வன்முறை செய் தப்பில்லை 10
Va10
10 வன்முறை செய் தப்பில்லை!!
"என்னடா மதியம் ஆகிடுச்சு உன் அப்பனை காணல , காலையில அவசர வேலையா போறேன் அரை நாள் லீவ் தான்னு செய்யாத வேலைக்கு லீவ் வாங்கிட்டு போனார் இன்னும் ஆளை காணல ... " திண்ணையில் சுதந்திர தேவனாக கால் மேல் கால் போட்டு காத்து வாங்கி கொண்டிருந்த மகன்
என்ன குழம்பு வச்சிருக்க ??
நெத்திலி மீன் பொறிப்பு "
"அப்போ வருவாப்படி ... ஈ லோகத்துலையே மீன் குழம்பு வச்சி லவ்வரை கரெக்ட் பண்ண போராடுற மம்மி நீயாதான் இருப்பம்மா..."
"சீசீ போடா... என்றவள் கண்கள் போன திசையை இன்பாவும் பார்க்க காரின் முன் சீட்டில் இருந்து பொற்றவை இறங்க , அவளோடு குசுகுசுவென பேசியபடி ஜீவா வர
எம்மோய்இஇஇஇ
மொவனே நம்ம ஆயுதத்துக்கு வேலை வந்திடும் போலேயேடா "
"இந்தாள் குண்டக்க மண்டக்க பண்ணினா போட்டு தள்ளிடும்மா...நான் இருக்கேன் உனக்கு ...
"வரட்டும் வரட்டும் என்ன வில்லங்கத்தோட வர்றான்னு பார்ப்போம் ..
"தன் முன்னால் நின்ற அவனையும் பவ்யமாக சுடிதாரில் பாவமாக முகத்தை வைத்து கொண்டு நின்ற பொற்றவையையும் மேலும் கீழும் பார்த்த தாயும் மகனும் ஒரே போல இருக்கையில் கால் மீது கால் போட்டு உட்கார்ந்து கூலர்சை எடுத்து கண்ணில் மாட்டிக் கொண்டார்கள் ...
யார் இது ?
பொற்றவை "
"இந்த ரவையை எதுக்கு இங்கன கூட்டிட்டு வந்து இருக்கேன்னு அம்மா கேட்குது அப்படிதானம்மா??" என்று இன்பா தாயை திரும்பி பார்க்க
"ம்ம்
"ஒரு மாசம் கூட தேவையில்லை பாத்தியா, பத்து நாளையில ஆள் பிடிச்சுட்டு வந்துட்டேன்... ஒரு மாசத்துல எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம், டேடிகிட்ட டைம் கேட்டு இருக்கேன்... அவர் ஃப்ரீயா இருக்குற அன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு யோசிச்சு இருக்கேன்... அதுக்கு பிறகு நீ என்னை தொல்லை பண்ண கூடாது பாரி , சத்தியம் பண்ணி தந்து இருக்க புரிஞ்சுதா? எப்பா மூச்சு விடாது இவ்வளவு நேரம் மனப்பாடம் பண்ணியதை பேசி விட்டு பெருமூச்சு வாங்கினான்..
"எங்க இருந்து கூட்டிட்டு வந்த கிராக்கி இது... நூறு ரூபா குடுத்தியா, இல்ல 500 ரூபாய் கொடுத்து கூட்டிட்டு வந்தியா? இல்லை குவாட்டருக்கு போற ______ யாவா ?
"ப்ச் ஜீவா இந்த பொண்ணு எனக்கு இப்படி பேசுறா என்று பொற்றவை முகத்தை சுளிக்க...
"இவங்க ஒன்னும் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது பாரி....
"அப்போ எப்படி பட்ட பொண்ணுன்னு நீயே விளக்கிடு ராசா "
"நம்ம மூர்த்தி அண்ணே பொண்டாட்டியோட தங்கச்சி ...
"ஓஓஓஓஓ ....
"இந்த ஒரு மாசத்துக்கு பிறகு, என் மகனை நீயும் நானும் பாதி பாதி பங்கு பிரிச்சுக்கலாம் .... ஸ்கூல் டைம் உன்கிட்ட இருக்கட்டும், லீவ் டைம் என்கிட்ட இருக்கட்டும்...
"இரு இரு தொகுதி பங்கீடு எல்லாம் பண்றது இருக்கட்டும் முதல்ல உன் கல்யாணத்துக்கே நான்தான் சம்மதிக்கணும்...
"என்ன?
"பின்ன உன் புள்ளையோட அம்மா நான் நோ அப்ஜக்ஷன் கொடுத்தாதான், நீ அவ கழுத்துல தாலி கட்ட முடியும் தெரியும்ல...
"இல்ல ஒரு மாசம்
"அட அந்த ஈர வெங்காயம் எல்லாம் தெரியும்டா வாய மூடு.. நான் நேசிச்ச ஒருத்தனை, அப்படியே தூக்கி இன்னொருத்தி கிட்ட கொடுக்கணும்னா, அவ மேல ஒன்னு உனக்கு காதல் இருக்கணும்... இல்ல அவளுக்கு உன் மேல காதல் இருக்கணும்.. உன்ன அவ பத்திரமா பாத்துப்பாளான்னு தெரிஞ்ச பின்னாடி தான், உன்னை அவகிட்ட தூக்கி கொடுக்க முடியும்...
"ப்ச் என்ன பாரி இப்படி மாத்தி மாத்தி பேசுற
"என்ன மாத்தி பேசினேன்.. என் புள்ளைய உன்ன நம்பியே தனியா அனுப்ப மாட்டேன்... இவள நம்பி எப்படி அனுப்பி விடுறது ??உன்ன மாதிரி வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்ப சொல்றியா நீ ஊர்ல போல அத்தனை சிறுக்கியும் நம்பு நான் நம்பணும்னு அவசியம் இல்ல .."
அது
"பெத்தவ நான், காதலிச்சவ நான் உங்க ரெண்டு பேர் பாதுகாப்பும் என் பொறுப்பு ... அதனால முதல்ல நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு காட்டுங்க, உங்க காதலை பார்த்து என் கண்ணு வியர்க்கணும்... அப்பாடா!! இவனுக்கு இவதான் பெர்பெக்ட்டான ஜோடின்னு, நான் நம்பணும் .. அப்படி நம்பிட்டேன்னு வச்சுக்கோ, என் கையால தாலி எடுத்து , உன் கையில் கொடுத்து உன் கல்யாணத்தை முடிச்சு சாந்தி முகூர்த்தம் அனுப்புற பொறுப்பு இந்த பாரிஜாதோடது என்னடா சொல்ற ? என்று பாரிஜாதம் மகனை திரும்பிப் பார்க்க..
"ஆமாம்மா , நீ சொல்ற மாதிரி அப்பாவும் இந்த பொம்பளையும் பெர்பெக்ட் ஜோடின்னு தெரிஞ்சாதான் நானும் அப்பா கூட போவேன் ...
"ஜீவா இவங்ககிட்ட போயி என் கெஞ்சிட்டு இருக்கீங்க நம்ம ரெண்டு பேருக்கும் புடிச்சிருக்கு நாம கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இவங்க எதுக்கு அனுமதி கொடுக்கணும்... அதான் சொன்னேன் கல்யாணத்தை பண்ணிட்டு வந்து நிக்கலாம்னு.. பொற்றவை ஜீவா அருகே நெருங்கி நிற்பதை கூட தாயும் மகனும் விரும்ப வில்லை முகம் கடுகடுவென மாறியது..
"பண்ணிக்க வேண்டியதுதானே யாரு உங்கள தடுத்தா , பண்ணிட்டு வந்து நின்னு இருந்தா சாந்தி முகூர்த்தத்தை சாந்தியா ஜெயில்ல வச்சு கொண்டாடி இருக்கலாம்ல" என்று கத்தியை ஒரு சுழட்டு சுழட்டி ஆப்பிளை வெட்டி தாயும் மகனும் பங்கு போட்டு தின்று கொண்டே...
"ஒரு பொண்ண வலுக்கட்டாயமா படுக்கையில் போட்டு உன் காதலன் பந்தாடி இருக்கான் .... அதுக்கு நீயும் உடைந்தன்னு, கோ கைதியா உன்னையும் தூக்கி உள்ள வச்சுருவாங்க.. நான் அமைதியாக இருந்தாதான், நீங்க அமைதியா வாழ்க்கை நடத்த முடியும் சக்களத்தி அவர்களே" என்று பாரிஜாதம் கண்ணாடியை விரலில் இறக்கிவிட்டு பொற்றவையை தீ பார்வை பார்க்க....
டிஎன்ஏ டெஸ்ட் வரைக்கும் எங்க கையில இருக்கு வீணா ரெண்டு பேரும் என்கிட்ட வச்சிகிட்டீங்க, என் வீம்பை காட்ட ஆரம்பிச்சேன்னு, வச்சுக்கோங்க.. ரெண்டு பேரும் துண்டை காணோம் துணிய காணோம்னு ஓட வேண்டியது இருக்கும்... அதனால நான் சொல்ற மாதிரி கேட்டா, யாவரும் நலம் என்ன சொல்றீங்க? ஜீவா திண்ணையில் வந்து தலையை பிடித்துக் கொண்டு அவள் அருகே உட்கார ...
"உனக்கு வேற ஆப்ஷனே இல்லடி மச்சான் அவளை பேசாம ஒழுங்கா லவ் பண்ண பாரு,
"லவ்வா.. நீ என்ன லவ் பண்றேன்னு சொன்ன? கேள்வியாக ஜீவா அவளை பார்க்க
"நீ பொதுவுடமை சொத்து மச்சான்... அதாவது பட்டா இல்லாத சுவர்.... யார் வேண்டுமானாலும் உன்னை லவ் பண்ணலாம் , நீயும் யாரை வேணும்ணாலும் லவ் பண்ணலாம் ... இப்படி ஒரு காதலி எவனுக்காவது கிடைப்பாளா என்ன? என்னபோய் பஜாரி மாதிரி நினைக்கிறியே? எனக்கு நீ கண் கலங்காம இருக்கணும்... என் மகன் வர்ற இடத்துல நிம்மதியா இருக்கணும் , அதுக்கு நீங்க ரெண்டு பேரும் பெர்பெக்ட் பார்ட்னர்னு எனக்கு நிரூபிச்சு காட்டுங்க .. வேற என்ன நான் உங்ககிட்ட கேட்டேன்...
"ஜீவா இவ ஏதோ குழப்புற மாதிரி இருக்கு வாங்க என்று பொற்றவை வந்து ஜீவாவின் மீது கை வைக்க போக பொத்தென தடுக்கி பக்கத்தில் இருந்த வாளி மீது விழுந்தாள்
பொற்றவை என்று ஜீவா பதறி அவளை தூக்க போக அவன் ஒரு பக்கம் பொத்தென்று விழுந்து கிடந்தான்... இன்பா இருவர் காலையும் தட்டி விட்டு பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான் ...
அப்புறம் நீங்க எப்படி வேணும்னாலும் எங்க வேணும்னாலும் போய் லவ் பண்ணுங்க , சுத்தி திரியுங்க ஆனா உங்களுக்கு நடுவுல என் மகன் எப்பவும் இருப்பான்... டேய் குட்டி _ஞ்சான்..
எம்மோய் "
"பெரிய ___ஞ்சானை பத்திரமா பார்த்துக்கடா
"உன் சிஷ்யபிள்ளை வேலையை காட்டிட மாட்டேன்..
"அவன் எதுக்கு??பொற்றவை எரிச்சலில் கத்த
"பின்ன அவங்க அப்பாவுக்கு வரப்போற பொண்டாட்டி அவனுக்கு பிடிக்க வேண்டாமா? பழக வேண்டாமா, நீங்க ரெண்டு பேரும் உங்க பாட்டுக்கு லவ் பண்ணுங்க, அவன் ஒரு ஓரத்துல இருந்துட்டு போறான் ஏன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று ஜீவாவை பார்த்து பாரிஜாதம் கேள்வியாக கண்களை தூக்கி மிரட்ட
"இல்லையே இருந்துட்டு போறான்" என்றதும் பொற்றவை தன் தலையில் அடிக்க..
"என்ன ஜீவா அவ சொல்றதுக்கெல்லாம் சரி சரின்னு தலையாட்டுறீங்க.... இடையை தடவிக் கொண்டு பொற்றவை ஜீவாவிடம் கிசுகிசுக்க கேட்ட
வகையா நாக்காகி இருக்கோம்ங்க, ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சோம்னு வைங்க, உள்ள போய் களி திங்குற அளவுக்கு எல்லாம் எனக்கு தெம்பு கிடையாது.. அடுத்த மாசம் கார் ரேஸ்ல வேற பேரு குடுத்து வச்சிருக்கேன்....
உங்களுக்கும் எனக்கும்தான் நல்லா செட் ஆகுதே ஜீவா, பேசாம அந்த லவ் எப்படி இருக்குன்னு ட்ரை பண்ணி பார்ப்போமே... தன் அழகின் மீதும், சூழ்ச்சியின் மீதும் நம்பிக்கை கொண்ட பொற்றவை அவனை கண்களை மீனாக வளைத்து சூழச்சி வலையில் இழுக்க
அது
வேற வழி இல்ல ஜீவா இவ கால்ல விழுறதுக்கு நீங்க என்ன லவ் பண்ணலாம்...
ம்ம்
பாரிஜாதம் பக்கத்தில் குனிந்த பொற்றவை மகனுக்காக என்ன இதுல கால் எடுத்து வச்ச ஜீவா.. எனக்காகன்னு உங்க ரெண்டு பேரையும் நட்டாத்துல விட்டுட்டு என் கூட வருவார் வர வைக்கிறேன், இதை சவாலாக எடுத்துக்கிறேன்டி என்று முணுமுணுக்க ...
ஹாஹா , எனக்கும் போட்டி போடுறது ரொம்ப பிடிக்கும் , இந்த 20 நாள்ல ஒன்னு நீ வாழணும், இல்ல நான் வாழணும்... அவருக்கு உன் மேல ஒரு துளி காதல் வந்தாலும் , இந்த பாரிஜாதம் கல்லறையில் போய் அடக்கம் ஆகி, உங்க ரெண்டு பேர் காதலுக்கும் வழி விட்டுடுறேன்.. அதேசமயம் என் மேல உள்ள காதல் வெளிய வந்துச்சு .... நீ செத்த, உன்ன அடக்கம் பண்ணாம ஓய மாட்டேன் ஏன்னா எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும்.. அவர் மேல துளி கீறல் பட்டுச்சு செத்துடுவே , பத்திரமா பாத்துக்க இது எச்சரிக்கை இல்ல, நேரடி கொலை மிரட்டல் சங்கை அறுத்து போட்டுடுவேன்.... என்ற பாரிஜாதம் அணல் விழியில் பொற்றவை அவளை தோற்கடித்து காலடியில் போட்டு மிதிக்க தோன்றியது....
சவால்
நானும் சவால் ... "
"என்னம்மா நீ நிலமை கை மீறி போயிடுச்சு இப்படி ஒரு ஆளை வச்சிக்கிட்டு எப்படிம்மா சவால் விட்டு தொலைச்ச அய்யய்யோ இப்பவே _சு காந்துதே.." கையை பின்னால் கட்டி கொண்டு மகன் தாயின் முன்னே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்...
எல்லாம் என் காதல் மேல உள்ள நம்பிக்கையில தான்டா ... பூவா தலையா போட்டு பார்துடுவோம்... இந்த கிறுக்கனை கொஞ்சம் உச்சி மண்டையில தட்டினாதான் செல்ப் எடுக்கும் போல, வன்முறை செய்ய கூடாதுன்னு பார்த்தா எங்க விடுறான்...
ஜீவா கீழ விழுந்ததுல இங்க அடி பட்டிருச்சு போல பொற்றவை சற்று ஆடை நெகிழ்ந்து காட்ட
ரியலி சாரிங்க , அவன் கொஞ்சம் துடுக்குத்தனம் பண்ணுவான் பட் ரொம்ப நல்லவங்க... இந்தாங்க இந்த ஸ்ப்ரே அடிச்சிக்கோங்க என்று காரிலிருந்து ஸ்பிரே எடுத்து ஜீவா கொடுக்க...
நீங்களே கொஞ்சம் போட்டு விடுங்களேன் பொற்றவை திரும்பி அமர ...
சாரிங்க எனக்கு பொண்ணுங்களை தொட்டு பேசி பழக்கம் இல்ல ...
ஆஆஆஆஆ என்ற பாரிஜாதம் சத்தத்தில் ஜீவா காரிலிருந்து திரும்பி பார்க்க
எம்மோய் வழுக்கு இருக்கு பார்த்து போன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் பாரு விழுந்து கிடக்க , பார்த்து எழும்பு" தாயை எழுப்ப முடியாது இன்பா எழுப்ப முயற்சி செய்து கொண்டிருக்க.... சட்டென காரை நிறுத்தி விட்டு ஜீவா வண்டியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டான் ...
என்னாச்சு பாரி?? தாயும் மகனும் அமைதியாக இருக்க
"வாம்மா "குட்டி கையை வைத்து தாயை தூக்க முடியாது அவன் திணற சட்டென தாய் மகன் கண்கள் அகல விரிந்தது.. ஜீவா பாரிஜாதம் இடையோடு கைவிட்டு அவளை அலேக்காக தூக்கி கொண்டு போய் திண்ணையில் கிடந்த கட்டிலில் படுக்க வைத்தவன் கையிலிருந்த ஸ்ப்ரையை எடுத்து
எங்க அடி பட்டிருக்கு...
பாரிஜாதம் தன் இடையை காட்ட ...
"டேய் உள்ள போய் வெந்நீ எடுத்துட்டு வா மகனை உள்ளே அனுப்ப பாத்தான்
"எப்போய்
"போன்னு சொன்னேன் மகனை அனுப்பி வைத்தவன்... அவள் ஆடையை கை கொண்டு அவனே நெகிழ்த்து
"திரும்பி படு அடிச்சு விடுறேன்
"இல்ல என் புள்ள ஆஆஆஆஆஆஆஆ அவள் இடையில் மருந்து சூடாக அடிக்கப்பட்டது...
ஓகேவா பாரி அவன் ஐந்து விரலும் கூச்சம் இல்லாது, பேதம் இல்லாது , தயக்கம் இல்லாது அழகாக அவள் இடையை வழித்து தடவி மருந்தை பூசி கொண்டு இருந்தது ...
அம்மாவை பக்கத்துல இருந்து பார்த்துக்கடா அவங்களை கொண்டு போய் பஸ்ஸ்டாப்புல இறக்கி விட்டுட்டு ஓடி வர்றேன்.. கட்டிலை விட்டு இறங்க விடாத , ஹாஸ்பிட்டல் போய் ஒரு ஊசி போட்டுட்டு வந்துடலாம்" என்றவனை தாயும் மகனும் பே என்று பார்த்து கொண்டு இருந்தனர்....
உயிர் இருக்கும் இடத்திலே , உரிமை இருக்கும் உரிமை உள்ள இடத்திலேயே அன்பும் காதலும் போட்டி போடும் !!