இவள் துணைவி அவள் மனைவி 9
Thunai9
9 இவள் துணைவி!!
அவள் மனைவி!!
அப்பா அம்மா உங்களுக்காக தான் சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்காங்க... நீங்க வந்து உங்க கையால சாப்பாடு எடுத்து கொடுத்தா தானே அம்மாவோட விரதம் முடியுமாம்? உள்ளே நுழைந்த உமாபதி கையை ஓடிவந்து கௌரிபதி பிடிக்க ...
ஷட் மறந்துட்டேனே., சாரி வேணி முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்துவிடலாம்னுதான் பார்த்தேன்., ஒரு கிளைண்ட் மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு வர லேட் ஆயிட்டு..
பரவால்ல மாமா ... வீட்டிற்குள் கண்களை அலையவிட்டு சின்ன வீட்டை தேடினான் .. ஆள் அசப்பு இருந்தது போல இல்லை,
அப்பாடா!! பெட்டி படுக்கையை கட்டிட்டு போயிட்டாளா , போயிருந்தா தேவையில்லை என்று நிம்மதி பட்டு முடிக்கவில்லை....
அக்கா கிச்சனுக்குள்ளே அவள் தலை தெரிந்தது...
அக்கா இதுல இவ்வளவு உப்பு போட்டா போதுமா? என்று கரண்டியோடு திரவியா வந்தவள்... பதிக்கு யாருக்கும் தெரியாது ஒரு பறக்கும் முத்தம் வேறு கரண்டியில் வைத்து ஊப் என்று ஊதி விட்டாள் இவன் கொந்தளித்து போய் பார்க்க ...
"ஏன்டி, அதான் உனக்கு சமைக்க வரலல்ல, எதுக்கு தேவையில்லாம நானும் சமைக்கிறேன்னு வந்து நின்னு என் வேலையை கெடுக்கிற.
" நீ என்ன சொன்ன ஒரு நாள் முழுக்க விரதம் இருந்து, நம்ம கையால புருஷனுக்கு சமச்சு அவங்க கையால நாமளும் சாப்பிட்டு, அவங்களுக்கும் கொடுக்கணும்னு சொன்னேன்ல... அப்போ என் கையால சமைக்கிறது தானே சரி ..
இல்லாத புருஷனுக்கு நீ பண்ற அலம்பல் தாங்க முடியலடி.... இப்ப இவ்வளவு சமைச்சு எந்த புருஷனுக்கு கொண்டு கொடுக்க போற ...
நம்ம புருஷனுக்கு தான் என்று உதட்டை மட்டும் அசைக்க... அது அவளுக்கு நேராக நின்ற உமாபதிக்கு கேட்காமல் இல்லை...
இவ்வளவு போதும் போடு ..நீங்க என்ன மாமா சிலை போல நிக்கிறீங்க, வாங்க மாமா விரதம் முடிச்சிடலாம்...
சரிம்மா என்று உமாபதி மாடியேறி ஆடை மற்றுக்கொள்ள போக ...
ஸ்ஸ்இஇஇ என்ற சத்தம் கேட்டு அவன் நிற்க .. திரவியா தான் ஏணிப்படி கீழே நின்றாள்..
என் விரதத்தையும் முடிக்க வேண்டியது இருக்கு நானும் சமைக்கிறேன் கணவா ..அதுவும் முதல் முதலா உங்களுக்காக சமைக்கிறேன்...என் சாப்பாட்டையும் சாப்பிடணும் ... சோ வயித்துல பாதி பாதி இடம் வச்சுக்கோங்க .. சேரிங் சேரிங் அங்க பாதி இங்க பாதிதான் என்று ஓடிவந்து மாடிப்படி அருகே நின்று கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு மீண்டும் கிச்சன் உள்ளே ஓடிவிட்டாள்
வேணி களைப்பாக இருந்தாலும், இது அவளுக்கு பழக்கம் என்பதால் , அவள் முகத்தில் சோர்வு மட்டும் தான் தெரிந்தது... ஆனால் திரவியாவிற்கு இப்படி சாப்பிடாமல் கிடப்பது எல்லாம் பழக்கமே கிடையாது... கை கால் எல்லாம் நடுங்கி போய் தான் இருந்தாள் முகம் வாடி வதங்கி என்னவோ காய்ச்சல் வந்து பல நாள் படுக்கையில் கிடந்தவள் போல் தளர்வாக இருந்தது கண்கூடாக தெரிந்தது
"ச்சை , இவளுக்காக வருத்தப்பட ஆரம்பிச்சிட்டேனா எதுக்கு இப்போ நான் அவ முகத்தை ஊத்து பாக்கணும் அவ சாப்பிட்டா என்ன ,சாப்பிடாம கிடந்தா என்ன ... அவளை நானா விரதம் இருக்க சொன்னேன் ..
தாலி கட்டுனது நீயா இருந்தா உனக்கு தான் விரதம் இருப்பா.
" என்ன கெடுக்கிறதுக்கு வேற யாரும் வேண்டாம் இந்த மனசாட்சி மண்ணாங்கட்டியே போதும் தெரியாத்தனமா ஒரு தாலிய கட்டிக்கிட்டு அவளுக்கும் இவளுக்கும் மத்தியில நான் படுற அவஸ்தை இருக்கே, பேசாம சைனைட் தின்னுட்டு செத்துடலாமான்னு தோணுது... எரிச்சலில் தனியாக புலம்பி கொண்டே குளித்து கிளம்பி வந்தவன்...
வேணி , பூஜையறையில் பூஜை செய்து முடித்து சாப்பாட்டை ட்ரெயில் எடுத்துக் கொண்டு வந்து கணவன் முன்னால் நீட்டி மாமா என்று தாலியை நீட்ட அவள் தாலியில் குங்குமத்தை வைத்த உமாபதி, அவள் நெற்றியிலும் வைத்துவிட்டு ஸ்பூனில் சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்டி நீரையும் அவளுக்கு புகட்டிவிட.. எல்லாவற்றையும் கூட்டத்தோடு நின்று அவன் இரண்டாவது மனைவியும் ஆர்வமாக பார்த்துக் கொண்டு நின்றாள்.. பங்கு போடுவதில் அவளுக்கு தயக்கம் இல்லை போல..
நீலவேணி உமாபதி காலில் விழுந்து, ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா என்று கூற
தீர்க்க சுமங்கலியா இரும்மா என்று மலரை எடுத்து அவள் மீது அர்ச்சனை தூவ பூரித்த முகமாக எழும்பியவள் , மேஜையில் வந்து உட்கார்ந்து அவனுக்கும் சாப்பாடு வைத்து விட்டு அவளும் சாப்பிட ஆரம்பிக்க ... உமாபதி சாப்பாட்டை பிசைந்து கொண்டே இருந்தான், ஒரு வாய் கூட வாய்க்குள் போகவில்லை... எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்க, திரவியா மட்டும் மாடிப்படியில் கன்னத்தில் கை வைத்து அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க ..இவனுக்கு சாப்பாடு எப்படி உள்ளே போகும் ...
கிறுக்கு போல, செத்தவங்க காக்காவா வந்து திங்கிறது மாதிரி என் புருஷன் காத்தா வந்து தின்பாரு, அதுக்கு பிறகு தான் நான் சாப்பிடுவேன்னு பட்டினியாக கிடைக்காதடி.. போய் சாப்பிட்டு தூங்கு காலையில இருந்து வேலை செஞ்சு எனக்கு டயர்டா இருக்கு .. நான் போய் படுக்கிறேன் என்று வேணி தங்கையை திட்டிவிட்டு மேலே போக... அவள் பின்னாலேயே உமாபதியும் ஓடிவிட்டான் ... போகும் அவன் முதுகையை பார்த்துக் கொண்டிருந்தவள் அமைதியாக தோட்டம் நோக்கி போய்விட்டாள்...
உமாபதி படுக்கை அறையில் சின்ன விளக்கு எரிந்து கொண்டிருந்தது... மகனும், வேணியும் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள் ... ஆனால், கண்ணை மூடி படுத்துக் கிடந்த உமாபதிக்கு தூக்கம் வருவேனா என்றது... கண்ணுக்கு கையை மறைவாக வைத்து படுத்து கிடந்தவனுக்கு தூக்கம் சடுகுடு ஆட ... மணியை பார்த்தான்.. மணி ஒன்று..
சாப்பிட்டு இருப்பாளா.. ப்ச் எங்க பிடிவாதம் பிடிச்சா பிடிச்சது தான.. ஏற்கனவே ஹெவி அல்சர் உண்டு, இப்படி சாப்பிடாம கிடந்து ஏதாவது ஆயிட்டா ... என்ன பண்ண? எப்படியும் போயிட்டு போறா என்று விடவும் முடியவில்லை...
அந்த நடு இரவு வேளை சத்தம் இல்லாமல் கட்டில் குலுங்காமல் மெல்ல பதி எழும்பி கதவை திறந்து திரவியா அறை நோக்கி போனான்... கதவின் மீது கை வைக்க அறை திறந்து கொண்டது உள்ளே வெறும் படுக்கை கிடக்க ...
எங்க போனா? என்று ஜன்னல் வழியாக பார்த்த அவனுக்கு உயிர் ஆடி போனது ..அந்த மழையும் பனியும் பெய்யும் இரவில் தோட்டத்தில் சுருண்டு கிடந்தாள் திரவியா... அவள் பிடிவாதம் முன்னே இவன் தான் இளக வேண்டியதாகி போகிறது...
டைனிங் அறை நோக்கி சென்றவன் மேஜையில் அவள் சாப்பிடாமல் மூடி வைத்திருந்த உணவை பெருமூச்சு விட்டு பார்த்தவன் .. கண்களை மூடி சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றான்.
என்ன நினைத்தானோ அந்த உணவை கையில் எடுத்துக் கொண்டு தோட்டம் நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்..
சிறு சிறு மழைத்துளி உடலை உறைய வைத்து கொன்று விடும் பனி வேறு , அதன் நடுவில் மெல்லிய நைட்டியில் கல்பெஞ்சில் குளிரில் கிடு கிடுவென்று ஆடிக்கொண்டு சுருண்டு படுத்து கிடந்தாள் திரவியா...
அவளிடம் போவோமா, திரும்பி விடுவோமா ரெண்டு எண்ணத்தில் அவன் மதில் பூனை போல நிற்க
ம்ம்மா ஆஆஆஆ திரவியா முனகல் சத்தம் கேட்டு அவன் கால் அவள் அருகே செல்ல செல்ல
ம்ம்மா முனகல் அவள் இயலாமை சொல்ல..அவன் நடை இன்னும் வேகமாகியது....
"திரவியா
"திரவியா
"ம்ம் முனகல் தான் வந்தது
பதி அங்கும் இங்கும் பார்த்து விட்டு...அவள் தோளில் மெல்ல தட்டிட உடல் கொதித்து கிடந்தாள்....
போச்சு இழுத்து வச்சிட்டா , சொன்னா கேட்கிறாளா பல்லை கடித்தான்...
"திரவியா
"ம்ம்
"எழும்பு " அவள் அசைய முடியாது கிடக்க
ப்ச் அவள் தோள்களை பிடித்து எழும்பி அமர வைத்தான்.... திரவியா கண்களை திறந்து எதிரே நின்ற உமாபதியை பார்த்தவள் வறண்ட இதழ்கள் அழகாய் பூவாய் சிரிக்க...
"ஏண்டி இப்படி பண்ற ? எதுக்கு இப்படி கிடந்து வாடி. வதங்குற, நீ என்ன செஞ்சாலும் என் மனசு இறங்காதுடி இப்படி கிடந்து சாப்பிடாம என்னத்த சாதிக்க போற
"சாதிச்சிட்டேனே மாமா, உங்களை சாப்பாட்டோட என்ன தேடி வர வச்சிட்டேனே ... இதுக்காக சாக கூட ரெடி தான் மாமா ... எனக்கு தானே இந்த சாப்பாடு கொண்டு வந்தீங்க என்று பேசக்கூட திராணி இல்லாமல் அவனை கண்கள் மலர பார்த்துக் கொண்டிருக்க.... தன் தலையில் அடித்துக் கொண்டவன்
"உனக்கு ஏதோ பைத்தியம் முத்தி போச்சுன்னு நினைக்கிறேன் ... இந்தா சாப்பிடு
ம்ஹூம், அவளுக்கு அள்ளி கொடுத்தீங்கல்ல ... அவ விரதத்தை முறைப்படி முடிச்சீங்கல்ல ... அதே மாதிரி ஒன்னு கூட குறைய கூடாது.. என் வாயில அள்ளிக் கொடுத்து என் விரதத்தை முடிங்க , இல்ல வேண்டாம் "என்று கையை கட்டிக்கொண்டு திரவியா முகத்தை திருப்பிக் கொள்ள...
"முடியாதவளை அடிக்க கூடாதுன்னு பார்க்கிறேன் யாராவது பார்த்துட போறாங்கடி, சாப்பிட்டு தொலை அவன் கள்ளன் போல அங்கும் இங்கும் சுற்றி சுற்றி பார்த்து கொண்டே நிற்க
"சரி முதல் வாய் மட்டும் தாங்களேன் ப்ளீஸ்' கெஞ்சுதலாக அவனை பார்க்க
"ப்ச் ஸ்பூனில் சாப்பாட்டை எடுத்து அவள் வாயில் வைத்துக் குத்தினான் ...
"தேங்க்ஸ் மாமா
"ஒழுங்கா சாப்டுட்டு போய் தூங்கு இந்தா பிடி" என்று தட்டை அவள் கொடுத்து விட்டு திரும்ப போன அவன் மணிக்கட்டை பிடித்து நிறுத்திய திரவியா
நீங்களும் சாப்பிடலையே மாமா ...
அதெல்லாம் சாப்பிட்டேன் நீங்க என்ன கவனிக்காம கடந்து போகலாம் ஆனால் நான் உங்கள ஒரு நிமிஷம் கூட கவனிக்காமல் கடந்து போக மாட்டேன் நீங்க சாப்பிடாமலேயே கை கழுவிட்டு எழுப்பி போனதை நான் கவனிக்க தான் செஞ்சேன் இதாங்க நீங்களும் சாப்பிடுங்க பார்க்கிறீர்களா மாமா புருஷன் பொண்டாட்டிக்குல்ல எச்சில் கூட அமுதம்தான்...
ஆனா நான் இன்னொருத்தி எச்சில்
ப்ச் அதுக்கு நான்யா வருத்தபடணும் சும்மா நசநசன்னு அதையே சொல்லிக்கிட்டு என்று அவன் அந்த நேரம் தன் எச்சில் கையோடு அவனுக்கு சாப்பாட்டை அள்ளி வாயில் திணித்துவிட இவன் திகைத்து போய் அவளை எரித்த பார்வை பார்க்க
போதும் போதும் , பிறகு கோவப்படுங்க போய் சாப்பிடுங்க.... பரவாயில்லை நானும் ஓரளவு நல்லாதான் சமைக்கிறேன்.. குடும்பம் நடத்த சகல குவாலிபிகேசனும் வந்துடுச்சு கணவா... நீங்க தான் இனி மனசு வைக்கணும் , என்று கத்திய அவள் உதட்டை கை வைத்து அடைத்தவன்...
கத்தாதடி... இச் இச் இச் அவன் உள்ளங்கை உள்ளே பல முத்தங்கள் அவள் உதடு கொடுக்க வெடுக்கென்று கையை எடுத்து கொண்டவன் ....
ப்ளீஸ்டி புரிஞ்சுக்கோ திரவியா, இது உனக்கும் நல்லதில்ல எனக்கும் நல்லது இல்ல..."
சாப்பிட்ட கையை நக்கி கொண்டே அவனை பார்த்தவள்..
"நல்லது கெட்டது நாம எடுத்துக்கிறதுலதான் மாமா இருக்கு ... இத நல்லதுன்னு நீங்க எடுத்துகிட்டா நல்லது... கெட்டதுன்னு எடுத்துக்கிட்டா கெட்டது... எனக்கு உங்க கூட இப்படி வாழ்றது கூட நல்லாத்தான் இருக்கு ... சோ , நான் ஏன் விடணும் சமத்து கணவா!! போயி சாப்பிடுட்டு படுத்து தூங்குங்க , நாளைக்கு பார்ப்போம் குட் நைட் , ஐ லவ் யூ மாமா !!"என்று அவன் கன்னத்தில் இமைக்கும் நொடியில் பச்சக் என்று முத்தம் வைத்துவிட்டு திரவியா ஓடியே விட்டாள்...
உடல் வெடவெடக்க அவள் தந்துவிட்ட போன முத்தத்தில் உமாபதி அந்த மழையிலும் வியர்த்துப்போய் நின்றான்....
அசந்து தூங்கும் வேணியின் அருகே தலையில் கை வைத்து உமாபதி இரவு முழுவதும் தூங்காமல் உட்கார்ந்து வேணியையும், மகனையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்... அவன் போன் வாட்சப் ஒளிர மெல்ல அதை திறந்து பார்த்தான் சின்னவீடு தான் ....
சாப்பிட்டீங்களா மாமா ? கேள்வி வர... பதில் அனுப்பவில்லை ... ஆனாலும் அதை பார்த்து கொண்டே இருந்தான்...
உலகத்தில் தெரியாமல் தவறு செய்கிறவனை விட தெரிந்தே தவறு செய்கிறவன் தான் அதிகம்!!
தான் என்ற சுயம் வரும் போது
பிறர் நலம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும் !!