோட்டுலயே மிதிச்சு தள்ளிட்டு நானும் எம்பொண்டாட்டியும் காரை எடுத்துட்டு ஊருபோய் சேர்ந்திருப்போம். இரண்டுபேரும் பேசாம இருக்கீங்களா எப்படி?இல்லைன்னா நான் இறங்கி வேற பாஸ் எதுவும் வந்துச்சுன்னா ஊருக்குப் போயிடுவேன். ஆனால் உங்களை ஊருப்பக்கம் வரவிடமாட்டேன்”என்று கத்தினதில் இரண்டுபேரும் அமைதியாக வந்தனர்.
ராகவன் இப்போது திரும்பி முரளியைப் பார்த்தான். அவனோ இதுக்குமேல எதுவும் பேசவேண்டாம் என்று கண்ணைக்காட்டினான். அதைப்புரிந்துக்கொண்ட ராகவன் அமைதியாக காரை ஓட்டினான்.
வீட்டுக்கு வந்ததும் கோதை முரளியின் கையில் இருந்த கல்யாண பத்திரிக்கையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு சாமி படத்துக்கு முன்னாடி வைத்துவிட்டு போய்விட்டார்.
“என்ன ராகவா இந்த கோதைக்கிட்ட ஒரு மாத்தம் தெரியுதே. துளசி கல்யாண கார்டை கொண்டு எங்க வைச்சிட்டுப் போகுதுபாரு. தம்பி மவன்னு பாசம் பொத்துக்கிட்டு வந்துட்டோ. அப்போ நம்ம என்ன செஞ்சாலும் எதிர்ப்பு வருமே. இதுக்கு என்ன முடிவெடுக்கன்னு தெரியலையே?”
“ஆமா பார்த்தியா?அத்தை கார்டைக் கொண்டு பத்திரமா சாமிக்கு முன்னாடி வைச்சிட்டுப் போறாங்களே. துளசி அறிவழகன் கல்யாணத்துக்கு சமுத்திரமும் கோதையும் ஜோடியா போயிட்டு வர்றதுக்கு திட்டம்போட்டுட்டாங்களோ?”
“துளசியை எனக்கு ஜோடி சேர்த்து வைங்கன்னு நான் கதறிட்டிருக்கேன். இவங்க இரண்டுபேரும் அவா கல்யாணத்துக்கு போக ப்ளான் பக்காவா போடுறாங்கல. இது நடக்கக்கூடாது”
“எது அத்தையும் மாமாவும் கல்யாணத்துக்கு போறதா?”
“அடகூறுகெட்டவனே அதில்லடா துளசி அறிவு கல்யாணத்தைச் சொல்லுறேன்”
“நீ இப்படி சொல்லிட்டேயிரு.அங்க அவங்க இரண்டுபேரும் கல்யாணத்தை முடிச்சிட்டு ஹனிமூனுக்குப் போகப்போறாங்க”
“மயித்துல போவாங்க. எப்படி போறாங்கன்னு நானும் பாக்கேன்”
“நீ பாக்கமட்டும்தான் லாயக்கு இப்படியே பேசிட்டே இரு”
“ராகவா உன்னைக் கொன்னுட்டு கொலை கேஸ்ல என்னை உள்ளப்போக வைச்சிடாத. ஓடிரு”
“க்கும் உண்மையை சொன்னா யாருக்குத்தான் பிடிக்கும்?நான் வீட்டுக்குப் போறேன்”
“போய் தொலை இந்த பக்கம் வந்திராத”
“நீயும் ராகவா மனசுசரியில்லை தண்ணியடிக்கலாம் வான்னு கூப்ட்றாத”என்றவன் எழுந்து போய்விட்டான்.
முரளிக்கோ மனசெல்லாம் பிசைஞ்சு ஏதோ செய்ய, அப்படியே திரும்பி சாமிபோட்டோ முன்னாடி இருந்த கல்யாண பத்திரிக்கையை வெறித்துப் பார்த்தான். இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா என்ன செய்யமுடியும் முரளி?
துளசி அறிவழகன் கல்யாணத்துக்காக இரண்டு வீட்டுலயும் பந்தல் போட்டாச்சு, ஊருக்கெல்லாம் பத்திரிக்கை கொடுத்திட்டாங்க. பூங்கொடி வீட்டுக்கும் கொடுத்திருந்ததால் பூங்கொடியும் துளசி கல்யாணத்துக்குப் போக புதுப்புடவை வேணும்னு அவங்கப்பாக்கிட்ட கேட்டிருந்தாள்.
அவரோ அடுத்து உன் கல்யாணத்தை சீக்கிரம் வைப்போம்ல,எதுக்கு இப்போ புதுத்துணியெல்லாம் வாங்கி செலவு வைப்பானேன். ஏற்கனவே இருக்கிற பட்டுச்சேலையைக் கட்டிட்டுப்போன்னு சொல்லிவிட்டார்.
சொர்ணம்தான் அதெப்படி என் பொண்ணு பழசை அவக்கல்யாணத்துக்கு போட்டுட்டுப் போகணுமா?பூங்கொடிக்கு நல்லதா ஒரு பட்டுச்சேலை எடுத்திருவோம்னு திருநெல்வேலி போய் எடுத்து தைக்கக்கொடுத்திருக்கிறாள். அவளுக்கும் ஒரே சந்தோசம்தான். எதிர்த்த எதிர்த்த வீடுங்கிறதுனால அடிக்கடி போய் துளசியைப் பார்த்துட்டும் வந்திருவாள்.
துளசியைத்தான் இவங்க வீட்டுக்கு பவானி அனுப்புறதில்லை.கல்யாணத்தை வைச்சிக்கிட்டு அடுத்த வீட்டுக்கெல்லாம் போகக்கூடாதுன்னு கட்டுப்பாடு போட்டு வைச்சிருந்தாள்.
அறிவழகனும் ஊருக்கு வர்றதுக்கு கிளம்பிட்டேன் என்று போனில் தகவல் சொல்லிவிட, இரண்டு வீட்டுலயும் அவனுக்காக காத்திருந்தனர்.
அறிவழகன் ஊருக்கு வருகின்ற அன்னைக்கு துளசி அதிகாலையிலே எழுந்தவள் வேகவேகமாக குளிச்சிட்டு,கலர் கோலப்பொடி எல்லாத்தையும் எடுத்து ஒரு வொயர் கூடையில வச்சிட்டு அப்படியே வெளிய கூடத்துக்கு வந்தாள்.
“ஏய் துளசி அஞ்சு மணி இருட்டுல எந்திருச்சு என்ன செய்றடி?கையிலவேற கூடயை எடுத்துட்டு கிளம்பி நிக்க?ஏற்கனவே புதுப்பொண்ணு, கல்யாணம் முடியப்போறவன்னு பூவைச்சாச்சு. இப்போ வெளியே போனா பூ வாசத்துக்கு ஏதாவது உன் பின்னாடி வந்திரப்போவுது?எங்க போற?”என்று கேட்டுக்கொண்டே அவள் பக்கத்துல வந்து பவானி நின்னாள்.
“கூடையில கலர்பொடி வைச்சிருக்கேன் கோலம்போட”
“ஏய் கிறுக்கியாடி நீ. இப்படி ஐஞ்சு மணிக்கு இந்த இருட்டுல எங்க போற? அதுவும் கையில கலர் பொடியெல்லாம் எடுத்துட்டு போறியே கோவில்லயும் திருவிழா ஒன்றும் கிடையாதே எங்கடி போற?”
“ஏம்மா போகும்போதே எங்க போறன்னு கேட்காதம்மா. அம்மாச்சி வீட்டுக்குதான்போறேன். இன்னைக்கு மாமா வர்றாங்கள்ல, அந்த முருகம்மா வேலைக்கு வரதுக்கு நேராவுமே அதுதான் மாமா வரதுக்குள்ள போய் அப்படியே வீட்டு முத்தத்தைப் பெருக்கிக் கோலம் போட்டுட்டு வந்திரலாம்னு கிளம்புனேன்”
“நீ வந்து கோலம்போடுன்னு காந்திமதி சொல்லுச்சா என்ன?”
“ம்ம்ம்” என்று தலையை வேகமாக ஆட்டினாள்.
“அதுசரி உனக்கும் உங்க ஆச்சிக்கும் வேலையே இல்ல. எப்போ பாரு அவனுக்கு சேவகம் பண்றதே பொழப்பா வைச்சிருக்கீங்க. என்னடி அவன் என்ன விருந்தாளியாவா வர்றான். அவன் வீட்டுக்கு அவன் வரான் அதுக்கு எதுக்குடி இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுதீங்க ரெண்டு பேரும். இன்னும் ஐஞ்சு நாள்ல அங்கதானடி போகப்போற அப்போ இப்படி எந்திரிச்சு கோலத்தைப்போடு. இப்போ போவாண்டாம். இந்தா கல்யாணத்தை வைச்சிட்டு உன்னை இந்த குத்திருட்டுல ஒத்தையில அனுப்பி வைக்கவா என்ன?உள்ள போடி”என்று பவானி திட்டினாள்.
“ஏம்மா போகும்போதே இப்படி எதாவது சொல்லுதியே?நானும் அப்படியே மாமாவைப் பார்த்துட்டு வருவேன்ல. மாமா வேற நேத்து எனக்கு போன் பண்ணும்போது என்னை பார்க்க வருவியா துளசின்னு கேட்டாங்க தெரியுமா. அதுதான் போறேன்”என்று சொல்லிவிட்டு முகத்தை சோகமாக வைத்தாள்.
“அதுசரி அவனும் இப்போ உன் சொல்லுக்குத்தான் ஆடுதான் போல. இனி நான் சொன்னா மட்டும் அப்படியே கேட்டுட்டு அங்க போகாம இருந்துருவியா என்ன?”
“அதெப்படி இருப்பேன்”
“அதானே பார்த்தேன். நீயாவது என் பேச்சைக் கேக்கதாவது. இரு உங்கப்பாவைக் கொண்டுவிடச்சொல்லுறேன்”
“உனக்கே இது நியாயமா இருக்கா பவானி. அடுத்த தெருவில் இருக்க அம்மாச்சி வீட்டுக்கு போறதுக்கு எனக்கு துணைக்கு ஆளா அப்பாவை இப்போ எழுப்பி அனுப்பி விடுவியாக்கும், போம்மா நீ வேற. இந்தா ரெண்டு எடுத்து நடந்தா அம்மாச்சி வாசலுக்குள்ளயே போயிருவேன். அப்பாவை எழுப்பவேண்டாம்மா” என்றவள் கூடையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“ஏன்டி நான் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாதுன்னு நீ கங்கனம் கட்டிட்டு அலைவியா? இவ்வளவு கும்மிருட்டா இருக்கு நீ எப்படி போவ? கழுத்துல வேற இவ்வளவு பெரிய செயினையுப் ஆட்டிட்டு போட்டுட்டு போறியே.யாராவது கள்ளன் கிள்ளன் வந்து அத்துட்டுப் போனா என்னடி பண்ணுவ?”
“அது சரி உன் கவலை உனக்கு. இந்த செயினை எவனாது பிடுங்கிட்டு போயிருவான்னுதான் இவ்வளவு அக்கறையா பேசுதியோ. அப்போ என்னைப் பத்தி உனக்கு கவலையில்லை. எப்போடா கல்யாணம் பண்ணிட்டுபோவான்னு காத்திருக்க. இது சரியில்ல பவானி”
“நீ காலையில என்கிட்டயிருந்து அடிவாங்காம போக மாட்டேன்னு நினைக்கேன். உன் வாய் ரொம்ப நீளுது துளசி”
“போம்மா உம்புள்ளை உன்னை மாதிரிதானே இருப்பேன். அப்படித்தான பேசுவேன்”
“அதுசரி. கவனமா போ நான் இங்க இருந்து தெரு முக்குத் திரும்புறவரைக்கும் பார்த்திட்டே நிப்பேன் விளங்குதா”
“ம்ம்ம்” என்றவள் செருப்பைப் போட்டுவிட்டு கேட்டைத் திறந்து வேக வேகமாக நடந்தாள். அதற்குள் அங்கே பால் மாடுகளை பண்ணைக்கு பக்கத்துல கொண்டுபோக ஓட்டிட்டுப்போய்கொண்டிருந்தார்கள்.
பவானிக்கு ஊருக்குள்ள யாரும் வந்து எதுவும் செய்திடமாட்டாங்க என்ற நம்பிக்கை இருந்தாலும், அடுத்தவாரத்துல கல்யாணத்தை வைச்சிக்கிட்டு இப்படி இவா அங்க இங்கன்னு போறதை நினைத்துதான் பயந்தாள்.
ஐஞ்சு மணிக்கு மேலென்னாலே டீக்கடைக்குப் பெகதுக்கும், பால் கறக்க, பண்ணைக்குப்போகன்னு ஆள் நடமாட்டம் இருக்கும்தான். ஆனாலும் பெத்தவளுக்கு பயம் இருக்கத்தானே செய்யும்!
பவானியும் வீட்டிலிருந்து இறங்கி கேட்டுக்கு வந்தவள், மகள் போவதையே பின்னாடியிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
துளசியும் பின்னாடி பார்த்து அவங்கம்மாவிடம் வீட்டுக்குள்ள போம்மா என்று சைகை காட்டிவிட்டு தெருமுனையில் திரும்பினாள்.
அறிவழகன் இன்னைக்குக்தான் இந்தியா வந்து இறங்குகிறான் என்பதால் இரவு முழுவதும் தூங்காமல் முழித்திருந்தவள் இப்போ விடிஞ்சும் விடியாத இந்த இருட்டுல அவங்க அம்மாச்சி வீட்டுக்குப் போகிறாள்.
அவள் தெருமுனை திரும்புறவரைக்கும் பார்த்துக் கொண்டிருந்த பவானி, அந்த தெருமுனை திரும்பி தனது கண்ணை விட்டு மறைந்ததும் வீட்டுக்குள்ளே போய்விட்டாள்.
துளசி அம்மாச்சி வீட்டுக்கு இருட்டில் போற அப்படிங்கிறதுல வேகமாக நடந்து கொண்டிருக்க எதிரில் வந்த உருவத்தையோ வண்டியையோ கவனிக்கவில்லை.
இப்போது விறு விறுவென்று போய்க்கொண்டிருக்கும் அவளது கையை யாரோ பிடித்து இழுக்கவும் துளசி பயந்து “ஐயோ பேய்” என்று அலறினாள்.
“ஆமாடி ஆமா என்னைப் பார்த்தா உனக்கு இப்போ பேய் மாதிரிதான்டி இருக்கும். இன்னைக்கு உங்க மாமா வாரான்னு ரொம்ப ஓவரா பண்ணிட்டிருக்கடி. ஊரு முழுக்கவும் என் மாமா வர்றான் மாமா வர்றான்னு பீத்திட்டு திரியுறடி. எங்களையெல்லாம் பார்த்தால் எப்படிடி தெரியுது?”என்று கோபத்தில் அவளது கையைப் பிடித்து தன் பக்கத்தில் இழுத்தான் முரளி.
அவனது குரலைக்கேட்டு ஆளைப் பார்த்ததும் “ நீதானா?” என்று பயமில்லாது நின்றாள்.
“என்னடி அப்படி பாக்க?”
அவன் என்னடி என்று சொன்னதும் முறைத்தவள், அவனிடமிருந்து விலக நினைத்து தனது கையை இழுத்தாள்.
“என்னடி இப்படி முறைக்க?நீங்க முறைச்சா நாங்க பயப்படணுமோ? உன் மாமான்காரன் வர்றான்ங்கிற திமிரும் தெனாவெட்டுமா?அவனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போறாங்கிறதுனால என்னை எகத்தாளத்துல என்னைப் பார்க்கியோ?"
" ஆமா அதுக்கு இப்போ என்னங்குற?" என்று நேரடியாகவே கேட்டாள்.
" இருடி அவன் எப்படி உன்னைக் கட்டிக்கிறான்னு நானும் பார்க்கேன். எனக்குத்தான்டி நீ முதல்ல உரிமையுள்ளவ. மொயவு எதுக்குடி அவனைக் கட்டிக்கணும்னு ஆசைப்பட்ட?”
“உரிமை இருக்குங்குங்கிறதுக்காக உன்னையெல்லாம் கட்டிக்கமுடியாது. என் மனசுக்கு யாரைப் புடிச்சிருக்கோ அவங்களதான் கட்டிக்க முடியும் உன்னை எல்லாம் கட்டிக்கிட்டு வாழ முடியாது. நான் சின்ன வயசுலயிருந்தே என் மாமாவைத்தான் விரும்புறேன். ”என வெடுக்கென்று பேசியவள், அவனிடமிருந்து தன் கையை உருவியவள்ஃ முகத்தை திருப்பிக் கொண்டு நடக்க முயன்றாள்.
ஆனால் முரளியோ அவளது கையை மீண்டும் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் நிறுத்தினான்.
“ஏய் விடுல கையை. அத்தை மவன்னுலாம் பார்க்கமாட்டேன். இப்பவே கத்தி ஊரைக்கூட்டிருவேன். பொறவு உனக்குத்தான் பிரச்சனையாகிடும். நீ என் கையைப்பிடிச்சு இழுத்தன்னு தெரிஞ்சா என்னைக் கட்டிக்கப்போற என் மாமாவுக்குத்தான் அசிங்கமாயிடும். அதுதான் அமைதியா இருக்கேன். கையைவிடுல”என்று கோபத்தில் சொன்னாள்.
“ஏய் இங்க பாரு ரொம்ப ஓவரா பேசாத வாயை உடச்சிடுவேன் பார்த்துக்க. இத்தணுன்டு குள்ளக் கத்திரிக்கா பாதிரி இருந்துட்டு உனக்கு மூத்தவனான என்னை வாலபோலன்னு பேசுத. என்னை பத்தி என்னடி நினைச்சுட்டிருக்க? என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு உன்னை இப்பவே தூக்கிட்டு போய் என்ன வேணாலும் செய்யமுடியும்டி. அப்படி செய்தா எவன் என்னை கேட்கமுடியும். என் வீட்டுக்கு இப்பவே தூக்கிட்டு போயிருவேன் பாக்குறியா பாக்குறியாடி” என்று வண்டில இருந்து இறங்கமுயன்றான்.
அதைக் கேட்டதும் துளசியின் மனதிற்குள் லேசாக பயம் வந்தாலும் அதை அவனிடம் காட்டிக்காது அவனது கையில் இருந்து தனது கையை இழுத்தவள் “கையவிடு மச்சான். எனக்கும் மாமாவுக்கும் இன்னும் ஐஞ்சு நாள்ல கல்யாணம்னு எல்லா வேலையும் நடந்திட்டிருக்கு இப்போ வந்து பிரச்சனை பண்ணுறீங்களே. இது நல்லதுக்கில்லை.அதுதான் ஏற்கனவே எங்கப்பா எல்லாத்தையும் பேசிமுடிச்சிட்டாங்களே.அறிவழகனுக்கு தான் துளசியை கட்டிக் கொடுக்கப் போறேன்னு தீர்க்கமா பேசி முடிச்சதுக்கு அப்புறம் எதுக்கு நீங்க என்கிட்ட வந்து வம்பிழுத்திட்டிருக்கீங்க?” என்று கொஞ்சம் மரியாதையோடும், கொஞ்சம் சீற்றத்தோடு பேசினாள்.
அவள் கோபப்படுவதை ரசனையோடு பார்த்தவன் “உங்க அப்பா அதுதான் என் மாமன் பேசி சமாதானப்படுத்திட்டாரு அப்படிங்கறதுக்காக நான் சும்மா போக முடியாதே. எனக்கு துளசியைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுது. அதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு வந்தா கண்டிப்பா தவற விடமாட்டேன் ஞாபகம் வச்சுக்கோ உங்க மாமா வர்றான்னு துள்ளிட்டு திரியாத என்ன?” என்று சொன்னவன் அவளுக்கு கையை விட்டு விட்டான்.
அவளோ கை வலிக்குது என கையை தடவிக் கொண்டிருந்தவள் “உன்னை மாதிரி ஒருத்தனுக்கு மனைவியாகிற வாய்ப்பு வந்தாக்கூட அது வேண்டாம். அப்படி ஒரு நிலமை வந்தா, கல்யாணம் பண்ணிக்காம எங்கையாவது பாழும் கிணத்துல போய் விழுந்துருவேன். எனக்கு என் அறிவழகன் மாமா போதும் உன்னை எல்லாம் நீ நினைச்சா கூட நான் கட்டிக்க மாட்டேன் செத்துப் போயிருவேன்" என்று திட்டியவளின், கழுத்தோடு கையை வேகமாகப்போட்டு தன் பக்கத்தில் நெருக்கமாக நிறுத்தியவன், அந்த இருட்டிலும் கோபத்தில் முறைக்கும் அவளது கண்களையே பார்த்தான்.
“இப்படி முறைச்சிட்டிருந்தா நான் உன்னை கட்டிப்பேன்னு நினைக்கிறியா என்ன?என்ன நடந்தாலும் அது நடக்காது. என் மாமாதான் எனக்கு உயிரு?”
“ஆனா எனக்கு நீதானே உயிரு துளசி?”
இதுக்கு என்ன பதில் சொல்லுறது என்று தெரியாமல் முழித்தவளின் முகத்தைப் பிடித்து தன் பக்கம் இழுத்தான்.
அதில் பயந்து பதறியவளின் உதட்டுப் பக்கமாக குனிந்தான்.அதைப்பார்த்தவள் வேகமாக அவனது கன்னத்தில் அடித்துவிட்டாள்.
“அடுத்தவன் பொண்டாட்டி ஆகப்போறவளைப் பிடிச்சு வைச்சு இப்படி அசிங்கமா பண்ணுறியே நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?தூ.உனக்கு வெட்கமாயில்ல. அதுதான் உன்னை எனக்குப் புடிக்கலைன்னு ஆயிரந்தடவை சொல்லிட்டனே உன் தலையில ஏறலையா பைத்தியக்காரா?” என்று ஆத்திரத்தில் கத்தினாள்.
அவளது சத்தம் அந்த இருட்டில் எல்லோருக்கும் கேட்கிறமாதிரி இருக்கவு,ம் சட்டென்று வண்டியைவிட்டு இறங்கி அவளை இழுத்து சுவரோடு வைத்து அழுத்திப்பிடித்து,அவளது வாயைப் பொத்தினான்.
அவளோ அவனது கையில் இருந்து ஓடித்தப்பித்துவிட முயன்று திமிறினாள். அவளது உடலோடு உடல் படும் அளவிற்கு நின்றவன் கொஞ்சம் விலகி நின்றான்.
“இங்கப்பாரு இந்த நிமிஷமே யாருக்கும் தெரியாமல் உன்னை பண்ணை வீட்டுக்குத் தூக்கிட்டுப்போய் மொத்தமா உன்னை எடுத்துக்க என்னால முடியும். உன் உடம்பை எடுத்துக்கிறதெல்லாம் எனக்குப் பெரிய மேட்டரேயில்லை. நான் நினைச்சா உன்னை அன்னைக்கே தூக்கிட்டுப்போய் எல்லாத்தையும் முடிச்சிட்டு விட்றுப்பேன்.எவன் என்னைய கேட்கவருவான். உங்கப்பனே எனக்கு கட்டித்தந்திருப்பான். ஆனால் எனக்குத் தேவை உன் உடம்பு இல்லை. உன் காதல், உன் மனசு அதுக்காகத்தான்டி இவ்வளவு போராடுறேன். என் துளசியை எனக்கானவளா எனக்கு வேணும்னு காத்திருந்தேன். தடியால அடிச்சு பழுக்க வைச்சு சாப்பிடுறதுல எனக்கு எப்பவுமே விருப்பம் கிடையாது. எனக்காக கனிஞ்சு வர்றதைத்தான் நான் ரசிப்பேன் ருசிக்கவும் செய்வேன். இப்போ உன்னை விடுறேன். நான் நினைச்சா மணமேடையில் இருந்துக்கூட உன்னைத் தூக்க முடியும். அறிவழகனெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை தெரியுமா. எப்பவுமே எனக்குப்போட்டியா அவனை நினைச்சதேயில்லை. அவன் ரொம்ப சீனுக்காட்டுவான், நான் போடா வெண்ணெய்னு மதிக்காம போயிடுவேன். அது அவனுக்குக் காண்டாயிருக்கும். உன் விசயத்துல மட்டும்தான் நான் அறிவழகன்கிட்ட தோத்துப்போய் நிக்கிறேன்.உனக்காக மட்டும்தான் உன்னை விட்டுவைக்கிறேன். போ”என்று அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்திவிட்டு வண்டியில் போய் உட்கார்ந்தான்.
துளசியின் உடல் கொஞ்சமா நடுங்கியது. அவனோ “நான் இங்க இருக்கும்போது வேற எவனும் வந்து உன்னைத் தூக்கவும் முடியாது, தொடவும் முடியாது பயப்படாம போ. போய் உன் அன்பு மாமான் இன்னைக்கு வர்றான்ல அவனைக் கொஞ்சு. போ போ”என்றவன் நக்கலா சிரித்தவாறே வண்டியில் உட்கார்ந்தான்.
அவன் வண்டியை எடுத்ததும் இவளும் வேகவேகமாக திரும்பிப் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக அவங்க அம்மாச்சி வீட்டு வாசலுக்கு வந்தாள். அதுவரைக்கும் அங்கயே நின்று பார்த்திருந்தவன் அவள் அம்மாச்சிவீட்டுக்குள் போனதும் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அவள் வருவான்னுதெரிஞ்சே காந்திமதியும் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்தார். துளசியின் முகம் ஒருமாதிரி பயத்தில் இருப்பதைக் கண்டவர் “ஏன்டி துளசி என்னாச்சிடி?எதுக்கு முகமெல்லாம் முத்துமுத்தா வேர்த்திருக்கு?யாரும் துரத்திட்டு வந்தாங்களா?உன்னை யாரு தனியா வரச்சொன்னது உங்கம்மாக்காரிய எங்கடி?”என்று மகளைத் திட்டியவாறே பேத்தியின் கையைப்பிடித்து உள்ளே கூட்டிட்டுப்போனார்.
அவளுக்கு இன்னும் பதற்றம் தெளியவில்லை. அதனால் கொஞ்சம் உட்கார்ந்தவள் வேகவேகமாக தண்ணியை எடுத்துக்குடித்தாள்.
“துளசி ?”என்று அவளது நாடியைப் பிடித்துக்கேட்டார்.
அதெல்லாம் ஒன்னுமில்லை அம்மாச்சி. நான் இருட்டுல ஓடிவந்தேனா அதுதான் வேர்த்திட்டு என்று சமாளித்தவள் முரளி அவளைப் பிடித்து மிரட்டியதை சொல்லாமல் மறைத்துவிட்டாள்.
இதைச்சொல்லப்போய் கல்யாணம் நடக்கயிருக்கிற இந்த நேர்ததுல பிரச்சனையான என்ன செய்ய?மாமா வேற இன்னைக்கு வர்றாங்க. இதைச்சொல்லி எதுக்கு எல்லாரையும் கஷ்டப்படுத்தணும் என்று அதை யாருக்கிட்டயும் சொல்லாமல் மறைத்துவிட்டாள்!