ஊன் உயிர் நீயே நீயே
Unn

ஊன் உயிர் நீயே நீயே !!
மூலிகைகள் நம்ம நாட்டோட அடையாளம், நாளை தலைமுறைக்கு வைரம் பணம் சேர்த்து வைக்கலைன்னாலும் பரவாயில்லை, மஸ்ட் மூலிகை இயற்கை வளங்கள் சேர்த்து வைக்கணும்.. அது இருந்தா போதும் அடுத்த தலைமுறை செழிப்பா இருக்கும்... சோ இது பேர் அம்மாண் பச்சரிசி தாவரம் என்று மேஜை மேல் சாய்ந்து நின்று வேதாந்த் தாவரங்களை காட்டி பாடம் எடுத்து கொண்டு நிற்க ... யாரோ ஒரு உருவம் அவனை கடந்து போய் பின் இருக்கையில் அமர தலையை தூக்கி பார்த்தான் அசரா...சொடுக்கிட்டு அவளை அழைத்தான்
என்ன என்றாள் இருந்த இடத்தில் இருந்து கண்களை உயர்த்தி...
உனனதான் கெட்டப்...
ப்ச் வொய் என்று சலித்து எழும்பி நின்றாள் ... முட்டி வரை ட்ரவுசர் மேலே கையில்லாத பனியன்
மேடம் முன்னாடி கொஞ்சம் வர்றீங்களா... சலிப்பாக தோளை உலுக்கி கேஸூவலாக வந்து அவன் முன்னே நிற்க
உனக்கு மறதி நோய் இருக்கா ?
இல்லையே ஏன் ?
இல்லை குளிச்சிட்டு இருக்கும் போது பாதியில எழும்பி வந்திருக்கியே அதான் கேட்டேன் ... என்றான் வேதாந்த் எரிச்சலாக அவளை மேலிருந்து கீழ் வரை பாத்தபடி , பல்லை கடித்த அசரா..
இந்த காலேஜ்ல ட்ரெஸ் கோட் கிடையாது.. எது வேணுமானாலும் போடலாம்
அப்போ இதையும் கழட்டி போட்டுட்டு வர வேண்டியதுதான
தேவைப்பட்டா செய்வேன்..
ஓஓஓ நீ செய்வ ஆனா எவன் பார்க்கிறது... வெளியே போ....
எதுக்கு ?
நான் என்ன எருமை மாடு மேய்க்கிறேனா உன்பாட்டுக்கு உள்ள வந்து உட்கார்ற ஹான் ...
இது எங்க அப்பா அக்னி கட்டி கொடுத்த காலேஜ் மிஸ்டர் ப்ரோபசர்... என்றாள் கெத்தாக..
ஓஓஓ ஆனா இதுக்கு பல ஏக்கர் நிலம் கொடுத்தது எங்க அப்பா விஜய்.. என்றதும் காலை உதைத்த அசரா
அதுக்கு இப்ப என்ன செய்யணும்....
ம்ம் நத்திங் கெட் அவுட்ஊஊஊஊஊஊஊஊஊஊஊ
முடியாதுன்னா என்றவள் பிடறியை கொத்தாக பிடித்த வேதாந்த் வாசல் நோக்கி தள்ள பொத்தென்று போய் வெளியே விழுந்தாள் அசரா..
யூயூயூ
கிவ் ரெஸ்பெக்ட், டேக் ரெஹ்பெக்ட்... உள்ள காலை வச்ச சீவிடுவேன் சீவி என்றான் பல்லை கடித்து ..
புக்கும் எடுக்க தெரியும் , கத்தியும் எடுக்க தெரியும் உன் ஸ்டேட்டஸ் டேஸ் டேஸ் எல்லாம் என்கிட்ட காட்டுன என்றவன் அவள் அருகே குத்த வைத்து அமர்ந்து
_____ தா கொன்னுருவேன் என்ற அவன் கெட்டவார்த்தையில் அசரா முகத்தை சுளிக்க...
மூடிட்டு இடத்தை காலி பண்ணுடி வெள்ளச்சி... என்றவனை முறைத்து கொண்டே அதே இடத்தில் அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.. வேதாந்தோ அவளை கண்டுகொளளாது வந்து நின்று மீதி பாடத்தை முடித்து வெளியே வந்தவன் வாசலில் மறைத்து கொண்டு உட்கார்ந்து இருந்த அவளை ஷூ காலால் ஓரம் தள்ளிவிட்டு மிடுக்காக நடந்து போக அவனை வஞ்சம் தீர்க்க கண்ணால் எரித்தாள் அக்னியின் புதல்வி..
எதிர் எதிர் துருவம் ஈர்க்கும்தான் ஆனால் காதலால் ஈர்க்குமா?