துணைவி மனைவி 10
Thunai10
10 இவள் துணைவி
அவள் மனைவி!!
"என்ன பதி, சார் உட்காரவே முடியாத காய்ச்சல்ல நீங்க ஆபீசுக்கு வரணும்னு ஏதாவது அவசியமா? நீங்க வீட்டிலேயே இருந்துகிட்டு ஒரு போன் கால் பண்ணி, இதெல்லாம் பண்ணிடுங்கன்னு சொன்னா... நான் பண்ணி வச்சுட போறேன் இவ்வளவு ஸ்ட்ரெஸ் எடுத்துக எதுக்கு சார் முடியாத நேரத்துல வந்து இப்படி கஷ்டப்படுறீங்க. இருமிக் கொண்டும் தும்மிக்கொண்டும் தலைக்கு தைலம் தேய்த்துக் கொண்டும் இருந்த உமாபதி நிலைமையை பார்த்து கணேசன் வருத்தப்பட்டு கேட்க
"நாம இருந்தா தான் கணேசன், வேலை சரியா நடக்கும் .. அதோட வீட்ல இருந்தா கண்ட ரோதனையும் மண்ட மேல ஏறி உட்கார்ந்து இன்னும் கொஞ்சம் வலி எடுக்கும்.,
"உங்களுக்கு என்ன சார் வீட்டுல கொடச்சல் , உங்க அம்மா அப்பாவ பாத்துக்க அன்பான மனைவியா மேடம் இருக்காங்க .. அவங்க அந்த வீட்டை பொறுப்பா பாத்துக்குறதுனாலதான உங்களால இந்த ஆபீஸ்ல இவ்வளவு சூட்டிப்பா வேலை செய்ய முடியுது ..
"ம்ம் , அது ஒரு வாரத்துக்கு முன்னாடி கணேசன் இப்பல்லாம் வீட்டுக்கு போனா நிம்மதியே இல்லை..
"என்ன ஆச்சு சார்..
"ஒன்னும் இல்ல போய் வேலையை பாருங்க... அதற்கு மேல் கணேசனும் அங்கே நிற்காமல் வெளியே போக...
"ஹச்சு ஹச்சு என தும்மல் போட்டு கொண்டே அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்து கொண்டு இருந்தாள் திரவியா
"ஹாய் கணேசன் அண்ணா ,
"வாம்மா திரவியா ,நல்லா இருக்கியா.. எப்ப வந்த ??
"வந்து ஒரு வாரம் ஆகுது, நாளைக்கு நைட் கிளம்பணும்
"சரிம்மா
"அண்ணா
"சொல்லும்மா
"முடிஞ்சா ரெண்டு சுக்கு காபி சொல்லிடுங்க.... நான் அவரை போய் பார்த்துட்டு வந்துடுறேன்" என்று மீண்டும் தும்மி கொண்டே திரவியா உள்ளே போக .... கணேசன் திரவியாவையும் உமாபதி அறையையும் மாறி மாறி பார்த்தார்..
"அவரும் தும்முறார், இந்த பெண்ணும் தும்முது..ச்சே ,ச்சே நம்ம பதி சார் பத்தி நமக்கு தெரியாதா என்ன? என்று மீண்டும் அறையை பார்க்க சேரில் இருந்து குதித்து ஓடி வந்த பதி, தன் அறை வாசலில் அங்கும் இங்கும் பார்த்து கொண்டே நின்ற திரவியா கையை இழுத்து அறைக்குள் விட்டு கதவை அடைக்க
"கடவுளே இஇஇஇஇஇஇஇஇஇஇஇ" கணேசன் நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சி தாங்காது நின்றார்....
"உண்மையாவே நான் பார்த்த காட்சி நிஜம்தானா நம்ம பதி சாரா இது ?? கடவுளே!! வேணி மேடமுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா.... களவு செய்யும் அவர்களுக்கு பயம் இருந்ததோ இல்லையோ? கணேசன் நெஞ்சை பிடித்துக் கொண்டு நின்றார்..
"இப்போ எதுக்குடி ஆட்டிகிட்டு ஆபீஸ் வரைக்கும் வந்து இருக்க .... வீட்ல படுத்துற தொல்லை காணாதுன்னு இங்கேயும் வந்து என் தலை மேல ஏறி உட்கார பாக்குறியா ."
"ப்ச் தலையில ஏறி உட்கார ஆசைதான் ... ஆனா, நீங்க இடம் கொடுக்க மாட்டீங்களே கணவா.. கூல் கூல் , கெட்ட வார்த்தை போட்டு திட்டாதீங்க... " நாடியை குத்திக்கொண்டு அவன் போய் சேரில் உட்கார, அவன் பக்கத்தில் உராய்ந்து கொண்டு மேஜையில் துள்ளி அமர்ந்த திரவியா..
"காலையில இருந்து எனக்கு ஒரே தும்மல், ஃபீவர் என் இதயத்துக்குள்ள இருக்கிற உங்களுக்கு இதெல்லாம் வந்ததுன்னா.. உங்க இதயத்துக்குள்ள இருக்குற எனக்கும், இதே தும்மல் ஃபீவர் எல்லாம் இருக்கும்ல... அதான் அப்படியே வந்து நான் எப்படி இருக்கேன்னு ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன்.. பாருங்க நெனச்ச மாதிரியே இங்க உங்களுக்கு ஃபீவர், அங்க எனக்கு ஃபீவர் என்று அவன் இதயத்தை சுட்டிக்காட்ட...
ப்ச் அவள் கையை வலிக்க தட்டி விட்டான்
"இந்த இதயத்துக்குள்ள நீ இருக்கன்னு எவன் சொன்னது..
பாதி வேணி இருந்தா, மீதி நான்தானே மாமா இருப்பேன் ... பாதி இடம் போதும் அவன் அமைதியாக பைலை எடுத்து புரட்ட ஆரம்பிக்க
"புரியுது உங்க நிலமை , பட் என் நிலைமையும் புரிஞ்சுக்கோங்க....
"உன் நிலமை என்ன ? ஹான் அரிபெடுத்து அலையிற, அந்த அரிப்பை தீர்க்க நான்!! அவ்வளவு தான் ,என்ன சபலபடுத்தி அந்த அசிங்கத்தை பண்ண பார்க்கிற , இதை காதல்னு சொன்ன காறி துப்பிடுவேன் ... ' பேப்பர் ஒன்றை கிழித்து ராக்கெட் விட்டு விளையாடி கொண்டிருந்தவள் ராக்கெட்டை அவன் நெஞ்சில் விட அது போய் அவன் உதட்டில் இடிக்க
"சஸ்ட் மிஸ் ....
"நான் பேசுனது கேட்டுச்சா
"கேட்டுச்சு கேட்டுச்சு, தூய்மையான கணவனா இருந்தா நீங்க ஏன் மாமா சபலபட போறீங்க? உண்மையா மனைவியை நேசிக்கிற ஆம்பள முன்னாடி இன்னொரு பொண்ணு அம்மணமாவே நின்னாலும் அது வெறும் சதைதான்... அப்போ நீங்க வேணியை உண்மையா நேசிக்கலையோ??!!,
"திரவியா இட்ஸ் ஏ லிமிட் ,என்னோட பெர்சனல் லைப் உள்ள நீ வராத ? "
"எது மாமா பெர்சனல், இந்த தாலி கழுத்துல ஏறுற வரைக்கும் தான் உங்களுக்குன்னு தனி பெர்சனல் இப்போ எல்லாமே பொதுதான் ,இந்த பதியும் பொது சொத்து தான்... சோ நம்மள பத்தி பேசும்போது அங்க இங்க சேதாரம் படத்தான் செய்யும் ... உங்க லவ் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லை.. சோ என் கூட பேச பயப்படுறீங்க, தனியா சந்திக்க பயப்படுறீங்க.. ஆனா இது எல்லாம் தாண்டி ஒரு உண்மை உங்களுக்கும் தெரியும்... உங்களுக்கு என்ன ரொம்ப புடிச்சிருக்கு ,அதுவும் வேணிய விட ... என்கிட்ட உங்களுக்கு கம்ஃபர்டபிலா ஃபீல் ஆகுது ரைட் ??
"உன் யூகத்துக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாதுடி
"உங்களுக்கு வேணி கூட கல்யாணம் முடிஞ்சு எத்தனை வருஷம் ஆகுது மாமா??... அவன் பதில் சொல்லாமல் அவளை முறைக்க...
"சும்மா சொல்லுங்க குதர்க்கமாக எந்த கேள்வியும் கேட்க மாட்டேன்
"ஆறு
"இந்த ஆறு வருஷத்துல எத்தனை தடவை வேலிய டி போட்டு பேசி இருக்கீங்க.."
"அவ மேல எனக்கு மரியாதை இருக்கு... மனைவியா அவள மதிக்கிறேன்...
"மதிக்கிற நேசிக்கிற மனைவியை தூங்க வச்சுட்டு ராத்திரி இரண்டாவது பொண்டாட்டியை பார்க்க வரணும்னு உங்களுக்கு என்ன அவசியம் வந்தது? நான் காய்ச்சல்ல கிடந்து அப்படியே உறைஞ்சு செத்துப் போனாதான் உங்களுக்கு என்ன? நான் உங்க குடும்பத்துக்குள்ள வேண்டாத களைதானே... இருந்தா என்ன , இல்லாம போனா என்ன... என் மேல உங்களுக்கு என்ன கரிசனை , என்ன நேசம், அன்புன்னு சாப்பாட்ட தூக்கிக்கிட்டு அந்த மழைக்குள்ள ஓடி வரணும்னு என்ன அவசியம் வந்தது.... இப்படி எல்லாம் கேள்வி கேட்க என்னால முடியும் ,ஆனல் நான் கேட்க மாட்டேன் கணவா... பாவம் ஒரு கேள்விக்கே உங்களுக்கு பதில் சொல்ல முடியாம திணறுவீங்க .... இத்தனை கேள்வி கேட்டா பாவம்ல ...
"இப்போ எதுக்கு வந்த எப்படியும் ஒரு வில்லங்கத்தோடதானே என்ன தேடி வந்திருப்ப அதை சொல்லிட்டு போ "கணக்குகளை குனிந்து சரி பார்த்துக் கொண்டே அவள் கூற ... இன்னும் அவன் பக்கத்தில் மேஜமீது தான் உட்கார்ந்திருந்தாள் சற்று நெருக்கமாக அவன் பக்கத்தில் போக ..
தள்ளியே இருந்து பேசுடி "
"ஏன் மாமா என் மூச்சு காத்து பட்டா டெம்ட் ஆகுதா
"ச்சீ பே அருவருப்பா இருக்கு , சொல்ல வேண்டியதை சொல்லு" சிறுது நேரம் அவளிடம் பதில் இல்லாமல் போகவே பைலை விட்டு தலையை தூக்கி அவளை பார்த்தான் ..திரவியா அமைதியாக ஓடும் சுவர்கடிகாரத்தை பார்த்து கொண்டு இருந்தாள்
"திரவியா
"திரவியா
"ஹான் என்ன மாமா ??என்று அவனை குனிந்து திரவியா பார்க்க ... அவள் கண்கள் சற்றே கலங்கி தெரிந்தது பெருமூச்சு விட்டவன்
"என்ன பேசணும் பேசிட்டு வெளிய போ வேலை கிடக்கு...
"எனக்கும் சில நேரம் அருவருப்பாதான் இருக்கு மாமா.. ஆனா காதலிச்சு தொலைச்சுட்டேன் அருவருப்பை எல்லாம் பார்க்க முடியல, அசிங்கப்பட்டாலும் பரவாயில்லைங்கிற நிலைமைக்கு வந்து நிற்கிறேன்... நான் சரின்னு சொல்ல மாட்டேன் ... எனக்கு உங்கள விட்டுட்டு போக முடியல , பல தடவை யோசிச்சுதான் இந்த தாலியை என் கழுத்துல வாங்கி இருக்கேன்... நான் ஒன்னும் உங்க மனைவியா சமுதாயத்துல உங்க பக்கத்துல இணையா நிக்கணும்னு ஆசைப்படல ... வேணியே உங்களோட மனைவியா மரியாதைக்குரிய ஒருத்தியா இந்த சமுதாயத்துக்கு நீங்க காட்டுங்க... எந்த இடத்திலையும் என்ன நீங்க மனைவின்னு காட்டிக்கவே வேண்டாம்...உங்க சொத்து , பத்து குடும்ப மரியாதை எல்லாத்துக்கும் அவளே உரிமைக்காரியா இருந்துக்கட்டும் ... ஆனா உங்க காதல் மட்டும் எனக்கு கிடைக்குமா மாமா? இந்த தாலி கழுத்துல உரசும் போதெல்லாம் இதயத்துக்குள்ள உங்களை சுமக்கிற எனக்கு ஏதோ ஒரு வலி அந்த வலிக்கு உங்க காதல் மட்டும் போதும்... உங்களோட மனைவின்னு சொல்லி கிடைக்கிற அந்தஸ்து கௌரவம் மரியாதை எதுவும் வேண்டாம். அசிங்கப்பட்டுக்கிறேன் அவமானப்பட்டுக்குறேன் , கேவலப்பட்டு ஊர் அத்தனையும் என்ன காரி துப்பிட்டாலும் பரவாயில்லை... எனக்கு அதெல்லாம் பிரச்சனையே இல்ல, எனக்கு தேவை உங்களோட ஒத்த பார்வை, உங்களோட ஒரு குட்டி வாழ்க்கை உங்களோட நேசத்துல ஒரு துளி நேசம் போதும்!! என்றவள் அவன் கையை பிடிக்க அதை அவனும் உதறவில்லை ஏன்??
இந்த சமுதாயம் உன்னை ஓட ஓட விரட்டிடும் திரவியா ... சின்ன பொண்ணு உனக்கு அதெல்லாம் புரியலடி... "அவள் கண்ணில் இருந்த கண்ணீர் அவனை அமைதியாக பேச வைத்து விட்டது ..
"சமுதாயம் இந்த ஊர் இதையெல்லாம் எதிர்த்து நிற்கக்கூடிய தைரியம் என் மனசுக்கு இருக்கு மாமா.. நான் இது எதுக்கும் பயப்பட மாட்டேன் பயந்திருந்தா , இந்த பாவத்தை துணிஞ்சு செஞ்சிருக்க மாட்டேன்"
"இப்போ சொன்னியே இதுதான் திரவியா உண்மை நாம செஞ்சுகிட்டு இருக்கிறது பாவம், துரோகம்..
"காதல்னா கட்டில்ல கட்டிப்பிடிச்சு உருள்றதும் இச்சையை தீர்த்துக்கிறது மட்டும் இல்லையே மாமா... உங்க கூட பேசுறதும் என்ன பொறுத்த வரைக்கும் காதல்தான்!! உங்க கூட இருக்கிறதும் என்ன பொறுத்த வரைக்கும் காதல்தான்!! உங்க கூட என்னுடைய நேரங்களை செலவிடுவதும் என்ன பொறுத்த வரைக்கும் காதல்தான் ... நான் கேக்குறது அந்த காதல் தான்!!உங்க இரண்டாவது மனைவிக்கு நீங்க கட்டில்ல சுகம் தரணும்னு கூட அவசியம் இல்லை ... என்கூட நீங்க நீங்களா இருந்தா கூட போதும் மாமா... உங்க நேசத்தை கொஞ்சம் அனுபவிச்சா கூட போதும் ... நான் வேறு எதுவும் கேட்க மாட்டேன் என்று திரவியா இரண்டு கைகளை கூப்பி அவன் முன்னால் காதல் பிச்சை கேட்டவளை இவன்தான் அரண்டு போய் பார்த்தான் எச்சில் விழுங்கினான்..
"நாளைக்கு ஈவினிங் ஊருக்கு கிளம்புறேன் மாமா .. ஹாஸ்டல்ல ரூம் வெக்கேட் பண்ணிட்டேன் "
ஏன் ??
"தனியா வீடு எடுத்து இருக்கேன்
"ப்ச் யாரை கேட்டு இது எல்லாம் பண்ற எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா ??
"அதான் இப்போ சொல்லிட்டேனே
"இப்போ தனியா இருந்து என்னத்த கிழிக்க போற நீ
"வாரம் வாரம் காரணம் சொல்லிட்டு உங்க வீட்டுக்கு வர முடியாதே மாமா .. உங்களை வாரம் ஒரு தடவையாவது பார்க்காம தலை வெடிச்சுடும்
அதுக்கு ??
அதான் தனிக்குடித்தனம் நானே போயிட்டேன் என்று கண்ணை சிமிட்ட...
ப்ச் நான் வர மாட்டேன் ....
"சன்டே ஆறு மணி ப்ளைட்ல வந்துட்டு நைட் ரிட்டர்ன் ஆகிடுங்க "
"நோ வே ..
"கண்டிப்பா உங்களை டச்சிங் கிஸ்ஸிங் எல்லாம் பண்ணி டெம்ட் பண்ண மாட்டேன் ,ஆயா மேல சத்தியம் மாமா
"முடியாது
"அப்போ விடுங்க நானே இங்க வந்துட்டு போறேன்
"ஏய் ஏய் வேண்டாம்
"அப்போ நீங்க வாங்க
"முடியாது
"ஒன்னு பொண்டாட்டியை பார்க்க நீங்க வாங்க இல்லை நான் புருசனை பார்க்க இங்க வர்றேன் அவ்வளவுதான் .... அவன் பின்னால் போய் பதி கழுத்தை கட்டி கொண்டவள்
சமத்து புருசன் வருவீங்கன்னு தெரியும் ...அவன் கழுத்தை உதறி அண்ணாந்து பார்க்க அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள்
" வேலையை பாருங்க வீட்டுக்கு போறேன் என்று போனவள் பாம்பா விழுதா தெரியாது திகைத்தான்...
பாம்மோ விழுதோ கையில பிடிச்சாச்சு இனி அது கொத்தினாலும் வாங்கித்தான் ஆகணும் முத்தம் வைத்தாலும் வாங்கித்தான் ஆகணும்!!