அநாயகனே-5
அநாயகனே-5
ஜெயச்சந்திரன் தனது குடும்பத்தோடு சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரவும் அவர்களுக்கு எதிராக ஜட்ஜ் குருநாதனின் குடும்பம் எதிராக வந்தது.
அவருக்கும் ஜெயச்சந்திரனுக்கும் ரொம்ப நாளைய நட்பு உண்டு என்பதால், ஒருவரையொருவர் பார்த்ததும் கைகுலுக்கி பொங்கல் வாழ்த்து சொல்லி பேசிக்கொண்டிருந்தார்கள்.
“என்ன எம்.எல்.ஏ சார் எப்படி இருக்கீங்க? குடும்பத்தோட வந்திருக்கீங்க போல ? என்று கேட்ட ஜட்ஜ் அப்படியே திரும்பி மகேஸ்வரியும் பார்த்து சிரித்தார்.
இருகுடும்பத்துக்கும் நல்ல பழக்கம் என்பதால் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
குருநாதனுடைய மூத்தமகன் தர்ஷன் ஆதிராவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆதிராவும் அதைக் கவனிக்கத்தான் செய்தாள். ஆனாலும் கண்டுக்காத மாதிரியே திரும்பி சங்கவியோடு பேசுவது போல நின்று கொண்டாள்.
சங்கவிதான் அதைக் கவனித்துவிட்டு ‘என்னடா நடக்குது இங்க? அவன் என்ன ஆதிராவை இப்படி பார்க்கிறான்? ஏதோ சரி இல்லையே?இதுக்கு முன்னாடியெல்லாம் சாதாரணமாகத்தான் பார்த்து பேசுவான். இப்போ ஆதிராவை அவனுக்குப் பிடிச்சிருக்குப்போல அதுதான் இப்படி பார்க்குறான். இதுவும் நல்லதுக்குத்தான்” என்று நினைத்த சங்கவி அவர்கள் இருவரையைம் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளது மனதிற்குள் சட்டென்று ஒரு ஐடியா வந்து போகவும், முகம் பளிச்சென்று சந்தோசத்தில் ஜொலிஜொலிக்க, அப்படியே திரும்பி ரவீந்திரனை பார்த்தாள்.
ரவீந்திரனுக்கும் அவளது பார்வை புரிந்தது. சங்கவியின் இப்போது அவனை புன்னகை முகத்தோடு ஏறிட்டு பார்க்கவும், ஆகா நம்ம நினைச்சதுமாதிரி இவளும் நினைக்கிறாள் போலிருக்கே! என்று புரிந்து கொண்டவன் அவளிடம் தலையாட்டி நான் பார்த்துக் கொள்கிறேன், நீ அமைதியா இரு என்று கண்ணசைத்து சொல்லிவிட்டான்.
இருவரும் மனதிற்குள் “ஏன் ஆதிராவுக்கு தர்ஷனை மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க கூடாது?அவனும் நல்ல ஆதிராவுக்கு ஏத்த ஜோடியா இருக்கான். வசதி வாய்ப்புகள்ல இருந்து எல்லாத்துலயும் நமக்கு சமமாக இருக்கிறவங்க, எல்லாமே நல்ல பொருத்தமாதான் இருக்கு. இவங்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்க பெரியவங்கக்கிட்ட பேசுவோம்” என்கிற ஐடியாதான் அவங்க இரண்டுபேருக்கும் ஒன்றுபோல மனசுக்குள்ள வந்தது.
ஆதிராவோ அக்காவும் அத்தானும் ஏன் ஒருத்தரை ஒருத்தர் இப்படி பார்த்துக்கிறாங்கன்னு யோசித்தவள், அவர்கள் தர்ஷனையும் தன்னையும் திரும்ப திரும்ப பார்த்ததும் விளங்கிவிட்டது.
‘ஓஹோ இதுதான் மேட்டரா? நீங்கெல்லாம் என்ன மாதிரியான திட்டம் போடுவீங்கன்னு எனக்கு தெரியாதா தங்கங்களா?ஹய்யோ ஹய்யோ சின்னப்புள்ளத்தானமாவே இரண்டுபேரும் இருக்கீங்களே!’என நினைத்தவள அவர்களைக் கண்டுக்காத மாதிரியே அமைதியாக நின்றாள்.
இவர்கள் இங்கு திட்டம்போட்டுக்கொண்டிருக்க, ஜெயசந்திரனும்,குருநாதனும் பேசிமுடித்துவிட்டு அவரவர் குடும்பங்களை அழைத்துக்கொண்டு ஒருத்தர் கோவிலுக்கு உள்ளேயும், ஒருத்தர் கோவிலுக்குள்ளிருந்து வெளியே வந்தார்.
ஆதிரா எதையும் கண்டுக்காது நடக்க தர்ஷன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவன் என்ன பண்றான்னு சங்கவி திரும்பிப்பார்க்க உடனே தர்ஷன் கொஞ்சம் ஷாக்காகி திரும்பிக்கொண்டான்.
இதுவல்லவோ நல்ல பையனுக்கு அழகு. இவன்தான்டா என் தங்கச்சி ஆதிராவுக்கு மாப்பிள்ளை என்று முடிவே செய்துவிட்டாள்,
இப்போது எல்லோரும் வீட்டுக்கு வந்து மத்தியானம் சாப்பிட்டு முடிந்து பேசிக்கொண்டிருந்தனர்.
சங்கவிதான் நேரடியாக ஜெயச்சந்திரனிடம்வந்தவள் ” “அப்பா இந்த ஜட்ஜ் அங்கிளோட பெரிய பையன் தர்ஷன் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான்? ஏதோ இன்ஜினியரிங் ஏதோ படிக்கிறன்தானே அந்த அங்கிள் சொல்லிட்டிருந்தாரு? உங்களுக்கு அவனைப் பத்தி ஏதாவது தெரியுமா?” என சாதாரணமாக கேட்பது போல அவனைப் பற்றி விசாரித்தாள்.
“ஏன் சங்கவி இப்போ அவனைப் பத்தி விசாரிக்க?” என்று மகேஷ்வரி சந்தேகமாகக் கேட்டார். மூத்தமகள் அப்படியொன்னும் சும்மா எந்தக் கேள்வியும் கேட்கமாட்டாள்னு அவருக்குத் தெரியுமே.அதுதான் குறுக்கால புகுந்து கேள்விக்கேட்டார்.
“யம்மா என்னைக் கொஞ்சம் பேசவிடேன். நீங்க சொல்லுங்கப்பா. உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. நீங்க இந்த தொகுதி எம்.எல்.ஏ வேற ஓரளவு தெரிஞ்சிருக்குமே”
“இதென்ன புதுசா இருக்கு. எம்.எல்.ஏன்னா அவங்க விவரம் தெரியணுமா என்ன?குருநாதன் பிரண்டுங்கிறதுனால தெரியும்.தர்ஷன்
இங்க நம்ம ஊர்லயேதான் கவர்மெண்ட் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்துட்டிருக்கான்டா. கவர்மெண்ட்ல காண்ட்ராக்ட் எடுத்து பில்டிங் பாலம் கட்டுறதுன்னு ரொம்ப பிஸியா இருக்கான். நல்ல பையன் நல்ல டேலண்டான பையன். குருநாதன் மாதிரியே ரொம்ப புத்திசாலியான பையன். பெரிய கம்பெனி வைச்சு நடத்துறான்” என்று அவனைப் பத்தி மானாவாரகயாக பெருமை அள்ளவீசிப பேசிக்கொண்டிருந்தார்.
இது போதுமே ஆதிராவுக்கு இந்த தர்ஷனையே மாப்பிள்ளையாகப் பாத்திரலாமே என்று சங்கவியும் ரவீந்திரனும் ஒரு முடிவு எடுத்துவிட்டு, யாருகிட்ட பேசினால் இதற்கான முடிவு எட்டும் என்று தெரிந்தே மகேஸ்வரியின் கையை சுரண்டினார்கள்.
அவரோ உன் எண்ணமெல்லாம் எனக்கா தெரியாது. என்று கண்ணை காண்பித்தவர் ஜெயச்சந்திரனின் முன்பு எதுவும் பேசாமல் அமைதியாக இரு. இனி நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
ஜெயச்சந்திரன் தனது கட்சி ஆபிஸுக்கு போகணும் என்று கிளம்பி போய்விட்டார்.
ஆதிரா யாரும் என்னவும் பேசிட்டுப்போங்க என்று எதுவும் கண்டுக்காது சாப்பிட்டு முடித்து, தன்னோட ரூமுக்குப் போய்விட்டாள்.
நம்ம அப்பா நமக்கு யாரைக் கட்டிவைப்பாங்கன்னு அவளுக்கு நல்லாவே தெரியும். அதைவிடவும் அப்பா இந்த தர்ஷனைத்தான் அவளுக்கு மாப்பிள்ளையாக பார்த்திருந்தால் அதையும் மகளிடம் நேரடியாகவே சொல்லக்கூடியவர்தான். அப்படியே அவர் சொன்னாலும் அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நல்லதொரு புரிதல் அவளுக்கு இருக்கு. அதுதான் அவளை பதட்டப்படுத்தாது வைத்திருக்கிறது.
ஜெயசந்திரன் அங்குள்ள வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு திரும்பி வருவதற்கு சாயங்காலமாகிவிட்டது.
ஜெயச்சந்திரன் காரு வீட்டுக்குத் திரும்பி நோக்கி வரும்பொழுது, அங்கே கும்பல் கும்பலாக சிவானந்தன் ஆட்கள் நின்று வேலைப் பார்க்கொண்டிருந்தார்கள்.
அவர்களோடு இளந்தீரனும் நின்றிருக்க, அங்கே என்ன நடக்குது என்று காருக்கு வெளியே எட்டிப் பார்த்தார்
அப்பொழுது பெரிய பெரிய பிளக்ஸ், பேனர்களும் போஸ்டர்களுமாக வண்டியில் வந்து இறக்கினார்கள்.
அந்த பிளக்ஸ், பேனர்கள்ல சிவானந்தனின் படம் போட்டிருந்த போஸ்டர்கள் இருந்தது .அதற்கு கீழாக இளந்தீரன் மற்றும் ரகுவரனின் போட்டோக்களும் பெயர்களும் இருந்தது.
அதாவது பொங்கலுக்கு அடுத்த நாள் நடக்கும் மாட்டுப் பொங்கலுக்காக, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சிவானந்தன் தலைமையில் ஏற்பாடு பண்ணி இருக்கிறார்கள்.
அதற்கான விளம்பர போஸ்டர்கள்தான் அங்கே வந்து இறங்கியது. அதை ஒவ்வொரு ஆளுக்கும் தனித்தனியாகப் பிரித்து கொடுத்து, ஆளாளுக்கு சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஜெயச்சந்திரனின் கார் அந்தப்பக்கம் வந்ததும்,அது ஸ்லோவானதும் இளந்தீரன் அதையெல்லாம் கவனிக்கத்தான் செய்தான்.
அவரைப் பார்த்தாலும் பார்க்காது, யாரோ எவரோ என்பது போன்று, கண்டும் காணாது அவர் முன்பாகவே ஒரு போஸ்டரை எடுத்தான்.
ஏற்கனவே அங்கே சுவரில் பெருசாக ஓட்டப்பட்டிருந்த
ஜெயச்சந்திரனின் போஸ்டரை வேகமாகக் கிழித்து விட்டு, அந்த இடத்தில் சிவானந்தனின் போஸ்டரை ஒட்டினான்.
அந்த போஸ்டரை ஒட்டிமுடித்துவிட்டு ஜெயச்சந்திரனைத் திரும்பிப் பார்த்து நாக்கலாகச் சிரித்தான்.
அவன் சிரிப்பதை பார்த்து அவரும் சிரித்தார்.
அவரது சிரிப்பை பார்த்து இளந்தீரன் குழம்பிப் போனான்.
“என்னாச்சு இவருக்கு? நம்ம சிரிக்கிறதுக்கு காரணம் இருக்கு,அவரை நம்ம கேவலப்படத்தணும்னு அவருக்காக அவங்க கட்சிக்காரனுங்க ஒட்டின போஸ்டரை கிழிச்சிட்டு, என் கட்சிப்போல்டரை ஒட்டிடு சிரிக்கிறேன். இவரு என்னைப் பார்த்து இவ்வளவு நக்கல்க சிரிக்கிறாரு? அவ்வளவு சீக்கிரத்துல இவரு சிரிக்கமாட்டாரே? இவரு சந்தோஷமாக சிரிக்கதப் பார்த்தாஏதோ உள்குத்து இருக்கும்போலயே. அதுவும் என்னமாதிரியான உள்குத்துன்னு பார்த்திர்வோமே. நான் அவருக்கே டஃப் குடுக்கிற ஆளு சும்மாவெல்லாம் விடமாட்டன்ல”என்று நினைத்தவன் மீண்டும் நக்கலாக சிரித்தவன் தனது மீசையை அவருக்கு முன்னாடியே பெருசா முறுக்கி கெத்துக் காட்டினான்.
அதைப்பார்த்தவர் இன்னும் விரிவான புன்னகையோடு அவனைப் பார்த்து, லேசாக கையை காட்டி வர்றேன்டா மருமகனே என்ற ரீதியில் தலையை ஆட்டினார்.
ஆஹான் மாம்ஸ் நம்மக்கிட்டயே வேலையைக் காட்டுறாரு போல என நினைத்த இளந்தீரன் போ போ உன் வேலையைப் பார்த்துட்டு போ என்பதுபோன்று கையை அசைத்துச் சொன்னான்.
“உனக்கு இருக்கற அதுப்புக்கு முடியலடா மருமகனே!” என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, டிரைவரை வேகமாக காரை எடுக்க சொல்லிவிட்டார்.
“அட பார்ற மாமனுக்கு எகத்தாளத்தை. எங்கமாமா போயிடப்போறீங்க. மறுபடியும் அங்க சுத்தி இங்க சுத்தி என்கிட்டதான் வருவீங்க. நானும் நீங்க எப்போ வருவீங்க பிரச்சனை பண்ணலாம்னு காத்திருக்கப்போறேன். காரு எங்கயாவது மோதிடப்போகுது மாமோய்” என்று அவர் காருக்குப் பின்னாடியே கத்தினான்.
அதைக்கேட்டு ஜெயசந்திரன் சத்தமாகச் சிரித்தார். கார் டிரைவர்தான் இப்போ முழித்தான். இவங்க இரண்டுபேரும் பரம்பரை எதிரிமாதிரி ஒரே குடும்பத்துல இருந்து வந்தும் இப்படி இரீக்காங்களே. இதீ எங்கப்போய் முடியுமோ?நம்ம போகும்போது கார் மேல கல்லெறியாமல் இருந்தால் சாரிதான்னு ஜெயசந்திரனைத் திரும்பிப்பார்த்தார்.
அவரது முகமோ இப்போது சிரிப்பிலிருந்து கோபத்தில் விகாரமாக மாறியிருந்தது. அவனே பயந்துவிட்டான். ஆனாலும் எதுவும் பேசாதுவேகமாக காரை வீட்டைப் பார்த்து ஓட்டினான்.
ரகுவரனும் அங்கே நின்று போஸ்டரை ஒட்டிக் கொண்டிருந்தவன் திடீரென்று திரும்பினான்.
அப்போது அங்கே ஜெயசந்திரனின் கார் நிற்பதையும், அதுக்குள்ளிருந்த ஜெயச்சந்திரன் இளந்தீரனை பார்த்து கையை காட்டுவதைக் கண்டவன் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டான்.
இந்த ஜெயசந்திரன் மருமகனைப் பார்த்து இவ்வளவு பாசமா தலையாட்டி சிரிச்சிட்டுப்போறாரே!இது சரியில்லையே. அப்போ மருமகன் மேல ஜெயசந்திரனுக்குக் கோபமெல்லாம் இல்லையா?இவங்க இரண்டுபேரும் அப்படியெல்லாம் பாசத்துல பின்னி பிணையிற ஆட்களெல்லாம் கிடையாதே!இந்த சிரிப்புக்கு பின்னாடி ஆப்பை நமக்குச் சொருகிடுவாங்களோ!ச்ச்சே அப்படியெல்லாம் இருக்காது!
அவனது எண்ணம் வேறமாதிரியே போகவும் அப்படியே யூடேர்ன் போட்டுத் திரும்பி அங்கே போய்கொண்டிருந்த காரை வெறித்துப்பார்த்தான்.
அதன்பின் தன்னைத்தானே நிதானப்படுத்தியவன் அவன் கையில் இருந்த போஸ்டரை முழுசாக ஒட்டிமுடித்துவிட்டு வந்து இளந்தீரனின் தோளில் வந்துக் கையைப்போட்டான்.
இளந்தீரன் ஏற்கனவே குழப்பத்தில் நிற்க, இவன் தோளில் கைப்போட்டதும் பதறி அதிர்ந்து கையை வேகமாக எடுத்துவிட்டுத் திரும்பிப்பார்த்தான்.
அதில் சத்தமாகச் சிரித்த ரகுவரன் “என்னடா இப்படி அதிர்ச்சியாகிப் பார்க்குற. என்ன சத்தமில்லாமல் சிரிச்சிட்டேபோன உங்க மாமா,அதே மாதிரி சதமில்லாமல் உன்னை சம்பவம் பண்ண ஆள் அனுப்பிட்டாரோன்னு பயந்துட்டியா?”எனக் கேட்டவாறே அவன் பக்கத்தில் வந்து நின்றான்.
“அவரு அப்படியெல்லாம் செய்யமாட்டாரு. ஆனாலும் பதவி எந்த எல்லைக்கும் கொண்டுசெல்லும்ல. ஒருவேளை அப்படி இருந்துட்டா என்ன பண்றது. நம்ம சுதாரிச்சு அவரையே போட்டுத் தள்ளிடணும்ல அதுதான் திரும்பிப்பார்த்தேன்”
“பங்காளி அவரு உன் தாய்மாமாடா!”
“யாரா இருந்தாலும் அரசியல்ல நம்பக்கூடாதுடா”
“அப்போ எனனையும் நம்பமாட்ட?”
“டேய் நீ என் நண்பேன்டா. உன்னைத்தான்டா முழுசா நம்புறேன். என குடும்பத்து ஆளுங்க எனக்கு துரோகம் பண்ணினாலும் நீ எனக்கு பண்ணமாட்டடா. நீ என் நண்பேன்டா”என்றவன் அவனை இழுத்துக் கட்டிக்கொண்டான்.
அந்த கட்டிபிடித்தலின் நட்பை புரியாது ரகுவரன் அவனை சந்தேகத்தோடுதான் பார்த்தான்.
அதுசரி அவரவர் குணம் அவரவர் வார்த்தையிலே!