துணைவி18
Thunai18
18 இவள் துணைவி
அவள் மனைவி !!
ஒரு ஓட்டை போன் வேணி பாதுகாப்பிற்கு வீட்டில் கொடுத்து விட அதிலிருந்து போஸூக்கு தான் காஷ்மீர் வருவதாக மெசேஜ் அனுப்பினாள் ...
பரேட்ஏஏஏஏஏஏஏ லேப்ட் ரைட் , லேப்ட் என கோச்சிங் கொடுத்துக் கொண்டிருந்தவன் போன் மெலிதாக அசைய எடுத்துப் பார்த்தான்... கண்களை விரித்தான்
"இவ்வளவு ரிஸ்க் எடுத்து இவ இப்போ எதுக்கு இங்க வர்றா என்று சற்று கோபம் கூட வந்தது
அவனுக்கு தானே தெரியும் இங்கிருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிரிகளால் எப்போது வேண்டுமானாலும் அமைதி குலையும் என்று
அவன் நினைத்தது போலவே.. வேணி வந்து காஷ்மீரில் இறங்க ... அங்கங்கே குண்டு வெடிப்புகள் நடக்கவும்..
வேணியோடு வந்த காலேஜ் மாணவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மேஜர் போஸூக்கு வழங்கப்பட்டது ...
மேஜர் ஆடையில் மிடுக்காக நடந்து வந்த அவனை கூட்டத்தோடு கூட்டமாக வேணி கண்ணை உருட்டி பார்க்க.... புகைமண்டலமாக கிடந்த அந்த இடத்தில் வந்து நின்றவன், அந்த கூட்டத்தில் ஐந்து வருடத்திற்கு முன் கடைசியாக பார்த்துவிட்டு வந்த தன் காதலியை தேடினான்... அவனைப் பார்த்ததும் ஒரு உருவம் பெண்கள் கூட்டத்திற்குள் ஒளிய தலையை தூக்கி அவளை உத்துப் பார்த்தான்...
அவளும் அவனைப் பார்க்க..
"டோன்ட் கெட் பேனிக், எல்லாரும் போய் வண்டியில் ஏறுங்க உங்களை ஊருக்கு பத்திரமா அனுப்பி வைக்க வேண்டியது என்னோட கடமை ... ஐயம் மேஜர் போஸ் கெளரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு எல்லோரையும் வண்டியில் ஏற வைத்தவன், பின்னால் வண்டியில் ஏறப்போன நீலவேணி ஜடையை பிடித்து இழுக்க,
ஆஆஆ பொத்தென்று வந்து அவன் முன்னால் இடித்து நின்ற அவளை முறைத்து பார்த்தவன்
"யாருகிட்ட கேட்டுட்டுடி இங்க வரைக்கும் வந்த...
"ஹான் அது அது
"இப்போ போ ராத்திரி இருக்கு உனக்கு... என்றவன் மின்னல் போல அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்து அவளை அணைத்து விடுவிக்க, வேணிக்கு இவ்வளவு நேரம் இருந்த பயம், பதட்டம் எல்லாம் அவன் ஒற்றை அணைப்பில் போய்விட்டது...
ஐந்து வருடத்திற்கு முன்னால் அவளை பார்க்கும் பொழுது மெலிந்த உடலோடு இருந்தாள் இப்பொழுது முழு பெண்ணாக அவன் முன்னால் நின்ற காதலியை தன் புல்லட்டின் மீது சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருக்க...
மிலிட்டரி கேம்பஸ் உள்ளே அவர்களை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளே அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்திருந்தனர்.....
இரவு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கிக்கொண்டு போஸ் கீழே நிற்க .. வேணி மாடியில் கையை கட்டிக்கொண்டு அவனை பார்வையால் களவாடிக் கொண்டிருந்தாள்..
அத்தனை பேரையும் சுற்றி வந்து கொண்டிருந்த போஸ் கண்கள் நொடிக்கு ஒரு முறை தன் காதலி இருக்கும் இடத்தை பார்த்து பார்த்து மீண்டது ...
தன்னை தேடி வந்த அவளை பார்க்க கசக்குமா என்ன ?
ஓகே எல்லாரும் போகலாம் என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு தாவிக் குதித்து அவள் நின்ற இடத்திற்கு போஸ் ஓடி வர... இவள் பதறிப் போய் அறைக்குள் நுழைய போக அவளை இடையோடு தூக்கிக்கொண்டு தன்னறைக்குள் போய் விட்டான்
"அய்யோ போஸ் மாமா அங்க யாராவது என்ன தேடுவாங்க
"தேடுனா வேணியை மேஜர் காக்கா தூக்கிட்டு போயிடுச்சுன்னு சொல்லிடுறேன் ... என்ன பாக்குறதுக்கு தான் இவ்வளவு தூரம் வந்த , ம்ம் நல்லா பாரு என்று அவள் முன்னாலேயே யூனிஃபார்மை கழட்டி பத்திரமாக கண்ணில் ஒத்தி மேஜை மீது வைத்தவன் அலமாரியை திறந்து இரவு ஆடையை எடுக்க... அவன் முதுகு முழுவதும் வீர தழும்புகள்!!
"பரவாயில்லை என் பொண்டாட்டிக்கு இந்த அளவுக்கு எல்லாம் வீரம் வந்து இருக்கே ... மிலிட்டரிக்காரன் பொண்டாட்டி!! நீ எல்லாம் வாளை எடுத்து நாலு பேரையாவது கொல்லனும்டி .. ஆனா நீ போர்னு நியூஸ்ல வந்தாலே பெட்டுக்கு கீழ போய் ஒளிஞ்சிக்கிற, உன்னை எல்லாம் கட்டி எப்படி அடுத்த சந்ததியை வீரமா உலாவவிட போறேனோ தெரில.. என் புள்ளை உன்ன மாதிரி கோழையா பிறந்துடுச்சுன்னா என்ன பண்றது" என்றவன் பேசிக்கொண்டே திரும்ப .. அவளோ அவள் காயத்தை பார்த்து அழுது கொண்டிருக்க
ப்ச் தலையை உதறிக் கொண்டு அவள் அருகில் வந்து உட்கார்ந்தவன் வேணியின் கையை தன் கைக்குள் பிடித்து வைத்துக்கொண்டு
மிலிட்டரிக்காரன் பொண்டாட்டிடி நீ, இப்படி குட்டி காயத்துக்கு எல்லாம் அழுதா , எப்படி ?
"என் பதட்டம் பயம் எல்லாம் உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு தான் மாமா ..
ஏன் எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்ன பண்ணுவ ??
உங்க கூடவே சேர்ந்து வந்துடுவேன் .."
"சாகுற அளவுக்கு துணிவு இருக்குறவளுக்கு வாழ்ற அளவுக்கு துணிவில்லையா... ஒருவேளை நான் செத்தாலும் எதிரி நூறு பேரை கொன்றுட்டுதான்டி சாவேன்... நான் செத்து தேசிய கொடி என் மேலே கெடந்து, உன் முன்ன நான் பிணமா இருந்தாலும் உன் கண்ணுல ஒத்த சொட்டு அழுகை வரக்கூடாது அதுதான், நீ என் காதலுக்கு கொடுக்கிற மரியாதையாக இருக்கும் " போஸ் மீசையை திருகி சொன்ன அவன் பேச்சு சகிக்கவில்லை அவளுக்கு .,
"போங்க மாமா நான் வாழ ஆசைப்படுறேன். நீங்க சாவ பத்தி பேசுறீங்களே" என்றவன் கண்ணீர் இன்னும் வெடித்து விட, அவளை அப்படியே இழுத்து அணைத்து கொண்டான் போஸ்
"யாராவது தேடுவாங்க மாமா
"யாரும் தேட மாட்டாங்க படு "என்று வேணியை தன் படுக்கையில் படுக்க வைத்துக்கொண்டு இரவு முழுவதும் இருவரும் ஐந்து வருட காதல் கதையை பேசிக்கொண்டிருந்தார்கள்
"மூணு மணிக்கு எல்லோருக்கும் பிராக்டீஸ் ஆரம்பிச்சிடும் அதுக்கு பிறகு உன் ரூமுக்கு போ, ஒரு வாரத்துல நிலைமை சரியாகிவிடும் பத்திரமா எல்லாரையும் ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்
"நிலமை சரியாகாதே இருக்கலாம் போஸ் மாமா..
ஹாஹா
உங்க கூட இப்படியே இருக்கணும் போல தோணுது
"இப்படியே இருக்கலாம் தான் ஆனா மிலிட்டரிக்காரன் கொஞ்சம் அவசரப் புத்தி உள்ளவன் தெரியாதா என்ன ??என்றவன் கண்ணைச் சிமிட்டி அவள் பக்கத்தில் தலையை சரித்து போஸ் படுக்க அவன் பார்வையில் இவள் பருவம் எய்த முதுகை காட்டி படுத்து கொண்டவள்
"இன்னும் ரெண்டு மாசத்துல தான் ஊருக்கு வந்துருவிங்களே, அப்பா அம்மா கிட்ட வந்து உங்க பொண்ணு குடுங்கன்னு கேட்டு, கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து எவ்வளவு அவசரம் வேணும்னாலும் படுங்க என்றவள் காதுக்குள் அவன் மீசை உரச அவசர காரன் தான் ஆனால் , காதல்காரன் ஆயிற்றே, கடினப்பட்டு விலகி படுத்தான்...
காதல் என்பதே அவசரம் தானோ?!
ஒரு நாள் விடுப்பு எடுத்து கொண்டு அவளை அழைத்து கொண்டு பாதுக்காப்பான இடங்களில் அவளோடு சுற்றியவன்... பனி மூடி கிடந்த அழகிய கோவில் ஒன்றின் முன் அவளை அமர வைத்து அவள் அருகே அமர்ந்த போஸ்
இது என் சம்பளத்துல உனக்காக வாங்கி வச்ச செயின் .. வரும் போது கொண்டு வர நினைச்சேன் என்று போஸ் தங்க சங்கலி ஒன்றை அவள் கையில் கொடுக்க ..
டாலர் பின்னே மறைவாக போஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது
போட்டுக்கடி...
என்ன பொறுத்தவரை இது தாலியை விட புனிதமானது மாமா.... உங்களுடைய ஒவ்வொரு துளி ரத்தத்தில உருவான இதுதான் எனக்கு தாலி நீங்களே உங்க கையால போட்டு விடுங்க என்றதும் அதைத்தான் அவனும் எதிர்பார்த்தான் போலும் வேணி கழுத்தில் அவன் அந்த செயினை போட்டு விட மரத்தில் இருந்த பனித்துளிகள் படபடவென அவர்கள் இருவர் மீதும் விழ ....
அப்போ தாலி கட்டியாச்சு பஸ்ட் நைட் கொண்டாடிட வேண்டியது தான என்று போஸ் வேணி கழுத்தில் கை போட
வெவ்வவே என்று அவன் கையில் அகப்படாது ஓடினாள்... பல கிலோ மீட்டர் தொலைவை நொடியில் ஓடிக்கடக்கும் வீரன் ..அவளிடம் தோற்றான்....
இதோ இன்று நாளை என்று அவர்கள் ஊர் போகும் நாட்கள் கூடி கொண்டே போக... போஸூக்கும் சரி வேணிக்கும் சரி இது அழகிய தேனிலவு காலமாகத்தான் போனது ..தினமும் இரவு அவளை தூக்கி கொண்டு போய் தன் படுக்கையில் கட்டி கொண்டு படுத்தவன் முதலில் விலகியவன், விரகதாபம் அவள் அருகே தீயாக எரிய ஆரம்பிக்க.... பனிமழை வெளியே பெய்ய, குளிரில் நடுங்கி போர்வை உள்ளே சுருண்ட அவளை தூக்கி தன் மீது போஸ் போட்டு கொள்ள...
"குளுருதா
"ஸ்ஊஊ ரொம்ப போஸ் மாமா ...
"அப்போ நான் சும்மாதான இருக்கேன் இறுக்கி கட்டிக்கடி.. என்றவன் கைகள் அவள் இடையை அழுத்த
ம்ம் அவனை அவள் இறுக்கி கொண்டாள் ....
குட்டிம்மா கரகரப்பான ஆண்மை குரல் தான் இப்போது அவளை மயக்கும் போதை வஸ்து ..
ம்ம்
ஐநீட் யூ என்று அவன் கிசுகிசுக்க
ஹான் அவள் பதறி விலகிட, அவள் கழுத்தில் அவன் காலை போட்டு விட்ட தங்கச் சங்கலி அவன் சட்டை பட்டனில் பட்டு அவளை மீண்டும் அவன் மீது சரிக்க ... போஸ் உதடு மெல்ல அவள் கழுத்தை உரச...
ஸ்ஆஆஆஆஆஆ என்றவள் கைகள் போஸ் முதுகை இறுக்கி கொள்ள
குட்டிம்மா
ம்ம் ஆவ் ஊஊஊஊ ஆவ் யாருக்கும் தெரியாது அங்கே ஒரு தாம்பத்திய பந்தம் ஆரம்பம் ஆனது... ஒவ்வொரு நாளும் ரசித்து வாழ்ந்தனர்...
ஒரு மாதம் காதலிக்க பட காதலிக்க ஒரு வாய்ப்பு
ஆம், போஸுக்கு கடவுள் அவளோடு வாழ ஒரு வாய்ப்பு கொடுத்தான் போலும் , இவளும் வாழ்ந்து கொள்ள ஒரு பெரும் வாய்ப்பு அது...
நாம் நம்பும் சிலர் ஏமாற்றுவது இல்லைதான்...
ஆனால் காலமும் சந்தர்பங்களும் சில சமயம் ஏமாற்றி விடும் ....
"மாமா சீக்கரம் வந்திடுவீங்க தான ... எல்லாரும் ப்ளைட்டில் ஏற இவள் போஸ் கையை நடுங்கி பிடிக்க
"ஒரே வாரம் தான்டி சேர்த்துடுவேன்".... இங்கே போர் மூளும் சூழல் இருப்பதால் அவர்களை தனி ப்ளைட்டில் அனுப்பி வைக்க அவசரமாக வேலை நடந்தது ...
ம்ம் ...
போஸ் மாமா" கண்ணீரோடு நின்ற அவள் கண்ணீரில் முத்தம் வைத்த போஸ்....
"எனக்கு எதாவது ஆகிடும்னு பயப்படுறியா ?
ம்ம் உதடு நடுங்க வேணி அவனை பார்க்க
"நீ உயிரோட இருக்கிற வரைக்கும் இந்த இதயத்துக்குள்ள நான் வாழ்ந்துட்டே இருப்பேன்... இந்த உடம்பு தாய் மண்ணுக்காக போனாலும் , என் உசுரு உன் இதயத்துல துடிச்சிட்டே இருக்கும்... என் உடம்புக்கு வேணும்னா அழிவு வரலாம்... என் காதலுக்கு அழிவு இல்லை, அது உன்னோடவே வாழும்.... நீ சாகும் வரை உன்னோட நான் வருவேன் அது மூச்சாகவோ காற்றாகவோ ஆனா உன்னோட நான் இருப்பேன் .... இந்த இதயம் உள்ள நான் எப்பவும் இருப்பேன் என்று போஸ் அவள் இதயத்தை தொட்டு காட்டியவன்.. ஏன் அப்படி பேசினான் அவனுக்கே தெரியவில்லை, மனதில் தோன்றியதை பேசி விட்டான் ...
அவசர பட்டு இருக்க வேண்டாமோன்னு தோணுதுடி என்றான் கரகரப்பான குரலில் ....
அவன் தலைமை ஏற்று தீவிரவாத கும்பல் உள்ளே போக போகிறார்கள் என்ன வேணும் என்றாலும் நடக்கலாம் ... சற்று நிதானித்து இருக்காலாமோ என்று இப்போது யோசித்தான் ....
"உங்களுக்காக வாழ்றேன் உங்களுக்கு என்ன கொடுத்ததுல எந்த தயக்கமும் இல்லை ....என் போஸ்மாமா என்ன ஏமாத்த மாட்டார் ... என்றவள் இதழில் இறுதி யாத்திரை முத்தம் கொடுத்தானோ??
அவள் ப்ளைட்டில் ஏற கிளப்பிய அடுத்த நொடி வேணி தகப்பனுக்கு போனை போட்டு விட்டான்
அவளை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள ஒரு வாரத்தில் வருகிறேன் என்றும் கூற அவள் பிடித்து கொடுக்கவில்லை நான் அவளை காதலிக்கிறேன் என்றான்
இப்பவோ அப்பவோன்னு எப்ப சாவேன்னு தெரியாத ஒரு மிஸ்ட்ரிகாரனுக்கு என் பொண்ணை கட்டி கொடுக்க மாட்டேன் "
"யோவ் வந்துக்கிறேன் அவளை தூக்கிட்டு போய் தாலி கட்டல நான் போஸ் இல்லை
"முடிஞ்சததை செய் உனக்கு என் பொண்ண தர மாட்டேன் என்று அவர் வைத்து விட்டவர்.. அவசரமாக மாப்பிள்ளை தேடிட
தாய் பக்கவாதம் வந்து அவஸ்தை பட, தகப்பன் இதய நோயாளி ஒரு பெண் வந்தால் தான் இனி சரியா இருக்கும் என்ற நிலையில் பெண் தேடிய உமாபதி வந்து மாட்டினான் .. அவனுக்கும் குடும்ப நிலையில் திருமணம் அவசரம் , அவருக்கும் ஊர் முழுக்க அடிதடி என்று சுற்றிய போஸ் வரும் முன் மகளை கரையேற்றும் அவசரம் வேணிக்கே தெரியாது கோவிலில் திருமண ஏற்பாடு நடைபெற ... திரவியா தான்
"நீ என்னடி கனா கண்டுட்டு இருக்க அடுத்த வாரம் உனக்கு கல்யாணம் புது துணி எடுக்க போறேன் சிவப்பு சுடி எடுக்கவா, பச்சை எடுக்கவா என்று திரவியா வேணியிடம் கேட்க ...
"யாருக்கு?
"உனக்கு தான்
எனக்கா !? யார் கூட ? அதிர்ந்தாள்
"எவனுக்கு தெரியும் ? எந்த ஏமாளி வந்து நைனாகிட்ட மாட்டினானோ" என்று குதித்து கொண்டு திரவியா ஓட ... இவள் தாய் அசந்த நேரம் போனை எடுத்து கொண்டு ஒளிந்து நின்று போஸூக்கு விவரம் சொல்ல ...
"பயமா இருக்கு போஸ் மாமா
"ஒரு வாரம் இருக்குல்ல
"வந்திருவீங்க தான ??
"ப்ச் கடைசி நேரம் வர காத்திரு வருவேன் ...
"ம்ம் நம்பிக்கையில் காத்திருந்தாள் இதற்கு இடையே உமாபதியை சந்திக்க சந்தர்ப்பம் தேடி திரவியாவை தூது விட
"பார்டா புருசன் கிட்ட பேச ஆர்வத்தை "என்று அவளும் உமாபதி தேடி போக ...
"கல்யாணத்துக்கு முன்ன மாப்பிள்ளை கிட்ட பேசுறது என்ன முறை .. அவன் இல்லை பேச முடியாது போ என்று குமரகுரு திரவியாவை திட்டி அனுப்பி விட்டார்,.
இதோ நாளை திருமணம் ...
யார் மாப்பிள்ளை என்று கூட தெரியாது ... அவனை எப்படி தொடர்பு கொள்வது தெரியாது... அன்று போனை வைத்த போஸ், அதன் பிறகு அழைக்கவே இல்லை... அவன் என்ன ஆனான் என்று தெரியாது.. ஆனால் ஒரே ஒரு நம்பிக்கை , வந்துவிடுவான் என்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு போக மாட்டான் என்ற ஒற்றை நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தாள்
ஆனால் அந்தோ பரிதாபம்!! அவள் நம்பிக்கை பொய்த்து போனது
இதோ, கோவிலில் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது... வேணி முன்னே பட்டுச்சேலை நகை அனைத்தும் வைக்கப்பட்டிருந்தது... ஒருவேளை போஸ் வர தாமதம் ஆனால் , துணிவை வர வைத்து திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்று தைரியம் சொல்லி கொண்டு வேணி காத்து இருந்தாள்...
விடியற்காலை ஆம்புலன்ஸ் சத்தம் ஊருக்குள் காதை கிழித்தது , தூக்கம் வராமல் பின் வாசலில் உட்கார்ந்து இருந்த வேணி காலை தாண்டி ஓடிய திரவியாவை பிடித்து இழுத்த வேணி
"எங்கடி போற ?
"போஸ் மாமா இருக்கார்ல அவரு "
"வந்துட்டாரா ????என்றவள் சிரித்த முகமாக அவன் வீட்டை நோக்கி ஓட
"போஸ் மாமா தீவிரவாதியை பிடிக்க போன இடத்துல சுட்டு கொன்னுட்டாங்களாம், அவர் உடம்பு ஆம்புலன்ஸ்ல வந்திருக்கு" என்று திரவியா கத்தியது கேட்காத தொலைவில் வேணி ஓடி போய் போஸ் வீட்டு வாசலில் நிற்க ... அவனை மணமகனாக எதிர்ப்பார்த்த அவளுக்கு பிணமகனாக அன்றோ காட்சி தந்தான்....
"அய்யோ சாமிஇஇஇஇஇஇஇஇஇஇஇ போயிட்டியே" என்ற போஸ் தாயின் அழுகுரல் தான் அவளை வரவேற்றது
மேஜர் போஸ் கெளரி!! என்ற பெயரோடு இருந்த தேக்குமர சவப்பெட்டி திறக்கப்பட, வீரத்தின் விளைவில் பல குண்டுகள் பாய்ந்த அவன் நெஞ்சை கெளரவப்படுத்தி தேசிய கொடியை நெஞ்சில் போர்த்திய அவன் உடலை வெளியே எடுக்கவும் சரியாக இருந்தது..
போஸே ஏஏஏஏஏஏஏஏஏஏஏ என்று ஊரே அவன் உடல் முன் கதறி அழ .... கூட்டத்தில் நின்ற நீலவேணி கண்கள் மூவர்ண கொடி உள்ளே மூச்சை நிறுத்தி அழகாய் கம்பீரமாக படுத்திருந்த தன் காதலன் முகத்தையே கண்கள் கூட கலங்காது பார்த்து கொண்டு நின்றாள் ....
எப்படி கண்ணோ இதயமோ கலங்கும்?
அவன் உயிரற்ற உடலை பார்த்த அந்த நொடியே, அவள் ஜீவன் அவன் பின்னே போயே விட்டது ...
மூச்சு மட்டுமே உள்ள பிணம் ஆகி போனாள்...சாகும் தருவாயில் கூட மீதம் இருந்த தீவிரவாதியை அடித்தே கொன்ற மேஜர் போஸ் என்று பெருமையாக அங்கே சக வீரர்கள் கூற, வேணியோ, தோரணையாக படுத்திருத்த அவன் முகத்தையே பார்த்து கொண்டு நின்றாள்...
ப்ச் நல்ல பையன் தான் ... விதி இப்படி எழுதி இருக்கே ... நீ இங்க ஏன் வந்த? என்று வேணியின் தாய் விரைத்து போய் சுயம் இழந்து நின்ற அவளை இழுத்து கொண்டு போனதையோ , அவளை குளிர்ந்த நீரில் குளிக்க வைத்து, பட்டு உடுத்தி மணமேடை மீது அவளை உட்கார வைத்தது எதுவும் உயிரற்ற அந்த உடலுக்கு மனதிற்கு புரியவில்லை ...
கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று மேள வாத்தியம் முழங்க
வானில் வெடித்த தொடர் துப்பாக்கி குண்டுகள் நடுவே போஸ் வீர மரணம் அடைந்த உடல் நல்லடக்கம் செய்யப்பட...
தாலியை கட்டுங்கோ என்ற குரலில் அவள் கழுத்தில் டங் என்று மஞ்சள் தாலி விழ , வேணி பொத்தென்று மயங்கி சரிந்தாள்...
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று இன்றும் தன் மீது மயங்கி சரிந்த அவளை தாங்கி பிடித்தான் உமாபதி ....
அவள் ஜாக்கெட் மறைவில் இருந்த போஸ் என்ற பெயர் அவள் இதயத்தை வருடி, நான் உன்னோடு இருக்கிறேன்!!! என்று அவள் இதயத்தை தட்டி எழுப்பியது...
அவள் மஞ்சள் தாலிக்கு உரியவளா?
இல்லை தங்கத் தாலிக்கு உரியவளா??