என் இனிய விவாகரத்தே 9

Divorce 9

என் இனிய விவாகரத்தே 9

9 என் இனிய விவாகரத்தே!! 

ஸ்ரீநாத், மனைவி செய்த துரோகங்களை நினைத்து பல மாதம் தூங்க முடியாமல் கிடந்தவன், இனி அவள் தன் வாழ்க்கையில் இல்லை என்று முடிவெடுத்த பின்பு இப்போதெல்லாம் நிம்மதியாக தூங்குகிறான்... 

 எல்லோரும் ஐயோ அம்மா உன் வாழ்க்கை போச்சே என்று வருத்தப்படும் பொழுது இவனுக்கு மட்டும் ஒரு மெல்லிய சத்தம் கேட்டது 

"அவங்களே வாழும்போது நாம வாழணும் சார்... ஜாம் ஜாமுன்னு வாழணும்" என்ற அந்த குரல் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கும்... அந்த ஒரு வார்த்தை வாழ வேண்டுமென்ற ஆசையை கொடுத்துக் கொண்டே இருந்தது... தன்னிடம் வந்து உதவி செய்து அவனுக்கு தேவையான அறிவுரையும் சொல்லிவிட்டுப் போன அந்த பெண்ணின் முகம் சத்தியமாக ஞாபகம் இல்லை.... ஆனால் , அவள் சொல்லிவிட்டு போன அத்தனை வார்த்தைகளும் தவிடுபொடியாக கிடந்த அவன் மனதை சற்று அல்ல அதீதமாகவே ஆறுதல் படுத்தி உத்வேகம் கொடுத்து விட்டு போயிருந்தது என்பதை மறுக்கவே முடியாது...

நல்ல தூக்கத்தில் இருந்த ஸ்ரீநாத்தின் மொபைல் போன் அலற.. கண்களை கசக்கி கொண்டே போனை பார்க்க.. மாமியாரிடம் இருந்து போன் வந்திருந்தது யோசனையாக அதை எடுத்தான்...

 "இப்ப என்ன டிராமா பண்ண போறாங்களோ தெரியலையே என்று முனங்கிக் கொண்டே போனை ஆண் பண்ணி காதில் வைக்க 

மருமகன், உங்க பொண்டாட்டி விஷத்தை குடிச்சுட்டா, ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொன்னதும் ஸ்ரீநாத்துக்கு சற்று அதிர்ச்சிதான்...

அவ்வளவு எளிதாக சாகக்கூடிய ஆள் எல்லாம் அவள் இல்லையே .. தன்னிடம் மறுபடியும் ஒட்டிக் கொள்வதற்கு அவள் போடும் விதவிதமான நாடகத்தில் இதுவும் ஒன்று என்று நினைத்தாலும் அவள் சாகட்டும் என்று நினைக்க இப்போது மனம் வரவில்லை.... மெல்ல எழும்பி சட்டையை மாட்டிக் கொண்டு அவர்கள் சொன்ன மருத்துவமனைக்கு உள்ளே போக 

"சண்டாளி விஷத்த குடிச்சிட்டு வந்து சொல்றா , நல்ல வேளை கூட்டிட்டு வந்து சேர்த்தோம் இல்லைன்னா செத்து தொலைஞ்சிருப்பா"என்று தான் அழ ... சாகப்போகிறவன் எதற்கு நான் விஷத்தை குடித்து விட்டேன் என்று உரியவர்களிடமே சொல்லப் போகிறான் ...

"டாக்டர் என்ன சொல்றாரு

"பயப்பட ஒன்னும் இல்லைன்னு சொன்னாரு மருமகன்.. உள்ள வந்து அவளை பார்க்க கூடாதா என்றதும் மெல்ல ஸ்ரீநாத் உள்ளே நுழைய அப்பாவியாக உள்ளே நுழைந்த ஸ்ரீநாத்தை ரஞ்சனி பார்த்துக் கொண்டிருக்க...

தம்பி அவ செஞ்சது மன்னிக்க முடியாத குற்றம் தான்.. பெரிய பாவத்தை உங்களுக்கு செஞ்சுட்டா நேத்து ராத்திரியான் சொல்லி அழுதா... அவ செஞ்ச தப்ப அவளே ஒத்துக்கிட்டா... மனசு நொந்து ராத்திரி முழுக்க அழுதுகிட்டே இருந்தா... ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாதா தம்பி ? உங்க கால்ல வேணும்னாலும் விழுறேன் என்று மாமியார் ஸ்ரீநாத் காலை பிடிக்கப் போக.. சட்டென நகர்ந்து அங்கே விளையாடிக் கொண்டிருந்த தன் மகனை தூக்கி கொண்டவன்..

"துரோகங்களுக்கு நல்ல விடை என்ன தெரியுமா பழிவாங்களோ , மன்னிப்போ மறக்கிறதோ இல்ல சத்தம் இல்லாமல் விலகி போறது தான்.. உங்க பொண்ணு தப்பு பண்ணிட்டேன்னு வருந்தினா , தயவு செய்து என் வாழ்க்கை விட்டு விலகிப் போயிட சொல்லுங்க

" என்ன தம்பி அவ தான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்றாளே இனிமே வாழ்க்கை முழுக்க உங்களுக்கு உண்மையா இருப்பா சொல்லேண்டி என்று தாய் ரஞ்சனி தோளில் இடிக்க

"ம்ம் ஆமாங்க இனிமே பொறுப்பான பொண்டாட்டியா நடந்துக்குறேன் , உங்களைத் தவிர வேற என்ற அவள் எந்த விவரங்களையும் விளக்கங்களையும் கேட்க விருப்பம் இல்லாத ஸ்ரீநாத் கை நீட்டி தடுத்து நிறுத்தி..

"தட்டு நிறைய விதவிதமா சாப்பாட்ட வச்சுட்டு அது நடுவுல கொஞ்சோல அசிங்கத்தை வச்சா உன்னால சாப்பிட முடியுமா ???என்றதும் அவள் தலையை குனிய ..

"அது மாதிரி தான் ஒரு உறவுக்குள்ள துரோகம் என்கிற தூசி சேர்ந்துருச்சுன்னா, அதுக்கு பிறகு அது காலம் முழுக்க கண்ணை இல்ல இருதயத்தை உறுத்திக்கிட்டே இருக்கும் ... அது நம்ம குழந்தைக்கு நல்லது இல்ல..

உங்க குழந்தைய பெத்த தாயா எனக்கு ஒரு வாய்ப்பு தர கூடாதா? உங்க பொண்டாட்டியா கூட வேண்டாம் அந்த வீட்டில ஒரு வேலைக்காரியா இருந்துக்கிறேன்... 

நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு பட்டுன்னு பதில் சொல்லு... நீ சொன்ன மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டு, மன்னிச்சிட்டு உன்னை ஏத்துகிறேன் என்றதும் அவள் ஆர்வமாக சாய்ந்து அமர 

ஜீவனாம்சமா உனக்கு என்ன வேணும்னு கேளு என்றதும் யோசனையாக ரஞ்சனி கண்களை உருட்ட .... பதில் இல்லை... 

மெலிதாக சிரித்தவன் தன் குழந்தை கன்னத்தில் முத்தமிட்டு

"ஒரு நல்ல தாய் ஜீவனாம்சமா என் குழந்தை போதும்னு கேட்டிருப்பா.... ஒரு நல்ல மனைவி ஜீவனாம்சம் எல்லாம் வேண்டாம் நீங்க தான் வேணும்னு கேட்டிருப்பா... இதுல இருந்தே தெரியல உனக்கு தேவை என்னோட மன்னிப்பு இல்லை... நீ மறஞ்சு வாழ புருஷன் என்கிற ஒரு அந்தஸ்து... வேண்டியது எல்லாம் செய்ய ஒரு அப்பாவி புருஷன்.... உன்னோட தேவையை எல்லாம் தீர்த்துக்க ஒரு இளிச்சவாயன்.... உன் கூட சகிச்சு வாழ்ந்தது நீ அழகின்னோ, உன்ன போல ஒருத்தி இல்லைன்னோ நினைச்சு இல்லை... உன் கழுத்தில கட்டுனேன் பாரு ஒரு தாலி... அதுக்கு உண்மையா உயிர் உள்ளவரை இருக்கணுங்கிற ஒரே காரணம் தான் நம்ம உறவை இழுத்து கொண்டு வந்தது ... எப்போ அந்த தாலியை போட்டிக்கிட்டே உன்னால மத்தவன் கூட படுக்க முடிஞ்சதோ? அப்பவே அந்த தாலியின் புனிதம் மண்ணோட மண்ணா போச்சு .. மக்கி போன உறவில இனி உயிரை தேடாத, அது செத்து போச்சு... அத்தோட நான் இளிச்சவாயனா இருக்க விரும்பல.. இந்த மாதிரி டிராமா எல்லாம் போடாம , நாளைக்கு கோர்ட் வந்து சேரு விவாகரத்து கொடுக்க முடியாதுன்னு வேற ஏதாவது சீன் போடணும்னாலும் போடு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா அசிங்கப்பட போறது நீயும் , உன் குடும்பமும்தான்....  

ப்ளீஸ் நான் சொல்றது கேளுங்க அந்தாளுதான் பேசி மயக்கி ..

ஊஊஊஊஊஊஊஊ என்றவன் உஷ்ணம் அந்த அறையே உணர்ந்தது 

மயக்கம், புருசனையும் பிள்ளையையும் கூட மறக்க வைக்குமா? அப்படி மறதி நோய் முத்தி போன ஒருத்தி எனக்கு வேண்டுவே வேண்டாம் சாமி , ஆளை விட்டிரு என்று ததிரும்பி டக்க... 

தம்பி தம்பி என்று மாமியாரும் மாமனாரும் இரு பக்கமும் வந்து அவன் கையை பிடித்துக் கொள்ள 

"எனக்கு பொண்ணு தேடும் போது எங்க அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க நம்மள விட வசதியில குறைஞ்ச பொண்ணா தேடுனா... அவ நம்ம வீட்டுக்கு மகாலட்சுமியா இருப்பா மரியாதையை காப்பாத்துவான்னு ... ஆனா, ஒழுக்கம் பண்பு மரியாதை ஏழை பணக்காரன் சம்பந்தப்பட்டது இல்ல ... அவங்க மனசு சம்பந்தப்பட்டதுன்னு இப்ப புரிஞ்சுது.. குடிசையிலேயும் கொலைகாரன் இருக்கான்... மாளிகையிலேயும் கொலைகாரன் இருக்கான்... குடிசை வீட்டிலும் தங்கம் இருக்கு மாளிகையிலும் தங்கம் இருக்கு ... எனக்கு அந்த கொடுப்பனை கிடைக்கல..

"தம்பி நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான் விவாகரத்து ஆன பிறகு ஒத்த கட்டையா என்ன பண்ணுவீங்க

" நான் ஏங்க ஒத்தக்கட்டையா இருக்கணும் .. உங்க மக என்றவன் வாயில் வந்த அசிங்கமான வார்த்தையை தன் வாய்க்குள் விழுங்கி கொண்டு 

"நான் ஏன் வாழாம கிடக்க போறேன் ... எனக்கான வாழ்க்கை என்ன தேடி வருதோ இல்லையோ... நான் தேடி போவேன்.. என் வாழ்க்கையை எனக்கு வாழ தெரியும்.... நீங்க கவலைப்பட வேண்டாம் அவளுக்கு ஜீவனாம்சமா நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்து துரோகத்தை பரிசா வாங்கிகிட்ட அந்த வீட்டை அவ பேர்லையே எழுதி வச்சுட்டேன்... மாச மாசம் எல்லாம் என்னால கொடுக்கிற அளவுக்கு வசதியும் பத்தாது மனசும் இல்லை .. எனக்கு ஒரே ஒரு உபகாரம் மட்டும் செய்ய சொல்லுங்க என் குழந்தையை என்கிட்ட கொடுத்துடுங்க... உங்களுக்கெல்லாம் புண்ணியமா போகும் என்று கையெடுத்து கும்பிட்ட ஸ்ரீநாத் வெளியே போக 

நாயே உன் வாழ்க்கையை நீயே மண்ணள்ளி போட்டுட்டியே எவ்வளவு நல்ல வாழ்க்கை தொலைச்சிட்டு நிக்கிறியே என்ற தாயும் தகப்பனும் ரஞ்சனியை திட்டுவது கேட்டுக்கொண்டே தன் பைக்கை போய் எடுத்தான் 

காலையில் வேண்டாத கடவுள் இல்லை , கும்பிடாத கோவில் இல்லை... எப்படியாவது விவாகரத்து கிடைத்து விட வேண்டும் , என் மகனும் என் கையில் வந்து விட வேண்டும் ... இந்த மன போராட்டங்களோடு என்னால் இனி ஒரு நிமிடம் கூட சுவாசிக்க முடியாது என்று யோசித்துக் கொண்டே நீதிமன்றம் வந்து சேர்ந்தான்....  

விவாகரத்து கிடைச்சிடும் சார் பட் குழந்தை தான் என்று வக்கீல் இழுக்க ... 

போராடுவேன் சார் ... என் அன்பை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.... எனக்கு என் புள்ளை வேணும் ... "

மேக்சிமம் ஆண்களுக்கு சயில்ட் கஸ்ஸிடி கிடைக்கிறது கஷ்டம் ஸ்ரீநாத்.... அவன் யோசனையாக அமர்ந்து இருக்க  

ஸ்ரீநாத்ங்கிறது என்று ஒரு நடுத்தர வயது பெண் வந்து அவன் அருகே நிற்க தலையை தூக்கி பார்த்தான் ... 

நீங்க... புரியாது பார்த்தான்.. 

"உங்களுக்கு இந்த வாழ்க்கையை வி்ட்டு வெளியே வர தைரியம் இருக்கு எனக்கு இல்லை சார்.... என் புருசன் தப்பா உறவுல இருக்கார்னு தெரிஞ்ச அன்னைக்கே செத்துட்டேன்... என்று அழுத பெண் யார் என்று புரிய ..

"கல்யாண வயசுல பொண்ணு இருக்கு நாளைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது இது அவ வாழ்க்கையை கேள்வி குறியாக்கிட கூடாதுல்ல எக்கேடோ கெட்டு போ.. எனக்கு நீ புருசனா வேண்டாம்.. என் பிள்ளைகளுக்கு மட்டும் தகப்பனா இருன்னு முடிச்சிட்டேன் " என்று கண்ணீரை துடைத்த அப்பெண்.... 

ரொம்ப சாரி தம்பி அந்த ஆளு சபலத்தால உங்க வாழ்க்கை போச்சு ..மெலிதாக சிரித்த ஸ்ரீநாத் 

"ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாது மேடம் ..

இந்த விஷயம் என்று அப்பெண் தடுமாற 

"யாருக்கும் தெரியாது உங்க கண்ணீருக்காக அதை ரகசியமாவே வச்சிடுறேன் 

"ம்ம் நன்றிங்க என்று அப்பெண் ஓட 

"இப்படியும் ஒரு பெண்!! துரோகத்தை விழுங்கி கொண்டு தன் பிள்ளைகளுக்காக கணவனுக்கு கெளரவ பட்டம் கொடுத்து வைக்க.. அந்த கழிசடையோ மனைவிக்கே தெரிந்து விட்டது இனி என்ன என்பது போல.... ரஞ்சனிக்கு உடனே போனை போட

நிலமை கைமீறி போயிடுச்சு ராஜா இனிமே என்ன பண்ணன்னு எனக்கு தெரியல..

"நான் அப்ப சொன்னது தான் ... உன்ன வேணும்னா வச்சிக்கிறேன் ... நீ விரும்புறபடி வசதியா வாழ்க்கை அமைச்சு தர்றேன் ... ஆனா உன் குழந்தையை எல்லாம் என்னால மேய்க்க முடியாது .... யோசிச்சு முடிவு சொல்லு என்க... ரஞ்சனி யோசனையாக நீதிமன்றம் வந்து சேர்ந்தாள்...

"என்னம்மா நேத்து வரை பைத்தியம்னு சொன்ன இன்னைக்கு , விவகாரத்து பண்ண சம்மதம்னு சொல்ற...என்று ஜட்ஜ் விவாகரத்துக்கு சம்மதம் சொன்ன ரஞ்சனியை கேள்வியாக பார்க்க ... 

"யோசிச்சு பார்த்தேன் மேடம் ... நாளைக்கு அவரால என் உயிருக்கு எதாவது ஆபத்து வந்துட்டா அதான் பிரிய சம்மதம் சொல்றேன்... 

நீ,பைத்தியம்னு கூட சொல்லிக்க எனக்கு விவகாரத்து கொடு என்ற மனநிலை அவனுடையது... 

"ஊப்ஸ் சரி "

"ஸ்ரீநாத் குழந்தை மைனரா இருக்கிறதால தாயோட இருக்கட்டும் என்று ஜட்ஜ் கூறிவிட 

மேடம் ஸ்ரீநாத் பதற ... யோசனையாக நின்ற ரஞ்சனி 

"குழந்தையையும் அவரே வச்சிக்கட்டும்" என்ற அப்பெண்ணை அத்தனை பேரும் ஒரு பார்வை பார்க்க ... தன் தகப்பன் காலை பிடித்து கொண்டு நின்ற தருணை ஜட்ஜ் ஆழ பார்த்தார் .... மகன் உதட்டில் வடிந்த சாக்லேட் சாறை கை வைத்து துடைத்தான், தூங்க கண் சொக்கிய மகனை தூக்கி தோளில் போட்டு தட்டினான்... தகப்பன் கழுத்தில் கிடந்த செயினை பிடித்து கொண்டு தூங்கிய மகனை அவன் கைகள் தடவி கொடுக்க .... 

குழந்தை அவன் தாயோட தான் இருக்கணும்னு இந்த கோர்ட் தீர்ப்பு வழங்குது என்றதும் ஸ்ரீநாத் கண்ணில் கண்ணீர் கட்டிவிட..

சில தகப்பனும் மீசை வைத்த தாய்தான்!! உங்க குழந்தையை கூட்டிட்டு போங்க என்ற ஜட்ஜூக்கு நன்றியோடு கையை கூப்பியவன்.... 

நன்றிங்க மேடம் என்று ஆரத்தழுவி கொண்டான் தன் பிள்ளையை... 

கோர்ட் வாசலில் வந்து நின்ற ஆடம்பர காரில் மிடுக்காக ஏறி போன ரஞ்சனியை எட்டி பார்க்காது தூங்கிய தன் மகனை வைத்து கொண்டு அங்கிருந்த பஸ் ஸ்டாண்டில் அமர ...

சுதந்திர தினத்தை கொண்டாட அங்கே நடந்த ஏற்பாடுகளை கண்கள் மலர பார்த்து ரசித்து கொண்டிருந்தான் 

அவனுக்கும் இனி சுதந்திரம்!! 

குடும்ப வாழ்க்கையில் கட்டுபாடுகள் கனப்பது இல்லை , அடிமைத்தனம் வலிப்பது இல்லை நம்பிக்கை துரோகங்கள் மட்டுமே மறக்க முடிவது இல்லை ...

துரோகத்தை விட நேர்மை சிறந்தது 

பிடிக்க வில்லை என்றால் பிடிக்க வில்லை என்று ஒத்துகொண்டு விலகி சென்று விடுவது சாலச்சிறந்தது!! 

துரோகம் தவிர்!!