துணைவி மனைவி 14

Thu14

துணைவி மனைவி 14

14 இவள் துணைவி 

      அவள் மனைவி!!

சாப்பாடு வச்சிருக்கேன், 

சரிம்மா 

அப்புறம் மதியத்துக்கு ஜூஸ் இருக்கு

சரிம்மா 

இப்பல்லாம் மதிய சாப்பிட கூட வீட்டுக்கு வர்றது இல்ல... அதுக்காக சாப்பிடாம இருந்திட கூடாது மாமா கண்டிப்பான பார்வை வேணி உமாபதியை பார்க்க 

சரிம்மா சரிம்மா ஒழுங்கா சாப்பிடுடுறேன் நீயும் சாப்பிடாமல் கிடக்க கூடாது சரியா , சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடு , இவன் வந்த பிறகு உன்னால நிக்க கூட முடியாது.. இவன் பின்னாடி தான் சுத்த வேண்டியது இருக்கும்... 

ம்க்கும், நான் படுத்து தூங்கிட்டா இந்த வீட்டை வேற யார் பார்ப்பா ... அத்தயையும் மாமாவையும் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குல்ல மாமா

"உன் அத்தையையும் மாமாவையும் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்குதான்.. இல்லன்னு சொல்லல வேணி , அதுக்காக உன்னை பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் உனக்கு இருக்கு அப்பப்போ குட்டி தூக்கம் போட்டு எழும்பினாதான் மண்டை ரிலாக்ஸா இருக்கும்... அவங்க தூங்குற நேரமாவது தூங்கி எழும்பு 

"சரிங்க சார்" என்று அவள் கிண்டலாக சிரிக்க அவள் உச்சந்தலையை தடவி விட்டவன்.

இந்த சிரிப்பு உனக்கு அழகா இருக்கு...

அப்படியா, அப்போ இனி அடிக்கடி இதே மாதிரி சிரிக்கிறேன் என்ற வேணியின் சிரிப்பை பார்த்துக் கொண்டே பதி கார் வெளியே போனது.. கேட்டை கார் தாண்டவில்லை , அதற்குள் காதல் பிசாசே!! காதல் பிசாசே!! என்ற பாடல் அவன் போனில் அதிர அதை எடுத்து காதில் வைத்தான் 

"ஏண்டி ஒரு நிமிஷம் கூட என்ன நிம்மதியா இருக்க விட மாட்டியா? 

"யாரு கிட்டப்பா பேசிகிட்டு இருக்க என்று கௌரி தலையை திருப்பி பார்க்க 

"அது ஹான், பேங்க்ல இருந்து லோன் வேணுமா லோன் வேணுமான்னு லட்ச தடவ போடுறாங்கடா அப்பா என்னதான் செய்வேன்.... கோவம் வந்துடுதுல்ல... 

"காலையில 8:00 மணிக்கு பேங்க் திறந்துடுவாங்களாப்பா என்றதும் திருட்டு முழி முழித்த உமாபதி 

"இது ஃபாரின் பேங்க்டா மகனே

"ஓஓஓஓ, ஃபாரின்ல இருந்து உன்னை எல்லாம் மனுசன்னு நம்பி போன் போடுறாங்க .. நீ எவ்வளவு மரியாதையா பேசணும் , டி போட்டு பேசுற , முதல்ல சாரி கேளு... மரியாதை தெரியாத பெல்லோவா இருக்கியே உன் மம்மி உனக்கு இதெல்லாம் சொல்லி தரலயா? ஹான் என்று அவன் முறைக்க 

"நேரம் தான் என்று தலையில் அடித்து கொள்ள... அங்கே கேட்டுக் கொண்டிருந்த திரவியா கிளுக்கு சிரிக்க...

"சாரி மேடம்  

"இப்படி சாரி சொன்னா எல்லாம் அக்செப்ட் பண்ண முடியாது சார், நீங்க ஏகப்பட்ட டி போட்டு இருக்கீங்க ஒரு டி போட்டா கன்னத்துல முத்தம் கொடுத்து சாரி கேட்கலாம்.. ஆனா , நீங்க போட்ட டியோட எண்ணிக்கை ஜாஸ்தி ... அதுக்கு உதடு கூட பத்தாது ஏகப்பட்ட இடத்தில் கொடுக்க வேண்டியது இருக்கும் போல இருக்கே , 

செருப்பு இந்த மாதிரி பேசாதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்... கௌரி மீண்டும் தன் தந்தை முகத்தை உத்துப் பார்க்க

"இல்லடா செருப்பு கடிக்குதுன்னு சொன்னேன்

"நீ ஷூ போட்டு இருக்கப்பா .. இப்ப எல்லாம் நீ லூசா மாறிட்டு இருக்க , அடிக்கடி தனியா சிரிக்கிற, போனை போனை வெறிச்சு வெறிச்சு பார்க்கிற, ராத்திரி எல்லாம் தூங்குறது இல்ல ,கொட்ட கொட்ட முழிச்சுக்கிட்டு கிடக்குற.. அப்படியே தூங்கினாலும் தூக்கத்துல சிரிக்கிற .. உனக்கு ஏதோ வியாதி வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்... அம்மாக்கிட்ட சொல்லி , உனக்கு டாக்ட்டர் அப்பாயிண்ட்மெண்ட் போட்டு செக்கப் பண்ண சொல்லணும் ... மகன் வாயை விழுந்து பொத்தியவன் 

 "சும்மா இருடா அவ ஏற்கனவே காதல் பைத்தியம் பிடிச்சு சுத்துவா, நீ பேசறது எல்லாம் அவளுக்கு கேட்டது என்ன விடவேமாட்டா என்று பதி மனசுக்குள் புலம்பிக் கொண்டு , 

"கௌரியை இன்னும் ஸ்கூல்ல கொண்டு விடல...

"சரி மாமா விட்டதும் பேசவா ? 

"என்கிட்ட அப்படி என்ன பேச போற?

"ஏதாவது பேசுவேன் ... 

"சரி வை ..என்று போனை கட் பணணி வைத்து விட்டான்.. 

முதல் வாரம் பதி தன்னை பார்க்க வருவான் என்று திரவியா காத்திருந்தாள்.. வேண்டுமென அவன் போகவில்லை...

"ஏன் மாமா வரல.. நான் உங்களுக்காக வாசல்லையே காத்துகிட்டு இருந்தேன்.. 

" நான் தான் சொன்னேனே வர மாட்டேன்னு, நீ தான் என்னை கட்டாயப்படுத்தி தாலி கட்ட வச்ச. நீதான் என்ன கட்டாயப்படுத்தி பேச வச்சுக்கிட்டு இருக்க... நீ தான் கட்டாயப்படுத்தி , என்ன வாழ இழுத்துகிட்டு இருக்க.... எனக்கு உன் மேல எந்த விருப்பமோ ஆசையோ வரல .. நான் எதுக்கு உன்ன பாக்க வரணும் என்றவன் வெடுக் பேச்சில் அங்கே அமைதி நிலவ ...

"ஹலோ என்னாச்சு ... 

"இல்ல நீங்க இப்படி எல்லாம் இன்சல்ட் பண்ணிணா, உங்களுக்கு போன் போட்டு தொல்லை பண்ண மாட்டேன்னு நினைக்கிறீங்க போல....  

"மானம் கெட்டவளே  

"அதை வச்சி மாடா மேய்க்க முடியும் ..விடுங்க விடுங்க, உங்களுக்கும் எனக்கும் நடுவுல மானம் மரியாதை ப்ளடி எதுக்கு வர்றான்??? லவ் லவ் லவ் ஓன்லி கணவா..

"ஊப்ஸ்இஇஇ 

"நீங்க உங்க பாட்டுக்கு திட்டுங்க... நான் மூணு நேரம் சாப்பிடுறேனோ இல்லையோ, உங்களுக்கு போன் போட்டு தொல்லை பண்ணத்தான் செய்வேன் கணவா ... காலையில போன் போட்டாச்சு இனி மதியம் லஞ்சுக்கு போன் போடுறேன்... இப்போ கிளாஸ் இருக்கு பாய் நச்சென்று ஒரு முத்தம் வைத்துவிட்டு கீங் என்று சத்தம் வர 

மனதை மறைத்து வார்த்தைகளை கோர்த்து வெறுப்பாக பேசிவிடலாம்... ஆனால் முகத்தில் பாவனை மறைக்க முடியுமா? இல்லை மனதில் ஆசை மறைக்க முடியுமா? அவள் நச்சென வைத்த முத்தம் இன்னும் காதில் கேட்க....உச்சி முடி வரை நட்டுகொண்டு நின்றது அவனுக்கு.... 

அங்கும் எங்கும் பார்த்துவிட்டு மெல்ல அந்த போனில் தன் உதட்டைப் பதித்து இச் என்று வைத்துவிட 

ஐஐஐஐஐஐஐஐஐஐஐஉ நான் இன்னும் போன் வைக்கலையே என்று திரவியா அங்கே கத்த 

ஷட்இஇஇஇஇ என்று இவன் தலையில் அடித்துக் கொண்டான்

முத்தம் தானே மாமா தந்தீங்க... 

"ப்ச் இல்லையே பல் வலிச்சது, அதான் உதட்டை வளைச்சேன் , இவளை நம்பி திரையைப் பார்க்காமல் போன் கட் ஆகிவிட்டதா இல்லையா என்று யோசிக்காமல் முத்தம் வைத்த தன் மடத்தனத்தை நொந்து கொண்டான்

நம்பிட்டேன் மாமா, உங்க முத்தம் பத்திரமா என் உதட்டில வந்து ஒட்டிக்கிச்சு ... என்ன காரமா இருக்கு காலையிலேயே உப்புமா சாப்டீங்களா நெய் வாசம் கமகமக்குது கண்ணு சொக்க வைக்குது இன்னொரு முத்தம் கிடைக்குமா? இவன் தான் பதறி போனை வைத்து விட்டான்...

தினமும் காலை மாலை இரவு என்று ஃபோன் மறக்காமல் வர ஆரம்பித்தது... 

ஆபீஸ்ல வேலை ஜாஸ்தியா இருக்கு வேணி மதியம் சாப்பாட்டுக்கு வர முடியாது என்று வேணியிடம் தலையை சொரிய...

"அதுக்கு என்ன மாமா நான் உங்களுக்கு சுட சுட சாப்பாடு ஆபீஸ்க்கு கொண்டு வந்துடவா

அச்சச்சோ அது , நீ ஆபீஸ்க்கு எல்லாம் வர வேண்டாம்மா,, நீ நம்ம டிரைவர் கிட்ட சாப்பாடு கொடுத்து விடுகிறாயா? இல்லை வேண்டாம் சும்மா சும்மா கதவை தட்டி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்க... காலையில போகும் போதே பேக் பண்ணி கொடுத்துடு, நான் கொண்டு போயிடுறேன் 

சுட சுட சாப்பிட்டாதான பிடிக்கும்னு சொல்லுவீங்க

ஆமா, ஆனா அது அப்போ, இப்போ நிலைமை இப்படி இருக்கு.... கொஞ்ச நாள் தான்ம்மா அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்....

"ம்ம் சரி மாமா நாளிலிருந்து காலையில கௌரிக்கு செய்யும் போதே உங்களுக்கும் செஞ்சு லஞ்ச் பேக் பண்ணிடுறேன்" என்று காதல் பள்ளிக்கு செல்லும் உமாபதிக்கு அவள் பார்த்து பார்த்து நேர்த்தியாக செய்து அடுக்கி வைத்தாள்

இவனோ மதியம் சாப்பிடும் நேரம் அழைக்கும் திரவியா அழைப்பிற்காக காத்திருக்க , அவள் சாப்பிடும் வரை வளவளத்து கொண்டே இருப்பாள் . நிறைய முத்தங்கள் கொடுப்பாள் ... அந்த முத்தத்தை பதி வேண்டா வெறுப்பாக வாங்கினாலும் , காலையில ஏழு முத்தம் வந்தது இப்போ மூணு தான் வந்திருக்கு என்று மனதிற்குள் முறைத்துக் கொள்ளும் அளவு மனதால் அதிகம் அவளிடம் நெருங்க ஆரம்பித்தான்....  

மனம் நெருங்க ஆரம்பித்தால், உடலும் அவள் பின்னால் போகத்தானே செய்யும் !!முத்தம் மட்டுமா கொடுப்பாள் அவள்தான் கேடி ஆயிற்றே, ஒளிவு மறைவே இல்லாமல் தான் பேசி வைப்பாள் இவன்தான் சிவந்து போய் கண்ணை மூடி கனா காண ஆரம்பித்து விட்டான்..... 

பள்ளியில் மகனை இறக்கி விட்டவன், அவனே திரவியாவுக்கு அழைப்பு விடுக்க ... குளித்துவிட்டு டவலோடு வெளியே வந்த திரவியா... போன் அதிரவும் அதை எடுத்து காதில் வைத்திட

ப்ச் எதுக்கு போன் எடுக்க லேட் ?

மாமா குளிக்க போயிட்டேன் , நீங்க போன் போட்டு இருக்கீங்கன்னு அவசர அவசரமா குளிச்சிட்டு ஓடி வந்தேன்... 

வண்டியை ஓட்டிக்கொண்டே ஹெட்போனில் அவள் பேசியதை கேட்டவனுக்கு, தொண்டையில் எச்சில் அடைத்தது ....

"நீங்க பேசுங்க நான் அப்படியே டிரெஸ் மாத்திக்கிட்டே பதில் சொல்றேன்... காலேஜுக்கு லேட் ஆகிடுச்சு .

ட்ரெஸ் போடலையா என்று உள்ளுக்குள் ஒரு கிளுகிளுப்பு வருவதை அடக்க முடிய வில்லை 

இந்த தாலி வேற அப்பப்ப குத்தி சிவந்து போகுது ... குழிக்குள்ள போட்டு அமுக்க வேண்டி இருக்கா, அது அங்கங்க குத்தி வைக்குது மாமா ... காரை நிறுத்தி விட்டான் சீட்டில் தலையை சாய்த்தான் அவள் சொல்லும் இடங்களைப் மனதுக்குள் ரசித்தான்... 

ஜாக்கெட் வேற உள்ள நுழைவேனான்னு அடம் பண்ணுது எரிச்சல் குரல் வர 

ஜாக்கெட்டா? 

ஆமா மாமா அளவு பத்தல எப்படி உடம்பு போட்டுன்னு தெரில தைச்சு வச்ச ஜாக்கெட் உள்ளார போகல ரெண்டு கொக்கி மாட்ட முடியல இவளுக வேற சேலை கட்டிட்டு வான்னு சொல்லிட்டாளுக, இந்த ஒரு ஜாக்கெட் தான் இருந்தது அதுவும் போச்சு ஆவ்ஊஊஊஊ 

என்னடி 

மாட்ட முடியல மாமா தலையை கோதினான்

சேலை கட்டுறாளா மூச்சு அடைத்தது 

கட்டுறது எல்லாம் சரிதான் அங்க இங்க தெரியாம கட்டிட்டு போ 

அங்க இங்கன்னா ஓஓஓ இடுப்பு தொப்புளா மாமா

வெட்கமே கிடையாது அதுதான் இழுத்து பின் பண்ணிட்டு போ 

அதை எப்படி காட்டுவேன் நீங்க முத்தம் கொடுக்கவே அதை எல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேனே..

இப்படி பேசாதன்னு சொல்லி இருக்கேன் பேசு பேசு கேட்கிறேன் நல்லா இருக்கு என்றது இதயம் 

அப்படித்தான் பேசுவேன் போன்ல உப்பு சப்பா முத்தம் தர்ற மாதிரி எக்ஸாம் நேர்ல தந்து ஏமாத்த முடியாது மாமா உங்க கையால என் இடுப்பு சேலை விலக்கி முதல் முத்தம் தொப்புள் குழியில உங்க மீசை குத்தி கிழிக்க நச் நச்னு தரணும்

ஸ்ஆஆஆஆஆஆ மேல் மூச்சு கீழ் மூச்சி பதி வாங்கினான் 

நான் சுகம் தாங்காம உங்க உச்சி முடியை கசக்கி சொக்கி போய் நிக்கணும் அப்படி ஒரு முத்தம் வேணுமாக்கும்... 

பிறகு பேசுறேன் போனை வைத்து விட்ட பதிக்கு கை கால் நடுங்கியது... அங்கே கண்ணாடி முன்னே உதட்டை கடித்து கொண்டு திரவியா சிவந்து போய் நின்றாள்...

மாமா இந்த வாரமும் வர மாட்டீங்களா கொள் கொள் என்று அவள் இருமும் சத்தம் வந்தது 

என்னாச்சு 

ப்ரெண்ட்ஸ் கூட நைட் பிறந்த நாள் பார்ட்டி போனேன் அது ஒத்துக்கல காய்ச்சல் ஹச் ஹச் ஹச் 

உங்க அம்மாவை வர சொல்ல வேண்டியதுதான 

நான் தனியா வீடு எடுத்து இருக்கிறது தெரிஞ்சது செத்தேன்... நல்ல உடம்பு வலி சுடுதண்ணீ வைக்க கூட எழும்ப முடியல மாமா ஹச்இஇஇஇஇ ஹச்இஇஇஇஇ... சரி மாமா டயர்டா இருக்கு பிறகு பேசுறேன் நலிந்த குரலில் போனை வைத்தவள் அதன் பிறகு அசைக்கவே இல்லே இவன் அழைத்தாலும் எடுக்க வில்லை... 

"என்ன மாமா தீடிர்னு பெங்களுர் போகணும்னு வந்து சொல்றீங்க 

ப்ளீஸ்மா அர்ஜெண்ட் வேலை ரெண்டு நாளுக்கு மட்டும் பேக் பண்ணிடு மண்டே வந்துடுறேன் அரக்க பறக்க பதி குளிக்க ஓடினான் 

சரி மாமா .... தூங்கும் மகன் நெற்றியில் முத்தம் வைத்தவன் வாசலில் கையசைத்த வேணிக்கு தலையாட்டி விட்டு ஏர்போர்ட் நோக்கி வண்டி பறந்தது...

சென்னை ___விமானம் இன்னும் சிறிது நேரத்தில் கிளம்ப தயாராகும் என்ற அறிவிப்பு வர .... சென்னை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தான் உமாபதி!! 

அவள், அவனின் அன்பின் தவறு 

நேசத்தின் பிழை

என்று மூளைக்கு தெரிந்தாலும் இதயம் ஏற்க மறுத்ததே!!