பளிங்கிலே ஓர் இதயம் டீசர்

Ithayam

பளிங்கிலே ஓர் இதயம் டீசர்

1 பளிங்கில் ஓர் இதயம் !!

பாருடி மாலதி,  மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி கொஞ்சம் வாயை திறக்காம இரு.. 

ப்ச்  எனக்கு பிடிச்ச மாதிரி இருந்தா,  நான் ஏன் வாயை திறக்க போறேன்..  மாப்பிள்ளை எப்படி?? சிங்கம் சூர்யா போல இருக்காரா,  

அது 

ப்ச்  ஹரிஷ் கல்யாண் போல இருப்பாரா

ஹான் தாய் மண்டையை ஆட்ட , முகத்துக்கு பவுடர் போட்டு உதட்டில் மெல்லிய சாயம் பூசி கொண்டே கல்யாண கனவில் மிதந்தாள் அவள்

எனக்கு ஒரே ஒரு கனவு தான்,   என் புருசன் சும்மா ஸ்மார்ட்டா ஹீரோ போல இருக்கணும்..  அவனோட நடந்தா எல்லாரும் ஆஹா எவ்வளவு மேட்சா இருக்குன்னு சொல்லணும் ... ஆடி கார் இல்லைன்னாலும் ஓகே ஒரு மாருதி காராவது வேணும் .. அப்பார்ட்மெண்ட் வீடு இல்லேன்னாலும் ஓகே , அங்க வாடகை கொடுக்கிற அளவாவது காசு வேணும்,  புல்லட் இல்லைன்னாலும் ஓகே ஒரு ஹீரோகோண்டா  வச்சிருக்கவனா வேணும் .. ஐடியில  வேலை பார்க்கலேன்னாலும்  ஓகே பட் டக் இன் , பண்ணி ஸ்மார்ட்டா வேலைக்கு போற ஜாப்ல இருக்கணும் இவ்வளவு தான் என் ஆசை அதுக்கு ஏத்தாப்ப மாப்பிள்ளை பார்த்திருக்கியா??  என்ற மகளை எச்சில் விழுங்கி பார்த்தார் ..

அதெல்லாம் சரியான்டி  அதுக்கு நாமளும் அதுக்கு ஏத்தாப்ப நாம  இருக்குணுமே"

"காரணம் சொல்லாதீங்க , இந்த மாதிரி மாப்பிள்ளை வரல விரட்டி அடிச்சிருவேன் ஜாக்கிரதை கீங் கீங் என்று கார் ஹாரன் அடிக்க 

"அம்மா அவங்க தான் வந்திருக்காங்க போல போ போ ... என்று பறந்த மகளை திரும்பி பார்த்து கொண்டே அவள் தாய் வெளியே போனார் .. சில பல பேச்சு நடுவே 

"பொண்ண அழைச்சிட்டு வாங்க" என்ற சத்தம் ஜன்னல் வழியாக  உத்து உத்து பார்த்தவள் ஒன்றுமே தெரியாது சலித்து 

"ப்ச் மாப்பிள்ளை தலை தவிர ஒன்னும் தெரிலையே  , என்று யோசித்து கொண்டு நிற்க 

"வாடி மாலதி என்ற தான் அருகே பவ்யமாக   வந்து நின்றாள் மாலதி... 

"இதுதான் மாப்பிள்ளை தம்பி விநாயகம்!!!" 

"பேர் ஓல்டா இருக்கு" என்று மனதில் நினைத்து கொண்டே தலையை தூக்கியவளுக்கு அப்பாடா என்று நிம்மதி 

"ஸ்மார்ட்டாக கால் மேல் போட்டு , கூலிங் கிளாஸை சட்டையில் மாட்டி அமர்ந்திருந்த  அவனை கண்டு ஏக மகிழ்ச்சி ... தன் அழகு ன படிப்புக்கு ஏற்ற ஒருவன் தான் கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளார்கள் என வெட்கத்தில் சிவந்து அவனையே ரெண்டு நொடி பார்க்க 

"அங்க யாரடி பார்க்கற வலப்பக்கம் இருக்காரே அவர்தான் மாப்பிள்ளை விநாயக் அது அவர் பிரெண்ட் என்று மகள் தலையை திருப்பி காட்ட அவள் கையில் இருந்த காப்பி கோப்பை விழுந்து நொறுங்கியது...  அவள் கட்டி வைத்திருந்த கனவு கோட்டை போல..

வியாயகம்  வயது முப்பது , சாதாரண சர்ட் பேண்ட் சின்ன தொப்பை அங்கங்கே நரைத்த முடி,   மிகவும் சாதாரண தேற்றத்தில் இருந்தான்  நம் நாயகன் விநாயகம் ... 

இதுதான் மாப்பிள்ளை விநாயகம் , இங்க ஊர்ல மளிகை கடை வச்சிக்காரு,  ரெண்டு அக்கா ஒரு தங்கச்சி..  எல்லோருக்கும்  கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு கல்யாணம் பண்ணுறதால கொஞ்சம் வயசு ஏறி போச்சு பகட்டு தெரியாத பாசமான மனுசன்... இனிதான் தனக்குன்னு சேர்க்கணும் இப்போதைக்கு ஒரு சைக்கிளும் கடையும் மட்டும் தான் அவர் பேர்ல இருக்கு "என்று கூற... இவளுக்கு விக்கு விக்கென்று வந்தது ..எதிர்பார்த்த பத்து இல்லை என்றாலும் பரவாயில்லை..  ஒன்று கூட இல்லை முறுக்கை கறுக்முறுக் என்று கடித்து தின்னும் அவனை அப்படியே கீறி போட தோன்றியது ...

"எனக்கு அந்த அழுக்குபயல பிடிக்கல எல்லாரையும் வெளிய போக சொல்றியா இல்லையா" என்று மாலதி கத்த சாப்பிட்டு கை கழுவ வந்த விநாயகம் காதில் அது விழுந்து விட்டது.. 

"சும்மா இருடி நல்ல பையன் ..

"நல்ல பையன்னா நீ கட்டிக்க  , ஆளும் முகரையும் தொப்பை இருக்கும்மா "

"சாப்பிட்டா தொப்பை இருக்கத்தான்டி செய்யும் 

"வெள்ளை முடி வேற 

"அது இளநிரை போல  

"பொண்ணு பார்க்க வர்றான் கசங்காத சட்டை போட்டுட்டு வரணும்னு கூட தெரியாதா?? 

"மளிகை கடையில கைமாத்தி விட ஆளு இல்ல போல அதான் அப்படியே வந்துட்டார் 

"சப்பை கட்டு கட்டாத எனக்கு அவன் வேண்டாம் நீ போக சொல்றியா இல்லை நான் அடிச்சு விரட்டவா 

 "அங்க என்ன சத்தம்" என்று தகப்பன் வர அமைதியாக தலையை குனிந்து கொண்டாள்.. விநாயகம் பெருமூச்சு விட்டவன்  தன் நண்பன் காதில் எதோ சொல்ல...

"டேய் இவ்வளவு தூரம் வந்துட்டு பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னா எப்படி? "

"வேண்டாம்டா எனக்கு இந்த பொண்ணு சரிப்பட்டு வரும்னு தோணல கிளம்புவோம்..என்று விநாயகம் எழும்ப போக ...

"என் பொண்ணுக்கு தம்பியை ரொம்ப பிடிச்சிருக்காம்..  எப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம் என்று  மாலதி தகப்பன் கேட்கவும் விநாயகம் யோசனையாக மாலதியை எட்டி பார்க்க தகப்பன் கைதடம் அவள் கன்னத்தில் கிடந்தது... அடித்து சம்மதிக்க வைத்திருப்பார் போல ...

மச்சான் கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் சரியா வரும் நீ அமைதியா இரு , இதை விட்டா இப்போதைக்கு உனக்கு கல்யாணம் ஆகாதுடா.. உனக்கு நல்லது செய்ய உன் அக்கா தங்கச்சிக்கு நேரம் இல்லை..  அம்மாவும் தவறிடுச்சு இப்டியே ஓண்டி பயலா கிடக்க வேண்டியதுதான்..நண்பன் நிதர்சனம் கூறினாலும் மனம் ஏதோ தவறு என்று கூற 

" இல்லடா அது "

மாப்பிள்ளைக்கு சம்மதம் என்று இவன் கூறி விட ...பெருமூச்சு விட்ட விநாயகம் .. 

நகை எல்லாம் போட வேண்டாம், கட்டின சேலையோடு அனுப்புங்க போதும் ... என்று விநாயகம் கூற சிடுசிடுவென அவனை முறைத்து விட்டு மாலதி உள்ளே போய் விட .. 

நாற்பது நாள் கழித்து  அழுத கண்ணோடு மணமேடை மீது அவள் இருக்க..  இது சரியா வருமா வராதா என தெரியாது விநாயகம் இருக்க..  மாங்கல்யம் அவன் கையில்  கொடுக்க பட அவகாசம் இல்லாது போகவே மாலதி கழுத்தில் விநாயகம் தாலி ஏறி இருந்தது..

திருமண அலைச்சல் எல்லாம் முடித்து விநாயகம் தன் வியர்வையை துடைத்து கொண்டு அந்த குட்டி வீட்டின் நிலை தட்டிவிடாது குனிந்து உள்ளே வர பாய் தலையணை வந்து அவன் முகத்தில் விழுந்தது அதை பிடித்து கொண்டவன்,  முதல் இரவு அறையை பார்க்க அலங்கோலமாக கிடந்தது...

நீ கெட்ட கேட்டுக்கு கல்யாணமே பெருசு முதல் இரவு கொண்டாட வந்துட்டியோ என்ற மாலதி பேச்சில் விநாயகம் எச்சில் விழுங்கி 

சத்தம் போடாம பேசு அம்மணி,  யாராவது கேட்டா 

கேட்கட்டும்  நீ பக்கத்துல வந்த கத்து உன் மானத்தை வாங்கிடுவேன் வெளிய போ என்ற மாலதிக்கு உடனே தலையசைப்பை கொடுத்து தலையணை பாயை தூக்கி கொண்டு நடக்க அவன் முதுகில் நச்சென்று விழுந்தது பால் சொம்பு

இவன் முகரைக்கு முதல் இரவுக்கு கண் முழிச்சு வேலை செய்ய பால் வேற ச்சைக்  என்று அவள் அவன் காது பட கூட முதுகை வலியில் தடவி கொண்டே போய் பின் திண்ணையில் யாருக்கும் தெரியாது பசியோடு குளிரில் சுருண்டு படுத்தான் விநாயகம்...

மின்னுவது எல்லாம் பொன்னும் அல்ல, மின்னாத எதுவும் மண்ணும் அல்ல ... 

பளிங்கு மனம் கொண்டவன் ஒரு திருமணத்தால்  உடைந்து  சில்லு சில்லாக போவான்!! 

இது ஆணின் வலி நிறைந்த வாழ்க்கை பயணம் 

18 தேதி,  வெள்ளி இரவு முதல் சைட்டில்  இக்கதை வரும் 

தினமும் இரண்டு  எபி மட்டுமே போட  முடியும் .. கொஞ்சம் நகர முடியாத சூழ்நிலையில்  நான்,  மாமிக்கு சீரியஸா இருந்து இப்பதான் சுகமாகி வந்திருக்காங்க அவங்களை கவனிக்கும் கடமை இருக்கு ,  ரொம்ப நாள் காக்க வைக்க விருப்பம் இல்ல அதான் கதையோடு வர்றேன் கொஞ்சம் பாவம் பார்த்து விட்டுடுங்க தங்கங்களா ,