துணைவி மனைவி 11

Thunai11

துணைவி மனைவி 11

11 இவள் துணைவி

      அவள் மனைவி!! 

ஹாஸ்டல்ல தானடி இருக்க போற..

 அதுக்கு எதுக்கு ஒரு லாரி பொருள் வாங்கிட்டு கிளம்புற ... இன்னும் ஒரு மணி நேரத்தில் ட்ரெயின் ஏற வேண்டும்... மாலை 8 மணிக்கு வரும் உமாபதி என்று ஆறு மணிக்கே வீட்டிற்குள் வந்து விட்டான்

அவள் ஆறு மணிக்கு கிளம்புவாள் என்று தெரிந்து அவளுக்காகத்தான் வந்தானா தெரியாது ஆனால் அவனை இந்த நேரத்தில் இங்கே பார்த்த திரவியா துள்ளிக் குதிக்காத குறைதான்..

மாமா கொஞ்சம் பொருள் வாங்கணும் போகும்போது கடையில் வாங்கிட்டு போகலாமா? என்று பெட்டியை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்த திரவியா சோபாவில் மகனோடு விளையாடிக் கொண்டிருந்த அவனிடம் கிசுகிசுப்பாக கேட்க...

என்ன வேணும் பில் போட்டு கொடு மாமா வாங்கிட்டு வருவார் .. நீ முதல்ல வந்து சாப்பிடு வேணி குரல் வர ..

ம்ம் பில் எழுதி அவன் கையில் கொடுக்க அதை விரித்து பார்த்தான் ...

அரைகிலோ கிலோ காதல் 

அரைகிலோ நேரம் 

அரைகிலோ காமம் 

அரைகிலோ முத்தாஸ் அவன் தீ பார்வை அவளை பார்க்க உதட்டை குவித்து முத்தமிட்டாள் 

அதெல்லாம் வாங்கிட்டு வந்திருங்க மாமா.. எல்லாம் அரை கிலோ போதும் 

அது என்ன அரை அரை கிலோ, மாமா ஒரு கிலோவா வாங்கி கொடுத்துடுங்க என்று வேணி விவரம் புரியாது கூற தலையை நாலு பக்கமும் ஆட்டிவிட்டு பின் பக்கம் பார்க்க வாங்க வேண்டிய பொருள் லிஸ்ட் இருந்தது

"என்ன கோவப்படுத்தி பார்க்கிறதுல, இந்த நாய்க்கு ஒரு கிளுகிளுப்பு "என்று முனங்கி கொண்டே பதி வெளியே போனவன் பொருளை எல்லாம் வாங்கி பார்சல் போட்டு விட்டு கேளாத தின்பண்டங்களும் அவளுக்கு பிடித்ததையும் வாங்கி உள்ளே வைத்தான்.. அவள் கொடுத்த பில்லை தூரமாக வீச போனவன்.. மெல்ல அதை மீண்டும் விரித்து பார்த்தான், சீன்னவீடு சேட்டை பிடித்ததோ அதை எடுத்து தன் பர்ஸ் உள்ளே மறைத்து வைத்து கொண்டு வீட்டுக்கு வந்தான் 

"மாமா திராவை கொண்டு கொஞ்சம் ட்ரெயின் ஏத்தி விட்டுடுவீங்களா ? பார்சலோடு உள்ளே வந்த பதி அது திரவியாவை கையில் கொடுக்க....

"என் பில் எங்க மாமா??" பார்சல் உள்ளே பொருளை உருட்டி கொண்டு திரவியா கேட்க 

"எங்க விழுந்ததோ?  

"ப்ச் ரசிக்க தெரியாத மனுசன் உங்களை போய் துரத்தி துரத்தி லவ் பண்றேனே என்ன சொல்லணும் 

"பண்ணாத உன்ன யார் என் பின்னாடி அலைய சொன்னது ...

"என்ன செய்ய உங்களைத்தான பிடிச்சு இருக்கு

"அவர்கிட்ட என்னடி வம்பு வளர்த்துட்டு இருக்க வந்து கிளம்பு வேணி கண்டனம் வர 

"இதோக்கா, இந்தாங்க மாமா வாங்கிட்டு வந்த பொருளுக்கு பணம் என்று வாங்கிய பொருளுக்கு 

பணத்தை அவள் கொடுக்க,. பதி அதை திரவியா கையில் திருப்பிக் கொடுத்துவிட

"என்ன மாமா காச திருப்பி தர்றீங்க..

"ஒன்னும் வேண்டாம் வச்சுக்கோ

"சரி சரி ரெண்டாவது பொண்டாட்டிக்கு செய்ய ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கு... குட் கீப் இட் அப் ....அதற்குள் வேணி வரவும் அவளை விட்டு விலகி நின்று கொண்டாள் ... 

மாமா நானும் வரனும்னு நெனச்சேன்... அத்தை நெஞ்செரிச்சலா இருக்குமான்னு சொன்னாங்க அவங்கள விட்டுட்டு வந்தா சரியா இருக்காது.... கௌரியையும் சேர்த்து கூட்டிட்டு போங்க...என்ற வேணிக்கு என்ன பதில் கொடுக்க என்று தெரியாது பதி திருதிருவென முழிக்க 

இல்லக்கா நான் ஏதாவது ஆட்டோ புடிச்சு போயிக்கிறேன் "

"எப்பவும் அதிக பிரசங்கித்தனம் பண்ணாத திரவியா ஊர் கெட்டு போய் கிடக்குது , பொம்பள புள்ளைய தனியா விட்டுட்டு , நாங்க இங்க கெதக்குன்னு உட்கார்ந்து இருக்கணுமா... நீங்களே கூட்டிட்டு போய் விட்டுடுங்க மாமா

"சரிம்மா....

"பார்த்து போயிட்டு வாடி ஒழுங்கா படி, கண்ட பிரச்சனையும் இழுத்து வைக்காத...

அம்மா அப்பாவுக்கு உடம்பு சரியில்ல , கவனமா இருந்துக்கோ கையில காசு வச்சிருக்கியா திரா.. 

"அதெல்லாம் இருக்கு அக்கா ... 

"எதாவது வேணும்னா போன் போடுடி வேணியை அணைத்து விடுவித்த திரவியா...

"சாரிக்கா 

"எதுக்கு ??

"இல்ல உன் வீட்டுல எதாவது சேட்டை பண்ணி இருந்தா "

"போடி லூசு நீயும் கெளரி போலத்தான் எனக்கு, போயிட்டு வா .... 

"ம்ம் பாய் சிம்ரன் என் தொல்லை இல்லாம இருங்க ... மிஸ்டர் குமரகுரு போயிட்டு வரட்டாவோய் என்று கத்த அவர் முகத்தை கோணி கொண்டு தலையை திருப்பி கொண்டார்... 

உமாபதி காரை எடுக்க திரவியா பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள் கெளரி தகப்பன் அருகே முன் இருக்கையில் அமர்ந்து வளவளத்து கொண்டு வர... கார் ரெயில்வே ஸ்டேஷன் நோக்கி போனது ..

திரவியா முன் இருக்கையில் இருந்த உமாபதியை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருக்க அவனும் அவ்வப்போது அவளை பார்க்கத்தான் செய்தான்.. 

பல நேரம் இருவர் பார்வையும் அவ்வப்போது கவ்விக்கொண்டு மீண்டது, திடீரென அவன் பார்வை திரவியா கழுத்திற்கு கீழே போகவும் .. திரவியா கீழே குனிந்து பார்க்க.. அவள் மேட்டின் மீது தாலி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது... அவன் முறைப்பாக அவளை கண்ணாடி வழியாக பார்க்க..

சட்டென தாலியை எடுத்து பதுங்கி குழிக்குள் போட்டுக் கொண்டவள் 

"சாரி மாமா கவனிக்கல 

"நீ எதைத்தான் கவனிச்ச .. என்னை மட்டும் தான் கவனிச்சுக்கிட்டே இருக்க ... சுற்றி நடக்கிறது எதையும் கவனிச்சுடாத, கடைசில என்ன மாட்டிவிட்டுட்டு நிம்மதியா இருக்க போற 

"சாரி சாரி இனிமே கவனக்குறைவா இருக்க மாட்டேன், உள்ள போட்டுக்கிறேன்... "மகன் பேசி பேசி சீட்டில் தலை சாய்ந்து தூங்க சிரமப்பட .. உமாபதி வண்டியை ஓரம் கட்டினான் 

"என்ன ஆச்சு மாமா ? 

"முன்னாடி வந்து உட்கார்ந்து குட்டியை மடியில வை ..

"நானா ???ஆனந்த அதிர்வு அவள் கண்ணில் 

"ப்ச் ,என் புள்ளை தூங்க முடியாம கஷ்டபடுறான் வேற எதுக்கும் இல்லை .... "

"இதுவே எனக்கு பெரிய சக்சஸ்தான் மாமா முன் சீட்ல இடம் தர்ற அளவுக்கு, உங்க மனசுக்குள்ள நொழைஞ்சுட்டேனே, என்று துள்ளி குதித்து குடுகுடுவென்று ஓடி வந்து முன்னிருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கௌரியை தன் மடியில் வைத்துக் கொண்டு அவன் பக்கத்து இருக்கையில் திரவியா அமர்ந்து கொண்டாள்... மீண்டும் மெல்ல கார் நகர ஆரம்பிக்க... 

காரை முன்னால் பார்த்து ஓட்டிக் கொண்டிருந்த உமாபதி ஒற்றை கையால் காற்றில் அசைந்தாடும் தன் கேசத்தை கோதி விட்டுக் கொண்டிருக்க... இவள் கன்னத்தில் கை வைத்து அவனை வெளிப்படையாகவே ரசித்துக் கொண்டிருக்க சட்டென திரும்பி அவளை உமாபதி பார்க்க அவள் ரசனையாக கண்ணைச் சிமிட்ட... இவன்தான் தொண்டையை செரும்பி கொண்டான்... இப்படி பச்சையாக கண்ணால் களவாடும் பெண்ணை என்னதான் செய்வது? 

எத்தனை வருஷமா என்ன லவ் பண்ற ? என்றான் கியர் போட்டுக் கொண்டு , பார்வை ரோட்டில் தான் இருந்தது... உதடுகள் மட்டும் அவளிடம் கேள்வியை கேட்டது .... அவளை நேருக்கு நேர் பார்த்தால் புத்தியும் தடுமாறுகிறதோ ?

"அப்போ உங்க மேல எனக்கு வந்து இருக்குது ஈர்ப்பு இல்ல லவ்தான்னு ஒத்துக்கிறீங்க...

"இங்க பாரு அடிச்சு பல்லை கழட்டிடுவேன்... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு நாய, சும்மா அரசியல்வாதி மாதிரி கேட்ட கேள்வியை விட்டுட்டு கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்காத....

நீங்க என்ன உரிமையா இப்படி நாய போட்டு திட்டும்போது ஒவ்வொரு உரிமைக்கும் உங்க உதட்டில முத்தம் கொடுக்கணும் போல தோணுது மாமா...

"வயசுக்கு ஏத்தாப்ப பேசு திரவியா 

என்னவோ நேத்து இந்த மாதிரி பேச மாட்டேன்னு சொன்ன ??

"எப்போ சொன்னேன்... உங்க பக்கத்துல வந்து ஒட்டி உரசி டெம்ப் பண்ண மாட்டேன்னு தான் சொன்னேன்... பேசமாட்டேன்னு சொல்லவேயில்லையே

"இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றியா இல்ல ஆட்டோ புடிச்சு உன்ன அனுப்பி விடவா..

சாரி சாரி நீங்க கேளுங்க நான் சரியா பதில் சொல்லுங்க.. 

எத்தனை வருசமா என் மேல இந்த கிறுக்கு வந்து சுத்திட்டு இருக்க 

12 வகுப்பு லீவ்ல உங்க வீட்டுல வந்து தங்குனதுல இருந்து அவன் யோசனையாக அவளை திரும்பி பார்க்க ...

நீ உங்க அக்கா உடம்பு நலனை கருத்துல கொண்டு அவளை கவனிச்சுக்க வந்தேன்னு நினைச்சேன்.. உன் கவனம் அக்காவை விட என் மேல தான் அதிகம் இருந்திருக்கும் போல இருக்கு... திரவியா நகத்தை கடித்துக் கொண்டு அமைதியாக தலையை குனிந்து உட்கார்ந்து கொள்ள 

"நானும் நீங்க என்ன திரும்பி பார்ப்பீங்க எப்பவாவது என்னோட பார்வை மாற்றம் உங்களுக்கு புரியும்னு யோசிச்சேன்... ஆனா , நீங்க ஒரு விசை கூட என்ன அந்த கண்ணோட்டத்தில் பார்க்கல அதுதான் உங்க மேல எனக்கு இன்னும் கூடுதல் காதல வர வெச்சுடிச்சோ என்னவோ தெரியல மாமா... இது சரி பட்டு வராதுன்னு நானே களத்துல குதிச்சிட்டேன்.. 

பெருமை பட்டுக்க வேண்டியது தான் மாட்டும் போதுதான் இருக்கு .... குட்டியை தூக்கிட்டு இறங்கு நான் பெட்டியை எடுத்துட்டு வர்றேன் ...

ம்ம் ... திரவியா ரெயில்வே ஸ்டேஷன் உள்ளே நடக்க... உமாபதியும் அவளோடு நடந்து வந்து கொண்டிருந்தான்

 மாமா 

"

"என்ன , குதற்கமா ஏதாவது கேள்வி கேட்டு, போகும் போது அழுதுகிட்டு போகாத.. 

" இல்லை பூ வாங்கி தரீங்களா?? திரவியா நெளிந்தபடி கேட்க ... பெருமூச்சு விட்டவன் கால்கள் பூக்கடை நோக்கி சென்றது ... அவளும் அவன் பின்னால் மான் போல துள்ளிக் கொண்டு ஓடினாள் .. 

ஒரு முழம் பூ கொடுங்க பூவை வாங்கி மேஜை மீது வைத்தான்.... அவள் கை நடுங்க அதை எடுத்து ஒற்றை கையால் பிள்ளையை வைத்துக்கொண்டு குத்த முடியாது தடுமாற, உமாபதி பிள்ளையை வாங்கி கொண்டு நட்கக ஆரம்பிக்க... அவள் பூவை தலைநிறைய வைத்து கொண்டவள் 

பாட்டி அது என் புருசன் முதல் தடவை பூ வாங்கி தந்து இருக்கார் அழகா இருக்கா கண் ஞிறைய கண்ணிரோடு கேட்ட அந்த பெண்ணின் முகத்தில் இருந்தது அத்தனை காதல்!! 

அழகா இருக்குத்தா சீக்கரம் ஒரு பொண்ணு பெத்துக்க...

ப்ச் அங்க என்னடி பண்ற ட்ரெயின் வந்துடுச்சு பாரு என்று பதி கத்த 

இதோ வந்துட்டேன் ... வர்றேன் பாட்டி என்று கணவனை நோக்கி ஓடினாள் ...

தூங்கிடாத பொருளை பத்திரமா வச்சிக்க ட்ரெயின் மூவ் ஆக ஆரம்பிக்க இவன் கம்பிக்கு வெளியே நின்றான்... 

அட்லீஸ்ட் ஒரு தடவையாவது எனக்கு போன் போடுங்க மாமா... போன் போடுறதுக்கு வசதி இல்லன்னா , ஒரு மெசேஜ் போதும் .. சன்டே வருவீங்கன்னு காத்துட்டு இருப்பேன்.... வாட்ஸ் அப்ல அட்ரஸ் அனுப்பி இருக்கேன் , வீட்டுக்கு கூட வர வேண்டாம்... நீங்க வந்து எங்க பார்க்க சொல்றீங்களோ, அங்க ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு போயிடுறேன் ...கண்டிப்பா உங்கள டெம்ப் பண்ற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன் நம்பி வரலாம் " என்ற திரவியா முகத்தில் வண்டி கிளம்ப கிளம்ப பதட்டமும் அவனை விட்டு தூரம் போகும் வலியும் முகத்தில் அப்படியே தெரிந்தது ..

போன் போடுவிங்க தானே மாமா சத்தம் கேட்காத தொலைவில் ட்ரெயின் தடுதடவென்று போன பின்பும், அந்த கம்பிகளுக்கு உள்ளிருந்து இவள் கத்தி கேட்க... குழந்தையை சுமந்து கொண்டு பிளாட்பார்மில் நின்ற பதி கண்ணும் போகும் அவளை பார்த்தபடியே நிற்க அவள் தவிப்பில் அவன்,உதடு தானாக பதில் சொன்னது 

போடி போடுறேன் என்றவன் உதட்டு அசைவு போதுமே அவள் வாழ!!