நிழலாய் வருவாயோ நிழலியே நேரடி புக்

நிழலாய் வருவாயோ நிழலியே நேரடி புக்

நிழலாய் வருவாயோ நிழலியே நேரடி புக்

நிழலாய் வருவாயோ நிழலியே!

நேரடி அமேசான் கிண்டில் புக் 

டீஸர்-3

கோவிலில் இருந்து பிரச்சனைகளை முடித்துவைத்து முத்துசிவன் சொன்னதும் ஷிவானிக்கு வேற எந்த வழியும் இல்லாதுபோயிற்று. வம்சியோடு அவன் வீட்டுக்கே வாழவந்துவிட்டாள்.

ஆனால் இன்னும் வம்சியின் மேலுள்ள பயம் போகவில்லை.அதைவிட அவனை பிடிக்குமா?பிடிக்கவில்லையா?

என்று ஒரு குழப்பநிலையிலயே இருந்தாள்.

தேன்மொழி இதே வீட்டில் இருப்பதால் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியை உணர்ந்தாள்.

எப்படியோ இரண்டுநாள் சமாளித்துவிட்டாள்.வம்சி அவள்மேல் உண்மையிலயே காதலைத்தான் பொழிந்தான்.

அன்றிரவே அவளைப் பிடித்துத் தூக்கி தனது மடியில் வைத்தவாறே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவளிடம் கதை பேச ஆரம்பித்தான்.

ஆனாலும் அவள் அதைக் கவனிக்காது அமைதியாக உட்கர்ந்திருந்தாள்.

அவளது கழுத்தில் கிடந்த புதுதாலிச் சங்கிலியில் ஒருவிரல் நுழைத்துப் பிடித்து இழுத்தான்.

அதில் அவளது முகம் அவனருகில் வந்தது.ஷிவானியின் மூக்கில் முத்தம் வைத்தான்.

“நீ என்னதான் வேண்டாம் வேண்டாம்னு விலகிப்போனாலும் இந்த வம்சி எப்படி உனக்குள்ளும் நீ என்னருகிலும் வந்த.அதே மாதிரி நீயும் எனக்குள்ளும் கலந்திடுவ”

“கலந்தால் மட்டும் உங்களை எனக்குப் பிடிச்சிடுமா?” என்று கேட்டவளுக்குக் கண்கள் கலங்கியது.

“எதுக்கு இப்போ கண்கலங்குற.அவ அவ வம்சி மாதிரி புருஷன் வேணும்னு ஏங்குறாங்க.இங்கயா வம்சியே புருஷனாகக கிடைச்சும் வாழமாட்டுங்கிறாளுக என்னத்தைச் சொல்ல”என்றவன் தலையனையில் கைகளை விரித்து அக்கடான்னு படுத்தான்.

அவனது கண்கள் மூடியிருந்தாலும் அவன் பலமான யோசனையில் இருக்கிறான் என்று புரிந்ததும் எழுந்து அப்படியே பால்கனியில் போய் உட்கார்ந்தாள்.

பகலின் மடியில் துயில்கொண்டு இரவின்பொழுது முழித்து பால்போல மின்னும் நிலவினைப் பார்த்து அமர்ந்தவளுக்கு வேறு எந்த சிந்தனையும் வரவில்லை.

‘நேற்றுவரைக்கும் நம்ம வீட்டுல இருந்தோம்.அம்மா, சித்தின்னு என் வீடு என் உலகமென்று இருந்தேன்.இப்போ தாலியை மாற்றிக்கோர்த்து அந்த கார்மேகத்தின் வாய்கொழுப்பினால் நம்ம இங்க வரவேண்டியாதாகிற்றே!” என்று புலம்பினாள்.

இந்நேரத்துக்கு இந்த பால்கனியில் வந்து உட்கார்ந்து புலம்ப வைச்சிட்டியே அத்தான் என்று திரும்பி வம்சியை பார்த்தாள்.

அவன் கட்டிலில் இல்லை”ஐயோ!எங்கப்போனாங்க?”என்று அறைக்குள் எல்லாஇடத்திலயும் தனது கண்களை சுழற்றிப்பார்த்தாள்.அவன் ஒரு இடத்திலும் இல்லை.

‘ஒருவேளை எழுந்து மொட்டை மாடிக்குப் போயிட்டாங்களோ?’என்று அவளும் எழுந்தாள்.

அறைக்குள் மீண்டும் ஒருமுறை சுற்றிப்பார்த்தாள்.ஒரு இடத்திலும் இல்லை.பாத்ரூம்ல தண்ணீர் சத்தம் கேட்குதா? என்று காதை வைத்துப் பார்த்தாள்.

அங்கு ஆளிருக்கும் சத்தமேயில்லை.

‘எங்கப்போனாங்க இந்த அத்தான்.கதவைத் திறந்தாவது பார்க்கலாம் என்றால் யாராவது பார்த்து என்ன விசயம் என்று கேட்டால் என்ன சொல்லுவது?” என்ற பயம் வந்தது.

‘என்ன ஆனாலும் பரவாயில்லை’ என்று கதவைத் திறக்க முயன்றாள்.அது அவளது உயரத்தைவிடவும் மேலாக தாட்பாள் போட்டிருந்தது.

அதனால் எப்படி இதை திறக்கிறது? என்று யோசித்தாளே தவிற,உள்பக்கமாக இவவ்வளவு உயரத்தில் தாட்பாளைப்போட்டிருக்கே! எப்படி வம்சி வெளியே போயிருப்பான்? என்று யோசிக்கவேயில்லை.

இதே அறிவோடவே இரு ஷிவானி.அதுதான் வம்சிக்கு நல்லது!

அப்படியே ஒரு சேரினை தூக்கிப்போட்டவள், கட்டியிருந்த புடவையைத் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு,அதில் ஏறி நின்று திறக்க முயன்றாள்.

அப்போது அவளது இடையில் யாரோ கைப்போடவும் பயந்து அலறினவள் திரும்பிப் பார்க்க வம்சி நின்றிருந்தான்.

“ கொஞ்ச நேரம் என்னைக் காணலைன்னதும் எப்படித் தேடின பார்த்தியா?உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே அப்புறம் எதுக்குத் தேடின?ம்ம்ம்” 

“உங்களை ஒன்னும் நான் தேடலையே.நீங்க இல்லைன்னா எனக்கென்ன வந்துச்சு.நான் இந்த தாட்பாள் எட்டுதான்னு பார்த்தேன்.ஆத்திர அவசரத்துக்கு உதவுமேன்னுதான் பார்த்தேன்”

“க்கும் நம்பிட்டேன் குள்ளச்சி.அதுதான் நீ என்னைத் தேடினதைப் பார்த்தனே!அப்போ இந்த அத்தான் மேல காதல் இருக்கு”

“இல்லை”

“ஓஹோ அப்போ நான் காதலைக் கொஞ்சம் அதிகமாகவே உனக்குத் தந்திடுறேன்.நம்ம பெரியவங்க என்ன சொல்லிருக்காங்க?”

“என்ன சொல்லிருக்காங்க?”

“நம்மளிடம் எது அதிகமா இருக்கோ அதை அடுத்தவங்களுக்கு பகிர்ந்துக் குடுக்கணும்னு சொல்லிருக்காங்கள்ல”

“ஆமா”என்று தலையாட்டினாள்.இன்னும் அவளது இடுப்பிலிருந்து அவன் கையெடுக்கவில்லை என்பதால் கொஞ்சம் உடலை அங்கும் இங்கும் அசைத்துக்கொண்டிருந்தாள்.அவள் என்ன செய்தும் அவன் கையை விட்டபாடில்லை.

“அதுதான் என்கிட்ட இருக்கிற நிறைய காதலை உனக்குத் தர்றேன் வாங்கிக்க”

ஐயோ!என்று அதிர்ந்தவளின் நடு வயிற்றில் முத்தம் கொடுத்தான்.

அவனது சூடனா உதட்டின் வெப்பம் அவளது உந்திச்சுழி வழியாக மொத்தமாக உள்ளே இறங்கியது.

ஷ்ஷ்ஷ்ஆஆஆஆ என்று தன்னையறியாமல் அனத்தியவள் அவனது தலையைத் தன்னிடமிருந்து தள்ளிவிடப்பார்த்தாள்.

ஆனால் அவளது கால்கள் நழுவியதில் சேரில் இருந்துக் கீழே விழப்பார்த்தாள்.

வம்சி அவளை அப்படியே அலேக்காகத் தூக்கிக்கொள்ளவும்,அச்சோ என்று துள்ளியவளின் பின்பக்கம் அப்படியே பற்களை வைத்து வசமாகக் கடித்துப் பிடித்துக்கொண்டான்.

“ஐயோ மச்சான் கடிக்காதிங்க.ச்சை எங்க கடிக்கீங்க.உங்களுக்கு மாமாக்கிட்ட சொல்லி நல்ல எலும்புக் கறி வாங்கிப்போடச் சொல்லணும்” என்று அழுதாளா திட்டுறாளான்னு தெரியாமலே பேசிக்கொண்டிருந்தாள்.

வம்சியோ அவளின்மேல் காதலில்பித்தாகி மொத்தமாக மயக்கத்தில்”அடியேய் குள்ளச்சி ஐஞ்சடியில் இருந்துட்டு இந்த மச்சானை ஏன்டி இப்படி மயக்குற.முடிலடி”என்றவாறே மீண்டும் கடித்துவைத்தான்.

அவளோ கால்களை உதற,அவனோ மொத்தமாகத் தூக்கிக்கொண்டு அப்படியே நின்றிருந்தான்.

ஷிவானியும் அவன் கீழே இறக்கிவிடுவான் என்று காத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அவன் இன்னும் தன்னை இறக்கிவிடாமல் இருக்கவும் க்கும் க்கும் என்று தொண்டையைச் செறுமினாள்.

ஆனால் அவனோ விடாது பிடித்திருந்தான்.

“இறக்கிவிடுங்க தலைசுத்துது” என்று அழுதாள்.அவளது அழுகையைப் பார்த்துத்தான் கொஞ்சமே கொஞ்சம் கீழே இறக்கினான்.

ஆனாலும் முழுதாக இறக்கிவிடவில்லை.

அவனது முகம் ஷிவானியின் நெஞ்சில் சரியாக வந்ததும் நிறுத்தி, இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்தான்.

அவளுக்குத்தான் அவஸ்த்தையாக இருந்தது.

இறக்கிவிடுங்கத்தான் என்று முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டுச் சொன்னாள்.

“என்னைப் பார்த்து என் கண்ணைப் பார்த்துச் சொல்லுடி இறக்கிவிடுறேன்”

வம்சி அப்படி சொன்னதும் அவனது முகத்தைப் பார்க்க முயன்றாள் முடியவில்லை.கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

இந்தியா லிங்

https://www.amazon.in/dp/B0DDBSGL22

இங்கிலாந்து லிங்

https://www.amazon.co.uk/dp/B0DDBSGL22

அமெரிக்கா லிங்

https://kdp.amazon.com/amazon-dp-action/us/dualbookshelf.marketplacelink/B0DDBSGL22