அரிதாரமில்லாத துலிகா டீசர்
Thuliga

நெடுநாள் கனா
மதுரவிஷமோ நீ
மறலி மருவி நின்றான் ஒன்றன்பின் ஒன்றாக நேரடி அமேசான் கதைகள் சைட்டுக்கு வரிசையாக வந்து கொண்டிருக்கும் ..
அரிதாரமில்லாத துலிகா!!
நேரடி அமேசான் சீரியஸ்
அரிதாரம் ஒப்பணை
துலிகா அழகு
டேபிள் முழுவதும் பொருட்களை கலைத்துப் போட்டிருந்த தன் மகனை மங்கலம் தலையில் அடிக்காத குறையாக பார்த்தார்
ஒத்த மகன் என்று ஆசையாக வளர்த்ததற்கு தினம் தினம் ஏன்டா இப்படி பண்ற என்று அழ வைத்து விடுவான் .... கெட்ட பழக்கங்கள் எல்லாம் கிடையாது இவன் வேறு ரகமானவன்...
அம்மா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
இங்க தான்டா இருக்கேன் ... நீ கத்தாத
நான் கத்துறேனா , நானா கத்துறேன் என்று சிவந்து போய் தாயை பார்த்த மகனை பெருமூச்சு விட்டு பார்த்த மங்கலம்
இல்லைய்யா, நான் பைத்தியம் வாக்குல ஏதோ சொல்லிட்டேன் நீ சொல்லு எதுக்கு ஏலம் விடுற...
ப்ச் பேச்சுக்கு மட்டும் குறை இல்லை, இங்க இருந்த என் லோஷன், எங்க பேஸ்பேக் , முகத்துக்கு போடுற பவுண்டேஷன் எங்க?? அதோட கண்ணுக்கு போடுற கூலிங் கிளாஸ் எங்க ??
எங்க எங்கன்னா, எனக்கு என்ன சாமி தெரியும், அந்த கருமத்தை எல்லாம் நீதான போடுற.. வாங்கும் சம்பளம் பாதியில் ஜிம் பிட்னெஸ் ட்ரீங், முகத்துக்கு போட லொட்டு லொசுக்கு என்று அத்தனையும் வாங்கி விடுவான் ... அழகை மிகைபடுத்தி இன்னும் இன்னும் பேரழகனாக சுத்த ஆசை... மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வாங்கினாலும் வாங்கினான் இந்த உலகிலேயே நான்தான் பேரழகன் என மமதை கொண்டவன்...
ஹம்ச வர்த்தனன்
வயது முப்பது நெருங்கிறது ..
அழகை ஆதரிப்பது தவறே இல்லை.. அழகால் கர்வம் கொள்வது பெரும்தவறே அதைத்தான் அவள் பெத்த அழகு மமகனும் செய்து கொண்டிருக்கிறான்
நடிகன் ஆகியே தீருவேன் , என்று ஐந்து வருடமாக வேலைக்கு போகும் நேரம் தவிர மத்த நேரங்களில் படவாய்ப்பு தேடி தேடி அலைந்து திரியும் மெடில் கிளாஸ் நாயகன் , இதோ இன்று ஒரு பெரிய டைரக்டர் அவனை வர சொல்லி இருக்க... கை கல் ஓடவில்லை..
மாலை அரக்க பறக்க முகத்தை கண்ணாடியில் பார்த்து டச்அப் முடித்து அவன் டைரக்டர் அறை உள்ளே பவ்வியமாக வர
அடடே வாங்க ஹீரோ என்றதும் முகம் கொள்ளா புன்னகை ஹம்சாவுக்கு
உட்காருங்க தம்பி சுத்தி வளைச்சு பேச விரும்பல
ப்ரோடியூசர் ஒரு ஐம்பது தந்திடுவார், நான் ஒரு இருபது கோடி போட்டுடுறேன் உங்க பங்குக்கு நீங்க ஒரு ஐம்பது கோடி போட்டிருங்க தம்பி அடுத்த வாரமே படத்துக்கு பூஜை போட்டிரலாம் ..பணத்தை கொண்டு வாங்க இல்லை யாரு கொண்டு வர்றாங்களோ அவங்கள போட்டிக்கிறேன் இப்ப கிளம்புங்க என்று முகத்தில் அடித்தது போல கூற காலை தரையில் ஓங்கி உதைத்து கொண்டே அந்த சினிமா கம்பெனியை அண்ணாந்து பார்த்தான்..
அந்த ஆந்திரா காட்பாடி அரண்மனை வீட்டு முன்பு ஹம்சா அண்ணாந்து பார்த்து கொண்டு நின்றான் .. திராவிட நிறத்தில் முகப்பூச்சு இல்லாது அலைந்த மக்கள் கூட்டம் அவனை முகம் சுளிக்க வைத்தது
இவனுக காட்டுமிராண்டி ஊர்ல ஒருத்தன் கூட கலரா அழகா இல்லை.. சீக்கிரம் இடத்தை காலி பண்ணணும் பார்க்கவே சகிக்கல என்று முகத்தை சிரித்த மேனியாக வைத்து கொண்டிருக்க ... உள்ளே போன ஹம்சா கண்கள் தீடீரென டால் அடித்தது ..காரணம் பெண் அல்ல பணம் .... பெட்டி பெட்டியாக அரண்மனையின் மூத்தவன் இளையவன் கையில் எண்ணப்படும் பணத்தில்...
ஐம்பது கோடி தான தம்பி என்று மூத்தவன் தலையே தூக்கி ஹம்சாவை பார்க்க
ஆமாங்க சார் ...
இது ஐம்பது கோடியே ஒரு ரூபாய் இருக்கு , எங்களுக்கு அதிஷ்ட தொகை ஒன்னு பார்த்துக்கிடுங்க....
ஓஓஓ ஒரு ரூபாய் அவனுக்கு போடப்போகும் நாமம் என தெரியாது ஹம்சா பணத்தை பார்த்து பல்லை இளித்து கொண்டு நின்றான் ..
இந்தாங்க வந்து எடுத்துக்கிடுங்க மாப்பிளை என்றதும் , இவன் குடுகுடுவென ஓடி போய் பணத்தை எடுக்க போக... மூத்தவன் பணப்பெட்டியை இழுத்து தன் அருகே வைத்து கொண்டு
கிரைய பத்திரம் போடாம காசு கொடுக்கிறது இல்லை கிரயம் என்ன தம்பி தர போறீங்க? ..என்று கேள்வியாக அவனை பார்க்க
கிரையமா? இது எல்லாம் அம்மா சொல்லலையே சார்
அட விளையாட்டு பிள்ளையா, இருக்கியே .. அழகா இருந்தா மூளை குறைவா இருக்குன்னு சொல்றது உண்மைதான் போல என்றவனை பார்த்து ஹம்சாவுக்கு கோவம் வந்தாலும், கோபத்தை விட காரியம் பெரிதே...
சரி தம்பி கிரகத்துக்கு பொருள் இல்லைன்னா என்ன , ஆளு இருக்கே ...புரியும்படி சொல்றேன் தம்பி லேய் மாப்பிள்ளைக்கு சேரை போடு என்றதும் ஆடம்பர நாற்காலி அவனுக்கு போடப்பட...
ஒன்னு பதறாதீங்க மாப்பிள்ளை, கிரயமா உங்களையே எங்களுக்கு கொடுத்துடுங்க என்ற இளைவன் பேச்சில் ஹம்சா அதிர்ந்து
வாட்?? ப்ச் நானா ??
ஆமா நீங்கதான் , உங்களை கடனுக்கு ஈடாக கொடுங்க ...புரியாது அவன் பார்க்க
அம்மாடி தங்க புள்ள , ஓடியா என்றதும் கருப்பு கால்களில் வைர கொலுசு மினுங்க ... தரை அதிராது ஒரு பெண் நடந்து வந்தாள்... அத்தனை பேரும் அவளை ஆசையாக பார்க்க ஒருவன் கண்கள் மட்டும் அருவருப்பாக சுளித்தது.. அவள் நிறமும், உயர குறைவும் , உருண்டு திரண்ட உருண்டை உடலையும் கண்டு ...
ப்பா இப்படி எல்லாமா கன்றாவியா பொண்ணுங்க இருக்கும் என்று அவன் முகத்தை சுளித்து திருப்பினான்
இது என் தங்கச்சி துலிகா !! கொஞ்சம் உங்கள விட நிறம் கம்மி .. என்றான் மூத்தவன்
டேய் கொஞ்சமாடா இது ? என்று அவன் பல்லை நரநரக்க
ஏன் அண்ணன் நம்ம புள்ளையை குறைச்சி சொல்லுத.. என் தங்கச்சி பக்கம் நீ வெளிறின கலர் என்றான் இளையவன் ....
இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கிட்டு இருக்கோம் ...
ஓஓஓ ,பாவம் எந்த அப்பாவி மாட்ட போறானோ என்று உள்ளுக்குள் அவன் சிரிக்க
உங்கள பார்த்ததும் முடிவே பண்ணிட்டேன் .. நீங்கதான் என் தங்கச்சிக்கு மாப்பிள்ளைன்னு என்று முடிக்க .... நெடுநெடுவென ஒரு உருவம் கூட்டத்தின் நடுவே மயங்கி சரிய, வேறு யாரும் இல்லை அவன் தான் நம்ம அழகு பைத்தியம்...
அதிர்ச்சி தாங்கலாம், பேரதிர்ச்சி தாங்க முடியாது மயங்கி விட்டான்...
அகத்தின் அழகே அழகு!!
அரிதாரம் இல்லாத துலிகா அவள் என அறியாது குரங்கு கையில் மாட்டிய மாலை போல தன் திருமண வாழ்வை பிய்த்து எறிய போகிறான்... அவள் களங்கம் இல்லாத வெள்ளை மனதையும் சேர்த்து ...