துணைவி மனைவி 8

Thu8

துணைவி மனைவி 8

8 இவள் துணைவி !!

   அவள் மனைவி !! 

உமாபதி இரவு டின்னருக்கு கூட கீழே வராமல் தங்கள் அறையிலேயே உட்கார்ந்து கொண்டான்... ஃபோனை கையில் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைத்துக்கொண்டு ஜன்னல் அருகே நின்று பின்னால் உள்ள தோட்டத்தை சத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்...

"என்ன மாமா டின்னர் வேண்டாம்னு சொல்லிட்டீங்க.. இந்தாங்க , இந்த பூஸ்ட்டாவது குடிங்க என்று வேணி உள்ளே வந்து அவன் கையில் பூஸ்டை கொடுக்க.. அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தவனுக்கு தொண்டையில் இறங்கவில்லை...

ரெண்டாவது என்ன சில்மிஷம் இரவு பண்ணப்போகிறதோ என்று சற்று பயம் என்பதை விட எப்படி சமாளிப்பது என்பது தான் அவனுக்கு இப்போது இருக்கும் டாஸ்க் ...

"வேணிம்மா 

"மாமா 

"உன் தங்கச்சி தூங்க போயிட்டாளாம்மா?

"உங்களுக்கு வச்ச சப்பாத்தியையும் சேர்த்து உள்ள தள்ளிட்டு சாப்பிட்டது செமிக்கல , கொஞ்ச நேரம் தோட்டத்துல போயி வாக்கிங் பண்ணிட்டு வர்றேன்னு போய் இருக்கா

"இந்த டைம்லேயா என்று மணியை பார்த்தான்... மணி 11...

"மாமா பேய் தான் அவளை கண்டு பயப்படணும் அவ யாரை பார்த்து பயப்பட போறா

"அது என்னமோ சரிதான், சரிம்மா நீ போய் தூங்கு.. கொஞ்ச நேரம் காத்து வாங்கிட்டு வரேன்.. 

"ம்ம் தூங்கும் மகனோடு போய் வேணி படுத்துக்கொள்ள அவர்களுக்கு போர்வையை போர்த்தி விட்டு விட்டு வந்து மீண்டும் அதே இடத்தில் நின்றான்..

திரவியா தோட்டத்தில் போனை கையில் வைத்துக்கொண்டு அதனிடம் ஏதோ சாடை பேசுவது தெரிந்தது... எப்படியும் போனை போட்டு அவனை டார்ச்சர் செய்வாள்,. அதனால்தான் சுவிட்ச் ஆப் செய்து வைத்தது .... அவள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் போனால், அடுத்தது என்கூட படுக்கையில் வந்து படு என்று வம்பு செய்யக் கூடியவள் தான் அவள் ... அவளுக்கு பிள்ளை கொடுத்தல்ல, எனக்கும் கொடு என்று சட்டமாக தலையில் ஏறி உட்கார்ந்து கொள்வாள்..

பத்து தடவை இதே போல் அவளை புறக்கணித்தால் தன்னை விட்டு ஓடிப் போவாள் என்று அவன் கணிப்பு...

"எங்க அக்கா மாமாவ காணல, வந்துட்டாரா?

"அவர் அப்பவே வந்துட்டாரு திரா.. உடம்பு சரியில்ல

"உடம்பு சரி இல்லையா , மாமாவுக்கு என்ன பண்ணுது

"லைட்டா மேல் கொதிக்குது , காய்ச்சல் அதான் மாத்திரை கொடுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு வந்து இருக்கேன்.... நைட் டின்னர் வேண்டாம்னு சொல்லிட்டார் என்ற அக்காவின் பேச்சை நகத்தை கடித்துக் கொண்டே பார்த்தாள்

"ஓஓஓ பரீட்சைக்கு முதல் நாள் பசங்களுக்கு எக்ஸாம் ஃபீவர் வர்ற மாதிரி இவருக்கு லவ் ஃபீவர் வந்துடுச்சோ, ஓடுங்க ஓடுங்க எவ்வளவு தூரம் ஓடுறீங்கன்னு பார்க்கிறேன்... இன்னைக்கு மட்டும் நைட்டு தோட்டத்துக்கு வரல. நாளைக்கு இருக்கு சங்கதி" மனதில் புளுபுளுத்துக் கொண்டே அவனுக்கு வைத்த சப்பாத்தியையும் தின்றுவிட்டுதான் தோட்டத்தில் வந்து காத்துக் கொண்டு இருந்தாள்... 

மணி ஒன்றைக் கடந்தது ரெண்டை கடந்தது, திரவியா அசைவேனா என்று தோட்டத்து கல்பெஞ்சில் அப்படியே படுத்துக்கொண்டாள்

"திமிர் பிடிச்ச நாயி, போறாளா பார்.. எவ்வளவு நேரம் அந்த பனியில அவ பாட்டுக்கு இருக்கா கால்ல சூடு போட்டு இவளை வளர்த்திருக்கணும் அரக்கி அரக்கி என்று அவளை திட்டிக் கொண்டே, அவளுக்கு பாதுகாப்புக்கு இவன்தான் மாடியில் நின்று அவளை பார்த்துக் கொண்டே நிற்க வேண்டியதாகி போய்விட்டது....

இரவு முழுவதும் தூங்காமல் உமாபதிக்கு உண்மையிலேயே காய்ச்சல் வந்து விட்டது... கண்ணெல்லாம் சிவந்து உடல் எல்லாம் வலி எடுக்க வேலைக்கு கிளம்பி சோர்ந்த நடையோடு படியில் இறங்கி வந்து கொண்டிருக்க ... 

வீடு பூஜை அறை போல காட்சி அளித்தது நீலவேணி மஞ்சள் கலர் சேலையில் நின்றாள் ...

தன் தாயையும் விட்டு வைக்காது மஞ்சள் கலர் சேலை கட்டி விட்டு அவருக்கு சாப்பாடு அள்ளி கொடுத்து கொண்டு நின்றாள் ..

"என்னம்மா வீடு மங்களகரமா இருக்கு.. என்ன விசேஷம் என்று தன் தாய்க்கு சாப்பாடு கொடுக்கும் வேணி அருகே வந்து உமாபதி நிற்க போக 

"அய்யோ மாமா தள்ளி நில்லுங்க ... நேத்தே சொன்னேன் இல்ல... இன்னைக்கு சுமங்கலி பூஜை, ராத்திரி வரைக்கும் பச்சை தண்ணி, பல்லுல படாம விரதம் இருப்பேன்னு.... 

"ஓஓஓ

"நேத்து சொன்னேனே

"அட ஆமா இல்ல மறந்துட்டேன்"... இவ சொன்னது அவன் எங்க கேட்டான்... அவன் கவனம் எல்லாம் இரண்டாவது சேனல் மீதுதானே இருந்தது ..

சாப்பாடு கொஞ்சம் போட்டு சாப்பிடுவீங்களா?

"இருக்கட்டுமா நான் சாப்பிட்டுக்கிறேன், நீ அம்மாவை பார் என்றுவிட்டு உமாபதி சாப்பாடு மேஜையில் வந்து அமர்ந்தவன் .. ஏதோ அசைவில் தலையை தூக்கி பார்த்தவன் சற்று அதிர்ந்துதான் போனான்...மங்களகரமான கெட்டப்பில் அவன் செகண்ட்டும் இறங்கி வந்து கொண்டிருந்தது.. 

மாடி படியிலிருந்து மஞ்சள் கலர் சுடிதாரில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் திரவியா..

"நீ ஏன்டி மஞ்சள் கலர் சுடிதார் போட்டுக்கிட்டு சுத்திகிட்டு இருக்க என்று உள்ளிருந்தே வேணி தன் தங்கையை பார்த்து தலையில் அடிக்க 

"நேத்து சொன்னல்ல அக்கா, இன்னைக்கு சுமங்கலி பூஜைன்னு சுமங்கலி விரதம் இருந்தா புருஷனுக்கு தீர்க்க ஆயுள்னு...

"புருஷன் இருக்கிற நாங்க, பூஜை பண்றது ஓகே ... நீ எதுக்கு பண்ற...

"ப்ச் வரப் போற புருஷனுக்காக நான் இப்பவே சுமங்கலி பூஜை இருக்கிறதா நினைச்சுக்க... 

"எது பண்ணினாலும் ஒரு தினுசாவே பண்ணு ஏற்கனவே உனக்கு அல்சர் இருக்கு... சாப்பாடு ஸ்கிப் பண்ண கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ் பண்ணி இருக்காங்கல்ல என்று தங்கையை முறைத்து பார்க்க....

"என் உயிரே போனாலும் பரவாயில்லை, ஆனா என் புருஷனுக்காக இருக்க போற விரதத்தை நீ தடுக்காத, உன் புருஷன் நல்லா இருக்கணும், என் புருஷன் அல்பாயுசுல போகணுமா?? நெவர் நானும் விரதம் இருக்கேன் .. என் புருஷனோட ஆயுசை கட்டி காக்க போறேன் , புருஷன் பொண்டாட்டி விஷயத்துல நீ தலையிடாத. கெட் அவுட்...

"எப்படியோ போ .... 

"அப்படியே விட்டிரு அது தான் எல்லாருக்கும் நல்லது ஆமா... மாமா சோலோவா உட்கார்ந்து சோக கீதம் வாசிச்சிட்டு இருக்காரு ... எப்பவும் பக்கத்துல இருந்து கூட்டு வைக்கவா, குழம்பு வைக்கவான்னு பத்து ரூபாய்க்கு பொண்டாட்டி வேலை செய்ய சொன்னா, லட்ச ரூபாய்க்கு செய்வ ,இன்னைக்கு என்ன மாமாவா அந்தரத்தில் தொங்க விட்டிருக்க என்று கேட்டுக்கொண்டே டேபிளில் உட்கார்ந்திருந்த உமாபதியை திரவியா ஓரக் கண்ணால் பார்க்க... அவனும் குறைக்கண் போட்டு அவளைத்தான் பார்த்தான் ...

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே ,இன்னைக்கு நாள் எப்படி முடிய போகுதோ என்று அவனுக்கு பயம்!! கையில மாட்டினியா, இன்னைக்கு சட்னிடா என்பது போல் அவளுக்கு கிளுகிளுப்பு?

"சொன்னேன்லடி இன்னைக்கு விரதம்... அவர் மூச்சு காத்து படாம கொஞ்சம் ஒதுங்கி தான் இருப்பேன்..

"நீ எல்லாம் எப்படித்தான் புள்ள பெத்தியோ போ... உன் புருஷன் பக்தியில் தீயவைக்க என்ற முனங்கி கொண்டு , 

"அப்போ நான் வேணும்னா மாமாவுக்கு சாப்பாடு வைக்கவா?

"அது

"அம்மா தாயே நான் சாப்பாடு வைக்கவான்னு தான் கேட்டேன் , வேற எதுவும் கேக்கலையே... பாவம் மனுஷன் சட்னிக்கும், பாயாசத்துக்கு வித்தியாசம் தெரியாம... இட்லிக்கு ரொம்ப நேரமா பாயாசத்தை ஊத்திட்டு இருக்கார்... 

"அச்சச்சோ என்று வேணி கணவன் பக்கத்தில் ஓட போக ... திரவியா வேணிக்கு குறுக்கே கைநீட்டி தடுத்து..

 விரதம் விரதம் !விரதம்! என்னாகிறது ...

"ஆமால்ல 

"அதனால அதான் சொன்னேன் நான் பாத்துக்குறேன்.... நீ உன் மாமியாரையும் மாமனாரையும் பாத்துக்கோ என்று விட்டு திரவியா மெலிதாக விசில் அடித்து கொண்டே உமாபதி அருகே வந்து நின்றாள் 

"என்ன கணவா ராத்திரி எஸ்கேப் ஆயிட்டீங்க போல" என்றதும் அவன் தன் அருகே நின்ற அவளை அண்ணாந்து முறைக்க.. 

"நான்தான் முறைக்கணும் , ராத்திரி வாங்கன்னு அத்தனை தடவ சொல்லி இருக்கேன் வராம மொட்டை மடியில நின்னு , என்ன வேவு பாக்குறீங்களா என்று கிசுகிசுக்க .... 

"என் கண்ணை வி்ட்டு எதுவும் மறையாது, அதுவும் நீங்க சான்சே இல்லை... கேட்டீங்க தானே உங்களுக்காக நானும் இன்னைக்கு சுமங்கலி விரதம் இருக்கிறேன்... உங்க முதல் சேனலுக்கு விரதம் முடிக்க நீங்க வர்றீங்களோ இல்லையோ எனக்கு தெரியாது.. ஆனா, என்னோட விரதத்தை முடிச்சு வைக்க ... நீங்க வந்துதான் ஆகணும்... வரலைன்னா ஒன்றும் பிரச்சனை இல்லை... எத்தனை நாளா இருந்தாலும் , நீங்க வந்து அந்த விரதத்தை முடிச்சு வைக்கிற வரைக்கும்... ஒரு பருக்கை சோறு உள்ள போகாது... நான் எந்த அளவுக்கு வீம்பு பிடிச்சவன்னு உங்களுக்கே தெரியுமே கணவா... சோ ரிஸ்க் எடுக்காம , வந்து ஏன் விரதத்தை முடிச்சு வச்சிருங்க ... உங்களையே நினைச்சு வாழ்ற பாவப்பட்ட மனைவியை கொன்ன பாவத்தை சுமந்துடாதீங்க..... 

"அந்தக் கடவுளே உன்னை காரி துப்புவார், நீ பண்ற காரியம் அப்படி

"அதனாலதான் நான் முருகன்கிட்ட மட்டுமே வேண்டிக்கிறது... வேற கடவுள் பக்கமே போறதில்லை" என்று உதடு விரிய சிரித்தவள்... அவனுக்கு பக்குவமாக சாப்பாட்டை வைத்து சாப்பிடுங்க என்பது போல் புருவத்தை தூக்கி சமிக்ஞை கொடுக்க ... 

உன் கை பட்ட இந்த சாப்பாடு, என்ன பொறுத்த வரைக்கும் விஷம் என்று அதற்குள்ளேயே உமாபதி கையை கழுவ ... 

"ஆனா நீங்க எனக்கு விஷமே தந்தாலும் அது அமுதம்தான் மாமா, காத்திருக்கேன்... விஷத்தோட வந்தாலும் சரிதான் அமுதத்தோட வந்தாலும் சரிதான் ஆனா வரணும்.... என்றவள் சட்டென அவன் உதட்டுக்குள் காய்ச்சல் மாத்திரயை திணித்து நீரையும் திணற திணற கொடுத்துவிட இவன் விக்கித்து போய் வேணியை தேட 

"போயிட்டா போயிட்டா, விக்கிட்டு செத்துடாதீங்க, உங்கள நம்பிதான் ரெண்டு பொண்டாட்டி இருக்கோம் .. ஏகப்பட்ட வேலை பார்க்க வேண்டியது இருக்கு "என்று துப்ப முடியாது மாத்திரையை விழுங்கிய உமாபதி உதட்டை சுடிதார் ஷாலில் துடைத்து விட்டு திரவியா போய்விட்டாள்....  

மாமா மாத்திரை தின்னுட்டு போங்க என்று வேணி இன்னொரு செட் மாத்திரையோடு வந்தவள், அதை மேஜையில் வைக்க.... 

"இல்லம்மா, இப்பதான் என்று அவன் தொண்டையில் இறங்கிய ரெண்டாவது மனைவி தந்த மாத்திரையை கூற வாய் எடுக்க..  

"என்ன மாமா சொன்னீங்க... 

"ம்ஹூம் என்று அதையும் வாயில் போட்டு நீரை குடித்தான்.... 

"ரெண்டு பொண்டாட்டி கட்டினா ரொமான்ஸ் மட்டும் டபுள் டபுளா வராது, ஆப்பும் டபுள் டபுளா தான் வரும் ..