அநாயகா-24
அநாயகா-24
இளந்தீரன் இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் இருந்தான். அதுவுமே ஆதிராவின் பார்வையில் அடங்கி இருந்தானே தவிற அவனுக்கு உடனே எழுந்து வீட்டுக்குப் போகணும் என்றுதான் அடங்காது நின்றான்.
ஏற்கனவே ரவீந்தரன் அவன் அடிப்பட்டுக்கிடக்கிறான் என்று கவிதாவுக்கும் விஜயராஜிற்கும் தகவல் சொல்லிவிட்டான்.
அதைக்கேட்டதும் கவிதாவுக்கு வீட்டில் இருக்கமுடியாது உடனே கிளம்பி மகனைப் பார்க்க வந்துவிட்டார். விஜயராஜிற்கும் மகன் இப்படி அடிபட்டுக்கிடக்கிறானே என்று வருத்தம் இருந்தாலும் அவனைப் பார்க்கப்போனால், இன்னும் அவன் மேல பாசமாகத்தான் இருக்கோம்னு அதிகம் ஆடுவான். அதனால் நீ மட்டும் போயிட்டுவான்னு கவிதாவை அனுப்பிவைச்சிட்டு அவரு வீட்டுலயே இருந்துவிட்டார்.
கவிதா வந்து அண்ணனை பார்த்துவிட்டு அப்படியே மகனைப் பார்க்கக் கிளம்பினார்.
மகேஷ்வரிதான் “ஏன் கவிதா நேரா உன் மகனைப் பார்க்க போயிருக்கவேண்டியதுதானே. அது எதுக்கு இங்க வந்துட்டுப்போற. நான் ஒன்னும் நினைக்கமாட்டேன். என்ன இருந்தாலும் பெத்தவல்ல. மகன்தானே பெருசா இருக்கும், போ போய் உன் அருமை மகனைப் பார்த்து விசாரிச்சிடு. அவன் எங்களுக்கு செய்ததையெல்லாம் நீ மறந்திடுவ, நாங்க எப்படி மறக்கிறது. இந்தா என் புருஷன் கோமாவுல கிடக்கிறதப்பாரை” என்று கண்ணீரோடு பேசவும் மகனை வெளியே இருந்து எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிட்டார்.
ஆதிராதானே அவனைகு காப்பாத்திருக்கா. அவன் நல்லாதானே இருக்கான். நம்ம பார்க்கலைன்னா என்ன குடியா முழுகிப்போயிடும் என்று மனசை தேத்திக்கிட்டு போய்விட்டார். மகேஷ்வரி பேசினது அவருக்கு வருத்தம் என்றாலும் மகன் செய்ததும் பெரிய தப்புத்துனே என்றுதான் நினைத்தார்.
இரண்டுநாள் ரூமுக்குள்ளயே அடைந்துக்கிடந்தே இளந்தீரனுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது. ஏற்ஙனவே டாக்டரிடம் கேட்டுக்கொண்டேயிருக்க, மூன்றாவது நாள் காலையிலயே டிஸ்சார்ஜ் வாங்கிட்டு வெளியே வந்தான்.
அப்போது உள்ளே வந்த ஆதிராதான் “என்னத்தான் எங்கப்போறீங்க?இவ்வளவு நடந்திருக்கு நீங்க எங்கக் கிளம்பிட்டீங்க. இன்னும் தையல் எடுக்கலை. நேத்து இராத்திரி நடந்தபிரச்சனையே பெருசு. இப்போ எதுக்கு வெளிய கிளம்புறீங்க?”என்று அவள் அவனது முகத்தைப் பார்த்து நேரடியாகவே கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவனோ அவளது கண்ணைப் பார்க்காது தவிர்த்தவன், அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எதுவும் பேசாது,அவளது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
ஆதிராவுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இரண்டு நாளும் அவனுக்கு என்னென்ன தேவைகள் என்பதை பக்கத்தில் இருந்து கேட்டு, தெரிந்து பார்த்துக் கொண்டாள்.
இப்போ எதுவுமே பேசாமல் வந்து திடீர்னு கையை பிடிச்சுட்டு வெளியே கூட்டிட்டு வரவும், அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது.
“தீராத்தான் தயவு செய்து என் கைவிடுங்க. ஹாஸ்பிடல் எல்லாரும் நம்மளைத்தான் பார்க்குறாங்க. இப்ப எதுக்கு கையை பிடிச்சு வெளிய கூட்டிட்டு வந்தீங்க. உங்களோட தலையில் போட்டத் தையல் வேற எடுக்கல. இன்னும் நாலுநாள் ஆகும்னு டாக்டர் சொன்னாங்கள்ல. உங்களை யாரும் வெளியே விட்டது நர்ஸ் யாரும் எதுவும் கேட்கலையா?” என்று அவள் பாட்டுக்கு கேள்விகளை அடுக்கி கொண்டிருந்தாள்.
“எனக்கு இப்போ உடனே ஒரு தாலி வாங்கணும். தாலி வாங்கிட்டு மதுமதி ரகுவரன் கல்யாணம் நடக்கிற மண்டபத்துக்கு போகணும் .உன்கிட்ட பணம் எதுவும் இருக்குதா? என்கிட்ட இப்ப காசு எதுவும் இல்லை. நீ இப்போ எனக்குத் தந்து ஹெல்ப் பண்ணு, பின்னாடி உனக்கு திருப்பித் தந்திடுரேன்” என்று அவளது முகத்தை பார்த்து கேட்டான்.
அவன் தாலி வாங்கணும் காசு தர முடியுமா? என்று கேட்டதில் வந்த அதிர்ச்சியை விடவும், அந்தத் தாலியை வாங்கிட்டு மதுமதி ரகுவரன் கல்யாணம் நடக்கும் மண்டபத்துக்கு போகணும்னு சொன்னதைக் கேட்டுத்தான் இன்னும் அதிர்ச்சியானாள்.
என்னது மதுமதி ரகுவரன் கல்யாணத்துக்கு போகணுமா? என தனது அதிர்ச்சியை முகத்திலும் கண்களிலும்வெளிப்படையாக காட்டி கண்ணைச் சிமிட்டாது அவனை பார்த்து கேட்டாள்.
அவனோ அவள் இப்படி அதிர்ச்சியோடு தன்னைப் பார்த்ததும் “எதுக்கு இப்போ இவ்வளவு ஷாக்காகி கேட்க்கற? தாலி வாங்கிட்டு மதுமதி கல்யாணத்துக்கு போகணும்தானே சொன்னேன். வேற ஏதாவது சொன்னேனா என்ன?அவங்கக் கல்யாணம் இன்னைக்குத்தானே. இல்லை நேத்தே முடிச்சுட்டாங்களா?" என தன்னுடைய முக்கியமான சந்தேகத்தையும் அவளிடம் கேட்டு வைத்தான்.
அவளோ அவன் கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
" அவங்களோட கல்யாணம் இன்னைக்குத்தான். ஆனால் முகூர்த்தம் இன்னும் ஒரு மணி நேரத்துல இருக்குமே. நீங்க எதுக்கு அங்க போகணும்? அவங்களால்தானே நீங்க இப்போ ஹாஸ்பிடல் இருக்கீங்க. இவ்வளவு பெரிசா உங்களை அடிச்சிப்போட்டுட்டு போயிருக்காங்க. ஒருவேளை நான் வந்ததுனாலதான் உங்களை சும்மாவிட்டுட்டு போனாங்களோ என்னவோ? நான் வரலைன்னா அன்னைக்கே உங்களை கொன்னு போட்டிருப்பாங்க. இவ்வளவு நடந்ததுக்கு அப்பறம் தாலி வாங்கிட்டு மதுமதியைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நீங்க போறது சரியானனு எனக்குத் தெரியலை. இது உங்க வாழ்க்கை. நீங்கதான் முடிவு பண்ணனும். உங்களுக்கு என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு தெரியும். இதுல நான் தலையிடுறதுக்கு யாரும் இல்லையே. ஆனாலும் நடந்ததை வைச்சுப் பார்க்கும்போது இது தேவையான்னு கேட்கணும்னு தோணுச்சு கேட்டுட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்று தனது தோளை குலுக்கியவாறே பேசினாள்.
“அதுதான் உனக்குப் பிரச்சனையில்லைன்னு சொல்லிட்டியே. அப்புறம் எதுக்கு இவ்வளவு பேசிட்டிருக்க?உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைன்னா பேசாமல் என்கூட வா. என்னை நகைக் கடைக்குக் கூட்டிட்டு போ போதும். மீதியை நான் பார்த்துக்குறேன்" என்று பழைய இளந்தீரானாக தெனாவட்டாக பேசினான்.
“அது சரி நம்ம அப்பாவை அடிச்சிட்டு ஜெயிலுக்கு போனவனை வெளியே எடுத்தது நம்ம தப்புதான் போலிருக்கு. இந்த அத்தான் ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் திருந்தல. காதலியே இவரை அடிச்சு கொலை பண்றதுக்கு முயற்சி பண்ணதுக்கு அப்புறமும் திருந்தலை. இதெல்லாம் திருந்தாத கேசுங்க. என்னமோ பண்ணிட்டு போங்க” என்று கொஞ்சம் எரிச்சல் பட்டாள். அவளது அந்தக் கோபம் கோபமும், அவளது முகத்தில் தெரிந்தது.
அதைப்பார்த்தவன் “ஆமா நான் தாலி வாங்கத்தானே என்கூட வான்னு சொன்னேன். அதுக்கு ஏன் உன் முகம் ஏன் கடுகடுனனு இருக்கு? என்ன கூட்டிட்டு போக பிடிக்கலைன்னா விட்டுறு. நான் வேற யாரு மூலமாக எல்லா ஏற்பாட்டையும் செய்ய முடிஞ்சா செய்துக்கிறேன். இதுவரைக்கும் நீ செய்த ஹெல்ப்புக்கு எல்லாம் ரொம்ப தேங்க்ஸ்” என நன்றி சொன்னவன் அங்கும் அங்கும் அவனுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தான.
அவனுக்குத் தெரிஞ்ச ஒருத்தர்கூட அங்கேயில்லை என்றதும் கோபத்தில் வேகமாக அங்கிருந்த நடந்து வெளியே வந்தான்.
அதைப் பார்த்த ஆதிராவோ வேகமாக போய் காரை எடுத்துட்டு வந்து அவன் முன்பாக கொண்டு போய் நிறுத்தினாள்.
“எவ்வளவோ மானங்கெட்டு போய் இறங்கி வந்து நிறைய செய்தாச்சு. அதுக்கூட இதுவும் சேர்த்து செய்திடுறேன். அவ்வளவுதான் இதுல மட்டும் ஏன் குறைவைப்பானே!வாங்க வந்து கார்ல் ஏறுங்க. உங்க காதலியோட கல்யாணத்துல கொண்டு இறக்கிவிடுறேன்” என்று கார் டோரை அவனுக்காக திறந்துவிட்டு பேசினாள்.
“அரசியல்வாதி ஜெயச்சந்திரன் மகள்னு நீ அடிக்கடி உன் பேச்சுல நிரூபிக்கிற . உனக்கு பேச்சில் எல்லாரையும் சரியா தாக்க தெரிஞ்சிருக்கு .உனக்கு அரசியல் நல்ல பியூச்சர் இருக்கு. அதனால்என்ன பண்ற நீயே உங்க அப்பா மாதிரி எம்.எல்.ஏ ஆகக்கூடாது? உங்க அப்பா இப்படி கோமாவுல இருக்காருன்னு கவலைப்படாமல், அவரோட தொகுதியில, அவரோப இடத்துல நீ நின்னு எம்.எல்.ஏ ஆகிடுக்கு. நீ ஜெயிச்சு பிரைட்டா உச்சத்துக்கு வந்துடுவ. ”என்று சொன்னான்.
‘இந்த அத்தானுக்கு என்ன ஆச்சு தலையில் அடிபட்டதுல ஏதோ முத்திப்போச்சுதோ என்ன? ஆனா டாக்டர்ஸ்லாம் அப்படி ஒன்னும் இல்லை, நல்லாதான் இருக்காருன்னு சொன்னாங்க. இவங்கப் பேசுறதைப் பாத்தா அப்படியில்லையே. இப்பவே நகைக்கடைக்கு போகணும் தாலி வாங்கணும் மதுமதி கல்யாணத்துக்கு போகணும்னு சொல்லுறாங்க. இப்போ என்னடான்னா நீ உங்க அப்பா மாதிரி நல்லா பேசுற எம்எல்ஏ கிட்ட நம்மகிட்ட ஏதோ உளறிட்டு இருக்காங்க” என்று அவனை ஏறயிறங்கப் பார்த்தாள்.
அவளது பார்வையைப் புரிந்து கொண்டவன் “அதெல்லாம் டாப் கியர்ல மூளை நல்லாதான் வேலைப்பார்த்திட்டிருக்கு. நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவாறே காரின் முன்பக்கமாக ஏறியவன்,அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
“நம்ம வாயால் சொல்றதெல்லாம் ஒன்னும் புரிய மாட்டேங்குது. ஆனா நம்ம மனசுக்குள்ள நினைச்சு கண்ணால பேசுறதெல்லாம் உடனே புரிஞ்சிடுதே. இது எந்த வகையான வியாதின்னு தெரியலையே” என மனசுக்குள்ள அவனைத் திட்டியவாறே நேராக வண்டியை ஒரு நகைக்கடைக்கு முன் கொண்டு விட்டாள்.
அது அவர்கள் அடிக்கடி வந்து போகும் கடை என்பது அந்த நகை கடையை பார்த்ததுமே புரிந்து விட்டது. அதனால் காசு பின்னாடி கொடுத்தாலும் பரவாயில்லை.ஏதோ ஒன்னு அவ கூட்டிட்டு வந்தாளே அதுவே போதும் என்று வேகமாக இறங்கினான்.
அதைப்பார்த்தவளோ பார்றா இவங்களை அடிச்சு போட்டுட்டுப்போன காதலிக்காக எவ்வளவு அவசர அவசரமா இறங்கி தாலி வாங்க போறாங்க. அப்போ தாலி வாங்கிட்டு அடுத்தது கல்யாண மண்டபத்துக்கும் நம்மதான் கார்ல கூட்டிட்டு போகுணுமா? அங்கபோய் என்ன பிரச்சனை பண்ணிவைக்கப்ப போறாங்கன்னு தெரியலையே! இவங்களை இறக்கி விட்டுட்டு பேசாமல் நம்ம அங்கிருந்து எஸ்ஸாகிடனும். இவங்க அவ கழுத்துல தாலி கட்டி, எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் நமக்குஅங்க என்ன வேலை இருக்கப்போகுது. அவங்களாச்சு அவங்க மாமனார் குடும்பமாச்சு, காதலிச்சு கல்யாணம் பண்ணின பொண்டாட்டியாச்சு. இவங்க ஏதாவது பிரச்சனை செய்துவைச்சா அதுக்கும் முக்கிய காரணம் நான்தான்னு, மகேஸ்வரிக்கு மட்டும் தெரியணும் அவ்வளவுதான் முதுகுல டின்னு கட்டிருவாங்க. ஏற்கனவே இவங்கள வெளியே எடுத்ததுக்குள் ஹாஸ்பிடல்ல சேர்த்ததுக்கும்,உ நம்மளோடட கிரைம் ரேட்டு அவங்க முன்னாடி கூடிட்டே போகுது. இதுல புதுசா இந்த பிரச்சனையை வேற சேர்த்தோம்னா. அவ்வளவுதான் மகேஸ்வரி கையாலயே செத்தோம். என்னை அப்படியே மகேஷ்வரி ஆத்தா உயிரோட குழிதோண்டி புதைச்சிடுவாங்க” என நினைத்தாலும் அவன் பின்னாடியேதான் போனாள்.
அவனும் ஏற்கனவே மனதிற்குள்ளாகவே என்ன வாங்கணும்னு யோசிச்சுதான் வைத்திருந்தான்போல,கடைக்குள்ளே போனதும் அவனுக்கு என்ன மாதிரியான தாலி வேணும் என்பதைக் கேட்டு வாங்கியவன், உடனே பில் போட்டுவிட்டு ஆதிராவைத் திரும்பிப் பார்த்தான்.
உடனே அவள் தனது கையில் உள்ள கார்டினை அவனிடம் கொடுத்தாள்.
“இது ஒன்பது பவுனு தாலி. இதுக்கான மொத்தமா காசும் உன் கார்டுல இருந்துதான் எடுக்கணும்,அவ்வளவு காசு இருக்கா?நம்பி குடுக்கலாமா?”
அதைக் கேட்டதும் அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது உடனே அவனை முறைத்து பார்த்தவள். அவ்வளவு நம்பிக்கையில்லைன்னா ஒரு சின்ன மஞ்சள் துண்டை எடுத்து,ஒரு சின்ன மஞ்சள் கயித்துல கட்டி உங்க மதுமதி கழுத்துல கட்டுங்க. அப்படி தாலிக்கட்டினா உங்க பொண்டாட்டி அதுதான் அந்ந மதுமதி கழுத்துல தொங்காத என்ன? உங்களையே கொலப்பண் பார்த்தாவளுக்கு அந்த மஞ்சள் தாலியே. நான் போறேன். என் கார்டை தாங்க” என்றவள் திரும்பி போக எத்தனித்தாள். இளந்தீரன் வேகமாக அவளது கையை பிடித்திழுத்து தனது பக்கத்தில் நிறுத்தினான்.
“சரி சரி உன் கிட்ட காசு வாங்கி தாலி வாங்கலைன்னை ரொம்ப கோவப்படாதே. என் கல்யாணத்துக்கு என் மாமா வீட்டு கிப்ட்டுன்னு இந்த தாலியை நினைச்சிக்கிறேன். தனால் இந்த கார்டில் உள்ள காசை எடுத்துக்கிறேன்” என்ன பேசியவன் அந்த கார்டினைக் கடைக்காரரிடம் நீட்டினான்.
அந்தக் கடைக்காரரோ ஆதிராவை விநோதமாக பார்த்தவாறு கார்டினை தேய்ச்சுட் பணத்தை எடுத்துக் கொண்டார்.
தாலி கைக்கு வந்ததும், உடனே ஆதிராவின் கையை பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
அதெல்லாம் பாத்திருந்த நகைக் கடைக்காரர் உடனே மகேஸ்வரிக்கு போன் பண்ணிவிட்டார்.
அவரை திரும்பிப் பார்த்த ஆதிரா இப்பொழுது இளந்தீரனின் கையில் இருந்து தனது கையை வேகம் இழுத்தவள் “என்னத்தான் பண்றீங்க நீங்க? இங்க வந்து தாலி வாங்கினது, அதற்கான பில்ல நான் குடுத்ததுன்னு எல்லாத்தையும் அந்த நகைக்கடைக்காரன் போன் பண்ணி அம்மாவுக்கு சொல்லிடுவாங்க. இங்க பாருங்க அவர் இப்பவே போன் பண்ணிட்டாரு. எதுவும் யோசிக்க மாட்டீங்களா? பேசாம வாங்க. முகூர்த்தத்துக்கு நேராமாச்சு, சீக்கிரமா போய் மதுமதிகழுத்துல தாலியை கட்டுங்க. அப்படியே என்னை விட்ருங்கப்பா நான் எங்க வீட்டை பார்த்து போறேன்" என சிடுசிடுத்தாள்.
அவளது சிடுசிடுப்பை பார்த்தவன் திரும்பி சத்தமாக சிரித்தவாறு “நான் மதுமதிக்கு தாலி வாங்கினதுல உனக்கு என்ன இவ்வளவு கோபம்? எவ்வளவோ பண்ணிட்ட இதையும் பண்ணிட வேண்டியதுதானே என்னைக் கொண்டுபோய் அப்படியே டங்குனு சேஃபா மண்டபத்துல இறக்கிவிடு. வா வா வந்து சீக்கிரம் காரை எடு” என்று அவளை அவசரப்படுத்தியவன் காரில் ஏறி ஜம்பமாக உட்கார்ந்து கொண்டான்.
இந்த மகேஸ்வரி ஆத்தா அப்பவே சொன்னாங்க. தேவையில்லாத விஷயத்துல தலையை கொண்டு விடாதன்னு நான் கேட்டனா! கேட்டனா! என்று தனக்குத்தானே கொட்டு வைத்துக்கொண்டு காரை எடுத்தவள் நேராக மண்டபத்திற்கு கொண்டு நிறுத்தினாள்.
கார் வந்து மண்டபத்தின் முன் நிற்கவும், இளந்தீரன் ஆதிராவிடம் திரும்பினான்.
“இங்கப்பாரு நான் முதல்முதலா கல்யாணம் பண்ணிக்கப்போறேன். எனக்கு சொந்தக்காரங்கன்னு இந்த மண்டபத்துல நீ மட்டும்தான் இருக்க அதனால?”
“அதனால என்ன செய்யணும்னு சொல்லவர்றீங்க?”
“நான் மதுமதக கழுத்துல தாலி கட்டும்போது,நீ மனசார அசட்சதை போட்டுவாழ்த்த என் பக்க சொந்தமா நீ என்கூடவே இரு?”
ஏன்?அதெல்லாம் நான் வரமாட்டேன். நீங்களாச்சு உங்கக் கல்யாணமாச்சு. என்னை விடுங்க. இவ்வளவு பிரச்சனையிலும் நேத்து இராத்திரி எங்கப்பாவைக் காப்பாத்தியிருக்கீங்க. அதுக்காகத்தான் உங்கக்கூட வந்தேன். ஆளைவிடுங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான்கிளம்புறேன் என்று காரை ஸ்டார்ட் பண்ணினவளின் கையிலிருந்தக் கார் சாவியை எடுத்தவன், அந்தப்பக்கமாக வந்து சென்று திறந்து அவளை வெளியே அழைத்தான்.
அவளோ இங்கிருந்து தப்பித்து போனால் போதும் எனு அவனிகமிருந்து தப்பிக்க நினைத்தாள். ஆனால் அவனோ இளைஞர் அவளை வலுக்கட்டாயமாக தன்னோடு சேர்த்து இழுத்துக்கொண்டு மண்டபத்திற்குள் போனான்!
இளந்தீரன் காரிலிருந்து ஆதிராவோடு இறங்கவும் அவனைப் பார்த்த அவனது கட்சி ஆட்கள் எல்லாரும் ஒரு மாதிரி அரண்டு முழித்தார்கள்.
இளந்தீரன் இப்போது கெத்தாக கம்பீர நடேயோடுஆதிராவின்கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே வருவதை பார்த்த மதுமதி, மணமேடையில் இருந்தவாறே தீர்க்கமாக ஆதிராவைத்தான் பார்த்தாள்.
ரகுவரனுமே அவனைப் பார்த்ததும் அதிர்ந்தவன், தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்
நம்ம ஒரு பிளான் பண்ணி காரியத்தை நடத்தினால் இவன் ஒரு பிளான் பண்ணி இங்க வந்து நிற்கிறானே! இந்த மாமா பிளான்ல ஏதோ கோட்டை விட்டுட்டார்போலிருக்கே!என்ற குழப்பத்தோடு சிவானந்தனை பார்த்தான்.
சிவானந்தனுமே “இவன் எப்படி இங்குஉயிரோடு வந்தான்? இவன் இன்னும் சாகலையா? இவனை கொல்றதுக்காக நம்ம அனுப்புன ஆளுங்க எல்லாம் என்ன ஆனாங்களோ தெரியலையே? என்ன எதுவும் புரியாமாட்டுக்கே!என அவருமே குழப்பத்தோடும் அதிர்ச்சியோடும் இளந்தீரனைப் பார்த்தார்.
அவனோ யாருடைய பார்வையையும் கண்டுக்காது ஆதிராவோடு சேர்ந்து, மண்பத்திற்குள்ளே நடந்துக்கொண்டிருந்தான்!