அநாயகா-41

அநாயகா-41

அநாயகா-41

இளந்தீரனோடு வந்த மதுமதியைப் பார்த்ததும் ஆதிராவுக்கு அப்படியே மனசே விட்டுப்போச்சு. 

“இதுக்குத்தான் இந்த அத்தான் இவ்வளவு அவசரமா ஓடினாங்களா?அப்போ அவளைப் பார்த்ததும், அவளைப் பத்திக்கேட்டதும் என்கிட்டக்கூட சொல்லாமல் ஓடிப்போயிருக்காங்க. ஏன் இந்த அத்தான் இப்படி செய்தாங்க?அப்போ இவ்வளவு நாளும் நம்மளையும் நம்மக்குடும்பத்தையும் ஏமாத்திட்டிருந்தாங்களா?அப்படி இருக்க வாய்ப்பேயில்லையே”என்று முணுமுணுத்தவாறே அவர்களை கண்கலங்கப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த நேரம் சத்தம்கேட்டு கவிதா வெளியே வந்தவர் மகனையும் அவன்கூட வருகிற மதுமதியையும் பார்த்துவிட்டு “ஐய்யோ என்ன கொடுமை இது? இந்தப்பொண்ணை எதுக்குடா நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்க?இவளுக்கு என்ன கேடு வந்திச்சுன்னு உன்கூட வந்திருக்கா?இவளுக்குத்தான் கல்யாணமாகிடுச்சுல்ல. அப்புறம் எதுக்குடா இவளை இங்கக்கூட்டிட்டு வந்திருக்க?இவா புருஷனை விட்டுட்டு உன்கூட வந்துட்டாளா?இன்னும் நீ திருந்தலையா. அப்போ இவளுக்காகத்தான் இவ்வளவு நாளும் இங்க இருந்தியா?”என்று அவனை பேசவேவிடாது கோபத்தில் சத்தம்போட்டார்.

“யம்மாஆஆஆ யம்ம்மாஆஆஆ கவிதாம்மாஆஆஆ. நீ கொஞ்ச நேரம் சும்மா இரும்மா. என் குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிடாத. முதல்ல எதுக்குக்கூட்டிட்டு வந்தேன்னு காரணம் தெரியாமல் நீபாட்டுக்கு ஏதாவது பேசாத.பொறுமை பொறுமை”என்று கையமர்த்தியவன் கவிதாவைப் பார்க்காமல் ஆதிராவைப் பார்த்தான்.

அவளோ என்ன? எதுக்கு?என்று எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக நின்றிருந்தாள்.

கவிதா போட்ட சத்தத்தில் விஜயராஜிம் முழித்து வந்தவர், அங்கே மதுமதியைப் பார்த்ததும் கோபத்தில் இளந்தீரனைப் பார்த்தார்.

“அடுத்து நீங்களா?கொஞ்சம் பொறுமையா இருங்க நான் என்ன விசயம்னு முதலில் சொல்லிடுறேன்”என்று சொல்லும்போதே மதுமதியை அவனது கையைப்பிடித்தவள் “இளா அத்தான் நீங்க எதுக்கு என்னை காப்பாத்திக்கூட்டிட்டு வந்தீங்க. நான் செத்துப்போயிருந்தால் எல்லோருக்குமே சந்தோசமா இருந்திருக்கும். இப்போ பாருங்க உங்களுக்கும் உங்க வீட்டுல பிரச்சனை வருது”என்று சொல்லி அழுதாள்.

அவள் அழுததும் கோபத்தில் கவிதாவைப் பார்த்தான்.

“ஆமா என்னடி நீ பெரிய இவா மாதிரி என் மகனை இளா அத்தான் இளா அத்தான்னு சொல்லுற. இந்த இளா அத்தானை ஜெயில்ல போட்டிருக்கும்போது எங்கபோயிருந்த?அப்பவே செத்திருந்தா இப்போ இங்க வந்து நிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. என் மகன்கூட நீ வர்றதீ உனக்கு எவ்வளவு தைரியம் வந்துச்சு. அதுவும் அவனுக்கு கல்யாணமாகி அவன் பொண்டாட்டிக்கூட இருக்கும்போதே எந்த அறிவுகெட்டவளாவது அவன் வீட்டுக்கு இப்படி கையைப்பிடிச்சிட்டு வருவாளா?உனக்கும் கல்யாணமாகி புருஷன் இருக்கான்ல அவன் இப்படி ரோட்டுல போற எவளையாவது இழுத்துட்டு வந்தா வீட்டுக்குள்ள விடுவியா. முதல்ல இங்கிருந்து வெளிய போடி”என்று அவளைப் பிடித்து தள்ளினார்.

அதைப்பார்த்த இளந்தீரன் “அம்மாஆஆஆ என்ன செய்யிறன்னு அறிவிருக்கா. அவளை தற்கொலைக்கு முயற்சா பண்ணிருக்கான்னு காப்பாத்தி ஹாஸ்பிட்டல்ல வைச்சிருந்தாங்க. அங்க இருந்துதான் எனக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னாங்க. நான்தான் அவளை நம்ம வீட்டுக்கு வான்னு கூட்டிட்டு வந்தேன். அவாஇங்கதான் இருப்பா. அதை கேட்க யாருக்கும் உரிமையில்லை என்று சத்தம்போட்டான்.

அதைக்கேட்டதும் ஆதிரா வேகமாக அவன் பக்கத்தில் வந்தாள்.

அவனோ அவளைக் கண்டுக்காது மதுமதியின் கையை இறுக்கிப் பிடித்தவன் “ அம்மாஆஆஆஆ நான்தான் அவளை எங்க வீட்டுக்கு வான்னுகூட்டிட்டு வநதேன். அவளா வரலை. நீங்க வேற பிரச்சனையை பெருசாக்காதிங்க. அவ நான் சொன்ன வார்த்தையை நம்பி வந்திருக்கா. அவளைக் காயப்படுத்தாதிங்க புரியுதா. என்னைத்திட்டத்தான் உங்களுக்கு உரிமையிருக்கு.அவளை திட்டுறதுக்கு யாருக்கும் உரிமையில்லை”என்றவன் திரும்பி ஆதிராவைப் பார்த்தான்.

இது உனக்கும்தான் பதில் என்பதுபோன்று அவன் சொல்லிவிட்டு வா மது என்று கூப்பிட்டு மாடிப்படியேறினான்.

ஆதிராவுக்கு அப்போதே மனசு உடைஞ்சு போயிட்டு. இந்த அத்தான் என்ன ஒரே நாள் இர்த்திரியில மொத்தமா மாறிட்டாங்க. இவங்க மதுமதியை எங்க ரூமுக்குக் கூட்டிட்டுப்போய் விட்றுவாங்களோ?அப்போ என் நிலமை என்ன?”என்று யோசனையோடு மேல பார்த்திருக்க, அவனோ அவங்க ரூமுக்குப் பக்கத்து ரூமுக்கு அவளை கூட்டிட்டுப்போனான்.

ஏனோ ஆதிராவுக்கு மனசை பிசைந்தது. இந்த அத்தான் எதுக்கு இப்படியெல்லாம் பண்றாங்க என்று மனசு வலித்த வலியில் கண்கள் சிவந்து லேசாக கலங்காயும்போனது. அதைப் பார்த்த கவிதா ஓடிவந்நு அவளது கையைப்பிடித்துக்கொண்டார்.

“இப்பவே அண்ணனுக்கும் அண்ணிக்கும் போன் பண்ணி வரச்சொல்லுறேன்” என்றவர் அந்த அர்த்த இராத்திரியில் ரவிக்கு போன் பண்ணி இங்கு நடப்பதை சொல்லிவிட்டார்.

அவ்வளவுதான் அவன் உடனே எழுந்தவன் சங்கவியிடம் விசயத்தை சொன்னான்.

“அந்த மதுமதியை என் தம்பி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கானாம். எதுக்குன்னு அம்மா கேட்டா தெனாவெட்டா பதில் சொல்லிருக்கான். நம்ம எல்லோரையும் உடனே வரச்சொல்லுறாங்க. நீ மாமாக்கிட்ட எதையும் சொல்லிடாத. அத்தையை மட்டும் மெதுவா வெளியே வரவைச்சு விசயத்தைச் சொல்லு. அத்தை பேசினாதான் அவன் சரியாவான். அவன்கிட்ட நான் படிச்சு படிச்சு சொன்னேன். ஆதிரா உன்மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சு உனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்திருக்கா அவளுக்கு மட்டும் நம்பிக்கைத் துரோகம் பண்ணாம இரு. அவ பாவம்னு சொன்னேன்.ஆனால் இப்போ பாரு அந்த துரோகியோட மகள்,இவனுக்கு எதிராகவே போட்டியிட்டவன்னு யோசிக்காமல் தான் காதலிச்சவன்னு எப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான் பாரு”என்று மனம் தாளாது சங்கடப்பட்டு பேசினான்.

“உங்க தம்பி அதை செய்யலைன்னாதான் அதிசயம். முன்னாடியும் இப்படித்தானே செய்தான். நம்ம கட்சியில சேர்ந்துட்டு அவனுக்கு பதவி கொடுக்கலைன்னு இருபத்திரண்டு வயசுலயே கோபத்துல போய் எதிர்கட்சிக்காரனுங்ககூட சேர்ந்து நம்மளை தினம்தினம் அழவைச்சவன்தானே. உங்களுக்கு இதுவேணும். அவனை நம்பின அவளுக்கும் அதுவேணும். என் புருஷனும் வேணும் அப்பாவும் வேணும்னு என்கிட்டயே வக்கீல் மாதிரி பேசி வாயை அடைச்சவதானே. எத்தனை தடவை அவனை சந்தேகப்பட்டுக் கேள்விக்கேட்டேன் யாராவது புரிஞ்சிக்கிட்டீங்களா?”அவனைத் தலையில் தூக்கி வைச்சி ஆடுனீங்கன்னு திட்டிக்கொண்டிருந்தாள்.

அவள் சொல்லுறதும் சரிதானேன்னு ரவீந்திரன் வாயே திறக்காமல் இருந்தான். இப்போ சங்கவி போய் அவங்கம்மாவிடம் எல்லாத்தையும் சொல்லி கண் கலங்கியவள் “வாங்கம்மா இப்பவே போய் அந்த இளந்தீரனோட சட்டையைப் பிடிச்சு என்ன ஏதுன்னு கேட்டுட்டு வருவோம். அவன் அந்த மதுமதியை அவன்கூட வைச்சிக்கலாம்னு நினைச்சாம்னா நம்ம ஆதிராவை அவன்கிட்ட இருந்து பிரிச்சுக்கூட்டிட்டு வந்திடுவோம்”என்று ஆதிராவை அவனிடமிருந்து பிரிக்கணும்னு எண்ணத்திற்கே சங்கவி வந்துவிட்டாள்.அந்த மதுமதியும் அவனும் ஏற்கனவே காதலிச்சவங்க, அப்படியிருந்தும் நம்ம தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிட்டு பதவிக்குவந்ததும் அவளைத் தேடுறான்னா நம்ம தங்கச்சிக்கு துரோகம் பண்றான். என் தங்கச்சிமாதிரி ஒருத்தி துரோகம் செய்யிறான்னா அவன் எவ்வளவு பெரிய கேடுகெட்டவனா இருப்பான். வாங்கம்மா போவோம்”என்று சொல்லி மகேஷ்வரியையும் இழுத்துக்கொண்டு இப்போ நேராக இளந்தீரன் வீட்டுக்குப்போய் இறங்கினார்கள்.

அவர்கள் உள்ளே வந்ததும் மகேஷ்வரி ஆதிராவைப் பார்த்து முறைத்தார். அவளுக்குத் தெரியும் அம்மா எதுக்கு முறைக்கிறாங்கன்னு அதனால அமைதியாக நின்றாள்.

மகேஷ்வரி வந்ததுமே கவிதா பொங்கிவிட்டார் “பாருங்க அண்ணி நானும் என் மகன் திருந்திட்டான். இப்போ அவன் நினைச்ச வாழ்க்கை இருக்கு இப்படி அந்த மதுமதியைக் கூட்டிட்டுவருவான்னு கனவுலக்கூட நினைக்கல அண்ணி. நீங்க இனி என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன். அவனை இங்ஙிருந்து வெளிய அனுப்பணும்னாலும் அனுப்புங்க. அவன் இனி எங்களுக்கு மகனே இல்லை”என்று சத்தம்போட்டுபேசியவர் அழுதார்.

அதேப்பார்த்த மகேஷ்வரி “ஆதிராவிடம் போய் உன் புருஷனைக் கூப்பிட்டுவா எனக்கு அவன்கிட்ட பேசணும்”என்று சொன்னவர் அங்கீ உட்கார்ந்தார்.

ஆதிரா படியில ஏறப்போகவும் கவிதா அவளைத் தடுத்தார்.

“நீ போகாத ஆதிரா. நான் இங்கிருந்து கூப்பிடுறேன்”என்றவர் “டேய் இளந்தீரா உன்னைப் பார்க்க மகேஷ்வரி அண்ணி வந்திருக்காங்க கீழே வா”என்று கத்திச் சொன்னார்.

அந்த சத்தத்தைக் கேட்டதும் வெளியே வந்தவன் ம்டியில் இருந்து அவர்களைப் பார்த்துவிட்டு ஆஹா எங்கம்மா பஞ்சாயத்தைக் கூட்டி வைச்சிட்டுப்போல என்று நினைத்தவன் “அம்மாஆஆஆ எதுன்னாலும் காலையில பேசிக்கலாம். எல்லோரையும் இங்கயே இருக்கச்சொல்லு”என்றுவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டான்.

அதைப்பார்த்த ஆதிராவுக்கும் மகேஷ்வரிக்கும் அவ்வளவு கோபம் வந்தது. ஆனாலும் மகளின் வாழ்க்கைக்காக மகேஷ்வரி பொறுமைக் காத்தார்.

இளந்தீரன் இவர்களைப் பார்த்துவிட்டு ரூமுக்குள் போனதும் மதுமிதா பாவமாக அழுதாள்.

“என்னாலதானே உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை இளா அத்தான். நான் உண்மையிலயே உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு காத்திருந்தேன். ஆனால் ரகுவரன் அத்தான்தான் பிடிவாதம் பிடிச்சு அப்பாக்கிட்ட பேசி இந்தக் கல்யாணத்துக்கே காரணமா இருந்தாங்க. உங்களைப் பார்க்க வரும்போதும் உங்கக்கூட வந்திடலாம்னுதான் திட்டம்போட்டு வந்தேன். ஆனால் ரகுவரன் அத்தான் உங்களைஅடிச்சுப்போட்டுட்டு என்னை இழுத்துட்டுப் போயிட்டாங்க”என்று சொல்லிவிட்டு ஏங்கி ஏங்கி அழுதாள்.

“அழாத மது. எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா”என்றுஆறுதல் சொன்னான்.

“நீங்க எவ்வளவு நல்லவங்க தெரியுமா?இந்த ரகுவரன் அத்தான் என்னை தினமும்மு குடிச்சிட்டு வந்து அடிப்பாங்க. உங்களையும் என்னையும் வைச்சு சந்தேகப்படுவாங்க. உங்களுக்கு எதிரா என்னை எலக்ஷ்ஸன்ல நிக்க வைச்சதும் பேச வைச்சதும் எல்லாமே அவங்கதான். இப்போ சண்டைப்போட்டு போனாங்க. திரும்பவும் என்னை அடிச்சாங்க. அதுதான் தற்கொலைப் பண்ணிக்க போனேன். காப்பாத்திட்டாங்க. அவன் தினம் தினம் என்னை சித்திரவதை செய்தான். அதுக்கு ஒரேடியா செத்திரலாம்னுதான் இந்த முடிவைத் தேடிக்கிட்டேன்.ஆனா என்னை யாருன்னு கண்டுபிடிச்சு அங்கிருந்தவங்க தூக்கிட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்ங” என்று சொல்லிவிட்டு மதுமிதா பாவமாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தவளின் முன்பாக இளந்தீரன் அவள் வந்து நின்றான்.

அவனைப் பார்த்ததும் அழுத மதுமிதா எழுந்து அவனது கையைப் பிடித்துக்கொண்டாள்.

“என்ன மது இது?இவ்வளவுதூரம் நடந்திருக்கு நீ இதை ஏன் உங்கப்பாக்கிட்ட சொல்லலை?”என்று அடக்கப்பட்டக் கோபத்தில் கேட்டான்.

“எப்படி இளா அத்தான் அதை சொல்லமுடியும்?அவருதான் அவனை நம்பி கல்யாணமே பண்ணி வைச்சாரு. அவருக்கு அவனுடைய குணம்தெரியாமலா இருக்கும். அக்கா மகன்னு என்னைப் பிடிச்சு, நம்மைக் காதலைப் பிரிச்சுக், அவனுக்குக் கட்டி வைச்சாரு. இப்போ உன் பேரைச்சொல்லித்தான் தினமும் என்னைக் கொடுமை படுத்துரான். நான் என்ன தப்பு செய்தேன்? உன்னையும் உங்க மாமாவையும் பழிவாங்க என் வாழ்க்கையை அவன் கையிலக்கொடுத்து, இப்படி நாசம் பண்ணிட்டாங்க. எனக்கு இனி என்ன வாழ்க்கை இருக்கப்போகுது? நான் செத்தால்தான் நிம்மதி. எதுக்கு இளா என்னை அவனுங்கக்கிட்டயிருந்து காப்பாத்துனீங்க?”என்று மீண்டும் சொன்னதேயே சொல்லி அழுதவள் அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.

அவனும் அவளைத் தடுக்காது, அப்படியே அவளது முதுகை வருடிக்கொடுத்தான். அவளது அழுகை மெதுவாக குறையவும் அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்த முயன்றான்.

ஆனால் அவளோ அவனது கையைப்பிடித்துக்கொண்டு”ப்ளீஸ் இளா அத்தான் நான் எப்படியாவது ரகுவரன்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கிட்டுப் பிரிஞ்சு வந்திடுறேன். நீ என்னை இரண்டாவதாகக் கல்யாணம் பண்ணிக்கோ. ப்ளேஸ் என்னைக் கைவிட்றாதீங்க”என்றவள் அவனது நெஞ்சில் மீண்டும் சாய்ந்துக்கொண்டாள்.

அவளது நிலையை உணர்ந்த இளந்தீரன், அவளது முதுகை மீண்டும் வருடிக்கொடுத்தான். அவளது முடியை நீவினான்.

ஒரு காலத்தில் அவள்தான் உலகமென்று இருந்தவன் அல்லவா! அவளை எப்படி மறப்பான்?அந்தக் காதலை எப்படி கைவிடமுடியும்?

இவர்கள் தங்கள் பிரிந்துப்போன காதலை மீட்டெடுக்க முயன்றுக்கொண்டிருக்க, அந்த வீட்டின் ஹாலில் நின்றிருந்த இளந்தீரனின் மனைவி ஆதிராவைப் பார்த்து, அவங்க அம்மா மகேஷ்வரி திட்டிக்கொண்டிருந்தார்.

“ஏன்டி அவங்க இரண்டுபேரையும் தனியா விட்டுட்டு நீ இங்க என்னடி பண்ணிட்டிருக்க?காவலுக்கு நிக்கிறியாக்கும்?அப்படியே ஒரு குத்துவிளக்கையும் ஏத்தித்தர்றேன் போய் பக்கத்துல நின்னு பிடிச்சிக்க” என்று தலையில் அடித்துக்கொண்டார்.

“அம்மாஆஆஆஆ என்ன பேசுறன்னு புரிஞ்சுதான் பேசுறீயா?”

“பின்ன என்னடி பேசுணும்னு சொல்லுற?எத்தனை பிரச்சனையைதாண்டி உனக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்திருக்கு. அவனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டே அந்த மதுமிதாவை இங்கக்கூட்டிட்டு வந்திருக்க பார்த்தியா?உனக்கெல்லாம் மூளைன்னு ஒன்னு இருக்கா என்ன?”

“நான் கூட்டிட்டு வரலை உன் சின்ன மருமகன்தான் கூட்டிட்டுவந்தாரு. நான் என்ன பண்ணட்டும்?”

“அரசியல்வாதிங்க இரண்டு கட்டுவனுங்கன்னு சும்மா பேச்சுக்கு சொல்லலைடி, முக்காவாசி அப்படித்தான் இருப்பானுங்க. உங்கப்பா உத்தமனா இருக்கப்போய் நான் தப்பிச்சேன். நீ கொஞ்சம் கவனமா இருப்பன்னு பார்த்தால், நீயே அவங்க இரண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்ப போலிருக்கு. போடி போய் முதல்ல அவளை அவங்க வீட்டுக்கு அனுப்ப பாரு.

இல்லைன்னா உன்னை இந்த வீட்டுல இருந்து அனுப்பிடுவா. அதுக்கு உன் புருஷனும் உதவியா இருப்பான். போடி போ”என்று மகளை விரட்டி அனுப்பினார்.

அவளோ அம்மா திட்டின, கடுப்பில் மாடியேறியவள், அப்படியே ரூமுக்குள்ள வர்றதுக்கு காலெடுத்துதான் வைத்தாள்.

அங்க பார்த்தக்காட்சியில் நெஞ்சில் கைவைத்து, அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.

இளந்தீரன் மதுமிதாவை இறுக்கிக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

“அடுத்தவன் பொண்டாட்டியை இவ்வளவு நெருக்கமாக கட்டிப்பிடிச்சிட்டு நிக்கிறாங்களே இந்த அத்தான். அப்போ இவ்வளவு நாளும் எனக்குத் தாலிக்கட்டிட்டு வாழ்ந்ததெல்லாம் என்னவாம்?என் வாழ்க்கையே பொய்யா போயிட்டுதா? அப்போ இப்போவும் இந்த அத்தான் அவளை இரண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவுலதான் இருக்காங்களா?அதுதான் திட்டம் போட்டு அவளை இங்க கூட்டிட்டு வந்தாங்களா?”என்று நினைத்தவள் மெதுவாக அழுத்தமான நடையோடு அவர்களை நெருங்கினாள்.

அவள் வருவதைப் பார்த்த மதுமிதாவோ வேண்டுமென்றே அவனது தோளில் வேகமாககையைப்போட்டு இறுக்கிப்பிடித்தவள், அவனது உடலில் இடைவெளிவிடாது,உரசியவாறு இளந்தீரானை இன்னும் அழுத்திக் கட்டிக்கொண்டு நின்றாள்!

அதைப்பார்த்த ஆதிராவுக்கு இப்போ மதுமதி மேல கோபம் வரலை. அவளது மொத்தக் கோபமும் இளந்தீரன் மீதுதான் திரும்பியது!

ஆதிராக்கிட்ட இன்னும் அடிவாங்கலல இளந்தீரா!இனி அதுவும் நடக்கப்போகுது!