வன்மறை செய் தப்பில்லை 12

Van12

வன்மறை செய் தப்பில்லை 12

12 வன்முறை செய் தப்பில்லை !! 

எப்போய் எப்போய் ,  திண்ணையில்  உட்கார்ந்து கோழிகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டிருந்த தகப்பன்  அருகே வந்து இடித்துக் கொண்டு இன்பா அமர்ந்தான்

எப்போய்  உனக்கு எவ்வளவு வேலை இருக்கு,  நீ என்னன்னா  இப்படி கோழிக்கு தீவனம் போட்டுக்கிட்டு இருக்க 

ப்ச், என்னடா வேலை இருக்கு , சலிப்பாக மகனை திரும்பி பார்த்தான்..  காலையில இருந்து காட்டுச்சிறுக்கியை காணவில்லை...  இவன் கண்களைத் திறந்து பார்க்கும் பொழுது,  அவள் படுத்து கிடந்த இடத்தில் பாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.,  மகனை  தூக்கி உள்ளே படுக்க போட்டு விட்டு இவனுக்கும் போர்வை போட்டு பெரிய குழந்தையை பத்திரமாக தூங்க வைத்து விட்டு , அவன் மீது வெயில் அடிக்காது தென்னம்தட்டி ஒன்றை அவனுக்கு மறைவாக வைத்து போயிருந்தவள் காதலில் தான் எத்துனை நேர்த்தி!!

தகப்பனாக வளர்த்த அண்ணன் நினைவா,  இல்லை தாயின் ஏக்கமா தெரியவில்லை...  அறையில் குடித்துவிட்டு படுத்து புரண்டாலும் காலையில் தூங்கும்போது பஞ்சு மெத்தையில்,  தலையணை மீது தலை வைத்து ,போர்வைக்குள்ளே சொகுசாக தூங்கிக் கொண்டிருப்பான் மீசை முளைத்த பிறகும் கூட குடிபோதையில் ஹாலில் குப்புற படுத்து கிடந்தாலும் அவனை யட்சனின் கைகள் சுமந்து கொண்டு நடு இரவில் கூட படுக்கையில் கொண்டு போட்ட ஞாபகங்களா,  இல்லை அவனைப் போல தன்னை தூக்கி சுமக்கும் இவளின் ஞாபகங்களாக புரியவில்லை....

உன் அம்மைக்காரி எங்கடா ஆளை காணல ...

உனக்கு காப்பி ப்ளாக்கில இருக்காம்,  டிபன் ஹாட்பாக்ஸில இருக்கு துணி துவைச்சு  மடிச்சு எடுத்து  வச்சிருக்கு , வேறென்ன வேணும் ... உனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சிட்டு தான் போயிருக்க பின்ன எதுக்கு அம்மாவை தேடுற?  

ப்ச் இல்ல ஆளை காணலையேன்னு பார்தேன் 

"உன் வேலைதான் சரியா பார்த்து வச்சிட்டு போயிருக்குதான,  பின்ன எதுக்கு அதை தேடுத,  இதுக்கு தான அம்மாவை தேடுவ....   அவனுக்கு தேவையானது அனைத்தும் இருந்தது அவள் இல்லையே மீண்டும் மீண்டும் அவன் கண்கள் வாசலை நோக்கியே போக 

"வட்டி பிரிக்க போயிருக்கு"

"ஏது நடக்க முடியாம கிடந்தாளேடா"... 

"அதுக்கு என்ன செய்ய முடியும்..  தொழிலை பார்த்தாதான , நானும் அம்மாவும் சாப்பிட முடியும் அம்மா சொல்லும்,  நான் பிறந்து அஞ்சே நாள்ல என்னை கைக்குள்ள பொதிஞ்சு வச்சுக்கிட்டு வட்டி பிரிக்க போகுமாம்... எங்களுக்கு என்ன செய்யறதுக்கு பாட்டி தாத்தா இருக்கா,  இல்ல மாமா மச்சான் இருக்கா..  இல்ல அம்மாவ தாங்க புருஷன்தான் இருக்கா,  யாருமே இல்லாத அனாதை பிள்ளை தானே,  வெயில் மழை காடு மேடுன்னு அலைஞ்சா தானே , உன்னை ராஜா மாதிரி வளர்க்க முடியும்னு  அம்மா அடிக்கடி சொல்லும்....  தகப்பன் முகத்தை ஆழமாக பார்த்து கொண்டே ... 

"ஆனா, நீ ஒன்னும் கவலைப்படாதப்பா காலையில சாப்பாடு இருக்கு , சுட சுட பொங்கலும் உளுந்த வடையும்...  நல்லா வயிறு முட்ட தின்னு....  அம்மா அவசர அவசரமா உனக்கு சாப்பாட்டை எடுத்து வச்சுட்டு சாப்பிட கூட செய்யாம ஓடிருச்சு....  காபி சுட சுட பிளாஸ்க்ல இருக்குப்பா... எடுத்து குடிச்சிடு,  இல்ல ஆறிட போகுது..  அம்மா காலையில் எழுமினதையும் லேட்டா ஒரு வாய் காபி தண்ணி கூட குடிக்க நேரம் இல்லாம, இது எல்லாம் செஞ்சு உனக்கு சுடச்சுட வச்சிட்டு போய் இருக்கு .. நீ குடிப்பா உனக்கு செய்ய அம்மா இருக்கு. ,  ஆனா என் அம்மாவுக்கு செய்ய நான்தானே இருக்கேன்....  போற வழியில இந்த சாப்பாட்டை அம்மாகிட்ட கொடுத்துட்டு போகணும் .... 

எப்படா வளருவோம்னு இருக்கு , கொஞ்சம் வளர்ந்த பின்னாடி,  அம்மாவை நான் ராணி மாதிரி உட்கார வச்சு பாத்துக்கணும்..  அதுதான் என் ஆசையே உனக்கு சாப்பாடு எடுத்து போட்டு கொடுக்க சொல்லுச்சு .. எடுத்துட்டு வரவா ? என்று இன்பா  சாப்பாட்டு பாத்திரங்களை தூக்கி கொண்டு வந்து ஜீவா முன்னால் வைக்க வயிறு பசியைத் தாண்டியும் மனதில் ஒரு பசி சாப்பிட தோன்றவில்லை....

புல்லட் சாவியை எடு .... 

எங்கப்பா போற ...

வேறெங்க என்ன நிம்மதி இழக்க வைக்கதான் ஒரு காட்டுகுந்தாணி இருக்காளே,  அவளே போய் கூட்டிட்டு வர்றேன் "

ஓஓஓ உங்க வீட்டு வேலைக்காரிக்கு இப்படி சம்பவம் நடந்தா கூட நீ இதேதானப்பா செய்வ ..யூ ஆர் கிரேட் இந்தா சாவி .... '

அம்மாவுக்கும் மகனுக்கும் வாய் மட்டும் ஊர் எல்லை வரை நீளுதுடா.."

 நீ  பேசுதனதான்ப்பா நாங்க அப்பப்ப நினைவு படுத்துறோம்.."

நீயும் வா ..."

நான் பிசி "

பிசியா அப்படி என்ன வேலைடா இருக்கு ??

உன்னை போல வேலை வெட்டி இல்லாத ஆளுன்னு நினைச்சியா? இப்ப சமஸ்கிருத கிளாஸ் ஆன்லைன்ல நடக்கும்... ஜீவா புல்லட் நோக்கி நடக்க 

எப்போய் சாப்பிடலையா? "இன்பா கத்தி கேட்க 

அவளை கூட்டிட்டு வந்து விட்டுட்டு சாப்பிடுறேன்" என்றவன் புல்லட் வீதிகளில் வண்ண மயில் தேடி உலா போனது ...

எங்க போனா இவ ...ஒரு தெருவுலையும் ஆளை காணல" என்று ஜீவா  புல்லட்டை நிறுத்தி விட்டு பாரிஜாதம் எங்காவது இருக்கிறாளா என்று தேடியவன் காதில் ஜல்ஜல் அவள்  பாதக்கொலுசு சத்தம் கேட்டு அது வந்த திசை நோக்கி வேகமாக நடக்க .... 

"யக்கா செத்த தண்ணீ கொடு .. நீ கூப்பிட்டன்னு பச்சை தண்ணீ பல்லுல படாம ஓடி வந்துட்டேன்... " என்று திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து இருந்த பாரிஜாதம் அப்பெண் கொடுத்த நீரை கடக்முடக் என்று குடித்து தன் தாவணியில் உதட்டில் வடிந்த நீரை துடைக்க ... அநாகரிகமான அன்று தெரிந்த அவள் செயல்கள்,  இன்று அவனை  நின்று பார்க்க வைத்தது கவனிக்க வேண்டியதே..

இந்தா பாரிஜாதம் வட்டி இருக்கு" வயிற்றுப்பிள்ளைக்காரி ஒருத்தி காசை நீட்ட

ஏன் அக்கா வயித்து பிள்ளைக்காரி நீ,  நீ தந்தா நான் நிறைய போறேன்,. இப்ப உன் கிட்ட காசு கேட்டேனா... "

"ஏற்கனவே ஒரு வட்டிக்கு தான் காசே தந்த..  அதையும் திருப்பி தர முடியல,  வட்டியும் தரலைன்னா முறையா சொல்லு ....

"ப்ச் வட்டி போடணும்னு போட்டது தான் அதுவும் ..யார் யார்கிட்ட எம்புட்டு வாங்கணும் எப்படி வாங்கணும்னு நேக்கு உண்டுக்கா...  நீ துட்டை தரலைன்னாலும் கேட்கவா போறேன்... ஏனோ என் தலையெழுத்து சாக்கடை வயித்துல பிறந்து தொலைச்சிட்டேன்...  பிள்ளையை வச்சிகிட்டு எந்த தொழிலுக்கு போக சொல்லு...  அதோட இப்படி அடாவடித்தனம் பண்ணினா தான் என் கற்பை காப்பாத்த முடியும்னு பஜாரியா சுத்தி வந்துட்டேன்... 

அதான் இப்ப உன் மச்சான் வந்துடுச்சே,  பின்ன என்ன பாரிஜாதம் இதை எல்லாம் விட்டுட்டு அவரோட போக வேண்டியதுதான "

"ம்க்கும் எனக்கு எல்லாம் நிம்மதி சந்தோசம்னு ஒன்றை கடவுள் எழுதிற நேரம், கடவுளே பொண்டாட்டி கூட சண்டையில இருந்து இருப்பார் போல அந்த பக்கத்தையே ஸ்கிப் பண்ணிட்டார்.... ம்ம் ஊரை எதிர்த்து போராடும் போது கூட ஒத்தை ஆளா நின்னு போராடுவேன்...  அந்தாளு ஒத்த ஆளு அவரை எதிர்த்து போராட மனசுல தான் தெம்பு இல்லாம போகுது ,ரொம்ப ஆசை வச்சிபுட்டு அல்லாடுறேன் அது எல்லாம் மனசனுக்கு எங்க புரிய போகுது ..."

ஏதாவது சாப்பிட்டியா பாரிஜாதம் ??"

இல்ல அக்கா வூட்டுக்கு போய் செத்த கஞ்சை குடிக்கணும்.."

கால் வலியோட வந்து இருக்கியே,  அண்ணனை கொண்டு போய் பைக்ல விட சொல்லவா ??

"ஏதே இந்த பாரிஜாதம் செத்தா கூட என் உடம்பை நாலு பேர் எல்லாம் தூக்க கூடாது..  அவன் ஒருத்தன் மட்டும் தான் தொட்டு தூக்கணும்னு கொள்கையோட வாழ்ந்துட்டு இருக்கேன்...  அது அண்ணனா இருந்தாலும் சரி,  தம்பியா இருந்தாலும் சரி வேற ஒரு ஆம்பள சுவாசகாற்று கூட என் மேல பட விட மாட்டேன் ....சரிக்கா பொடி நடையா வீட்டுக்கு போறேன் சின்னவனையும் அவரையும் தனியா விட்டுட்டு வந்து இருக்கேன் ... என்று விட்டு நொண்டி நொண்டி நடந்து வந்தவள் பைக்கில் சாய்ந்து நின்ற ஜீவாவை பார்த்து விட்டு ..

என்ன இங்கன என்ன சோலியா வந்தீங்க.... :

"உன்னை பார்க்க தான் 

"என்ன பார்க்கவா எதுக்கு ??  சாப்பாடு வச்சிருந்தேனே.. 

"ம்ம் 

"காப்பியும் போட்டு வச்சிட்டேனே 

"ம்ம்

"துணி எல்லாம் துவைச்சி வச்சிருந்தேனே 

"ம்ம் 

"ஜட்டி எல்லாம் பின்னாடி கிடந்து பார்க்கலையோ?  

"ப்ச் எல்லாம் பார்த்தேன் கால் வலியோட எதுக்கு உனக்கு வேண்டாத வேலை ...  வீட்டுக்கு வா ... ஈவினிங் நானும் இன்பாவும் வந்து வட்டியை பிரிக்கிறோம்.. அவனை கூர்ந்து பார்த்தாள் லுங்கியோடே வந்து விட்டான்...

சரி வீட்டுக்கு  போங்க வர்றேன் ... 

ப்ச் அதான் பைக் இருக்குல்ல இதுல போகலாம் வா வேகமாக பைக்கை தள்ளி கொண்டு ஜீவா அவள் அருகே வந்து வண்டியை நிறுத்த...

"இதுலையா... 

ம்ம் 

"உடம்பு டச் ஆகாம எனக்கு பைக்ல இருக்கிற வித்தை தெரியாதே 

"நான் டச் பண்ணாம ஓட்ட பழகிக்கிறேன் வியாக்கியானம் பண்ணாம உட்காரு.."

"இல்ல ரெண்டு பேரும் ஒன்னா பைக்ல போனாஆஆஆஆஆஊ ப்பூ பூப்பு அவள் உதட்டை அவன் கைகள் மூடி தூக்கி பைக் பின்னே அமர வைத்தவன் 

அந்த பஞ்சாயத்து கிணறை மட்டும் மூடி வை.. போவோமா...  பைக்கை அவன் ஸ்டார்ட் செய்ய ..

யோவ் சத்தியமா எனக்கு உட்கார முடியலைய்யா தள்ளாடுது இறக்கி விடு "ஒற்றை பக்கம் கால் போட்டு இருந்தவள் பிடிக்க இடம் இல்லாது தள்ளாட..

போனா போகுது கையை தோள்ல வச்சிக்க "பெரிய மனது பண்ணினான்.. 

"அப்படி எல்லாம் கருணை காட்ட வேண்டாம் சாமி நீ,  என்ன இறக்கி விடு.... என்றவள் கையை வெடுக்கென பிடித்து தன் தோள் மீது அழுத்தி பிடிக்க வைத்தவன் 

"இப்ப ஓகேவா?  உட்கார முடியுதா?? என்று தலையை திருப்பி பாரிஜாதம் பார்க்க அவள் சிவந்த உதட்டின் மீது ஒரு நொடி அவன் கண் போய் மீண்டது..

"பார்த்து இறங்கு,  காயம் ஆறும் வரைக்கும் பழையதை சாப்பிடாதே , எனக்கு செஞ்சு வச்ச பொங்கலை நீயும் சாப்பிட்டுட்டு மீதி வை குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்....  

பெரிய மனசு பண்ணி  என்ன பைக்ல எல்லாம் கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றிய்யா...

ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் ... 

"உன் வீட்ல வேலை செய்யுற சர்வென்டுக்கும் ரோட்டுல போற நாய்க்கும் கூட  இதையெல்லாம் நீ  செய்வ அப்படித்தான் எனக்கும் பண்ணி இருக்க புரியுது...  ஆனா பாரு,  இங்க எங்க கூட இருக்கிறதுனாலதான உனக்கு இந்த வேலை எல்லாம்  வருது., பேசாம சட்டுபுட்டுன்னு அந்த பொண்ண நல்ல விதமா லவ் பண்ணி அவ கூட வாழ பாரு.... என் பின்னாடி சுத்தாம அவ  பின்னாடி சுத்து அப்பதான் லவ் பிக்கப் ஆகும்.... சீக்கிரம் குளிச்சுட்டு வந்து சாப்புட்டு தெம்பா போய் அவளை லவ் பண்ணுய்யா... உனக்கு மெகா ஆப்பர்.... எதுக்கு முறைக்கிற சொல்லிட்டு போய்யா,  யோவ் ஓஓஓஓ அவளை முறைத்து கொண்டே ஜீவா போய் விட்டான்... 

சொந்த பூவை பறிப்பதற்கும் தொடுப்பதற்கும் பூவின் சம்மதமே தேவை இல்லை !! அவன் தோட்டக்காரன் அல்ல தோட்டத்தின் உரிமையாளன்  என்ற உண்மையை  அவன் வழியிலேயே  போய்  மெல்ல மெல்ல தான் புரிய வைக்க முடியும் ...