வன்முறை செய் தப்பில்லை 9
Van9
9 வன்முறை செய் தப்பில்லை !
எம்மோய் நீ,கொடுக்கிற இளக்காரம் தான் அந்த ஆளு தகடுதித்தம் பண்ணிட்டு திரியுறான்... இப்படி வகை வகையா ஆக்கி கொடு , இங்க தின்னுட்டு அவரு சித்தி தேடி தெம்பா போகட்டும்
"டேய் அப்பாவை எப்ப பார்த்தாலும் வையாதடா, பாவம் மனுசன் நல்ல சோறுன்னா ஒரு வாய் தின்பாருடா... இங்கன வந்து கிடக்கார் நம்ம தானடா பார்த்து செய்யணும்..." பக்குவமாய் அவனுக்கு மீனை இரவு நேரத்தில் பொறித்து எடுக்கும் தாயை தலையில் அடித்து பார்த்தான்...
"உனக்கு வினையே உன் லவ்வுதான்.... சொன்னா கேளு, அவரு இதுக்கு எல்லாம் செட்டே ஆக மாட்டார் போல இருக்கு, பேசாம அவர் சித்தி தேடுறதுக்கு பதிலா, நாம சித்தப்பா தேடிட்டா என்ன? ...
"ஆஆஆஆஆ அடிங்க அவர் இருந்த இடத்துல இன்னொருத்தனா பிச்சுபுடுவேன், இன்னொரு வாட்டி இப்படி பேசினா இன்பா முதுகை தடவிக்கொண்டே ..
"நல்ல ஐடியா சொன்னா அடிச்சா விடுற , இவரை நம்பி இருந்தா உனக்கு அறுபதாம் கல்யாணம் கூட நடக்க வாய்ப்பு இல்லைன்னு தான் தோணுதும்மா
"எருமை வாயை கழுவுடா, உன் அப்பா சொல்ற மாதிரி உன்ன ஓவரா பேச விட்டது தப்புதான் போல...
"ம்க்கும் உன் ஆளு வந்தாச்சும்மோய்...
"என்னடா வாசல்ல உட்கார்ந்து இருக்க .. சாப்பிட்டியா, சாப்பாடு எதாவது மிச்சம் மீதி இருக்காடா என்று ஜீவா வந்து மகன் பக்கம் அமர..
"எப்போய், நீதான் இந்த வீட்டோட குடும்பதலைவன் பிச்சைக்காரன் போல மிச்சி மீதி இருக்கான்னு திரியாத , சொன்னாலும் புரிய மாட்டைக்கு திட்டுனாலும் தெளிய மாட்டைக்கு , மண்டையில செடி வச்சா கூட உனக்கு எல்லாம் முளைக்காதுப்பா... நிலாவுல தண்ணீ இருக்குதுன்னா தேடுறது விட்டுட்டு, உன் மண்டையில ஏதாவது மூளை கீளை ஒட்டி இருக்கான்னு ஆராய்ச்சி பண்ண சொல்லணும்....
"டேய் இஇஇஇஇஇஇஇ பாரிஜாதம் குரல் வர உதட்டை தகப்பனை பார்த்து கோணிகொண்டு
"உன் பொஞ்சாதி சுடச்சுட சோறு கொண்டு வருவா, தின்னுட்டு அதே வாயால அவளையே குறை சொல்லிட்டு வந்து படு, நான் போய் படுக்கிறேன் ... என்று இன்பா குட்டி படுக்கையை தூக்கி கொண்டு தகப்பன் வீட்டை நோக்கி நடக்க
டொக் டொக் என்று சாப்பாடு வந்து அவன் முன்னே வைக்கப்பட்டது...
"மீன் குழம்பா?? எப்பவாவது இசை சமைக்கும், ஆனா நீ சமைச்சா நல்லா சுள்ளுன்னு உள்ள போகுது ... உருண்டை பிடித்து சாப்பிடும் அவனை வீட்டின் முன்னே இருந்த கிணற்றில் நீர் இறைத்து போட்டு அவன் அழுக்கு துணிகளை துவைத்து கொண்டே பாரிஜாதம் ஓரக்கண்ணால் பார்த்தாள் ... தட்டின் உள்ளே கை கழுவி தட்டை நகட்டி வைத்தவன் ...
"குழம்பு நல்லா இருந்துச்சு பாரி.. "
"ம்ம்
"ஏன் இப்ப கிடந்து துணி துவைக்கிற?
"ரெண்டு நாளா இதே சட்டை போடுறீங்களே துவைச்ச சட்டை இல்லைல்ல அதான்..
"அதுக்கு ஏன் இந்த ராத்திரி கிடந்து செய்ற மணி ஒன்னு ஆக போகுதே .... உன் கடமை உணர்வு பார்த்து புல்லரிக்குது போ
"தனக்கானவங்களுக்கு செய்யறதுக்கு பேர் கடமை இல்லை என் புள்ளைக்கு செய்ய நான் வருத்தப்பட்டது இல்லை அப்படியே இதுவும் .. எனக்காக செய்ய தான் அப்ப இருந்த இப்ப வரை ஆளு இருந்தது இல்லை நானாவது செஞ்சுட்டு போறேன்"
ஓஓஓ
"புரிஞ்சிருக்காதே என்று பாரிஜாதம் முறைக்க
"ஹிஹி புரியல ... நீ ஏதோ சுத்தி வளைச்சு பேசுற போல
"நேராவே சொன்னா மட்டும் துரைக்கு அப்படியே புரிஞ்சுடும்
"எப்போய் வர்றியா என்ன ? மகன் குரல் வர .
"சரி சீக்கரம் துவைச்சுட்டு போய் தூங்கு ... என்று ரெண்டு எட்டு போன ஜீவா
"ஆமா நீ சாப்பிட்டியா ? என்று தலையை திருப்பி பார்க்க அவன் கை வேலையை மறந்து அப்படியே நின்று விட
"என்ன தீடீர்னு கேட்கிறீங்க ??
"என் வீட்டுல வேலை செய்ற சர்வண்ட்கிட்ட கூடத்தான் சாப்பிட்டீங்களான்னு கேட்பேன், கேட்க கூடாதது கேட்ட மாதிரி , ஏன் இதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிற ?
"இவனை நம்பி ரெண்டு நிமிசம் கூட சந்தோசபட முடியாது போல ச்சை" என்று அவனை தூக்கி போட்டு மிதிக்க முடியாத கோவத்தில் துணியை கும்மு கும்மென்று கும்ம.. போன ரெண்டு நிமிசத்தில் ஜீவா மறுபடியும் அவளிடம் திரும்பி வந்தவன்...
"ம்க்கும் என்று கனைக்க நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து கொண்டே பாரிஜாதம் துணியை அலசியபடி
"என்ன ?
"இல்லை இதுவும் வேற துவைச்சது இல்லை, கொஞ்சம் துவைச்சு கொடேன்...
"கொடுங்க என்று இருட்டில் அவள் கையை நீட்ட அவனும் ஒன்றை வைத்து விட்டு ஓடி விட ...
"என்னது இது என்று குனிந்து பார்த்த பாரிஜாதம் முகம் குப்பென சிவந்து விட்டது, உள் அங்கி குவியல் ...
"டெய்லி அதையும் துவைச்சு கொடுத்துடு பாரி ,, எனக்கு துவைக்க கஷ்டமா இருக்கு, உன் மகனுக்கு செய்றது போலவே இதையும் நினைச்சுக்க என்றவன் வியாக்கியானம் கேட்டு இவளுக்கு தான் இவனை எந்த வரிசையில் சேர்க்க என்று புரியவில்லை..
ஸ்டைலாக பொற்றவை மாதுளை ஜூஸை ஸ்டிராவில் உறிஞ்சி கொண்டிருக்க... பராக்க பார்த்துக் கொண்டே ஜீவா அவள் முன்னாடி இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தான்
"ஜீவா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க இப்போ உள்ள பொண்ணுங்கள எல்லாம் நம்பவே கூடாது.... பணத்தை புடுங்குறதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க.. அதுல வேற நீங்க பெரிய பிக் ஷாட் பணக்காரர்ன்னு தெரிஞ்சு வேணும்னே உங்களுக்கு வலைவிரிச்சு வச்சிருக்க மாதிரி இருக்கு, இதுல மாட்டிக்கிட்டீங்க அப்புறம் காலம் முழுக்க எந்திரிக்கவே முடியாது... அதுலேயும் அவ பணப்பேய் , பணப்பிசாசுன்னு ஊருக்குள்ள சொன்னத கேள்விப்பட்டிருக்கேன், உங்கள ஏதோ இன்டென்ஷனோட தான் அவ இப்படி எல்லாம் லாக் பண்ணி இருக்கான்னு தோணுது ..
ச்சேசே அவ பேச்சுதான் ரூடா இருக்குங்க.. பட் நீங்க சொல்ற மாதிரி பொண்ணு எல்லாம் அவ இல்லை
அப்போ ஏன் உங்களை இப்படி டார்ச்சர் பண்ணணும் சொல்லுங்க.."
நானும் தப்பு பண்ணி இருப்பேனோன்னு தோணுதுங்க.. "
அதுக்காக பிடிக்காத உங்களை அதட்டி உருட்டி வாழுன்னு சொன்னா அதுக்கு பேர் கொடுமை இல்லையா? உங்க சுயநினைவு இல்லாம நடந்த தப்புக்கு நீங்க ஏன் ஜீவா தண்டனை வாங்கணும், அதுல உங்க தப்பு என்ன இருக்கு?" வார்தையில் வர்ணஜாலம் காட்டும் நபர்களை நம்பாதே என்பதின் அர்த்தம் புரியாது பூம் பூம் மாடு போல தலையை ஆட்டினான்..
"ம்ம் ...
"உங்களுக்கு அவ மேல எதாவது இன்ட்ரெஸ்ட் இருக்கா ஜீவா ?அவளுக்கு சிபாரிசு செய்யும் ஜீவாவை சற்று ஆழ பார்த்தாள்
எனக்கு பொடியன் வேணும் ... "
"அப்போ கோர்ட்ல கேஸ் போட்டு
"என்னங்க நீங்க , என்னவோ பேசுறீங்க குழந்தையை பெத்தவ அவ, அப்படி எல்லாம் பிரிச்சிட்டு போனா என்னால நிம்மதியா இருக்க முடியாதுங்க.. அவ நினைச்சு இருந்தா என் பணத்தை எப்படி வேணும்னாலும் வாங்கி இருக்கலாம்ங்க ஆனா அவ செய்யல.. பிள்ளைக்கு தகப்பன் நான்னு காட்ட மட்டும் தான் நினைச்சா... அதுல தப்பு இருந்த மாதிரியும் எனக்கு தெரியலங்க, தாயையும் மகனையும் பிரிக்கிற அளவு கொடுமைக்காரன் எல்லாம் நான் இல்லைங்க ..
அம்மா இல்லாம அம்மா சாப்பாட்டுக்கு ஏங்கி வளர்ந்த என்னோட நிலமை என்னோட முடியட்டும்ங்க .. தாய்ப்பாசம் தந்தை கிட்ட இருந்து கிடைக்கலாம் , ஆனா தகப்பன் எப்பவும் தாய் ஆக முடியாதுங்க.. தாய் தாய்தான், தகப்பன் தகப்பன்தான்.. தகப்பனோட தோள்ல சாஞ்சு அழலாம் ..ஆனா தாயோட மடியில படுத்துதான் ஆறுதல் அடைய முடியும். இது எல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாதுங்க ...
ஓஓஓ சாரி சாரி சஸ்ட் உங்களுக்கு ஐடியா சொன்னேன் அவ்வளவுதான் ஜீவா தப்பா நினைக்காதீங்க... "
ஆக குழந்தை வேணும் அவ வேண்டாம் "
ம்ம் ....
நாம ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது ஜீவா???? என்று நேரடியாகவே பொற்றவை கேட்டுவிட, ஜூஸை சரட்டென்று கொப்பளித்து அவளை அதிர்ந்து போய் பார்த்தான் ..
ஒரு மாசத்துல உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சா அவ உங்கள விட்டுடுறேன்னு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கா.. நீங்களும் நானும் கல்யாணம் கட்டிக்கிட்டா, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா? உங்களோட தனிப்பட்ட விஷயம் எதுலையும் நான் தலையிடவே மாட்டேன் ஜீவா , உங்க குழந்தை உங்களுக்கு வேணும்னா, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க.. இல்ல குழந்தையை போய், எப்போ வேணும்னாலும் பாருங்க ... அதேசமயம் அவளோட தொல்லையும் இனிமே உங்களுக்கு இருக்காது என்ன சொல்றீங்க யோசனையாக ஜீவா பொற்றவையை பார்த்துக் கொண்டிருக்க...
இந்த பிரச்சனை முடிஞ்ச பிறகு டைவர்ஸ் வாங்கணும்னா கூட வாங்கிக்கலாம் ஜீவா...
அது
அப்பாவைத்தான் சமாளிக்கணும் நான் சமாளிச்சுக்கிறேன் நாளைக்கே வேணும்னாலும் கல்யாணத்தை வச்சுக்கலாமே? என்று பரபரப்பாக நின்றாள்.... மூர்த்தியிடம் லட்ச லட்சமாக காசு வாங்கி பழகிய கைகள் திடீரென காசு இல்லாமல் சம்பாதித்தால் தான் முடியும் என்று ஒரு நிலை, கிடைத்த இவனை விடுவதா என்று ஆசை பேயாக அவளை உந்தி தள்ளியது....
"கல்யாணமா?
"ஏன் நான் எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரியாம கல்யாணம் பண்ணிக்க தயங்குறீங்களா
பொக்கிசா தங்கச்சி நீங்களும் அவங்கள மாதிரி தான் இருப்பீங்கன்னு தெரியும் ... ஆனா
"என்ன ஆனா??
"என்னமோ உள் மனசுக்குள்ள பிராண்டுதுங்க..
"இத தவிர வேற வழியே இல்ல ஜீவா... நாளைக்கு கல்யாணத்தை ரெடி பண்ண சொல்லவா ? என்று மெல்ல அவன் அருகில் வந்து உட்கார.. ஜீவா சற்று அவளை விட்டு விலகி அமர்ந்தான் ...
ஜீவா பிராங்க்கா சொல்லவா உங்கள முதல் தடவை பார்த்தப்போவே, உங்க மேல எனக்கு இணை புரியாத விருப்பம் வந்துடுச்சு ... உங்களுக்காக ஏதாவது செய்யணும்னு மனசு கிடந்து ஏங்குது சத்தியமா என்னால உங்களுக்கு எந்த தொல்லையும் வராது நம்புங்க" என்று அவன் கையைப் பிடிக்க போக கையை நகட்டி தன் தொடை மீது வைத்துக் கொண்டவன்...
இப்போதைக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்ங்க.. அவ கிட்ட நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதா வேணும்னா சொல்லுவோம்... அதுக்கு பிறகு அவ ரியாக்ஷன் பொறுத்து வேற முடிவு எடுக்கலாமே "தயக்கமாக தலையை கோதினான்..
"அசர மாட்டைக்கிறானே "என்று சலித்தவள்
"ம்ம், இப்பவே போவோமா? "
இப்பவா
நல்ல விஷயத்தை தள்ளி போட கூடாது ஜீவா ...
என்னால உங்களுக்கு எதுவும் பிரச்சனை வந்திட கூடாதேங்க
என்ன பிரச்சனை வந்தாலும் தாங்குவேன் ஜீவா காரின் முன் இருக்கையில் தோரணையாக ஏறி அமர்ந்தாள் பொற்றவை
யாருக்கு எவ்வளவு இடம் கொடுக்க வேண்டும் என்ற மதி இல்லாது போனால் தவறு நம் மீதே !!